” ஜெய ஜெய வருக ! நாதனே சரணம் !
வந்தருள் செய்திடுவாய் ! ஜெய ஜெய க்ஷேத்திர பாலனே !
சரணம் ! ஜெயங்களைத் தந்திடுவாய் ! ஜெய ஜெய வயிரவா ! செகம்புகழ்தேவா ! செல்வங்கள் தந்திடுவாய் ! தனக்கிலையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் “
வந்தருள் செய்திடுவாய் ! ஜெய ஜெய க்ஷேத்திர பாலனே !
சரணம் ! ஜெயங்களைத் தந்திடுவாய் ! ஜெய ஜெய வயிரவா ! செகம்புகழ்தேவா ! செல்வங்கள் தந்திடுவாய் ! தனக்கிலையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
திங்கட்கிழமையாகிய இன்று தேய்பிறை அஷ்டமித் திதியும் கூடிவருவது சிறப்பு .. செந்நிறமான ஜ்வாலைகளையுடைய ஜடாமகுடம் தரித்திருப்பவரும் .. வெண்ணிலவை முடியில் அணிந்திருப்பவரும் .. தேஜோமயமானவரும் .. உடுக்கை .. சூலம் .. கபாலம் .. பாசக்கயிறு ஆகியவற்றைக் கைகளில் வைத்திருப்பவரும் .உலகத்தைக் காவல் காப்பவருமாகிய பைரவப்பெருமானைப் போற்றித் துதித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் வெற்றிமிகுந்த நன்னாளாக அமைந்திடவும் சகல ஐஸ்வர்யங்களைப் பெற்று சுபீட்சமான வாழ்வு வாழ்ந்திடவும் பைரவரைப் பிரார்த்திக்கின்றேன் ..

ஓம் ஷ்வானத்வஜாய வித்மஹே !
சூலஹஸ்தாய தீமஹி !
தந்நோ பைரவஹ் ப்ரசோதயாத் !!
சூலஹஸ்தாய தீமஹி !
தந்நோ பைரவஹ் ப்ரசோதயாத் !!
பிரபஞ்சத்தில் சகலஜீவராசிகளும் வான்மண்டலத்தில் உள்ள சூரியன் முதலான கிரகங்களும் நட்சத்திரங்களும் காலச்சக்கரத்தின் ஆளுகைக்கு உட்பட்டதே ! காலச்சக்கரத்தினை இயக்கும் பரம்பொருள் காலபைரவரேயாவார் ! காலத்தின் கட்டுப்பாட்டைமீறி நன்மை செய்பவரும் இவரே ! காலச்சக்கரத்தினால் துன்புறும் பக்தர்களை காப்பாறுதவதால்
“ ஆபத்துத்தாரண பைரவர் “ என்று போற்றப்படுகிறார் ..
“ ஆபத்துத்தாரண பைரவர் “ என்று போற்றப்படுகிறார் ..
ஆபத்துத்தாரணர் என்றால் - பக்தர்களின் துன்பத்தை அடியோடு அழிப்பவர் என்றும் பொருள்படும் .. இவரே மகா காவலர் சட்டநாதர் என்றும் அழைக்கப்படுகிறார் .. பைரவர் என்ற பதத்திற்கு பயத்தை போக்குகிறவர் என்றும் பயத்தை அளிப்பவர் என்றும் பொருள் ..
பைரவரின் பீஜமந்திரங்கள் - காயத்ரி .. தியானம் .. மந்திரங்கள் .. அஷ்டோத்ரம் .. சகஸ்ரநாமம் யாவும் பைரவரின் அருளை விரைவில் தர வல்லமை பெற்றவையாக அமைகின்றன ..
குறிப்பாக சகஸ்ரநாமத்தால் கிடைக்கப்பெறும் பயன்கள் சிலவற்றை காண்போம் ..
ஆபத்து காலங்களிலும் எதிரிகளால் நாட்டிற்கு யுத்தபயம் ஏற்படும் போதிலும் கொடிய விலங்குகளினால் துன்பம் நேரும்போதும் நவக்கிரகங்களின் பெயர்ச்சியினால் (சுழற்சியினால்) பக்தர்களுக்கு துன்பம் நேரிடும்போதும்
வால்நட்சத்திரங்களாலும் .. எரிநட்சத்திரங்களாலும் ஆபத்து ஏற்படும் காலங்களிலும் திருடர்களால் தொல்லைகள் ஏற்படும் போதும் பைரவருக்கு இந்த சகஸ்ரநாம அர்ச்சனை செய்வதால் எல்லாவித கஷ்டங்களும் நீங்கி நன்மைகள் ஏற்படும் ..

அஷ்டமித் திதியில் பைரவரை வணங்கினால் ஐஸ்வர்யம் சுகம் பொன்பொருளையும் தருகின்றார் .. காரணம் அஷ்டமி திதியில் அஷ்டலக்ஷ்மிகளும் பைரவரை வணங்கி பைரவரின் அருளால் தன்னை வணங்கும் பக்தர்களுக்கு அஷ்டலக்ஷ்மிகள் அருள்புரிவதால் நாமும் அஷ்டமி திதியில் உள்ளம் உருகி பைரவரை நினைத்து முடிந்தவரை பூஜை செய்திட நினைத்தது எல்லாம் நடக்கும் .. இழந்த செல்வங்களை மீண்டும் பெறவும் .. தொழிலில் வளர்ச்சி காணவும் அருள்புரிவார் ..
பைரவரையும் அஷ்டலக்ஷ்மிகளையும் போற்றுவோம் ! நலம்பல பெறுவோமாக ! ஓம் பைரவாய நமஹ..
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
No comments:
Post a Comment