PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM IYYAPPA..GURUVE SARANAM ...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF LORD SURYA MAY YOUR DAY BE FILLED WITH LOVE & HAPPINESS TOO - " JAI SURYA DEV "


” தாமரைமீது வீற்றிருக்கும் ஆதவனே ! தேவர்களுக்கெல்லாம் முதன்மையான சூரியபகவானே ! 
பானுமூர்த்தி எனப் போற்றப்படும் தங்களை வணங்குகின்றோம் ! தர்மம் .. கருணைவடிவாகவும் .. அனைத்து தத்துவ வடிவாகவும் .. அனைத்து தத்துவ வடிவினராகவும் ஒளிரும் தினகரனே ! க்ஷயம் எனும் காசநோய் .. அபஸ்மரம் எனும் வலிப்பு நோய் .. குன்மம் எனும் வயிற்றுநோய் போன்ற கொடிய நோய்களையும் எல்லாவகை தோஷங்களையும் நீக்கி நலம் அளிக்கும் கதிவரனே ! எமை ரட்சிப்பாயாக “ 
( ‘ சூரியன் துதி’ - அகத்தியர் - கவலை.. நோய் நீங்கி வாழ்வு பிரகாசமடைய பாராயணம் செய்வது சிறப்பு )
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஐம்பூத இயக்கங்களுக்கும் மூலகாரணமாக விளங்குபவரும் .. வேதங்களின் சாரமாகத் திகழ்பவருமாகிய சூரியபகவானை ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று துதித்து மனநலமும் .. உடல்நலமும் நல்லாரோக்கியமாகத் திகழவும் .. தங்கள் வாழ்வில் என்றும் வசந்தம் வீசிடவும் ஆதித்யனை பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே ! 
பாஸஹஸ்தாய தீமஹி ! 
தந்நோ சூர்யஹ் ப்ரசோதயாத் !!
வானியலில் முதலிடம் பெறுவது சூரியனே ! ஜோதிட கணிதத்தில் அவரே முதலிடம் பெறுகிறார் .. அதுமட்டுமல்லாமல் இவ்வுலகில் காற்று .. மழை .. கோடை குளிர் போன்ற இயற்கை நிலைகளையும் .. பருவகாலங்களையும் .. தட்ப வெப்பமாற்றங்களையும் மேலும் பல இயற்கை நியதிகளுக்கும் மூலகாரணம் சூரியனே !
இவ்வுலகே சூரியனிடமிருந்து தான் தோன்றியது .. என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள் .. 
ரிக்வேதம் - சூரியனை மூன்று வித அக்னியில் ஒன்றாகவும் 
யஜுர்வேதம் - சகல உலகங்களையும் .. ஒளிபெறச்செய்பவன் என்றும் 
அதர்வணவேதம் - சூரியனை வழிபட்டவர்கள் .. இதயநோயிலிருந்து விடுபடுவர் என்றும் போற்றுகிறது..
சூரியன் காலையில் - ரிக்வேத சொரூபியாகவும் 
மதியத்தில் - யஜுர்வேத சொரூபியாகவும் 
மாலைவேளையில் - சாம வேத சொரூபியாகவும் .. 
திகழ்கிறான் என்றும் வேதம் கூறுகிறது ..
ஸ்ரீமஹாவிஷ்ணுவைப்போல் சூரியனுக்கு சங்கும் சக்கரமும் உண்டு .. அதனால் வைஷ்ணவர்கள் சூரியனை “ சூரியநாராயணன் “ என்று போற்றுகின்றனர் .. சிவ ஆகமங்களில் சூரியமண்டலத்தின் நடுவே சிவபெருமான் உறைந்திருப்பதாக கூறுகின்றன .. சூரியன் சிவனின் அஷ்டமூர்த்தங்களில் ஒருவராகவும் .. வலது கண்ணாகவும் இருக்கிறார் .. அதனால் தான் சைவர்கள் 
“ சிவசூரியன் “ என்று போற்றுகின்றனர் ..
ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி உலகின்நலனைக் கருதி ராவணனை வெல்ல முனைந்தபோது ஸ்ரீராமனுக்கு கவசமாக .. பாதுகாப்பாக .. ” ஆதித்யஹ்ருதயத்தை அகஸ்தியர் உபதேசித்தார் ..
வேதியர்கள் தினமும் ஓதும் காயத்ரி மந்திரமும் நமக்கு சிறந்த ஆரோக்கியத்தையும் அறிவுத்திறனையும் வாழ்வில் வெற்றியையும் கொடுக்கக்கூடியவையாகும் ..
சூரியனைப் போற்றுவோம் ! என்றும் எமை காத்தருள்வாராக ! “ ஓம் சூர்யபகவானே நமோஸ்துதே “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்

Image may contain: 1 person

No comments:

Post a Comment