” சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச்
செஞ்சுடர்வேல் வேந்தனைச் செந்தமிழ் நூல்
விரித்தோனை விளங்கு வள்ளிகாந்தனைக்
கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனை
சாந்துணையும் மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய்க்கிழமையாகிய
இன்று செவ்வாய்க்கே அதிபதியாகிய முருகப்பெருமானைத் துதித்து தன்னிகரில்லாத
புகழும் .. பொங்கிவரும் நல் உள்ளங்களில் தன்னம்பிக்கையையும் தந்தருளுமாறு
பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹேஷ்வரபுத்ராய தீமஹி !
தந்நோ சுப்ரமண்யஹ் ப்ரசோதயாத் !!
குமரன் முருகனே மலைகளின் மீது ஆட்சி செய்பவன் ..
தெய்வங்களின் உயர்ந்தவராகத் திகழ்வதால் அவரைத் தெய்வசிகாமணி என்று போற்றுவர் .. கந்தனைக் கரம்குவித்து வணங்குவோருக்கு கலியின் கொடுமையும் காலபயமும் கிடையாது என்று வடமொழி ஸ்காந்தம் குறிப்பிடுகிறது ..
மலையேறிவந்து தன்னை தரிசிப்பவர்களுக்கு வாழ்வில் உச்சியை அடைந்து எப்போதும் மகிழ்ச்சியடைவார்கள் என்பதை எடுத்துக்காட்டுவதற்காகவே குன்றிருக்கும் இடமெல்லாம் கோயில் கொண்டுள்ளார் .. செவ்வாயன்று முருகனை வணங்கினால் கவலைகள் அகலும் .. செந்நிற ஆடை அணிந்து வழிபாட்டில் பங்கேற்பது சிறப்பு .. பொருளாதார நிறைவையும் வழங்குவது அங்காரகன்தான் .. அந்த அங்காரகனுக்குரிய தெய்வமாக விளங்குவது முருகப்பெருமானே !
செவ்வாய் என்பது சிவந்தவாய் என்பதின் சுருக்கம் .. இந்த கிரகத்தின் நிறம் சிவப்பு .. அதனால் அந்தக்காலத்தில் ரிஷிகள் இந்த பெயரை வைத்தார்கள் .. நிலம் சம்மந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபடும் பொழுது செவ்வாய்கிரகம் மற்றும் அதனை சம்மந்தப்பட்ட தெய்வங்களுக்கும் பூஜை செய்யவேண்டும் .. முருகனை வணங்குவதால் நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் வரும் பிரச்சினைகளை சீர்செய்யலாம் ..
முருகனுக்குத்தான் எத்தனை ரூபங்கள் ..
சிறுகுழந்தைகளுக்கு அவன் - குமரனாகவும் ..
இளைஞர்களுக்கு அவன் - சிங்காரவேலனாகவும் ..
கலைஞர்களுக்கு அவன் - ஸ்கந்தனாகவும் ..
வீரர்களுக்கு அவன் - வேலாயுதனாகவும் ..
இல்லறத்தார்க்கு - வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்ரமண்யனாகவும் ..
உபதேசம் வேண்டுவோருக்கு - சுவாமிநாதனாகவும் ..
துறவிகளுக்கு அவன் - பழநி ஆண்டவனாகவும் ..
மேலும் பலரூபங்களில் நமக்கு வழித்துணையாகவும் வருவான் திருத்தணி முருகன் ..
வள்ளலான முருகப்பெருமானைப் போற்றுவோம் ! அனைத்து நலன்களையும் பெற்றிடுவோமாக !
“ ஓம் சரவணபவாய நமஹ “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..