SWAMY SARANAM...GURUVE SARANAM SARANAM...


On the auspicious day of Ganesh Chaturthi we offer our humble obeisance to Lord Ganesha by remembering an anecdote dear to Sri Ramana Maharshi. A poor man who was a devotee of Lord Ganesha was traveling. At the time of his regular worship he created an icon of Lord Ganesha using all the Jaggery he had. When the time of offering Prasad came he realized he had nothing to offer as prasad. So he made the mistake of breaking a piece of Lord Ganesha as an offering to Him. This simple but powerful story teaches that Lord Ganesha owns everything including our own dear Self. By becoming His devotees we will learn all the intricacies of scriptures and become fully illumined. Jai Ganesha Jai Gashea Pahimam. Sri Ganesh Sri Ganesh Rakshamam.
Image may contain: flower and plant Image may contain: one or more people, people standing, plant, flower and outdoor Image may contain: indoor

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED & A HAPPY GANESH CHATHURTHI & MAY THE BLESSINGS OF LORD GANAPTHY BRING YOU PROSPERITY & HAPPINESS & SHOWER YOU WITH POWER & WISDOM TOO .. " JAI SHREE GANESHAAYA NAMAHA "SWAMY SARANAM GURUVE SARANAM



” அல்லல்போம் வல்வினைபோம் ! அன்னை வயிற்றிற் பிறந்த தொல்லைபோம் ! போகாத் துயரம்போம் ! நல்ல குணமதிக மாமருணைக் கோபுரத்துள் மேவும் கணபதியைக் கைதொழுதக்கால் “ 
(விவேக சிந்தாமணி)
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளும் உரித்தாகுக .. வேண்டுவன யாவையும் வேண்டியபடியே நல்கும் கருணைப் பெருங்கடலான கணபதியைத் துதித்து தங்களனைவரது துயர்களைந்து வாழ்வில் என்றும் மகிழ்ச்சியும் .. வசந்தமும் நிலைத்திட எல்லாம் வல்ல விக்னவிநாயகரைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
வக்ரதுண்டாய தீமஹி ! 
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !!
ஆவணிமாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி திதியை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம் .. அன்றைய தினம் விநாயகப்பெருமானை முழுமனதோடு பூஜித்து விரதமிருந்து அருகில் உள்ள ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு வந்தால் நமக்கு அனைத்துவிதமான நன்மைகளும் கிடைக்கும் என்பது உறுதி ..
கடவுளில் முதன்மையானவர் விநாயகர் .. அதுபோல விரதங்களில் முதன்மையானது விநாயகர் சதுர்த்தி விரதமாகும் .. விநாயகரை ஆதிகாலம் முதலே வணங்கிவந்தாலும் அதனை மக்கள் அனைவரும் கொண்டாடும் வகையில் பிரபலப்படுத்தியவர் பாலகங்காதர திலகர் .. 1893ம் ஆண்டிலிருந்து விநாயகர் சதுர்த்தி என்ற விழா எடுத்து விமர்சையாக கொண்டாட வழிவகுத்தார் .. அவரது விருப்பப்படி முதன்முதலாக பூனாவில் உள்ள விநாயகர் கோவிலில்தான் விமர்சையாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது ..
” அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கல்லால் பிறவாழி நீந்தல் அரிது “ என்கிறார் வள்ளுவர் .. 
ஆழி என்றால் கடல் .. இங்கு பிறவாழி என்று குறிப்பிட்டுள்ளது .. அன்பு .. ஆசை .. பாசம் நோய் போன்றவை .. 
ஒருவரிடம் அளவுகடந்த அன்பு செலுத்துகிறோம் என்றால் அது அன்புக்கடல் .. 
அந்த அன்புமிகுதியாகும்பொழுது வருவது ஆசை ..
அதுமிகுதியாகும்போது ஆசைக்கடல் ..
அதுவும் மிகுதியாகும்போது பாசக்கடல் .. 
அந்தபாசம் மிகுதியாகும்பொழுது வருவது நோய்க்கடல் .. 
இத்தகைய பிற ஆழிகளைக் கடக்கவேண்டுமென்றால் அறவாழி அந்தணனிடம் சரணாகதி அடைவதுதான் வழி .. அப்படியென்றால் யார் அவன் ..?
தர்மசிந்தனையிலே கடலைப் போன்றவன் .. அண்டசராசரங்களை படைக்கின்ற இறைவன் மற்றும் அனைத்து தெய்வங்களும் சக்திவாய்ந்தவைதான் .. அதேசமயம் முதலில் பிள்ளையார்சுழி போட்டுத்தான் எந்தவொரு காரியத்திலும் ஈடுபடுவது மரபு .. அனைத்து தெய்வங்களின் சக்திகளும் ஒன்றுசேர்ந்த அம்சமாக விளங்குகின்றவர் விநாயகர் .. ஆரைச் சரணடைந்தால் பிறவிப் பெருங்கடலைக் கடந்துவிடலாம் ..
“ இன்றுபோய் நாளைவா “ என்று சனியை எழுதவைத்துத் தந்திரத்தைக் கையாண்ட தலைவனைப் போற்றுகிறோம் ! ஏழரைச்சனியோடு எச்சனியும் விலகி எங்கள் வாழ்வில் நலம்காண வரம் தருவாய் கற்பகமே “ 
” ஓம் கம் கணபதயே நமஹ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்
No automatic alt text available.

SWAMY SARANAM.....GURUVE SARANAM....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A SUCCESSFUL MONDAY & A DIVINE " AMAA SOMVAAR " TOO .. MAY LORD SHIVA BLESS YOU & GUIDE YOU & SHOWER YOU WITH PROSPERITY & HAPPINESS .. " OM NAMASHIVAAYA " JAI BHOLE NATH .


" கருவான உயிருக்குப் பொருளான தெய்வம் ! 
சொல்லுக்குள் அடங்காத சிவமெனும் தெய்வம் ! 
சொல்லிவிடும் போதில் சிறப்பீயும் தெய்வம் ! 
அடியாரைக் காக்கும் அன்புமிகு தெய்வம் “ 
- ஓம் சிவாய நமஹ -
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையாகிய இன்று அமாவாசைத் திதியும் சோமவார விரதமும் கூடிவருவது சிறப்பு .. ”அமாசோமவாரம்” எனப்படும் இன்றையநாளில் தங்களனைவரது வாழ்விலும் வசந்தம் வீசி .. வளமான வாழ்வு அமைந்திடவும் .. எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றிபெறவும் எல்லாம் வல்ல ஈஸ்வரனைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!
திங்கட்கிழமையும் (சோமவாரம்) அமாவாசையும் சேர்ந்துவரும் தினங்களில் விரதமிருந்து அரசமரத்தை பிரதட்சிணம் செய்வது கிடைத்ததற்கரிய பலன்களைத் தரும் .. இதுவே அமாசோமவார விரதம் என்று சிறப்பிக்கப்படுகிறது ..
இந்நாளில் அரசமரத்தைப் பிரதட்சணம் செய்து .. பின் சிவாலயதரிசனம் செய்வதும் .. அஸ்வத்த நாராயணபூஜை செய்வதும் மிகவிசேஷமாகக் கருதப்படுகிறது ..
அரசமரம் இருக்கும் இடத்தில் மும்மூர்த்திகளும் வாசம் செய்வதாகவும் .. இம்மரம் மஹாவிஷ்ணுவின் வலதுகண்ணிலிருந்து தோன்றியதாகவும் புராணங்கள் இயம்புகின்றன ..
மும்மூர்த்தி வடிவம் கொண்ட அரசமரத்தின் அடிப்பக்கம் - பிரம்மா 
நடுமரம் - விஷ்ணு 
கிளைகள் கொண்ட மேற்பாகம் - சிவன் என்பர் .. 
அரசமரத்திற்கு “ அஸ்வத்தா “ என்ற பெயரும் உண்டு .. 
அஸ்வத்தா என்றால் வழிபடுபவர்களின் பாவத்தை மறுநாளே தீர்ப்பது என்று பொருள் சொல்லப்படுகிறது .. இந்த நன்னாளில் அரசமரத்தை 108 பிரதக்ஷிணம் செய்யவேண்டும் ..
அரசமரத்தை எக்காரணம் கொண்டும் வெட்டுவது .. அதன் கிளைகளை ஒடிப்பது போன்ற தகாத செயல்களைச் செய்தால் வறுமை .. துர்மரணம் .. எடுத்தக்காரியங்களில் தடை போன்றவை ஏற்படும் .. என்று தர்மசாஸ்திரங்கள் கூறுகிறது ..
“ ஆயுர்விருத்தி பகவத் தஸ்யவர்த்தந தேஸர்வ ஸம்பத் “ என்று பத்மபுராணம் சொல்கிறது ..
அரசமரத்தைப் பார்த்ததும் வணங்கியவருக்கு ஆயுள் வளரும் .. 
கோவில்களில் உள்ள அரசமரத்திற்கு இன்னும் அதிகமான சக்தி உண்டு .. இந்த அரசமரத்தடியில் விநாயகப்பெருமான் எழுந்தருளியிருப்பார் .. அத்துடன் நாகர்சிலைகளும் அங்கு இருக்கும் .. இதனால் இது தோஷநிவர்த்தி மரமாகவும் கருதப்படுகிறது ..
அரசமரத்தை காலை 7 மணிக்கு முன் வலம்வருவது சிறப்பிக்கப்படுகிறது .. சனிக்கிழமை தவிர மற்றநாட்களில் மரத்தைத் தொடக்கூடாது .. சனிக்கிழமையன்று அரசமரத்தடியில் ஸ்ரீலக்ஷ்மி வாசம் செய்வதாக ஐதீகம் ..
அரசமரத்தைச் சுற்றும்போது கீழ்கண்ட ஸ்லோகத்தைச் சொல்லிக்கொண்டே வலம்வந்தால் கூடுதல் பலன்கிட்டும் ..
“ மூலதோ ப்ரஹ்மரூபாய !
மத்யதோ விஷ்ணு ரூபிணே ! 
அக்ரத் சிவரூபாய !
வ்ருக்ஷ் ராஜாயதே நமஹ “
அமாசோமவிரதத்தன்று அரசமரத்தைப் பூஜித்து அனைத்து தேவர்களின் நல்லாசிகளைப் பெறுவோமாக!
“ ஓம் நமசிவாய “ .. வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: 1 person, shoes


SWAMY SARANAM GUR4UVE SARANAM GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF LORD SURYA MAY YOU BE BLESSED WITH BEST HEALTH .. WEALTH & HAPPINESS .. " JAI SHREE SURYA DEV "


சீலமாய் வாழச் சீரருள் புரியும் 
ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி ! 
சூரியா போற்றி ! சுதந்திரா போற்றி ! 
வீரியா போற்றி ! வினைகள் களைவாய் ஆதித்யா போற்றி ! போற்றி “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஆவணி முதலாம் ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று சூரியபகவானை வழிபடுவது சிறப்பைத் தரும் .. தங்களனைவரும் அனைத்து நலன்களையும் பெற்று .. உடல் நலமும் .. மனநலமும் நல்லாரோக்கியமாகத் திகழ்ந்திட சூரியபகவானைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே ! 
பாஸஹஸ்தாய தீமஹி ! 
தந்நோ சூர்யஹ் ப்ரசோதயாத் !!
ஞாயிறு என்றாலே சூரியனைக் குறிக்கும் .. ஆவணி மாதத்தில் ஒவ்வொரு ஞாயிறு காலை 6 - 7 மணிவரை சூரியஹோரையே இருக்கும் .. இந்நேரத்தில் சூரியநமஸ்காரம் செய்வது சாலச்சிறந்தது ..
ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருந்தால் அச்சம் அகலும் .. கண்சம்மந்தமான நோய்கள் குணமடையும் என்று நம் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர் ..
”ஒளிதரும் பொருட்களில் நான் கதிர் நிறைந்த ஞாயிறு “ என்கிறார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் .. 
கதிர் நிறைந்த ஞாயிறு என்பது ஆயிரம் ஒளிக்கதிர்களை உடைய சூரியனைக் குறிக்கும் .. முறைப்படி செய்யும் சூரிய நமஸ்காரத்தால் சருமநோய்களிலிருந்தும் குணம் பெறலாம் ..
எந்த மந்திரம் தெரியாவிட்டாலும் .. காலை எழுந்தவுடன் நீராடி கிழக்கு நோக்கி 
“ஓம் நமோ ஆதித்யாய புத்திர் பலம் தேஹிமோ சதா” என்று மூன்றுமுறை வணங்கினால் ஆயிரம் பலன்களை அள்ளித்தருவான் சூரியன் ..
“ ஓம் சூர்யாய நமஹ “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..Image may contain: 2 people

SWAMY SARANAM GURUVE SARANAM SARANAM....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A VERY HAPPY WEEKEND & A DIVINE " MAHAA SHANI PRADOSHAM " TOO .. MAY LORD SHIVA REMOVE ALL THE OBSTACLES & SINS FROM YOUR LIFE & SHOWER YOU WITH GOOD HEALTH WEALTH & HAPPINESS .. " OM NAMASHIVAAYA " JAI BHOLE NATH .



 ஆலமுண்டு அமரர்க்கு அமுதீந்த தெய்வம் ! 
மாலுக்கு ஆழியை மகிழ்ந்தளித்த தெய்வம் ! 
பாலனுக்குப் பாற்கடல் பரிந்தளித்த தெய்வம் ! 
காலமெல்லாம் நம்மைக்க் காத்திடும் தெய்வம் “ 
- ஓம் சிவாய நமஹ -
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சகலமங்களங்களையும் அள்ளித்தரும் சிவமூர்த்திக்கு உகந்த விரதங்களில் முதன்மையான 
“ சனிமஹா பிரதோஷ நாளாகிய “ இன்று சனிபகவானால் உண்டாகும் அனைத்து தோஷங்களும் நீங்கி .. சகலசௌபாக்கியங்களும் தங்களனைவரும் பெற்றிட எல்லாம் வல்ல ஈசனைப் பிரார்த்திக்கின்றேன்
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!
இவ்வருடத்தில் இரண்டு முறை மஹாபிரதோஷம் வருவதால் இதற்கு “ அர்த்தநாரி பிரதோஷம் “ என்றும் போற்றப்படுகிறது .. இந்நாளில் சிவாலயம் சென்று ஈஸ்வரனையும் .. ஈஸ்வரியையும் வழிபட பிரிந்து வாழும் தம்பதியினரும் ஒன்று சேர்வார்கள் என்பது ஐதீகம் ..
சகலதுன்பத்தையும் போக்கவல்லது சனிப்பிரதோஷ வழிபாடு .. ஆனால் சங்கடங்கள் அனைத்தையுமே தீர்க்கவல்லது “ சனிமஹாபிரதோஷமாகும் “
மாலை 4.30 - 6.00 மணிவரையிலான காலநேரத்தில் முப்பத்து முக்கோடி தேவர்களும் .. பிரம்மா .. விஷ்ணு மற்றும் சிவனும் தன் ஷேமநலத்திற்காக வழிபாட்டில் ஈடுபடும் இவ்வேளையில் நாமும் ஈசனை இதயம் கனிந்து பிரார்த்தித்து வந்தால் சகலநலன்களையும் தந்தருள்வார் சர்வேஸ்வரன் ..
இன்றைய சனிமஹாபிரதோஷ நாளில் 
மீனாட்சி ஸுந்தரேஸ்வர ஹாலாஸ்ய நாத ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்துவர சிவ அபசாரம் நீங்கி சகல மங்களங்களும் பெறுவீர்களாக ..
பக்தார்தி பஞ்ஜனபராய காலாப்ரகாந்தி கரளாங்கித கந்தராய பூதேஸ்வராய பவனத்ரய காரணாய ஹாலாஸ்ய மத்யநிலாய நமஸ்ஸிவாய !
பொருள் -
பக்தர்களுடைய மனக்கவலையைப் போக்கி அருள்பவரே ! மீனாட்சி சுந்தரேஸ்வரா ! நமஸ்காரம் ! பிரம்மாதி தேவர்களுக்கெல்லாம் மேற்பட்டவரே ! பிரதம கணங்களுக்கு ஈஷ்வரரானவரே ! மூவுலகங்களையும் படைத்தவரே ! காலகூடவிஷத்தை அருந்தியதன் அடையாளமாக கழுத்தை உடையவரே ஹாலஸ்ய ஷேத்திரம் எனப்படும் மதுரையம்பதியில் வசிப்பவரே ! 
மீனாட்சி சுந்தரேஸ்வரா ! வணங்குகின்றோம் ! எமை காத்தருள்வாயாக ! 
“ ஓம் நமசிவாய “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனு
Image may contain: 1 person


SWAMY SARANAM GURUVE SARANAMGOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED FRIDAY & A DIVINE " AJAA EKADASI " TOO .. MAY LORD VISHNU RELIEVE YOU FROM ALL SINS & NEGATIVE FORCES FROM YOUR LIFE & SHOWER YOU WITH PEACE & HAPPINESS .. KING HARICHANDRA WHO'S LIFE BECAME MISERABLE WITH HIS PAST SINS .. WITH THE ADVICE OF GAUTAMA MUNI FASTED ON THIS " AJAA EKADASI " (ANNADHA) & REGAINED EVERYTHING .. " OM NAMO NAARAAYANAAYA "



” மேலானவற்றுக்கெல்லாம் மேலானவன் ! அரியதற்கும் மேலாக அரிதானவன் ! மிகுந்த சக்தி உள்ளவன் ! நிரந்தரமானவன் ! எவராலும் பக்தியால் அடையக்கூடியவன் ! ஒப்பற்றவன் ! முன்னைக்கும் முந்தையவன் ! ஒளிமயமானவன் ! ஞானிகளுக்கெல்லாம் முதன்மையானவன் ! பரமஞானஸ்வரூபமான விஷ்ணுபகவானை நமஸ்கரிக்கின்றோம் “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் 
மங்களங்களை தங்கள் இல்லம்தோறும் வழங்கும் வெள்ளிக்கிழமையாகிய இன்று விஷ்ணுபகவானுக்கு உகந்த “ அஜா ஏகாதசித் திதியும் “ கூடிவருவது மிகவும் சிறப்பாகும் .. தங்களனைவரும் அனைத்து பாக்கியங்களும் பெற்று சர்வமங்களங்களோடும் .. சுபீட்சமான வாழ்வு வாழ்ந்திட ஸ்ரீமன் நாராயணனைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் நாராயணாய வித்மஹே ! 
வாசுதேவாய தீமஹி ! 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!
மஹாவிஷ்ணுவை வேண்டி வழிபடும் விரதங்களில் முதன்மையானதாக இருப்பது ஏகாதசி விரதம் .. இன்றைய வாழும் அவசர உலகில் மாதந்தோறும் வரும் ஏகாதசியை அனுஷ்டிப்பது சாலச்சிறந்தது .. ஆகஸ்ட் - செப்டெம்பர் மாதத்தில் வரும் (தேய்பிறை)
கிருஷ்ணபட்சத்தில் அனுஷ்டிக்கும் ஏகாதசியை 
“ அஜா ஏகாதசி “ (அன்னதா) என்றழைப்பார்கள் .. பாபங்களைப் போக்கும் இப்புண்ணிய ஏகாதசியில் உபவாசத்துடன் விரதத்தை மேற்கொண்டு புலன்களுக்கு அதிபதியான ரிஷிகேசரை வழிபட்டால் பாபத்தின் கர்மவிளைவுகளிலிருந்து விடுபடுவர் ..
தேவலோகத்திலும் இந்நாளுக்கு இணையான நன்னாள் வேறு ஒன்றும் கிடையாது .. இது சந்தேகமில்லாத உண்மையாகும் .. முற்பிறவிகளின் பாபங்களின் விளைவால் நாம் இப்பிறவியில் அனுபவித்துக் கொண்டிருக்கும் துன்பங்களை உடனடியாக நீக்கும் வல்லமை கொண்டது ..
இவ்வுலகை வல்லமையுடன் ஆண்ட மாவேந்தன் ஹரிச்சந்திரன் பிணங்களிலிருந்து துணியை சேகரிக்கும் பணிக்கு கொண்டுவந்த விதியின் துர்ரதிர்ஷ்ட விளையாட்டையும் .. முற்பிறவியின் பாபங்கள் அனைத்தும் நீங்கப்பெற்று .. இழந்த ராஜ்ஜியத்தையும் எளிதில்மீட்டு .. மாயையால் மாண்டு மீண்டும் புத்துயிர் பெற்ற தன் மகன் .. மனைவி சந்திரமதி ஆகியோருடனும் ஆனந்தத்துடன் வாழ அஜா ஏகாதசியே காரணமாகும் .. அதன் பலனே தனி ..
இறுதியில் அரசனது உற்றார் .. உறவினர்கள் .. குடிமக்கள் அனைவரும் அரசனுடன் பக்திலோகத்தை அடையும் பேறுபெற்றனர் .. இந்தக் கதையைக் கேட்டும் படித்தும் வருபவர்களது பாபங்கள் அனைத்தும் நீங்கப்பெற்று .. அஸ்வமேதயாகம் செய்தபலனையும் அடைவர் ..
மஹாவிஷ்ணுவின் திருநாமத்தை நாமும் ஜபித்து அனைத்து பாபங்களையும் களைவோமாக ! 
“ ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமோ நமஹ “ 
வாக வளமுடனும் .. என்றும் நலமுடனும் .
Image may contain: 1 person