SWAMI SARANAM..GURUVE SARANAM




அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் அனைத்து தெலுங்கு அன்புள்ளங்களுக்கும் எங்கள் இனிய ‘ யுகாதித் திருநாள் நல்வாழ்த்துகளும் உரித்தாகுக 
யுகாதித் திருநாள் புதிய வாழ்க்கையின் ஆரம்பமாகக் கொண்டாடப்படுகிறது .. “ யுகாதி “ என்றால் புதியபிறப்பு 
( யுகம் + ஆதி - யுகாதி - ) யுகத்தின் தொடக்கம் .. புதிதாக பிறக்கும் ஒவ்வொரு ஆண்டும் நலமாகவும் .. ஒற்றுமை உணர்வை தூண்டுவதாகவும் அமையவேண்டும் என்னும் நோக்கத்தில் சிறப்புப் பெறுகிறது .. 

யுகாதி அன்று ராமாயணக்கதை ஒன்றையும் உதாரணமாகச் சொல்வார்கள் .. ராமர் காட்டிற்கு புறப்பட்டார் .. மகனின் பிரிவைத்தாங்காத தாய் கௌசல்யா அவருடன் காட்டுக்கு வருவதாக அடம்பிடித்தாள் .. 

” அம்மா ! கணவருக்கு பணிவிடை செய்வதே மணைவிக்குரிய தர்மம் .. நீங்கள் அப்பாவைக் கவனித்துக்கொண்டு இங்கேயே இருங்கள் .. “ என்று பக்குவமாக எடுத்துச் சொல்லி தாயை சமாதானப்படுத்தினார் ராமர் .. 

இதையடுத்து சீதையும் அவருடன் வருவதாக கிளம்பியபோது .. “ சீதா நீ அங்கே வராதே ! கல்லிலும் .. முள்ளிளும் சிரமப்படுவாய் வேண்டாம் என்றார் .. “ 

“ ஸ்ரீராமா ! என்ன நியாயம் இது ..? உங்கள் அம்மா உங்களுடன் கிளம்பியபோது கணவனைக் காப்பது மனைவியின் கடமை என்று தர்மத்தைப் போதித்தீர்கள் ..
அதே தர்மம்தானே எனக்கும் பொருந்தும் ..? அம்மாவுக்கு ஒருவிதி .. மனைவிக்கு ஒரு விதியா ..? நானும் உங்களுக்கு சேவை செய்யவேண்டுமல்லவா .. நீங்கள் இருக்குமிடமே எனக்கு அயோத்தி .. நின்பிரிவினும் சுடுமோ பெரும்காடு ..! அதனால் உங்களோடு வருகிறேன் என்று சாதுர்யமாக பதிலளித்தாள் .. ராமரால் பேசமுடியவில்லை .. மனைவியை அழைத்துச் செல்ல சம்மதித்தார் .. 

கணவனுக்காக மனைவி .. மனைவிக்காக கணவன் .. குடும்பத்துக்காக பிள்ளைகள் .. என்ற ஒற்றுமை தத்துவத்தை இந்தக்கதை போதிக்கிறது .. யுகாதியன்று இதுபோல் ராமாயண சம்பவங்கள் மக்களுக்கு எடுத்துச் சொல்லப்படும் .. குடும்ப ஒற்றுமை ஓங்க யுகாதி நன்னாளில் சபதமேற்கும் நன்னாளாகும் .. 
“ ஜெய் சீதாராம் “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்..” 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A HAPPY AND A PROSPEROUS UGADI FESTIVAL .. MAY LORD SITHARAM SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH .. PROSPERITY AND GOOD LUCK TOO .. " JAI SITHARAM " ..

swamiye saranam iyyappa..guruve saranam



அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
குருவருளும் .. திருவருளும் கூடிய வியாழக்கிழமையாகிய இன்று இன்னும் மக்கள் மனதில் உயிருடன் வாழ்ந்து நமது சுமைகளை ஏற்று .. நம்வாழ்விற்காக ஆனந்த ஒளியைத் தரும் ஷீரடி பாபாவிற்கும் உகந்த நாளுமாகும் .. அவரைத் துதித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் வெற்றிகரமான நன்னாளாகத் திகழ்ந்திட பிரார்த்திக்கின்றேன் .. 


ஓம் ஷீரடி ஸாயிநிவாஸாய வித்மஹே ! 
ஸர்வதேவாய தீமஹி ! 
தந்நோ ஸர்வப்ரசோதயாத் !! 

ஒருமுறை பாபாவை அன்புடன் நோக்கினால் .. நம் ஆயுள்முழுவதற்கும் நம்முடையவராகிவிடுகிறார் .. 
உண்மையான அன்பைத்தவிர நம்மிடம் வேறெதையும் அவர் எதிர்பார்ப்பதில்லை .. நாம் அவரை அழைக்கும்போது காப்பாற்ற ஓடிவருகிறார் .. அந்நேரத்தில் காலமோ நேரமோ அவருக்குக் குறுக்கே நிற்கமுடியாது .. சதாசர்வகாலமும் நம்முடனே உறுதியாக நிற்கின்றார் ..எங்கு .. எவ்வாறு எந்தவிசையை
இயக்குகிறார் என்று நமக்குத்தெரியாது .. அவருடைய செயல்கள் அனைத்தும் புரிந்துகொள்ளமுடியாத அற்புதமானவை .. ( ஸ்ரீ சாய்சரிதம் ) 

பாபாவைப் போற்றுவோம் ! இன்னல்கள் சூழ்ந்த நிலையை மாற்றி ஆசீர்வதிப்பாராக .. வாழ்வில் மனநிம்மதியும் .. அமைதியும் பெறுவோமாக ! 
“ ஓம் சாய் ராம் “ .. வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF 
SHIRDI SAI .. MAY YOU BE BLESSED WITH PEACE AND HAPPINESS .. " OM SAI RAM "

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM....

 
 
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
புதன்கிழமையாகிய இன்று இப்பிரபஞ்சத்தைக் காக்கும் கடவுளாகிய திருமாலை இதயத்தில் இருத்தி துதித்து தங்களனைவருக்கும் பகவானின் திருவருளும் .. நல் அறிவாற்றலையும் .. ஆரோக்கியத்தையும் தந்தருளும்படி
பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் நாராயணாய வித்மஹே ! 
வாசுதேவாய தீமஹி ! 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! 

நாராயணன் ஒருவனே நித்தியமும் .. சத்தியமும் ஆனவர் 
யாரொருவன் அவரை முழுநம்பிக்கையுடன் பூஜிக்கின்றனரோ .. அவர்களுக்கு சகலசௌபாக்கியமும்
கிடைப்பதோடு .. மோட்சமும் கிடைக்கும் .. 

தினமும் நாராயணனின் 24 திருநாமங்களை (பெயர்களை)
உச்சரித்து வாழ்நாள் முழுவதும் மனநிம்மதி .. அஷ்ட ஐஸ்வர்யங்களையும் .. பொன் .. பொருள் .. தனதான்யம் .. ஆரோக்கியம் .. நல்ல குடும்பம் .. குழந்தைகள் .. நல்ல புகழ் .. வாகனவசதி .. வாழ்வில் ராஜயோகம் அனைத்தும் கைகூடும் எனவும் .. பிறவி முடிந்தபின்பும் .. மேலுலக இன்பங்களை அனுபவித்து இறுதியில் நாராயணனின் திருவடிகளை அடையலாம் என்று பீஷ்மர் உபதேசித்துள்ளார் .. 

24 நாமங்களும் எளிமையானவை .. காலையிலும் .. மாலையிலும் விளக்கேற்றியவுடன் இந்த நாமங்களை ஜபிக்கும் போது துளசியும் .. சுத்தமான நீரும் நைவேத்தியமாக வைத்து வழிபட்டாலே போதுமானது .. 

24 நாமங்கள் - 
ஓம் கேசவாய நமஹ ! 
ஓம் சங்கர்ஷணாய நமஹ ! 
ஓம் நாராயணாய நமஹ ! 
ஓம் வாசுதேவாய நமஹ ! 
ஓம் மாதவாய நமஹ ! 
ஓம் ப்ரத்யும்னாய நமஹ ! 
ஓம் கோவிந்தாய நமஹ ! 
ஓம் அநிருத்தாய நமஹ !
ஓம் விஷ்ணவே நமஹ ! 
ஓம் புருஷோத்தமாய நமஹ ! 
ஓம் மதுசூதனாய நமஹ ! 
ஓம் அதோக்ஷ்ஜாய நமஹ ! 
ஓம் திரிவிக்ரமாய நமஹ ! 
ஓம் லக்ஷ்மி நரசிம்ஹாய நமஹ ! 
ஓம் வாமனாய நமஹ ! 
ஓம் அச்சுதாய நமஹ ! 
ஓம் ஸ்ரீதராய நமஹ ! 
ஓம் ஜனார்தனாய நமஹ ! 
ஓம் ஹ்ரிஷீகேசாய நமஹ ! 
ஓம் உபேந்த்ராய நமஹ !
ஓம் பதமநாபாய நமஹ ! 
ஓம் ஹரயே நமஹ ! 
ஓம் தாமோதராய நமஹ ! 
ஓம் கிருஷ்ணராய நமஹ !! 

ஓம் நமோ நாராயணாய ! ஓம் நமோ நாராயணாய ! 
ஓம் நமோ நாராயணாய ! என்று .. மீண்டும் .. மீண்டும் சொல்லி அடியவரின் துன்பங்களை களைந்து .. பாவங்களைப்போக்கி .. குழந்தைபோல் அரவணைத்துக்
கொள்ளும் திருமாலின் திவ்யபாதங்களில் சரணடைவோமாக ! வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A PLEASANT WEDNESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD VISHNU .. MAY YOU BE BLESSED WITH GOOD HEALTH .. GOOD FORTUNE AND FILL YOUR HEART WITH LOVE AND MIRTH ..

SWAMY SARANAM...GURUVE SARANAM....




அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. பிரதோஷ தினமாகிய இன்று கருணாமூர்த்தியான சிவனைத்துதித்து அனைத்து துன்பங்களையும் .. தோஷங்களையும் நீக்குவோமாக .. ஆனால் .. ஒரே ஒருதோஷம் மட்டும் அதன்மூலம் நமக்கு வரும் .. அதுவே ! “சந்தோஷமாகும் ” ! 

பிரதோஷம் என்பது தேவர்களை ஆலகால விஷத்திலிருந்து சிவபெருமான் காத்தருளிய நாளாகும் .. பாற்கடலில் பொங்கிய விஷத்தை உண்டு தேவர்களுக்கு நன்மை அருளிய சிவபெருமான் நம்முடைய வாழ்க்கை எனும் பெருங்கடலில் பொங்கும் பல்வேறு துன்பங்களை
போக்கி .. நன்மைகளை தருவார் .. எனவே பிரதோஷவேளையாகிய மாலை 4.30 - 6.00 மணிவரையிலான நேரத்தில் சிவாலயம் சென்று சிவனுக்கு நடக்கும் அபிஷேக ஆராதனைகளை நந்தீஸ்வரரின் இருகொம்புகளுக்கிடையில் கண்டு தரிசிப்பவர்களுக்கு இம்மை .. மறுமை நலன்களையும் சிவன் அருளுவார் .. 

அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் இந்நேரத்திலாவது ஒருவிநாடியேனும் “ ஓம் நமசிவாய “ என்னும் இறைநாமத்தை மனதிலேனும் கூறுவீர்களாக ! 

துன்பங்களைப்போக்கி .. இன்பங்களை நல்கும் ஈசனை இப்பிரதோஷவேளையில் நாமும் வழிபாடு செய்து முன்னைய வினைகள் அனைத்தும் நீக்குவோமாக ! 
“ ஓம் நமசிவாய “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS ..WISH YOU ALL A
BLESSED " PRADOSHAM " .. MAY LORD SHIVA RELIEVE YOU FROM ALL SINS AND SHOWER YOU WITH WEALTH .. HEALTH ..
HAPPINESS AND HONOR .. " OM NAMASHIVAAYA "

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM.....






 அனைவருக்கும் இனிய காலை வணக்கம் ... !!!

சாந்தாகாரம் புஜகசயனம் பத்மநாபம் ஸுரேசம்
விச்வாகாரம் ககனஸத்ருசம் மேகவர்ணம் சுபாங்கம்
லக்ஷ?மீகாந்தம் கமலநயனம் யோகிஹ்ருத்தயான கம்யம்
வந்தே விஷ்ணும் பவபயஹரம் ஸர்வலோகைக நாதம்

மேகச்யாமம் பீத கேளசேயவாஸம்
ஸ்ரீவத்ஸாங்கம் கௌஸ்து போத்பாஸிதாங்கம்
புண்யோபேதம் புண்டரீகாயதாக்ஷம்
விஷ்ணும் வந்தே ஸர்வலோகைக நாதம் ... !!!


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
வெள்ளிக்கிழமையாகிய இன்று அன்னை மஹாலக்ஷ்மியைத் துதித்து அன்னையின் திருவருளும் ..
அருட்கடாக்ஷ்மும் தங்களனைவரும் பெற்று .. சகல ஐஸ்வர்யங்களும் தங்கள் இல்லம்தேடிவர பிரார்த்திக்கின்றேன் .. 

யாதேவி ஸர்வ பூதேஷு !

லக்ஷ்மி ரூபேணே ஸம்ஸ்த்திதா !
நமஸ்தஸ்யை ! நமஸ்தஸ்யை ! நமஸ்தஸ்யை ! நமோ!
நமஹா !!

பொருள் - 
அனைத்து உயிர்களிலும் செல்வ வளமாய் விளங்கும் மஹாலக்ஷ்மி தேவியே ! நமஸ்காரம் ! மீண்டும் ! மீண்டும்
நமஸ்கரிக்கின்றோம் .. என்றும் காத்தருள்வாயாக ! 

இந்தப் பிரபஞ்சத்தில் தாயாக விளங்கும் அன்னையை வழிபடுவதற்கு பலவழிகள் இருக்கின்றன .. அதில் ஒன்று
மிகப் பிரியமான பெயரால் அழைப்பது கூட ஒருவழிதான் 

அம்மா .. மா,, ஆயி .. ஆத்தாள் .. என்னும் பெயர்களே ! அவை .. அதேபொருள் கொண்ட மந்திரத்தாலும் வழிபடலாம் ! “ ஓம் ஸ்ரீமாந்ரே நமஹ .. 

அன்னையைப் போற்றுவோம் ! மங்காத புகழையும் .. நிறைவான செல்வத்தையும் பெற்றிடுவோமாக ! ஓம் சக்தி ஓம் ! வாழ்க வளமுடனும் ! என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED FRIDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF GODDESS 
LAXMI .. MAY MAA SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH AND HAPPINESS .. " OM SHAKTHI OM " 
JAI M
AA LAKSHMI .
.

Chennai Kapaleeswara temple decorated with gold foil work on the occasion of kumbabhishekam on 3rd April.👇




 
 
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. இன்று பைரவருக்கு உகந்த தேய்பிறை அஷ்டமித் திதியாகும் .. மாலைவேளையில் சிவாலயம் சென்று பைரவரைத் தரிசிப்பது சாலச்சிறந்தது .. தங்களனைவருக்கும் தொழில்விருத்தி .. உத்தியோகத்தில் பதவி உயர்வு .. கடன்சுமை குறையவும் இல்லத்தில் மகிழ்ச்சியும் .. சுபீட்சமும் நிலவிடவும் பைரவரைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் ஷ்வானத்வஜாய வித்மஹே ! 
சூலஹஸ்தாய தீமஹி !
தந்நோ பைரவஹ் ப்ரசோதயாத் !! 

பைரவர் என்றாலே பயத்தைப் போக்குபவர் .. மற்றும் அடியார்களின் பாபத்தை நீக்குபவர் என்று பொருள் .. அவருக்குத் தகுந்த பூஜைகள் செய்தால் மட்டுமே நம்மை காப்பார் என்றில்லை .. எந்தவிதபூஜைகள் செய்யாவிட்டாலும் கூட இக்கட்டான நேரத்தில் முழுமனதுடன் அபரை நினைத்தாலே போதும் .. சந்தோஷத்துடன் உடனே செயல்பட்டு நம்மை ஆபத்துகளில் இருந்து காப்பாற்றுவார் ..

துன்பங்களும் .. துயரங்களும் வாழ்க்கையில் தொடர்கதையாகிப் போனால் வாழ்க்கை என்பதை வாழப்பிடிக்காமல் அதனைத் தீர்த்துவிடத்தான் மனம் ஏங்கும் .. அப்படி சோகத்தின் விளிம்பில் இருப்பவர்களுக்கு ஆறுதல்கூறி அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் அமுதமொழியாக பைரவர் வழிபாடு கூறப்படுகிறது .. கடவுள்வழிபாடு செய்துவிட்டு அதற்கான பலன்களை எதிர்பார்க்கும் பக்தர்களுக்கு உடனடி நிவாரணம் தரும் கடவுளாக பைரவர் விளங்குகின்றார் .. 

இத்தகைய சிறப்புவாய்ந்த அஷ்டமித் திதியில் நாமும் பைரவரைப் போற்றுவோம் ! எல்லா நலமும் பெறுவோமாக ! ஓம் பைரவாய நமஹ ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED ASHTAMI WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD BHAIRAVA .. MAY HE REMOVE ALL THE OBSTACLES AND NIGHTMARE IN YOUR LIFE .. AND SHOWER YOU PEACE AND HAPPINESS .. " JAI BHAIRAVA DEV "




அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று இப்பிரபஞ்சத்தைக் காத்தருளும் விஷ்ணுபகவானைத் துதித்து தங்களனைவரும் சகல சௌபாக்கியங்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்திடவாழ்த்துகிறேன் .. பகவானை வணங்குகின்றேன் .. 

ஓம் நாராயணாய வித்மஹே !
வாசுதேவாய தீமஹி !
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! 


பகவானின் நாமமே நம்மை ரக்ஷிக்கும் .. அவரை விட நம்மிடம் அதிகப்பரிவுடையது அவரது நாமமே ! 
“ சர்வோத்த மஸ்ய கிருபையா “ .. சர்வ உத்தமமான அவனுடைய நாமங்களை நம்மைஉச்சரிக்க வைப்பதும் 
அவனுடைய கிருபைதான் .. கருணைதான் .. 

பகவான் நாமத்தை யாருடைய நாக்கு மறவாமல் உச்சரித்துக் கொண்டு இருக்கிறதோ அவன் சாஸ்திரங்களை அறிந்தவனாயினும் .. அறியாதவனாயினும் .. சத்தியரூபத்தை அடைகிறான் .. பகவானுடைய நாமத்திற்கு அத்தகைய மகத்துவம் இருக்கிறது ..

நாமசங்கீர்த்தனம் செய்பவன் எல்லாவித அபராதங்களில்
இருந்தும் நிவாரணம் அளிப்பதும் .. அசுபங்களிலிருந்து
மீட்டு .. சுகத்தை உண்டாக்குவதும் பகவானுடைய நாமம்
மட்டுமே ! என்று பகவானின் நாமமஹிமைகளை பத்மபுராணம் நமக்குக் கூறுகிறது .. 

காக்கும் கடவுளின் திருவருளையும் .. அருட்கடாக்ஷ்த்தையும் பெற்று .. மஹாவிஷ்ணுவை இதயத்தில் இருத்தி வழிபடுவோமாக ! 
” ஓம் நமோ நாராயணாய “ .. வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A VERY PLEASANT DAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD VISHNU .. MAY YOU BE BLESSED WITH GOOD LIFE .. GOOD FORTUNE .. AND FILL YOUR HEART WITH LOVE AND MIRTH .. 
" OM NAMO NAARAAYANAAYA "

Swamiye Saranam Iyyappa...Guruve Saranam...






அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
செவ்வாய்க்கிழமையாகிய இன்று சஷ்டித் திதியும் சேர்ந்து வருவது சாலச்சிறந்தது .. ஆலயம் சென்று முருகப்பெருமானைத் தரிசிப்பது விசேஷமாகும் .. சகல தோஷங்களும் .. தடைகளும் .. தடங்கல்கள் யாவும் நீங்கி வளமான வாழ்வு தங்களனைவருக்கும் அமைந்திட முருகப்பெருமானைப் பிரார்த்திக்கின்றேன் ..

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹேஷ்வர புத்ராய தீமஹி !

தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத் !! 

“ அமரர் இடர்தீர அமரம் புரிந்த குமரன் அடி நெஞ்சே குறி “ ஆம் ! அமரர்களாகிய தேவர்களின் துன்பத்தினைப் போக்குவதற்காக அசுரர்களுடன் போர்புரிந்து தேவர்களை மீட்டவர் முருகப்பெருமானே ! முருகப்பெருமானை முழுமுதற் பொருளாகக் கொண்டு வழிபடப்படும் நெறி கௌமாரமாகும் .. 

அழகன் முருகனை வழிபடுவதன் மூலம் அடியவர்களின் சொல்லொணாத் துன்பம் நீக்கப்படுவதுடன் .. தினமும் 
நெஞ்சுருகி கந்தசஷ்டி கவசத்தினைப் பாராயணம் செய்வதன் மூலம் பதினாறு பேறுகளும் (செல்வங்களும்) கிடைக்கப்பெறுவர் என்பதனை ..
“ துதிப்போர்க்கு வல்வினை போம் “ என்னும் அடிகள் மூலம் அறியமுடிகின்றது .. 

கிடைத்தற்கரிய மானிடப் பிறவியினைப் பெற்ற நாம் இப்புனித நன்னாளில் முருகனைப் போற்றித் துதித்து அவரது அருட்கடாக்ஷ்த்தையும் பெறுவோமாக ! 
“ ஓம் சரவணபவாய நமஹ “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF
LORD MURUGA ... MAY HE REMOVE ALL THE OBSTACLES AND SHOWER YOU WITH .. BEST HEALTH AND HAPPINESS .. 

" OM MURUGA "

SWAMIYE SARANAM,,,,,GURUVE SARANAM.....






GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A SUCCESSFUL MONDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. MAY YOU BE BLESSED WITH GOOD HEALTH .. WEALTH AND PROSPERITY .. " OM NAMASHIVAAYA " .. JAI BHOLE NATH .. 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையும் .. சோகங்களைப் போக்கி .. சுகங்களைத் தரவல்ல “ சோமவார விரதத்தை “ நாமும் அனுஷ்டித்து சிவபெருமானின் அன்புக்கு உரியவராவோம் .. 

தட்சனின் சாபத்துக்குள்ளாகிய சந்திரன் தன்பொலிவை இழந்து .. ஒளிதேய்ந்து ..போவதையறிந்து வேதனையடைந்து சிவபெருமானை சரணடைந்தான் .. சிவபெருமானும் சந்திரனை தன்னுடைய தலையில் சூடி .. பாதிநாள் வளர்ந்தும் .. பாதிநாள் தேய்ந்தும் .. இருக்கும்படி சாபத்தை மாற்றி அமைத்தார் .. 

இவ்வாறு சந்திரனின் சோகம் போக்கி .. சுகம்பெறச் செய்த சிவபெருமானிடம் சந்திரன் சோமவாரவிரதத்தைக் கடைபிடிப்பவர் வாழ்வில் சுகங்கள் பெருகவேண்டும் என வேண்ட .. சிவனும் வேண்டுதலை ஏற்று அனைவருக்கும் சுகங்களை நல்குவதாக வாக்களித்தார் .. 

நாமும் இறைவனைக் குறித்து நல்விரதம் இருப்போம் .. இல்லாமை என்ற ஒன்று இல்லாமல் செய்து அனைத்து வளங்களையும் .. நலங்களையும் அள்ளித்தருவார் ஈசனே! ”ஓம் நமசிவாய “ .. வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..



GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED 
SADURTI AND EASTER SUNDAY TOO .. MAY YOU BE BLESSED WITH HAPPINESS AND PROSPEROUS .. " JAI GANESHA " 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் மற்றும் அனைத்து கிறிஸ்தவ அன்புள்ளங்களுக்கும் எங்கள் ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளும் உரித்தாகட்டும் .. 

அங்கிங்கெனாதபடி .. எங்கும் வியாபித்திருக்கும் “ ஓம் “ எனும் ஓங்காரவடிவமாக விளங்கும் ஸ்ரீவிநாயகரைத் துதித்து தடங்கல்கள் அனைத்தும் தகர்த்து வாழ்வில் வெற்றிபெற வாழ்த்தி வணங்குகின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
வக்ரதுண்டாய தீமஹி ! 
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !! 

விநாயகப்பெருமானை வழிபாடு செய்வதற்குப் பலவிரத தினங்கள் இருந்தாலும் .. விரதத்தில் மிகச்சிறந்ததும் .. பழமையானதும் சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய “ சங்கடஹர சதுர்த்தியாகிய “ இன்று விரதம் இருந்தால் அனைத்து சங்கடங்களும் தீர்ந்து வாழ்வில் அளவுகடந்த ஆனந்தத்தையும் .. சகல சௌபாக்கியங்களையும் பெறலாம் .. 

“ ஹர “ என்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள் .. 
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே “ சங்கடஹர சதுர்த்தியாகும் “ .. 
இவ்விரதத்தை கடைபிடிப்பதால் நீண்ட நாட்களாக 
வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு 
உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும் .. 

சிறப்பான கல்வி அறிவு .. புத்திகூர்மை .. நீண்ட ஆயுள் .. நிலையான செல்வம் .. நன்மக்கட்பேறு .. என பலவிதமான
நன்மைகளை அடையமுடியும் .. சனிதோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால் சனியின் தாக்கம் பெரும்பகுதி குறையும் .. 

விரதம் இருப்பது எப்படி ..
சங்கடஹரசதுர்த்தியன்று அதிகாலை நீராடி பால் பழம் அருந்தி .. உணவு உட்கொள்ளாமல் மாலைவரை கணநாதன்
நினைவோடு உபவாசம் இருந்து மாலை ஆலயத்திற்குச் சென்று விநாயகப்பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்துகொள்ள வேண்டும் .. ஆலயத்தை
எட்டுமுறை வலம்வந்து விநாயகர் அகவலையும் பாராயணம் செய்தல் நலம் .. வீட்டிற்குவந்து உபவாசத்தை முடித்துக்கொள்ள வேண்டும் .. 

சங்கடஹர சதுர்த்தியின் மஹிமை - 
காட்டில் தருமபுத்திரன் இவ்விரதத்தை மேற்கொண்டார் ..
பாண்டவர்க்கு இவ்விரதத்தை உபதேசித்தவர் கண்ணபிரான்
முதல்முதலில் தன் தாய் பார்வதிதேவிக்குக் கணபதியே 
இவ்விரதத்தைச் சொல்லி அருளினார் .. அன்னையும் ஆண்டுக்காலம் இவ்விரதத்தை மேற்கொண்டு தன் பதியை அடைந்தாள் ..
இந்திரன் .. சிவன் .. இராவணன் .. போன்றோர் இவ்விரதத்தினால் நற்பயன் அடைந்திருக்கின்றனர் .. 
அனுமன் சீதையைக் கண்டது ..
தமயந்தி நளனை அடைந்தது ..
அகலிகை கௌதமரை அடைந்தது .. போன்றவை நிகழ்ந்ததும் இவ்விரதத்தின் மஹிமையால்தான் .. என முருகப்பெருமானே முனிவர்க்கு எடுத்துரைக்கிறார் ஸ்காந்தத்தில் .. 

விநாயகரைப் போற்றுவோம் ! வாழ்வில் எல்லாத் துன்பங்களும் நீங்கப்பெற்று நிம்மதி பெறுவோமாக ! 
” ஓம் விக்னேஷ்வராய நமஹ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..



அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
வெள்ளிக்கிழமையாகிய இன்று அன்னை மஹாலக்ஷ்மியைத் துதித்து .. தொடர்தோல்விகள் .. காரியதடைகள் .. அனைத்தும் நீங்கி வாழ்வில் எல்லா நிலைகளிலும் உயர்ந்திடவும் .. நல்வாய்ப்புகளையும் .. அதிர்ஷ்டங்களையும் தங்களனைவருக்கும் தந்தருளுமாறு அன்னையைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் மஹாலக்ஷ்மீ ச வித்மஹே ! 
விஷ்ணு பத்னீ ச தீமஹி !
தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத் !! 

தீபத்தின் ஒளியானது தன்னைமட்டும் வெளிப்படுத்திக் கொள்வதில்லை .. தன்னைச்சுற்றி இருப்பவற்றையும் வெளிப்படுத்துகிறது .. அதுபோல்தான் அன்னை மஹாலக்ஷ்மியும் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதுடன் .. தன்னைச் சரண் அடைந்தவர்களையும் சிறப்புறச் செய்வாள் .. 

அன்னையின் திருவடிகளை நாமும் பற்றிக்கொள்வோமாக ! கருணாகடாக்ஷ்ம் பெற்று வாழ்வில் நலம் யாவும் பெறுவோமாக ! ஓம் சக்தி ஓம் ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED FRIDAY WITH THE DIVINE BLESSINGS AND GUIDANCE OF GODDESS LAKSHMI .. MAY SHE ILLUMINATE YOUR LIFE WITH GOOD LUCK .. HEALTH ..WEALTH .. AND HAPPINESS .. 
" OM SHAKTHI OM " .. JAI MAA LAKSHMI ..
 
 
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
வியாழக்கிழமையாகிய இன்று குருவருளும் .. திருவருளும் தங்களனைவரும் பெற்று .. செய்யும் அனைத்து காரியங்களிலும் வெற்றிபெற ஷீரடிபாபாவைப்
பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் ஷிர்டிவாஸாய வித்மஹே ! 
சச்சிதானந்தாய தீமஹி !
தந்நோ சாய் ப்ரசோதயாத் !!

மனவேதனை .. மற்றும் பிரச்சினைகளில் உள்ள ஒருவர் 
மனத்தூய்மையுடன் சாயிகவசத்தினை பாராயணம் செய்யும்போது அனைத்து பிரச்சினைகளும் பனிபோல் மறைந்து மனநிம்மதி பெறுவர் .. மேலும் பாபாவின்மீது நம்பிக்கையும் மென்மேலும் அதிகரிக்கும் ..

சாயி கவசம் -
முன்னர் .. பின்னர் வினைகள் நீக்கி .. எம்மை சாய் என்றும் காக்க ! 
இல்லறவாழ்வில் எல்லா நலமும் .. இறைவா தந்து 
எம்மைக்காக்க ! 
தேடும் மேன்மையாவும் தந்து .. தீர்க்கமுடனே சாயிகாக்க!
நாடும் பிள்ளைச்செல்வம் முதலாய் .. நலங்கள் யாவும் தந்து காக்க ! 
எண்ணிரு செல்வம் இசைந்த வாழ்வில் புண்ணிய நலங்கள் பொலிவுடன் அருள்க ! 
எந்தவடிவில் எவ்வாறாயினும் எதுவும் எம்மை அனுகாதிருக்க உந்தன் நாமம் உருகியே சொல்ல !
வந்தவினையை வாட்டியே ஒழிப்பாய் ! துஷ்டதேவதை ..
தொடரும் பிசாசு .. கெட்டமிருகம் .. கெடுக்கும் உறவு .. 
அனைத்திலிருந்தும் எம்மைக் காத்திடுவாய் ! சாய்நாதரே!

” ஓம் சாய் ராம் “ .. வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF 
SHIRDI SAI .. MAY YOU BE BLESSED WITH EVERY SUCCESS AND
GOOD FORTUNE .. " OM SAI RAM "

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM

 
 
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் 
“ பங்குனி உத்திரத் திருநாள் நல்வாழ்த்துகளும் “ உரித்தாகுக .. புதன்கிழமையும் .. பௌர்ணமித் திதியும் வரும் இந்த மங்களங்கள் மலரும் நன்நாளில் கலியுகவரதனுக்குரிய பங்குனி உத்திர விரதமும் அனுஷ்டிக்கப்படுகிறது .. இன்றைய நாளில் தாங்கள் செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி பெற கந்தப்பெருமானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹேஷ்வர புத்ராய தீமஹி !
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத் !!

பங்குனிமாதத்தில் பூமி மீனராசியில் இருப்பதால் உத்திர நட்சத்திரத்துடன் சேர்ந்து ஏழாம் இடமாகிய கன்னியில் நின்று முழுகலையையும் பெற்று பூமிக்கு ஒளிவழங்குவான் .. அந்த பூரணபௌர்ணமி நிலாவில் களங்கத்தைக் காணமுடியாது .. களங்கமில்லாத சந்திரஒளி உடலுக்கும் .. உள்ளத்துக்கும் நிம்மதிதரும் ..
பல நற்பலன்களையும் கொடுக்கும் .. எனவே இந்நாள் கூடுதல் பலன்களைத் தரக்கூடிய நாளாகக் கருதப்படுகிறது ..

பங்குனிமாதத்தில் வரும் உத்திர நட்சத்திரம் முருகக்கடவுளுக்குரிய சிறப்புத் தினமாகக் கொண்டாடப்படுகிறது .. 
தமிழ்மாதங்களில் 12ம் மாதம் பங்குனி .. 
நட்சத்திரங்களில் 12ம் நட்சத்திரம் உத்திரம் .. 
எனவே பன்னிரெண்டுகை வேலவனுக்கும் சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகிறது .. முருகன் கோயில்களில் இத்தினத்தில் வருடாந்த திருவிழாக்கள் 
( மஹோற்சவம் ) நடைபெறும் ..

இத்தினத்தின் சிறப்புகள் - 
மீனாட்சி கல்யாணம் - சிவனுக்கும் பார்வதிக்கும் சோமசுந்தரர் என்றும் மீனாட்சி என்றும் நாமம் கொடுத்து மணம்செய்வித்த நாளும் பங்குனி உத்திரநாளே !

சிவனின் மோனநிலையைக் கலைத்த மன்மதனை எரித்ததால் கலங்கி நின்ற தேவர்களுக்கு ஆறுதல் வார்த்தையாக சிவன் தேவியை இத்தினத்தில் மணந்தார் என்பது ஐதீகம் .. 

பங்குனி உத்திரக்கல்யாணத் திருவிழா .. பசுவாகிய ஆன்மா .. பதியாகிய சிவத்துடன் இணைவதாக ஓர் உயர்ந்த நிலையினை எடுத்துக்காட்டுகிறது .. இத்தினத்தில் அம்மயப்பனைக் குறித்து விரதமிருப்பர் .. 
பகற்பொழுது உணவு உற்கொள்ளாது .. இரவில் பால் .. பழம் அருந்தி விரதம் அனுஷ்டிப்பர் .. இதனைக் கல்யாணசுந்தர விரதம் என்றும் அழைப்பர் .. 

உத்திர நட்சத்திரத்திற்குரிய கிரகம் சூரியன் .. இந்நாளில் நாம் செய்யும் வழிபாட்டினால் பாவங்கள் அனைத்தும் பஸ்பமாகிவிடும் என்று சூரியபுராணம் கூறிகிறது .. 

ஜனகனின் வில்லை ஒடித்து ஜானகியை மணந்த ராமர் ..
சீதாராமாவானார் .. 
லட்சுமணன் .. சத்ருகன் ஆகியோருக்கும் திருமணம் நடந்தது .. 

சந்திரபகவான் கார்த்திகை .. ரோகிணிஉள்ளிட்ட 27 நட்சத்திரங்களை மனைவியராக அடைந்த புண்ணியத்தினம் ..

மஹாலக்ஷ்மி விரதமிருந்து மஹாவிஷ்ணுவின் 
திருமார்பில் இடம் பிடித்தநாள் .. 
பிரம்மன் தன் மனைவி சரஸ்வதியை நாக்கிலேயே வைத்துக்கொள்ளும்படியான வரத்தைப் பெற்ற நாள் .. 

இந்திராணி இந்திரபதிக்கு கிடைத்த பொன்னாள் ..
திருப்பரங்குன்றத்தில் முருகனுக்கும் தெய்வானைக்கும் 
திருமணம் நடந்தது .. ஆண்டாள் ஸ்ரீரங்க மன்னர் திருமணமும் நடந்தது .. 
மதுரையில் சொக்கநாதருக்கு மீனாட்சி மாலையிட்ட நன்னாள் .. 

ஆலயம் சென்று இறைவனின் திருமணத்தைக்கண்டு வணங்குவது அனைத்து நலன்களையும் தரும் .. திருமணமானவர்களது வாழ்வில் எந்தவிதமான பிரச்சினைகளும் இன்றி மகிழ்ச்சிகரமான வாழ்வு பெற 
ஆலயம் சென்று அனைத்து தெய்வங்களையும் தரிசித்து 
அவர்களது ஆசியையும் .. அருட்கடாக்ஷ்த்தையும் பெறுவோமாக ! வாழ்க வளமுடனும் ... என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A SUCCESSFUL DAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA .. MAY HIS DIVINE POWER PROTECT YOU FROM ALL THE OBSTACLES AND LEAD YOU TO A HAPPY AND PROSPEROUS LIFE .. " OM MURUGA "

நாளை பங்குனி உத்திரம்!

முருகப் பெருமான், சிவபெருமானுக்கு பிரணவப் பொருளை உபதேசித்த நாள் பங்குனி உத்திரம். அன்று அடியார்கள் காவடி எடுத்து முருகனை வழிபடுகிறார்கள்.

பங்குனி உத்திர நாளில்தான் மீனாட்சி- சுந்தரேஸ்வரர்; முருகன்- தெய்வானை; ராமன்- சீதா; லட்சுமணன்- ஊர்மிளா, பரதன்- மாண்டவி; சத்ருக்கனன்- சுருதகீர்த்தி ஆகியோரின் திருமணங்கள் நடைபெற்றுள்ளன.


தனது தவத்தைக் கலைத்ததால் மன்மதனை எரித்து சாம்பலாக்கினார் ஈசன். இதனால் வருந்திய ரதிதேவி, மன்மதனை உயிர்ப்பித்துத் தருமாறு ஈசனிடம் வேண்டினாள். அதனால் மனம் இரங்கிய ஈசன், அவள் கண்களுக்கு மட்டும் தெரியும்படி மன்மதனை உயிர்ப் பித்தார். இது நிகழ்ந்ததும் பங்குனி உத்திரத் திருநாளில்தான்.

ஸ்ரீவள்ளி அவதரித்த நாளும் பங்குனி உத்திரமே.

பங்குனி மாதம் திருமழப்பாடியில் நடைபெறும் நந்தி கல்யாணத்தை தரிசித்தால் மணமாகா தவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என் பது ஐதீகம்.

பங்குனி உத்திர விரதத்தைக் கடைப் பிடித்த ஸ்ரீமகாலட்சுமி, மகாவிஷ்ணுவின் மார்பில் நிரந்தர இடம் பெற்றாள். பிரம்மன்- சரஸ்வதி, தேவேந்திரன்- இந்திராணி ஆகியோருக்கும் பங்குனி உத்திர விரதம் மேற்கொண்டதால், திருமணம் கைகூடிய தாகப் புராணங்கள் சொல்கின்றன.

பங்குனி உத்திர நாள் அன்று பிறந்ததால், அர்ஜுனன் ‘பல்குநன்’ என்ற பெயர்
பெற்றான்.

SWAMIYE SARANAM IYYAPPA...HAPPY HOLI TO ALL......GURUVE SARANAM....


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் ஹோலிப்பண்டிகை நல்வாழ்த்துகளும் உரித்தாகுக ..
இந்துக்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஹோலியும் ஒன்று .. பெரும்பாலும் வட இந்தியாவில் தான் கொண்டாடப்படுகிறது .. ஹோலி என்றால் மனதில் உள்ள பொறாமை .. தீய எண்ணம் .. அகங்காரம் அனைத்தையும் சுட்டெரித்து அறிவுச்சுடரை ஏற்றும் புனிதநாள் என்றும் கூறுவர் ..
பனிகாலத்திற்கு விடையளித்து .. வெயில்காலத்திற்கு வரவேற்புரை வழங்கும் பண்டிகையாகும் .. விவசாயிகள் அறுவடைமுடித்து நிறைந்த மனதுடன் இதைக் கொண்டாடுவர் .. இந்தபண்டிகையின் சிறப்பு என்னவென்றால் ஒருவர்மீது ஒருவர் வண்ணப்பொடிகளாலோ அல்லது வண்ணம்கலந்த நீரையோ வீசிக்கொண்டு விளையாடுவதுதான் .. வண்ணப்பொடிகள் படாதவண்ணம் இருக்கத்தான் பலரும்
முயற்சிப்பர் .. இருப்பினும் சிக்கிக்கொள்ளும் வாய்ப்புதான் அதிகம் ..
கிருஷ்ணபகவான் தன் குழந்தைபருவத்திலும் .. பால்யபருவத்திலும் கோபியர்களுடன் விளையாடியது
தான் இந்த ஹோலிபண்டிகை .. இப்பொழுதும் ஹோலிப்பாடல்களில் கிருஷ்ணரின் குறும்புகளை விவரித்து பாடுவர் ..
ஹோலிபண்டிகையின் புராணக்கதை - 
ஹிரண்யன் என்னும் அரக்கன் தன்னையே எல்லோரும் கடவுள் எனத் தொழவேண்டும் என்று எண்ணினான் .. அவனது மகன் பிரஹலாதனோ அதை எதிர்த்தான் .. பிரஹலாதனோ மஹாவிஷ்ணுவே கடவுள் என்று போற்றி பூஜித்து வந்தான் .. இதையறிந்த ஹிரண்யன் மகன் என்றும் பாராமல் அவனைக் கொல்லத்துணிந்தான் 
ஆனால் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன ..
இறுதியில் தனது சகோதரி ஹோலிகாவின் மடியில் பிரஹலாதனை அமரச்செய்து தீமூட்டினான் .. அவளோ நெருப்பினால் இறக்கமுடியாதபடி அதிலிருந்து காப்பாற்றும் தன்மையுடைய சால்வையினை அணிந்திருந்தாள் .. பிரஹலாதனோ தன்னைக்காப்பாற்றும்படி மஹாவிஷ்ணுவை வேண்ட ..
நெருப்புமூட்டப்பட்டவுடன் ஹோலிகாவை சுற்றியிருந்த சால்வை நழுவி பிரஹலாதனைச் சுற்றியதால் காயமின்றி தப்பினான் .. மாறாக ஹோலிகா நெருப்பில் எரிந்து இறந்தாள் ..
ஹோலிகா எரிக்கப்பட்டதே ஹோலிப்பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது தீயசக்திகளின் அழிவை ஹோலிகா உருவபொம்மை எரிப்பதன்மூலம் அழிக்கப்பட்டு விட்டது .. 
மஹாவிஷ்ணுவைப் போற்றுவோம் ! அவரது அருட்கடாக்ஷ்த்தையும் பெற்றிடுவோமாக ! 
“ ஓம் நமோ நாராயணாய “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A HAPPY AND A COLOURFUL HOLI .. MAY LORD VISHNU BLESS YOU AND SHOWER YOU WITH GOOD HEALTH WEALTH AND HAPPINESS 
" OM NAMO NAARAAYANAAYA "

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
திங்கட்கிழமையாகிய இன்று சிவபெருமானுக்கு உகந்த 
சோமவார விரதமாகும் .. ஆலயம் சென்று ஈஸ்வரனை
தரிசிப்பது சாலச்சிறந்தது .. தங்களனைவருக்கும் ஈசனின் அருட்கடாக்ஷ்மும் .. அனைத்து நலன்களும் பெற்றிட பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹா தேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !! 

சிவனுக்கு உகந்த விரதங்களுள் ‘ சோமவார விரதமும் ’ ஒன்றாகும் .. சோமன் என்றால் சந்திரன் என்று பொருள் 
பார்வதியுடன் கூடிய சிவபெருமான் என்றும் கூறுவர் .. 
சந்திரன் தன்னுடைய கொடியநோய் குணமாக சிவபெருமானை ஆராதனைசெய்து நவக்கிரகங்களில் ஒருவராகத் திகழும் பேறு பெற்றான் .. அவனது பெயரால்
தோன்றியது தான் “ சோமவார விரதம் “ ..

சந்திரனுக்குரிய நாளான திங்கட்கிழமையில் இது கடைப்பிடிக்கப்படுகிறது .. சந்திரனின் ஒருகலையைத் தனது முடிமேல் சூடிக்கொண்டு சந்திரசேகரர் என்ற பெயரையும் ஈசன் பெற்றார் .. சந்திரனின் நல்வாழ்வுக்காக சந்திரனின் மனைவி ரோகிணியும் இவ்விரதத்தை கடைப்பிடித்தாள் .. அன்றுமுதல் பெண்கள் சௌபாக்கியத்துடன் திகழவும் .. கணவனுக்கு மேன்மைகள் உண்டாகவும் .. நோய்நொடிகள் தாக்காதிருக்கவும் இந்தவிரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர் .. 

சிவனைப் போற்றுவோம் ! ஆயுள்விருத்தியும் .. மன அமைதியும் பெறுவோமாக ! ஓம் நமசிவாய ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A SUCCESSFUL MONDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. MAY YOU BE BLESSED WITH GOOD HEALTH 
WEALTH AND HAPPINESS .. ' OM NAMASHIVAAYA ' 
JAI BHOLE NATH ..

swamiye saranam iyyappa...guruve saranam....



அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
ஏகாதசித் திதியாகிய இன்று ஆலயம் சென்று விஷ்ணுபகவானைத் தரிசிப்பது சாலச்சிறந்தது .. கல்வியில் உயர்வும் .. குடும்ப ஒற்றுமை சிறக்கவும் .. நல்ல பதவி .. அந்தஸ்தான வாழ்வு அமைந்திடவும் .. பகவானைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் நாராயணாய வித்மஹே ! 
வாசுதேவாய தீமஹி !
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!
” காயத்ரி மந்திரத்திற்கு நிகரான மந்திரம் இல்லை .. 
தாய்க்கு சமனான தெய்வம் இல்லை .. 
காசியைவிட சிறந்த தீர்த்தம் இல்லை .. 
ஏகாதசிக்கு நிகரான விரதம் இல்லை என்பர் ”
பங்குனிமாத வளர்பிறை ஏகாதசியை “ ஆமலகி ஏகாதசி “ என்றழைப்பர் .. நெல்லிமரத்தடியில் பரசுராமனின் படத்தை வைத்து பூஜைசெய்து .. நெல்லிமரத்தை 108முறை சுற்றி பூ போட்டால் புண்ணியநதிகளில் நீராடியபலனும் .. ஆயிரம் பசுக்களை தானம்செய்த பலனும் கிட்டும் ..
நெல்லி திருமாலின் தோன்றலாகும் .. எல்லா தெய்வசக்திகளும் கோமாதா .. காமதேனுவுக்குள் அடக்கம்போல நலன்பயக்கும் 
சக்திகள் யாவும் நெல்லியினுள் அடக்கம் .. ஆதிசங்கருக்கு அளிக்கப்பட்ட ஒரு நெல்லி அவரை கனகதாரா துதியை பாடச்செய்து தங்கமழையை பொழியவைத்ததுபோல .. பெரும்பயன் அருளவல்லது ..
அலைபாயும் மனதை கட்டுப்படுத்தி அரங்கனையே நினைக்கச்
செய்திட விஷ்ணுபுராணம் .. பாகவதம் .. ராமாயணம் போன்ற 
இறைத் திருவிளையாடல் நூல்களையோ .. விஷ்ணுசகஸ்ரநாமம் .. நாலாயிர திவ்யபிரபந்தம் போன்ற துதிகளையோ தொடர்ந்து பாராயணம் செய்வதும் நல்லது .. 
பாராயணத்தால் பயன்பெறுவதோடு முறையற்ற செயல்பாடுகளில் ஈடுபடாமல் இருப்பதால் அல்லல்கள் வராமலும் காக்கப்படுவோம் ..
கருணாகரனைப் போற்றுவோம் ! கவலைகள் அனைத்தும் நீக்குவோமாக ! ஓம் நமோ நாராயணாய ! வாழ்க வளமுடனும் !
என்றும் நலமுடனும் !
GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED 
" EKADASI " WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD VISHNU ..
MAY YOU BE BLESSED WITH GOOD HEALTH .. WEALTH .. AND HAPPINESS .. " OM NAMO NAARAAYANAAYA "