சித்திரைப் பருவந்தன்னில் உதித்த நற்சித்ரகுப்தன்
அத்தின அவனை உன்னி அர்ச்சனைக் கடன்களாற்றில்
சித்தியும் பெறுவர் பாரந்தீருமே ! எமந்தன்னூரில் இத்திறன் அறிந்தேயன்னோன் இரங்குவான் அரங்கள் சொற்றே “
அத்தின அவனை உன்னி அர்ச்சனைக் கடன்களாற்றில்
சித்தியும் பெறுவர் பாரந்தீருமே ! எமந்தன்னூரில் இத்திறன் அறிந்தேயன்னோன் இரங்குவான் அரங்கள் சொற்றே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் சித்ரா பௌர்ணமியாகிய இன்று சீர்மிகு வாழ்வுதனை நமக்கு தந்தருளும் ஸ்ரீசித்ரகுப்தனைத் துதித்து நாம் அறியாமல் செய்தபாவங்கள் மலையளவு இருப்பினும் அதனை கடுகளவாகவும் .. கடுகளவு உள்ள புண்ணியத்தை மலையளவாகவும் கணக்கில் எழுதிக் கொள்ளுமாறும் பிரார்த்திப்போமாக !
ஓம் லேகிறி ஹஸ்தாய வித்மஹே !
பத்ரதராய தீமஹி !
தந்நோ சித்ர ப்ரசோதயாத் !!
பத்ரதராய தீமஹி !
தந்நோ சித்ர ப்ரசோதயாத் !!
சிறப்புப் பொருந்திய இத்திருநாள் அம்மனுக்கும் உகந்த நாளாகும் .. தாயாரை இழந்த ஆண்கள் அன்னையை நினைத்து தர்ப்பணம் செய்வர் .. (முதலாம் ஆண்டு முடியும்வரை செய்தலாகாது) பெண்கள் தர்ப்பணம் பண்ணாது இவ்விரதத்தை அனுஷ்டிப்பர் ..
சித்திரா பௌர்ணமி என்பது சித்திரை மாதம் பௌர்ணமித் திதியில் .. சித்திரை நட்சத்திரமும் கூடிய நன்னாளாகும் ..
மாதத்தின் பெயரும் .. நட்சத்திரத்தின் பெயரும் ஒன்றாகி ..
சந்திரன் சித்திரையில் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கையில் ..
சூரியன் உச்சபலம் பெறும் மேஷராசியில் ..
சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமியாகையால் மிகவும் சிறப்புப் பெறுகின்றது ..

சித்ரா பௌர்ணமியாகிய இன்று அன்னை பார்வதிதேவியின் கைப்பட வரையப்பட்ட சித்திரத்தில் ஈசனின் மூச்சுக்காற்றின்மூலம் உருவாகிய சித்ரகுப்தனை வழிபடுவது சிறப்பாகும் .. ஜீவராசிகள் செய்யும் ஒவ்வொரு பாவ புண்ணிய கணக்கை சித்திரகுப்தர் எழுதிவருகிறார் ..
நமது பாவ - புண்ணியங்களைப் பொறுத்து சித்திரகுப்தனால் எழுதப்படும் கணக்கின் அடிப்படையில்தான் ஒவ்வொரு பிறவியிலும் நாம் அனுபவிக்கும் இன்பமும் .. துன்பமும் நிகழ்கின்றது அதனால் பாவம் செய்வதை கனவிலும் நினையாமல் இந்தப் பிறவியில் மட்டுமல்லாமல் எந்தப் பிறவியிலும் புண்ணியங்களை மட்டுமே செய்து ..
“ இது ஓர் புண்ணிய ஆத்மா “ என்று சித்திரகுப்தனால் அவரின் கணக்குப் புத்தகத்தில் நம்மைப் பற்றி குறிப்பு எழுதப்பட்டுவிட்டால் அடுத்தப் பிறவியிலும் துன்பநிலை வராது இறைவன் துணையிருப்பார் ..
“ இது ஓர் புண்ணிய ஆத்மா “ என்று சித்திரகுப்தனால் அவரின் கணக்குப் புத்தகத்தில் நம்மைப் பற்றி குறிப்பு எழுதப்பட்டுவிட்டால் அடுத்தப் பிறவியிலும் துன்பநிலை வராது இறைவன் துணையிருப்பார் ..
இன்றைய நாளில் நோட்டுப் புத்தகம் .. பேனா .. பென்சில் முதலிய எழுதப்பயன்படும் பொருட்களையும் .. மற்றும் அன்னதானம் .. விசிறி .. குடை .. பாதணி போன்ற உங்காள் முடிந்த தான தருமங்களை இல்லாதோர்க்கு செய்தால் உங்கள் பாவக்கணக்கிலிருந்து பாவங்கள் குறைந்து புண்ணியங்கள் அதிகரிக்கும் .. தர்மதேவதையின் அருட்கடாக்ஷ்ம் கிட்டும் .. நோய் நொடி ஏதுமின்றி எந்த பிறவியும் வளமாகும் .. தங்கள் வாழ்வும் இனிதாகும் ..
“ ஓம் சித்ரகுப்தாய நமஹ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்