PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM...


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. இன்று மூன்றாம் ஆடிவெள்ளியும் .. பௌர்ணமியும் சேர்ந்து வருவது அதிவிசேஷம் .. அம்மனைப் பூஜிக்க சிறந்த நாளாகும் .. அன்னையின் திருவருளும் .. அருட்கடாக்ஷ்மும் பெற்று நிறைந்த செல்வம் இல்லம் தேடிவரப் பிரார்த்திக்கின்றேன் ..

ஓம் மஹாலக்ஷ்மீ ச வித்மஹே ! 
விஷ்ணு பத்னீ ச தீமஹி !
தந்நோ லக்ஷ்மீ ப்ரசோதயாத் !! 

ஆடியில் அம்மன்கோயில்களில் மஞ்சள் .. குங்குமத்துடன் .. கண்ணாடி வளையல்களை பெண்களுக்கு பிரசாதமாக அளிக்கின்றனர் .. இந்நாட்களில் ஒருசில குடும்பங்களில் சகோதரர்கள் தங்கள் உடன்பிறந்த சகோதரிகளை விருந்துக்கு அழைத்து உபசரிப்பதுடன் .. அவர்களை அம்மனாகக் கருதி மஞ்சள் .. குங்குமம் .. வளையல்களுடன் .. புடவைகளையும் அளித்து மகிழ்கின்றனர் .. தம் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றும் பொருட்டு அப்பகுதி மக்களுக்கு கேழ்வரகு கூழ் வழங்குகின்றனர் .. 

ஆடிமாதத்து பௌர்ணமி நாளை “ குருபூர்ணிமா “ அல்லது “வியாச ஜெயந்தி” என்று அழைப்பார்கள் .. மஹாவிஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படுபவர் .. வியாசர் வேதங்களை 
ரிக் .. யஜுர் .. சாமம் .. அதர்வணம் என்று நான்காக வகுத்தவர் ..
வியாசரை குருபூர்ணிமா தினமான இன்று நினைந்து வணங்கவேண்டும் .. சீடர்களும் .. ஆன்மீக அன்பர்களும் தங்கள் குருவை நாடிச்சென்று வணங்கி குருவருள் பெற்றுக்கொள்ளவேண்டியது அவசியம் .. புதிய சீடர்கள் குருதீட்சையைப் பெறுவர் .. 

குருவருளும் .. திருவருளும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வோமாக .. “ குருவே நமஹ “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED FRIDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF GODDESS LAKSHMI ON THIS ' GURU PURNIMA ' DAY .. MAY SHE SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH AND PROSPERITY .. " JAI MATA DI " ..

SWAMIYE SARANAM IYYAPPA.....

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
புதன்கிழமையாகிய இன்று பிரதோஷ விரதமும் வருகின்றது .. மாலைவேளையில் .. பிரதோஷவேளையாகிய 4.30 - 6.00 மணிவரையில் சிவாலயம் சென்று சிவனையும் .. நந்தீஸ்வரரையும் தரிசிப்பது சாலச்சிறந்தது .. தங்களைனருக்கும் அனைத்து சம்பத்துக்களும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் .. சிவபெருமானை வணங்குகின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ர ப்ரசோதயாத் !! 

சிவபெருமானுக்குரிய விரதங்களுள் மிகவும் விசேஷமானது பிரதோஷ விரதம் .. தோஷம் என்றால் - குற்றம் என்றும் .. 
பிரதோஷம் என்றால் - குற்றமற்றது என்றும் பொருள் தரும் ..
மாலை 4.30 - மணிமுதல் 6.00 மணிவரையிலான காலமே பிரதோஷ காலமாகும் .. இதை சந்தியா காலம் என்றும் அழைப்பர் .. 

ஒவ்வொருமாதமும் வளர்பிறை .. தேய்பிறை என்னும் 2 காலங்களிலும் திரயோதசி திதியில் வருவது பிரதோஷ தினமாகும் .. இந்த வேளையில் சிவபெருமானை வழிபாடு செய்வதே இந்த விரதத்தின் நோக்கம் .. பிரதோஷவேளையில் இறைவனை வழிபடுவதால் நமது முற்பிறவி குற்றங்கள் .. சகலதோஷங்கள் நீங்கி நலம் கிடைக்கும் .. பாவம் விலகி புண்ணியம் சேரும் .. வறுமை அகலும் .. பயம் .. மரணவேதனை நீங்கும் .. பிறவி ஒழித்து முக்திபேற்றினை அடைவர் .. கல்வியில் மேன்மை பெறுவார்கள் .. 

சிவனையும் நந்தீஸ்வரரையும் போற்றித் துதிப்போம் ! பலவெற்றிகளையும் பெறுவோமாக ! வெற்றி நிச்சயம் ! 
” ஓம் நமசிவாய “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. TODAY IS ' PRADOSHAM ' 
MAY LORD SHIVA REMOVE ALL THE OBSTACLES AND SHOWER YOU WITH ETERNAL SUCCESS .. " OM NAMASHIVAAYA " ..

சுவாமியே சரணம் ஐயப்பா!! பன்வேல் பாலகன் நாமம் போற்றி!! குருவின் பாதார விந்தங்கள் போற்றி! போற்றி!! Swamiye Saranam Iyyappa!Panvel balagane saranam Iyyappa!! Guruve Saranam! Saranam




அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. இரண்டாம் ஆடிச்செவ்வாயாகிய இன்று அன்னையைத் துதித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஒரு சுபீட்சமிக்க நன்நாளாக அமைந்திட பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் ஸர்வஸம் மோஹின்யை வித்மஹே !
விஷ்வ ஜனன்யை தீமஹி !
தந்நஸ் சக்தி ப்ரசோதயாத் !! 

ஆடிமாத செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் எண்ணை தேய்த்து .. மஞ்சள் பூசிக்குளித்து விரதம் இருந்து அம்மனை வழிபட்டு வந்தால் அவர்களது மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை .. 

இன்று பெண்கள் ஒளவையார் விரதம் அனுஷ்டிப்பார்கள் .. 
செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணிக்கு மேல் ஆண்களும் .. குழந்தைகளும் .. உறங்கிய பின்னரே இவ்விரதம் இருப்பர் .. பெண்கள் மட்டுமே ஒன்று கூடி மூத்த சுமங்கலிப் பெண்கள் வழிகாட்ட இளைய பெண்கள் விரதத்தைத் தொடங்குவர் .. 

பச்சரிசிமாவில் வெல்லம் சேர்த்து கொழுக்கட்டை தயாரிப்பர் .. அதன் வடிவம் வித்தியாசமானதாக இருக்கும் .. அன்றைய நிவேதனங்கள் எதிலும் உப்பு போடமாட்டார்கள் .. அனைத்தும் தயாரானதும் ஒளவையார் அன்னையை நினைத்து விளக்கேற்றி பூஜைகள் செய்வார்கள் .. 

ஒளவையார் அம்மன் கதையினை ஒருவர் சொல்ல மற்றவர்கள் பக்தியோடு கேட்பர் .. இறுதியாக விரத நிவேதனங்கள் அனைத்தையும் அந்த பெண்களே உண்பர் ..
பூஜைமுடிந்த உடனே வழிபாடு நடந்த இடத்தை தூய்மைபடுத்திவிடுவார்கள் .. இந்த விரதம் ஒவ்வொரு ஆடிச்செவ்வாய் கிழமைகளில் ஒவ்வொரு வீட்டிலும் நடத்துவர் .. இப்படி விரதம் அனுஷ்டித்தால் குடும்ப ஒற்றுமை நிலைக்கும் என்பது ஐதீகம் ..

அம்மனைப் போற்றுவோம் ! அன்னையின் அருட்கடாக்ஷ்த்தையும் பெற்றிடுவோமாக ! .. ஓம் சக்தி ஓம் ! 
வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF GODDESS SHAKTHI 'MAA' .. MAY MAY SHE BLESS YOU WITH PEACE AND PROSPERITY .. " JAI MATA DI " ..

PANVEL BALGAN PATHAM POTRI....SWAMIYE SARANAM IYYAPPA....


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையாகிய இன்று மஹாவிஷ்ணுவுக்கு உகந்த 
‘ சயன ஏகாதசி ‘ விரதமும் வருவதால் ஆலயம் சென்று மஹாவிஷ்ணுவைத் தரிசிப்பது சாலச் சிறந்தது .. இன்றைய நாள் தங்களனைவருக்கும் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாகவும் .. அனைத்து காரியங்களும் எவ்வித தடங்களுமின்றி வெற்றி பெறவும் பெருமாளைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் நமோ நாராயணாய வித்மஹே !
வாசுதேவாய தீமஹி !
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! 

இன்றைய ஏகாதசி விரதத்தை “ தேவசயனி’ .. அல்லது ”விஷ்ணு சயனி” .. என்பர் .. இன்றைய நாள் பகவான் விஷ்ணுவும் மற்றும் அனைத்து தேவர்களும் சயனிக்கும் நாள் 
நித்திரையில் ஆழ்ந்து போகும் தினமாகும் .. இந்நாளுக்குப் பிறகு தேவாப்தானி ஏகாதசி (ஹரிபோதினி) (பிரபோதினி) (தேவோத்தான்) (உத்தான ஏகாதசி) கார்த்திகை (அக்டோபர்- நவம்பர்) மாதத்தில் வரும் ஏகாதசி வரை எந்தவிதமான சுபச்சடங்குகளையும் செய்யக்கூடாது என்று கூறுவர் .. 

சூரியபகவான் தன் தென்திசை கோள்சார பிரயாணத்தை (தட்சிணாயனம்) தொடங்குவதாலும் .. தேவர்கள் அனைவரும் நித்திரையில் ஆழ்ந்திருப்பதாலும் அவர்களை வேள்வியின் ஆகுதிகளை ஏற்றுக்கொள்ள அழைக்க இயலாது .. 

இன்றைய ஏகாதசி நன்னாளில் உபவாசமிருந்து விரதத்தைக் கடைப்பிடிப்போரின் பாவங்கள் அனைத்தும் நீங்கப்பெறுவதோடு அல்லாமல் அவரது அபிலாஷைகளும் பூர்த்தி அடையப்பெறுவர் .. 

நாம் நம்முடைய பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்கு மற்றவர்களுக்கு வார்த்தைகளாலோ .. செயல்களினாலோ துன்பம் விளைவிக்கக் கூடாது .. 
மஹாவிஷ்ணுவைப் போற்றுவோம் ! அவரது அருட்கடாக்ஷ்த்தைப் பெற்றிடுவோம் ! 
ஓம் நமோ பகவதே ! வாசுதேவாய நமோ நமஹ ! 
வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED 
" DEVSHAYANI EKADASHI " .. MAY LORD VISHNU REMOVE ALL THE OBSTACLES THAT STAND IN YOUR SPIRITUAL AND EARTHLY LIFE .. 
" OM NAMO NAARAAYANAA " .. 

ACCORDING TO HINDU MYTHOLOGY .. IT IS BELIEVED THAT 
LORD VISHNU FALLS ASLEEP ON THIS DAY OF ' DEVSHAYANI EKADASHI' .. IN KSHEERA SAGAR ( OCEAN OF MILK ) .. VISHNU AWAKENS FROM HIS SLEEP AFTER A PERIOD OF FOUR MONTHS ON THE DAY OF PRABHODINI EKADASHI .. HIS SLEEPING PERIOD IS KNOWN AS CHATURMAS ( 4 MONTHS ) .. 

OBSERVE THE DAY OF DEVSHAYANI EKADASHI AND LEAD A CHARMING LIFE IN THE NEAR FUTURE .. PURIFY YOUR HEART NOT WITH WATER OR ELIXIR .. BUT WITH DEVOTE HEART FULL OF DEDICATION TOWARDS LORD VISHNU .. 
" JAI NAARAAYANAA " ..

PANVEL BALAGANE SARANAM IYYAPPA...GURUVE SARANAMஅனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று சூரியனின் தாக்கம் பூமியின்மீது அதிகமாக உள்ள நாளாகும் .. தங்கள் அனைவருக்கும் மனநலமும் .. உடல்நலமும் ஆரோக்கியமாகத் திகழ்ந்திடவும் .. இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாக அமைந்திடவும் சூரியபகவானைப் பிரார்த்திக்கின்றேன் .. ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே ! பாஸஹஸ்தாய தீமஹி ! தந்நோ ஆதித்ய ப்ரசோதயாத் !! உலகத்தின் உயிராகச் சூரியதேவன் விளங்குகிறார் .. வேதகாலம் முதலே சூரியனைப்பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன .. ரிக்வேதம் - சூரியனை மூன்றுவித அக்னியில் ஒன்றாக விவரிக்கிறது .. யஜுர்வேதம் - சகல உலகங்களையும் ஒளிபெறச் செய்பவர் என்று போற்றுகிறது .. அதர்வணவேதம் - சூரியனை வழிபட்டவர்கள் இதய நோயிலிருந்து விடுபடுவர் என்று வழிகாட்டுகிறது .. மிகப்பழங்காலத்தில் புராணங்களில் சூரியனுடைய ரூபலட்சணம் பலவிதங்களில் வர்ணிக்கப்படுகிறது .. சிவ ஆகமங்களில் சூரிய மண்டலத்தின் நடுவே சிவபெருமான் உறைந்திருப்பதாக கூறுகின்றன ..அதனால்தான் சிவனுக்கு “ சிவசூரியன் ” என்றொரு திருநாமம் உண்டு .. சூரியன் சிவனின் அச்டமூர்த்தங்களில் ஒருவராகவும் .. வலது கண்ணாகவும் இருக்கிறார் .. சூரியனின் ஆதித்யஹ்ருதய ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்வோர் நல் ஆரோக்கியமும் .. தீர்க்க ஆயுளும் பெறுவர் .. சூரியனைப் போற்றுவோம் ! அவரது திருவருளும் .. அருட்கடாக்ஷ்மும் பெற்று நலமே வாழ்வோமாக ! “ ஓம் சூர்யாய நமஹ “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SURYA .. MAY HE SHOWER YOU WITH BEST HEALTH .. HAPPINESS AND PROSPERITY .. " JAI SURYA DEV " ..

SWAMIYEE SARANAM IYYAPPA....அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமையாகிய இன்று அம்பாளைத் துதித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாக அமைந்திடவும் .. நிறைந்த செல்வம் இல்லம்தேடிவரவும் பிரார்த்திக்கின்றேன் .. ஓம் ஸர்வஸம் மோஹின்யை வித்மஹே ! விஷ்வ ஜனன்யை தீமஹி ! தந்நஸ் சக்தி ப்ரசோதயாத் !! சூறைக்காற்றோடு அம்மனின் அருட்காற்றும் அரவணைக்கும் மாதம் ஆடிமாதமாகும் .. பக்தர்கள் நீக்கமற நிறைந்திருக்கும் மகாசக்தியை வேப்பிலை முதல் .. விக்கிரகங்கள் வரை எல்லாவற்றினுள்ளும் கண்டு வணங்குகிறார்கள் .. பெண்ணின் தாய்மைப் பரிவாகவும் .. வீறுகொண்டெழும் காளி ப்ரவாகமாகவும் .. பாம்பின் புற்றினூடேயும் .. சிலுசிலுக்கும் பச்சை மரங்களினூடேயும் .. நட்டுவைத்த கல்லுக்குள்ளும் அம்பாள் பரிமளிக்கிறாள் .. அன்னையைப் போற்றுவோம் சகலவளங்களும் .. நலங்களும் .. பெற்றிடுவோமாக ! ஓம் சக்தி ஓம் ! வாழ்க வளமுடனும் .. நல்முடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A DEVOTIONAL FRIDAY .. MAY " MAA " ILLUMINATE YOUR LIFE WITH COUNTLESS BLESSINGS OF HAPPINESS .. AND GOOD FORTUNE .. " JAI MATA DI " ..

ANDHRAPRADESH AMALAPURAM VASAVI TEMPLE DECORATED BY 1001 CRORE(ZOOM AND SEE THE FOLDED,CURVED NOTES AND ALSO SEE THE NOTE BUNDLES ON THEROOF).....pICTURE SENT BY SHRI PANCHAPAKESAN





swamiyee Saranam Iyyappa.....அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வியாழக்கிழமையாகிய இன்று நம் அனைவராலும் போற்றி வணங்கப்படும் குருநாதர் “ ஷீரடி பாபாவிற்கும் “ உகந்த நாளாகும் .. அவரது அருட்கடாக்ஷ்ம் அனைவரும் பெற்று .. இன்புற்று வாழ்ந்த்திட வாழ்த்துகிறேன் .. வணங்குகின்றேன் .. ஓம் ஸாயி ! ஸ்ரீஸாயி ! ஜெய ! ஜெய ஸாயி ! ஸர்வம் ஸாயி மயம் ! ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் நமோ பகவதே ! ஸர்வலோக ஹிதங்கராய ஸர்வதுக்கவாரகாய ! ஸர்வாபீஷ்ட பலப்ரதாய ஸ்ரீஸாயிநாதாய நமஹ ! பொருள் - மும்மூர்த்திகளும் ஓருருவாய் .. ஷீரடி சாயியாய் அவதரித்தவரே ! நமஸ்காரம் ! .. இந்த உலகத்தை காப்பவரே ! உமக்கு நமஸ்காரம் ! பக்தர்களின் அனைத்து கஷ்டங்களுக்கும் நிவாரணமாய் இருப்பவரே ! நமஸ்காரம் ! பக்தர்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுபவரே ! சாய்நாதரே ! தங்களுக்கு மீண்டும் .. மீண்டும் .. நமஸ்காரம் ! இத்துதியை வியாழக்கிழமைகளில் பாராயணம் செய்து குடும்பத்தில் மகிழ்ச்சியும் .. மன அமைதியும் பெறுவீர்களாக .. “ ஓம் சாய் ராம் “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF SHIRDI SAI .. MAY THE BLESSINGS OF SHIRDI SAI SHOWER ON YOU ALL FOREVER AND MORE .. " OM SAI RAM " ..















SWAMIYE SARANAM IYYAPPA

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று ‘சஷ்டி’ விரதமும் வருவதால் முருகன் ஆலயம் சென்று முருகனைத் தரிசிப்பது சாலச்சிறந்தது .. இன்றைய நாள் தங்களனைவருக்கும் மனதில் நிம்மதியும் .. சாந்தியும் நிலவிட கந்தப்பெருமானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹேஷ்வர புத்ராய தீமஹி !
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத் !! 

” மனதில் எழும் அசுர எண்ணங்களை அழித்து .. அகப்பை எனும் நல் உள்ளத்தில் நல்ல எண்ணங்களும் .. பக்தி எனும் பாதையால் எழுந்த அமைதியையும் அளிப்பான் கந்தனே “ ..

கந்தனைப் போற்றுவோம் ! அறியாமை எனும் அஞ்ஞான இருளை அகற்றி .. மெய்ஞானமாகிய மிளிர்கின்ற பரம்பொருளின் திருவருளையும் .. அருட்கடாக்ஷ்த்தையும் பெற்றிடுவோமாக ! சரணம் ! சரணம் ! ஷண்முகா சரணம் ! 
வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED WEDNESDAY WITH THE BLESSINGS OF LORD MURUGA .. 
MAY HAPPINESS AND PEACE SURROUND YOU WITH HIS ETERNAL BLISS .. " OM MURUGA " ..

Mahanandi Temple Mahanandi Village in Kurnoo,Andhrapradeshl, is situated to the east of Nallamala Hills. The nine nandis called as 'Navanandis' can be seen from the village. nine temples are Mahanandi, Shivanandi, Vinayakanandi, Somanandi, Prathamanandi, Garudanandi, Suryanandi, Krishnanandi (also called Vishnunandi) and Naganandi. The Mahanandiswara Swamy Temple is the prime attraction of the village, belonging to the Chalukyan period. It is devoted to Lord Mahanandiswara, one of the forms of Lord Shiva.



சுவாமியே சரணம் ஐயப்பா!! பன்வேல் பாலகன் நாமம் போற்றி!! குருவின் பாதார விந்தங்கள் போற்றி! போற்றி!! Swamiye Saranam Iyyappa!Panvel balagane saranam Iyyappa!! Guruve Saranam! Saranam




அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. முதலாம் ஆடிச்செவ்வாயாகிய இன்று அன்னைக்கு உகந்த நாளாகும் .. அன்னையைத் துதித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் இனிமையான நன்னாளாக அமைந்திடவும் 
உடல் நலமும் .. மனநலமும் ஆரோக்கியத்துடன் திகழவும் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் ஸர்வஸம் மோஹின்யை வித்மஹே !
விஷ்வ ஜனன்யை தீமஹி !

தந்நஸ் சக்தி ப்ரசோதயாத் !! 

“ ஆடிச்செவ்வாய் தேடிக்குளி “ என்ற பழமொழி ஒன்றே இவ்விரதத்தின் சிறப்பை உணர்த்துவதாக உள்ளது .. காரணம் செவ்வாய்க்கிரகம் சனிக்கிரகம்போல் ஒரு ஜாதகருக்கு பெரும் தோஷத்தை (கஷ்டத்தை) ஏற்படுத்தக் கூடியது செவ்வாய் .. சனி போன்ற பாவக்கிரகங்கள் கோசாரமாக சஞ்சாரம் செய்யும்போது அதன் கதிர் வீச்சுக்கள் எம்மைத் தாக்கும் .. தீவிரமாக வரும் கதிர்களை நல்லெண்ணெயில் ஊறிய எமது உடம்பு தாக்கவிடாது தடை செய்கின்றது .. தீய கதிர்கள் எம் உடலில் தாக்கத்தினை ஏற்படுத்தாது தடுக்கவே இந்த எண்ணை முழுக்கு என யூகிக்க முடிகின்றது .. 

ஆடிச்செவ்வாய்க் கிழமைகளில் பெண்கள் எண்ணெய் வைத்து மஞ்சள்பூசித் தோய்ந்து விரதம் அனுஷ்டித்து அம்மனை வழிபட்டு வந்தால் மாங்கல்யபலம் கூடும் .. தோஷங்கள் நிவர்த்தியாகும் .. எல்லாத் தடைகளும் நீங்கும் என்பது ஐதீகம் ..

அம்மனைப் போற்றுவோம் ! சகல தடைகளையும் வெல்வோம்! ஓம் சக்தி ஓம் ! வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. MAY 'MAA SHAKTHI' EMPOWER YOU AND YOUR FAMILY WITH BEST HEALTH .. WEALTH AND PROSPERITY .. " JAI MATA DI
" ..

SWAMIYEE SARANAM IYYAPPA

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையாகிய இன்று சிவபெருமானுக்கு உகந்த சோமவார விரதமும் .. சதுர்த்தி திதி மதியம்வரை இருப்பதால் 
காலைவேளையில் ஆலயம் சென்று சிவனையும் கணபதியையும் தரிசிப்பது அதிவிசேஷமாகும் .. இன்றையநாள் தங்களனைவருக்கும் ஒரு சுபீட்சமிக்க நன்நாளாகவும் .. செய்யும் அனைத்துக் காரியங்களும் எவ்வித தடங்களுமின்றி வெற்றி பெறவும் சிவபெருமானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ர ப்ரசோதயாத் !! 

” நமசிவாய “ என்னும் ஐந்தெழுத்து மந்திரம் சிவனின் மூலமந்திரம் .. சிவம் என்றால் மங்களம் என்று பொருள் .. தீட்சை (தீக்‌ஷை) பெற்றிருந்தாலும் ..பெறாவிடினும் 
‘நமசிவாய’ என தாயைக் கூவியழைக்கும் சேய்போல் அழைக்க
யாவருக்கும் உரிமை உண்டு .. 

கடல் தன்மயமாய் இருந்துகொண்டு அதில்வந்து சேரும் நீரையெல்லாம் தன்மயமாக்குவதுபோல் சிவனும் தம்மைக் கூவியழைப்பவர்களையெல்லாம் சிவமயமாக்குகிறார் .. சிவத்தை அணைத்துக்கொண்டால் யமனும் நமை வணங்குவான் .. 

சிவனைப் போற்றுவோம் ! அனைத்திலும் வெற்றி காண்போமாக! வெற்றி நிச்சயம் ! .. “ ஓம் நமசிவாய “ 
வாழ்க வளமுடனும் .. நலமுடனும் ..

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED AND A SUCCESSFUL MONDAY .. MAY LORD SHIVA'S DIVINE BLESSINGS BRING YOU ETERNAL SUCCESS IN YOUR CAREER TODAY AND FOREVER MORE .. " OM NAMASHIVAAYA "

சோ" #எழுதிய_எங்கே_பிராமணன்? தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு சுவையான கேள்வி-பதில் உரையாடல்: மிக அற்புதம்!!!!




கேள்வி : திவசம், திதி என்றெல்லாம் சொல்கிறார்களே அது எதற்காக? போகிறவர்கள் என்றைக்கோ போய்ச் சேர்ந்தாகி விட்டது. அவர்களுக்கு வருடா வருடம் இந்த மாதிரி ஒரு சடங்கு தேவையா? இங்கே கொடுக்கிற எள், தண்ணீர், பிண்டம் போன்றவை அங்கே அவர்களுக்குப் போய்ச் சேர்ந்து விடுமா? அவர்கள் இருக்கிற இடம்தான் உங்களுக்குத் தெரியுமா? இப்போது நீங்கள் சொல்கிற மந்திரத்தின் மூலமாக, அவர்களுக்கோ அல்லது உங்களுக்கோ என்ன நன்மை விளையப் போகிறது? இந்தச் சடங்கு எதற்காக? பகுத்தறிவுக்கு இது சற்றும் ஒவ்வாதது என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?
சோ : நீங்கள் பகுத்தறிவு என்று பேசுவதால் முதலில் அந்த விஷயத்தைப் பார்ப்போம். இப்போது ஒரு தலைவரின் சமாதி என்று ஒன்றை நிறுவி, அங்கே போய் வருடா வருடம் மலர் வளையம் வைக்கிறார்கள். ஏன்? அந்தத் தலைவரும் என்றைக்கோ போய்ச் சேர்ந்து விட்டவர்தானே? இங்கே இவர்கள் வைக்கிற மலர் வளையம், அங்கே அவருக்குப் போய்ச் சேர்ந்து விடுமா? அல்லது அந்த மலரின் வாசனை அவருக்குப் போய் விடுமா? அவர் எங்கே இருக்கிறார் என்பதும் தெரியாது. அதை மட்டும் ஏன் செய்கிறார்கள்? அதுவும் அவர் என்று இறந்தாரோ, அந்தத் தேதியில் போய்ச் செய்வானேன்? மற்ற தினங்களில் செய்தால், அந்த மலர் வளையம் அவருக்கு ஏற்புடையதாகாதா? அவர் இறந்த தினத்தன்று இந்த மரியாதையை ஒரு அரசியல்வாதி செய்யவில்லை என்றால், உடனே அவரைப் பற்றி பல விமர்சனங்கள் வருகின்றன. ‘இறந்த தலைவர் மீது இவருக்கு மரியாதை இல்லை’ என்ற பேச்சு வருகிறது. சரி, இப்படி மலர் வளையம் வைப்பதால் ஒருவேளை ஓட்டு வருமோ, என்னவோ தெரியாது.
ஆனால், நீங்கள் குறிப்பிட்ட திவசம், திதி இதைச் செய்வதால் புண்ணியம் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இறந்தவர்களுக்கு நாம் சிராத்தம் செய்கிறபோது, அது அவர்களுடைய பிரேதத்திற்காகச் செய்யப்படுகிற காரியம் அல்ல. அவர்கள் மூன்று உருவில் இருக்கிறார்கள். ஒன்று – ஆதித்ய ரூபம்; இரண்டாவது – ருத்ர ரூபம்; மூன்றாவது – வஸு ரூபம். அந்த ரூபத்தில் அவர்களுக்கு நாம் செய்கிற மரியாதை இங்கே செய்யப்படுகிற சிராத்தம். சிரத்தையோடு செய்யப்படுவதே சிராத்தம். இதில் முக்கியமானதே சிரத்தைதான். இந்த சிராத்தத்தைத்தான் திவசம், திதி என்றெல்லாம் சொல்கிறோம்.
இது ஒரு பண்டிகை அல்ல. இதை மிகவும் விமரிசையாகச் செய்யக் கூடாது. ‘ச்ராத்தம் ந விஸ்தாரயேத் தீமான்…’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது அறிவுடையோன் சிராத்தத்தை விமரிசையாகச் செய்ய மாட்டான். ஏனென்றால், இது ஒரு பொதுக்காரியம் அல்ல. சிராத்தத்தைச் செய்கிறவன் தனது முன்னோர்களுக்காகச் செய்கிற காரியம் இது. அதில் பெரிய விருந்து, படாடோபம் எல்லாம் கூடாது.
இறந்த முன்னோர்கள் எங்கே இருக்கிறார்கள்? நம்மால் பார்க்க முடியாதுதான். ஆனால், இன்று விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள்? வானுலகில் சில இடங்களில் ஜீவ ராசிகள் இருக்கலாம் என்று சொல்கிறார்கள். நிச்சயமாக அங்கு ஜீவராசிகள் கிடையாது என்று அவர்கள் சொல்லவில்லை. அந்த ஜீவராசிகளின் சக்தி என்ன, அவர்களுடைய அறிவு என்ன – என்பதெல்லாம் இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை என்றும் சொல்கிறார்கள். இந்த ஆராய்ச்சிகள் இப்படியே தொடர்ந்து, ஒரு கட்டத்தில், ‘மேலுலகில் ஜீவராசிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்; அவர்களுக்கெல்லாம் நல்ல அறிவு இருக்கிறது.
அவர்கள் நம்மை விட மிகவும் நுட்பமான அறிவு கொண்டவர்கள், திறன் கொண்டவர்கள்’ என்றெல்லாம் விஞ்ஞானிகள் கூறினால், நாம் என்ன சொல்வோம்? ‘ஏதோ விஞ்ஞானிகள் சொல்கிறார்கள், நமக்கு என்ன தெரியும்? நமக்கும் விஞ்ஞானத்திற்கும் சம்பந்தம் இல்லை’ என்றா சொல்வோம்? அப்படிச் சொல்ல மாட்டோம். விஞ்ஞானிகள் சொல்லி விட்டால் சரி என்று ஏற்று விடுவோம். அவர்கள் சொல்வதே அதற்கு நிரூபணம் ஆகி விடும். அதற்குப் பிறகு பல ஆண்டுகள் கழித்து வேறு விஞ்ஞானிகள், இவர்களிடமிருந்து மாறுபட்டால், அதையும் நாம் ஏற்றுக் கொள்வோம். அதாவது அங்கே நம்முடைய சுய அறிவு என்பதற்கு வேலையே கிடையாது. என்ன சொல்லப்படுகிறதோ, அதை கண்மூடித்தனமாக ஏற்று விடுவோம். ஏனென்றால், அப்போதுதான் நமக்கு எல்லாம் புரிந்து விட்ட மாதிரி காண்பித்துக் கொள்ள முடியும். ஆனால், இப்பொழுது நம்பிக்கை ரீதியாக சிராத்தம் என்று சொன்னால், ‘யாருக்கு? எங்கே இருக்கிறான்?’ என்றெல்லாம் கேட்கிறோம்.
பித்ருக்கள் – அதாவது – மறைந்த முன்னோர்கள் ஆதித்யர்கள், ருத்ரர்கள், வஸுக்கள் ஆகிய மூன்று உருவில் இருக்கிறார்கள் என்று சொன்னோம். எட்டு வஸுக்கள், பதினோரு ருத்ரர்கள், பன்னிரெண்டு ஆதித்யர்கள் இன்னும் சிலர் பித்ரு தேவர்கள் என்று கூறப்படுகிறார்கள். இவர்களுடைய ஆதரவில்தான் நமது முன்னோர்கள், தங்களுடைய கர்மம் முடிகிற வரை, பித்ரு லோகத்தில் தங்குகிறார்கள். கர்மம் முடிந்த பின்பு, அவர்களுடைய அடுத்த பிறவி வரும். அதுவரை பித்ரு லோகத்தில் இருக்கிற அவர்களுக்கு நாம் சிராத்தம் செய்கிறோம்.ஒரு புண்ணிய தீர்த்தத்தில் சென்று சிராத்தம் செய்தால், அது தீர்த்த சிராத்தம். கங்கையில் செய்தால், அது கயா சிராத்தம். இப்படி பல சிராத்தங்கள் கூறப்பட்டுள்ளன.பித்ரு தேவர்களையும், பித்ருக்களையும் வணங்கி நாம் செய்கிற சிராத்தம், ஹிந்து மதச் சடங்குகளில் மிகவும் புனிதமானவற்றில் ஒன்று.

GURUVIN KATTUNERA