சுவாமியே சரணம் ஐயப்பா!! பன்வேல் பாலகன் நாமம் போற்றி!! குருவின் பாதார விந்தங்கள் போற்றி! போற்றி!!


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று இப்பிரபஞ்சத்தைக் காக்கும் கடவுளான மஹாவிஷ்ணுவைத் துதித்து .. தங்கள் மனநலமும் .. உடல்நலமும் நலம்பெற்று .. மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன் .. வணங்குகின்றேன் ..

ஓம் நமோ நாராயணாய வித்மஹே !
வாசுதேவாய தீமஹி !
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! 

பொதுவாக நாம் மந்திரங்களை உச்சரிக்கும் போது ‘ஓம்’ என்று தொடங்கி .. ‘நமோ’ என்றோ .. ‘நம’ என்றோ முடிப்போம் .. 
’நமோ’ என்ற வார்த்தைக்கு காலில் விழுந்து வணங்குகிறேன் என்பது பொருளாகும் .. நம்மைவிட பெரியவர்கள் கால்களிலும் 
மகான்கள் கால்களிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது விசேஷமானது .. இவையெல்லாவற்றையும் விட குருவின்  பாதத்தில் விழுவது மகாவிசேஷமாகும் .குருவின் ஆசியானது பகவானின் ஆசியைவிட மேலானது. நமது கஷ்டங்களை குருவின் பாதங்களில் சமர்ப்பிக்கும்போது அது நேரடியாக பாகவானை சென்றடைவதாக ஐதீகம் கூறுகிறது..

பகவானைவிட அவனது நாமத்திற்கு அதிக சக்தி உள்ளது என்பது நமது நம்பிக்கை மட்டுமல்ல அனுபவ உண்மையாகும் 
கடவுளின் திருப்பெயரை மானசீகமாக விழுந்து வணங்குவதே 
நமோ என்ற வார்த்தையின் பக்திபூர்வ உண்மையாகும் .. 
தன்னைவிட உயர்ந்த ஒன்றின் முன்னால் சரணடையும் போது தன்னுடைய திறமை .. சக்தி .. புத்தி .. எல்லாவற்றையுமே அந்த உயர்ந்த ஒன்றின் முன்னால் சமர்ப்பித்து .. நான் .. எனது .. என்ற அகங்காரத்தை பஸ்பமாக்க முடிகிறது .. பகவானை கண்ணெதிரே கண்டு சரணடைவதற்கு சமமானது இதுவாகும் ..

‘ஓம்’ என்ற வார்த்தை பிரணவமந்திரம் என்று எல்லோருக்கும் தெரியும் .. இந்த மந்திரஒலி .. அதிர்வு .. இப்பிரபஞ்சத்தில் நிறைந்துள்ள இறைசக்தியை உச்சரிக்கும் இடத்திற்கு ஆதர்ஷணம் செய்கிறது .. நாம் எந்த தேவதையை விரும்பி உபாசனை செய்கிறோமோ அந்த தேவதையின் சக்தி ‘ஓம்’ என்ற மந்திரத்தின் வழியாக நமக்குள் பாய்கிறது .. 

உதாரணமாக .. ‘ஓம் நமோ நாராயணாய ‘ என்ற மந்திரத்தை 
நாம் உச்சரிக்கும் போது “ நாராயணா” என்ற சத்தத்திற்கான இறைசக்தி நமக்கு அருகில் வருகிறது .. அதை நாம் சரணடையும் போது நமது விருப்பங்கள் நிறைவேறுகின்றன .. அல்லது கிடைப்பதற்கரிய மனநிம்மதி கிடைக்கிறது .. 

இறைவனின் நாமத்தை எத்தனைமுறை உச்சரித்தாலும் சரி ஒவ்வொருமுறை உச்சரிக்கும்போதும் பலன் உண்டு .. எனவே பிரார்த்தனை உதடுகள் மூலமல்லாமல் உள்ளத்தின் மூலம் இருக்கட்டும் .. பகவானின் நாமஸ்மரனையும் சரி .. உங்கள் பிரார்த்தனையும் சரி என்றுமே வீண்போகாது ..
வெற்றி நிச்சயம் ! எதிலும் .. எங்கும் .. வெற்றியே ! .. 
‘ஓம் நமோ நாராயணா’ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும்..

WISH YOU ALL A VERY HAPPY MORNING WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD VISHNU .. MAY HAPPINESS AND PEACE SURROUND YOU WITH HIS ETERNAL LOVE & STRENGTH .. 
" OM NAMO NAARAAYANAA "




Swamiye Saranam Iyyappa!Panvel balagane saranam Iyyappa!! Guruve Saranam! Saranam

 

சுவாமியே சரணம் ஐயப்பா!! பன்வேல் பாலகன் நாமம் போற்றி!! குருவின் பாதார விந்தங்கள் போற்றி! போற்றி!!



அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
செவ்வாய்க்கிழமையாகிய இன்று கலியுகவரதனாகிய முருகப்பெருமானுக்குரிய நாளாகும் .. முருகனைப் பிரார்த்தித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் விசேஷமான நன்னாளாக அமைந்திடவும் .. சகலயோகங்களும் .. வளங்களும் பெற்றிடவும் வாழ்த்துகிறேன் .. வணங்குகின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹேஷ்வர புத்ராய தீமஹி ! 

தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத் !! .. 

“ ஓம் முருகா ! என்று ஓங்கி ஒலிக்கும் ஒருவரின் குரலுக்கு ஒரு நாளும் துன்பமில்லை “ 

‘ ஓம் ‘ என்னும் பிரணவமந்திரத்திற்கு பல விளக்கங்கள் உள்ளன .. ஆதிபகவானாகிய இறைவனே ! ஜீவனாகிய என்னை சேர்த்துக்கொள் ! என்பது இதன் பொருள் .. ஒவ்வொருதடவையும் “ஓம்” என்று சொன்னபிறகு விஷ்ணுவே .. சிவனே .. சக்தியே .. விநாயகா .. ஐயப்பா .. முருகா .. என்றெல்லாம் அவரவர் இஷ்டதெய்வத்தை அழைக்கிறோம் .. காலம் வரும்போது இந்த மந்திரம் சொன்னதற்குரிய பலன் உறுதியாகக் கிடைக்கும் .. பிறப்பற்ற நிலையும் .. பரமானந்தமும் ஏற்படும் .. 

’ பிரணவம்’ என்பதற்கு பொருள் .. என்றும் புதியது .. ஓம் ! ஓம் ! ஓம் ! என முழங்காத நாட்களே ஒருபக்தனின் வாழ்க்கையில் இல்லை .. என்றும் புதிதாகவே இருக்கிறேன் என்பதே இந்த மந்திரத்தின் மூலம் இறைவன் நமக்களிக்கும் தகவல் .. 
ஓம் ! என்று நினைத்தாலே போதும் முருகன் வேல் வந்து அருள் தந்து நம் நெஞ்ஜை ஆளும் ..
ஓம் முருகா ! வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA !
MAY HE SHOWER YOU WITH HAPPINESS AND PROSPERITY .. 
" OM MURUGA
"


Swamiye Saranam Iyyappa!Panvel balagane saranam Iyyappa!! Guruve Saranam! Saranam
 

சுவாமியே சரணம் ஐயப்பா!! பன்வேல் பாலகன் நாமம் போற்றி!! குருவின் பாதார விந்தங்கள் போற்றி! போற்றி!!


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையும் .. அமாவாசையும் இணைந்து வரும் இன்றைய நாளில் (காலை வரை 9.45) சோமவாரத்தை ‘அமாசோமவாரம்’ என்பர் .. தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் பொன்னாளாக மிளிரவும் .. சகலதடைகளும் நீங்கி அனைத்திலும் வெற்றி பெறவும் சிவபெருமானைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ர ப்ரசோதயாத் !!
நம் முன்னோர்கள் மழைதரும் மரங்களையும் தெய்வாம்சமாக நினைத்துப் பூஜித்து வழிபட்டனர் ..
மரங்களின் அரசனாக விளங்குவது அரசமரம் .. 
“மரங்களில் நான் அரசமரம் “ என்று ஸ்ரீகிருஷ்ணபரமாத்மாவே கீதையில் அருளுகிறார் (அஸ்வத்த ஸர்வவ்ருக்ஷாணாம் தேவாஷீணாம ச நாரத)
கரியமிலவாயுவை உள்வாங்கி மற்ற மரங்களைவிடவும் மிக அதிக அளவில் ஆக்ஸிஜனை வெளியிடும் தன்மை படைத்தது 
இன்று அரசமரத்தை பிரதட்சணம் செய்வது கிடைத்தற்கரிய பலன்களைத் தரும் ..பின் சிவாலய தரிசனம் செய்வதும் அஸ்வத்த நாராயண பூஜை செய்வதும் மிக விசேஷமாகக் கருதப்படுகிறது ..
அரசமரத்திற்கு ‘அஸ்வத்தமரம்’ என்றும் பெயர் உண்டு .. இம்மரம் ஸ்ரீவிஷ்ணுவின் வலக்கண்ணில் இருந்து தோன்றியதாக பத்மபுராணம் கூறுகிறது .. அரசமரத்தின் வேரில் பிரம்மாவும் .. நடுப்பகுதியில் விஷ்ணுவும் .. மேல்பகுதியில் சிவனும் வாசம் செய்வதாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன ..
மரத்தைச் சுற்றி பிரதட்சணம் செய்யும்போது மரத்தை தொடக்கூடாது .. சனிக்கிழமை மட்டும் தான் மரத்தை தொடலாமென்றும் ஒரு கூற்று உள்ளது .. மரத்தை நெருங்கிச் சுற்றக்கூடாது .. அதிகாலை நேரமே விசேஷம் அந்நேரத்தில் ஓசோன் வாயுவை அதிக அளவில் அரசமரம் வெளியிடுவதாகச் சொல்லப்படுகிறது .. அனைத்து பாவங்களும் .. சாபங்களும் உடனே நீங்கும் ..
இன்று அரசமரத்தைப் பூஜித்து அனைத்து தேவர்களின் நல்லாசிகளைப் பெற்று அனைத்திலும் வெற்றி பெறுவோமாக! 
வெற்றி நிச்சயம் ! வாழ்க வளமுடனும் .. நலமுடனும் ..
GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED MONDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. MAY YOU BE BLESSED WITH SUCCESS .. PROSPERITY .. AND HAPPINESS .. 
"OM NAMASHIVAAYA "
Swamiye Saranam Iyyappa!Panvel balagane saranam Iyyappa!! Guruve Saranam! Saranam

பச்சரிசி மாவில் கோலம் போடுவதன் தத்துவம் என்ன? மற்றவர்களுக்கு அன்னதானம் செய்தல் புண்ணியம். அதிலும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்தல் பெரும் புண்ணியமாகும். வசதி படைத்த பணக்காரர்கள் அக்காலத்தில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்தார்கள். ஆனால், ஏழை என்ன செய்வான்? அந்த ஏழையும் ஆயிரம் உயிர்களுக்கு அன்னதானம் செய்யும் வழிவகைகளை நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். பச்சரிசி மாவில் கோலம் போட்டால் அம் மாவை ஆயிரக்கணக்கான எறும்புகள் சாப்பிட்டபின், மீதமிருக்கும் அரிசி மாவை எடுத்துச் சென்று தங்கள் வலைகளில் சேமித்து வைக்கும். எனவே, ஆயிரக்கணக்கான உயிர்களுக்கு உணவளித்து மகிழ்ச்சிப்படுத்தும், இந்த முறையைப் போல் ஆன்ம நேயத்தையும், ஆன்மீகத்தையும் சிறப்பிக்கும் செயல் வேறு உண்டோ எனில் இல்லையெனக் கூறலாம். " உன்னிலும் என்னிலும் இருக்கும் ஈசன், ஈயெறும் புடலிலும் இருக்கிறான்" எனபது நினைவு கூறத்தக்கவை. ஆயிரம் உயர்களுக்கு உணவளித்த அந்த மகிழ்ச்சி, உணவளித்தவரின் உள்ளம், உடல் ஆகிய இரண்டையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் அல்லவா? கோலம் போடுவதில் இன்னொரு தத்துவமும் அடங்கியிருக்கிறது. பல புள்ளிகள் வைத்து பல வடிவங்களில் வளைத்து போடப்படுகின்ற கோலம், பார்ப்பவரின் மனத்தைக் கவரும். யாராவது வீட்டில் தகராறு செய்ய வேண்டும் என்று நினைத்து வருகின்றபோது, அந்த அழகுக் கோலங்கள், வருபவரின் எண்ணத்தைச் சிதற வைக்கிறது. அதனால், வருபவர் கோபம் தணிந்துதான் வீட்டுக்குள்ளே வருவார். இப்படிப்பட்ட மனோவசிய சக்தி கோலங்களுக்கு உண்டு என அறிந்தே முன்னோர்கள் கோலம் போடுவதைப் பரவலாக செய்தார்கள்.

சுவாமியே சரணம் ஐயப்பா!! பன்வேல் பாலகன் நாமம் போற்றி!! குருவின் பாதார விந்தங்கள் போற்றி! போற்றி!!அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஞாயிற்றுக்கிழமையான இன்று சூரியபகவானுக்குரிய நாளாகும் .. சூரியாதிக்கம் பூமியில் நிறைந்த நாள் .. சூரியபகவானைத் துதித்து தங்கள் அனைவருக்கும் இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாகவும் .. தேகாரோக்கியம் சிறப்பாக அமைந்திடவும் பிரார்த்திக்கின்றேன் .. ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே ! பாஸஹஸ்தாய தீமஹி ! தந்நோ சூர்யஹ் ப்ரசோதயாத் !! “லோக கர்த்தர்” என வேதங்கள் புகழும் சூரியபகவான் பிரத்யக்ஷ்மாக நம் கண்முன் தோன்றி அருள்புரிபவர் .. அங்கிங்கெனாதபடி எங்கும் தன் அமுத கிரணங்களை பாரபட்சமின்றிப் பொழிபவர் .. பேதமில்லாமல் யாவரையும் சமமாக நோக்கும் நெறியை நமக்குச் சொல்லாமல் சொல்பவர் ரிக்வேதம் ”அக்னியின் முதல்வன்” என்றும் .. யஜுர்வேதம் ”சகல உலகத்தையும் காப்பவன்” என்றும் .. சாமவேதம் “ உயிரினங்களைத் தீவினைகளிலிருந்து மீட்பவர்” என்றும் சூரியபகவானைப் போற்றுகின்றன .. எல்லா இறைமூர்த்தங்களிலும் வலது கண் சூரியபகவான் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது .. கண்சம்மந்தமான நோய்கள் நீங்க ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை சந்தனத்தால் அபிஷேகம் செய்து ..வெள்ளெருக்கு .. சிவப்பு வஸ்திரம் சாற்றி சூரியனுக்கு ஹோமம் செய்து வழிபாடு செய்வது சிறப்பு .. சிவபெருமான் அபிஷேகப் பிரியர் என்பது போல் .. சூரியபகவான் நமஸ்காரப் பிரியர் .. சூரியபகவானைப் போற்றுவோம் ! அவரது திருவருளையும் .. அருட்கடாக்ஷ்த்தையும் பெற்றிடுவோம் .. ஞாயிறே போற்றி ! சூரியபகவானே ! போற்றி ! போற்றி ! வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SURYA .. MAY HE SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH AND PROSPERITY .. " JAI SURYA DEV " Swamiye Saranam Iyyappa!Panvel balagane saranam Iyyappa!! Guruve Saranam! Saranam

Andal Kovil, Srivilliputhur









This magnificient, majestic, beautiful gopuram is that of Vada Badhrasayi Temple, SriVilliputhur. This temple is known for the famous Andaal, who fell in love with Lord Krishna and resolved to marry only Him. She composed and sang the unmatching Thiruppavai in Tamil which is sung by a lot many people during the month of December (Margazhi month).
One has to learn Tamil and drink the nectar of this Thiruppavai slokas. Such devotion, such love, such depth and such many many goodness and sweetness are there in them. This gopuram is the emblem of Tamil Nadu Goverment.
Here is the Perumal who is called as Vada Badhrasayi whose chief priest's daughter was Andaal. He got this girl child from a Thulasi vanam (bush) nearby the temple. She grew singing and praising Lord Krishna. During the month of Margazhi (close to December), she takes her friends to the temple early in the morning, singing this Thiruppavai. Also, she prepares the garland for the Lord and wears it on her own shoulders to see if it will suit the Lord. This is not normally practised by Hindus and infact, it is considered to be a sin or paap. Andaal is unaware of this and she just ensures that the garland is best fit for the Lord. One day, her father notices it and becomes very frustrated and upset. That night in his dreams, Lord Krishna appears and convinces him that He is more happier to wear the garland that is worn and given by Andaal. She is thus called fondly as 'Soodi kodutha sudar kodi' meaning, the beautiful one who wore the garland and gave'. Eventually, she marries the Lord in the same village.


சுவாமியே சரணம் ஐயப்பா!! பன்வேல் பாலகன் நாமம் போற்றி!! குருவின் பாதார விந்தங்கள் போற்றி! போற்றி!!அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சனிக்கிழமையாகிய இன்று ஈஸ்வரனைத் துதித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாக அமைந்திடவும் .. இகம் .. பரம் .. வீடு .. என்ற மும் நலன்களைப் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகின்றேன் .. வணங்குகின்றேன் .. ஓம் தத்புருஷாய வித்மஹே ! மஹாதேவாய தீமஹி ! தந்நோ ருத்ர ப்ரசோதயாத் !! உலகத்தில் உள்ள அனைத்துமே மூன்றுக்குள் அடங்கியவைதான் .. சூலம் தேவிக்குரிய ஆயுதமாக இருந்தாலும் சிவனின் ஆயுதமாகவும் பார்க்கப்படுகிறது .. இவை மூன்று இலைகளைக் (பிரிவு) கொண்டது .. இச்சூல வடிவத்தை பல்வேறு நிலைகளோடும் ஒப்பிடலாம் .. மனிதனின் விழிப்பு .. கனவு .. தூக்கம் என்ற மனிதனுக்குள்ள மூன்று நிலைகளாகவும் சொல்லலாம் .. மனம் .. வாக்கு .. காயம் (உடல்) இம்மூன்றாலும் ஒருமனிதன் ஒன்றுபட்டு இருக்கவேண்டும் .. மனம் ஒன்று நினைக்க .. வாக்கு ஒன்று சொல்ல .. காயம் (உடம்பு) ஒரு செயலில் ஈடுபடக்கூடாது என்பதையே சூலத்தின் வடிவம் காட்டுகிறது .. வாழ்வில் அறம் .. பொருள் .. இன்பம் .. இம்மூன்றையும் முறையாகக் கடைபிடிப்பவர்கள் .. சிவன் .. உமாதேவியின் அருள்பெற்று மகிழ்வார்கள் .. இச்சை - (நியாயமான ஆசை) கிரியை - (அதைச் செயல்படுத்தும் தன்மை) ஞானம் - (அதனால் ஏற்படும் பலன்) என்றும் சொல்லலாம் .. இந்த மூன்று சக்திகளும் நமக்கு சிந்திக்கவேண்டும் என்பதையும் .. சூலம் காட்டுகிறது .. சூலத்தை வெறும் கொல்லும் ஆயுதம் என்று பார்க்ககூடாது .. தத்துவார்த்தமாகத் தரிசிக்கவேண்டும் .. எனவேதான் அம்பிகையும் .. சிவனையும் “ திரிவர்க்க தாத்ரீ “ ( படைத்தல் .. காத்தல் .. அழித்தல் ) என்று போற்றுகின்றோம் .. சிவனைப் போற்றுவோம் .. மனநலத்தையும் .. உடல்நலத்தையும் பெற்றிடுவோமாக .. “ஓம் நமசிவாய” வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SATURDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. MAY HAPPINESS & PEACE SURROUND YOU WITH HIS ETERNAL LOVE AND STRENGTH .. " OM NAMASHIVAAYA "Swamiye Saranam Iyyappa!Panvel balagane saranam Iyyappa!! Guruve Saranam! Saranam



சுவாமியே சரணம் ஐயப்பா!!  பன்வேல் பாலகன் நாமம் போற்றி!! குருவின் பாதார விந்தங்கள்  போற்றி! போற்றி!!


அனைவருக்கும் என் இனிய காலை வணக்கம்.........
மஹாலசஷ்மியின் அருள்பார்வை பெறுவது நிச்சயம். இம்மந்திரத்தை காலை மாலை 5 தடவை கூறவும்.....
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் 
மஹா அஷ்ட ஐஸ்வா்ய சம்பத்து 
ஆதிக்க மஹா குபேர மங்களம்

சா்வ பாக்கிய சுதா்சன சங்கு சக்கர 
பத்ம கதாயுத லசஷ்மி நாராயண தேவாய நம:
2.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் 
க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம்
அஷ்ட ஐஸ்வர்ய சம்பத்து யோக அம்ச 
குபேர சக்ரவர்த்தி தேவாய நம:
சர்வராஜ வசீகர யோக குபேர 
தனதானிய சம்பத்து வசிய ஐஸ்வர்ய குபேரா
மனோ தைரிய வாக்கு ஞான வசிய வீர குபேரா
சர்வதேஜோலசஷண கீர்த்தி வசிய மகா ஜய விஜயகுபேரா
சர்வ காரிய சித்தி வசியஜய குபேரா
ஓம் மகா ஜய விஜய அம்சகுபேர சக்ரவர்த்தி தேவா நமஸ்துதே....
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீ்ம்
தன குபேர தேவாய நம:
ஓம் ஸ்ரீம் ஹரீம் க்லீம்
ஞான குபேர தேவாய நம:
ஓம் ஸ்ரீம் ஹரீம் க்லீம்
வீர குபேர தேவாய நம:
ஓம் ஸ்ரீம் ஹரீம் க்லீம்
யோக குபேர தேவாய நம:
ஓம் ஸ்ரீம் ஹரீம் க்லீம்
சர்வ சௌபாக்ய தேவாய நம:
ஓம் ஸ்ரீம் ஹரீம் க்லீம்
ஜனவசிய குபேர தேவாய நம:
ஓம் ஸ்ரீம் ஹரீம் க்லீம்
காந்தசக்தி குபேர தேவாய நம:
ஓம் ஸ்ரீம் ஹரீம் க்லீம்

ஜய விஜய குபேர தேவாய நம:

சுவாமியே சரணம் ஐயப்பா!! பன்வேல் பாலகன் நாமம் போற்றி!! குருவின் பாதார விந்தங்கள் போற்றி! போற்றி!!அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வெள்ளிக்கிழமையாகிய இன்று பிரதோஷமும் வருவதால் மாலையில் பிரதோஷ வேளையில் (4.30 - 6.00 மணி மாலை) ஆலயம் சென்று நந்தீஸ்வரரின் கொம்புகளுக்கிடையில் சிவனுக்கு நடக்கும் அபிஷேகத்தை தரிசனம் செய்வது சாலச்சிறந்தது .. தங்கள் அனைவருக்கும் இன்றையநாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாகவும் .. நினைத்தது அனைத்தும் வெற்றிபெறவும் வாழ்த்தி வணங்குகிறேன் .. ஓம் தத்புருஷாய வித்மஹே ! மஹாதேவாய தீமஹி ! தந்நோ ருத்ர ப்ரசோதயாத் !! .. பிரதோஷகாலத்திலே நியமமாக மெய்யன்போடு சிவதரிசனஞ் செய்துகொண்டுவரின் .. கடன் .. வறுமை .. நோய் .. பயம் .. அகாலமரணம் .. மரணவேதனை .. பாவம் என்னும் இவைகளெல்லாம் நீங்கும் .. பகலிலே சாப்பிடாமல் சூரியன் அஸ்தமிக்க நான்கு நாழிகை உண்டு என்னும் அளவிலே ஸ்நானம் செய்து சிவபூஜை பண்ணித் திருக்கோயிலிற் சென்று சிவதரிசனஞ் செய்து .. பிரதோஷ காலம் கழிந்தபின்பு சிவனடியாரோடு உணவு உட்கொள்ளல் சிறந்தது .. அல்லது இல்லம் வந்து உட்கொள்ளலாம் .. சிவனைப் போற்றுவோம் ! அவரது திருவருளும் .. அருட்கடாக்ஷ்மும் பெற்று வாழ்வில் சகலவெற்றிகளையும் பெறுவோமாக .. “ ஓம் நமசிவாய “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. MAY THE DIVINE BLESSINGS OF LORD SHIVA BRING YOU ETERNAL SUCCESS IN YOUR CAREER AND FULFILL ALL YOUR DESIRES ON THIS SACRED DAY OF PRADOSHAM " OM NAMASHIVAAYA "Swamiye Saranam Iyyappa!Panvel balagane saranam Iyyappa!! Guruve Saranam! Saranam

சுவாமியே சரணம் ஐயப்பா!! பன்வேல் பாலகன் நாமம் போற்றி!! குருவின் பாதார விந்தங்கள் போற்றி! போற்றி!!அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வியாழக்கிழமையாகிய இன்று ஏகாதசி விரதமும் கூடிவருகின்றது .. இந்த ஏகாதசி “ வரூதினி ஏகாதசி “ என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது .. மஹாவிஷ்ணுவைத் துதித்து தங்களனைவருக்கும் சகல சௌபாக்கியங்களும் .. நல்ல தேகாரோக்கியமும் பெற்றிட பிரார்த்திக்கின்றேன் .. ஓம் நமோ நாராயணாய வித்மஹே ! வாசுதேவாய தீமஹி ! தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! .. வரூதினீ ஏகாதசி - இவ்விரதத்தை அனுஷ்டிப்பவர்களுக்கு அளவில்லா சௌபாக்கியம் கிடைக்கும் .. மனிதர்களின் சர்வ பாவங்களும் நீங்கப் பெறுகிறது .. துரதிஷ்டத்தால் .. துக்கத்தில் வாடும் இல்லத்தரசிகள் இவ்விரதத்தை கடைபிடிப்பதால் சகல சௌபாக்கியங்களுடன் கூடிய ஆனந்த வாழ்வினைப் பெறுவர் . வரூதினீ ஏகாதசியின் புண்ணியபலனின் பிரபாவத்தால் ராஜா மாந்தாதா சுவர்க்கலோகப் பிராப்தியைப் பெற்றார் .. இஷ்வாகு அரசபரம்பரையில் வந்த மகாராஜா தந்துமாரா .. சிவபெருமானின் சாபத்தால் தான் பெற்ற குஷ்டரோகத்திலிருந்து விடுதலை பெற்று இவ்விரத மேன்மையான சுவர்க்கலோகப் பிராப்தியும் பெற்றார் .. குதிரை (அஸ்வ) தானத்தை விட யானை (கஜ) தானம் மேலானது எனவும் .. யானை தானத்தை விட பூமிதானம் மேலானது எனவும் .. பூமிதானத்தை விட .. சொர்ணதானத்தை விட அன்னதானம் மேன்மையானதும் .. சிரேஷ்டமானதும் ஆகும் என்றார் ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுக்கு .. இவ்வுலகில் அன்னதானத்திற்கு ஈடான தானம் வேறெதுவும் இல்லை .. அன்னதானம் பித்ருக்கள் .. தேவர்கள் .. மனிதர்கள் என அனைவருக்கும் திருப்தியையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது .. கங்கையில் நீராடுவதால் கிடைக்கப் பெறும் புண்ணியத்தைவிட பன்மடங்கு மேலானதாகும் ..இதுவே இந்த விரதத்தின் மஹாத்மியம் .. இதைப் படிப்பவர்களுக்கும் .. கேட்பவர்களுக்கும் இப்புண்ணியம் கிட்டும் .. பகவானைப் போற்றுவோம் .. சகலசம்பத்துக்களும் பெறுவோமாக .. “ஓம் நமோ நாராயணா “ வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD VISHNU .. MAY HE SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH .. AND HAPPINESS .. WHOSOEVER OBSERVES A COMPLETE FAST ON THIS SACRED DAY HAS HIS SINS COMPLETLY REMOVED .. OBTAINS CONTINUOUS HAPPINESS AND ACHIEVS ALL GOOD FORTUNE .. " OM NAMO NAARAAYANAA "Swamiye Saranam Iyyappa!Panvel balagane saranam Iyyappa!! Guruve Saranam! Saranam

100 ஆண்டுகளுக்கு பின் தஞ்சை பெரிய கோயில் நந்திக்கு 250 கிலோ சந்தனத்தில் சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது உலகப்புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் நந்தியம்பெருமானுக்கு 100 ஆண்டுகளுக்கு பின் சந்தனகாப்பு அலங்காரம் நடந்தது


 

சுவாமியே சரணம் ஐயப்பா! பன்வேல் பாலகன் சரணம் போற்றி!! அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று இப்பிரபஞ்சத்தைக் காக்கும் ஸ்ரீமஹாவிஷ்ணுவைப் பிரார்த்தித்து தங்கள் அனைவருக்கும் இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாகவும் .. நலங்களும் .. வளங்களும் பெற்று சிறப்புடன் வாழ பகவானைப் பிரார்த்திக்கின்றேன் .. ஓம் நமோ நாராயணாய வித்மஹே ! வாசுதேவாய தீமஹி ! தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! .. பலகோயில்களிலும் விஷ்ணுபகவானை ஒரு கருமையான கல்லின் வடிவத்தில் வழிபட்டு வருவதைக் காண நேரிட்டிருக்கலாம் .. இந்துக்களின் வீட்டில் சத்யநாராயண பூஜை நடத்தும் சமயத்தில் இந்தக் கல்லை பூசாரிகள் தங்களுடன் கொண்டு வருவதைக் காணலாம் .. அதனை சாமிசிலைக்கு அருகில் வைத்து மந்திரங்கள் ஜெபிப்பார்கள் .. இந்த கருப்பு கல்லை “சாலிகிரம் கல்” என அழைக்கின்றனர் .. ஒரு சாபத்தின் காரணமாக விஷ்ணுபகவான் கல்லாக மாறினார் .. இந்த சாபம் மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்ததால் மும்மூர்த்திகளில் ஒருவரான மிகவும் சக்திவாய்ந்த கடவுளான விஷ்ணுபகவானால் கூட அதனை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கமுடியவில்லை.. தன் தீவிர பக்தரான வ்ரிந்தாவிடமிருந்து இந்த சாபத்தைப் பெற்றார் .. இதனை கண்டகி நதிக் கரையில் மட்டுமே காணமுடியும் .. கருப்பு .. சிகப்பு அல்லது நிறங்களின் கலவையாக காணப்படும்.. விஷ்ணுபகவானைப் போற்றுவோம் .. அவரது திருவருளையும் .. அருட்கடாக்ஷ்த்தையும் பெறுவோமாக .. “ ஓம் நமோ நாராயணா “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் WISH YOU ALL A HAPPY MORNING .. AND A BLESSED WEDNESDAY TOO .. START THE DAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD VISHNU .. MAY HE SHOWER YOU WITH HAPPINESS AND PROSPERITY .. " OM NAMO NAARAAYANAA "....swamiyee saranam iyyappa..PANVEL BALAGAN SARANAM IYYAPPA!! GURUVIN PADHARA VINDHANGALE SARANAM IYYAPPA!!!

உங்கள் நட்சத்திர காயத்ரி மந்திரத்தை மனப்பாடம் செய்து தினமும் குறைந்தது 9 முறையாவது சொல்லுங்கள்.

 


 இவைகள் ஹோம மந்திரங்கள்.
குளித்துவிட்டு காலையில் மட்டும் சொல்லவேண்டும்
உங்கள் நட்சத்திர காயத்ரி மந்திரத்தை மனப்பாடம் செய்து தினமும் குறைந்தது 9 முறையாவது சொல்லுங்கள். வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றம் காணலாம்.

 
அஸ்வினி
ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே
சுதாகராயை தீமஹி
தன்னோ அச்விநௌ ப்ரசோதயாத்
பரணி
ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே
தண்டதராயை தீமஹி
தன்னோ பரணி ப்ரசோதயாத்
கிருத்திகை
ஓம் வன்னிதேஹாயை வித்மஹே
மஹாதபாயை தீமஹி
தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத்
ரோஹிணி
ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே
விச்வரூபாயை தீமஹி
தன்னோ ரோஹினி ப்ரசோதயாத்
மிருகசீரிடம்
ஓம் சசிசேகராய வித்மஹே
மஹாராஜாய தீமஹி
தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்
திருவாதிரை
ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே
பசும்தநாய தீமஹி
தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத்
புனர்பூசம்
ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே
அதிதிபுத்ராய தீமஹி
தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத்
பூசம்
ஓம் ப்ரம்மவர்ச்சஸாய வித்மஹே
மஹா திஷ்யாய தீமஹி
தன்னோ புஷ்ய ப்ரசோதயாத்
ஆயில்யம்
ஓம் ஸர்பராஜாய வித்மஹே
மஹா ரோசனாய தீமஹி
தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத்
மகம்
ஓம் மஹா அனகாய வித்மஹே
பித்ரியா தேவாய தீமஹி
தன்னோ மகஃப்ரசோதயாத்
பூரம்
ஓம் அரியம்நாய வித்மஹே
பசுதேஹாய தீமஹி
தன்னோ பூர்வபல்குநீ ப்ரசோதயாத்
உத்திரம்
ஓம் மஹாபகாயை வித்மஹே
மஹாச்ரேஷ்டாயை தீமஹி
தன்னோ உத்ரபால்குநீ ப்ரசோதயாத்
அஸ்தம்
ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே
ப்ரக்ருப்ணீதாயை தீமஹி
தன்னோ ஹஸ்தா ப்ரசோதயாத்
சித்திரை
ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே
ப்ரஜாரூபாயை தீமஹி
தன்னோ சைத்ரா ப்ரசோதயாத்
சுவாதி
ஓம் காமசாராயை வித்மஹே
மகாநிஷ்டாயை தீமஹி
தன்னோ சுவாதி ப்ரசோதயாத்
விசாகம்
ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே
மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி
தன்னோ விசாகா ப்ரசோதயாத்
அனுஷம்
ஓம் மித்ரதேயாயை வித்மஹே
மஹா மித்ராய தீமஹி
தன்னோ அனுராதா ப்ரசோதயாத்
கேட்டை
ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே
மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி
தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத்
மூலம்
ஓம் ப்ராஜாதிபாயை வித்மஹே
மஹப்ராஜையை தீமஹி
தன்னோ மூலாப் ப்ரசோதயாத்
பூராடம்
ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே
மஹாபிஜிதாயை தீமஹி
தன்னோ பூர்வாஷாடா ப்ரசோதயாத்
உத்திராடம்
ஓம் விஸ்வேதேவாய வித்மஹே
மஹா ஷாடாய தீமஹி
தன்னோ உத்ராஷாடா ப்ரசோதயாத்
திருவோணம்
ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே
புண்யஸ்லோகாய தீமஹி
தன்னோ ச்ரோணா ப்ரசோதயாத்
அவிட்டம்
ஓம் அக்ர நாதாய வித்மஹே
வசூபரீதாய தீமஹி
தன்னோ ஸ்ரவிஷ்டா ப்ரசோதயாத்
சதயம்
ஓம் பேஷஜயா வித்மஹே
வருண தேஹா தீமஹி
தன்னோ சதபிஷக் ப்ரசோதயாத்
பூரட்டாதி
ஓம் தேஜஸ்கராய வித்மஹே
அஜஏகபாதாய தீமஹி
தன்னோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத்
உத்திரட்டாதி
ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே
ப்ரதிஷ்டாபநாய தீமஹி
தன்னோ உத்ரப்ப்ரோஷ்டபத ப்ரசோதயாத்
ரேவதி
ஓம் விச்வரூபாய வித்மஹே
பூஷ்ண தேஹாய தீமஹி
தன்னோ ரைய்வதி ப்ரசோதயாத்

தாலி பாக்கியம்.
திருமணம் ஆன பெண்கள், இதை கண்டிப்பாக அணியவேண்டும். என்னதான் தங்கத்தில் அணிந்து இருந்தாலும், மஞ்சள் கயிறில் தாலி இருக்கவேண்டும்.
மூன்று மாதத்துக்கு ஒரு தடவை,இந்த தாலிக்கொடி என்று சொல்லகூடிய மஞ்சள் கயிரை மாத்தவேண்டும்.எக்காரணம் கொண்டும், இது இல்லாமல் தங்கத்துடன் இருத்தல் ஆகாது.
தாலியில் அழுக்கு சேர்ந்துவிட்டால், அதுவும் ஒரு தோஷமாகும். கணவனும், இந்த மனைவியும், நலமாக இருக்க, தினமும் குளிக்கும்போது., மஞ்சள்போடியால், நன்கு தேய்த்து குளிக்கவேண்டும். எப்போதும் அது பளிச் என்று இருக்கும். நைந்துபோநாளோ, நூல் பிரிந்தாலோ, உடன் மாத்தவேண்டும்.
ஒரு பொதுவான நாளில் மாத்தக்கூடாது./ உங்கள் நட்சத்திரத்துக்கு ஏற்ற நாளிலேயே இதை செய்யவேண்டும். கண்ட கண்ட நாளில் செய்யக்கூடாது.
நீண்ட ஆயுசுடனும், வியாதி இல்லாமலும் இருக்க இப்படி அவசியம் ஒவ்வொருவரும் செய்தல் வேண்டும்.
தங்கத்தில் மட்டும் அணிந்து இருப்பது என்பது பலவிதத்தில் அது சிரமமாகவே இருக்கும் என பெரியோர்களின் அபிப்பிராயம்

சுவாமியே சரணம் ஐயப்பா!! பனவேல் பாலகன் சரணம் போற்றி!! அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய்க்கிழமையாகிய இன்று கலியுகவரதனாகிய கார்த்திகேயனுக்கு உரிய நாளாகும் ..தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் இனிய நன்னாளாக அமைந்திடவும் .. மனதில் அமைதியும் . மகிழ்ச்சியும் என்றும் நிலைத்திட பிரார்த்திக்கின்றேன் .. ஓம் தத்புருஷாய வித்மஹே ! மஹேஷ்வர புத்ராய தீமஹி ! தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத் !! “ சரவணபவ ஓம் “ என்னும் சடாக்ஷ்ர மந்திரத்தை மனதில் நினைத்து .. ’ குஹாய நம ஓம்’ என்று ஜபித்தவுடன் அவன் ஓடோடி வந்து அருள்புரிவான் .. முருகனின் அறுபடை வீடுகளை நினைத்தாலே மனம் ஆறும் .. நமது உடலில் ஆறுவிதமான ஆதாரங்கள் உண்டு .. முருகப்பெருமான் இந்த ஆறுபடை வீடுகளிலும் இந்த ஆதாரத்தைக் கொண்டுதான் எழுந்தருளி உள்ளார் .. திருப்பரங்குன்றம் - மூலாதாரம் .. திருச்செந்தூர் - சுவாதிஷ்டானம் .. பழனி - மணிபூரகம் .. சுவாமிமலை - அநாகதம் .. திருத்தணி - விசுத்தி .. பழமுதிர்சோலை - ஆக்ஞை .. முருகனைப் போற்றுவோம் ! முருகா ! முருகா ! என்று மனமுருகி வணங்கினால் நிலையான இன்பம் அளித்து நம்மைக்காப்பான் வேலவன் ! .. “ ஓம் முருகா “ ... வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. சுவாமியே சரணம் ஐயப்பா!! .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA .. MAY HE SHOWER YOU WITH HAPPINESS AND PROSPERITY .. " OM MURUGA " ..OM SWAMIYEE SARANAM IYYAPPA!!


சுவாமியே சரணம் ஐயப்பா! பன்வேல் பால்கன் பதம் போற்றி!!அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையாகிய இன்று தேய்பிறை அஷ்டமித் திதியாகும் .. இன்று “காலபைரவரை” வணங்குவதற்கு ஏற்ற நாளாகும் .. அவரைத் துதித்து .. தடைகள் யாவும் களைந்து அனைத்திலும் வெற்றியும் .. மகிழ்ச்சியும் பெற்றிட வாழ்த்தி வணங்குகின்றேன் .. ஓம் ஷ்வானத் வஜாய வித்மஹே ! சூலஹஸ்தாய தீமஹி ! தந்நோ பைரவ ப்ரசோதயாத் !! .. பைரவர் சிவனது அம்சம் ஆவார் .. நீங்கள் காலபைரவரை வழிபாடு செய்தால் கேட்டவரம் எல்லாம் கிடைக்கும் அடியார்களின் பயத்தையும் .. பாபத்தையும் நீக்குவார் .. துன்பங்களும் .. துயரங்களும் வாழ்க்கையில் ஓர் தொடர்கதையாகிப் போனால் வாழ்க்கை என்பதை வாழப்பிடிக்காமல் மனம் ஏங்கும் .. அப்படி சோகத்தின் விளிம்பில் இருப்போர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் அமுதமொழியாக பைரவர் வழிபாடு கூறப்படுகிறது .. கடவுள்வழிபாடு செய்துவிட்டு அதற்கான பலன்களை எதிர்பார்க்கும் பக்தர்களுக்கு உடனடி நிவாரணம் தரும் கடவுளாக பைரவர் விளங்குகின்றார் .. எதிரிகளுக்குப் பயம்தந்து தன்னை அண்டியவர்களுக்கு அருள்செய்வதால் இவருக்குப் ”பைரவர்”என்று பெயர் .. எந்தவிதமான பூஜைகள் செய்யாவிட்டாலும் கூட இக்கட்டான நேரத்தில் முழுமனதுடன் அவரை நினைத்தாலே போதும் சந்தோஷத்துடன் உடனே செயல்பட்டு நம்மை ஆபத்துக்களிலிருந்து காப்பாற்றுவார் .. முதலில் துவங்கும் காலை பூஜையும் .. இரவில் நடக்கும் இறுதியான பூஜையும் ஸ்ரீபைரவருக்கே உரிய்து .. பைரவரைப் போற்றுவோம் ! கஷ்டங்கள் யாவும் தீர்ந்து .. அனைத்திலும் வெற்றி பெறுவோமாக ! வெற்றி நிச்சயம் !! வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED MONDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD BHAIRAVA MAY HE REMOVE ALL THE OBSTACLES AND FULFIL ALL YOUR WISHES .. HAVE A SUCCESSFUL DAY TOO .. " OM SHREE BHAIRAVAAYA NAMAHA "SWAMIYEE SARANAM! GURUVIN PADARA VINDANGALE SARANAM IYYAPPA!!

சுவாமியே சரணம் ஐயப்பா!! பன்வேல் பாலகன் பதம் போற்றி!! அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று திருவோண நட்சத்திரம் .. இதற்கு அதிபதி ஸ்ரீமஹாவிஷ்ணு .. அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன .. ஆலயம் சென்று பெருமாளை தரிசிப்பது சாலச்சிறந்தது .. தங்களனைவருக்கும் மஹாவிஷ்ணுவின் அருட்கடாக்ஷம் பெற்று இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாகவும் .. சகல ஐஸ்வர்யங்களும் இல்லம் தேடிவர பிரார்த்திக்கின்றேன் .. ஓம் நமோ நாராயணாய வித்மஹே ! வாஸுதேவாய தீமஹி ! தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! நட்சத்திரங்களில் திருவோணமும் .. திருவாதிரையும் சிறப்புக்குரியது .. “ திரு “ என்ற அடைமொழியைப் பெற்று பெருமாளுக்கும் .. சிவனுக்கும் உரிய நட்சத்திரமாக உள்ளது .. மாதந்தோறும் திருவோண நாளன்று நாராயணனை வழிபட்டு விரதங்காப்பது திருவோண விரதமாகும் ..இதனை ஸ்வர்ண விரதம் என்றும் கூறுவர் .. விரதங்கள் தனிமனிதனின் உள்ளத்தைத் தூய்மையாக்கி ஆன்மீக ஆற்றலைத்தரும் .. திருவோண விரதத்தை அனுஷ்டித்து வருபவர்களின் குடும்பத்தில் சண்டை சச்ச்ரவுகள் ஏதும் இருக்காது .. அமைதி ஏற்படும் .. உறவினர் கொண்டபகை அகலும் .. பகைவர் நண்பராவர் .. பொதுவாக துன்பங்கள் அனைத்தும் நீங்கும் .. அல்லது தணியும் .. பெருமாளைப் போற்றுவோம் மனநலத்தையும் .. மனமகிழ்ச்சியையும் பெற்றிடுவோம் .. “ஓம் நமோ நாராயணா” வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. சரணம் ஐயப்பா!! SWAMI SARANAM...PANVEL PALAGANE SARANAM IYYAPPA!! GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY WITH THE DIVINE BLESSINGS OF LORD VISHNU .. MAY HE SHOWER YOU WITH HAPPINESS AND PROSPERITY .. " OM NAMO NAARAAYANAA " ..SWAMYE SARANAM IYYAPPA

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சனிக்கிழமையாகிய இன்று சஷ்டி விரதமும் கூடி வருவதால் முருகனாலயம் சென்று முருகனை தரிசிப்பது சாலச்சிறந்தது .. இன்றைய நாள் தங்களனைவருக்கும் ஓர் இனிய நன்னாளாகவும் .. மனநலமும் .. உடல்நலமும் ஆரோக்கியத்துடன் திகழவும் பிரார்த்திக்கின்றேன் .. ஓம் தத் புருஷாய வித்மஹே ! மஹேஷ்வர புத்ராய தீமஹி ! தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத் !! பிரணவ சொரூபியான முருகப் பெருமானிடத்தில் மும்மூர்த்திகளின் அம்சமும் ஒருங்கே நிறைந்துள்ளது .. காக்கும் கடவுளான - முகுந்தன் அழிக்கும் மூர்த்தியான - ருத்ரன் படைக்கும் கடவுளான - கமலோற்பவன் ஆகிய மும்மூர்த்தி திருநாமங்களின் முதல் மூன்று எழுத்துக்கள் ஒன்றிணைந்ததே “ முருகா “ என்னும் திருநாமம் .. நீலமயில் ஓங்கார சொரூபம் .. ஓங்காரமே பிரம்மம் .. அகர .. உகர .. மகார ஒலிகள் கூடியதுதான் ஓங்காரம் .. இந்த தத்துவம் தான் முருகன் .. முருகா ! என்று மனமுருகி சொன்னாலே முருகனின் திருவருள் நம்மை நாடி வரும் .. முருகனைப் போற்றி வணங்கி .. அவரது அருட்காக்ஷ்த்தினை பெறுவோமாக .. “ ஓம் சரவணபவாய நமஹ “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SHASHTI WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA .. MAY HE SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH AND HAPPINESS .. " OM MURUGA " ..

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வெள்ளிக்கிழமையாகிய இன்று அன்னை மஹாலக்ஷ்மியைத் துதித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாகத் திகழ்ந்திடவும் .. சகலசௌபாக்கியங்களும் இல்லம் தேடிவர பிரார்த்திக்கின்றேன் .. ஓம் மஹால்க்ஷ்ம்யை ச வித்மஹே ! விஷ்ணு பத்ந்யை ச தீமஹி ! தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத் !! .. நம்முள் மண்டிக்கிடக்கும் தீமை எனும் தாரித்திரியத்தை அழித்து .. ஞானம் எனும் ஐஸ்வர்யத்தினை அருள்பவள் ஸ்ரீமஹாலக்ஷ்மி ! இகவாழ்வில் நமக்கு வேண்டும் வரங்களையும் .. வளங்களையும் வழங்கி நம்மை நடத்துபவள் அன்னையே ! அவள் நிதர்சனமானவள் .. நித்ய சுமங்கலி .. அண்ட பிரபஞ்சம் எங்கிலும் வியாதித்திருப்பவள் .. அப்படி இருந்தும் மக்களின் நல்வாழ்வுக்கென மண்ணுலகில் மக்களுடன் கலந்திருப்பவள் .. இந்த பூமியே அவள்தான் .. ஒவ்வொரு மனிதனிடமும் கல்வியாக .. பொன் .. பொருள் என வளர்செல்வமாக .. நெஞ்சுரமாக .. நல்வாழ்வில் விளையும் மகிழ்ச்சியாக .. கூடிவாழ்வதில் மலரும் அன்பாக .. நிறைவாழ்வில் புகழாக .. இறைவாழ்வில் நித்ய சாந்தியாக .. பொலிபவள் அவளே ! அவள் மஹாலக்ஷ்மியே ! அன்னையைப் போற்றி வணங்குவோம் ! நலங்களும் .. வளங்களும் பெற்றிடுவோமாக .. ” ஓம் மஹாலக்ஷ்மியே ! நமோஸ்துதே “ ! வாழ்க வளமுடனும் நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED FRIDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF GODDESS LAXMI .. MAY SHE SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH .. AND HAPPINESS .. " JAI MATA DI

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வியாழக்கிழமையாகிய இன்று ‘சங்கடஹர சதுர்த்தி ‘ விரதமாகும் .. தங்களனைவருக்கும் சங்கடங்கள் யாவும் நீங்கி நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறவும் விநாயகரை பிரார்த்திக்கின்றேன் .. ஓம் தத் புருஷாய வித்மஹே ! வக்ரதுண்டாய தீமஹி ! தந்நோ தந்தி ப்ரசோதயாத் !! .. ஒவ்வொரு தமிழ்மாதமும் தேய்பிறையில் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தி விரதத்தைத் தான் சங்கடஹர சதுர்த்தி விரதம் என்றும் .. சங்கடஹரண சதுர்த்தி விரதம் என்றும் கூறுகின்றனர் .. ’சங்கடம் ’என்றால் துன்பம் .. ’ ஹர ’ என்றால் ஒழிப்பது .. “ சங்கடஹர “ என்றால் சங்கடங்களில் இருந்து விடுதலை .. துன்பங்களிலிருந்தும் விடுதலை என்பதாகும் .. சங்கடஹர விரதம் இருப்பதால் வீண்பழி அகலும் .. நினைத்த காரியம் கைகூடும் .. பகைவர்களும் நண்பர்களாவார்கள் .. தீவினை அகலும் .. மனச்சுமை நீங்கும் .. சனிபகவானின் பார்வையால் ஏற்படும் தோஷங்களும் .. சகல ரோகங்களும் (நோய்களும்) நீங்குகின்றன .. வரலாறு - விநாயகர் ஒருமுறை கைலையில் ஆனந்த நடனமாடும்போது அங்கேவந்த சந்திரன் விநாயகரின் பெருத்த தொந்தியையும் .. துதிக்கையையும் அவற்றைத் தூக்கிக் கொண்டு அவர் ஆடுவதைப் பார்த்து பெரிதாய் சிரித்தான் .. சந்திரன் தன்னைப்பார்த்து எள்ளி நகையாடியதைக் கண்ட விநாயகர் அவனின் கலைகள் தேய்ந்துபோனவை தேய்ந்ததாகவே இருக்கும் எனக் கூறவே .. மனம்வருந்திய சந்திரன் அதற்குப் பரிகாரமாகவும் தன்னுடைய தவற்றை நீக்கவும் சதுர்த்தி தினத்தன்று விரதம் இருந்து விநாயகரின் அருளைப் பெற்றான் .. விநாயகர் சந்திரனிடம் இன்றுமுதல் சுக்கிலபட்ச சதுர்த்திகளில் உன்னைப் பார்ப்பவர்களுக்குப் பாவம் சம்பவிக்கும் எனவும் .. போக்கிக் கொள்ளச் சதுர்த்தி விரதம் இருந்து பூஜித்தால் அவர்களுக்கு நன்மையே விளையும் எனவும் சொன்னார் .. இந்த விரதமே சங்கடஹர சதுர்த்தி விரதம் என அழைக்கப்படுகிறது .. விநாயகரைப் போற்றுவோம் .. குடும்பத்தில் சுபீட்சமும் .. தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றி அடையும் .. வெற்றி நிச்சயம் !! “ ஓம் விக்னேஷ்வராய நமஹ “ வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SADURTHI .. MAY THE DIVINE BLESSINGS OF LORD GANESH BRING YOU ETERNAL BLISS AND FULFILL ALL YOUR WISHES .. " JAI GANESH " ..

Maheswari Somapalan's photo.

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று இப்பிரபஞ்சத்தைக் காக்கும் கடவுளாகிய ஸ்ரீமஹாவிஷ்ணுவைத் துதித்து தங்கள் அனைவருக்கும் குடும்பத்தில் சுபீட்சமும் .. மகிழ்ச்சியும் .. நல்லாரோக்கியமும் .. கிடைத்திட பகவானைப் பிரார்த்திக்கின்றேன் .. ஓம் நமோ நாராயணாய வித்மஹே ! வாசுதேவாய தீமஹி ! தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருப்பது ஜீவாத்மா ! ஜீவாத்மாவுக்கே ஆத்மாவாக இருப்பது பரமாத்மா .. நமக்குள் பகவான் இருப்பதை உணர்ந்து கொண்டால் நம் வாழ்க்கை ஆனந்தமயமாகிவிடும் .. மஹாவிஷ்ணுவைப் போற்றுவோம் .. அவரது அருட்கடாக்ஷ்த்தைப் பெற்றிடுவோம் .. “ ஓம் நமோ நாராயணா “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED WEDNESDAY .. WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD VISHNU .. MAY HE BE WITH YOU IN EACH STEPS YOU TAKE TODAY AND FOREVER MORE .. " OM NAMO NAARAAYANAA " ..

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய்க்கிழமையும் .. விசாகநட்சத்திரமும் கூடிவருவது முருக வழிபாட்டிற்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது .. தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாகவும் .. நினைத்ததெல்லாம் நிறைவேறவும் முருகப்பெருமானைப் பிரார்த்திக்கின்றேன் .. ஓம் கார்த்திகேயாய வித்மஹே ! சக்தி ஹஸ்தாய தீமஹி ! தந்நோ ஸ்கந்த ப்ரசோதயாத் !! பொருள் - சக்தி என்னும் வேலாயுதத்தை கையில் ஏந்தி நிற்கும் கார்த்திகேயனே ! நீ நம் அறிவைப் பிரகாசமாக்கி நல்வழியில் நடத்துவாயாக !! முருகப்பெருமானுக்குரிய பெயர்களில் “விசாகன்” என்பதும் ஒன்று .. விசாக நட்சத்திரத்தில் அவதரித்ததால் இப்பெயர் உண்டானது .. ‘வி’ என்றால் - பறவை (மயில்) என்றும் .. ‘சாகன்’ என்றால் - சஞ்சரிப்பவன் என்றும் பொருள் .. உலகத்தின் புற இருளைப்போக்க நீலக்கடல் மீது சூரியன் உதிப்பதுபோல அக இருளைப் போக்க நீலமயில்மீது முருகப்பெருமான் காட்சிதருகிறார் .. முருகனைப்போற்றுவோம் .. சீர்மிகு வாழ்வும் .. வேண்டிய வரங்கள் யாவும் பெற்றிடுவோம் .. “ ஓம் சரவணபவாய நமஹ” வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA .. MAY HE SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH .. AND HAPPINESS .. " OM MURUGA " ..

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையாகிய இன்று சிவபெருமானைத் துதித்து தாங்கள் செய்யும் அனைத்து காரியங்களிலும் எவ்வித தடைகளுமின்றி வெற்றி பெறவும் .. இன்றையநாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாகவும் அமைந்திட பிரார்த்திக்கின்றேன் .. ஓம் தத்புருஷாய வித்மஹே ! மஹாதேவாய தீமஹி ! தந்நோ ருத்ர ப்ரசோதயாத் !! பற்றது பற்றிட பரமனைப் பற்றுமின் .. முற்றது எல்லா முதல்வன் அருள்பெறில் ..கற்றவிரகிற் கிளரொளி வானவர் .. கற்றவர் பேரின்பம் .. உற்று நின்றாரே ! பொருள் - உங்கள் வாழ்வில் பற்றுகோடாய் ஒரு தெய்வத்தை பெறவிரும்பினால் சிவபெருமானைப் பற்றுங்கள் .. முழுமுதற்கடவுளாகிய அவனது அருளைப் பெற்றுவிட்டால் எல்லாம் இனிதே நிறைவேறும் .. (திருமூலர்) .. சிவனைப் போற்றுவோம் அவரது அருட்கடாக்ஷ்த்தைப் பெற்று அனைத்திலும் வெற்றி பெறுவோமாக ! என்றும் வெற்றி ! எதிலும் வெற்றி ! வெற்றி நிச்சயம் !! “ ஓம் நமசிவாய “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED DAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. MAY HIS DIVINE BLESSINGS BRING YOU ETERNAL SUCCESS IN EVERYTHING YOU DO TODAY AND FOREVER MORE .. " OM NAMASHIVAAYA " ..

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று பௌர்ணமிகளிலே சிறப்புமிக்க “ சித்ரா பௌர்ணமி தினமாகும் “ பூமியைச் சுற்றிவரும் சந்திரன் இன்று முழு பிரகாசத்துடன் காட்சி தருவார் .. அதாவது இன்றைய தினத்தின் சந்திரன் ஒளி (பூரணகலை) மற்ற பௌர்ணமிகளை விட பொலிவாக இருக்கும் .. மலைக்கோவில்களுக்கு சென்று கிரிவலம் வருதல் சிறப்பு .. மேலும் இந்தநாளானது சித்திரகுப்தனின் அவதாரத் திருநாளாகும் .. சித்திரை மாதத்தில் பௌர்ணமி அன்று அன்னை பார்வதிதேவி தன் கைத்திறமையால் அழகான குழந்தை ஓவியத்தை வரைந்தார் .. அந்த ஓவியம் சாதாரண ஓவியமாக இல்லாமல் நிஜகுழந்தைபோல் தத்ரூபமாக இருந்ததைக் கண்ட சிவபெருமான் “நீ வரைந்த இந்த ஓவியத்திற்கு உயிர் கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும்” என்று கூறிக் கொண்டே அந்த ஓவியத்தை எடுத்து தன்னுடைய மூச்சுக்காற்றை அந்த ஓவியத்தின்மேல் பதித்தார் ஈசனின் மூச்சுக்காற்று சில்லென்று ஓவியத்தில் பட்டவுடன் அந்த ஓவியக் குழந்தை உயிர்பெற்று சிரிக்க ஆரம்பித்தது .. மகிழ்ச்சி அடைந்த பார்வதிதேவி இக்குழந்தை சித்திரகுப்தன் என அழைக்கப்படட்டும் என்று ஆசி வழங்கினார் சித்திரகுப்தன் பாவ.. புண்ணிய பலன்களுக்கு ஏற்ப நமது சொர்க்க .. நரகத்தையும் .. அடுத்தபிறவியையும் முடிவு செய்பவர் .. எனவே கிரிவலம் வந்து இறைவனை வழிபடும் அதேவேளையில் சித்திரகுப்தனையும் மனதில் நினைந்து இப்பிறவியும் .. அடுத்தபிறவியும் நல்லபிறவிகளாக அமையும்படி பிரார்த்திக்கவேண்டும் .. மந்திரம் - சித்ரகுப்தம் மஹா ப்ராக்ஞம் ! லேகணீபத்ர தாரிணம் ! சித்திர ரத்னாம் பரதரம் ! மத்யஸ்தம் ஸர்வ தேஹினாம் !! பொருள் - சிறந்த அறிவும் .. ஞானமும் கொண்டவரும் .. எழுத்தாணி .. ஏடு .. ஆகியவைகளை கைகளில் வைத்திருப்பவரும் .. அழகிய ரத்தினத்தாலான உடையை அணிந்திருப்பவரும் .. எல்லா உயிர்களுக்கும் நடுநிலைமையுடன் நீதி அரசராக விளங்குபரான சித்திரகுப்தரே ! நமஸ்காரம் ! அம்மன் கோவில்களில் பொங்கலிட்டு வழிபடுவதும் விசேஷம் .. இன்று அம்பிகை வழிபாட்டிற்கு மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது .. பரிபூரண விரதமிருந்து அம்மனை வழிபட்டால் குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி சுபீட்சம் பெருகும் .. பெண்களுக்கு பன்மடங்கு நலந்தரக்கூடியது .. திருமணமான பெண்கள் தங்கள் மாங்கல்யபாக்கியம் நிலைக்க இன்று விரதமிருந்து அம்பாளை வழிபடுவார்கள் .. அம்பாளைப் போற்றுவோம் சகல சௌபாக்கியங்களும் .. லக்ஷ்மிகடாக்ஷ்மும் பெற்றிடுவோம் .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. GOOD MORNING AND BEST WISHES FOR THE CHITHRA PAURNAMI DAY .. MAY GODDESS LAXMI BLESS YOU WITH GOOD HEALTH .. WEALTH AND PROSPERITY .. " JAI MATA DI "

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சனிக்கிழமையாகிய இன்று ‘ நரசிம்ம ஜயந்தி ‘ தங்கள் அனைவருக்கும் மஹாவிஷ்ணுவின் அருட்கடாக்ஷ்மும் ..
திருவருளும் கிடைத்திட பிரார்த்திக்கின்றேன் .. 



ஓம் வஜ்ர நாகாய வித்மஹே !
 தீக்ஷ்ணதம்ஷ்ட்ராய தீமஹி !
தந்நோ நரசிம்ஹ ப்ரசோதயாத் !!

மஹாவிஷ்ணு இரண்யகசிபுவின் கொடுமையில் இருந்து பிரகலாதனைக் காப்பாற்றவும் .. இரண்யகசிபுவின் அறியாமையைப் போக்கவும் எடுத்த அவதாரமே நரசிம்ம அவதாரமாகும் .. பக்தனோ .. பகைவனோ .. யாராயினும் சரி எவர் காட்டிய இடத்திலும் தான் இருப்பதை மெய்பிப்பதற்காகவே நரசிம்மமூர்த்தி தூணிலிருந்து தோன்றுகிறார் .. அவர் அவதார தோற்றமே உக்கிரம்தான் .. 
“ நரசிம்மரை நம்பியவர்களுக்கு நாளை என்பது இல்லை “ என்பதை நிரூபித்துக் காட்டியவர் .. 

மிக ஆபத்தான சூழ்நிலையிலும் சங்கடமான நிலையிலும் 
அச்சத்தில் இருக்கும் தருவாயிலும் ஸ்ரீநரசிம்மப் பெருமாள் 
ஸ்துதியை இதயப்பூர்வமாகவும் .. நம்பிக்கையுடனும் .. உறுதியுடனும் மனம் உருகி பிரார்த்தனை செய்து கொண்டால் ஓடோடி வந்து காத்து ரக்ஷிப்பார் .. என்பது அனுபவபூர்வமாகக் கண்டறிந்த பேரின்பம் .. 

நரசிம்மரைப் போற்றுவோம் .. உடல் நலமும் .. மனவலிமையும் பெறுவோமாக .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED FRIDAY AND BEST WISHES FOR " NARASIMHA JAYANTI " .. MAY LORD NARASIMHA GIVE YOU BEST HEALTH AND STRENGTH .. 
" OM NARASIMHAAYA NAMAHA "

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வெள்ளிக்கிழமையாகிய இன்று பிரதோஷ விரதமாகும் .. மாலையில் சிவாலயம் சென்று பிரதோஷவேளையில் 4.30 - 6.00 மணிவரை காலத்தில் நந்தீஸ்வரரின் கொம்புகளுக்கிடையில் சிவனுக்கு நடக்கும் அபிஷேகத்தை தரிசனம் செய்வோருக்கு எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியமும் .. நோய்தீரவும் .. ஏழ்மை ஒழியவும் .. துயரங்கள் விலகவும் .. அனைத்து சம்பத்துக்களும் பெறுகின்றனர் .. ஆலகால விஷத்தால் மூவுலகிற்கும் ஏற்படவிருந்த பேரழிவை சிவபெருமான் காத்த வேளையே பிரதோஷ காலமாகும் .. (மாலை 4.30 - 6.00 மணிவரை காலம்) இவ்விரதத்தைக் கடைப்பிடிக்க விரும்புபவர்கள் சித்திரை .. வைகாசி .. ஐப்பசி .. கார்த்திகை ஆகிய மாதங்களில் வரும் சனிப்பிரதோஷ நாளில் விரதம் தொடங்குதல் சிறப்பு .. விரதத்தை கடைபிடிப்போர் பகல் முழுவதும் உபவாசமிருந்து பிரதோஷ வேளையாகிய சூரிய அஸ்தமனத்தின் போது (மாலை 4.30 - 6.00) சிவாலயங்களில் சிவதரிசனம் .. நந்தீஸ்வர தரிசனம் செய்தபின் உணவருந்த வேண்டும் .. மகிமைமிக்க பிரதோஷ விரதத்தை அனைவரும் அனுஷ்டித்து சர்வேஸ்வரனுடைய அருளைப் பெற்று சகலசௌபாக்கியங்களையும் பெறுவீர்களாக .. ” ஓம் நமசிவாய “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED FRIDAY WITH THE DIVINE BLESSINGS OF LORD SHIVA .. MAY HE SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH AND FULLFIL ALL YOUR DESIRES .. " OM NAMASHIVAAYA " ..