PANVEL BALAGAR
அம்மனின் 51 சக்தி பீடங்கள்
1. மூகாம்பிகை-கொல்லூர்-(அர்த்தநாரி பீடம்), கர்நாடகா
2. காமாட்சி-காஞ்சிபுரம்-(காமகோடி பீடம்), தமிழ்நாடு
3. மீனாட்சி-மதுரை-(மந்திரிணி பீடம்), தமிழ்நாடு
4. விசாலாட்சி-காசி- (மணிகர்ணிகா பீடம்), உ.பி.
5. சங்கரி-மகாகாளம்- (மகோத்பலா பீடம்), ம.பி.
6. பர்வதவர்த்தினி-ராமேஸ்வரம்(சேது பீடம்), தமிழ்நாடு
7. அகிலாண்டேஸ்வரி-திருவானைக்கா(ஞானபீடம்), தமிழ்நாடு
8. அபீதகுஜாம்பாள்-திருவண்ணாமலை (அருணை பீடம்), தமிழ்நாடு
9. கமலாம்பாள்-திருவாரூர்(கமலை பீடம்), தமிழ்நாடு
10. பகவதி-கன்னியாகுமரி(குமரி பீடம்), தமிழ்நாடு
11. மகாகாளி-உஜ்ஜையினி-(ருத்ராணி பீடம்), ம.பி.
12. மங்களாம்பிகை-கும்பகோணம்-(விஷ்ணு சக்தி பீடம்), தமிழ்நாடு
13. வைஷ்ணவி-ஜம்மு-(வைஷ்ணவி பீடம்), காஷ்மீர்
14. நந்தா தேவி-விந்தியாசலம்- (விந்தியா பீடம்), மிர்ஜாப்பூர்
15. பிரம்மராம்பாள்-ஸ்ரீ சைலம்-(சைல பீடம்), ஆந்திரா
16. மார்க்கதாயினி-ருத்ரகோடி-(ருத்ரசக்தி பீடம்), இமாசலபிரதேஷ்
17. ஞானாம்பிகை-காளஹஸ்தி-(ஞான பீடம்), ஆந்திரா
18. காமாக்யா-கவுகாத்தி-(காமகிரி பீடம்) அஸ்ஸாம்
19. சம்புநாதேஸ்வரி-ஸ்ரீநகர்- (ஜ்வாலாமுகி பீடம்) காஷ்மீர்
20. அபிராமி-திருக்கடையூர்-(கால பீடம்), தமிழ்நாடு
21. பகவதி-கொடுங்கலூர்-(மகாசக்தி பீடம்), கேரளா
22. மகாலட்சுமி-கோலாப்பூர்-(கரவீரபீடம்) மகாராஷ்டிரம்
23. ஸ்தாணுபிரியை-குரு÷க்ஷத்ரம்-(உபதேசபீடம்)ஹரியானா
24. மகாகாளி-திருவாலங்காடு-(காளி பீடம்) தமிழ்நாடு
25. பிரதான காளி-கொல்கத்தா-(உத்ர சக்தி பீடம்) மேற்கு வங்காளம்
26. பைரவி-பூரி- (பைரவி பீடம்) ஒரிசா
27. மாணிக்காம்பாள்-திராக்ஷõராமா-(மாணிக்க பீடம்) ஆந்திரா
28. அம்பாஜி-துவாரகை-, பத்ரகாளி- (சக்தி பீடம்) குஜராத்
29. பராசக்தி-திருக்குற்றாலம்-(பராசக்தி பீடம்), தமிழ்நாடு
30. முக்தி நாயகி-ஹஸ்தினாபுரம் (ஜெயந்தி பீடம்) ஹரியானா
31. லலிதா-ஈங்கோய் மலை, குளித்தலை(சாயா பீடம்) தமிழ்நாடு
32. காயத்ரி-ஆஜ்மீர் அருகில் புஷ்கரம்-(காயத்ரிபீடம்) ராஜஸ்தான்
33. சந்திரபாகா-சோமநாதம்-(பிரபாஸா பீடம்) குஜராத்
34. விமலை, உலகநாயகி-பாபநாசம்(விமலை பீடம்), தமிழ்நாடு
35. காந்திமதி-திருநெல்வேலி-(காந்தி பீடம்), தமிழ்நாடு
36. பிரம்மவித்யா-திருவெண்காடு-(பிரணவ பீடம்), தமிழ்நாடு
37. தர்மசம்வர்த்தினி-திருவையாறு-(தர்ம பீடம்), தமிழ்நாடு
38. திரிபுரசுந்தரி-திருவொற்றியூர்-(இஷீபீடம்), தமிழ்நாடு
39. மகிஷமர்த்தினி-தேவிபட்டினம்-(வீரசக்தி பீடம்), தமிழ்நாடு
40. நாகுலேஸ்வரி-நாகுலம் -(உட்டியாணபீடம்) இமாசல பிரதேசம்
41. திரிபுர மாலினி-கூர்ஜரம் அருகில் ஜாலந்திரம் (ஜாலந்திர பீடம்) பஞ்சாப்
42. திரியம்பக தேவி-திரியம்பகம்- (திரிகோணபீடம்) மகாராஷ்டிரம்
43. சாமுண்டீஸ்வரி-மைசூர்-(சம்பப்பிரத பீடம்) கர்நாடகா
44. ஸ்ரீலலிதா-பிரயாகை-(பிரயாகை பீடம்) இமாசலப்பிரதேசம்
45. நீலாம்பிகை-சிம்லா-(சியாமள பீடம்) இமாசலப்பிரதேசம்
46. பவானி-துளஜாபுரம்-(உத்பலா பீடம்) மகாராஷ்டிரா
47. பவானி பசுபதி-காட்மாண்ட்-(சக்தி பீடம்) நேபாளம்
48. மந்த்ரிணி-கயை- (திரிவேணிபீடம்) பீகார்
49. பத்ரகர்ணி-கோகர்ணம்- (கர்ணபீடம்) கர்நாடகா
50. விரஜை ஸ்தம்பேஸ்வரி-ஹஜ்பூர்- (விரஜாபீடம்) உ.பி.
51. தாட்சாயிணி-மானஸரோவர்-(தியாகபீடம்) திபெத்
GOOD MORNING DEAR FRIENDS - WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF LORD GANESHA .. LORD GANESHA IS OUR MENTOR & PROTECTOR .. MAY HE ENRICH YOUR LIFE BY GIVING GREAT BEGININGS & REMOVE ALL THE OBSTACLES FROM YOUR LIFE TOO .. " JAI SHREE GANESHA "
” விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான் விநாயகனே வேட்கை தணிவிப்பான் !
விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாய் நன்மையினால் கண்ணில் பணிமின் கனிந்து “
விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாய் நன்மையினால் கண்ணில் பணிமின் கனிந்து “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் செவ்வாயும் .. சதுர்த்தியும் கூடிவரும் இந்நாளில் கணங்களுக்கெல்லாம் அதிபதியாகிய கணபதியைத் துதித்து சகல கிரகதோஷங்களும் நீங்கி .. இகபர சுகங்கள் யாவும் பெற்றுய்வீர்களாக !
ஓம் தத்புருஷாய வித்மஹே !
வக்ரதுண்டாய தீமஹி !
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !!
வக்ரதுண்டாய தீமஹி !
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !!
ஓம்கார பிரணவத்தின் நாயனாய் திகழும் வினாயகரின் உடலில் நவக்கிரகங்கள் அடங்கி உள்ளன ..
விநாயகரின் நெற்றியில் - சூரியன் உறைந்துள்ளான்
அதேபோல் நாபியில் - சந்திரனும்
வலது தொடையில் - செவ்வாயும்
இடது தொடையில் கேதுவும்
வலதுகையில் - புதனும்
இடது மேல்கையில் - ராகுவும்
வலது மேல்கையில் - சனியும்
இடது கீழ் கையில் - சுக்ரனும்
தலையில் குருபகவானும் இடம் பெற்றுள்ளனர் .. எனவே விநாயகரை தரிசனம் செய்தாலே நவக்கிரகங்களையும் வழிபட்டு துதித்ததற்கான அனைத்து பலன்களும் கிட்டும் ..
விநாயகரின் நெற்றியில் - சூரியன் உறைந்துள்ளான்
அதேபோல் நாபியில் - சந்திரனும்
வலது தொடையில் - செவ்வாயும்
இடது தொடையில் கேதுவும்
வலதுகையில் - புதனும்
இடது மேல்கையில் - ராகுவும்
வலது மேல்கையில் - சனியும்
இடது கீழ் கையில் - சுக்ரனும்
தலையில் குருபகவானும் இடம் பெற்றுள்ளனர் .. எனவே விநாயகரை தரிசனம் செய்தாலே நவக்கிரகங்களையும் வழிபட்டு துதித்ததற்கான அனைத்து பலன்களும் கிட்டும் ..
வினாயகப்பெருமானின் முன்பாக அமர்ந்து அவருக்கு உகந்த ஸ்லோகத்தை மனதை ஒருமுகப்படுத்தி பாராயணம் செய்துவந்தால் மனதில் விரும்பிய விஷயங்கள் மகிழ்ச்சியளிக்கும் விதத்தில் விரைவில் நடந்தேறும் .. காரியசித்திமாலை பாடல்களை காலை மதியம் .. மாலை என மூன்றுவேளைகளிலும் சொல்லி வந்தால் நினைத்தகாரியங்கள் கைகூடும் .. மனம் அமைதி காணும் ..
“ ஓம் ஸ்ரீ விக்னேஷ்வராய நமஹ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
“ ஓம் ஸ்ரீ விக்னேஷ்வராய நமஹ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
SWAMY SARANAM.. GURUVE SARANAM
பிள்ளைப் பிறையும் புனலும் சூடும் பெம்மான் என்று உள்ளத்து உள்ளித் தொழுவார் தங்கள் உறுநோய்கள் தள்ளிப்போக அருளும் தலைவன் சித்திவிநாயகனே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. “தை அமாவாசையாகிய “ இன்று நம் முன்னோர்களை பக்திசிரத்தையோடு நினைந்து தர்ப்பணம் செய்து அவர்களின் ஆசியைப் பெறுவோமாக !
மனிதப்பிறவி மகத்தான பிறவி ! மனிதனாகப் பிறந்தால்தான் இறைவனை எளிதில் அடையமுடியும் .. வேறு எந்தப்பிறவிக்கும் இந்தச் சிறப்பு கிடையாது .. வானுலகில் தேவராக இருந்தாலும்கூட இறைவனை தரிசிக்கத்தான் முடியுமே ஒழிய அவரோடு இரண்டறக் கலக்கமுடியாது .. இத்தகைய அரியமானிடப்பிறவியைத் தந்த நம் முன்னோருக்கு நன்றி தெரிவிக்க வாரிசுகள் நடத்தும் நன்றிக்கடனாக அமாவாசை மற்றும் பௌர்ணமித்திதியை எடுத்துக்கொள்ளலாம் ..
“ நன்றி மறவேள் “ எனும் வாக்கின்படி நாம் இந்த உலகுக்கு வரக்காரணமாக இருந்தவர்களைத் திருப்தி செய்தால்தான் நம்மால் இந்த உலகுக்கு வந்தவர்களைச் செவ்வனே காக்கமுடியும் .. முன்னோர்களே நம் சந்ததியைக் காத்தருள்வார்கள் !
தை அமாவாசையில் நாம் தரும் பிண்டமும் .. எள்ளும் .. தண்ணீருமே அவர்களுக்கு உணவு .. பிண்டம்தான் ஆத்மரூபமாக உள்ள முன்னோர்களின் பசியைத் தீர்க்கும் உணவாகும்
இந்நாளில் கடற்கரையிலோ .. புண்ணிய நதிக்கரையிலோ நீராடி .. வேதவிற்பன்னர் வழிகாட்டுதலுடன் நீத்தார் வழிபாட்டிற்குரிய பூஜையையும் ஏழைக்கு அவர்களது பரிபூரண ஆசிகளைப் பெற்று அனைத்து தடைகளையும் தகர்த்திடுவீர்களாக !
” ஓம் பித்ருதேவோ பவ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
SWAMY SARANA,M. GURUVE SARANAM...HAPPY KANNU TO ALL MALIGAIPURAMS
கனு பண்டிகை - ஒரு கண்ணோட்டம்
பொங்கலுக்கு அடுத்த நாள் கனு பண்டிகை. அன்று காலையில் எழுந்து பெண்கள்( தாங்கள் குளிப்பதற்கு முன்) தங்களது அண்ணன் தம்பிகள் குடும்ப நலன்கள் வேண்டி கனு பிடி வைப்பது வழக்கம்.
கனு பண்டிகை அன்று சூரிய ஒளி படும் ஒரு இடத்தில் மஞ்சள் இலையை, பரப்பி அதன்மேல் பழைய பொங்கல், கூட்டு, பல வண்ண சாதங்கள்( சோறு), கரும்பு, வாழைபழம் முதலியவற்றை வைத்து நிவேதனம் செய்து, கற்பூரம் ஏற்றி, ஆரத்தி எடுத்து வணங்குவது என்பது நமது முன்னோர்களால் கடைபிடிக்கப்பட்டு இன்றும் தொடர்கிறது.
இது ஒரு வகையான திருஷ்டி(கண்ணூறு) கழித்தலாகும்.
தமது குடும்பம் நன்றாக இருக்கவேண்டும் என்று வேண்டி கனு பிடி வைக்கும் தமது சகோதரிகளுக்கு அண்ணன் தம்பிகள் பொங்கல் சீர் செய்வது என்பதும் இன்றும் வழக்கில் உள்ளது. "பெண் வாழ பிறந்தகம் வாழ" என்று கூறுவார்கள் . நமது சகோதரிகள் நலமாக இருந்தால் அவள் பிறந்த வீடான நமது வீடும்(குடும்பமும்) நலமாக இருக்கும்.
அண்ணன் தம்பி நல்வாழ்விற்கு சகோதரிகளும், அக்காள் தங்கை நல்வாழ்விற்கு அண்ணன் தம்பிகளும் வேண்டி கொண்டாடும் அருமையான பண்டிகை இந்த பொங்கலும் கனு பண்டிகையும்.
குடும்ப ஒற்றுமை வளர்வதற்கும் சகோதர பாசம் நிலைப்பதற்கும் கனு பிடி வைத்தலும், பொங்கல் சீரும் பெரும் பங்கு வகிக்கின்றன என்றால் மிகையாகாது.
சகோதரிகளே! உங்கள் அண்ணன் தம்பிகள் குடும்ப நலனுக்கு கனு பிடி வையுங்கள்.
சகோதரர்களே! உங்கள் அக்காள் தங்கைகளுக்கு மறக்காமல் இந்த பொங்கலுக்கு நேரில் சென்று சீர் கொடுங்கள். உங்கள் வாழ்வு சீரும் சிறப்புமாக இருக்கும்.
இன்று 15.01.2020 சபரிமலை மகர ஜோதி.. *********************************************
கற்பூரச் சுடர் ஒளியில் காட்சி தரும் ஐயப்பா
கனிவுடனே அருள் வழியால் காத்திடுவாய் ஐயப்பா
அற்புதமாய் சபரிமலை அமர்ந்திருக்கும் ஐயப்பா பொற்பதங்கள் சரணம் என்று போற்றிடுவோம் ஐயப்பா எண்ணியதை திண்ணமுற செய்திடுவாய் ஐயப்பா
என்றுமுள்ள பரம்பொருளே இனியவனே ஐயப்பா
விண்ணதிர மண்ணதிர பாடிவந்தோம் ஐயப்பா
விருப்பமோடு பதினெட்டாம்படி ஏறி வந்தோம் ஐயப்பா
நெய்குளித்து மெய் விளங்க நீயிருப்பாய் ஐயப்பா
நெஞ்சுருகி பாடியுன்னைத் தேடிவந்தோம் ஐயப்பா
தைமாத ஜோதி தரும் தரிசனமே ஐயப்பா
தருணமிது கருணையுடன் அருள்புரிவாய் ஐயப்பா.
SWAMY SARANAM.. HAPPY BOGIE...GOOD MORNING DEAR FRIENDS - WISH YOU ALL A HAPPY "BHOGI FESTIVAL " REMOVE ALL THE UNWANTED THOUGHTS & UNPLEASANT THINGS IN YOUR LIFE & START A NEW LIFE .. MAY THIS DAY MARK A NEW CHAPTER IN YOUR LIFE TOO .. BHOGI IS CELEBRATED IN HONOR OF LORD INDRA THE GOD OF CLOUDS & RAIN .. LORD INDRA IS WORSHIPPED FOR THE ABUNDANCE OF HARVEST .. THERE BY BRINGING PLENTY & PROSPERITY TO THE LAND .. ON THIS DAY PEOPLE CLEAN OUT THEIR HOUSE FROM TOP TO BOTTOM TOO .. " JAI SHREE INDRA DEV "
பைந்தமிழ்பூமி செழித்திடல்வேண்டும் ! புகைமிகுபூமி இனியும் வேண்டாம் ! சுத்தம் சுழன்று சுகம்தரவேண்டும் ! அசுத்தம் அகன்று விடைபெறவேண்டும் ! பழையன போக்கிடவே புதியன புகுந்திடவே அழைப்போம் ! தழைப்போம் ! போகி நன்னாளிலே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. “போகிப்பண்டிகை “ நல்வாழ்த்துகளும் உரித்தாகுக ! இன்றையநாள் தங்களனைவருக்கும் ஓர் மகிழ்ச்சிகரமான பொன்னாளாக மிளிரவும் .. போதியளவு மழைபொழிந்து விவசாயத்தை பாங்குறச்செய்யவும் இந்திரபகவானைப் பிரார்த்திப்போமாக !
ஓம் தேவராஜாய வித்மஹே !
வஜ்ரஹஸ்தாய தீமஹி !
தந்நோ இந்திர ப்ரசோதயாத் !!
இந்தநாள் பழையன கழித்து .. புதியன புகவிடும் நாளாகக் கருதப்படுகிறது .. பழையவற்றையும் .. பயனற்றவையும் விட்டெறியும் நாள் .. பழந்துயரங்களை அழித்துப்போக்கும் இப்பண்டிகையைப் “போக்கி” என்றனர் .. அந்தச் சொல் நாளடைவில் மருவி “போகி” என்றாகிவிட்டது .. அக்கால வழக்கப்படி ஆண்டின் கடைசிநாள் என்பதால் நடந்துமுடிந்த நல்நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உண்டு ..
இவற்றோடு பழைய பழக்கங்கள் .. உறவுகளிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் போன்ற வேண்டத்தகாத எண்ணங்களையும் .. “ருத்ரகீதை ஞானயக்ஞம்” என அழைக்கப்படும் அக்னிகுண்டத்தில் எறிந்து பொசுக்கி .. வீட்டைமட்டுமல்ல நம் மனதில் இருக்கும் தீய எண்ணங்களையும் .. தவறான சிந்தனைகளையும் நீக்கவேண்டும் ! என்பது இதில் உள்ள தத்துவமாகும் ..
பல்வேறு தெய்வீகக் குணங்களை தூண்டுவதன்மூலம் ஆன்மாவாவை உணர்தல் .. ஆன்மாவை தூய்மையாக்குதல் போன்ற செயல்பாடுகளை இப்பண்டிகை பிரதிபலிக்கிறது பொங்கல் மகரசங்கராந்தி மற்றும் லோரி எனப்படும் பண்டிகைக்கு முந்தையநாளில் போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது ..
இந்திரனுக்கு “ போகி “ என்றொரு பெயரும் உண்டு மழைபொழிய வைக்கும் கடவுள் வருணன் .. அவருக்கு அரசனாகத் திகழ்ந்து இயக்குபவர் இந்திரன் .. மழைபெய்தால்தான் பயிர்கள் செழிக்கும் .. உயிர்கள் வாழும் எனவே பண்டைய நாட்களில் இந்திரனை போகியன்று பூஜிக்கும் வழக்கமிருந்தது .. இந்திரனைப் போற்றி அவரது அருட்கடாக்ஷ்த்தைப் பெற்று சுற்றுச்சூழல் பாதிக்காத வண்ணம் மாசற்ற போகியினைக் கொண்டாடுவோம் !
“ ஓம் தேவராஜாய நமஹ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
SWAMY SARANAM....GURUVE SARANAM
ஓரானைக் கன்றை யுமையாள் திருமகனைப் பேரானைக் கற்பகத்தைப் பேணினால் வாராத புத்திவரும் வித்தைவரும் புத்திரசம்பத்துவரும் சக்திதருஞ் சித்தி தருந்தான் “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையாகிய இன்று எல்லாம் வல்ல கணபதிக்கு உகந்த “சங்கடஹர சதுர்த்தி விரதமும் “ சேர்ந்து வருவது சிறப்பாகும் தங்களனைவரது சங்கடங்கள் யாவும் சூரியனைக்கண்ட பனிபோல் நீங்கிவிடவும் .. செய்யும் காரியங்கள் அனைத்தும் தடையின்றி வெற்றி பெறவும் விக்னேஷ்வரனைப் பிரார்த்திப்போமாக !
ஓம் தத்புருஷாய வித்மஹே !
வக்ரதுண்டாய தீமஹி !
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !!
சிவபெருமானுக்கு எப்படி பிரதோஷ வழிபாடு விசேஷமோ அதேபோல வினாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி வழிபாடு மிகவும் விசேஷம் ஆகும் .. சங்கடஹர சதுர்த்தி அன்று பிள்ளையாரை எவர் ஒருவர் வழிபடுகிறாரோ அவருக்கு பித்ருதோஷம் உள்ளிட்ட பலதோஷங்கள் நீங்கும் .. கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம் அதோடு நம் கஷ்டங்களும் நீங்கும் ..
சங்கடஹர சதுர்த்தியில் பிள்ளையார் மந்திரத்தை ஜபித்து நிம்மதியும் சந்தோஷமும் பெறுவோமே !
“ ஓம் ஸ்ரீம் கணாதிபதயே ஏகதந்தாய லம்போதராய ஹேரம்பாய நாலிகேர ப்ரியாய மோதபக்ஷ்ணாய மமாபீஷ்ட பலம் தேஹி ப்ரதிகூலம் மே நஸ்யது அநுகூலம் மே வஸமானய ஸ்வாஹா “
பொருள் -
பக்தர்கள் வேண்டிய வரத்தை நல்கும் சங்கடஹர சதுர்த்தி கணபதியே ! தங்களை நமஸ்கரிக்கின்றோம் ! முழுமுதற்கடவுளாகவும் .. பூதகணங்களுக்கெல்லாம் தலைவனாகவும் இருப்பவரே ! பக்தர்களை துன்பத்தில் இருந்து காத்து இன்பம் அளிப்பவரே ! பக்தர்களோடு எப்போதும் நிலைகொள்பவரே ! பக்தர்கள் தொடங்கும் எந்த ஒருசெயலையும் வெற்றி கொள்ளச்செய்பவரே ! பக்தர்களை சுற்றியுள்ள எதிர்மறையானவற்றை விலக்கி நன்மைகளைத் தரும் நேர்மறை ஆற்றலை பெருகச் செய்பவரே ! உங்களை மீண்டும் நமஸ்கரிக்கின்றோம் !!
காரியம் சித்தி அடியும் .. தடைகள் அகலும் இப்படி என்னிலங்கா பல நன்மைகள் இந்த மந்திரத்தின்மூலம் கிடைக்கும் ..
“ ஓம் விக்னேஷ்வராய நமஹ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
கூடாரை வெல்லும் சீர்கோவிந்தா உன் தன்னைப் பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம் நாடுபுகளும் பரிசினால் நன்றாக சூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவே பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம் ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறுமூட நெய்பெய்து முழங்கை வழிவார் ! கூடியிருந்து குளிர்ந்து ஏல் ஓர் எம்பாவாய் “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஸ்ரீஆண்டாளுக்கு உகந்த “கூடாரவல்லி தினம் “ இன்றையநாளில் கொண்டாடப்படுகிறது .. தங்களனைவரது எண்ணங்கள் யாவும் எண்ணியபடியே நடந்தேரிட ஸ்ரீஆண்டாளைப் பிரார்த்திப்போமாக !
ஓம் துளசி தோட்ட ஜனன்யை
விஷ்ணுப்ரிய வித்மஹே !
ஸ்ரீரங்கனொன்றினாய தீமஹி !
தந்நோ கோதா ப்ரசோதயாத் !!
மார்கழி 27வது நாளான இன்று ஆண்டாளின் 27வது பாசுரமான - “கூடாரை வேல்லும் சீர் கோவிந்தா “ என்ற பாசுரம் பாடப்பட்டு நெய்யிட்ட பாற்சோறு பக்தர்களுக்கு வழங்கப்படும் ..
ஸ்ரீரங்கநாதரை திருமணம் செய்துகொள்ளவே மஹாலக்ஷ்மி ஆண்டாள் அவதாரம் எடுத்தாள் .. இதற்காக ஆண்டாள் மார்கழிநோன்பு இருந்தாள் மார்கழிநோன்பு என்பது கன்னிப்பெண்கள் தாங்கள் விரும்பும் கணவரை அடைய மேற்கொள்ளும் நோன்பாகும் ..
திருப்பாவையில் உள்ள 30 பாடல்களும் சக்திவாய்ந்தவை .. அதிலும் 27வது பாசுரமான “கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா “ என்ற பாசுரம் மிகமிக மகிமை பொருந்தியது .. ஆண்டாள் இந்த 27வது பாசுரத்தை பாடியபோதுதான் பெருமாள் அவளுக்கு திருமணவரம் கொடுத்தார் .. எனவே இந்த பாசுரம் பாடப்படும் தினத்தை “கூடாரவல்லி தினம்” என்று சொல்வார்கள் ..
கூடாரவல்லி தினம் என்றால் - கண்ணன் ஆண்டாளை ஆட்கொள்ளப்போவதாக ஆண்டாள் உறுதியாக நம்பிய நன்னாள் .. ஜீவாத்மா பரமாத்மா தத்துவத்தில் பரமாத்மாவே வந்து ஜீவாத்மாவை தன்னுடன் ஐக்கியமாக்கிக் கொள்வது உறுதி என்பதை நிரூபித்த வைபவம் எனலாம் ..
ஆண்டாளின் மனவிருப்பத்தை ஸ்ரீநாராயணன் நிறைவேற்றித் தந்தருளியது போல் நம் விருப்பங்களையும் அந்த ஆண்டாளே நிச்சயம் நிறைவேற்றி அருள்புரிவாள் .. முடிந்தால் அந்த அன்னைக்கு அழகாய் ஒருபுடவை எடுத்துச்சென்று சார்த்துங்கள் .. ரோஜாவும் .. முல்லையும் .. தாமரையும் என மலர்கள் சூட்டுங்கள் .. மகிழ்ந்து போஆள் அன்னை ஆண்டாள் ..
ஆண்டாளையும் ஸ்ரீரங்கமன்னாரையும் சேவித்து நலம்பல பெறுவோம் !
“ ஓம் ஹரி ஓம் ! ஓம் ஸ்ரீஆண்டாள் திருவடிகள் சரணம் “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
நெய்யுடை அடிசில் பேறு பெற்றவர்க்கே வாய்க்கும்.
உடைப்பருஞ் செல்வர் ஆயினும், இனிப்பும்
கொழுப்பும் ( SUGAR AND CHOLESTEROL) அண்டுமானால்,
நெய்யுடை அடிசில் வாய்க்காமலே போம்.
உடைப்பருஞ் செல்வர் ஆயினும், இனிப்பும்
கொழுப்பும் ( SUGAR AND CHOLESTEROL) அண்டுமானால்,
நெய்யுடை அடிசில் வாய்க்காமலே போம்.
எம் பள்ளிப் பருவத்தில், வீட்டில் அனைவரும்
அமர்ந்து உண்ணும்போது, இலைச் சோற்றில்
எம் அன்னை நெய் ஊற்றும்போதெல்லாம்
எம் தந்தை "மூட நெய் பெய்து, முழங்கை வழிவார"
என்பார்.
பலமுறை இவ்வாறு சொல்லக் கேட்டபின், எனக்கு
அத்தொடரின்பால் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. எனினும்,
"மூட நெய்" என்பதன் பொருள் எனக்கு விளங்கவில்லை.
அமர்ந்து உண்ணும்போது, இலைச் சோற்றில்
எம் அன்னை நெய் ஊற்றும்போதெல்லாம்
எம் தந்தை "மூட நெய் பெய்து, முழங்கை வழிவார"
என்பார்.
பலமுறை இவ்வாறு சொல்லக் கேட்டபின், எனக்கு
அத்தொடரின்பால் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. எனினும்,
"மூட நெய்" என்பதன் பொருள் எனக்கு விளங்கவில்லை.
மூட நம்பிக்கை என்றால் தெரியும். அது என்ன
மூட நெய்? மூடத்தனமான நெய் என்பது
பொருந்தவில்லையே! தந்தையிடம் கேட்கத்
தோன்றவும் இல்லை. அக்காலச் சூழலில் கேட்டு
விடவும் முடியாது.
மூட நெய்? மூடத்தனமான நெய் என்பது
பொருந்தவில்லையே! தந்தையிடம் கேட்கத்
தோன்றவும் இல்லை. அக்காலச் சூழலில் கேட்டு
விடவும் முடியாது.
சிறிது காலத்திலேயே, வானொலியில் திருப்பாவை
விளக்கத்தை நான் கேட்கத் தொடங்கினேன். அப்போது
புரிந்தது மேற்கண்ட தொடர் ஆண்டாளின் பாசுரத்தில்
வருகிறது என்று. பொருளும் புரிந்தது.
விளக்கத்தை நான் கேட்கத் தொடங்கினேன். அப்போது
புரிந்தது மேற்கண்ட தொடர் ஆண்டாளின் பாசுரத்தில்
வருகிறது என்று. பொருளும் புரிந்தது.
"ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூட நெய்பெய்து முழங்கை வழிவாரக்
கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்."
மூட நெய்பெய்து முழங்கை வழிவாரக்
கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்."
மூட நெய் என்பதை அதற்கு முந்திய சீரான
பாற்சோறு (பால்ச்சோறு) என்பதுடன் கொண்டுகூட்டிப்
பொருள் காண வேண்டும்.
பாற்சோறு (பால்ச்சோறு) என்பதுடன் கொண்டுகூட்டிப்
பொருள் காண வேண்டும்.
பாற்சோறு (பால்ச்சோறு) மூட நெய் பெய்து என்றால்,
இலையில் இடப்பட்ட சோறு முழுவதையும் மூடும்
அளவுக்கு நெய் ஊற்றுவது என்று பொருள். சோற்றின்
நடுவில் சிறிது நெய் ஊற்றி உண்பவர்கள் அல்ல ஆயர்கள்.
இலையில் இடப்பட்ட சோறு முழுவதையும் மூடும்
அளவுக்கு நெய் ஊற்றுவது என்று பொருள். சோற்றின்
நடுவில் சிறிது நெய் ஊற்றி உண்பவர்கள் அல்ல ஆயர்கள்.
ஆயர் சமூகம் சுரண்டலற்ற சமூகம்; சமத்துவச் சமூகம்.
ஆயர்குடியினரின் நிறைவாழ்வை "மூட நெய் பெய்து
முழங்கை வழிவார" என்ற தொடரால் ஆண்டாள்
உணர்த்துகிறாள்.
ஆயர்குடியினரின் நிறைவாழ்வை "மூட நெய் பெய்து
முழங்கை வழிவார" என்ற தொடரால் ஆண்டாள்
உணர்த்துகிறாள்.
உலகம் முழுவதும் நிலையாக ஓரிடத்தில் தங்கி வாழ்ந்த
தொல்குடிச் சமூகத்தினர் ஆயர்களே என்பது வரலாறு.
மானுட வரலாற்றில் இச் சமூகம் மேய்ச்சல் சமூகம்
( PASTORAL SOCIETY ) என்று அழைக்கப் படுகிறது.
தொல்குடிச் சமூகத்தினர் ஆயர்களே என்பது வரலாறு.
மானுட வரலாற்றில் இச் சமூகம் மேய்ச்சல் சமூகம்
( PASTORAL SOCIETY ) என்று அழைக்கப் படுகிறது.
உலகில் முதன் முதலில் தோன்றிய இலக்கியங்கள் யாவும்
ஆயர் குடியைச் சிறப்பித்துக் கூறுகின்றன. தமிழ் நிலத்தின்
நால்வகைப் பிரிவுகளைக் கூறவந்த தொல்காப்பியர்,
"மாயோன் மேய காடுறை உலகமும் " என்றுதான்
தொடங்குகிறார். இங்கு மேய என்பது விரும்பிய என்று
பொருள்படும். திருமால் விரும்பிய காட்டு நிலம் என்பது
பொருள்.
ஆயர் குடியைச் சிறப்பித்துக் கூறுகின்றன. தமிழ் நிலத்தின்
நால்வகைப் பிரிவுகளைக் கூறவந்த தொல்காப்பியர்,
"மாயோன் மேய காடுறை உலகமும் " என்றுதான்
தொடங்குகிறார். இங்கு மேய என்பது விரும்பிய என்று
பொருள்படும். திருமால் விரும்பிய காட்டு நிலம் என்பது
பொருள்.
கிறித்துவ சமயமும் ஆயர்களைச் சிறப்பிப்பதில்
தவறியதில்லை. தங்கள் கடவுளையே ஒரு ஆயனாக,
மேய்ப்பனாக வரித்துக் கொண்ட மாண்பு கிறித்துவத்துக்கு
உண்டு.
தவறியதில்லை. தங்கள் கடவுளையே ஒரு ஆயனாக,
மேய்ப்பனாக வரித்துக் கொண்ட மாண்பு கிறித்துவத்துக்கு
உண்டு.
"கர்த்தர் என் மேய்ப்பராக இருக்கிறார்;நான் தாழ்ச்சி
அடையேன். அவர் புல் உள்ள இடங்களில் என்னை
மேய்த்து அமர்ந்த தண்ணீர் அண்டை இளைப்பாறச்
செய்கிறார் " என்கிறது விவிலியம்.
அடையேன். அவர் புல் உள்ள இடங்களில் என்னை
மேய்த்து அமர்ந்த தண்ணீர் அண்டை இளைப்பாறச்
செய்கிறார் " என்கிறது விவிலியம்.
வேட்டுவச் சமூகமும் தொன்மையானதுதான் எனினும்
அங்கு கருணைக்கு இடமில்லை. அச்சமூகத்து மனிதன்
விலங்கோடு விலங்காக, சற்று மேம்பட்ட விலங்காக
வாழ்ந்தவன். அவ்வளவுதான்.
அங்கு கருணைக்கு இடமில்லை. அச்சமூகத்து மனிதன்
விலங்கோடு விலங்காக, சற்று மேம்பட்ட விலங்காக
வாழ்ந்தவன். அவ்வளவுதான்.
ஆயர் சமூகம்தான் நாகரிகம் எய்திய
முதல் சமூகம். வேட்டுவச் சமூகம் போலன்றி,
இங்கு விலங்குகளோடு மனிதன் இயைந்து வாழ்ந்தான்.
முதல் சமூகம். வேட்டுவச் சமூகம் போலன்றி,
இங்கு விலங்குகளோடு மனிதன் இயைந்து வாழ்ந்தான்.
திருப்பாவையில், ஆண்டாள் விலங்குகளையும்
பறவைகளையும் சிறப்பித்துப் பாடுவதை நாம்
காணலாம்.
பறவைகளையும் சிறப்பித்துப் பாடுவதை நாம்
காணலாம்.
"புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ"
என்றும் ( பாசுரம்: 6 ),
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ"
என்றும் ( பாசுரம்: 6 ),
"கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து"
என்றும் ( பாசுரம்: 7)
என்றும் ( பாசுரம்: 7)
ஆண்டாள் பறவைகளை மாண்புறுத்துகிறாள்.
'கனைத்திளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்று பால் சோர
நனைத் தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்"
என்ற ஆண்டாள் பாசுரத்தைக் காட்டிலும் வேறு எதில்
எருமைகள் சிறப்பிக்கப் படுகின்றன?
நினைத்து முலைவழியே நின்று பால் சோர
நனைத் தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்"
என்ற ஆண்டாள் பாசுரத்தைக் காட்டிலும் வேறு எதில்
எருமைகள் சிறப்பிக்கப் படுகின்றன?
ஆயர் சமூகத்தில், விலங்குகளுக்கும் குடியுரிமை உண்டு.
மனிதனுக்குச் சமமான குடியுரிமை. அங்கு பசுக்களே
வள்ளல்களாக இருப்பதால், மானுட வள்ளல்கள் இல்லை.
ஆயர் குடியில் மனிதர்களை வாழ வைப்பவை
விலங்குகளே! மாடு எனில் செல்வம்! மாடு எனில் வாழ்வு!
மனிதனுக்குச் சமமான குடியுரிமை. அங்கு பசுக்களே
வள்ளல்களாக இருப்பதால், மானுட வள்ளல்கள் இல்லை.
ஆயர் குடியில் மனிதர்களை வாழ வைப்பவை
விலங்குகளே! மாடு எனில் செல்வம்! மாடு எனில் வாழ்வு!
எனவே,
"வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் "
நிறைந்த ஆயர் குடியில், சோற்றை மூடும் அளவுக்கு
நெய் பெய்து உண்பதில் வியப்பில்லை அல்லவா!
"வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் "
நிறைந்த ஆயர் குடியில், சோற்றை மூடும் அளவுக்கு
நெய் பெய்து உண்பதில் வியப்பில்லை அல்லவா!
"நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்"
என்று இரண்டாம் பாசுரத்தில் நோன்பு வினைகளைக்
கூறிய ஆண்டாள், நோன்பு நிறைவுறும் முன்னே,
இருபத்தேழாம் பாசுரத்தில் (கூடாரை வெல்லும்)
"மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந் தேலோர் எம்பாவாய்"
என்கிறாளே, இதன் விளக்கம் என்ன என்று சில
வாசகர்கள் எண்ணக் கூடும்.
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்"
என்று இரண்டாம் பாசுரத்தில் நோன்பு வினைகளைக்
கூறிய ஆண்டாள், நோன்பு நிறைவுறும் முன்னே,
இருபத்தேழாம் பாசுரத்தில் (கூடாரை வெல்லும்)
"மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந் தேலோர் எம்பாவாய்"
என்கிறாளே, இதன் விளக்கம் என்ன என்று சில
வாசகர்கள் எண்ணக் கூடும்.
நோன்பின் இறுதியில் நோன்பு நோற்ற பெண்களுக்கு
கோவிந்தன் வழங்கும் சன்மானங்களை எல்லாம் பெற்று,
புத்தாடை உடுத்தி அணிகலன்கள் பூண்டு அனைவரும்
கூடியிருந்து உண்டு மகிழும் காட்சியை ஆண்டாள்
உரைக்கிறாள். இது நோன்பின் பயனுறுத்தல் ஆகும்.
கோவிந்தன் வழங்கும் சன்மானங்களை எல்லாம் பெற்று,
புத்தாடை உடுத்தி அணிகலன்கள் பூண்டு அனைவரும்
கூடியிருந்து உண்டு மகிழும் காட்சியை ஆண்டாள்
உரைக்கிறாள். இது நோன்பின் பயனுறுத்தல் ஆகும்.
ஆண்டாளைப் படிக்கப் படிக்க அவளில் நான் மூழ்கிப்போய்
விடுகிறேன். கன்னங்களில் தாரை தாரையாகக் கண்ணீர்
வழிய வழிய அவளில் நான் திளைத்து விடுகிறேன்.
திகட்டுதல் கண்டேனில்லை!
விடுகிறேன். கன்னங்களில் தாரை தாரையாகக் கண்ணீர்
வழிய வழிய அவளில் நான் திளைத்து விடுகிறேன்.
திகட்டுதல் கண்டேனில்லை!
"ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்"
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்"
என்று அரச போகம் துறந்து சென்ற குலசேகர ஆழ்வார்
போல, நானும் அனைத்தையும் துறந்து, ஆண்டாளின்
திருவில்லிபுத்தூர் ஆய்ப்பாடியில் ஓர் ஆயனாக வாழும்
வாழ்க்கைக்கு ஏங்குகிறேன்.
போல, நானும் அனைத்தையும் துறந்து, ஆண்டாளின்
திருவில்லிபுத்தூர் ஆய்ப்பாடியில் ஓர் ஆயனாக வாழும்
வாழ்க்கைக்கு ஏங்குகிறேன்.
வள்ளுவர் நம் மூளையை வென்று விட்டார் எனில்,
ஆண்டாளோ நம் இதயத்தை வென்று விட்டாள்!
வாழிய ஆண்டாள்!
ஆண்டாளோ நம் இதயத்தை வென்று விட்டாள்!
வாழிய ஆண்டாள்!
எவருமே அனுமன் போல் ஒரு வரத்தைக் கேட்டதே இல்லையே…?
என்றால்........ அனுமன் எத்தனை பெரியவன்?
எவ்வளவு கருணை மிக்கவன்?
என்றால்........ அனுமன் எத்தனை பெரியவன்?
எவ்வளவு கருணை மிக்கவன்?
நம் அறிவால் ஓரளவுக்குத்தான் அனுமன் குணத்தை வியக்க இயலும். அவன் அளவுகள் கடந்தவன். அப்படிப் பெற்ற வரம் காரணமாக, இன்றும் அவன் தன்னை வேண்டுவோர்க்கு வழிகாட்டி பெரும் துணையாகவும் இருக்கிறான்.
உனக்கு என்ன வேண்டும்?’ என்று ராமன் கேட்ட போது இறவா வரத்தையோ- இல்லை பிறவா வரத்தையோ- அதுவுமில்லை மோட்ச கதியையோ அனுமன் கேட்கவில்லை.
“ப்ரபோ! உமது பக்தனாக உமது நாமத்தைச் சொல்லிக் கொண்டு யுகம் கடந்தும் நான் சஞ்சரிக்கும் வல்லமை ஒன்றே போதும்’ என்று கேட்டான்.
அதாவது “ராமராம‘ என்று நாமம் சொல்லிக் கொண்டு பெரும் பக்தனாக எந்த நாளும் திகழும் ஒரு வரத்தைக் கேட்டவன் அனுமன்.
மொழியின் மறைமுதலே முந்நயனத்தேறே கழியவரும் பொருளே ! கண்ணே செழியகலாலயனே எங்கள் கணபதியே ! நின்னை அலாலயனே சூழாதென் அன்பு “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. “ஆங்கிலப்புத்தாண்டு” நல்வாழ்த்துகளும் உரித்தாகுக ! தங்களனைவரின் வாழ்வில் நல்லதே நடக்க .. நானிலம் சிறக்க .. மனித்நேயன் செழிக்க .. விக்னவிநாயகரை சஷ்டித் திதியும் .. “ வ்நாயக சஷ்டி “ இறுதி நாளிலும் பிரார்த்திப்போமாக !
ஓம் தத்புருஷாய வித்மஹே !
வக்ரதுண்டாய தீமஹி !
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !!
கடந்த 12.12.2019ல் ஆரம்பமான “விநாயகசஷ்டி விரதம் “ இன்றைய சஷ்டித் திதியுடன் நிறைவு பெறுகிறது .. முதல் 20 நாட்களும் ஒருபொழுதேனும் உணவு உண்டு வந்தவர்கள் இறுதிநாளாகிய இன்று உபவாசமிருந்து நாளை விடிய சுவாமிதரிசனம் செய்து உணவு உண்டபின் விரதத்தை நிறைவு செய்வது வழக்கம் ..
கடந்த 21 நாட்களும் விநாயகரது கதைகளைப் படித்தும் .. கேட்டும் வந்த தங்களனைவருக்கும் விநாயகரது அருட்கடாக்ஷ்ம் பெற்று வள நலம் பெறுவீர்களாக ! மற்றும் .. 21வது நாளில் சஷ்டிதிதியும் கூடும் நேரத்தில் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் ஆனைமுகன் சன்னதியில் இந்த விரத வழிபாட்டின்மூலமாக தனவிருத்தியும் .. தான்யவிருத்தியும் .. இனத்தார்பகைமாறுதலும் .. எடுத்தசெயல்களை எளிதில் முடிக்கும் ஆற்றலும் பெருமைமிக்க வாழ்க்கையும் அமையும் ..
மங்களம் தரும் விநாயகப்பெருமானே ! இன்றுபோய் வரும் ஆண்டில் மீண்டும் திரும்பிவருக ! என்பதனையே “ கணபதி பப்பா மோரியா “ என்கின்றனர் .. மீண்டும் சந்திப்போம் கணேஷா !
“ ஓம் விக்னவிநாயக பாத நமஸ்தே “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Subscribe to:
Posts (Atom)