PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

வருடத்திற்கு ஒருமுறையாவது உங்களது பிறந்த நட்சத்திர ஸ்தலத்திற்கு உங்களின் நட்சத்திரம் வரும் நாளன்று சென்று வளம் பெறுங்கள்...

அஸ்வினி - முக்கிய ஸ்தலம் - கூத்தனூர்

மற்ற தலங்கள் - ஸ்ரீரங்கம், திருத்துறைபூண்டி, கொல்லிமலை.

பரணி - முக்கிய ஸ்தலம் - நல்லாடை

மற்ற தலங்கள் - திருநெல்லிக்கா, கீழப்பறையார், பழனி, பட்டீஸ்வரம், திருத்தங்கல், திருவாஞ்சியம்.

கார்த்திகை - முக்கிய ஸ்தலம் - கஞ்சானகரம்

மற்ற தலங்கள் - காஞ்சிபுரம், திருப்புகலூர், கீரனூர், திருச்செந்தூர், திருவொற்றியூர், கானாட்டுமுள்ளூர்.

ரோஹிணி - முக்கிய ஸ்தலம் - திருக்கண்ணமங்கை

மற்ற தலங்கள் - காஞ்சிபுரம், திருவானைக்கோவில், ஜம்பை, கழுகுமலை, செம்பாக்கம், கொரட்டூர், நெல்லிச்சேரி, மன்னார்குடி, பெருமாள் அகரம், திருவரங்கம், திருக்கண்ணபுரம், திருக்கண்ணங்குடி.

மிருகசீரிடம் - முக்கிய ஸ்தலம் - எண்கண்

மற்ற தலங்கள் - அம்பர் மாகாளம், ஓசூர், முசிறி, தாழமங்கை.

திருவாதிரை - முக்கிய ஸ்தலம் - சேங்காலிபுரம்

மற்ற தலங்கள் - சிதம்பரம், அதிராம்பட்டினம்.

புனர்பூசம் - முக்கிய ஸ்தலம் - சீர்காழி

மற்ற தலங்கள் - பழைய வாணியம்பாடி, திருவள்ளூர், திருநெல்வேலி, திருப்பாசூர், திருவெண்ணெய்நல்லூர்.

பூசம் - முக்கிய ஸ்தலம் - திருச்சேறை

மற்ற தலங்கள் - விளங்குளம், ஒழுந்தியாபட்டு, ஆவூர், கோனேரிராஜபுரம், பரிதிநியமம், திருச்சுழி, அழகர் கோயில்.

ஆயில்யம் - முக்கிய ஸ்தலம் - திருப்புறம்பியம்

மற்ற தலங்கள் - திருந்துதேவன்குடி, நண்டான் கோயில், சங்கரன்கோயில், திருப்புனவாசல், புள்ளபூதக்குடி, திருவிடந்தை.

மகம் - முக்கிய ஸ்தலம் - திருவெண்காடு

மற்ற தலங்கள் - திருக்கச்சூர், திருவரத்துறை, கீழப்பழுவூர், ஆலம்பொழில், அன்பில், திருவாலங்காடு.

பூரம் - முக்கிய ஸ்தலம் - தலைசங்காடு

மற்ற தலங்கள் - நாலூர், கஞ்சனூர், திருவரங்குளம், புரசைவாக்கம்.

உத்திரம் - முக்கிய ஸ்தலம் - கரவீரம்

மற்ற தலங்கள் - காஞ்சிபுரம், திருவக்கரை, செய்யூர், கூவத்தூர், மயிலாடுதுறை, இடையாற்றுமங்கலம்.

ஹஸ்தம் - முக்கிய ஸ்தலம் - கோமல்

மற்ற தலங்கள் - தர்மபுரி, செய்யாறு, புவனகிரி, ஏமப்பூர் , எழிலூர், திருவாதவூர், திருவேற்காடு.

சித்திரை - முக்கிய ஸ்தலம் - திருவையாறு

மற்ற தலங்கள் - அண்ணன்கோயில், தாடிக்கொம்பு, திருநாரயணபுரம், நாச்சியார் கோயில், திருவல்லம், திருவக்கரை, திருக்கோயிலூர், திருமாற்பேறு.

சுவாதி - முக்கிய ஸ்தலம் - திருவிடைமருதூர்

மற்ற தலங்கள் - திருப்புடைமருதூர், பெரியதிருக்கோணம், கடத்தூர், பிள்ளையார்பட்டி, நயினார் கோயில், ஸ்ரீரங்கம்.

விசாகம் - முக்கிய ஸ்தலம் - கபிஸ்தலம்

மற்ற தலங்கள் - திருமலைக்கோயில், அத்தாளநல்லூர், தீயத்தூர், திருநன்றியூர், நத்தம்.

அனுஷம் - முக்கிய ஸ்தலம் - நாச்சியார் கோயில்

மற்ற தலங்கள் - திருவொற்றியூர், திருவண்ணாமலை, திருப்புனவாசல், திருக்கண்ணமங்கை, நீடூர், திருநன்றியூர்.

கேட்டை - முக்கிய ஸ்தலம் - வழுவூர்

மற்ற தலங்கள் - பிச்சாண்டார் கோயில், பசுபதி கோயில், பல்லடம், திருப்பராய்த்துறை.

மூலம் - முக்கிய ஸ்தலம் - மயிலாடுதுறை

மற்ற தலங்கள் - மாந்துறை, ஆச்சாள்புரம், பாமணி, கோயிலூர், குலசேகரப்பட்டினம், பொழிச்சலூர், மம்பேடு.

பூராடம் - முக்கிய ஸ்தலம் - கடுவெளி

மற்ற தலங்கள் - நகர், சிதம்பரம், இரும்பை மகாகாளம்.

உத்திராடம் - முக்கிய ஸ்தலம் - இன்னம்பூர்

மற்ற தலங்கள் - கோயம்பேடு, காங்கேயநல்லூர், பேளூர், கீழ்பூங்குடி, திருப்பூவனூர், திருக்கடிக்குளம், திருப்பூவணம், திருக்கோஷ்டியூர், திருக்குற்றாலம்.

திருவோணம் - முக்கிய ஸ்தலம் - திருவிடைமருதூர்.

மற்ற தலங்கள் - ராஜேந்திரப்பட்டினம், திருமுல்லைவாயில், திருப்பாற்கடல்.

அவிட்டம் - முக்கிய ஸ்தலம் - திருபூந்துருத்தி

மற்ற தலங்கள் - விருதாச்சலம், திருவான்மியூர், திருக்காட்டுப்பள்ளி, திருகொள்ளிக்காடு, திருமறைக்காடு, கொடுமுடி.

சதயம் - முக்கிய ஸ்தலம் - திருப்புகலூர்

மற்ற தலங்கள் - கடம்பனூர், கோயில் கடம்பனூர், ஆதி கடம்பனூர், இளங்கடம்பனூர், வாழிக்கடம்பனூர், பெருங்கடம்பனூர், கடம்பர் கோயில், மேலக்கடம்பூர் , பிச்சாண்டார் கோயில், மதுரை.

பூரட்டாதி - முக்கிய ஸ்தலம் - திருக்குவளை

மற்ற தலங்கள் - ரெங்கநாதபுரம்.

உத்திரட்டாதி - முக்கிய ஸ்தலம் - திருநாங்கூர்.

மற்ற தலங்கள் - தீயாத்தூர், வைத்தீஸ்வரன் கோயில்.

ரேவதி - முக்கிய ஸ்தலம் - இலுப்பைப்பட்டு

மற்ற தலங்கள் - காருகுடி, இரும்பை மாகாளம், திருச்செங்கோடு.
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையாகிய இன்று நவராத்திரி ஆறாம் நாளாகும் .. அன்னை மஹாலக்ஷ்மியை கருமாரிதேவியாக வழிபடல்வேண்டும் .. மயில்வாகனும் .. சேவல்கொடியும் உடையவள் .. தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள் ..ஓங்காரசொரூபமானவள் .. சகல பாவங்களையும் விலக்கிக்கொள்பவள் .. வீரத்தைத்தருபவள் .. அன்னையைத் துதித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் எவ்வித தடங்களுமின்றி அனைத்து காரியங்களும் வெற்றிப்பெற வாழ்த்தி வணங்குகிறேன் .. ஓம்சக்திஓம் .. ஒம்சக்திஓம் .. ஓம்சக்திஓம் .. // .. செல்வத்திருமகளே ! மோகனவல்லியே ! எல்லோரும் கொண்டாடும் வேதவல்லியே ! எண்கரங்களில் சங்கு .. சக்கரம் ..வில்லும் .. அம்பும் .. தாமரைமின்னும் கரங்களில் நிறைகுடம் .. தளிர்த்தாம்பூலம் அணி சியாமளையே ! வரதமுத்திரை காட்டியே பொருள் வழங்கும் அன்னையே !சிரத்தினில் மணிமகுடம் தாங்கிடும் சிந்தாமணியே ! வரதராஜ சிகாமணியே ! தாயே ! தனலட்சுமியே ! சகலவளமும் தந்திடுவாய் .. வாழ்க வளமுடனும் நலமுடனும் .. .. .. .. .. ..  .. WISH YOU ALL A HAPPY MONDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF GODDESS LAKSHMI .. MAY SHE BE WITH YOU IN YOUR EACH STEPS YOU TAKE .. OM SHAKTHI OM ..

2011 -ம் வருடம் பம்பாவில் நடந்த பூஜையின் சில நிகழ்வுகளின் தொகுப்பு



அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று நவராத்திரி ஐந்தாம்நாள் .. இன்று அன்னையை மஹேஸ்வரி தேவியாக வழிபடவேண்டும் ... அன்னை மஹேஸ்வரனின் சக்தியாவாள் திரிசூலம் .. பிறைச்சந்திரன் .. பாம்புதரித்து இடபவாகனத்தில் எழுந்தருளியிருப்பவள் .. சர்வமங்களம் தருபவள் .. தர்மத்தின் திருவுருவம் .. கடின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பலனைப் பெற அன்னையின் அருள் அவசியம் வேண்டும் .. அன்னை மஹாலக்ஷ்மியைத் துதித்து தங்கள் அனைவரும் சகலசம்பத்துக்களும் பெற்று மகிழ்ச்சிகரமான வாழ்வு வாழ பிரார்த்திக்கின்றேன் .. யாதேவி ஸ்ர்வபூதேஷு .. லக்ஷ்மி ரூபேன ஸ்ம்ஸ்த்திதா .. நமஸ்தஸ்யை .. நமஸ்தஸ்யை .. நமஸ்தஸ்யை .. நமோ நமஹ .. .. ஓம்சக்திஓம் ! ஓம்சக்திஓம் ! ஓம்சக்திஓம் ! வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. .. .. GOOD MORNING  MAY THE DIVINE BLESSINGS OF GODDESS LAKSHMI BRINGS YOU ETERNAL BLISS AND FULFIL ALL YOUR WISHES .. ..
என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் . .. நவராத்திரி நான்காம் நாளாகிய இன்று .. அன்னை மஹாலக்ஷ்மிக்குரிய நாளாகும் .. அன்னையைத் துதித்து அனைவருக்கும் அன்னை மஹாலக்ஷ்மியின் அருட்கடாக்ஷ்மும் .. ஐஸ்வரியமும் பெருக பிரார்த்திக்கின்றேன் .. நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே சங்கு சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே .. .. // .. இன்று ச்க்தித்தாயை வைஷ்ணவி தேவியாக வழிபடல் வேண்டும் .. சங்கு .. சக்ரம் .. கதை .. வில் .. ஆகியவற்றை கொண்டிருப்பவள் .. தீயவற்றை சம்ஹாரிப்பவள் .. ஓம்சக்திஓம் .. ஓம் சக்திஓம் .. ஓம்சக்திஓம் .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. .. WISH YOU ALL A HAPPY SATURDAY MORNING WITH THE BLESSINGS OF GODDESS LAKSHMI .. MAY LAKSHMI SHOWER HER BLESSINGS WITH WEALTH .. HEALTH AND PROSPERITY ..
LikeLike ·  · 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வெள்ளிக்கிழமையாகிய இன்று நவராத்திரி மூன்றாம் நாளாகும் .. அன்னை துர்க்காதேவியைத் துதித்து தங்களனைவருக்கும் சகலசௌபாக்கியங்களும் கிட்டிடப் பிரார்த்திக்கின்றேன் .. // அன்னை துர்க்காதேவியை பல்வேறு பெயர்களில் பக்தர்கள் வழிபடுகின்றனர் .. அன்னையைப் போற்றும் அனைவருக்கும் நல்லருள் தந்து வெற்றிகளைக் கொடுப்பதினால் ‘ ஜெய துர்க்கை ‘ என்று போற்றுகின்றனர் .. பதினெட்டு கரங்களுடன் பக்தர்களைப் பரவசப்படுத்துவதினால் ‘ அஷ்டாதசபுஜ துர்க்கை ‘ என்று போற்றி வணங்குகின்றனர் .. அன்னையை ராகுகாலத்தில் வழிபடுவதினால் ‘ இராகு கால துர்க்கை ‘ என துதிக்கின்றனர் .. சினம் கொண்டு சிவந்த கண்களுடன் .. சிவந்தமேனியுடன் திகழ்வதினால் ‘ கெப்பம்மா துர்க்கை ‘ என்று வழிபடுகின்றனர் .. வீராவேசம் கொண்டு அரக்கர்களை அழித்து .. தேவர்களுக்கு அரணாக இருந்தமையால் ‘ கொற்றவை ‘ என்றும் துதிக்கின்றனர் .. வலக்கையில் மழுவுடன் காட்சியளிக்கும் துர்க்கையை ‘சிவதுர்க்கை’ என்று வணங்குகின்றனர் .. இடக்கையில் சங்கும் வலக்கையில் சக்கரமும் கொண்டு பக்தர்களுக்கு காட்சியளிக்கும் துர்க்காதேவியை ‘விஷ்ணுதுர்க்கை’ என வழிபடுகின்றனர் .. அன்னையை பல நாமங்களில் அழைத்து மனம் உருகி வணங்கி வழிபட்டாலும் பக்தர்களுக்கு பேரருளை வழங்கி வாழ்வளிக்கின்றாள் .. ஓம் சக்திஓம் ! ஓம் சக்திஓம் ! ஓம்சக்திஓம் ! வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. .. .. // .. .. WISH YOU ALL A BLESSED FRIDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF GODDESS DURGA ..

சபரிமலை ஐயப்பனின் 18 படிகளின் தத்துவம்..
******************************************************************
முதல் ஐந்து படிகள் பஞ்சேந்திரியங்கள் என்று சொல்லப்படுகின்ற மெய் ,வாய், கண், மூக்கு, செவி ஆகியவற்றை குறிப்பிடுகின்றன.
அடுத்த எட்டு படிகள் அதாவது ஆறாவது படி முதல் பதிமூன்றாவது படி வரை அஷ்டராகங்கள் என்று சொல்லப்படுகின்ற காமம் ,குரோதம், லோபம், மோகம், மதம் ,மாச்சரியம், அகந்தை, பொறாமை ஆகிய எட்டையும் குறிப்பிடுகின்றன.
அடுத்த மூன்று படிகள் அதாவது பதிநான்கு படி முதல் பதினாறாவது படி வரை முக்குணங்கள் என்று சொல்லப்படுகின்ற சத்துவ குணம், ரஜோ குணம் ,தமோ குணம் ஆகிய மூன்றையும் குறிப்பிடுகின்றன.
அடுத்த இரண்டு படிகள் அதாவது பதினேழாவது படி மற்றும் பதினெட்டாவது படி ஆகியவை கல்வி (ஞானம்) ,அறியாமை (அஞ்ஞானம்) ஆகியவற்றை குறிப்பிடுகின்றன.

மேலே சொல்லப்பட்டவைகளை ஒருவர் உணர்ந்து புண்ணிய பாவங்களை பிரித்து அறிந்து நடப்பவரால் மட்டுமே பிறவிப் பெருங்கடலிலிருந்து விடுதலை பெற்று முக்தி அடைய முடியும் என்பதை இந்த 18 படிகள் தத்துவ ரீதியாக விளக்குவதாக சிலர் கூறுகின்றனர்.

தத்துவம்
18 படிகளில் ஒவ்வொரு படியாக நாம் அடி எடுத்து வைக்கும் பொழுது பிறப்பு இறப்புக்கு காரணமான பிறவிப் பெருங்கடலை கடக்க விடாமல் செய்து முக்தி அடையாமல் தடுத்து வாழ்க்கையோடு ஒட்டி நம் கூடவே இருந்து கர்மவினைகளை உண்டாக்கும் பழக்கங்கள் நம்மை விட்டு விலகுவதாக சொல்லப்படுகிறது .

அதாவது 18 படிகளில் ஒவ்வொரு படியாக ஐயப்ப பக்தர் அடி எடுத்து வைக்கும் பொழுது கர்மவினைகளை உண்டாக்கும் ஒவ்வொரு பழக்கமும் நம்மை விட்டு விலகுவதாக நம்பப்படுகிறது.

1ம் படி-காமம் 11 ம் படி----இல்லறப்பற்று
2ம் படி----குரோதம் 12 ம் படி----புத்திரபாசம்
3 ம் படி---லோபம் 13 ம் படி----பணத்தாசை
4 ம் படி---மோகம் 14 ம் படி---பிறவி வினை
5 ம் படி---மதம் 15 ம் படி----செயல்வினை
6 ம் படி---மாச்சர்யம் 16 ம் படி----பழக்கவினை
7 ம் படி---வீண்பெருமை 17 ம் படி----மனம்
8 ம் படி---அலங்காரம் 18 ம் படி-----புத்தி
9 ம் படி---பிறரை இழிவுபடுத்துதல்
10 ம் படி---பொறாமை

18 ம் படிக்கு மேலும் பலப்பல விளக்கங்கள் சொல்லப்படுகிறது அதைப்பற்றியும் நாம் பார்ப்போம்:--
தமிழ் இலக்கியங்கள்
தமிழ் இலக்கியங்களில் எண் 18 ஒரு முக்கிய எண்ணாகக் கருதப்படுகிறது
பிங்கள நிகண்டு 18 தேவர்களையும் ,18 தர்ம சாஸ்திரங்களையும் ,18 யுகங்களையும், 18 குற்றங்களையும் பற்றி பேசுகின்றது.
மூலகுரு சுருக்கமும் ,அகத்தியர் பரிபாஷையும் 18 மொழிகளைக் குறிக்கின்றன.
அகஸ்தியர் கௌமுதி 18 நோய்களைக் குறிப்பிடுகின்றது.
அகஸ்தியர் வைத்திய சூரணம் 18 ஜாதிகளைப் பற்றி இயம்புகிறது.
சுப்பிரமணியர் ஞானம் 18 யுகங்களை விவரிக்கின்றது.
தாண்டகம் 18 வகையான இசைக்கருவிகளைப் பற்றி பேசுகிறது.
தமிழில் 18 மெய்யெழுத்துக்கள் இருக்கிறது.

தமிழ் ஆதாரங்கள் பெரும்பாலும் பதிணென் சித்தர்கள் என்ற பதினெட்டுச் சித்தர் வரிசையைக் குறிப்பிடுகின்றன

சித்த மருத்துவம்
சித்த மருத்துவத்தில் 18 என்ற எணணுக்கு ஒரு சிறப்பான இடம் கொடுக்கப்பட்டு ஒரு முக்கியமான எண்ணாகக் கருதப்படு வருகிறது
மச்சமுனி என்ற சித்தர் 18 மூலிகைகளைப் பற்றி தன்னுடைய மச்சமுனி - மெய்ஞ்ஞானப் புத்தகத்தில் குறிப்பிடுகிறார்

சித்த மருத்துவத்தில் தேகம் என்பது கீழ்க்கண்ட 18 உறுப்புக்களைக் கொண்டதாகும் என்று சொல்லப்படுகிறது :
பஞ்ச பூதங்கள் 5 :- நிலம் ,நீர் , நெருப்பு, காற்று, விண்
ஞானேந்திரியங்கள 5: - மெய், வாய் ,கண், மூக்கு, செவி
பஞ்ச தன் மாத்திரைகள் 5: - அழுத்தம் ,ஒலி, ஒளி, சுவை ,மணம்
இவற்றோடு 3: -மனம் ,புத்தி, அகங்காரம் என்று மொத்தம் 18

உலக அளவில்
பதினெட்டுச் சூனியங்களின் கோட்பாட்டின் நிலைகளை அசங்கரும் ,திக் நாகரும் வரிசைப் படுத்தி இருப்பதாக சசிபூஷண்தாஸ் குப்தா தன்னுடைய நுhலில் குறிப்பிட்டிருக்கிறார்.
சீன புராண இலக்கியங்களின் படி 18 லோஉறன்கள் (அருகதர்கள்) இருப்பதாகக் கூறப்படுகிறது.
ராஸேஸ்வர தரிசனம் என்ற புத்தகத்தில் பாதரசத்தை 18 முறைகளில் விரிவு படுத்தும் செய்தி பேசப்படுகிறது.
ஷ்யாம் சுந்தர் கோஸ்வாமி என்பவர் சாண்டில்ய உபநிஷத்திலிருந்து ஒரு மேற்கோள் காட்டுகிறார் . அதன்படி நம் தேகத்தில் 18 இடங்களில் உணர்வுக் கட்டுப்பாட்டு மையங்கள் இருக்கின்றன.

இந்தியா
தேவாசுர யுத்தம் 18 ஆண்டுகள் நடந்தது.
ராம ராவண யுத்தம் 18 மாதங்கள் நடந்தது.
பாண்டவ கொளரவ யுத்தம் 18 நாட்கள் நடந்தது.
குருஷேத்திரப் போர் 18 நாட்கள் நடைபெற்றது அதர்மம் அழிந்து தர்மம் நிலைநாட்டப் பட்டது என்பதன் அடிப்படையில் 18 நாட்கள் நடைபெற்ற போரை குறிப்பிடும் படியாக அதன் அடையாளமாக 18 படிகள் அமைக்கப் பட்டுள்ளதாக சிலர் கூறுகின்றனர்.
பகவத் கீதையில் உள்ள 18 அத்தியாயங்கள் 18 படிகளைக் குறிப்பிடுவதாக சிலர் கூறுகின்றனர்.
18 ஆகமங்கள் உள்ளது.

சோதிடம்
18 என்ற எண்ணில் உள்ள 1 என்ற எண்ணையும் 8 என்ற எண்ணையும் கூட்டினால் 9 என்ற எண் வரும் சோதிடத்தில் 9 என்ற எண் கேதுவைக் குறிக்கிறது .
அது ஞானக்காரகன் ,மோட்சக்காரகன் என்று அழைக்கப்படுகிறது கேது ஞானத்தைக் குறிக்கும் ஒரு கோளாகும்.
எனவே 18 என்ற எண்ணும் உயர்ந்த ஞானத்தை உணர்த்துவதாகக் கருதப்படுகிறது.

நவக்கிரகம்
18 என்ற எண்ணில் உள்ள 1 என்ற எண்ணையும் 8 என்ற எண்ணையும் கூட்டினால் 9 என்ற எண் வரும் சோதிடத்தில் 9 என்ற எண் நவக்கிரகங்களைக் குறிக்கிறது
நவக்கிரகங்கள் எனப்படுபவை சூரியன் ,சந்திரன் ,செவ்வாய், புதன் ,குரு, சுக்ரன், சனி, ராகு ,கேது ஆகியவை ஆகும்
நவக்கிரகங்கள் தான் மனிதனுடைய வாழக்கையில் நடைபெறக்கூடிய இன்பம், துன்பம், அமைதி ,பேரின்பம் என்ற பல்வேறு நிலைகளுக்கும் காரணம் என்று சொல்லப்படுகிறது நவக்கிரகங்கள் தான் ஒரு மனிதனை ஆட்டி வைக்கிறது என்று சோதிடம் கூறுகிறது.

முடிவான கருத்து
உலகின் பல்வேறு நாடுகளில் பல்வேறு இடங்களில் 18 என்ற எண்ணிற்கு பல்வேறு சிறப்புகள் சொல்லப்பட்டாலும் நம்முடைய அறிவு வளர்ச்சிக்கும் ஆன்ம நிலை விழிப்பிற்கும் ஏற்ற வகையில் ஒவ்வொரு ஐயப்ப பக்தரும் 18 படிகள் எதைக் குறிக்கிறது என்பதை அவர்கள் தான் முடிவெடுத்துக் கொள்ள வேண்டும்
FROM TODAY  WE ARE GOING TO PUBLISH SOME MEMORABLE EVENTS OF LAST YEAR...ENJOY THE MOMENTS
SWAMIYEE SARANAM IYYAPPA
பன்வேல் இன்று25-10-2013 நடந்த பூஜை மற்றும் ஐயப்பாமார்கள் மாலை அணிதல் 



இன்று20-10-2013குருசாமி ஆசியுடன் பெருங்களத்தூர் ராமக்ருஷ்ணன் சாமி இல்லத்தில்  சென்னை ஐயப்பமார்கள் மாலை அணிந்து கொண்டனர். 



அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று 24.09.2014 நவராத்திரி விரதம் ஆரம்பமாகி பத்தாம் நாள் 03.10 .2014 விஜயதசமியுடன் நிறைவு பெறும் .. ஒன்பது தினங்கள் நவராத்திரி காலமாகும் .. அசையாப்பொருள் பரம்பொருள் என்றும் .. அசைவுடைய செயல் சக்தி என்றும் கூறப்படுகிறது .. பொதுவாக சிவராத்திரி .. கிருஷ்ண ஜெயந்தி .. ராமநவமி போன்ற விழாக்கள் ஒருநாள் விசேஷமாக கொண்டாடப்படுகிறது .. ஆனால் சக்தி வழிபாடு மட்டும் நவராத்திரி என்ற பெயரில் ஒன்பது நாட்கள் விழாவாக கொண்டாடப்படுகிறது .. ஜீவராசிகள் யாவும் துன்பமின்றி நலமோடு வாழ விரதமிருப்பர் .. நவம் என்றால் புதியது என்றும் .. ஒன்பது என்றும் இரு பொருள் தரக்கூடிய சொல்லாகும் .. பழமையோடும் புதுமை கலந்தும் பரிணமிக்க வழிகாட்டும் விழா என்றும் கொள்ளலாம் .. புரட்டாசி அமாவாசை நாளுக்குப் பின் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது .. நவராத்திரியின் போது ஒன்பது வகையில் மலர்வழிபாடு செய்வார்கள் .. கொலுவிலிருக்கும் தேவியரை ஒன்பது ராகங்களில் துதித்து ஒன்பது வகைப் பழங்கள் .. பிரசாதங்கள் படைத்து அன்னையின் மனம் மகிழ்வுறச் செய்வார்கள் .. படைத்தல் .. காத்தல் .. அழித்தல் எனும் மூன்று சக்திகளைக் கொண்ட அன்னையின் அருள்வேண்டி பூஜை செய்தாலே நவராத்திரி வழிபாடாகும் .. துர்க்கா .. லக்க்ஷ்மி .. சரஸ்வதி என மூவகையாக மும்மூன்று நாட்கள் விழாவாகக் கொண்டாடுவதும் .. இறுதியில் பத்தாம் நாள் அம்மனை சிம்மவாகனத்தில் ஊர்வலமாகக் கொண்டு சென்று சூரனை வதம் செய்த நிகழ்ச்சியாக பாரிவேட்டையும் நடைபெறும் ..புரட்டாசி மாதத்தில் நவராத்திரி விழாவில் கொலு வைத்தல் பரம்பரையாகச் செயல்பட்டு வரும் பக்தி நிகழ்ச்சியாகும் .. நல்லோரின் நட்பை ஏற்றுப் போற்றுதலும் பக்தியைப் பெருகச் செய்வதும் கொலுவின் முக்கிய நோக்கமாக அமைகிறது .. பிரதமைமுதல் திரிதியைவரையில் கிரியாசக்தியாகிய துர்க்காதேவியையும் .. சதுர்த்தசி முதல் சஷ்டிவரையில் இச்சாசக்தியாகிய மஹாலக்ஷ்மியையும் .. சப்தமி முதல் நவமி வரையில் ஞானசக்தியாகிய சரஸ்வதியையும் .. வழிபாடு செய்து .. தசமியில் நவராத்திரியை நிறைவு செய்வர் .. மகேஸ்வரி .. மாரி .. வராஹி .. மஹாலக்ஷ்மி .. வைஷ்ணவி .. இந்திராணி .. சரஸ்வதி .. நரசிம்மி .. சாமுண்டீஸ்வரி .. போன்ற தேவியரின் மந்திரங்களை ஒன்பது நாளும் சொல்லி பூஜை செய்வது நலமாகும் .. ஒன்பது நாளும் அன்னையை வழிபடும் அனைத்து அன்புள்ளங்களுக்கும் அனைத்து காரியங்களும் கைகூடும் .. குடும்பத்தில் அன்பும் ஒற்றுமையும் ஓங்கும் .. இல்லத்தில் செல்வம் சேரும் .. ஓம் சக்தி .. WISH YOU ALL A HAPPY MORNING AND A HAPPY NAVARATHRI WISHES TOO .. MAY GODDESS DURGA BLESS YOU FOR A BRIGHTFUL DAY ..
குரு உபதேசம்: 
அடக்கம்:

அடக்க குணம் வருகிறது ரொம்பவும் கஷ்டம். அதுவும் கல்வி கற்க கற்க "தான் அறிவாளி" என்ற அஹங்காரமும் ஏறிக் கொண்டேதான் வரும். அடக்கம் வேண்டும் என்பதற்காகவேதான் "குருகுலவாசம்" என்று வைத்து, வீட்டை விட்டுப் பிள்ளைகளை அங்கே அனுப்பி வைத்தார்கள்.
குரு நல்லவராக இருந்தால் அவரிடம் பக்தியாய் இருப்பதில் நமக்கு என்ன பெருமை? யோக்கியதை இல்லாத ஒருவர் குருவாக இருந்தாலும் அவரிடம் அடங்கி இருந்தாலே மனது நல்ல பக்குவம் அடையும். நல்ல எண்ணம், சீர்திருத்தம் எதுவானாலும் அடக்கம் வேண்டும். அப்படி இருந்து கொண்டு செய்தால் சாஸ்திர விரோதமாகப் போக வேண்டியே வராது. நாம் நினை என்றால் மனம் ஒன்றை நினைக்க வேண்டும். நினைக்காதே என்றால் நினைக்காமல் இருக்கவேண்டும். அப்போதுதான் நமக்கு மனம் ஸ்வாதீனமாயிற்று. நமக்கு சித்த ஸ்வாதீனம் இருக்கிறது என்று அர்த்தம்.
மனசாட்சிக்கு எப்படித் தோன்றுகிறதோ அப்படிச் செய்கிறேன் என்று சொல்வது தப்பு. மனசு ஒரு தனி மனிதனைச் சேர்ந்தது. எனவே அது எவ்வளவு தூரம் அவனது சுயநலத்தை விட்டு விலகிப் பேசும் என்று சொல்ல முடியாது. வீடு அழுக்கு இல்லாமல் இருந்தால் போதாது. துணி அழுக்கு இல்லாமல் இருந்தால் போதாது. உடம்பு அழுக்கு இல்லாமல் இருந்தால் போதாது. நம் மனம் அழுக்கு இல்லாமல் இருக்கவேண்டும்.

குருவின் துணையால் மட்டுமே நம்முடைய மனதில் உள்ள அழுக்குகளை போக்கும் உபாயங்களை அடையமுடியும்.

நம் நல்லெண்ணங்களில் ஆய்வுநடத்தி சரியான வழிகாட்டுதல் குருவினால் மட்டுமே தரமுடியும்.

குருவின் பாதாரவிந்தங்களில் சரணடைதல் ஒன்றே அனைத்து துன்பங்களையும் விடுவிக்கும்.
.
காணக் கண் கோடி வேண்டும்

ஐயனவன் திருவுருவை!

அலங்காரத் திருவுருவாய்

அருள்வாக்கு தந்திடுவான்!

அவன் சரண் அடைந்தோரின்

அவதிகளை போக்கிடுவான்!

அவனின்றி ஓர் அணுவும் அசையாதிங்கே!!

அவன் பாதம் பணிந்திடுவோம்!

அருளாசி பெற்றிடுவோம்!

சுவாமியே சரணம் ஐயப்பா!







அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று பிரதோஷ விரதம் .. சிவபெருமானைத் துதித்து தங்களனைவருக்கும் அனைத்து செல்வங்களும் கிடைத்திட பிரார்த்திக்கின்றேன் .. .. .. .. ........ ... .. ஓம் நமசிவாய .. சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம் .. ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும் .. மாதந்தோறும் இருமுறை வளர்பிறை .. தேய்பிறை .. திரையோதசி (13ம்நாள்) நாட்கள் பிரதோஷ தினங்களாகும் ..இந்நாட்களில் மாலை 4.30 மணிமுதல் .. 6.00 மணிவரையிலான நேரமே பிரதோஷ காலமாகும் .. இந்தநேரத்தில் பரமசிவனை வழிபட்டால் மற்ற நாட்களில் ஏற்படும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம் என்பது நம்பிக்கை .. பிரதோஷம் என்றால் என்ன..? .. சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது இந்தப் பிரதோஷ நேரத்தில் தான் .. தேவர்களும் .. அசுரர்களும் .. போட்டி போட்டுக்கொண்டு பாற்கடலைக் கடைந்தபோது .. திருமகள் .. ஐராவதம் .. காமதேனு .. கற்பகத்தரு .. சிந்தாமணி .. கௌஸ்துபமணி .முதலியவை ஒவ்வொன்றாகத் தோன்றின .. லட்சுமியைத் திருமால் ஏற்றுக்கொண்டார் .. மற்ற பொருட்களை இந்திராதி தேவர்கள் ஏற்றுக்கொண்டனர் .. ஆனால் கூடவே கொடிய ஆலகால விஷமும் வெளிப்பட்டது .. இதைக்கண்டு தேவர்களும் .. முனிவர்களும் பெரிதும் நடுங்கினர் .. உயிர்களைக் காப்பாற்ற பரமசிவன் அந்த விஷத்தை உண்டார் .. தன் கணவரின் உடலில் விஷம் பரவுவதைக் கண்ட பார்வதி தேவி .. தன் கரங்களால் அவரைத்தொட விஷம் சிவனின் நெஞ்சுக்குழியிலேயே நின்று விட்டதால் இறைவன் நீலகண்டனானார் .. இந்த நேரம்தான் பிரதோஷ காலம் என்று வணங்கப்படுகிறது .. நந்திதேவரையும் மறவாமல் வழிபாடு செய்ய வேண்டும் .. நந்திதேவரது தீபாராதனைக்குப் பின் மூலவரான லிங்கத்திற்கு நடக்கும் தீபாராதனையை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கிடையே பார்த்து தரிசிக்க நம் தோஷங்கள் நீங்கி நன்மையுண்டாகும் .. // .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. .. MAY LORD SHIVA BLESS YOU .. AND GUIDES YOU .. HAVE A BLESSED SUNDAY TOO ..
பன்வேல் பாலகன்
பவனி இன்று தொடங்கினான்

பாலகன் வர இருக்கும்
பவன்  நோக்கி தொடங்கினான்

சிருஷ்சை செய்வதில்
சிஷ்யரிகளில் சிறந்தவன்

இல்லம் நோக்கி
இச்சையுடன் இசைந்திட

இனிமையாக இல்லத்தில்
இருந்திட செய்திட்டான்

குருவின் கை வண்ணத்தில்
குவளயத்தோர் வழிபடவே

தொடக்கமதை தந்திட்டான்
துலங்கிடவே வந்திட்டான்


ஓரிரு நாட்களே
ஒருநிமிட பொழுதென
ஓடத்துவங்கிட 
காட்சி இங்கே தந்திட்டான்
சிவாவின் இல்லத்தில்
சிறப்புடனே  அமர்ந்து
அருள்காட்சி தந்து நம்மை
அவன் இருக்கும் திசை நோக்கி
அவயங்கள் அனைத்தினையும்
அடைக்கலமாய் தந்திடவே!

அவன் புகழ் பாடிடுவோம்!
அவன் திசை நோக்கி தொழுதிடுவோம்!

சுவாமியே சரணம் ஐயப்பா!!



அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று புரட்டாசி மாதப்பிறப்பு .. ஆன்மிக மாதம் என்பர் .. இம்மாதத்தில் தவறாமல் வழிபாடுகளைச் செய்து தெய்வங்கள் .. நம் முன்னோர்களின் நல்லருளும் நல்லாசியும் பெறுவோமாக .. இம்மாதத்துச் சனிக்கிழமை பெருமாள் விரதத்திற்கு உகந்தவை .. எல்லா சனிக்கிழமைகளிலும் பெருமாள் கோவிலுக்குத் தவறாமல் சென்று சனிக்கிரகத்தால் சிரமம் அனுபவிப்போர் எள் .. நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடல்வேண்டும் .. இதனால் சிரமங்கள் பலமடங்கு குறையும் .. பெருமாளின் அனுக்கிரகம் அனைவரும் பெற்று .. மகிழ்ச்சிகரமாய் வாழ பிரார்த்திக்கின்றேன் .. ஓம் நமோ நாராயணாய நமஹ .. .. ... .. (இன்று ஏழுமலையப்பன் சகஸ்ரகலசாபிஷேகம்) .. ..  WISH YOU ALL A HAPPY AND A BLESSED DAY WITH THE BLESSINGS OF LORD VISHNU ..
The six heads of Lord Subrahmanya represent the six Chakras. They also represent the five senses and the mind. They represent the six attributes of Bhagavan: Jnana (wisdom), Vairagya (dispassion), Bala (strength), Kirti (fame), Sree (wealth) and Aisvarya (divine powers). They indicate that He is the source for the four Vedas, Vedangas, and the six schools of philosophy; that He has controlled the five Jnana Indriyas and the mind. They denote that He is the Virat Purusha with countless heads. They signify that His head is turned everywhere (Viswathomukha); He is all-pervading. They indicate that He is omnipotent and that He can multiply and assume forms at His will. The six faces indicate that His presence shines on the four sides and also above and below.
The twelve arms show that He alone creates, preserves, destroys, hides and blesses—in fact, does everything in the world.
Valli, Deivayanai and the Vel mean respectively Ichcha Sakti, Kriya Sakti and Jnana Sakti, i.e., the force of desire, the force of action, and the force of knowledge. It is indicated that all these three abide in Subrahmanya, who is Para Brahman Himself. The fact that desire and action forces are kept on either side of Him and that Jnana Sakti or the force of knowledge alone is kept in His breast point out that Knowledge is the most important of them all and that it never gets separated from Him.


அஷ்ட பைரவர்கள் போற்றி


ஓம் கால பைரவா போற்றி
ஓம் கல்பாந்த பைரவா போற்றி
ஓம் குரோத பைரவா போற்றி
ஓம் கபால பைரவா போற்றி
ஓம் சம்ஹார பைரவா போற்றி
ஓம் உன்மத்த பைரவா போற்றி
ஓம் கண்ட பைரவா போற்றி
ஓம் உக்கிர பைரவா போற்றி
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வெள்ளிக்கிழமையாகிய இன்று சங்கடங்கள் அனைத்தும் தீர்க்கும் ‘ சங்கடஹர சதுர்த்தி விரதமும் ஆகும் ‘ .. விரதமிருந்து தங்கள் அனைவருக்கும் சங்கடங்கள் யாவும் பனிப்போல் நீங்கிட விக்னேஷ்வரனைப் பிரார்த்திக்கின்றேன் .. .. ஓம் தத் புருஷாய வித்மஹே .. வக்ரதுண்டாய தீமஹி .. தந்நோ தந்தி ப்ரசோதயாத் .. // .. பிள்ளையாரை வழிபட சங்கடஹர சதுர்த்தி நாள் மிகவும் ஏற்றது .. பௌர்ணமியை அடுத்து நான்காம் நாள் தேய்பிறையில் வரும் சதுர்த்தி நாளையே ” சங்கடஹர சதுர்த்தி“ என்பர் .. சங்கடங்களை அழிப்பதால் இப்பெயர் ஏற்பட்டது .. .. கர்வ மிகுதியால் பிள்ளையாரின் கோபத்துக்கு ஆளான சந்திரன் தன் உடலில் பொலிவிழந்து வருந்தினான் .. இறுதியில் பிள்ளையாரிடமே சரணடைந்தான் .. பிள்ளையார் அருள்புரிந்ததோடு சங்கடஹர சதுர்த்தியில் எம்மை நினைப்பவர் .. பூஜிப்பவர் யாவருக்கும் இன்னல்கள் நீங்கி அருள்புரிவேன் என்றருளினார் .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. WISH YOU ALL A VERY HAPPY MORNING .. AND A BLESSED DAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD GANAPATHY ..
Every year we observe mahalayam a ritual we observe for 15 days before
the festival Navaratri .
Mahalayam means a place of large gathering. Our pitrus come to earth to
stay more free here for these 16 days to do good to their progeny. It is our duty to do sraddham, Hiranya sraddham or at least tarpanam.
There are two types of observing mahalayam: Paksha mahalayam for observing everyday of the entire mahalaya paksham (15 sraddhams);
Sakrun mahalayam- one day sraddham or tarpanam.

We should perfom inaddition Mahalaya Amavasyai sraddham
or tarpanam.
Restrictions:
1. If a pitru sraddham falls within mahalayam, then mahalayam (sraddham) can be observed only after performing the pitru sraddham. Mahalayam can be performed on the next day after the pitru sraddham.
2. sakrun mahalam (one day), should not be observed on Fridays, prathamai, sashti, chaturdasi, ekadasi tithis, Revati, makam, nakshatrams, self janma nakshatram, patni janma nakshatram or son's janam nakshatram days .
3. For some reason, if mahalayam can not be observed in bhadrapada krishna paksham, there is time up to thula masam.
Exceptions:
1. For paksha mahalayam, the above days of tithi, vara and nakshatra dosha restrictions do not apply.
2. For sakrun mahalayam, Certain days in this period are considered
important: For example the day with bharani is called mahabharani;
Krishna paksha ashtami called madhyashtami; navami called vyatipadam;
Thrayodasi called Gajachaayai.
In these days mahabharani, madhyashtami, vytipadam or gajachayai,one
should not be concerned about restricted vara, nakshatram or tithis dosham
as above under restrictions.
sakrun mahalaya sraddham can be observed from Panchami days, on Panchami, saptami, ashtami, navami, dasami,dwadasi, thrayodasi and also pita tithi excluding pitru sraddham day within mahalayam.அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய்க்கிழமையாகிய இன்று ‘ மஹாளய பக்ஷாரம்பம் ‘ .. மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாகக் கூடி ஆசீர்வதிக்கும் நேரம் என்பது பொருள் .. பௌர்ணமிக்கு பிறகு வரும் 15 நாட்களிலும் பித்ரு தேவதைகள் எமதர்மனிடம் விடைபெற்றுக்கொண்டு தங்கள் குடும்பத்தினருடன் தங்கிவிடுவர் . எனவேதான் இந்த நாட்களில் அவர்கள் பசியாற அன்னமாகவோ (திதி) அல்லது எள்ளும் தண்ணீருமாகவோ (தர்ப்பணம்) அளிக்கவேண்டும் என்றனர் .. தாய் தந்தையர் இறந்த தினத்தில் சிரார்த்தம் (திதி) செய்யாதவர்கள் கூட மறக்காமல் ‘ மஹாளயத்தை’ அவசியம் செய்யவேண்டும் ..இதனை அடுத்து வரும் ‘ மஹாளய அமாவாசை ‘ 23ம்திகதி .. மிகவும் உயர்ந்த புண்ணிய காலமாகும் .. மறைந்த முன்னோர்களுக்கு வருடத்தின் பன்னிரு மாதங்களும் தர்ப்பணம் செய்யாவிட்டாலும் கூட இந்த ‘மஹாளய அமாவாசை’ அன்று செய்வது மிகவும் புண்ணியமாகும் .. அவர்களின் ஆசி வம்சத்தையே விளங்க வைக்கும் .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. . WISH YOU ALL A HAPPY AND A BLESSED TUESDAY .. MAY GOD BLESS YOU ALL FOR A BRIGHT FUTURE 

சதுரகிரி மலை. சாதாரண மலைகளைப் போலல்ல இது. வீரியம் நிறைந்த வினோதமான மலை. கணக்கற்ற இரகசியங்களைத் தன்னுள்ளே பொதித்துக் கொண்டு அமைதியாய்க் காணப்படும் அபூர்வ மலை. சித்தர்களின் இராஜ்ஜியமாகவும், அபாயகரமான காட்டுவாழ் விலங்கினங்களின் புகலிடமாகவும், அபூர்வ சக்திகள் படைத்த மூலிகைகளின் வாழ்விடமாகவும் விளங்கும் இம்மலை, பரம்பொருள் சிவபரமாத்மாவின் அருட்கடாட்சம் பெற்றபடியால் சிவன்மலை என்றும் மகாலிங்க மலை என்றும்அழைக்கப்படுகிறது. சிவனும் பார்வதி தேவியும் இங்கே நிரந்தரமாகத் தங்கியிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக சித்தர்களுக்கு வாக்குத் தந்திருப்பதால் இவ்விடம் தென்கயிலாயம் என்றும் அழைக்கப்படுகிறது.

இம்மலை அஷ்டமாசித்திகள் பெற்ற பதினெட்டு சித்தர்களின் தலைமையிடமாகவும், மற்றும் பல சித்தர்கள் கூடி தத்தம் ராய்ச்சிகளை விவாதிக்கும் இடமாகவும் அறியப்படுகிறது. இம்மலையிலுள்ள நூற்றுக்கணக்கான குகைகளில் தங்கியிருந்து சிவனை வணங்கி வழிபட்டு வந்ததுடன் மக்களின் நோய் தீர்க்கும், துன்பங்களைக் களையும் மருந்துகளைக் கண்டுபிடிக்கும் ராய்ச்சிகளிலும் சித்தர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். சித்தர்பூமியாம் சதுரகிரியில் எண்ணற்ற மூலிகைகள் நிறைந்த வனம் உள்ளது. இன்றும் இம்மலையில் சித்தர் பெருமக்கள் அரூபமாக வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. சித்தர்களின் அதிர்வலைகள் மலையெங்கும் நிறைந்திருப்பதால் அதில் சிறிதாவது தமது உடலில் ஒட்டட்டும் என பக்தர்கள் விரும்பி இங்கு வருகின்றனர்.

அமைவிடம்: சதுரகிரி, தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் வத்றாப் என அழைக்கப்படும் வத்திறாயிருப்பு அருகில் உள்ள தாணிப்பாறையில் உள்ளது. வத்றாப்பிலிருந்து சுமார் 10 கிமீ தொலைவிலும், வத்றாப் விலக்கிலிருந்து சுமார் 7 கிமீ தொலைவிலும் தாணிப்பாறை அமைந்துள்ளது. தென்னந்தோப்புகளும், மாந்தோப்புகளும், கொய்யாத் தோப்புகளும் சூழ தாணிப்பாறை ரம்மியமாய் காட்சியளிக்கும். மலையின் அடிவாரத்திலிருந்து ஏறக்குறைய எட்டு கிமீ தூரத்தில் உச்சியில் மகாலிங்கம் சன்னதி அமைந்துள்ளது. ஒரு மலையல்ல, இரு மலையல்ல.. ஏழு மலைகளைக் கடந்துதான் கோவிலைச் சென்றடைய முடியும். மலைகள் சுற்றிலும் சதுர வடிவில் அமைந்த படியால் சதுரகிரி என்று பெயர்பெற்றதாகவும் சொல்கிறார்கள். நான்கு பெரிய மலைகள் கோவிலைச் சுற்றிலும் அரண் போல் அமைந்திருப்பதாலும் அவ்வாறு பெயர் பெற்றதாகச் சொல்வதும் உண்டு. ‘சதுர’ என்றால் நான்கு, ‘கிரி’ என்றால் மலை. சுற்றிலும் பெரிய மலைகள் இருந்தாலும் சிறு சிறு கிளை மலைகளும் உண்டு. இவற்றையெல்லாம் தாண்டித்தான் மேலே செல்ல வேண்டும். ஒரு மலைக்கும் இன்னொரு மலைக்கும் இடைப்பட்ட பகுதி காட்டாற்றின் போக்கிடமாக உள்ளது.

பொய்கைகள் (சிறு சிறு நீர்சுனைகள்) நிறைந்துள்ள சதுரகிரியில் முன்பின் அறியாத சுனைகளில் நீர் அருந்துவது தவறு,

அப்படி குடித்தால் அவர்கள், அங்குள்ள சிறு சிறு கூழாங்கற்களாகி விடுவார்கள் என்ற செவி வழி செய்தியும் உண்டு.

சிறு சிறு தவளைகள் பலவித வண்ணங்களில் காணக் கிடைக்கும், அவைகளை ஏதோ ஒரு சித்தர் பெருமானின் விளையாட்டு என்பார்கள்.

அழகும், பரவசமும்,அமைதியும், அதிசயமும் நிறைந்த அற்புததலம்


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய்க்கிழமையாகிய இன்று கலியுகவரதனைத் துதித்து தங்களனைவருக்கும் சகலசௌபாக்கியங்களும் கிடைத்திட பிரார்த்திக்கின்றேன் .. ஸ்ரீசத்குரு சாந்தானந்தசுவாமிகள் அருளிய குருகவசத்தில் முருகனின் மூலமந்திரம் உள்ளது .. அந்த மந்திரத்தை தியானித்து உரு ஏற்ற முருகனின் அருள் கிடைத்து மும்மலங்கள் ஆகிய ஆணவம் .. கன்மம் .. மாயை .. நம்மைவிட்டு அகன்று முக்தி நமக்கு சித்தியாகுமாம் .. முக்தியைத்தேடி எங்கும் அலைய வேண்டாம் என்று சொல்கிறது கந்தகுருகவசம் .. // .. மூல மந்திரம் .. ஓம் சௌம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் கலீம் க்லௌம் ஸௌம் நமஹ .. .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. .. .. WISH YOU ALL A HAPPY TUESDAY MORNING WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA .. HAVE A BLESSED DAY TOO ..