GURUVE SARANAM..SWAMIYE SARANAM IYYAPPA....PANVEL BALAGANE SARANAM SARANAM...

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A SUCCESSFUL MONDAY & A BLESSED ' SOMVAR ' TOO .. MAY LORD SHIVA'S DIVINE BLESSINGS BRING YOU ETERNAL SUCCESS AND GOOD HEALTH .. WEALTH .. AND HAPPINESS .. 
' OM NAMASHIVAAYA ' .. JAI SHREE BHOLE NATH .. 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையாகிய இன்று சிவபெருமானுக்கு உகந்த சோமவார விரதமும் அனுஷ்டிக்கப்படுகின்றது .. இன்றைய நாள் தங்களனைவருக்கும் ஓர் சுபீட்சமிக்க நன்னாளாகவும் .. செய்யும் அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறவும் எல்லாம் வல்ல ஈசனைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !! 

சிவபெருமானைக் குறித்து நோற்கப்படும் விரதங்களுள் சோமவார விரதமும் ஒன்று .. சந்திரனுக்குரிய நாளான திங்கட்கிழமையில் இது கடைபிடிக்கப்படுகிறது க்ஷயரோகத்தில் துன்புற்று தட்சனால் அழியும்படி சபிக்கப்பட்ட சந்திரன் இந்த விரதத்தைக் கடைபிடித்து மேன்மை பெற்றான் .. 

எனவே ! ஒருமாதத்தில் பதினைந்து நாட்கள் சந்திரனின் கலைகள் குறைந்தும் .. மீதிப்பதினைந்து நாட்களில் அது மீண்டும் வளரவும் பரமன் அருள்புரிந்து சந்திரனை அவரது சிரசில் சூடிக்கொண்டு ’ சந்திரசேகரர் ’ என்ற பெயரையும் பெற்றார் .. 

சந்திரனின் நல்வாழ்வுக்காக அவனுடைய மனைவி ரோகிணியும் அவனுடன் சேர்ந்து இந்தவிரதத்தைக் கடைபிடித்தாள் .. அன்றுமுதல் பெண்கள் சௌபாக்கியத்துடன் திகழவும் .. கணவனுக்கு மேன்மைகள் உண்டாகவும் .. நோய் .. நொடிகள் தாக்காதிருக்கவும் இந்த விரதத்தைக் கடைபிடிக்கின்றனர் 

சிவாலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகளை தரிசிப்பதுடன் ஸ்ரீசந்திரசேகரமூர்த்திக்கு வெண்மலர்கள் சூட்டி வழிபட்டால் ஆயுள்விருத்தியடைவதுடன் மன அமைதியும் கிட்டும் .. 

சிவனைப் போற்றுவோம் ! அனைத்து நலன்களையும் பெறுவோமாக ! ஓம் நமசிவாய ! வாழ்க வளமுடனும் ! என்றும் நலமுடனும் !

PANVEL BALAGANE POTRI POTRI...GURUVE SARANAM SARANAM.....SWAMIYE SARANAM IYYAPPA...

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BEAUTIFUL AND A BLESSED SUNDAY WITH FULL OF JOY AND PEACE IN YOUR HEART .. MAY LORD SURYA SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH .. AND PROSPERITY .. " JAI SURYA DEV " 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று சூரியபகவானுக்கு உகந்த நாளுமாகும் .. தங்களனைவரது பிரச்சினைகள் யாவும் தீர்ந்து சகல சௌபாக்கியங்களும் பெற்றிட சூரியபகவானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே ! 
பாஸஹஸ்தாய தீமஹி ! 
தந்நோ சூர்யஹ் ப்ரசோதயாத் !! 

ஜோதிடசாஸ்திரம் சூரியனை நவக்கிரகநாயகனாகப் போற்றுகிறது .. மனிதவாழ்விற்கும் .. தாழ்விற்கும் .. இன்பத்திற்கும் .. துன்பத்திற்கும் காரணம் கிரகங்களே ! இவற்றிற்கு தலைமை வகிப்பவர் சூரியன் .. பிரபஞ்சத்தையும் கோள்களையும் பரிபாலித்து உலகை இயக்குகிறார் .. 

ஒருவரது ஜாதகத்தில் சூரியபலத்தைப் பொறுத்தே ஆளுமைத்தன்மை .. ஆட்சி .. அதிகாரம் அமையும் .. ஆத்மா .. தந்தை .. தலை .. சரீரம் .. உத்தியோகம் .. வலதுகண் .. வைத்தியம் .. தைரியம் .. புகழ் .. உடல்நலம் ..
ஆகியவற்றிற்கு சூரியனே காரணகர்த்தா .. 

சூரியபகவானே லோகநாயகனான முழுமுதற் கடவுள் என்று சூரியபுராணம் குறிப்பிடுகிறது .. 
சிவனுக்கு - கைலாயம் ..
நாராயணனுக்கு - வைகுண்டம் ..
பிரம்மாவுக்கு - சத்தியலோகம் போல 
சூரியனுக்குரியது - சூரியலோகம் .. 

சூரியன் நம் ஒவ்வொருவருக்கும் கண்கண்ட தெய்வம் .. அதனால் தான் திருவள்ளுவர் தன் முதல் குறளில் 
’ அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முற்றே உலகு ‘
என்று அழைக்கப்படுவது சூரியனே ! இறைவனான பரம்பொருளின் பிரதி அம்சமாக சூரியன் நமக்கு காட்சியளிக்கிறது .. 

சூரியபகவானை தினமும் வணங்கினால் உலகத்தில் சகல சௌபாக்கியங்கள் அனைத்தையும் பெறமுடியும் ..
மனிதர்களின் வாழ்வில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கும் ஆற்றல் சூரிய வழிபாட்டிற்கு மட்டுமே உள்ளது .. யார் ஒருவர் சூரியனை மனம் உருகி .. மனம் ஒன்றி வழிபாடு செய்கிறாரோ அவருக்கு வெற்றி .. புகழ் .. உடல்நலம் .. ஆளுமைத்திறன் 
செல்வாக்கு .. மங்களம் போன்ற அனைத்தும் ஒருங்கே வந்துசேரும் .. 

“ ஓம் சூர்யாய நமஹ “ என்று சொல்லி வணங்குங்கள் .. உங்களை வாழ்வின் சுப உச்சத்திற்கே அழைத்துச் செல்லும் .. தினமும் ஆதித்யஹ்ருதயம் பாராயணம் செய்து வரவும் .. வாழ்வில் தடைகள் நீங்கும் .. அனைத்து சிக்கல்களும் இல்லாமல் போகும் .. 

“ ஓம் சூர்யாய நமஹ “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

GURUVE SARANAM...PANVEL BALAGANE SARANAM SARANAM....SWAMIYE SARANAM IYYAPPA...


GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A PLEASANT DAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. MAY YOU BE BLESSED WITH GOOD HEALTH .. WEALTH .. AND PROSPERITY .. " OM NAMASHIVAAYA " .. JAI BHOLE NATH .. 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சனிக்கிழமையாகிய இன்று ஈஸ்வரனைத் துதித்து தங்களனைவரது அனைத்து கிரகதோஷங்களும் நீங்கி உடல்நலமும் .. மனநலமும் ஆரோக்கியமாகத் திகழ்ந்திடவும் ..இன்றையநாள் ஓர் இனிய நன்னாளாக அமைந்திடவும் .. ஈஸ்வரனைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !! 

ஆதியும் அந்தமும் இல்லாத பெரும்பரம்பொருளாய் விளங்குபவர் சிவபெருமான் .. இவருக்குப் பிறப்பும் இல்லை .. இறப்பும் இல்லை .. சிவவழிபாட்டினைத்தான் சைவம் என்று போற்றுகின்றோம் ..

உலகத்தின் மிகப்பழமையான வழிபாடும் சிவவழிபாடுதான் .. பண்டையகால நாகரீகமாக விளங்கிய ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ .. காலகட்டங்களில் சிவவழிபாடு நடந்திருப்பது அகழ்வாராச்சிகளி ( மூலம் ) அறியமுடிகின்றது .. 

வேதங்கள் போற்றும் வேதநாயகானாக விளங்குபவர் 
சிவனே ! சுபமங்களத்தை அருளுபவர் ..பரம்பொருளாகிய பரமேஸ்வரரின் மூச்சுக்காற்றிலிருந்தும் .. உடுக்கை .. ஒலியிலிருந்தும் சப்தங்கள்தோன்றி வேதமந்திரங்களாகச் சிதறியிருந்ததை வியாசபகவான் ஒருங்கிணைந்து சதுர் (4) வேதங்களாகத் தொகுத்தார் .. ( இருக் ..யஜுர் .. சாமம் அதர்வணம் ) வேதங்களாகத் தொகுத்தார் ..

சிவபெருமானுக்கு பிறப்பில்லாத காரணத்தினால் .. சிற்பசாஸ்திரங்களின்படி சிவபெருமான் அம்சமுள்ள எந்தவொருவடிவத்திற்கும் ( நடராஜர் .. ஸோமஸ்கந்தர் ) 
கொப்பூழ் எனும் தொடர்பு அமைப்பதில்லை .. 

சிவன் எங்கும் நிறைந்திருப்பவர் .. திசைகள் அனைத்திலும் விளங்கும் திகம்பரர ஸர்வலோகங்களிலும் திகழும் சதாசிவர் .. 

சிவபெருமான் பக்தர்களை காக்க எடுப்பது அவஸரம் .. தக்கசமயம்வரும்போது தோன்றி ரட்சித்துவிட்டு மறைந்துவிடுதல் .. 

வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றையும் விரைவில் வழங்குவதில் வல்லமைமிக்க சிவனைப் போற்றி வணங்குவோம் ! வாழ்வில் அனைத்து நலன்களையும் பெறுவோமாக ! ஓம் நமசிவாய ! வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் !


 

PANVEL BALAGANE POTRI POTRI...GURUVE SARANAM...SWAMIYE SARANAM IYYAPPA.....

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED FRIDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA .. MAY HE ELIMINATE ALL NEGATIVE FORCES FROM YOUR LIFE AND SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH AND PROSPERITY .. " OM MURUGA " 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வெள்ளிக்கிழமையும் .. சஷ்டித் திதியும் கூடிவரும் இந்நாளில் ஆலயம் சென்று முருகப்பெருமானை வழிபடுவது சாலச் சிறந்தது .. த
ங்களனைவருக்கும் வேலவன் அருளால் நல் ஆரோக்கியம் .. புகழ் .. செல்வம் . யாவும் பெற்று வளமான வாழ்வு அமைந்திட கந்தப்பெருமானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹேஷ்வர புத்ராய தீமஹி ! 
தந்நோ சுப்ரமண்யப் ப்ரசோதயாத் !! 

”அமரர் இடர்தீர அமரம் புரிந்த குமரன் அடி நெஞ்சே குறி “
அமரர்களாகிய தேவர்களின் துன்பத்தினைப் போக்குவதற்காக அசுரர்களுடன் போர்புரிந்து தேவர்களை 
மீட்டவர் .. முருகப்பெருமான் .. இம்முருகப்பெருமானை முழுமுதற் பொருளாகக் கொண்டு வழிபடும் நெறி 
கௌமாரமாகும் .. 

அழகன் முருகனை வழிபடுவதன் மூலம் அடியவர்களின்
சொல்லொணாத் துன்பம் நீங்கப்படுவதுடன் .. தினமும் நெஞ்சுருகி கந்தசஷ்டி கவசத்தினை பாராயணம் செய்வதன் மூலம் மக்கட்பேறும் .. பதினாறு பேறுகளும் 
( செல்வங்களும் ) கிடைக்கப்பெறுவர் .. 

அனாதியாகவே செம்பில் களிம்பு போன்று ஆன்மாக்கள் ஆணவ மலத்தால் பீடிக்கப்ப்ட்டுள்ளனர் ஆனால் ஆன்மாக்கள் இப்பூவுலகில் பிறந்ததன் நோக்கம் சகல இன்பங்களையும் அறவழியில் அனுபவித்து இறுதியில் பிறப்பு .. இறப்பு அற்ற மோட்ச நிலையில் இறைவனுடன் 
இரண்டறக் கலந்தற்கேயாகும் எனவே முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம் தமது கன்மவினைகளை இலகுவில் அடையாலம் என்பது 
அனுபவம் பெற்ற முருக பக்தர்களின் அருள்வாக்கு .. 

“ மைந்தன்வேண்டும் வரமகிழ்ந்தருளும் ஏரகச் செல்வ “ 
என்னும் வரிமுலமும் .. 
“ எந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வார் “ என்னும் வரிமூலமும் மனித வாழ்க்கைக்குத் தேவையான பதினாறு பேறுகளையும் தரவல்லது என்பதனையும் அறிய முடிகிறது ..கந்தசஷ்டிகவசம் .. கந்தபுராணம் போன்ற முருகன் பெருமைகளைக் கூறும் நூல்களைப் பாராயணம் செய்தல் மிகச் சிறந்த பயனைத் தரும் .. 

புனிதமான இந்த சஷ்டிதினத்தில் முருகனைப் பிரார்த்தித்து இகபர இன்பங்களைப் பெற்று மங்களவாழ்வு வாழ்வோமாக .. “ ஓம் சரவணபவாய நமஹ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM...PANVEL BALAGAN PATHAM POTRI POTRI..


GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED 
" PANJAMI " WITH THE BLESSINGS AND GUIDANCE OF GODDESS VARAHI .. MAY ' MAA ' PROTECT YOU AGAINST ALL ODDS AND RELIEVE YOU FROM EVIL FORCES TOO .. 
" JAI 'MAA ' VARAHI " 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. குருவருளும் .. திருவருளும் கூடிய இந்நன்நாளில் பஞ்சமித் திதியில் அன்னை வராஹியை வழிபடுவது சாலச்சிறந்தது .. தங்களனைவரும் அன்னையின் அருட்கடாக்ஷ்மும் .. சூட்சுமமான பாதுகாப்பையும் பெற்று அனைத்திலும் வெற்றி அடைவீர்களாக .. 

ஓம் ஸ்யாமளாயை வித்மஹே ! 
ஹலஹஸ்தாய தீமஹி ! 
தந்நோ வராஹி ப்ரசோதயாத் !! 

மஹாவிஷ்ணு வராஹ அவதாரம் எடுத்தபோது .. அவரது அவதார சக்தியாக உருவானவள் வராஹி .. சப்தகன்னியர்கள் பிராமி .. வைஷ்ணவி .. மஹேஷ்வரி .. கவுமாரி .. வராஹி .. இந்திராணி .. சாமுண்டி இவர்கள் முறையே பிரம்மா .. விஷ்ணு .. சிவன் .. குமரன் .. இந்திரன் .. யமன் .. திருமால் ஆகிய தெய்வங்களின் சக்திகளின் சக்திகள் .. 

வராஹி அம்மனை ஒருமனதோடு தர்மசிந்தனையில் வழிபட்டால் எல்லாவகையிலும் வெற்றிகிட்டும் .. அன்னை ஸ்ரீமஹாவராஹி ஸ்ரீராஜராஜேஸ்வரியின் 
பஞ்சபாணங்களில் இருந்து தோன்றியவள் .. இவளே ஸ்ரீராஜராஜேஸ்வரியின் படைத்தலைவி (சேனாதிபதி) 

ஸ்ரீவராஹி உபாசனை சிறந்த வாக்குவன்மை .. தைரியம் தருவதோடு எதிர்ப்புகள் .. எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும் கவசமாகும் .. அபிச்சாரம் எனப்படும் பில்லி சூனியம் .. ஏவல்களை நீக்குவாள் .. இவளை வழிபடுபவர்கள் எந்த மந்திரவாதிக்கும் அஞ்சத்தேவையில்லை .. எதிரிகளின் வாக்கை அவர்கள் செய்யும் தீவினைகளை ஸ்தம்பனம் செய்பவள் .. வழக்குகளில் வெற்றி தருபவள் .. 

மந்திர சாஸ்திரபழமொழி - ” வராஹிக்காரனோடு வாதாடாதே “ 
சொன்னவாக்கு எல்லாம் பொன்னாகும் .. எதிரிகளை வெல்லும் .. இதனால் தான் இவ்வாறு கூறுவர் 
ஸ்ரீவராஹி வாக்குசித்தி அருள்வதில் ஸ்ரீ உச்சிஷ்ட கணபதியைப்போலவே முதன்மையானவள் .. எனவே இவளை உபாசிப்பவர்கள் யாரையும் சபிக்கக்கூடாது அவை உடனே பலிக்கும் .. ஆனால் அதனால் பாதிப்படைந்தவரின் வேதனைக்கான பாவம் விரைவில் நம்மை வந்தேசேரும் .. அதிலிருந்து அன்னை நம்மைக் காக்கமாட்டாள் .. எனவே எவருக்கும் அழிவு வேண்டி வணங்காமல் எதிரிகளால் துன்பம் ஏற்படாமல் காக்குமாறு வழிபடவேண்டும் .. 

ஸ்ரீவராஹி எலும்பின் அதிதேவதை .. இவளை வணங்க எலும்பு தொடர்பான வியாதிகளும் .. வாத பித்த வியாதிகளும் தீரும் .. 
கருணாசாகரி ஓம் ஸ்ரீமஹாவராஹி ! பத்மபாதம் நமோஸ்துதே !!
வாழ்க வளமுடனும் ..என்றும் நலமுடனும் .. வளர்க அன்னை வராஹி அருளுடனும் .. 
“ ஓம் வராஹி சிவசக்தி ஓம் “

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM.....PANVEL BALAGANE SARANAM SARANAM...

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED CHATHURTHI DAY .. MAY THE BLESSINGS OF LORD GANESH BE WITH YOU ALWAYS AND SHOWER YOU WITH POWER & WISDOM 
" JAI SHREE GANESHA " 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சதுர்த்தித் திதியாகிய இன்று வேண்டுவன நல்கும் கருணைப் பெருங்கடலான கணபதியைப் பிரார்த்தித்து தாங்கள் விரும்பும் அனைத்தும் பெற்று மகிழ்வுடன் வாழ்ந்திட ஆனைமுகத்தானை வேண்டுகின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
வக்ரதுண்டாய தீமஹி ! 
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !! 

எந்தவொரு காரியத்தைத் தொடங்கினாலும் விநாயகரை வழிபட்டுத்தான் நாம் தொடங்குவது வழக்கம் .. 
“ பிள்ளையார் சுழி “ போட்டு நாம் எழுதும் எழுத்துகளுக்கு நல்லபலன் கிடைக்கிறது .. எனவேதான் “ மூலகணபதி “ 
என்று அவரை நாம் வர்ணிக்கின்றோம் .. 

கணங்களுக்கு எல்லாம் அதிபதியாவதால் அவரை 
“ கணபதி “ என்று சொல்கின்றோம் .. எனவே நாம் 
‘ தேவ ‘ - கணத்தில் பிறந்தவராக இருந்தாலும் ..
‘ மனித ‘ - கணத்தில் பிறந்தவராக இருந்தாலும் .. 
’ அசுர ‘ - கணத்தில் பிறந்தவராக இருந்தாலும் .. 
அனைவரும் வணங்கவேண்டிய தெய்வமாக விளங்குபவர் ஆனைமுகப் பெருமானாகும் ..

அந்த ஆனைமுகனுக்கு உகந்த நாளாகிய சதுர்த்தி திதியில் பிள்ளையாரை வழிபட்டால் எல்லா பாக்கியங்களும் நமக்கு கிடைக்குமென்று சாஸ்திரங்கள் சொல்கின்றன .. மஞ்சள்பொடியிலும் காட்சிதருவார் ..
சாணத்திலும் காட்சிகொடுப்பார் .. வீட்டிலும் வழிபாடு செய்யலாம் .. விக்கிரகம் வைத்திருக்கும் ஆலயத்திற்கும் சென்று வழிபாடு செய்யலாம் .. தும்பிக்கை வைத்திருக்கும் அந்த தெய்வத்தை முழுநம்பிக்கையோடு நாம் வழிபட்டால் இன்பங்கள் அனைத்தும் இல்லம் வந்துசேரும் .. 

வளைந்த துதிக்கையினை உடையவனே ! 
பெரிய தேகத்தைக் கொண்டவனே ! 
பலகோடி சூரியன்கள் ஒன்று சேர்ந்தாற்போல ஒளிச்சுடராகத் திகழ்பவனே ! 
நாம் செய்கின்ற எல்லா நற்செயல்களிலும் தடையேதும் குறுக்கிடாமல் முழுமையாக நிறைவேற உன் அருளை வேண்டுகிறோம் ! காத்தருள்வாயாக ! 

“ ஓம் விக்னேஷ்வராய நமஹ “ .. வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM....PANVEL BALAGANE SARANAM SARANAM....

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA .. MAY HE REMOVE THE DARKNESS FROM THE UNIVERSE AND BLESS YOU WITH GOOD HEALTH .. GOOD FORTUNE .. AND HAPPINESS .. " OM MURUGA " 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
செவ்வாய்க்கிழமையாகிய இன்று அங்காரகனுக்கே அதிபதியாகிய முருகப்பெருமானுக்கும் உகந்த நாளுமாகும் .. தங்களனைவரும் சகலயோகங்களும் .. வளங்களும் பெற்றிட அங்காரகனையும் .. கந்தப்பெருமானையும் போற்றி வணங்குகின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹேஷ்வரபுத்ராய தீமஹி ! 
தந்நோ சுப்ரமண்யஹ் ப்ரசோதயாத் !! 

செவ்வாய் ஸ்தோத்திரம் - 
சிறப்புறு மணியே ! செவ்வாய்த் தேவே !
குறையிலா தருள்வாய் குணமுடன் வாழ ! 
மங்கள செவ்வாய் மலரடி போற்றி ! 
அங்காரகனே ! அவதிகள் நீக்கு !! 

அக்கினி .. இந்திரன் .. வருணன் .. பிரகஸ்பதி .. ஹிரண்யகர்ப்பம் ஆகியோரின் கூட்டுக்கலவையே முருகன் ஆவான் .. அதர்வண வேதத்தில் முருகன் அக்னியின் புதல்வன் எனவும் சித்திகரிக்கப்பட்டுள்ளான் ..

செவ்வாய்க்குரிய கடவுள் முருகப்பெருமான் எல்லா முருகஸ்தலங்களுக்கும் செவ்வாய் பரிகார ஸ்தலமாகும் 
முருகப்பெருமானை வணங்குவதால் செவ்வாயால் உண்டாகும் பிரச்சினைகள் விலகும் .. 

முருகனைப் பிரார்த்தியுங்கள் வாழ்வில் உங்களுக்கு எந்த கெடுதலும் நிகழாது .. ஒருகவசம்போல நின்று அந்த கந்தனின் வேல் உங்களைக்காக்கும் .. சஷ்டிவிரதம் இருக்கலாம் .. சஷ்டிகவசம் படிக்கலாம் .. கேட்கலாம் .. குழிபறிக்கும் கூட்டம் ஓடிவிடும் .. எதிரி என்று எவரும் இருக்கமாட்டார்கள் .. சொல்லி அடிக்கலாம் நான் ஜெயித்துக்காட்டுவேன் என்று .. 

நம்பிக்கையுடன் முருகனைப் பற்றிக்கொள்ளுங்கள் .. தொல்லை வினைதீர்த்து வைக்கும் கந்தனின் கருணைக்கு நிகரே இல்லை .. நம்பியோரை ஒருபோதும் 
கைவிடமாட்டான் .. முத்தமிழால் வைதாரையும் வாழவைக்கும் கலியுகவரதன் முருகனின் அருள்பெற்று வாழ அவனருளையே நாடி நிற்போமாக ! 
” ஓம் சரவணபவாய நமஹ “ 

செவ்வாய்க்கிரகம் - 
தோஷ நிவர்த்திக்கு நவக்கிரக வழிபாடு அவசியமானது 
நவகிரகங்களில் சூரியனுக்கு அடுத்தபடியாக பராக்கிரமம் 
மிக்கசெயல் ஆற்றல் உள்ள கிரகம் .. மங்களன் என்று அழைக்கப்படும் .. செவ்வாய்க்கிரகம் ஆகும் .. நெருப்புக்கு அதிபதியான செவ்வாய் .. ஆதிக்கம் செலுத்துபவராகவும் 
இருக்கிறார் .. வீரசெயல்புரிதல் .. அதிகாரம் செலுத்துதல் ..
ஆளுமைதிறன் .. தைரியம் .. நம்பிக்கை .. நாணயம் .. நேர்மை .. வளைந்து கொடுக்காததன்மை உயர்பதவி .. தலைமைபொறுப்பு போன்றவற்றை ஒருவருக்கு தரக்கூடியவல்லமை பெற்றது செவ்வாய்க்கிரகம் .. 

அரசாங்க உயர்பதவிக்கு அனுக்கிரகம் செய்வதும் செவ்வாய்தான் .. தோற்றத்தில் கம்பீரம் .. நடையில்மிடுக்கு .. குரலில் அதிகாரத்தை ஏற்படுத்தி தரக்கூடியவர் .. போட்டி பந்தயங்கள் .. உடல்திறன் .. சாகசநிகழ்ச்சிகளில் புகழ்பெற செவ்வாயின் பலன் அவசியம் தேவை .. நம் உடலில் ரத்தத்துக்கு காரகமாக இருப்பவர் செவ்வாய் .. செவ்வாய் பலம் குறைந்தால் உடலில் ரத்தசம்பந்தமான நோய்கள் தோன்றும் ..

இவருக்கு சகோதரகாரகன் என்றபெயரும் உண்டு .. சகோதர சகோதரிகளின் உறவுகளில் ஏற்படும் சிக்கல்களை தீர்மானிக்கிற கிரகமும் இதுதான் .. பூமிகாரகன் என்ற அமைப்பும் உள்ளது .. இவரது தயவு இருந்தால்தான் நிலம் .. தோட்டம் .. வீடு .. பங்களா போன்ற அசையா சொத்துக்களை பெறமுடியும் .. செவ்வாயின் அருள்பார்வை விழுந்தால் ரியல் எஸ்டேட் 
கட்டிட தொழில் .. சிவில் இஞ்ஜினியர் போன்ற தொழில்களில் சிறக்கலாம் .. 

வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

PANVEL BALAGANE SARANAM...GURUVE SARANAM SARANAM....

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A SUCCESSFUL MONDAY AND A DIVINE SOMVAR DAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. MAY HE REMOVE ALL THE OBSTACLES IN YOUR LIFE AND FULFILL ALL YOUR DESIRES TOO .. " OM NAMASHIVAAYA " .. JAI BHOLE NATH .. 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையாகிய இன்று சிவபெருமானுக்கு உகந்த சோமவார விரதமும் அனுஷ்டிப்பதால் சிவாலயம் சென்று சிவனைத் தரிசிப்பது சாலச்சிறந்தது .. தங்களனைவரது அனைத்து பிரச்சினைகளும் .. தடைகளும் பனிபோல் நீங்கிடவும் .. இன்றைய நாள் ஓர் வெற்றிகரமான நன்னாளாக அமைந்திடவும் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !! 

சோமவாரம் என்பது வாரநாட்களில் திங்கட்கிழமையைக்
குறிப்பது .. சந்திரன் கடைபிடித்து மேன்மை பெற்ற விரதமாகும் .. ஆதலால் திங்கட்கிழமைகளில் இவ்விரத்தத்தை அனுஷ்டிக்கின்றனர் .. 

தட்சனின் சாபத்தால் ஒளிகுன்றிய சந்திரன் முனிவர்களின் ஆலோசனைப்படி சிவபெருமானைக் குறித்து சோமவார விரதத்தை கடைபிடித்துதான் சிவனுக்கு மிகவும் பிரியமுள்ளவன் ஆனான் .. இந்த சோமவார விரதத்தின் பலனால் சந்திரன் பிறைமுடியாய் ஈசனின் தலையில் அமரும் பாக்கியம் பெற்றான் .. என புராணங்கள் போற்றுகின்றன .. 

மேலும் வசிஷ்டமுனிவர் இந்த விரதத்தைக் கடைபிடித்துதான் அருந்ததியை மனைவியாக அடைந்தார்
திருமணங்களில் அம்மி மிதித்து அருந்ததிபார்க்கும் சடங்கு ஒன்று நடைபெறுவதை பார்த்திருப்பீர்கள் .. அந்தக் கற்புக்கரசி அருந்ததிதான் வசிஷ்டர் பத்தினி .. 

சிவபெருமானே கூறிய விரத நியதிகள் - 
சோமவார விரதமிருப்பவர்கள் எனக்குப் பிடித்தவர்கள் என்னிடத்தில் அவர்களுக்கு இடம் கொடுப்பேன் என்று கூறியுள்ளார் .. ஒருசமயம் இந்த விரதத்தை எப்படி கடைபிடிப்பது என்று பார்வதிதேவி சிவனிடம் கேட்டார் ..

அதற்கு சிவன் இந்த விரதகாலத்தில் காலையில் எழுந்து நீராடி தினசரி கடமைகளை முடித்து அன்றாடம் தவறாது சிவபூஜை செய்யும் ஒரு அந்தணரையும் அவரது மனைவியையும் அழைத்து வந்து அவர்களை சிவபார்வதியாக நினைத்து அவர்களுக்கு இயன்ற அளவு தானம் செய்யவேண்டும் .. 

அன்று பகல் முழுவதும் உண்ணாவிரதமிருந்து சிவசிந்தனையுடன் இருக்கவேண்டும் .. வீட்டில் விரிவாக பூஜை செய்ய இயலாதவர்கள் சிவன் கோவிலுக்குச் சென்று அபிஷேகம் செய்வதுடன் அந்தணர்களுக்கும் அடியார்களுக்கும் அன்னதானம் செய்யவேண்டும் என்று கூறினார் .. 

இதன்படியே இன்றும் இவ்விரதம் கடைபிடிக்கப்பெற்று வருகிறது விரதத்தை ஆண்களும் கடைபிடித்து நல்ல வாழ்க்கைத் துணையைப் பெறுவர் .. 

சிவனைப்போற்றி அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுதலை பெற்று வெற்றி காண்போமாக .. வெற்றி நிச்சயம் ! 
“ ஓம் நமசிவாய “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM....

.

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY AND A HAPPIEST DAY IN YOUR LIFE .. MAY LORD SURYA SHOWER YOU EVERY HAPPINESS AND MAY ALL YOUR WISHES COME TRUE .. " JAI SURYA DEV " 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று சூரியவழிபாட்டிற்கு உகந்த நாளுமாகும் .. பயன்கருதாது தன் அன்றாடப்பணியைச் செய்துவருபவரான சூரியபகவானைத் துதித்து தங்கள் அனைவரது நல்லாரோக்
கியத்திற்கும் இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாகத் திகழ்ந்திடவும் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே ! 
பாஸஹஸ்தாய தீமஹி ! 
தந்நோ சூர்யஹ் ப்ரசோதயாத் !! 

இவ்வுலகின் ஜீவனாய் .. ரட்சகனாய் .. வழிநடத்துபவராய் உலகின் கண்களாய் உள்ள சூரியதேவன் இல்லையென்றால் இவ்வுலகு அஸ்தமித்துவிடும் .. உயிர்களின் இயக்கத்திற்கு சூரிய ஆற்றல் வெப்பமாக வெளிச்சமாகத் தேவைப்படுவது உண்மை .. 

யோகக்கலை பயிலும் நாத்திகர்கள்கூட சூரியவணக்கம் என்னும் பயிற்சிகளை மேற்கொள்ளுதல் அந்த சூரியதேவனின் மஹிமையைக் கூறுவதாகவே கொள்ளல் வேண்டும் .. தேவனை சௌரபம் பின்பற்றுபவர்கள் கூறுவது போல மறவாது வணங்குவது நம்கடமை .. 

சூரியபகவான் ஏழு உலகங்களுக்கும் ஒளிதரும் விளக்கு ..
தன்கதிர்களால் வெப்பத்தைத் தணிப்பவர் .. துன்பத்தைத் துடைப்பவர் .. அருணனின் கதிர்களால் சூரிய உதயத்தை உலகம் அறிகிறது .. உலகத்திற்கு முதலானவர் .. மிகவும் உயர்ந்தவர் .. அத்தகைய சூரியபகவானைப் போற்றுவோமாக ! 

தினசரி சிவாலயவழிபாடும் .. சூர்யநமஸ்காரமும் நல்ல பலனைத்தரும் .. தினமும் ஆதித்யஹ்ருதய ஸ்தோத்திரம் படிக்கலாம் .. கோதுமையில் செய்த சப்பாத்தி .. கோதுமை .. ரவை போன்றவற்றை இல்லாதோர் . நோயாளிகளுக்கு கொடுக்கலாம் .. கீரைவகைகளை சேர்த்து பசுவுக்கும் கொடுக்க அனைத்து கிரகதோஷங்களும் நீங்கி வாழ்வில் வெற்றி பெறுவீர்களாக ! 
“ ஓம் அம் நமசிவாய ! சூரியதேவாய நமஹ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்

SWAMIYE SARANAM IYYAPPA....

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A HAPPY WEEKEND WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. MAY YOU BE BLESSED WITH GOOD HEALTH .. WEALTH &
HAPPINESS .. " OM NAMASHIVAAYA " .. JAI BHOLE NATH .. 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சனிக்கிழமையாகிய இன்று சகல கிரகதோஷங்களும் நீங்கி .. தங்கள் வாழ்வினில் வசந்தமும் நல்லாரோக்கியமும் பெற்றிட எல்லாம் வல்ல ஈஸ்வரனைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !! 

கலியுகத்தில் பிறவி எடுத்தோர் உய்யும் மார்க்கத்தைப் பெறுவதற்குத் துணையாக இருப்பது சிவமந்திரமே ! 
“ நமசிவாய “ என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை தினமும் ஜபித்து வந்தாலே ! வாழ்வில் எல்லா கஷ்டங்களும் நீங்கிவிடும் .. 

இப்பிறவிக்கு வேண்டியன எல்லாம் தரும் வேண்டத்தக்கது அறிவோய் நீ ! வேண்டமுழுதும் தருவோய் நீ ! எனும் மாணிக்கவாசகரின் திருவாசக வாக்கிற்கு இணங்க நமக்கு வேண்டியது அனைத்தும் அருள்பவர் பெருங்கருணைவடிவான எம்பெருமான் சிவபரம்பொருளே ! 

அப்படிப்பட்ட மூலப்பரம்பொருளின் மூலமந்திரம் முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்த ஸ்ரீகண்டபரமேஸ்வரனை அதிதெய்வமாகக் கொண்ட மிகஎளிமையான மந்திரம் நமசிவாயமே ! அதற்குமேல் மந்திரம் வேறில்லை .. 

’ சிவாய நமஹ ‘ எனச்சொல்லி நம் சிறுமனதை சிதறாமல்
கட்டி சிவனருளே ! எல்லாமென சிந்தையில் வைத்து சிவனே ! உன் அருளுக்காக தவமிருப்போம் ! சிவ சிவா ! 
நம்முள்ளே கலந்தருள்வாயாக ! 
‘ ஓம் நமசிவாய ‘ .. வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SRANAM/// PANVEL PALAGAN PATHAM POTRI POTRI

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED FRIDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA .. MAY HE SHOWER YOU WITH GOOD FORTUNE .. GOOD LIFE AND FILL YOUR HEART WITH LOVE AND MIRTH .. 
" OM MURUGA " 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வெள்ளிக்கிழமையும் .. கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்துவருவதால் ஆலயம் சென்று முருகப்பெருமானின்
பேரருள் பெற்று தாங்கள் நினைத்தகாரியங்கள் அனைத்தும் வெற்றியுடன் நிறைவேற வெற்றிவேலவனைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் கார்த்திகேயாய வித்மஹே ! 
சக்தி ஹஸ்தாய தீமஹி ! 
தந்நோ ஸ்கந்த ப்ரசோதயாத் !! 

மாதாமாதம் வரும் கார்த்திகை .. மாதக்கார்த்திகை அல்லது கிருத்திகை விரதம் எனப்படும் .. இதனை 
“ நட்சத்திர விரதம் “ என்பர் .. சரவணப்பொய்கையில் கார்த்திகைப் பெண்கள் முருகனைச் சீரும் சிறப்புடனும் வளர்த்தனர் .. அவர்களைப் போற்றும் வகையில் கார்த்திகை நட்சத்திரத்தன்று அவர்களையும் நினைந்தே இவ்விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது .. முருகனை இந்நாளில் வழிபடுவோர் இன்னல்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சகலசெல்வங்களும் பெற்று வாழ்வார்கள் .. 

வேதகாலத்தில் கிருத்திகை நட்சத்திரமே முதலாவதாக இருந்தது .. இது 7 நட்ச்த்திரங்களின் கூட்டமாகும் .. கிருத்திகை நட்சத்திரத்தில் அக்னியை வணங்கவேண்டும்
அது அக்னியின் நட்சத்திரம் என்றும் .. அதுவே நட்சத்திரங்களுக்குள் முகம்போன்றது என்று வேதம் கூறுகிறது .. அதற்கு காரணமும் காட்டுகிறது ..

மற்ற நட்சத்திரங்கள் ஒன்று .. இரண்டு .. மூன்று .. அல்லது நான்கு நட்சத்திரங்களுடைய கூட்டமாகும் .. ஆனால் கிருத்திகையில் மட்டும் நட்சத்திரங்கள் தாராளமாக இருப்பதால் அந்த நட்சத்திரத்தில் தானம் செய்யும் எஜமானனும் .. அவன் வம்ச பரம்பரையினரும் அளவற்ற நன்மைகளை அடைகின்றார்கள் என்பது கருத்து .. 

இவ்வளவு பெருமைவாய்ந்தது கிருத்திகை நட்சத்திரம் என்றாலும் இதற்கு முதன்மை தரப்பட்டதற்கும் ஒருகாரணம் கூறப்படுகிறது .. இந்த கிருத்திகைகள் கிழக்குதிசைகளிலிருந்து விலகிச்செல்வதில்லை .. ஆனால் மற்றவைகளோ கிழக்கிலிருந்து விலகிச்செல்கின்றன .. எனவே வேதகாலத்தில் காலநிர்ணயம் செய்வதற்குக் கிருத்திகை மூலகாரணமாக உள்ளது .. 

இப்புனித நட்சத்திரத்தில் முருகனைப் போற்றி .. 
‘ முருகா ! முருகா ’ என்று மனமுருகி வணங்கினால் நிலையான இன்பம் அளித்து நம்மைக்காப்பான் வேலவனே ! 
“ ஓம் சரவணபவாய நமஹ “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM....

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. குருவருளும் .. திருவருளும் கூடிய இந்நாளிலே பிரதோஷ விரதமும் அனுஷ்டிப்பது அதிவிசேஷமாகும் 
பிரதோஷ விரதத்தின் மஹிமையால் தங்களனைவரது தோஷங்கள் அனைத்தும் நீங்கிடவும் .. வாழ்வில் சகல நலன்களும் பெற்று .. என்றும் இன்புற்று வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !! 

பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு .. யார் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக்கொண்டாலும் அதில் குறைந்தது 4 தோஷங்களாவது இருக்கும் .. எத்தனை தோஷங்கள் இருந்தாலும் பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன்மூலம் பயன்பெறலாம் .. 

பொதுவாக பிரதோஷ தினத்தில் சிவனை அனைவரும் வணங்குகின்றனர் .. இந்த இடத்தில் “ அனைவரும் “ என்பது மனிதர்களை மட்டும் குறிக்கவில்லை .. முப்பத்து முக்கோடிதேவர்கள் .. பிரம்மா .. விஷ்ணு .. ஆகியோரையும் குறிக்கும் .. அந்த நேரத்தில் சிவனும் ஷேமநலத்திற்காக வழிபாட்டில் ஈடுபடுவார் என்பது ஐதீகம் .. 

எனவே அனைத்து தரப்பினரும் வழிபாடு செய்யும் நேரத்தில் நாமும் பிரார்த்தனை செய்தால் இதயம் கனிந்து ஈசன் நமக்கு அதிகமான நலன்களை வழங்குவார் என சோதிட நூல்கள் கூறுகின்றன .. 

அதற்கடுத்தபடியாக வாகனத்திற்கு மரியாதை தரக்கூடிய வழிபாடு பிரதோஷம் ஆகும் .. சிவனின் வாகனமான நந்திபகவானுக்கும் மரியாதை செய்யக்கூடியது பிரதோஷம் ஆகும் .. 

நான்குவேதங்கள் .. 64கலைகள் என அனைத்தையும் படித்து முடித்தவர் நந்தீஸ்வரர் .. சிவனின் சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பவரும் நந்திபகவான் என்று ஐதீகம் கூறுகிறது .. எனவேதான் அவருக்கு அனைத்து வேதங்களும் .. இதிகாசங்களும் தெரியும் என்று கூறப்படுகிறது .. மெத்தப்படித்திருந்தாலும் நந்திபகவான் மிகவும் அடக்கமானவர் .. சிவன்கோயில்களில் அவர் அமர்ந்திருக்கும் தன்மையே இதனை உணர்த்தும் விதமாக இருக்கிறது .. அனைத்தையும் கற்றறிந்த பின்னர் அதனை மனதில் அசைபோடும் வகையில் அவர் அமர்ந்திருப்பதுபோல் தோன்றும் .. 

எனவே பிரதோஷபூஜை மேற்கொள்ளும்போது அறிவுவளரும் .. நினைவாற்றல் பெருகும் .. தோஷங்கள் நீங்குகிறது ..எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷகாலத்தில் விரதமிருந்து (மாலை 4.30 - 6.00 மணிவரை ) ஈசனைத்துதித்தால் சிறப்பான பலன்கிட்டும் .. பூர்வஜென்ம வினைகள் .. பெண்ணால் வந்த சாபம் .. உள்ளிட்டவை நீங்கும் .. என விரதமாலை நூல் கூறுகிறது .. 

சிவனை நினை ! சிவனைதுதி ! சிவயோகம் பெறு ! 
“ ஓம் நமசிவாய “ வாழ்க வளமுடனும் என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A DIVINE 
" EKADASI DAY " .. MAY LORD SHIVA RELIEVE YOU FROM ALL SINS AND PAIN AND SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH .. AND HAPPINESS .. " OM NAMASHIVAAYA " .. 
JAI BHOLE NATH ..

 

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM.....

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED 
" EKADASI DAY " WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD VISHNU .. MAY HE REMOVE ALL YOUR SINS & SHOWER YOU WITH EVERY HAPPINESS .. " OM NAMO NAARAAYANAAYA " 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று ஸ்ரீமஹாவிஷ்ணுவிற்கு உகந்த ஏகாதசி விரதமும் அனுஷ்டிப்பதால் ஆலயம் சென்று பகவானைத் தரிசிப்பது சாலச்சிறந்தது .. தங்களனைவருக்கும் நல்லாரோக்கியமும் .. சகல சம்பத்துக்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ விஷ்ணுபகவானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் நமோ நாராயணாய வித்மஹே ! 
வாசுதேவாய தீமஹி ! 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! 

அனைத்து பாவங்களையும் அழித்து அளவில்லா ( அபரா ) செல்வத்தையும் வழங்குவதால் இந்த ஏகாதசியை 
“ அபரா ஏகாதசி “ என்றழைப்பர் .. இவ்விரதத்தை அனுஷ்டிப்போர் மக்களிடத்தில் பேரும் .. புகழும் பெறுவர் 
அபரா ஏகாதசி விரதத்தின் பிரபாவத்தால் பிரம்மஹத்தி தோஷம் .. பிறரை நிந்திப்பது .. பொய்சாட்சி கூறுதல் .. போலிவைத்தியன் ஆகியோரும் இவ்விரதமஹிமையால் பாபம் நீங்கப்பெறுவர் .. 

“ அபரா “ என்றால் அபாரமான அதாவது அபரிமிதம் என்று அர்த்தம் .. யார் ஒருவர் அபரா ஏகாதசி விரதத்தை விதிப்பூர்வமாக அனுஷ்டிக்கிறாரோ அல்லது அதன் மஹிமையைப் பற்றி படிக்கின்றனரோ அவர் பகவானின் அபரிமித கருணைக்குப் பாத்திரமாவார்கள் .. பக்தி மற்றும் சிரத்தையில் வளர்ச்சியையும் காண்பர் .. இந்த சிரேஷ்டமான நாளன்று பக்திபூர்வத்துடன் நாமும் பகவானை ஆராதித்து விஷ்ணுலோகப் பிராப்தியையும் பெறுவோமாக ! 
“ ஓம் நமோ பகவதே ! வாசுதேவாய நமோ நமஹ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
சுவாமியே சரணம் ஐயப்பா...அனைவருக்கும் அன்பான செவ்வாய் காலை வணக்கங்கள். 


அவன் இடுகிறான் அன்றாடம் அன்னம்!
அவனை நினந்துருகிப் பக்தி செய்வோம் இன்னும்!
மனம் இருப்பதோ அவனிடம் என்றும்
மங்காத அருளைத் தருகிறான் என்றும்
கணமும் அவனடி நினைக்கும் வேளை
குணக் கேடுகள் தீர்ப்பதவன் வேலை
மன மன்றில் நீயே நடமாடுகின்றாய்
தினம் என் கனவில் தடம்பதிக்கின்றாய்
எது வந்தபோதும் இனி உந்தன் எல்லை
விதி மாறக் கூடும் கதியேதும் இல்லை
குருநாதன் நீயே வழிகாட்டுவாயே
சருகான வாழ்வில் ஒளி கூட்டுவாயே
.

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM.......PANVEL BALAGAN POTRI POTRI....


 Image result for ganesh images
People may wonder how Ganesha cures diabetics.  Read this intereting article.

Gajananam Bhoota Ganadi Sevitam,
Kapittha Jambu phalasara bhakshitam
Umasutam Shoka Vinasha karanam
Namami Vighneswara pada pankajam”


“Oh Elephant-faced, worshiped by the existing beings,
of all living beings, tasting the elephant apple (kaith) and jambolana (jamun),
the Son of Uma, destroyer of grief,
I bow to the lotus feet of Ganesh who is lord of all.”

Many l of us have come across this powerful mantra of Lord Ganesha.  The meaning of this mantra is also widely known.  Now let us look at this mantra in another context and you will see the message of surviving today Diabetes.

Gajananam means = very big,  very much, very high, plenty, sufficient
Bhoota means = having bitter taste  (example, the taste of bitter guard Karela )
Ganadi means = in total, or in totality, from top to bottom, from bottom to top etc
Sevitam, means =  if consumed, if drunk, or if eaten
Kapittha means = the stem of Lotus (lotus flower)
Jambu phala means =  fruit of jambun or jamun (one kind of fruit, very famous and having medicinal values)
sara means = every, all, juice
bhakshitam =  if consumed, if eaten, if drunk etc
Uma means = sweet
sutam means = which takes birth, taken birth from, taken birth of
Shoka means =   disease, illness
Vinasha karanam means =  the destroying factor, or the destroying element
pada pankajam means = both the legs
Vighneswara means =  to take immense care, take extra ordinary care (yourself to remove all odds)
Namami means = keeping clean, keeping neat
Now,  let us combine this, understand  and study the message.

The first verse of the mantra directs saying – Take the bitter guard (including roots, stems, flowers, and bitter guard), stem of lotus flower, and the jamun fruit,  in equal quantities and make the juice of it.  Now consume the same.  The word gaNAdi gives us the meaning for taking these items in ‘equal quantity’

Then what will happen -

Umasutam Shoka Vinasham, means the illness, the disease, the sickness which takes birth from uma ( here to be read as from sweet), will be vinASa kAraNam, means it will vanish.  Here the shoka , which means the roga or the disease we get from sweet ..?  No doubt, it is Diabetes.


Also the mantra states those who are having Diabeties, they are warned to be careful and protect their legs (ie, keep it very neat, clean and without dust, mud.)

Regular Chanting of this mantra keeping the bhakti or divine spirit of Ganesha in mind, no doubt, it will do away all hurdles in life.  But if one chants this mantra with the thinking explained above, it will result into destroying the Diabetes.   Thus, this powerful mantra is not only to praise Lord Ganesha but if one is chanting this mantra he will be cured from Diabetes.
SWAMIYE SARANAM IYYAPPA...
GURUVE SARANAM SARANAM....
PANVEL BALAGAN PATHAM POTRI POTRI..

GOOD MORNING FRIENDS....TODAY WE ALL WISH THE 30TH WEDDING ANNIVERSARY OF SWAMY BALU......WISH HIM THE LORD PANVEL BALAGAR SHOWER ALL HAPPINESS..
WE REMEMBER KANCHI SANKARACHARYA A LOVABLE INCIDENT ..NARRATED IN TAMIL FOLLOWS...
அநுஷம் முடிந்த மறுநாள். காஞ்சியில் ஏராளமாக பக்தர்கள் தர்சனம் பண்ண வந்தார்கள். அதில் ஒரு வயசான பாட்டி.
“சர்வேஸ்வரா………..மஹாப்ரபு….” என்று பாட்டி கன்னத்தில் போட்டுக் கொண்டார்.
“எப்டி இருக்கான் ஒன் ஸ்வீகாரம்?………”-- மகா பெரியவா.
“ஏதோ இருக்கான்………” விட்டேத்தியாக பதில் வந்தது பாட்டியிடமிருந்து.
“வயசான காலத்ல ஒனக்கு பிடிப்பே இல்லேன்னியே?…அதான் ஒதவியா இருக்கட்டுமே…ன்னுதான் குடுத்தேன்” முகத்தில் சிரிப்பு!
''பிடிப்பு இருக்கட்டும்னு குடுத்தேன் '' சுற்றி இருந்தவர்கள் முகத்திலும் சிரிப்பு.
“சரி………ஒன் ஒடம்பு எப்டி இருக்கு?………”
“ஏதோ இருக்கேன்….பெரியவா அனுக்ரகம்…மழை பெஞ்சா, ஆத்துல முழுக்க ஒரேயடியா ஒழுகறது….அதை கொஞ்சம் சரி பண்ணிக் குடுத்தா, தேவலை பெரியவா”
என்னது?
சுற்றி இருந்தவர்கள் அதிர்ந்தனர்! மோக்ஷத்தை தரவல்ல பராசக்தியிடம் இப்படி ஒரு விண்ணப்பமா!
“இந்த ஊர்ல மழையா ! காஞ்சிபுரந்தான் காஞ்சு போன புறமா இருக்கே.!…….” மறுபடியும் கிண்டல் சிரிப்பு.
“இல்லையே….இப்போ ரெண்டு நாள் முன்னால பெஞ்ச மழைல கூட என் வீடு ஒழுகித்தே!…….”
“அப்டியா! சரி ஏற்பாடு பண்றேன்…..”
பாட்டி நகர்ந்தாள். இத்தனை உரிமையோடு பெரியவாளிடம் பேசும் அந்த பாட்டி, எட்டு வயசில் திருமணமாகி விதவை ஆனவள். கணவர் வழியில் ஏராளமான சொத்து! ஒரு பெண்ணிடம் இத்தனை சொத்து இருக்க சொந்தக்காரர்கள் விடுவார்களா? அதே சமயம் தன்னிடம் வரவேண்டிய ஜீவன் ஒரு நாயாக இருந்தால் கூட பகவான் விட்டு வைப்பானா?
பாட்டிக்கு விவரம் கொஞ்சம் நன்றாக தெரிந்திருந்ததால், சற்று சுதாரித்துக் கொண்டாள். காஞ்சிபுரத்துக்கு எதேச்சையாக வந்தவள், “தன் சொத்துக்கள் அத்தனையும் காமாக்ஷிக்கு!” என்று சொல்லிவிட்டாள். பெரியவா எவ்வளவோ மறுத்தும், கடைசியில் அந்த பெண்ணின் அன்பான பிடிவாதம் வென்றது. எனவே அவளுக்கு மடத்துக்கு சொந்தமான வீடு ஒன்றை தங்கிக் கொள்ள குடுத்துவிட்டார். அல்லும் பகலும் பெரியவாளை தர்சனம் பண்ணும் பாக்யம் ஒன்றே போதும் என்று பரம த்ருப்தியுடன், பணத்துக்கு துளியும் முக்யத்வம் குடுக்காத ஒரு ஆத்மாவை பெரியவா அல்லும் பகலும் ரக்ஷித்தார்.
பாட்டியோடு சிரித்துப் பேசிக் கொண்டிருந்தவரிடம் சில பிரமுகர்கள் வந்து ஒரு தட்டில் ஏதே பத்திரிகையை வைத்தார்கள். சிரித்துக் கொண்டிருந்த முகம் சட்டென்று மாறியது…….
“என்னது இது?”
“காமாக்ஷி அம்மன் ப்ரம்மோத்சவ பத்திரிகை…”
“கலெக்டருக்கு குடுத்தாச்சா?”
“குடுத்துட்டோம். பெரியவா”
“இவாளுக்கு?” என்று பக்கத்தில் அமர்ந்திருந்த மற்ற ரெண்டு பெரியவாளையும் காட்டி கேட்டார்.
“குடுத்தாச்சு. பெரியவா……”
“ஓஹோ…சரி. எல்லார்க்கும் குடுத்துட்டு, இவன் மடத்த விட்டு எங்கேயும் போக மாட்டான்….ன்னுட்டு கடேசில போனாப் போறதுன்னு எனக்கும் ஒரு பத்திரிகை கொண்டு வந்தேளாக்கும்?”
ருத்ர முகம்!
“இல்லை…..அது வந்து……பெரியவா” நிர்வாகிகள் எச்சில் கூட முழுங்க முடியாமல், கால்கள் நடுங்க நின்றனர்.
“கேட்டுக்கோங்கோ! மடத்து சம்ப்ரதாயம்..ன்னு ஒண்ணு இருக்குன்னாவது தெரியுமோ? பத்திரிகை மொதல்ல எங்க தரதுன்னு தெரியுமோல்லியோ?
எல்லா சம்பிரதாயத்தையும் மீறி நடந்துண்டா எப்டி? 
நீ எத்தனை வர்ஷமா இங்க இருக்கே?”
குண்டுகளாக துளைத்தன!
பெரியவா பத்திரிகையை தொடவே இல்லை! 
மடத்து நிர்வாகிகள் நடுங்கிப் போய்விட்டனர்.
ஆம். தவறுதானே?
“எப்டி வரணுமோ அப்டி வாங்கோ” திரும்பி நடந்தவர்களை, “ஒரு நிமிஷம் ……..” நிறுத்தினார்.
“நீ எங்கே குடியிருக்கே?”
“வடக்கு சன்னதிப் பக்கம் ஒரு ஆத்துல…….”
“அங்க வேற ரெண்டு மூணு வீடு இருந்ததே…”
“அங்க சுப்புராமன் இருக்கார்……”
பெரியவாளுக்கோ எந்தெந்த வீடு, யார் யார் இருக்கிறார்கள் எல்லாம் அத்துப்படி!
“சுப்புராமன்தான் மேல போயிட்டாரே……அவரோட வாரிசுகள் மடத்ல வேலை செய்யறாளா என்ன?”
“இல்லை……….”
“மடத்ல வேலை செய்யறவாளுக்குத்தான் நாம வீட்டை குடுத்திருக்கோம். இங்க வேலை செய்யாதவாளுக்கு எதுக்கு வீடு? நீ என்ன செய்வியோ, ஏது செய்வியோ எனக்கு தெரியாது! நாளைக்கு மறுநாள், இந்த பாட்டி அந்த வீட்டுக்கு குடி போகணும் !..டேய்! நாளன்னிக்கு நல்ல நாளா…ன்னு பாரு”
“ஆமா பெரியவா நல்ல நாள்தான்”
“அப்போ சரி. இந்த பாட்டி நாளன்னிக்கு அந்தாத்துக்கு போறதுக்கு ஏற்பாடு பண்ணிடுங்கோ”
பெரியவா சங்கல்பம் நிறைவேறியது!
இதற்கப்புறம் மூன்று மாசம் கழித்து காமாக்ஷி கோவிலில் தர்சனம் பண்ணிவிட்டு சன்னதி தெரு வழியாக நடந்து வந்து கொண்டிருந்த பெரியவா, சட்டென்று ஒரு வீட்டின் முன் நிற்கிறார்.
பின்னால் வந்து கொண்டிருந்த பக்தர் குழாம் குழம்பியது. ஒரு பக்தரிடம், ”ரெண்டு மூணு நாளா பாட்டியை காணும்…..உள்ள போய் பாரு. ஒடம்புக்கு கிடம்புக்கு முடியலையோ என்னவோ…..”
உள்ளே….ஏழ்மையான எளிமையான வாஸம். ஒரே ஒரு குமுட்டி அடுப்பு. ரெண்டே ரெண்டு பாத்ரம். வேறு எதையுமே காணோம். பாட்டி ஒரு ஓரத்தில் முடங்கிக் கிடக்கிறாள். பக்தர் மெதுவாக பாட்டியிடம் பெரியவா வாசலில் நிற்கும் விஷயத்தை சொன்னதுதான் தாமதம்! தடாலென்று எழுந்து, தன் நார்மடியை சரி பண்ணிக் கொண்டு ஓடோடி வருகிறாள்.
இரைந்து…….”சர்வேஸ்வர……மஹாப்ரபு…….நீயே என்னைத் தேடிண்டு வந்துட்டியா?” என்று அலறிக் கொண்டு பெரியவா பாதத்தில் விழுந்தாள். மூன்று முறை வலம் வந்து நமஸ்கரித்தாள். இதை உண்மையான பக்தனும் பகவானும் மட்டுமே அனுபவிக்க முடியும்.
தினம் தினம் ஆயிரக்கணக்கானோர் வந்து தர்சனம் பண்ணுகிறார்கள். ஆனால், தன்னிடம் ஆத்மார்த்தமாக ப்ரேமை பூண்டவர்கள் ஒரு நாள் பார்க்க வராவிட்டால், பகவானால் தாங்க முடியாமல், தானே அவர்களைப் பார்க்க வந்துவிடுவான். அந்த பாட்டிக்கு கிடைத்த பாக்யம் எல்லோருக்கும் கிடைக்குமா? தன்னையே பெரியவாளிடம் முழுவதுமாக அர்ப்பணித்தவர்களுகு மட்டுமே நிச்சயம் கிடைக்கும்.