PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMY SARANAM...GURUVE SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED & A DIVINE " SANKADAHARA SADURTI (SANKASHTI) & MAY GOD GANESHA BLESS YOU & SHOWER YOU WITH POWER & WISDOM & RELIEVE YOU FROM FEAR & OBSTACLES FROM YOUR LIFE TOO .. " JAI SHREE GANESHA "

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. அங்கிங்கெணாதபடி எங்கும் வியாபித்திருக்கும் ஓம் எனும் ஓங்காரவடிவமாக விளங்கும் விநாயகப்பெருமானை ” சங்கடஹர சதுர்த்தி“ தினமான இன்று துதித்து வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தைப் பெறவும் .. சிறப்பான கல்வி அறிவு .. புத்திகூர்மை .. நிலையான செல்வத்தைப் பெற்றிடவும் விக்னேஷ்வரனைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
வக்ரதுண்டாய தீமஹி ! 
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !! 

” அன்பினுக்கு இரங்கும் அருட்கடல் ! ஐங்கரனின் திருக்கழல் சிந்தை செய்வோம் .. “

விநாயகர் பிரணவத்தின் வடிவம் .. இதன் திரிந்த வடிவமே ! பிள்ளையார் சுழி ! 
பிள்ளையார் சுழியை இட்டாலே ஆணவம் ஒழிந்து இறை உணர்வு உண்டாகும் .. சதுர்த்தி திதி விநாயகருக்கு மிகவும் உகந்த நாளாகும் .. சுக்லபட்சம் (வளர்பிறை) சதுர்த்தியை “ வரசதுர்த்தி “ என்றும் .. 
கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) சதுர்த்தியை 
“சங்கடஹர சதுர்த்தி ” என்றும் கூறுவார்கள் ..

ஒவ்வொரு பௌர்ணமிக்கும் பிறகு வரக்கூடிய நான்காவது நாளான சதுர்த்தி ( தேய்பிறை சதுர்த்தி ) சங்கடஹர சதுர்த்தி ஆகும் .. வளர்பிறை சதுர்த்தியில் வானில் சந்திரனைப் பார்ப்பது கேடுவிளைவிக்கும் என்பது பெரியோர்கள் வாக்கு .. ஆனால் பௌர்ணமிக்குப்பிறகு வரக்கூடிய தேய்பிறை சதுர்த்தியில் சந்திரனை பார்த்த பின்பே விரதத்தை முடிப்பர் .. இதுவே சங்கடஹர சதுர்த்தி ஆகும் .. 

ஸ்ரீவிநாயகப்பெருமானை தேய்பிறை சதுர்த்தியில் வழிபாடு செய்வது மிகப்பெரும் நற்பலன்களைத் தரவல்லது .. சங்கடஹர சதுர்த்தி நமக்கு வரும் சங்கடங்கள் அனைத்தையும் நீக்கிச் சௌபாக்கியம் தரவல்லது .. பார்வதிதேவி ஆண்டுக்காலம் இவ்விரதத்தை மேற்கொண்டு தன் பதியை அடைந்தாள் .. இந்திரன் .. சிவன் .. ராவணன் போன்றோர் இவ்விரதத்தினால் நற்பயன் அடைந்திருக்கின்றனர் .. அனுமன் சீதையைக்கண்டதும் .. பாண்டவர்கள் துரியோதனாதியரை வென்றதும் இவ்விரதத்தின் மஹிமையால்தான் .. 

முதன்முதலில் இந்தவிரதத்தை அங்காரகன் அனுஷ்டித்து நவக்கிரகங்களில் ஒன்றானார் .. அதனால் இந்த சங்கடஹர சதுர்த்தி விரதத்திற்கு அங்காரக சதுர்த்தி விரதம் என்றும் பெயர் உண்டு ..

விரதமிருக்க முடியாதவர்கள் இன்றையதினம் விநாயகர் ஆலயங்களுக்குச் சென்று விநாயகரை தரிசித்தாவது வரலாம் .. இந்தப்பிறவி என்பது ஒரு பெருங்கடல் ! அதை நீந்திக்கடக்க இறைவனின் உதவி தேவை என்பது பல ஆன்றோர்கள் அனுபவத்தில் அறிந்து சொன்ன விஷயம் .. இத்தகைய பிறவியாகிய இந்த மனுஷப் பிறவியை இறைவன் என்னும் படகில் பக்தி எனும் துடுப்புகொண்டு
கரைசேர்வோமாக ! 

சங்கடஹர சதுர்த்தியில் கணபதியை பூஜிப்போம் ! சங்கடங்களை களைவோமாக ! 
“ ஓம் விக்னேஷ்வராய நமஹ “ .. வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .

No comments:

Post a Comment