PANVEL BALAGAN PATHAM POTRI...GURUVE SARANAM SARANAM.GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A HAPPY WEEKEND & A DIVINE SHASHTI THITHI TOO .. MAY LORD MURUGA REMOVE ALL THE NEGATIVE FORCES FROM YOUR LIFE & SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH & HAPPINESS .. " OM MURUGA "

” ஆறுமுகன் புகழை அன்றாடம் போற்றிடவே 
ஏறுமுகம் கிடைக்கும் ! சேரும் புகழ் ஏராளம் !
ஒன்பான் கிரமுமே ஓடிவந்து காப்பாற்றும் கண்ணான வேழமுகம் காப்பு ! செப்பும் சிலம்புரியின் சிங்காரம் தந்த கவி சுப்ரமணியனுக்குத் தூதாகும் ! அப்புறமாய் 
ஒன்பான் கரிமுகமே ! ஓங்காரம் கேட்டவுடன் இன்பமெல்லாம் கூட்டும் இனி “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சனிக்கிழமையும் .. சஷ்டித்திதியுமாகிய இன்று சொல்லில் அடங்காத் திருப்புகழ் கொண்டவனும் .. உள்ளம் ஒன்றி வழிபடுபவர்களுக்கு அருளைப் பொழியும் ஆறுமுகனைப் போற்றித்துதித்து நல்வாழ்வு .. ஆரோக்கியம் .. ஆயுள் மற்றும் வேண்டியனயாவும் வேண்டியவாறே தங்களனைவருக்கும் கிடைத்திட வேலவனைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாஸேநாய தீமஹி ! 
தந்நோ ஷண்முக ப்ரசோதயாத் !!
முருகனுக்கு பல்வேறு விரதங்கள் .. உற்சவங்கள் .. வழிபாடுகள் இருந்தபோதிலும் அவை எல்லாவற்றிலும் சிறப்பானதாக சஷ்டி விரதமே கூறப்பட்டுள்ளது .. சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவனே ஆறுமுகன் .. சூரனுடன் போரிட்டு அவனை வதம் செய்தநாளே கந்தசஷ்டியாகும் ..
மனம் முழுவதும் அந்த மயில்வாகனனையே நினைத்தபடி கந்தசஷ்டி கவசம் .. கந்தகுருகவசம் .. கந்தர் அநுபூதி .. சுப்ரமண்ய புஜங்கம் போன்ற கவசங்களை பாராயணம் செய்வது சிறப்பு .. மனதில் எழும் அசுர எண்ணங்களை அழித்து அகப்பை எனும் நல் உள்ளத்தில் நல்ல எண்ணங்களும் .. பக்தி எனும் பாதையால் எழுந்த அமைதியையும் தந்தருள்வான் கந்தனே !
கந்தனைப் போற்றுவோம் ! அறியாமை எனும் அஞ்ஞான இருளை அகற்றி மெய்ஞானமாகிய மிளிர்கின்ற பரம்பொருளின் திருவருளையும் .. அருட்கடாக்ஷத்தையும் பெற்றிடுவோமாக ! 
“ சரணம் ! சரணம் ! ஷண்முகா சரணம் “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்
..
Image may contain: 5 people, people standing

No comments:

Post a Comment