SWAMY SARANAM..GURUVE SARANAM
கரோனா அச்சம் எதிரொலி: சபரிமலையில் சில நிமிடங்களிலேயே தரிசனம் முடித்துக் கிளம்பிய பக்தர்கள்
கோவிட்-19 எனப்படும் கரோனா வைரஸ் தாக்கத்தினால் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்களின் வருகை மிக மிகக் குறைவாகவே உள்ளது.
அச்சத்தையும் மீறி கோயிலுக்கு வந்த சிலரும் நேரடியாக சன்னிதானத்திற்குச் சென்று சில நிமிடங்களிலே தரிசனம் முடிந்து விட்டு கிளம்பிச் சென்றனர்.
ராசிகளின் அடிப்படையில் மலையாள மாதங்கள் அழைக்கப்படுவது வழக்கம். இதனடிப்படையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதக் கடைசி நாளில் நடைதிறக்கப்பட்டு வருகின்றன. இதன்படி நேற்று கும்பம் மாத இறுதிநாளில் நடைதிறக்கப்பட்டது.
தந்திரி கண்டரரு மகேஷ்மோகனரு தலைமையில் மேல்சாந்தி சுதிர்நம்பூதரி நடைதிறந்து பக்தர்களுக்கு விபூதிப்பிரசாதம் வழங்கினார். தொடர்ந்து மாளிகைப்புரத்து அம்மன் கோயிலை மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதரி திறந்துவைத்தார்.
தற்போது கோவிட்-19 வைரஸ் பரவி வருவதால் கேரளாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பள்ளி, திரையரங்குகள், சுற்றுலா மையங்ங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
ஐயப்பன் கோயிலுக்கு ஏராளமானோர் வருவதால் நோய் பரவல் அதிகரிக்கும் என்பதால் பக்தர்கள் கோயிலுக்கு வரவேண்டாம் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானத் தலைவர் வாசு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதன்படி பம்பையில் உள்ள கடைகள்,ரூம்கள் அடைக்கப்பட்டிருந்ததுடன், சன்னிதானத்தில் உள்ள பிரசாத ஸ்டால்களும் மூடப்பட்டிருந்தன. பம்பை வரை இயக்கப்படும் கேரள அரசு பேருந்துகளும் இயக்கப்படவில்லை. இருப்பினும் பக்தர்கள் சிலர் தங்கள் வாகனங்களில் ஐயப்பன் கோயிலுக்கு தரிசனத்திற்கு வந்திருந்தனர்.
கூட்டம் இல்லாமல் இருந்ததால் வரிசையில் நிற்காமல் நேரடியாக சன்னிதானத்தை அடைந்து சில நிமிடங்களிலே தரிசனம் செய்து கிளம்பினர். அடுத்தடுத்து பக்தர்கள் வராததால் இன்று பகல் முழுவதும் கோயில் வளாகம் வெறிச்சோடிக் கிடந்தது.
கோயிலில் நிர்மால்ய தரிசனம், உச்சபூஜை, சந்தன, நெய் அபிஷேகம், கலசாபிஷேகம், அத்தாழ பூஜை உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் எதுவும் நடைபெறவில்லை. வரும் 18-ம் தேதி மீண்டும் நடை சாத்தப்பட உள்ளது.
#காரடையான்நோன்பு:
தினமும் காட்டில் விறகு வெட்டி அதனை விற்று வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தான் சத்தியவான். தன் கணவன் வாழும் இடமே தனக்கு சொர்க்கம் என்று, கணவன் வசிக்கும் காட்டிற்குச் சென்று வசித்து வந்தாள் சாவித்ரி.
"நாரதர் மூலமாகத் தன் கணவனின் ஆயுள் விரைவில் முடிந்துவிடும் என்று அறிந்துகொண்ட சாவித்ரி அந்த நிலை ஏற்பட்டால் என்ன செய்வது?' என்று யோசித்துத் தன் கணவனின் ஆயுளை நீடிக்க விரதம் மேற்கொள்ளத் திட்டமிட்டாள். அதன்படி பார்வதி தேவி கடைப்பிடித்த விரதத்தினை மேற்கொண்டாள். தன் கணவன் விறகு வெட்டச் செல்லும் போது, கார் அடையும் வெண்ணெயும் தயார் செய்து, தன் குல தெய்வத்திற்குப் பூஜை செய்து, மஞ்சள் சரடை பூஜையில் வைத்து, அதில் ஒன்றைக் கையில் கங்கணமாகக் கட்டிக் கொண்டாள். அன்றே நல்ல சுப வேளையில் திருமாங்கல்யச் சரடையும் மாற்றிக் கொண்டாள். அந்த நாள் மாசிமாதக் கடைசியும் பங்குனி மாதம் ஆரம்பமாகும் சுப வேளையும் ஆகும்.
காட்டில் விறகு வெட்டச் சென்ற சாவித்திரியின் கணவன் சத்தியவான், நாகம் தீண்டியதால் அவன் உயிர் பிரிந்தது. தன் கணவன் இறந்து விட்டான் என்பதை அறிந்த சாவித்திரி தன் கற்பு வலிமையால் யமனை அங்கு வரவழைத்து நியாயம் கேட்டாள்.
"ஆயுள் முடிந்து விட்டது. விதிப்படி என் கடமையைச் செய்தேன்'' என்று யமதர்மராஜன் கூறினான். இருந்தாலும் யமனுடன் வாதம் செய்தாள் சாவித்திரி. கடைசியில் தனக்கு ஒரு வரம் தரும்படி யமனிடம் கெஞ்சினாள். அவளது உறுதியும் கண்ணீரும் யமன் மனதை இளகச் செய்தது. "உன் கணவன் உயிரைத் தவிர எந்த வரம் வேண்டுமானாலும் தருகிறேன்'' என்று வாக்குறுதி கொடுத்தான்.
"வாழையடி வாழையாக என் வம்சம் தழைக்க வேண்டும்'' என்றாள். அப்படியே தந்தேன் என்றான் தர்மராஜன்.
""தர்மராஜரே, மகிழ்ச்சி. உங்கள் வரத்தின்படி என் கணவர் இல்லாமல் என் வம்சம் தழைக்க முடியாது, ஆகவே என் கணவனின் உயிரை அளியுங்கள்" என்று கேட்கவே, கொடுத்த வார்த்தையை மீற முடியாத தர்மராஜன் அவளுடைய சாதுரியத்தை வாழ்த்திவிட்டு சத்தியவானின் உயிரையும் அளித்தான். தான் விரதம் கடைப்பிடித்து பூஜை செய்த நாளிலேயே தன் கணவன் மீண்டும் உயிர் பெற்றதைக் கண்ட சாவித்திரி, "திருமணமான பெண்கள் தன் கணவனுடன் நீண்ட காலம் வாழ, இப்பூஜை செய்து நல்ல பலனைப் பெறும் பாக்கியத்தை அருள வேண்டும்'' என்று அன்னை காமாட்சியிடம் வேண்டி அருள் பெற்றாள் சாவித்திரி. இந்த நோன்பினை மாசி மாதக் கடைசியிலும் பங்குனி மாதம் ஆரம்பமாகும் வேளையிலும் கடைபிடிக்க வேண்டும்.
சாவித்திரியானவள் தன் கணவனுடன் காட்டில் வாழ்ந்த போது செந்நெல்லையும் காராமணியையும் கொண்டு அடை தயார் செய்து, வெண்ணெய்யுடன் ஸ்ரீகாமாட்சி அன்னைக்குச் சமர்ப்பித்து வழிபட்டதாலும், மாசி மாதக் கடைசியிலும் பங்குனி ஆரம்ப நிலையிலும் விரதமிருந்து கணவன் உயிரைக் காக்க மனபலம் பெற்றதாலும், அன்று காரடை தயார் செய்து, "உருகாத வெண்ணெயும் ஓரடையும் வைத்து நோன்பு நோற்றேன். ஒரு நாளும் என் கணவர் பிரியாமலிருக்க வேண்டும்" என்று சுமங்கலிகள் பூஜையின்போது வேண்டிக் கொள்ள வேண்டும் என்பார்கள்.
காரடையான் நோன்பின்போது மஞ்சள்சரடு வைத்து வழிபட்டு, சுப வேளையில் அதனை பெண்கள் கழுத்தில்அணிந்து கொள்ள வேண்டும். அத்துடன் கணவரிடம் ஆசி பெறுவதால் தங்கள் வாழ்வும் சிறக்கும். கணவரும் ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழ்ந்து வம்சம் தழைத்து வளரும் என்பது நம்பிக்கை.
சாமியே சரணம் ஐயப்பா..!! முக்கிய அறிவிப்பு...
மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஸ்ரீ கோவில் வரும் மார்ச் 13ம் தேதி மாலை 5 மணிக்கு ஸ்ரீ கோவிலில் நடை திறக்கப்படும். திறக்கப்பட்டு 18ஆம் தேதி இரவு வரை வழக்கமான பூஜைகள் அனைத்தும் நடைபெறும்..ஆனால் இந்த மாதம் சபரிமலை ஸ்ரீ கோவிலுக்கு பக்தர்கள் யாரும் தங்களுடைய புனித யாத்திரைக்காக ஐயனை காண வர வேண்டாம் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு கூறியுள்ளது.. காரணம் பத்தனம்திட்டா மற்றும் கேரளாவில் பரவலான பகுதிகளில் கோரோன வைரசின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பக்தர்கள் யாரும் வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது மேலும் தமிழ்நாடு ஆந்திரா கேரளா கர்நாடகா மகாராஷ்டிரா மற்றும் வெளிநாடுகளிலிருந்து வரும் பக்தர்களுக்கு இந்நோய் பரவ கூடும் என பொது நலம் கருதி இத்தகவலை திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது..எனவே பக்தர்கள் யாரும் இந்த மாதம் சபரிமலை வரவேண்டாம் என சபரிமலை நியூஸ் அப்டேட்ஸ் தமிழ் குழுவின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இதைப் பற்றிய தகவலை கேட்டு அறிந்த நண்பர்களுக்காகவும் இப் பதிவை பதிவிடுகிறேன் நம்முடைய நலனுக்காக தவக்கோலத்தில் இருக்கும் நம் கலியுக வரதனை காண நாமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் சுவாமியே சரணம் ஐயப்பா..!! Amid Rise in Coronavirus Cases in Kerala, Temple Board Urges Devotees to Avoid Visiting Sabarimala
Temple president N Vasu said all religious activities in the temple, however, will take place as per schedule.
IANS
Temple president N Vasu said all religious activities in the temple, however, will take place as per schedule.
IANS
Thiruvananthapuram: The Travancore Devasom Board (TDB) on Tuesday asked its devotees in the aftermath of about 12 people turning coronavirus positive in Kerala, to avoid coming to the famed Sabarimala temple when it opens for its monthly schedules in March.
Speaking to the media here, TDB president N Vasu said now that the Kerala government has announced of closing down all educational institutions for the month of March and wanted no gala festivities associated with religious establishments also.
So what we have decided is in the present scenario, we wish to request all our devotees that they should best avoid coming to the Sabarimala temple when it opens for its monthly pujas. But if anyone comes without knowing, we have not decided if they would be stopped from going to the temple," said Vasu, who added that all the religious activities that have to take place in the temple will take place as scheduled.
However, the temple will not be distributing its appam and payasam to the devotees as the counters will remain closed.
TDB is the body that governs the Sabarimala temple and most of the temples in the southern districts of Kerala.
According to the temple calendar for the month of March, the temple opens at 5 am on Friday and will close on March 18 and then again on March 28.
Incidentally, the temple is located in Pathanamthitta district where seven out of the 12 cases that tested positive has been reported.
SWAMY SARANAM...GURUVE SARANAM...விந்தியவாசினி தேவி கோயில்
விந்தியவாசினி தேவி, அவரது பெயரே உணர்த்துவது போல் உத்தரப்பிரதேசத்தின் மிர்சாப்பூர் மாவட்டத்தில் உள்ள விந்தியாஞ்சல் என்னும் சிறுநகரத்தின் காவல் தெய்வமாக விளங்குகிறார்.
வேதசாஸ்திரங்களின் படி, இவர் துர்கா தேவியின் அவதாரமாகக் கருதப்படுகிறார். அவரது ஆசனம் முக்கிய ஷக்திபீடங்களுள் ஒன்றாக இந்து பக்தர்களால் போற்றப்படுகின்றது.
உள்ளூர்வாசிகளால் கஜாலா தேவி என்று பிரபலமாக அழைக்கப்படும் விந்தியவாசினி தேவி, அன்பு மற்றும் ஆறுதலின் அவதாரமாகக் கருதப்படுகிறார்.
மிகப் பெரிய கட்டுமானமாகக் காணப்படும் விந்தியவாசினி கோயில், விந்தியாஞ்சல் நகரின் பரபரப்பான கடைத்தெருவின் மத்தியில் அமைந்துள்ளது. இக்கோயில், சிங்கத்தின் மேல் அமர்ந்த வாக்கில் அருள் பாலிக்கும் தேவியின் சிலையைக் கொண்டுள்ள பெருமை வாய்ந்ததாகும். இச்சிலை கருங்கல்லால் செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஏராளமான சிவலிங்கங்கள் மற்றும் தம்த்வஜா தேவி, டெவில்வ் புஜா தேவி, மாகாளி ஆகியோருக்கு அர்ப்பணம் செய்யப்பட்டுள்ள பல கோயில்களையும் இக்கோயில் வளாகத்தில் காண முடிகிறது.
இங்கு சப்தஷ்ஸ்தி மண்டபம் என்றழைக்கப்படும் விதானத்தில், துர்க்கா தேவியைத் துதிக்கும் ஸ்லோகங்கள் அடங்கிய புனிதத் தொகுப்பான துர்க்கா சப்தஷ்ஸ்தியிலிருந்து எடுக்கப்பட்ட குறிப்புகள் பொறிக்கப்பட்டுள்ளதையும் காணலாம்.
இக்கோயில் சைத்ரா அல்லது ஏப்ரலில் வரும் நவராத்திரிகளின் போதும், அக்டோபர் மாதத்தில் வரும் அஷ்வினின் போதும் ஏராளமான பக்தர்கள் கூடும் ஸ்தலமாக விளங்குகிறது.
SWAMY SARANAM. GURUVE SARANAM.வடநாட்டு யாத்திரையில் திரிவேணியும் வாரணாசியும்
அலகாபாத் பெயர் இப்பொழுது பிரயாகராஜாக மாறி விட்டது.இங்கு மிகவும் முக்கியமானது திரிவேணி சங்கமம் ஆகும்.கங்கை,யமுனை மற்றும் கண்ணுக்கு தெரியாத சரஸ்வதி நதிகள் சேரும் இடம் சங்கமம் ஆகும்.சங்கமத்துக்கு செல்ல, யமுனை நதியின் கரையில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் படகில் செல்ல வேண்டும்.கங்கை நீர் செம்மண் நிறத்திலும் யமுனை நீர் நீல நிறத்திலும் கலப்பதை காணலாம். அங்கு ஆற்றில் இறங்கி குளித்து விட்டு சங்கல்பம் செய்யவிட்டு திரும்பி வரும்போது படகில் இருந்தபடியே கங்கையில் தண்ணீரை பாட்டிலில் எடுத்துவரலாம். அதுவே கங்கா தீர்த்தமாகும்.
கரையில் தெரியும் பெரிய கோட்டை அக்பர் கட்டிய கோட்டையாகும். அதனுள் ஒரு ஆல மரம் உள்ளது அது அட்சயவடம் என்று அழைக்கபடுகிறது. அங்கு ஒரு பாதாள கோயில் உள்ளது. இங்கு ஆதிகேசவன் ( பாம்பின்) சிலை இருக்கிறது.வரும் வழியில் ஆஞ்சநேயர் கோயில் உள்ளது.15 அடி நீளத்தில் அங்கு ஆஞ்சநேயர் சயன கோலத்தில் காட்சியளிக்கிறார். அருகில் சங்கர விமான மண்டபம் உள்ளது.காஞ்சி மடத்தால் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
அடுத்தது தாரகஞ்சிலுள்ள வேணி மாதவர் ஆலயம். இங்கு மாதவரும்,திருவேணியும் இருக்கிறார்கள். அடுத்தது சர்ப்பராஜா எனப்படும் வாசுகி ஆலயம். இது நாகபாசு எனப்படும் இடத்தில கங்கை கரையில் இருக்கிறது. இந்த கோயிலுக்கு முன்புறமுள்ள மண்டபத்தில் பீஷ்மரின் பிரமாண்ட சிலை உள்ளது.
நேருவின் பிறந்த வீடான ஆனந்தபவனும், பழம் பொருள் காட்சியகமும், பிர்லா கோவிலும் மற்ற பார்க்க வேண்டிய இடங்கள்.
காசி
காசியில் நாம் பார்க்க பல இடங்கள் உள்ளன.சுமார் இரண்டு நாட்கள் தங்கி பார்க்கவேண்டும்.
காசியில் முதலில் அதிகாலை கங்கையில் குளித்துவிட்டு விஸ்வநாதரையும் விசாலாஷியையும், அன்னபூரணியையும் தரிசிக்கலாம். விஸ்வநாதருக்கு இரண்டு கால பூஜை நாட்டு கோட்டை சத்திரத்தாரால் நடத்தப்படுகிறது. விசாலாஷி கோவிலைதரிசனம் செய்யலாம்..
காசியில் முதலில் அதிகாலை கங்கையில் குளித்துவிட்டு விஸ்வநாதரையும் விசாலாஷியையும், அன்னபூரணியையும் தரிசிக்கலாம். விஸ்வநாதருக்கு இரண்டு கால பூஜை நாட்டு கோட்டை சத்திரத்தாரால் நடத்தப்படுகிறது. விசாலாஷி கோவிலைதரிசனம் செய்யலாம்..
கேதரீஸ்வரர் கோவில்- கேதார் படித்துறையில் குமாரசாமி மடத்துக்கு அருகில் உள்ளது. இங்கு நாமே கங்கா தீரத்தை கொண்டு வந்து சாமியை அபிஷேகம் செய்யலாம்.
துண்டி விநாயகர் கோயில் கடைதெருவில் உள்ளது. பஞ்சகங்கா கட்டத்தில் பிந்து மாதவர் கோவில் உள்ளது.தசாவமேத படித்துறை அருகில் உள்ள வராகி கோவிலுக்கு காலை ஐந்து மணிக்குள் செல்லவேண்டும்.மேல்தளத்திலிருந்து கீழேயுள்ள பாதங்களை மட்டும் தரிசிக்கலாம்.
காசி பல்கலை கழகம் போகும் வழியில் அனுமன் ஆலயம் உள்ளது. இதன் அருகில் குரங்கு கோவில் எனப்படும் துர்க்கை கோவில் உள்ளது.காசி பாரத இந்து பல்கலைகழகத்துக்குள் உள்ள புது விஸ்வநாதர் ( பிர்லா ) கோவில் மதன் மோகன் மாளவியாவால் கட்டப்பட்ட மிகவும் அருமையான கோவில் ஆகும்.
துளசி மனாசு கோவில் ராமாயணம் எழுதிய துளசி தாசரின் நினைவாக கட்டப்பட்டுள்ளது. மாடர்ன் முறையில் ராமாயண காட்சிகள் பார்வைக்கு வைக்கபட்டுள்ளன.கால பைரவர் கோவில் விஸ்வநாதர் கோவிலுக்கு வடக்கே ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு காசிகயிறு வாங்கலாம்..
காசியில் கங்கை செம்பு, ருத்திராட்சம், ஸ்படிகமாலை, பூஜை தட்டு, பூஜை மணி, ஜப மாலை முதலிய பூஜை சாமான்களும், செப்பு கிண்ணங்களில் அடைக்கப்பட்ட காசி தீர்த்ததையும், விஸ்வநாதர், அன்னபூரணி, விசாலாட்சி விக்கிரகங்களும், படங்களும் வாங்குவது உத்தமம்.
Subscribe to:
Posts (Atom)