SWAMI SARANA,.....GURUVE SARANAM...-PANVEL BALAGANE SARANAM SARANAM...Maheswari Somapalan 2 hrs · GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD ARTHANAREESWARAR .. MAY HE BLESS YOU FOR A HAPPY LIFE .. GOOD LUCK AND PROTECT YOU FROM ALL SORROWS AND SUFFERINGS .. " OM SHIVSHAKTHI OM "

 GURUVIN KATTUNERAI.....PROCEEDING TO SABARIMALAI ...SWAMIYE SARANAM..GURUVE SARANAM....










அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஆடிமாத கடைசி செவ்வாயாகிய இன்று சிவனுள் ஐக்கியமாகும் சக்தியைப் போற்றித்துதித்து தங்களனைவரது துக்கங்கள் .. துஷ்டசக்திகள் யாவும் இந்த ஆடிக்காற்றில் பறந்தோடவும் .. சர்வமங்களங்களும் 
தங்கள் இல்லம்தேடிவரவும் அம்மையப்பனைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தபஸ்ய ச வாமபாக மாய வித்மஹே ! 
சிவசக்தாய தீமஹி ! 
தந்நோ அர்த்தநாரீஸ்வரா ப்ரசோதயாத் !! 

சூறைக்காற்றோடு அம்மனின் அருட்காற்றும் அரவணைத்த மாதம் ஆடி .. நீக்கமற நிறைந்திருந்த மகாசக்தி ..வேப்பிலைமுதல் ..விக்கிரகங்கள்வரை எல்லாவற்றிலும் கண்டு மகிழ்ந்திருந்தோம் .. போற்றினோம் .. பெண்ணின் தாய்மை பரிவாகவும் .. 
வீறுகொண்ட காளிப்ரவாகமாகவும் .. பாம்பின் புற்றினூடேயும் .. சிலுசிலுக்கும் பச்சை மரங்களினூடேயும் .. நட்டுவைத்த கல்லுக்குள்ளும் பரிணமித்து எம்மைக்காத்தாள் அன்னை .. 

திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் எம்பெருமான் திருமாலின் சிறப்புக்குரிய சக்தியாக திருமகள் விளங்குவது அனைவரும் அறிந்ததே ! தன்னை எப்போதும் விலகாது இருக்கவேண்டும் என்பதற்காகவே தனது அழகிய மார்பில் திருமகளை நாராயணன் குடிவைத்திருக்கிறார் .. 

நாராயணனின் உடம்பில் நாராயணனி எப்படி இடம்பெற்று இருக்கிறாளோ அதேபோலவே சிவபெருமானின் உடம்பிலும் பராசக்தி பாதியாக இடம்பெற்று இருக்கிறாள் 
இவை எதை காட்டுகிறது என்றால் சிவனுக்கும் தானே மூலம் என்பதை அன்னை சொல்லாமல் சொல்லி நம்மை விளங்கவைக்கிறாள் .. 

இவைதவிர எம்பெருமான் நாராயணன் எடுக்கும் ஒவ்வொரு அவதாரத்திலும் திருமகள் கூடவே வருகிறாள் .. திருமகள் இல்லாத திருமால் இல்லை என்றே சொல்லலாம் .. 

சிவனுக்கு பார்வதியாகவும் .. நாராயணனுக்கு மஹாலக்ஷ்மியாகவும் துணைவருகின்ற அன்னைசக்தி
படைப்புகடவுளான பிரம்மதேவனுக்கு சரஸ்வதியாக துணைவருகிறாள் .. எப்படி காக்கும் கடவுளின் உடம்பிலும்
அழிக்கும் கடவுளின் உடம்பிலும் சக்திகுடிகொண்டு இருக்கிறாளோ .. அதேபோலவே படைக்கும் கடவுளின் திருநாவிலும் அன்னை சக்தி குடிகொண்டுள்ளாள் .. திருமால் .. சிவன் இருவருக்கும் ஞானசக்தியாக துணைபுரிகின்ற தாயானவள் .. பிரம்மாவுக்கோ கிரியாசக்தியாக துணைசெய்கிறாள் .. 

சிவனின் அவதாரங்களில் அர்த்தநாரீஸ்வரர் அவதாரம் தனிசிறப்புடையதாகவும் .. தனித்தன்மை உடையதாகவும் திகழ்கிறது .. அர்த்தநாரீஸ்வரர் என்ற பெயரில் 
அர்த்தம் - என்றால் பாதி என்று பொருள் .. 
நாரி - என்றால் பெண் என்று பொருள் ..
சிவன்பாதி .. பார்வதிபாதி என்று இருவரும் இணைந்து
இருப்பதால்தான் .. அர்த்தநாரி + ஈஸ்வரர் ( சிவன் ) 
“ அர்த்தநாரீஸ்வரர் என்ற பெயர் கொண்டது .. 

சிவனின்றி சக்தியில்லை .. சக்தியின்றி சிவனில்லை .. என்பதை விளக்கும் உருவமாக திகழ்கிறது .. இந்த அர்த்தநாரீஸ்வரர் உருவம் வாழ்வியலில் ஆணின்றி பெண்ணும் .. பெண்ணின்றி ஆணும் சாத்தியமில்லை என்ற பொருளையும் தருகிறது .. 

ஆடிச்செவ்வாயாகிய இன்று தம்பதிசமேதராய் சிவாலயம்
சென்று .. “ எந்தச் சந்தர்ப்பத்திலும் .. பிரியாத வரம் வேண்டும் “ என அம்மையப்பனிடம் பிரார்த்திப்போமாக ! 
” ஓம் சிவசக்தி ஓம் ” .. வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..







SWAMI SARANAM...GURUVE SARANAM....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A HAPPY INDEPENDENCE DAY AND A BLESSED PRADOSHAM TOO .. MAY LORD SHIVA FULFILL ALL YOUR DESIRES & ILLUMINATE YOUR LIFE WITH HAPPINESS AND PROSPERITY .. " OM NAMASHIVAAYA " JAI BHOLE NATH ..

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் ..
சுதந்திரதின நல்வாழ்த்துகளும் உரித்தாகுக .. திங்கட்கிழமையும் .. சோமவார விரதமும் .. மாலையில் திரயோதசித் திதியும் வருவதால் பிரதோஷமும் அனுஷ்டிக்கப்படுகின்றது .. தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் வெற்றிகரமான நன்னாளாகத் திகழவும் .. நல்லாரோக்கியமும் பெற்று மனதில் அமைதி
நிலவிடவும் ஈசனைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹாதேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !! 

மனிதர்களின் தோஷமான பாவத்தை நீக்குவதால் பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது .. மற்றபிரதோஷ
நாட்களைவிட சோமவார பிரதோஷத்திற்கு தனிச்சிறப்பு உண்டு .. இந்தநாளில் நாள்முழுவதும் சிவநாமம் ஜெபித்து
மாலை வேளையில் ஆலயதரிசனம் செய்வது சிறப்பு .. 

சாகாவரம் பெறுவதற்காக அமிர்தம்வேண்டி தேவர்களும் 
அசுரர்களும் பாற்கடலை கடைந்தபோது .. வலிதாங்காத வாசுகிபாம்பு விஷத்தைக்கக்கியது அச்சமயத்தில் கடலில் இருந்தும் விஷம்பொங்கியது .. இப்படி பாம்பினால் கக்கப்பட்ட ’ காலம் ’ என்ற நீலவிஷமும் .. பாற்கடலில் பிறந்த ‘ ஆலம் ‘ என்கிற கருப்புவிஷமும் சேர்ந்து கருப்புப்புயல்போல் கொடிய வெப்பமும் .. கடும் புகையும் 
கொண்டதாக மாறி உலகை வருத்தத் தொடங்கியது .. 

விஷத்தைக்கண்டு பயந்த தேவர்கள் கயிலாயம் சென்று ஈசனிடம் முறையிட்டனர் .. அப்பொழுது ஈசன் தன்நிழலில் இருந்து தோன்றியவரும் .. பேரழகருமாகிய
சுந்தரரை அனுப்பி அவ்விஷத்தைக் கொண்டுவரும்படி கட்டளையிட .. சிவபெருமான் கட்டளைப்படி சுந்தரரும் கொடிய ஆலகாலவிஷத்தை ஒருதுளியாக கொண்டுவந்தார் .. 

அந்த ஆலகால விஷத்தை ஒருகணநேரத்தில் உட்கொண்டார் சிவபெருமான் .. இதனால் ஈரேழு உலகிற்கும் பாதிப்புவரும் என்று கருதிய பார்வதிதேவி விஷம் முழுவதும் ஈசனின் கழுத்திலேயே தங்குமாறு செய்தார் .. அன்றுமுதல் ஈசன் திருநீலகண்டர் என்றழைக்கப்பட்டார் .. 

ஏகாதசியன்று விஷமுண்ட பெருமான் துவாதசிமுழுவதும் பள்ளிகொண்டநிலையில் இருந்து திரயோதசிநாளில் பகலும் இரவும் சந்திக்கும் மாலைவேளையில் எழுந்து ( 4.30 - 6.00 மாலை ) உமையவளை ஒருபக்கம் கொண்டு சூலத்தை கழற்றி மருகத்தை ஒலித்து .. ‘ சந்தியாநிருத்தம் ‘ எனும் நடனம் ஆடினார் .. இந்நாட்டியத்தைக்கண்ட தேவர்கள் 
“ ஹரஹர “ என்று மகிழ்ச்சிக்குரல் எழுப்பினர் .. 

துன்பங்களைப்போக்கி இன்பங்களைத் தரும் இந்தப்புனிதமான பிரதோஷவேளையில் ஈசனையும் .. நந்தீஸ்வரரையும் வழிபாடு செய்து வாழ்வில் அனைத்து நலன்களையும் பெறுவோமாக ! ஓம் நமசிவாய ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

Swamiye Saranam iyyappa...Guruve Saranam SaranamGOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY AND A DIVINE " PUTHRADA EKADASI " & MAY LORD VISHNU BLESS YOU AND SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH .. HAPPINESS AND MAY YOU BE BLESSED WITH A SON TOO .. " OM NAMO NAARAAYANAAYA " ..





அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று ஏகாதசி விரதமும் அனுஷ்டிப்பதால் ஆலயம் சென்று மஹாவிஷ்ணுவைத் தரிசிப்பது சாலச்சிறந்தது .. தங்களனைவரது பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து குடும்பத்தில் சுபீட்சமும் .. மகிழ்ச்சியும் நிலவிட கருணாமூர்த்தியைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் நாராயணாய வித்மஹே ! 
வாசுதேவாய தீமஹி ! 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! 

கங்கையைவிடச் சிறந்த தீர்த்தம் இல்லை .. விஷ்ணுவைவிட உயர்ந்த தெய்வம் இல்லை ..
காயத்ரியைவிட உயர்ந்த மந்திரமில்லை .. 
தாயிற் சிறந்ததோர் கோவிலும் இல்லை “ .. என ஞானநூல்கள் கூறுகின்றன .. 

இன்றைய ஏகாதசியை “ புத்ரதா ஏகாதசி “ என்றழைப்பர் ..
இதனை புத்திரபாக்கியம் வேண்டியிருப்போர் அனுஷ்டிப்பார்கள் .. தீயபுத்திரர்களை பெற்றெடுப்பதை விட சர்வ நற்குணங்கள் அடங்கிய புத்திரனை பெறுவது மிகவும் துர்லபமானதாகும் .. அப்பேர்ப்பட்ட சற்புத்திரனை ஈன்றெடுக்க ரிஷி .. முனிவர்களின் ஆசீர்வாதமும் மனதில் சதா பகவானின் மீது பக்தியும் இருத்தல் வேண்டும் .. இக்கலியுகத்தில் நற்குணபுத்திரர்களை பெற சுலபமான வழி புத்ரதா ஏகாதசியே ! 

எவர் ஒருவர் புத்ரதா ஏகாதசி மஹாத்மியத்தை படிக்கின்றாரோ .. கேட்கின்றாரோ அல்லது விதிப்பூர்வமாக அனுஷ்டிக்கிறாரோ அவர் சர்வநற்குணங்களும் கொண்ட உத்தமமான புத்ர ரத்தினத்தை பெறுவார் .. ஸ்ரீமன் நாராயணன் அருளால் மோட்சப்பிராப்தியையும் அடைவார்கள் .. என்று ஸ்ரீகிருஷ்ணர் யுதிஸ்டிரமன்னருக்கு அருளியுள்ளார் .. 

கருணாகரனைப் போற்றுவோம் ! கவலைகளை துரத்துவோம் ! ஓம் நமோ நாராயணாய ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

Swamiye Saranam Iyyappa....Guruve Saranam Saranam.....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SATURDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. MAY HE SHOWER YOU WITH GOOD HEALTH .. HAPPINESS AND JOY WHICH LASTS FOREVER .. " OM NAMASHIVAAYA " .. JAI BHOLE NATH ..

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சனிக்கிழமையாகிய இன்று .. ஈஸ்வரனைத் துதித்து தங்களனைவரது கிரகதோஷங்களும் நீங்கி சகலசம்பத்துக்களும் பெற்று மகிழ்ச்சியுடன்வாழ ஈசனைப்
பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !! 

கலியுகத்தில் பிறவி எடுத்தோர் உய்யும் மார்க்கத்தைப் பெறுவதற்குத் துணையாக இருப்பது .. சிவமந்திரம் ..
சிவதரிசனம் .. சிவ வழிபாடு முதலியனவாகும் .. 
இவை மூன்றும் வாழ்வில் இன்றியமையாததாகும் .. சிவனே எல்லா உலகங்களுக்கும் எல்லா உயிர்களுக்கும் முதலானவன் .. எல்லாம் சிவமயம் ! எங்கும் சிவமயம் ! எதிலும் சிவமயமே !! 

மஹாபாரதத்தில் வேதவியாசர் அர்ஜுனனைப் பார்த்து ..
“ எவன் ஒருவன் வைகறையில் துயிலெழுந்து மனத்தூய்மையோடு ருத்ரஜபம் செய்கின்றானோ அவன் இவ்வுலகில் அடையமுடியாத ஐஸ்வர்யம் என்று எதுவும் இல்லை “ .. என்று சொல்கிறார் .. 

சிவசிவ என்கிலர் தீவினையாளர் ! 
சிவசிவ என்றிடத் தீவினைமாளும் ! 
சிவசிவ என்றிடத் தேவரும் ஆவார் ! 
சிவசிவ என்றிடச் சிவசக்தி தானே ! 
என்னும் திருமூலரின் திருமந்திரமே ! 
சிவமூல மந்திரமாகும் !! 

சிவ சிவ என்று தினமும் மனதால் நினைத்து உச்சரித்தாலே போதும் பாவங்கள் நீங்கும் .. மனம் தூய்மை அடையும் .. சிவனைத் துதித்து அவனருளால் அவன் அருள் பெறுவோமாக !! 
“ ஓம் நமசிவாய “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM.....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A DIVINE FRIDAY AND A BLESSED " VARALAKSHMI VIRADAM " TOO . MAY GODDESS MAA LAKSHMI SHOWER HER BLESSINGS WITH BEST HEALTH .. WEALTH .. SUCCESS .. AND PROSPERITY .. " JAI MATA DI "

அனைவருக்கும் என் அன்பார்ந்த் காலை வந்தனங்கள் .. சர்வமங்களங்களையும் தந்தருளும் திருமகள் நம் இல்லங்களில் திருவடி பதிக்கும் நாளாகிய வரலக்ஷ்மி விரதநாளில் அன்னையைத் துதித்து தங்களனைவரும் 
நீண்ட ஆயுள் .. புகழ் .. செல்வம் .. நல்லாரோக்கியம் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ அன்னை மஹாலக்ஷ்மியைப்
பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் மஹாலக்ஷ்மீ ச வித்மஹே ! 
விஷ்ணுபத்னீ ச தீமஹி ! 
தந்நோ லக்ஷ்மீ ப்ரசோதயாத் !! 

கோடிநன்மைதரும் ஆடிவெள்ளியும் ..வரலக்ஷ்மி விரதமுமாகிய இன்று தேடிச்சென்று வழிபடவேண்டிய ஆலயம் அம்பிகைக்குரிய ஆலயமாகும் .. 

வாழ்க்கைக்குத் தேவை அருளா பொருளா என்று ஆராய்ந்து பார்க்கும்பொழுது .. அருளோடு வரும் பொருள்தான் என்று பதில்கிடைக்கும் .. அந்தப்பொருள் வளம் கொடுப்பவளை நாம் லக்ஷ்மி என்றும் திருமகள் என்றும் அழைக்கின்றோம் .. அஷ்டலக்ஷ்மிகளின் அருளிருந்தால் வாழ்க்கையில் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் பெற்றிடலாம் .. 

அங்ஙனம் வரம்கொடுக்கும் லக்ஷ்மியை “ வரலக்ஷ்மி “ என்றழைத்து விரதம் இருந்து வழிபட ஏற்றநாளே ஆடிமாதம் கடைசி வெள்ளிக்கிழமையாகும் .. அனைத்து துன்பங்களும் உந்தனருள் பெற்றுவிட்டால் ஓடுவதும் உண்மையன்றோ..? 

இன்றோடு துயர்விலக இனிய தனலக்ஷ்மியே ! திருமகளே
வருக ! வருக ! நம்வாழ்வில் அமைதி கிடைக்கவும் .. ஆனந்தம் வந்துசேரவும் .. இனிவருடம் முழுவதும் வசந்தம் வீசிடவும் அருள்புரிவாய் அன்னையே ! 

ஸ்கந்தபுராணத்தில் வரலக்ஷ்மி விரதத்தின் மஹிமையை சிவபெருமான் விளக்குகிறார் -
சுமங்கலிகளால் இவ்விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது .. செல்வம் .. மற்றும் மங்களத்தின் இருப்பிடமாக மஹாலக்ஷ்மி விளங்குகிறாள் .. அறிவுசார்ந்த நற்குணமுள்ள மக்கட்பேறு .. கணவரின் ஆரோக்கியம் .. மற்றும் நீண்ட ஆயுள்வேண்டி மஹாலக்ஷ்மி பூஜை செய்யப்படுகிறது .. 

விரதத்தன்று தாமரைகோலம் வரைந்து அதன்நடுவில் தேர்வடிவ சிற்பம் அல்லது பலகை வைக்கவேண்டும் .. புது அரிசி .. மாவிலை .. தேங்காயுடன் கூடிய கலசத்தை அதில் வைத்து மஹாலக்ஷ்மியை ஆவாஹனம் செய்யவேண்டும் .. 

குடத்தில் இருக்கும் புது அரிசி .. எதிர்கால வளர்ச்சியையும்
சுபீட்சத்தையும் குறிப்பதாகும் .. கலசத்துக்கு பூஜைசெய்தபிறகு கணேஷ பூஜையும் .. மாங்கல்ய பூஜையும் நடத்த வேண்டும் .. அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம் .. கனகதாரா ஸ்தோத்திரம் .. படிப்பதோ கேட்பதோ நல்லது .. இதனால் மேலும் ஐஸ்வர்யம் பெருகும் .. வரலக்ஷ்மி பூஜையில் முக்கிய அம்சமே பெண்ணின் வலக்கையில் ஒன்பது முடிச்சுகள் போட்ட ரட்சை ( காப்பு ) கட்டுவதுதான் .. 

பூஜை முடிந்தபின் குங்குமம் .. மஞ்சள் கயிறு .. பூ வஸ்திரம் .. சுமங்கலிகளுக்கு தானமாக அளிப்பார்கள் .. 
அன்னையின் அருட்கடாக்ஷ்ம் பெற்று நீண்ட ஆயுளுடன் 
என்றும் அர்த்தநாரீஸ்வரியாக வாழ அருள்புரிவாளாக ! 
“ தீர்க்கசுமங்கலிபவ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

Swamiye saranam...Guruve saranam...Panvel Balagane Potri Potri.GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF BHAGAVAN BRIHASPATHI .. MAY THE GOD OF WISDOM ENLIGHTENS THE MIND AND RELIEVE YOU FROM ALL THE AILMENTS AND NEGATIVE FORCES .. " JAI SHREE GURU DEV " ..


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
குருவருளும் .. இறையருளும் கூடிய இந்நன்னாளில் .. குருபகவானத் துதித்து தங்களனைவரது கிரகதோஷங்களும் நீங்கி இதுவரை வாழ்வில் சந்தித்து வந்த அனைத்து தோல்விகளிலிருந்தும் விடுதலை பெற்று .. எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றி பெற குருபகவானைப் பிரார்த்திகின்றேன் .. 

ஓம் வ்ருஷபத் வஜாய வித்மஹே ! 
க்ருணி ஹஸ்தாய தீமஹி ! 
அதிதேவதா ப்ரயதியதிதேவதா ஸஹித 
ப்ரஹஸ்பதி க்ரஹாய நமஹ !! 

வியாழனுக்கு “ குரு “ என்றும் .. “ ப்ரஹஸ்பதி “ என்றும் 
சிறப்புப் பெயர்கள் உண்டு .. பிரஹஸ்பதி என்றாலே அறிவில் மிகச்சிறந்தவன் என்ற அர்த்தம் தொனிக்கும் .. 
நவக்கிரகங்களில் தலைசிறந்தவராக குரு கருதப்படுகிறார் 

பிரஹஸ்பதி தேவர்களுக்கு தலைவராகவும் .. குருவாகவும் இருப்பவர் .. பிரம்மாவுக்கும் பிடித்தமானவர்
இவருடைய ஸ்வரூப லக்ஷ்ணம் மிகவும் அற்புதமானது 
விந்தியமலைக்குமேல் குருவிற்கு ஆஸ்ரமம் உண்டு ..
சிந்துதேச அதிபதியாக இருப்பவர் ஆங்கீரச கோத்ரம் இவருடையது .. 

வடக்கு ஈசான்ய திக்குகளுக்கு அதிபதி ..எட்டு குதிரைகள் 
பூட்டிய தேரில் மேருமலையை வலம்வருபவர் .. இவருடைய நன்மதிப்பை பெறவேண்டுமானால் இந்திரனையும் .. பிரம்மனையும் வழிபட்டு வரவேண்டும் 

சூரியனுக்கு வடக்கில் நீளமான சதுரமண்டலத்தில் வடக்கு முகமாக வீற்றிருப்பவர் .. பாஷைகளில் சமஸ்கிருதத்தை தன்னுடையதாக கொண்டவர் குளுமையான வஸ்துவில் மிகப் பிரியம் உண்டு .. 
குரு என்ற சொல்லுக்கு ” அஞ்ஞானத்தைப் போக்குகிறவர்” என்ற பொருள் உண்டு .. ஜோதிட சாஸ்திரத்தில் 
“ குரு “ என்றால் வியாழபகவானையே குறிக்கும் .. 

எண்களில் ‘ 3 ‘ என்கிற மதிப்பை இவருக்கு ஜோதிட சாஸ்திரம் கொடுத்துள்ளது ..
“ பிரதி தேவோ ஜவலக்ரஹம் ” என்று வியாழபகவானை சொல்வார்கள் .. இதன் அர்த்தம் “ நம்மனதில் பிரதிபலிக்கின்ற தேஜோமய ஸ்வரூபத்தை காட்டுகிற கிரகம் எதுவென்று கேட்டால் அது குருபகவானுக்குரிய மண்டலம் என்று பளிச்சென்று சொல்லிவிடலாம் .. 

குருவானவர் பொன்வண்ண மேனியர் .. நான்கு திருக்கரங்கள் உண்டு .. கமண்டலம் .. அட்சமாலை யோகதண்டம் ..அபயம் .. என்பவற்றை அந்தக்கரங்களில் காணலாம் ..

குருகாயத்ரியை தினமும் பாராயணம் செய்கிறவர்களுக்கு எந்தகுறையும் வராது .. இருக்கின்ற குறைகளும் நீங்கிவிடும் .. உடல்வலிமை .. உளவலிமையைத் தருபவரும் இவரே ! தலைவணங்கா தலைமைப்பதவியையும் தருபவர் குருபகவானே ! 

குருபகவானைப் போற்றுவோம் ! அவரது அருட்கடாக்ஷ்த்தையும் பெற்றிடுவோம் ! 
“ ஓம் குருவே சரணம் “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..


 

POOJA AT SANNIDHANAM..SWAMIYE SARANAM IYYAPPA..GURUVE SARANAM



SWAMIYE SARANAM IYYAPPA....GURUVE SARANAM SARANAM...PANVEL BALAGAN PATHAM POTRI...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED WEDNESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF GARUDA BHAGAVAN .. MAY HE RELIEVE YOU FROM ALL EVIL FORCES AND SHOWER YOU WITH BEST HEALTH & HAPPINESS .. " JAI SHREE GARUDA DEV "

 







 
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. கருடாழ்வார் பிறந்த ஆடிமாதம் சுவாதி நட்சத்திரமாகிய இன்று .. ராகு .. கேது போன்ற சர்ப்பதோஷங்கள் நீங்கி .. தங்களனைவரது வாழ்விலும் மங்களத்தைத் தந்தருளுமாறு கருடபகவானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
ஸுவர்ணபக்ஷாய தீமஹி ! 
தந்நோ கருடஹ் ப்ரசோதயாத் !! 

பெரியதிருவடியான கருடாழ்வார் பிறந்தது ஆடிமாதம் சுவாதி நட்சத்திரத்தன்றுதான் .. இந்தத் திருநாளில் கருடதரிசனம் செய்வதாலும் .. கருடனை வழிபடுவதாலும் .. சகலதோஷங்களும் நீங்கும் .. மாங்கல்யம் பலம்பெறும் .. 

கருடாழ்வாரை பெரியதிருவடி என்றும் ஸ்ரீஅனுமனை சிறியதிருவடி என்றும் சொல்வார்கள் .. எந்தநேரமும் எல்லாவிதங்களிலும் திருமாலுக்கு திருப்பணிகள் செய்யும் நித்தியசூரிகளில் கருடனும் .. ஆதிசேஷனும் பிரதானமானவர்கள் ..

இந்திரனே ! வல்கிய முனிவரின் சாபத்தால் கருடனாக பிறந்ததாக புராணம் கூறுகிறது .. ஆடி சுவாதி நாள் அன்று 
அவதரித்த கருடனுக்கு பல்வேறு கோவில்களில் சாயா பரிவட்டம் கட்டுவார்கள் .. அதாவது பாம்பு .. தேள் .. பூரான்
வரையப்பட்ட நீண்ட வஸ்திரமாகும் .. பெருமாள் கோவில்
மூலவருக்கு நேர் எதிராக கைக்கூப்பிய நிலையில் எழுந்தருளி இருப்பவர் கருடாழ்வார் .. பெருமாளின் வாகனமான இவர் வைகுண்டத்திலிருந்து திருமலையான சப்தகிரியை ( திருப்பதி ) பூலோகத்திற்கு கொண்டுவந்தவராம் .. 

இதன்காரணமாக சப்தகிரி என்றும் .. ஏழுமலைகளில் ஒருமலைக்கு கருடனின் பெயரில் “ கருடாத்ரி “ என்று பெயரிடப்பட்டுள்ளது .. கருடன் பெருமானின் வாகனம் .. ஆனால் .. அந்த கருடனுக்கும் வாகனம் இருப்பதாக விஷ்ணு சகஸ்ரநாமத்தில் “ சுபர்ணோ வாயுவாஹன “
என்று குறிப்பிட்டுள்ளார் .. அதாவது காற்றே அவரது வாகனம் .. 

உடல் முழுவதும் அஷ்டநாகங்களை ஆபரணமாக தரித்திருப்பார் .. ஒருகாலை முழங்காலிட்டு மற்றொரு காலை ஊன்றி அமர்ந்தநிலையில் இருகரங்களையும் எம்பெருமானின் திருப்பாதங்களை தாங்குவதற்காக நீட்டியிருப்பார் .. இருபுறமும் பெரிய இறக்கைகள் இருக்கும் .. பெருமாள் கோவில்களில் கொடிமரமானது 
“ துவஜஸ்தம்பம் “ என்றும் “ கருடஸ்தம்பம் “ என்றும் அழைக்கப்படுகிறது .. பெருமாள் கருடனை வாகனமாக ஏற்றபோது “ வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியிலும் விளங்குவாய் “ என்று வரமளித்தார் .. 

கருடதரிசனம் சுபசகுனமாகும் .. கருடன் மங்களவடிவினன் .. வானத்தில் கருடன் வட்டமிடுவதும் 
கத்துவதும் .. நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது 
கோவில் கும்பாபிஷேகம் .. யாகம் .. சிறப்புவழிபாடுகள் நடக்கும்போது .. கோவிலுக்கு நேர்மேலே கருடன் வட்டமிடுவதை இன்றும் காணலாம் .. 

ராமாயணத்தில் ராமபிரானின் தூதனாக இலங்கைக்கு சென்று சீதாபிராட்டியை சந்தித்தவர் அனுமன் .. அதேபோல கிருஷ்ண அவதாரத்தில் தாயார் ருக்மணிகொடுத்த ஓலையை ஸ்ரீகிருஷ்ணரிடம் கொடுக்க தூதுசென்றவர் கருடன் .. அனுமனும் கருடனும் பகவானின் தூதர்கள் .. இவர்களிடம் மனமுருகவேண்டினால் நமது பிரார்த்தனைகள் .. வேண்டுதல்களை பகவானிடம் கொண்டு சேர்ப்பார்கள் என்பது ஐதீகம் .. 

கருடபகவானைப் போற்றுவோம் ! வாழ்வில் சகலநலன்களையும் பெறுவோமாக ! 
“ ஓம் கருடபகவானே ! நமோஸ்துதே “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARNAM SARANAM...PANVEL BALGANE SARANAM IYYAPPA...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF GODDESS DURGA .. MAY HER BLESSINGS REMOVE ALL THE OBSTACLES AND EVIL FORCES FROM YOUR LIFE AS SHE REMOVES THE DARKNESS FROM THE UNIVERSE TOO .. " OM SHAKTHI " JAI MATA DI ..

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. நான்காம் ஆடிச்செவ்வாயாகிய இன்று அன்னை துர்க்கையம்மனைப் பிரார்த்தித்து தங்களனைவரது கிரகதோஷங்களும் .. அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து வாழ்வில் வசந்தம் மலர்ந்திடவும் அன்னையைப் போற்றுகின்றேன் .. 

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே ! 
துர்க்காயை ச தீமஹி ! 
தந்நோ தேவீ ப்ரசோதயாத் !! 

“ ஆடி “ என்பது புராணங்களில் குறிப்பிடப்படும் ஓர் அசுரனின் பெயர் .. பிரம்மதேவனை வேண்டி பலவரங்கள் பெற்ற இவன் .. நினைத்தமாத்திரத்தில் விரும்பிய உருவத்தைப் பெறும் ஆற்றல் கொண்டவன் .. 

ஒருமுறை பரமேஸ்வரனையே ஏமாற்றவிரும்பி உமாதேவியின் உருவமாக உருமாறி ஈசனை அனுகினான்
இதனை அறிந்த சிவபெருமான் தன் நெற்றிக்கண்ணைத் திறந்து அவனை அழித்தார் .. 

சிவனையடையும் பக்திஞானம் அவனுக்கிருந்த காரணத்தால் அன்னை உமாதேவி மனமிரங்கி அவன்நினைவாக மாதங்களில் ஒன்றை ” ஆடி “ என்று அழைத்தாள் .. அதுவே அன்னைக்கு ஆராதனை செய்யும் மாதமாகவே அமைந்தது .. 

ஆடிமாதம் என்றாலே அம்மன் கோவில்களில் திருவிழாவும் .. கூழ் ஊற்றுவதும் வழக்கம் ,, இது ஏன் என்று தெரியுமா ..? 
தவத்தில் சிறந்து விளங்கிய ஜமத்கனி முனிவரை பொறாமை காரணமாக கார்த்தவீரியார் சுனனின் மகன்கள்
கொன்றுவிடுகின்றனர் .. இதை கேள்விப்பட்டு துக்கம் தாங்கமுடியாமல் ஜமத்கனி முனிவரின் மனைவி ரேணுகாதேவி உயிரைவிட முடிவு செய்து தீயைமூட்டி 
அதில் இறங்குகிறார் .. அப்போது இந்திரன் மழையாகமாறி
தீயை அணைத்தார் .. தீக்காயங்களால் ரேணுகாதேவியின் உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டது .. வெற்றுடலை மறைக்க அருகில் இருந்த வேப்பமர இலைகளை பறித்து ஆடையாக அணிந்தார் .. 

ரேணுகாதேவிக்கு பசி ஏற்பட்டதால் அருகில் உள்ள கிராமமக்களிடம் சென்று உணவு கேட்டார் ..அப்போது மக்கள் அவருக்கு பச்சரிசி .. வெல்லம் .. இளநீரை கொடுத்தனர் .. இதைக்கொண்டு கூழ்தயாரித்து அருந்தினார் .. அப்போது சிவபெருமான் தோன்றி ரேணுகாதேவியிடம் உலகமக்களின் அம்மை நோய்நீங்க நீ
அணிந்த வேப்பிலை சிறந்த மருந்தாகும் ! நீ உண்ட கூழ் சிறந்த உணவாகும் ! இளநீர் சிறந்த நீராகாரமாகும் ! என்று வரம் அளித்தார் .. இச்சம்பவத்தை நினைவு கூறும்வகையில் ஆடிமாதத்தில் அம்மன் கோவில்களில் கூழ்வார்க்கும் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது

பக்திகமழும் ஆடிமாதத்தில் கருணாரூபிணியாகிய அன்னையைப் போற்றுவோம் ! அவள் அருட்கடாக்ஷ்த்தையும் பெற்றிடுவோமாக ! 
ஓம் சக்தி ஓம் ! வாழ்க வளமுடனும் ! என்றும் நலமுடனும் !

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A SUCCESSFUL MONDAY WITH THE DIVINE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA .. MAY HE SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH .. AND HAPPINESS ON THIS BLESSED " SHASHTI THITHI " .. OM MURUGA .. SWAMI SRANAM...GURUVE SARANAM SARANAM

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையாகிய இன்று சஷ்டி விரதமும் வருவதால்
ஆலயம் சென்று கந்தப்பெருமானை தரிசனம் செய்வது சாலச்சிறந்தது .. தங்களனைவருக்கும் வாழ்வில் நிம்மதி 
சந்தோஷம் .. உற்சாகம் என்றும் நிறைந்திட கந்தப்பெருமானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹேஷ்வர புத்ராய தீமஹி ! 
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத் !! 

முருகனுக்கு கிழமை .. நட்சத்திரம் .. திதி ஆகிய மூன்றிலும் விரதங்கள் இருக்கின்றன .. 
கிழமைகளில் - செவ்வாய் ..
நட்சத்திரத்தில் - கிருத்திகை ..
திதியில் - சஷ்டி .. ஆகியவை ..

சஷ்டிதிதி என்பது அமாவாசையிலிருந்து ஆறாம் நாள் வருவதாகும் .. 
ஆறு கார்த்திகை நட்சத்திரங்கள் முருகனுக்கு உகந்தவை 
முருகனுக்கு ஆறுமுகங்கள் உள்ளதால் சஷ்டிதிதி முருகனுக்கு உரியதாக கூறப்படுகிறது .. 

சிவன் தன் நெற்றிக் கண்ணிலிருந்து ஆறுதீப்பொறிகளை
வெளியேற்றினார் .. ஆறு தீப்பொறிகளையும் வாயு .. அக்னி .. இருவரும் கங்கையில் கொண்டுபோய் சேர்த்தனர்
கங்கையோ அந்த தீப்பொறிகளை கடைசியாக சரவணப்பொய்கையில் கொண்டுபோய்ச் சேர்த்தாள் .. அங்கிருந்த ஆறுதாமரைகளில் சென்று தஞ்சம் அடைந்த தீப்போறிகள் .. ஆறு குழந்தைகளாக உருமாறி தவழ்ந்தன

” அருவமும் உருவமுமாகி .. அநாதியாய் பலவாயொன்றாய்ப் பிரம்மமாய் நின்ற ஜோதிப்பிழம்பதோர் மேனியாக கருணைகூர் முகங்களாறும் .. கரங்கள் பன்னிரெண்டுங் கொண்டே ஒரு திருமுருகன் வந்தாங் குதித்தனன் உலகமுய்ய .. “ 
இவ்வாறு முருகனின் தோற்றம் பற்றி கந்தபுராணம் கூறுகிறது .. 

முருகப்பெருமான் பத்மாசூரனுடன் போர்புரிந்து அவனது ஆணவத்தை அடக்கி ஆட்கொண்ட நாளே சஷ்டியாகும் ..
இவர்கள் இருவருக்கும் போர்நடந்த இடம் திருச்செந்தூர் திருத்தலம் .. இதனை நினைவுபடுத்தும் வகையில் கந்தசஷ்டியன்று கடற்கரையோரம் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறும் .. அன்றையதினம் கடல் முருகனின் அருளால் சம்ஹாரம் நடைபெறுவதற்கு வசதியாக உள்வாங்கிச்செல்லும் .. சூரசம்ஹாரம் முடிந்து முருகன் 
கோவிலுக்கு திரும்பும்போது கடல் மீண்டும் பழைய நிலையை அடையும் .. இந்த அரியகாட்சி இன்றும் நடைபெற்று வருவதைக் காணலாம் .. 

நமது ‘ அகம் ‘ என்கிற நம்மனதில் இருக்கிற பேராசை .. வெறுப்பு .. ஆணவம் .. கோபம் .. வஞ்சம் தீர்த்தல் .. கருமித்தனம் உள்பட பல்வேறு தீயகுணங்களையும் அழித்து நமக்கு நல்வழி காட்டுகிறார் .. 

நாமும் கந்தனைப் போற்றி அவன் திருப்பாதங்களில் சரணடைவோமாக ! ஓம் சரவணபவாய நமஹ ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM.....

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY AND A DIVINE " GARUDA PANJAMI " AND MAY GARUDA BHAGAVAN MAKES YOUR TRAVEL THROUGH THE WORLD SMOOTHER AND FREE OF OBSTACLES .. 
" JAI SHREE GARUDA BHAGAVAN " 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஞாயிற்றுக்கிழமையும் .. ஆடிமாதம் வளர்பிறை பஞ்சமித் திதியுமாகிய இன்று பெருமாளின் வாகனமாகவும் .. கொடியாகவும் விளங்கும் கருடபகவானுக்கு உகந் 
“ கருடபஞ்சமி “ தினமுமாகும் .. கருடனைப் போன்ற பலசாலியும் .. புத்திமானாகவும் .. வீரனாகவும் மைந்தர்கள் அமைந்திடவும் .. கனிந்த வாழ்க்கை தங்களனைவருக்கும் கிடைத்திடவும் கருடபகவானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
ஸுவர்ணபக்ஷாய தீமஹி ! 
தந்நோ கருடஹ் ப்ரசோதயாத் !! 

திருமாலின் நித்யசூரிகளின் தலையாய கருடாழ்வார் எனும் பெரிய திருவடி அவதரித்த திருநாளையே 
“ கருடபஞ்சமி “ எனப் போற்றி வழிபடுகின்றோம் .. பெரிய திருவடியாக எப்போதும் பெருமாளை தாங்கும் பாக்கியம்கிட்டிய கருடபஞ்சமியன்று ஆதிசேஷன் விக்கிரகம் வைத்து சிறப்பு பூஜை செய்யப்படுவதாக ஐதீகம் .. 

கருடனின் உடலில் எட்டு ஆபரணங்களாக விளங்குபவையும் அஷ்டநாகங்களே ! பெருமாளின் வாகனம் கருடன் .. கருடசேவை எப்போதும் மிகவும் விசேடம் .. “ ஆழ்வார் “ என்ற சிறப்புப் பெயர் கருடாழ்வார்க்கு உண்டு .. பெருமாளின் தலைக்கு மேலேயும் கருடன் .. கருடக்கொடியாகவும் !
பெருமாளின் காலுக்கு கீழே கருடன் .. கருடவாகனமாகவும் திகழ்கின்றார் .. 

கருடமந்திரம் சக்திவாய்ந்த ஒன்று .. எதிரிகளை வெல்வதற்கும் .. விஷங்களை முறிக்கவும் .. மந்திர தந்திரங்களுக்கும் .. தீயசக்திகளை ஒடுக்குவதற்கும் .. வாதங்களில் வெல்வதற்கும் .. கருடமந்திரத்தை ஜபிப்பார்கள் .. 

கார்கோடகன் என்னும் நாகத்தை அடக்கிப் பிடித்துள்ளதால் கருடன் சனிபகவானின் விளைவுகளை மட்டுப்படுத்துபவர் .. ” சுபர்னோ வாயு வாகனா “ என்பார்கள் .. வாயுபகவானே ! கருடனுக்கு வாகனமாக அமைகிறார் .. 

கருடன் வேத சொரூபம் .. அதனால் குருவுக்குச் சமமானவர் .. கூடப்ப்றந்த சகோதரர்களின் நலத்தையும் .. வளத்தையும் கோரும் நோன்பே கருடபஞ்சமி .. ஆதலால் அவர்களை நமஸ்கரித்து ஆசிபெறவேண்டும் .. சிறியவர்களாக இருந்தால் ஆசீர்வாதம் செய்யவேண்டும்.

கருடனைப் போற்றுவோம் ! அவரது அருட்கடாக்ஷ்த்தையும் பெற்றிடுவோமாக .. 
ஓம் கருடபகவானே ! நமோஸ்துதே ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

SWAMIYE SARANAM....GURUVE SARANAM..TODAY POOJA AT SANNIDHANAM



GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED FRIDAY AND A DIVINE WISHES FOR THE " AANDAAL JAYANTI " TOO .. MAY GODDESS ' MAA ' BRING YOU COUNTLESS BLESSINGS AND ILLUMINATE YOUR LIFE WITH GOOD HEALTH .. WEALTH AND PROSPERITY .. " JAI MATA DI Panvel Balagane saranam iyyappa...Guruve Saranam Saranam


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. மூன்றாம் ஆடிவெள்ளியும் .. ஸ்ரீ ஆண்டாளின் திருநட்சத்திரமும் கூடிய “ ஆடிப்பூர நன்னாளில் “ அன்னையைத் துதித்து செய்யும் செயல்கள் அனைத்திலும் வெற்றிபெறவும் .. தங்கள்வாழ்வில் சுபீட்சம் நிறைந்திடவும் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் துளசிதோட்ட ஜனன்யை ச 
விஷ்ணுப்ரிய வித்மஹே ! 
ஸ்ரீரெங்கனொன்றினாய தீமஹி ! 
தந்நோ கோதா ப்ரசோதயாத் !!
பன்னிரு ஆழ்வாரங்களில் “ சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாகத் “ திருப்பாவைப் பூமாலையாலும் .. பாமாலையாலும் .. துதிக்கும் பேறுபெற்றவள் ஆண்டாள் ..
இவள் அவதரித்த நன்னாளே “ ஆடிப்பூரம் “ ..
வேதங்களின் வித்தாக விளங்கும் திருப்பாவையை நமக்கு வழங்கினாள் .. திருப்பாவையில் முப்பது பாசுரங்கள் உள்ளன .. “ ஏழேழு பிறவிக்கும் கண்ணா ! நீயே எனக்கு உற்ற உறவு “ என பாவைப்பாடலில் வலியுறுத்துகிறாள் ..
ஆயிரமாயிரம் ஆபரணங்கள் இருந்தாலும் ஓர் பெண் கழுத்துக்கு மாங்கல்யம்தான் உயர்ந்த ஆபரணம் ! இளம் பெண்களுக்கு மனதிற்கேற்ற நல்ல கணவன் வாய்க்க ஆடிப்பூர நன்னாளில் ஆண்டாளை அவசியம் வணங்கவேண்டும் ..
எல்லா கோவில்களிலும் அம்மன் .. அம்பாளுக்கு வளையல்கள் அணிவிப்பார்கள் .. பக்தர்கள் காணிக்கையாக தரும் வளையல்களை அம்மனுக்கு சாற்றிவிட்டு அதனை மங்கள பிரசாதமாக மீண்டும் நமக்கே தருவார்கள் .. அதனை நாம் அணிந்து கொண்டால் சகலநலன்களையும் .. வளங்களையும் .. நீங்காத செல்வத்தையும் .. திருமணபாக்கியத்தையும் தந்தருள்வாள் அன்னை !
ஆடிவெள்ளியில் அன்னையை நினைப்போம் !
பாடியே நிதமும் பதமலர் பணிவோம் ! 
தேடியே வருவாள் ! சத்தியமும் இதுவே ! 
நாடியே நாமும் நம்பிக்கை கொள்வோம் !
” ஓம் சக்தி ஓம் “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

SWAMI SARANAM...GURUVE SARANAM SARANAM.....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE DIVINE BLESSINGS AND GUIDANCE OF OUR GURUSWAMY .. MAY HE RELIEVE YOU FROM ALL PAINS AND AILMENTS AND MAY YOU BE BLESSED WITH WEALTH AND A HAPPY LIFE .. " JAI GUR DEV "

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. குருவருளோடு இறையருளும் சேர்ந்துவரும் வியாழக்கிழமையாகிய இன்று .. தங்களனைவரது அனைத்து தோஷங்களும் நீங்கி .. தாங்கள் வேண்டும் .. வேண்டியவரங்கள் யாவும் நிறைவேறவும் .. அனைத்திலும் வெற்றி காணவும் பிரஹஸ்பதியாகிய குருபகவானைப் போற்றுகின்றேன் ! 

ஓம் வ்ருஷபத்வஜாய வித்மஹே ! 
க்ருணிஹஸ்தாய தீமஹி ! 
தந்நோ குரு ப்ரசோதயாத் ! 
அதிதேவதா ப்ரத்யதி தேவதா ஸ்ஹித ! 
ப்ரஹஸ்பதி க்ரஹாய நமஹ !! 

உத்தமனே ! உயர்ந்தவனே ! தத்துவத்தின் நாயகனே ! 
சித்தனே ! புத்திரருக்கு அதிபதியே ! பொன்மகனே ! நித்தம் பக்தியுடன் நின்பத்மபாதம் பணிவோம் ! ப்ரஹஸ்பதியே !
போற்றி ! போற்றி ! எமை காத்தருள்வாயாக !! 

உலகம் முழுவதும் உள்ள பணம் பொருள் .. பொன் .. விஷயங்களுக்கு குருவே அதிபதி .. எனவே பொருளாதாரம் உயரவேண்டுமானால் குருவை வழிபடவேண்டும் .. திருமணம் நடைபெறவும் குருவினருள் வேண்டும் .. 

சிவபெருமானின் ஞானவடிவமான ஆதிகுரு தட்சிணாமூர்த்தியை வழிபடுபவர்களுக்கு அருளையும் .. ஞானத்தையும் வழங்கக் கூடியவர் .. எல்லா சிவன் கோவில்களிலும் சிவபெருமானின் ஞானவடிவான ஸ்ரீதட்சிணாமூர்த்தியையே குருவாக எண்ணி வழிபடுகிறார்கள் .. 

ஆனால் .. குரு வேறு ! தட்சிணாமூர்த்தி வேறு ! என்பதை புரிந்துகொள்ளவேண்டும் .. குருவுக்கு செய்யும் பரிகாரங்களை குருவுக்கே செய்யவேண்டும் .. குருவால் ஏற்படும் தோஷங்களுக்கு குருவையே வழிபடவேண்டும் 
அவரே ! ப்ரஹஸ்பதியாவார் ..

குருவே ! மேலான ப்ரஹ்மம் ! குருவே மேலான தனம் !
குருவே மேலான ப்ராப்யம் ! குருவே மேலான கல்வி ! 
குருவே மேலான ப்ராவகம் ! அப்பரம்பொருளையே உபதேசிப்பதால் குரு அதைக்காட்டிலும் உயர்ந்தவர் ! 

குருவின் காயத்ரி மந்திரத்தை ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் பாராயணம் செய்து .. குருதோஷங்கள் நீங்கி .. குருபகவானின் திருவருளும் .. அருட்கடாக்ஷ்த்தையும் பெறுவோமாக ! 
“ ஓம் குருவே சரணம் “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

SWAMIYE SARANAM IYYAPPA.. GURUVE SARANAM

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED WEDNESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD VISHNU .. MAY YOU BE RELIEVED FROM ALL YOUR PAINS AND ODDS AND SHOWER YOU WITH GOOD HEALTH &HAPPINESS .. 
" OM NAMO NAARAAYANAAYA " 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று ஸ்ரீநாராயணனைத் துதித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாக மலர்ந்திடவும்.. வாழ்வில் அனைத்து சௌபாக்கியங்களையும் பெற்று நல் ஆரோக்கியத்துடன் திகழவும் பகவானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் நாராயணாய வித்மஹே ! 
வாசுதேவாய தீமஹி ! 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! 

சுதர்சனசக்ர மஹிமை - 
உலக உயிர்களையெல்லாம் காத்தருளுகின்றவர் விஷ்ணுபகவான் .. ஏனெனில் காத்தல் தொழிலைச் செய்வது அவரே ! விஷ்ணுபகவான் இந்த தொழிலை புரியும் நிலையில் ஒருகையில் சுதர்சனம் எனும் சக்கரத்தையும் .. மற்றொருகையில் பான்ய சன்னியம் எனும் சங்கையும் .. இன்னொருகையில் கதையையும் தாங்கிய வடிவில் விளங்குகிறார் .. 

இவ் ஆயுதங்கள் அனைத்திலும் மேன்மைமிக்கது சுதர்சனச்சக்கரமாகும் .. விஷ்ணுபகவானிற்கு எத்தகைய சக்தி இருக்கின்றதோ அத்தகைய சக்கரத்திற்கும் உள்ளது 
ஆயுதங்களின் அரசன் என போற்றப்படுவதும் இதுவாகும்
இதனால் இதனை “ சக்கரத்தாழ்வார் “ எனவும் அழைப்பர்
எனவே இந்த சிறப்புமிக்க சக்கரத்தாழ்வாரின் பெருமைகளை இங்கே காண்போம் - 

இன்னல் நீக்கி .. இன்பம் அளிக்கவல்லது சுதர்சன சக்கரமாகும் .. கஜேந்திரனின் அவலக்குரல்கேட்டு அவ்விடம்வந்த விஷ்ணுபகவானின் கையிலிருந்து விரைந்து சென்ற சுதர்சனப் பெருமான் கஜேந்திரனை பிடித்திருந்த முதலையை பிளந்து அவனை காத்தருளி
மீண்டும் பகவானின் கரத்தில் வந்து சேர்ந்தது .. 

அதுமட்டுமா .. விஷ்ணுபகவான் கிருஷ்ணராக அவதாரம் செய்தபோது கிருஷ்ண பகவானை அவரது மஹிமையை அறியாத சிசுபாலன் பழித்துரைக்கின்றான் .. கிருஷ்ணரும் சிசுபாலனின் தாய்க்கு நூறுதடவைகள் சிசுபாலனின் பழிச்சொற்களை பொறுப்பேன் என வாக்களித்தார் .. அதனைப்பொருட்படுத்தாத சிசுபாலன் நூறுதடவைகள்
கடந்து நூற்றிஓராவது பழிச்சொல்லை கூறும்போது பகவானின் கையில் இருந்தசக்கரம் .. கண் இமைக்கும் பொழுதில் விரைந்து சென்று சிசுபாலனின் சிரசைக்கொய்து திரும்பியது .. 

இதனைத்தவிர அர்ஜுனன் மகன் அபிமன்யுவின் மரணத்திற்கு காரணமாக இருந்த ஜயத்ரதனை கொல்வதாக சபதம் முடித்த அர்ச்சுனனுக்காக மாதவன் கையிலிருந்த சக்கரத்தினால் சூரியனை மறைத்து பின் அதனை விலக்கவும் அதனால் ஜயத்ரதனை அர்சுனன் கொன்றான் .. 

இவ்வாறான மஹிமைகளைக் கொண்ட சக்கரத்தாழ்வாரை நாம் பக்தியுடன் வழிபட்டு வந்தால் பின்வரும் நன்மைகள் உண்டாகும் .. - 
மனதில் உள்ள பயம் விலகும் .. தீராத நோய்கள் நீங்கும் எதிரிகள் யாரும் இருக்க மாட்டார்கள் .. அவ்வாறு இருந்தால் அவர்கள் அழிந்து போவார்கள் .. செல்வ வளம் பெருகும் .. புத்தியில் தெளிவு உண்டாகும் .. முட்டாள்தனம் நீங்கும் இவற்றைத்தவிர சுதர்ஸன மஹாமந்திரத்தை தினமும் காலையில் கூறினால் அஞ்ஞான இருள் விலகும் .. தைரியம் பிறக்கும் .. 

எனவே ஒளிவீசக்குடிய வலிமை பொருந்திய வாசனைமிகுந்த துளசிமாலையைச் சூடிய பரந்தாமனின் திருக்கரத்திலே இருக்கின்ற சுதர்சனமாகிய சக்கரத்தாழ்வாரை வழிபட்டு சகலநன்மைகளையும் பெறுவோமாக ! 

ஓம் சுதர்சனாய வித்மஹே ! 
ஜ்வாலா சகராய தீமஹி ! 
தந்நோ சக்ர ப்ரசோதயாத் !! 

வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
அன்பு தோழி ஆறே....!!!!! 

நீ
கார்மேகங்கள் கலைந்து
பாசமழையாய் விழுந்து
அழகு அருவியாய் எழுந்து
புதுப்புனல் பொங்கி பாய்ந்து
ஓடையாய் நடைகட்டி
அகன்ற ஆறாய் எடைக்கட்டி
தேரோடும் உன் பவனி...
வேரோடிய உயிர்களெல்லாம்
பூபூத்து காய்கனிந்து பாரெல்லாம்
பார்த்தாயா பசுமை கொண்டாட்டம்....!!!

நீ விரியும் கரையெல்லாம்
மாந்தரின் திருவிழா திருக்கூட்டம்...

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM...




GOOD MORNING DEAR FRIENDS .. TODAY IS THE NEW MOON DAY " AADI AMAAVAASAI " .. MAJORITY OF YOUR THOUGHTS CAME FROM YOUR ANCESTORS .. IT'S AN AUSPICIOUS TIME FOR ANCESTRAL RITUALS FOR BRINGING RELIEF TO YOUR ANCESTORS' SOUL .. SO YOU CAN HAVE BETTER OVER ALL LUCK IN LIFE .. " JAI PITHURU DEVO BAWA " ..
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. மூன்றாம் ஆடிச் செவ்வாயும் .. ஆடிஅமாவாசையும் .. ஆடிப்பெருக்கும் ஒன்றாக வருவது அதிவிசேஷமாகும் .. அன்னை துர்க்காதேவியைப் பிரார்த்தித்து தாங்கள் வேண்டிய அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறவும் என்றும் வாழ்வில் வசந்தம் வீசிடவும் அன்னையைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே ! 
துர்க்காயை ச தீமஹி ! 
தந்நோ தேவீ ப்ரசோதயாத் !!
வானவியல் கணிப்பின்படி சூரியனும் .. சந்திரனும் ஒரேராசியில் இணையும் காலமே அமாவாசையாகும் .. சூரியனைப் “ பிதுர்காரகன் “ என்றும் .. சந்திரனை 
“ மாதுர்காரகன் “ என்றும் அழைக்கின்றோம் .. இவர்களை சிவசக்தி சொரூபமாக சாஸ்திரங்கள் கூறுகின்றன .. இந்த இரண்டு கிரகங்கள் சேரும் புனிதமான தட்சிணாயன காலத்தில் வரும் முதல் அமாவாசையாகிய இன்று முன்னோரையும் .. மறைந்த நம் தாய் தந்தையரையும் நினைத்து திதிகொடுப்பது .. புண்ணிய நதிகள் .. கடல் போன்ற இடங்களில் புனித நீராடி இஷ்ட தெய்வ ஆலயங்களில் வழிபாடு .. சிறப்பு பூஜைகள் செய்வது .. ஏழைகள் .. இல்லாதோர் .. இயலாதோருக்கு அன்னதானம்
வஸ்திரதானம் செய்வது நாம் செய்த பாவங்கள் .. கர்மவினைகள் .. தீவினைகள் அனைத்தையும் போக்கி வாழ்வில் புண்ணியத்தைச் சேர்க்கும் என்பது நம்பிக்கை ..
இத்தகைய வழிபாடுகளால் முன்னோர்கள் செய்த பாவவினைகள் நீங்கி அவர்களுக்கும் முக்திகிட்டும் .. அவர்களது பரிபூரண ஆசீர்வாதம் குடும்பத்தினர் அனைவருக்கும் கிடைக்கும் என்பது ஐதீகம் .. நாமும் இந்த புனிதமான நன்னாளில் முன்னோரை நினைந்து 
அவர்களது ஆசியையும் பெறுவோமாக ! 
“ ஓம் பித்ருதேவோ பவ “
இன்று ஆடிபதினெட்டாம் பெருக்கு .. ஆடிப்பெருக்காகும் ..
காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் .. 
18 என்ற எண் “ ஜெயத்தை “ அதாவது வெற்றியைக் குறிக்கும் ..
சித்தர்கள் - 18 
பகவத்கீதையில் - 18 அத்தியாயங்கள் 
சபரிமலை ஐயப்பன் கோயிலில் - 18 படிகள் 
நெல்முதலான தானியங்கள் - 18 எனப் பலவும் அந்த அடிப்படையிலேயேஅமைந்தன .. அதை அனுசரித்துத்தான் நீர்பெருக்கெடுத்து ஓடும் நதிக்கரைகளில் 18 படிகள் அமைத்தார்கள் .. உடலுக்கும் 
உள்ளத்துக்கும் ஆரோக்கிய்ம் தரும் காவிரி அன்னைக்கு 
“ ஆடி பதினெட்டு “ என்று விழாவும் எடுத்தார்கள் ..
ஆடி பதினெட்டு விழாவில் பெண்களே அதிகமாகப் பங்கேற்பார்கள் .. பத்து நாட்களுக்கு முன்னதாகவே நவதானியங்களை ஒருதட்டில் தூவி .. அத்துடன் சிறிதளவு மண்ணோ .. எருவோ கலந்து தண்ணீரும் தெளித்து வைப்பார்கள் .. விழாவுக்குள் அது முளைத்து வளர்ந்து இருக்கும் ..
அதை முளைப்பாலிகை அல்லது முளைப்பாரி என்பார்கள் 
ஆடிபதினெட்டு அன்று பிற்பகல் நேரத்தில் முளைப்பாலிகையைக் கையில் ஏந்தியபடி பெண்கள் ஆற்றாங்கரைக்குச் செல்வார்கள் .. போகும் வழியில் சிலமுக்கியமான இடங்களில் முளைப்பாலிகைகளைத் தரையில் வைத்துவிட்டு பெண்கள் எல்லோரும் வட்டமாக நின்று கும்மி அடிப்பார்கள் .. இப்படி ஊர்வலமாகக் கிளம்பிய பெண்கள் ஆற்றங்கரையை அடைய மூன்றுமணி நேரமாகும் .. ஆற்றங்கரையில் சுத்தமான ஓரிடத்தில் பசுஞ்சாணத்தால் பிள்ளையார்பிடித்து வைத்து அதன்முன்னால் முளைப்பாலிகைகளை வரிசையாக வைப்பார்கள் .. பிறகு
ஒருபாத்திரத்தில் சர்க்கரை .. பச்சரிசி ஆகியவற்றைபோட்டுத் தண்ணீரை ஊற்றிக்கலந்து பிள்ளையார் முன்னால் வைப்பார்கள் ..
அவரவர் பிரார்த்தனை செய்து சூடம் ஏற்றி வணங்கிய பின் முதியசுமங்கலி ஒருவர் மஞ்சள் தடவிய நூல் சரடைத் தருவார் .. சிலர் அதைக் கழுத்திலும் .. சிலர் கையிலும் கட்டிக்கொள்வார்கள் .. அதன்பிறகு பெண்கள் எல்லோரும் அவரவர் தாம் கொண்டுவந்த முளைப்பாலிகைகளை சிறிது சிறிதாக எடுத்து ஆற்றில் விடுவார்கள் ..
சிறு கறுப்புமணிகளால் ஆன கருகமணி .. வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்தாலான பனை ஓலைகளைச் சிறிய வட்டமாகச்சுற்றிச் செய்யப்பட்ட காதோலை .. ஆகியவற்றையும் ஆற்றில்விடுவார்கள் .. 
நுரைபொங்கப் பெருக்கெடுத்து ஓடிவரும் காவிரி அன்னையின் வருகையால் பயிர் .. பச்சைகள் எல்லாம் முளைவிட்டுத் தழைக்கப்போகின்றன .. அவள் இப்போது மசக்கையாக இருக்கிறாள் என்ற ஐதீகத்தில் அவ்வாறெல்லாம் செய்யப்படுகின்றன .. 
அன்னையின் அருளால் சகல சௌபாக்கியங்களும் பெறுவீர்களாக ! ஓம் சக்தி ஓம் ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்

TODAY POOJA



SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM


GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A SUCCESSFUL MONDAY AND A BLESSED " SOMAVAR " TOO .. MAY LORD SHIVA'S DIVINE BLESSINGS BRING YOU ETERNAL SUCCESS .. GOOD HEALTH .. WEALTH .. AND HAPPINESS .. 
" OM NAMASHIVAAYA " .. JAI BHOLE NATH " 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையாகிய இன்று சோமவார விரதத்தை அனுஷ்டித்து சிவனின் அன்பிற்கு உரியவர்களாகி வாழ்வில் சகல வெற்றிகளையும் பெற்று மகிழ்ச்சிகரமான நல்வாழ்வு வாழ்வீர்களாக .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !! 

சிவபெருமானைக் குறித்து நோற்கப்படும் விரதங்களுள் சோமவார விரதமும் ஒன்றாகும் .. சந்திரனுக்குரிய நாளான திங்கட்கிழமையில் இது கடைபிடிக்கப்படுகிறது 
க்ஷ்ய ரோகத்தில் துன்புற்று தட்சனால் அழியும்படி சபிக்கப்பட்ட சந்திரன் இந்த விரதத்தைக் கடைபிடித்து மேன்மை பெற்றான் .. 

சிவபெருமானும் சந்திரனுக்கு அருள் புரிந்ததுடன் சந்திரனின் ஒரு கலையைத் தனது முடிமேல் சூடிக்கொண்டு சந்திரசேகர் என்ற பெயரையும் பெற்றார் ..

திங்கட்கிழமைகள் ஈஸ்வரனுக்கும் மிகவும் உகந்த நாட்களாகும் .. சோகங்களைப் போக்கி சுகங்களைத் தரவல்லது சோமவார விரதமாகும் .. சந்திரனின் சோகங்களை நீக்கி சுகமருளச்செய்த சிவபெருமானிடம் சந்திரனும் இந்த சோமவார விரதத்தை கடைபிடிப்பவர் வாழ்வில் சுகங்கள் பெருகவேண்டும் என்று வேண்டிட சந்திரனது வேண்டுதலை ஏற்று சோமவார விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கும் .. அதன் பக்தி மஹிமைகளை கேட்பவர்களுக்கும் .. படிப்பவர்களுக்கும் சுகங்களை நல்குவதாக வாக்களித்தார் .. 

சிவாலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகளை
கண்டு தரிசித்து ஸ்ரீசந்திரசேகரமூர்த்திக்குவெண்மலர்கள் சூட்டி வழிபட்டு .. ஆயுள்விருத்தி .. மன அமைதியையும் பெறுவோமாக ! ஓம் நமசிவாய ! வாழ்க வளமுடனும் ! என்றும் நலமுடனும் !!