PANVEL BALAGAR
SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM....PANVEL BALAGAN PATHAM POTRI POTRI!!
அனைவருக்கும் என் அன்பார்ந்த புதன்காலை வந்தனங்கள் .. இன்றைய நாள் பெருமாள் வழிபாட்டிற்கு உகந்தநாளாகும் .. ஆலயம் சென்று பெருமாளைத் தரிசிப்பது சாலச்சிறந்தது .. தங்களனைவருக்கும் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாக அமைந்திட பிரார்த்திக்கின்றேன் ..
திவ்வியாங்கதாஞ்சித புஜத்வய மங்களாத்மன்
கேயூபூரஷண ஸுஸோபித தீர்கபாஹோ
நாகேந்த்ரகங்கண கரத்வய காமதாயின்
ஸ்ரீவேங்கடேச மம தேஹி கராவலம்பம்
( ஸ்ரீவெங்கடேச கராவலம்ப ஸ்தோத்திரம் )
திவ்யமான வளைகள் அலங்கரிக்கும் தோள்களைக்கொண்டவரே ! வெங்கடேசா ! நமஸ்காரம் !
மங்களமான சரீரத்தை உடையவரே ! ஆபரண அலங்காரத்தால் பிரகாசிக்கும் நீண்ட கரங்களை உடையவரே !
அதேகரங்களில் சர்பராஜனை கங்கணங்களாகத் தரித்திருப்பவரே ! கோரிய அனைத்தையும் அருள்பவரே !
வெங்கடேசா நமஸ்காரம்! எம்மைக் கைகொடுத்துக் காத்தருள்வீராக!
தீராதவினையெல்லாம் தீர்த்திடும் தெய்வம் திருமாலைப் போற்றுவோம் ! வளம் .. நலம் .. அனைத்தும் பெறுவோமாக !
கோவிந்தா ! கோவிந்தா ! வாழ்க வளமுடனும் .. நலமுடனும் ..
GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED WEDNESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD BALAJI ..
MAY HE SHOWER YOU WITH GOOD HEALTH .. GOOD FORTUNE .. AND
HAPPINESS .. " OM NAMO VENKATESAAYA NAMO NAMAHA " ..

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய்க்கு அதிபதியாகிய முருகப்பெருமானுக்கு உகந்த தினமே இன்று .. தங்களனைவருக்கும் இன்றைய நாள் உடல்நலமும் .. மனநலமும் புத்துணர்வுடன் திகழ்ந்திட கலியுகவரதனைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹேஷ்வர புத்ராய தீமஹி !
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத் !!
முருகவழிபாட்டில் குறிப்பாக உருவவழிபாடு அதாவது வேல்வழிபாடு பழைமைவாய்ந்தது .. பண்டைய காலத்தில் வேலைவழிபட்டுவந்தவர்களைப் பற்றிய வரலாறுகள் பல உண்டு .. வேலைவழிபட்டுவந்தால் அனைத்து இடர்களும் விட்டுவிலகும் என்பதே ஐதீகம் .. இதனால்தான் நம் முன்னோர்கள் “ வேலுண்டு வினைதீர்க்க “ என்றும் கூறுவர் ..
அருணகிரியாரின் திருப்புகழ் ஒரு எடுத்துக்காட்டு .. முருகனது புகழைப்பாடச்சற்றுத் தயங்கிய அருணகிரியாரின் நாவில் முருகன் தனது வேலின் நுணியில் “ ஓம் “ என்ற மந்திரத்தை
எழுதி .. முருகனது அருளால் பாடவைக்கப்பட்டதுதான் திருப்புகழாகும் ..
அத்தகைய சிறப்புமிக்க வேலையும் .. வேலனையும் துதித்து சகல நன்மைகளையும் பெறுவோமாக .. “ ஓம் முருகா “ ..
வாழ்க வளமுடனும் .. நலமுடனும் ..
GOOD MORNING DEAR DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA ..
MAY HE SHOWER YOU WITH PROSPERITY .. AND HAPPINESS IN YOUR LIFE FOREVER .. " OM MURUGA " ..

SWAMIYE SARANAM IYYAPPA.....GURUVE SARANAM SARANAM
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புரட்டாதிமாத திங்கட்கிழமையாகிய இன்றிலிருந்து .. புரட்டாதி அமாவாசைவரையிலான காலம்வரை பதினைந்து நாட்களுக்கு “ மஹாளயபக்ஷாரம்பம் “ .. இன்றிலிருந்து முன்னோர்கள் பூலோகம் வரும் காலம் ஆரம்பமாகிவிட்டது எனலாம் .. இந்த புண்ணிய தினங்களில் பித்ருக்கள் வழிபாடு
மிகச்சிறந்ததாகும் ..
மஹாளயபக்ஷ்காலத்தில் நம்முன்னோர்களை திருப்தி செய்யும்வகையில் தர்ப்பணம் செய்யவேண்டியது அவசியம் .. தீர்த்தத்தலங்களுக்குச் சென்று எள் .. தண்ணீர் இறைத்து அவர்களது தாகம் தீர்க்கவேண்டும் ..
புராணங்களில் கருடபுராணம் .. விஷ்ணுபுராணம் .. வராகபுராணம் போன்ற தெய்வீக நூல்களில் மஹாளயபக்ஷ்த்தின் சிறப்புகள் கூறப்பட்டுள்ளன ..
அன்னதானம் செய்த கர்ணன் -
பிணிகளில் கொடுமையானது பசிப்பிணி .. பசிவந்திடப் பத்தும் பறந்துபோகும் என்பார்கள் ..பசியின்கொடுமை பலதானங்கள் செய்த கர்ணனையே வாட்டியது .. அதற்கு காரணம் கர்ணன் அன்னதானம் செய்யாததுதான் என்று கூறப்பட்டது ..
கர்ணன் தர்மங்கள் பலசெய்த மாபெரும்வள்ளல் என்றாலும்கூட அதர்மத்துக்கு துணைபோன துரியோதனனுடன் சேர்ந்திருந்ததால் அவனை அழிக்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார் .. அர்ஜுனன்விட்ட சில அம்புகளால் அவரைக் காயப்படுத்தினவேயொழிய உயிரைப்பறிக்கவில்லை அதற்குக்காரணம் கர்ணன் செய்த தர்மமே !
கர்ணன்செய்த தர்மங்களை தானமாகப்பெற்றுச்சென்றார் கிருஷ்ணர் .. அதற்காக மோட்சம் பெற்றார் ..சொர்க்கம் சென்ற கர்ணனுக்கு அவன்செய்த பொன் .. நவரத்தின தானத்துக்கு பலனாக தங்கமாளிகை கட்டித்தரப்பட்டிருந்தது ஆனால் உணவு அங்கே கிடைக்கவில்லை .. இதற்குக் காரணம் தெரியாமல் தவித்தபோது .. தேவர்கள் அவனிடம் கர்ணா நீ பூமியில் இருந்தபோது பொண்ணும் .. மணியுமே தானம் செய்தாய் .. அன்னதானம் செய்யவில்லை எனவே நீ இப்போது பூமிக்குச்செல் .. மஹாளயபக்ஷ்காலம் பிதுர்கள் பூமிக்குச்செல்லும்காலம் .. அவர்களை அவரவர் உறவினர் வரவேற்று தர்ப்பணம் செய்து ஏழைகளுக்கு அன்னதானமும் செய்வர் .. இக்காலத்தில் நீ மறைந்திருந்து அன்னதானம் செய்துவா .. பின்பு இங்கு உணவு கிடைக்கும் என்றார் .. இதனையேற்று கர்ணன் பூமிக்கு வந்த காலமே .. ”மஹாளயகாலம் “ ஆனது ..
நாமும் முன்னோர்களை வரவேற்று தர்ப்பணம் செய்து அவர்களது ஆசியைப் பெற்று அனைத்து தடைகளையும் வெல்வோமாக .. “ பித்ருதேவோ பவ” ..
வாழ்க வளமுடனும் .. நலமுடனும் ..
GOOD MORNING DEAR FRIENDS ..MAHALAYAPAKSHA WHICH IS ALSO KNOWN AS " PITHRUPAKSHA" WHICH IS GREAT AND ONE SHOULD NOT
THINK OF SKIPPING IT ON ANY COUNT .. THIS PAKSHA HAS IMMENSE VALUES AND GIVES SATISFACTION TO THE PITHURS ..
DURING THE PAKSHA THE SOULS OF THE PITHRUS WILL DECEND TO EARTH IN THE FORM OF SPIRITS AND WILL BE PRESENT AROUND THIS BIOLOGICAL DECENDANTS TO SEE AND BLESS THEM .. HENCE NITHYA TARPANA IS HIGHLY RECOMMENDED IF POSIBLE ..
" PITHRU DEVO BAWA " ..

SWAMY SARANAM...PANVEL BALAGAN SARANAM SARANAM...GURUVE SARANAM
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று புரட்டாதிமாத பௌர்ணமியும் .. உமாமஹேஷ்வர விரதமும் கூடிவருவதால் ஆலயம் சென்று சிவனையும் .. சக்தியையும் வழிபடுவது சாலச்சிறந்தது .. தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் இனிய நன்னாளாக அமைந்திடப் பிரார்த்திக்கின்றேன் ..
“ஓம் சிவசக்தி ஓம் “ ..
சிவனாரின் மகிமையைப் போற்றி அவர் அருள்பெற அரிய விரதங்கள் பல உள்ளன .. அவற்றுள் ஒன்று புரட்டாதி பௌர்ணமி தினத்தில் வரும் “ உமாமஹேஷ்வர விரதம் ” ..
அம்மையும் .. அப்பனுமாகி அண்டமெல்லாம் படைத்து .. காத்து .. அருள்சுரந்தருளி .. இம்மைக்கும் .. மறுமைக்கும் தோன்றாத துணையாய் துலங்கி நிற்கும் உமாபதியின் மகிமை போற்றும் இவ்விரதத்தைக் கடைப்பிடித்து வேண்டுவன அடையலாம் ..
உமையும் .. உமையொருபாகனும் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்து நமக்கு இன்னருள் புரியும் அம்மையப்பனைத் தொழுதிடுவோம் ! சகலசௌபாக்கியங்களையும் பெற்றிடுவோம்! ஓம் நமசிவாய ! வாழ்க வளமுடனும் ! நலமுடனும் ..
GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA AND SHAKTHI ..
MAY YOU BE BLESSED WITH EVERY SUCCESS .. PROSPERITY AND HAPPINESS .. " OM SHIVSHAKTHI OM "

SWAMIYE SARANAM IYYAPPA...PANVEL BALAGANE SARANAM IYYAPPA...
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
புரட்டாதிச் சனி இரண்டாம் வாரமாகிய இன்று சாயாபுத்திரனாகிய சனீஸ்வரனைத் துதித்து சகலருக்கும்
சகலதோஷங்களும் நீங்கி .. நீண்ட ஆயுளும் துன்பமில்லாத வாழ்வும் கிடைக்கப் பிரார்த்திக்கின்றேன் ..
ஒம் காகத்வஜாய வித்மஹே !
கட்க ஹஸ்தாய தீமஹி !
தந்நோ சனி ப்ரசோதயாத் !!
நவக்கிரகங்கள் எனப்படும் ஒன்பது கிரகங்களில் மூன்று கிரகங்கள் தீயபலன்கள் அளிப்பதில் வலிமை வாய்ந்தவை ..
அவை .. ராகு .. கேது .. சனி .. என்பனவாகும் .. இவைகளின் முதன்மையானது சனி என்ற சனீஸ்வரபகவான் தான் .. இவரின் பிடியிலிருந்து யாரும் தப்பமுடியாது என்பர் .. இறைவனாகிய சிவபெருமானையே ஒருகணம் மிடித்ததால்தான் சனிக்கு ‘ ஈஸ்வரப்பட்டம் ‘ கிடைத்து சனீஸ்வரன் ஆனார் ..
பன்னிரெண்டு ராசிகளில் உள்ள ராசிக்காரர்களுக்கு சுமார் ஏழுராசிகளின் அமைப்பு உள்ளவர்களுக்கு ஏதாவது வகையில்
ஏழரைச்சனி .. கண்டச்சனி .. அஷ்டமத்துச்சனி .. போன்ற பாதிப்பு இருந்துகொண்டே இருக்கும் .. இதனால் அவர்களுக்கு வாழ்வில் எடுத்தகாரியங்களில் தோல்வி .. பணமுடக்கம் ..
வம்பு .. சண்டை .. விரக்தி .. தொழில் முன்னேற்றமின்மை ..
எதிர்காலமே சூன்யமானது போன்ற இன்னல்களுக்கு ஆட்பட்ட
வாழ்க்கையை மிகவும் சிரமமாக அனுபவித்துக் கொண்டிருப்பார்கள் ..
அவரவர் வினைக்கேற்ப பலன்களை வழங்குவதில் நீதிதவறாதவர் சனீஸ்வரர் .. இவரது தினமான இன்று விரதமிருந்து எள்ளைப் பொட்டலமாகக் கட்டி மண்சிட்டிகையில் நவக்கிரகத்திற்கு முன்னால் வைத்து நல்லெண்ணை விட்டு எரிக்கவேண்டும் .. காகத்திற்கு எள் அல்லது நல்லெண்ணை இட்ட சாதம் படைத்து அதன்பின்பே நாம் உணவு உண்ணல் வேண்டும் .. விஷ்ணுசகஸ்ரநாமம் பாராயணம் செய்வது நன்மையைத்தரும் ..
” ஓம் சனீஸ்வரராய நமஹ “ ..
வாழ்க வளமுடனும் .. நலமுடனும் ..
GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SATURDAY AND MAY ALL YOUR PROBLEMS BE OUT OF THEIR WAY ON THIS BRIGHT MORNING THAT STARTS THIS NEW DAY ..
" JAI SHANIDEV "
SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM.....PANVEL BALAGAN PATHAM POTRI POTRI!!!
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வெள்ளிக்கிழமையாகிய இன்று பிரதாஷ விரதமும் சேர்ந்து வருவதால் மாலையில் சிவாலயம் சென்று பிரதோஷவேளையாகிய 4.30 - 6.00 மணிவரையிலான மாலை வேளையில் சிவனையும் .. நந்தீஸ்வரரையும் தரிசனம் செய்வது சாலச்சிறந்தது .. இன்றைய நாள் தங்களனைவருக்கும் ஓர் பொன்னாளாக மிளிர்ந்திட வாழ்த்துகிறேன் .. ஈசனை மனதார துதிக்கின்றேன் ..
ஓம் சதாசிவாய வித்மஹே !
ஜடாதாராய தீமஹி !
தந்நோ ருத்ர ப்ரசோதயாத் !!
நந்திதேவர் துதி -
நந்தி எம்பெருமான் தன்னை நாள்தோறும் வழிபட்டால் புந்தியில் ஞானம் சேரும் .. புகழ் ..கல்வி .. தேடிவரும் ..
இவ்வுலக இன்பம் யாவும் இவரடி தொழ உண்டு ! அவ்வுலக அருளும்கூட அவர்துதி நலங்கள் உடன்கிட்டும் .. ஈசனுக்கு எதிர் அமர்ந்து இறை ஊஞ்சல் ஆட்டுவிக்கும் நந்தீசர் நற்பாதம் நாம் தொழுவோமே !
மகிமைமிக்க பிரதோஷ நாளில் சர்வேஸ்வரரையும் .. நந்தீஸ்வரரையும் போற்றுவோம் ! சகலசௌபாக்கியங்களையும் பெற்றிடுவோம் !
“ ஓம் நமசிவாய “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் ..
GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED
'PRADOSHAM' AND MAY LORD SHIVA 'S BLESSINGS ALWAYS SHOWER ON YOU ALL .. " OM NAMASHIVAAYA " ..

பூஜ்யஸ்ரீ தயானந்த ஸரஸ்வதி ஸ்வாமிகள் மஹா சமாதி அடைந்து விட்டார்கள். இறைப் பணியோடு கல்விப் பணி, அறப் பணி என்று இவர் ஆற்றிய சேவை கணக்கில் அடங்கா. ரிஷிகேஷில் ஸ்வாமிகள் எடுக்கும் வகுப்புகளுக்குக் கூடும் அன்பர்கள் கூட்டத்தை நேரில் பார்த்திருக்கிறேன். அத்தனை ஆர்வமும் பக்தியும் அந்த வகுப்புக்கு வருபவர்கள் முகத்தில் தென்படும். எண்ணற்ற பிரபலங்கள் இந்த ரிஷிகேஷ் ஆசிரமத்துக்கு வந்து கங்கைக் கரையில் அமர்ந்து இறை சிந்தனையில் திளைப்பார்கள். இந்த மகானின் ஆசிகள் என்றென்றும் நம்முடன் விளங்க பிரார்த்திப்போம். ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. அனைத்து இஸ்லாம் நண்பர்களுக்கும் எங்கள்
” பக்ரீத் திருநாள் ” நல்வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் ..
வியாழக்கிழமையாகிய இன்று ஏகாதசித் திதியும் வருவதால் ஆலயம் சென்று மஹாவிஷ்ணுவைத் தரிசிப்பது சாலச்சிறந்தது ..இன்றைய நாள் தங்களனைவருக்கும் ஓர் இனிய நன்னாளாகவும் .. உடல்நலமும் .. மனநலமும் .. ஆரோக்கியத்துடன் திகழவும் பகவானைப் பிரார்த்திக்கின்றேன்
ஓம் நமோ நாராயணாய வித்மஹே !
வாசுதேவாய தீமஹி !
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!
”காயத்ரி மந்திரத்திற்கு நிகரான மந்திரம் இல்லை .. தாய்க்கு சமனான தெய்வமும் இல்லை .. காசியைவிட சிறந்த தீர்த்தமும் இல்லை .. ஏகாதசிக்கு நிகரான விரதமும் இல்லை”
என்பர் ..
இன்று “ பத்மநாபா ஏகாதசி “ .. இந்த ஏகாதசி விரதமிருந்தால் குடும்ப ஒற்றுமை சிறக்கும் .. வளமான வாழ்வும் தரும் .. சூரியவம்ச மன்னன் ஒருவர் அரசாண்டகாலத்தில் பஞ்சம் ஏற்பட்டது .. ஆங்கிரஸமுனிவரின் அறிவுரைப்படி அந்த மன்னன் இந்த ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடித்து பஞ்சம் நீங்கப்பெற்றான் ..
ஏகாதசித்திதியில் மஹாவிஷ்ணுவைப் போற்றித்துதித்து பெருமாளின் பரிபூரண அருளையும் .. அன்பையும் பெற்று நீங்காப்புகழுடன் வாழ்வீர்களாக .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. “ ஓம் நமோ நாராயணா “ ..
WISH YOU ALL A HAPPY MORNING WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD VISHNU .. MAY HE SHOWER YOU WITH
BEST HEALTH .. WEALTH AND PROSPERITY ..
"OM NAMO NAARAAYANAA " ..
தங்க சிம்மாசனத்தில் பன்வேல் பாலகன்...
பன்வேல் பாலகனின்
பவித்திர இருக்கை!
கண்கவர் பொன்வண்ணம்
கண்ணிலே நிற்கும்!
மலரின் மெளனம்
மலர்ந்திடப் புரியும்
மா தவமோ !
மனதின் மெளனம்
மனிதன் உயர்ந்திட தந்த
பாலகன் வரமோ !
மோனத் தவத்தில்
மோகனத் தோற்றம்
மோட்சம் தரும்
மோகனன் ரூபம்!
மெளனத் தவத்தில்
அமர்ந்த மனம்
பேரின்ப வெளியில் விரிந்திட வேண்டும்!
மலருக்கு தென்றல் இறைவன்
மனிதனுக்கு தென்றல்
மகிஷியை வென்ற
மகானுபாவன்!
சரணம் சொல்லி
அவனருள் வேண்டி
ஆத்ம சுகத்தை
அனைவரும் பெறுவோம்!!
கவிதையாக்கம்
ராம்கி
கவிதையாக்கம்
ராம்கி
SWAMIYE SARANAM IYYAPPA....GURUVE SARANAM...PANVEL BALAGAN PATHAM POTRI POTRI
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
புதன்கிழமையாகிய இன்று திருப்பதி வெங்கடேஸ்வரரைத் துதித்து தங்களனைவரது குறைகளைக் களைந்து .. அனைத்து நலன்களையும் தந்தருள்வானாக ..

வேங்கடேஸா வாஸீதேவ வாரி !
ஜாஸன் வந்தித ஸ்வாமி புஷ்கரிணீ !
வாஸ ஸங்க சக்ர கதாதர ! பீதாம்பர தரோதேவ !
கருடாரூட ஸோபித ! விஸ்வாத்மா விஸ்வ ஸோகேஸ !
விஜயோ வேங்கடேஸ்வர ! ஏதத் த்வாதஸ நாமானி
த்ரிஸந்த்யம்ய ! படேந்நர !
ஸர்வபாப ! வினிர் முக்தோ !
விஷ்ணேஸ் ஸாயுஜ்யம் ஆப்னுயாத் !!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஸ்ரீவேங்கடேச சுவாமியின் சன்னதியில் காலையிலும் .. மாலையிலும் இந்த
மந்திர ஸ்லோகத்தை ஜபித்து அருள்பெறுகிறார்கள் ..
இல்லத்தில் இருந்தபடியே இந்த ஸ்லோகத்தை ஜபித்து நாமும்
பெருமாளின் அருளைப் பெறுவோமாக ..

ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை ? ..
ஏழேல்பிறவிக்கும் எதற்கும் பயமில்லை ..
ஏழேல்பிறவிக்கும் எதற்கும் பயமில்லை ..
பாடும் பாட்டெல்லாம் பரந்தாமனின் பாட்டு !
நாளும் நடப்பதெல்லாம் நாராயணன் விளையாட்டு !
கால்வண்ணம் அகலிகைக்கு வாழ்வு தந்தது !
கைவண்ணம் திரௌபதையின் மானம் காத்தது !
மால்வண்ணம் திருமகளின் மனம்கவர்ந்தது !
மணிவண்ணன் கருணை நம்மை மகிழவைத்தது !!

பாவச்சுமை தாங்காத பூமாதேவிக்கு அனுக்கிரகம் செய்ய சீனிவாசன் எனும் பெயரில் பெருமாள் அவதாரம் எடுத்து திருப்பதிமலையில் தங்கினார் .. சத்தியலோகத்தில் இருந்து பிரம்மா பூலோகம் வந்து திருப்பதி ஏழுமலையானுக்கு திருவிழா நடத்துகிறார் .. இதற்கு புரட்டாதி நவராத்திரி பிரம்மோற்சவம் என்று பெயர் .. காலை .. மாலை வெவ்வேறு
அலங்காரத்துடன் திருப்பதியிலுள்ள உற்சவர் மலையப்ப சுவாமி பவனிவருவார் ..

திருப்பதி வெங்கடாஜலபதி மட்டும்தான் தன் திருக்கரத்தை கீழ்நோக்கி காட்டியபடி .. பக்தர்களே ! கலியுகத்தில் உய்வதற்குரிய ஒரேவழி என் திருவடியை பற்றிக்கொள்வது மட்டுமே ! என்று உணர்த்தியபடி இருக்கிறார் .. தன்னை சரணடைந்தவர்களை கையில் அணைத்து ஆதரிப்பதை பெருமாளின் இடதுதொடையில் இருக்கும் இடதுகை உணர்த்துகிறது ..
திருப்பதியை “ வேங்கடம் “ என்கிறோம் .. வேங்கடம் என்றால்
“ பாவம் பொசுக்கும் இடம் “ என்று பொருள் .. புரட்டாதிமாதத்தில் திருப்பதி பெருமாளை மனதால் நினைத்தாலே பாவம் தீரும் என்பது ஐதீகம் ..

குறையொன்றுமில்லாத கோவிந்தன் ! வேண்டியதைத் தந்திடும் வேங்கடேசன் ! நிறைந்த நல்வாழ்வை அளிப்பான்
மணிவண்ணா ! மலையப்பா ! வேங்கடேஸா !
வாழ்க வளமுடனும் .. நலமுடனும் ..
மணிவண்ணா ! மலையப்பா ! வேங்கடேஸா !
வாழ்க வளமுடனும் .. நலமுடனும் ..
GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED
WEDNESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD VISHNU
MAY HE SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH AND PROSPERITY .. " OM NAMO NAARAAYANAA " ..

PANVEL BALAGAN POTRI POTRI....SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய்க்கிழமையாகிய இன்று கலியுகவரதனாகிய முருகப்பெருமானைத் துதித்து இன்றைய நாள் தங்களனைவருக்கும் ஓர் இனிய நன்னாளாக அமைந்திட எல்லாம்வல்ல முருகப்பெருமானைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹாஸேநாய தீமஹி !
தந்நோ ஷண்முகப் பெருமானே !!
அரோஹரா ! என்றால் .. இறைவனே ! துன்பங்களை நீக்கி எங்களுக்கு நற்கதியை அருள்வாயாக .. என்பதேயாகும் ..
வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா ! என்றால் ..
வெற்றிவேலைக்கொண்ட முருகனே ! எங்கள் வாழ்வில் இருக்கும் துன்பங்களைப் போக்கி .. நற்கதியும் .. வெற்றியையும் அருள்வாயாக .. என்று உரிமையோடு முறையிடுவதாகும் ..
முருகனே ! முழுமுதல் இறைவன் என்ற நம்பிக்கையைக் கொண்டவர்கள் .. இனி வெற்றிவேல் இறைவனுக்கு அரோஹரா ! என்று உற்சாகமாகச் சொல்வோமே !
ஞானவேல் தாங்கி .. சேவற்கொடி ஏந்தி மயில்வாகனத்தில்
வலம்வரும் முருகப்பெருமானை நம்மனவாகனத்தில் ஏற்றிவைப்போம் ! பதினாறுபேறுகளையும் தன் பன்னிரெண்டு
கைகளாலும் வாரிவழங்குவான் வடிவேலன் ..
“ ஓம் முருகா “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் ..
GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA ..
MAY HE SHOWER YOU WITH GOOD HEALTH .. STRENGTH .. AND GOOD FORTUNE .. " OM MURUGA " ..

சுவாமியே சரணம் ஐயப்பா!! பன்வேல் பாலகன் நாமம் போற்றி!! குருவின் பாதார விந்தங்கள் போற்றி! போற்றி!! Swamiye Saranam Iyyappa!Panvel balagane saranam Iyyappa!! Guruve Saranam! Saranam
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
திங்கட்கிழமையாகிய இன்று புரட்டாதி வளர்பிறை அஷ்டமித் திதியாகும் .. விநாயகருக்கும் .. அன்னை மஹாலக்ஷ்மிக்கும் உகந்த “ தூர்வாஷ்டமி “ விரதநாளுமாகும் .. விநாயகரை அருகம்புல்லால் அர்ச்சித்துவர உடல்வலிமை உண்டாகும் ..
தங்களனைவருக்கும் இன்றையநாளில் மனநலமும் .. உடல்நலமும் பெற்று .. மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன் .. வணங்குகின்றேன் ..
அறுகம்புல்லை ‘ தூர்வை ‘ என்பார்கள் .. அதை லக்ஷ்மி சொரூபமாக பாவிக்கவேண்டுமென்று வேதம் உபதேசிக்கிறது
தூர்வையைப் புகழும்வகையில் வேதத்தில் பலமந்திரங்கள்
உள்ளன ..
அறுகம்புல்லை தினமும் பகவானுக்கு அர்ப்பணித்தபிறகு தலையில் வைத்துக்கொள்வதால் கெட்டகனவுகள் விலகி நன்கு உறக்கம்வரும் .. துர்க்கையத்தவிர மற்ற எல்லா தேவதைகளுக்கும் தூர்வையால் அர்ச்சனைசெய்வது மிகவும் சிறந்தது ..
உலகிலுள்ள ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்புண்டு அவ்வகையில் தூர்வையை ஆராதிக்கும் தினம் பாத்ரப
( ஆவணி ) மாதத்தின் வளர்பிறை அஷ்டமி .. இதற்கு தூர்வாஷ்டமி என்று பெயர் .. இந்தவிரதத்தை எல்லோரும் கடைபிடிக்கலாம் .. குறிப்பாக பெண்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டும் .. இவ்விரதம் பெண்களுக்கென்றே விதிக்கப்பட்ட ஓர் உன்னதமான விரதமாகும் .. இவ்விரதத்தை கடைபிடிப்பதால் சகலசௌபாக்கியங்களும் கிடைக்கும் .. எல்லா இடத்திலும் உணவு .. நீர் .. ஆடை நிறைவாகக் கிடைப்பதற்கும் .. நீண்ட ஆயுளுடைய புத்திமான்களான புத்திரர்களைப்பெறுவதற்கும் .. நினைத்தகாரியங்கள் நிறைவேறுவதற்கும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கவேண்டும் ..
இந்த துர்வாஷ்டமியைப் போற்றும் மந்திரம் -
தூர்ஸ்வபீனங்களை நாசம் செய்யும் தூர்வாதேவியே !
உன்னை வணங்குகின்றோம் ! உன்னைத் தொடுவதாலும் !
பகவானுக்கு உன்னை அர்ப்பணம் செய்வதாலும் எமது எல்லாப்பாவங்களும் நீங்கவேண்டும் ! நீ எவ்வாறு கணுக்கணுவாக வளர்கிறாயோ ! அவ்விதமே நாமும் படிப்படியாக வளர்ந்து சகலசௌபாக்கியங்களையும் பெறவேண்டும் ! ஹே ! தேவியே ! நீ நன்கு வளர்வாயாக !
உன்னை நாமும் பூஜிக்கின்றோம் ! உன்னை நம் தலையில் தாங்கிக்கொள்கின்றோம் ! நீ எம்மை எப்பொழுதும் காத்தருள்வாயாக ! ஜெய் சக்தி !! ..
அன்னையைப் போற்றுவோம் .. அனைத்து ஐஸ்வர்யங்களையும் பெற்றிடுவோமாக .. “ ஓம் சக்தி ஓம் “ ..
வாழ்க வளமுடனும் .. நலமுடனும் ..
GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED MONDAY
WITH THE BLESSINGS AND GUIDANCE OF GODDESS LAKSHMI ..
MAY ' MAA LAKSHMI ' SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH .. AND PROSPERITY .. ' OM SHAKTHI OM ' .. JAI MATA DI ..
திங்கட்கிழமையாகிய இன்று புரட்டாதி வளர்பிறை அஷ்டமித் திதியாகும் .. விநாயகருக்கும் .. அன்னை மஹாலக்ஷ்மிக்கும் உகந்த “ தூர்வாஷ்டமி “ விரதநாளுமாகும் .. விநாயகரை அருகம்புல்லால் அர்ச்சித்துவர உடல்வலிமை உண்டாகும் ..
தங்களனைவருக்கும் இன்றையநாளில் மனநலமும் .. உடல்நலமும் பெற்று .. மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன் .. வணங்குகின்றேன் ..
அறுகம்புல்லை ‘ தூர்வை ‘ என்பார்கள் .. அதை லக்ஷ்மி சொரூபமாக பாவிக்கவேண்டுமென்று வேதம் உபதேசிக்கிறது
தூர்வையைப் புகழும்வகையில் வேதத்தில் பலமந்திரங்கள்
உள்ளன ..
அறுகம்புல்லை தினமும் பகவானுக்கு அர்ப்பணித்தபிறகு தலையில் வைத்துக்கொள்வதால் கெட்டகனவுகள் விலகி நன்கு உறக்கம்வரும் .. துர்க்கையத்தவிர மற்ற எல்லா தேவதைகளுக்கும் தூர்வையால் அர்ச்சனைசெய்வது மிகவும் சிறந்தது ..
உலகிலுள்ள ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்புண்டு அவ்வகையில் தூர்வையை ஆராதிக்கும் தினம் பாத்ரப
( ஆவணி ) மாதத்தின் வளர்பிறை அஷ்டமி .. இதற்கு தூர்வாஷ்டமி என்று பெயர் .. இந்தவிரதத்தை எல்லோரும் கடைபிடிக்கலாம் .. குறிப்பாக பெண்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டும் .. இவ்விரதம் பெண்களுக்கென்றே விதிக்கப்பட்ட ஓர் உன்னதமான விரதமாகும் .. இவ்விரதத்தை கடைபிடிப்பதால் சகலசௌபாக்கியங்களும் கிடைக்கும் .. எல்லா இடத்திலும் உணவு .. நீர் .. ஆடை நிறைவாகக் கிடைப்பதற்கும் .. நீண்ட ஆயுளுடைய புத்திமான்களான புத்திரர்களைப்பெறுவதற்கும்
இந்த துர்வாஷ்டமியைப் போற்றும் மந்திரம் -
தூர்ஸ்வபீனங்களை நாசம் செய்யும் தூர்வாதேவியே !
உன்னை வணங்குகின்றோம் ! உன்னைத் தொடுவதாலும் !
பகவானுக்கு உன்னை அர்ப்பணம் செய்வதாலும் எமது எல்லாப்பாவங்களும் நீங்கவேண்டும் ! நீ எவ்வாறு கணுக்கணுவாக வளர்கிறாயோ ! அவ்விதமே நாமும் படிப்படியாக வளர்ந்து சகலசௌபாக்கியங்களையும் பெறவேண்டும் ! ஹே ! தேவியே ! நீ நன்கு வளர்வாயாக !
உன்னை நாமும் பூஜிக்கின்றோம் ! உன்னை நம் தலையில் தாங்கிக்கொள்கின்றோம் ! நீ எம்மை எப்பொழுதும் காத்தருள்வாயாக ! ஜெய் சக்தி !! ..
அன்னையைப் போற்றுவோம் .. அனைத்து ஐஸ்வர்யங்களையும் பெற்றிடுவோமாக .. “ ஓம் சக்தி ஓம் “ ..
வாழ்க வளமுடனும் .. நலமுடனும் ..
GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED MONDAY
WITH THE BLESSINGS AND GUIDANCE OF GODDESS LAKSHMI ..
MAY ' MAA LAKSHMI ' SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH .. AND PROSPERITY .. ' OM SHAKTHI OM ' .. JAI MATA DI ..
Aathi Vinayagar temple is the only temple in the world where Vinayagar is seen with a human face. The rest of him will be with Elephant face. The temple is located at Poomthotam, about 4 hours drive south east of Thiruchy towards Poompuhar. Vinayagar is seen with a human face, for he was such before he was slayed and his head replaced with a elephant head.
சுவாமியே சரணம் ஐயப்பா!! பன்வேல் பாலகன் நாமம் போற்றி!! குருவின் பாதார விந்தங்கள் போற்றி! போற்றி!! Swamiye Saranam Iyyappa!Panvel balagane saranam Iyyappa!! Guruve Saranam! Saranam
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று பூமியில் சூரியாதிக்கம் நிறைந்த நாளாகும் .. இன்றைய நாள் தங்களனைவருக்கும் ஓர் இனிய நன்னாளாக அமைந்திட பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே !
பாஸஹஸ்தாய தீமஹி !
தந்நோ சூரியஹ் ப்ரசோதயாத் !!
நாம் நமது இருகண்களாலும் பிரத்தியட்சகமாகக் காண்பது சூரியனையேயாகும் .. சிவாலயங்களில் சூரியபகவான் தனித்தும் .. நவக்கிரங்களுக்கு நாயகனாகவும் வீற்றிருக்கிறார் ..
ஏனைய ஆலயங்களில் நவநாயகர்களுக்கு நடுநாயகனாக வீற்றிருப்பதைக் காணமுடியும் ..
ஆதவனை வணங்குபவர்களுக்கு சுடர்மிகும் அறிவுடன் .. சுட்டும் விழிச்சுடராய் கண்பார்வையும் கிட்டும் ..
மாறுபட்ட குணாதியங்கள் உள்ள பலபேரை ஒரேதிசையில்
வழிநடத்திச்செல்லக்கூடிய தலைமைக்குணம் கிடைக்கும் ..
நேர்மையான வழியைமட்டுமே மனசு எப்போதும் சிந்திப்பதால்
நிமிர்ந்தநடையும் .. நேர்கொண்டபார்வையும் .. புவியில் யாருக்கும் அஞ்சாத வைரநெஞ்சமும் கிட்டும் .. எடுத்த காரியத்திலிருந்து சற்றும்மாறாத மன உறுதிகிட்டும் ..
நாராயணனுக்கே உரிய சங்கும் .. சக்கரமும் .. சூரியனுக்கு உண்டு என்பதால் .. நாராயணனைச் சூரியநாராயணன் என்று வணங்குகின்றோம் ..
சூரியனைப் போற்றுவோம் ! மகிழ்ச்சியும் .. நல்லாரோக்கியமும் பெற்றிடுவோம் ! வாழ்க வளமுடனும் ! நலமுடனும் ! ஒம் சூர்யாய நமஹ !
GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SURYA .. MAY HE SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH .. AND HAPPINESS ..
" JAI SURYADEV " ..

மகாளய பட்சம் - விளக்கம் & மகாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதன் பலன்கள்
"மகாளயம்' என்றால் "கூட்டமாக வருதல்'. மறைந்த நம் முன்னோர் மொத்தமாக கூடும் நேரமே மகாளய பட்சம். "பட்சம்' என்றால் 15 நாட்கள். மறைந்த முன்னோர் 15நாட்கள் (சில சமயங்களில் 16 ஆக மாறுபடும்) நம்மோடு தங்கும் காலமே மகாளய பட்சம்.
இது புரட்டாசி மாத பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, அமாவாசை வரை நீடிக்கும். புரட்டாசியில் வரும் அந்த அமாவாசையே மகாளய அமாவாசை எனப்படும். தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட உயர்ந்தது இது.
மற்ற மாதங்களில் அமாவாசையன்று முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்வோம். அவர்கள் மறைந்த தமிழ் மாதத்தில் வரும் திதியில், சிராத்தம் முதலியன செய்வோம். ஆனால், மகாளய பட்ச காலத்தில் பிரதமை துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
ஒட்டுமொத்த முன்னோரையும் அப்போது நினைவு கூர வேண்டும். தீர்த்தக்கரைகளுக்கு சென்று புனித நீராடி, நம் முன்னோர் ஆத்மசாந்திக்காக பிரார்த்தித்து வர வேண்டும். அந்தணர்களுக்கு ஆடைகள், ஏழைகளுக்கு உணவு, படிக்க சிரமப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை என தானமளிக்க வேண்டும்.
நமது தேசத்தின் பல நூற்றாண்டுகளுக்கும் முந்தைய வரலாறைக் கூட தெரிந்து வைத்திருக்கும் பலர், தங்கள் மூதாதையரில் மூன்று தலைமுறைகளுக்கு முன்புள்ளவர்கள் பெயரை நினைவில் வைத்திருப்பதில்லை. அந்த பயிற்சியை இந்த காலத்தில் நமது குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும். தற்போது நினைவில் உள்ள தலைமுறையினர் பெயரை டைரியில் குறிக்கச் சொல்ல வேண்டும். அப்படியானால் தான் எதிர்காலத்தில் தர்ப்பணம், சிராத்தம் குறித்த அறிவு நம்மிடையே நீடித்து நிலைத்திருக்கும்.
மகாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதன் பலன்கள் தரப்பட்டுள்ளன.
முதல்நாள் - பிரதமை - பணம் சேரும்
2ம் நாள் - துவிதியை - ஒழுக்கமான குழந்தைகள் பிறத்தல்
3ம் நாள் - திரிதியை - நினைத்தது நிறைவேறுதல்
4ம் நாள் - சதுர்த்தி - பகைவர்களிடமிருந்து தப்பித்தல்
5ம் நாள் - பஞ்சமி - வீடு, நிலம் முதலான சொத்து வாங்குதல்
6ம் நாள் - சஷ்டி - புகழ் கிடைத்தல்
7ம்நாள் - சப்தமி - சிறந்த பதவிகளை அடைதல்
8ம் நாள் - அஷ்டமி - சமயோசித புத்தி, அறிவாற்றல் கிடைத்தல்
9ம்நாள் நவமி - சிறந்த வாழ்க்கைத்துணை, குடும்பத்திற்கேற்ற மருமகள் அமைதல், பேத்தி, புத்திசாலியான பெண் குழந்தைகள் பிறத்தல்.
10ம் நாள் - தசமி - நீண்நாள் ஆசை நிறைவேறுதல்
11ம்நாள் - ஏகாதசி - படிப்பு, விளையாட்டு, கலையில் வளர்ச்சி
12ம் நாள் - துவாதசி - தங்கநகை சேர்தல்
13ம்நாள் - திரயோதசி - பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்காயுள், ஆரோக்கியம், சுதந்திரமான வேலை அல்லது தொழில்
14ம்நாள் - சதுர்த்தசி - பாவம் நீங்குதல், எதிர்கால தலைமுறைக்கு நன்மை.
15ம் நாள் - மகாளய அமாவாசை - முன் சொன்ன அத்தனை பலன்களும் நம்மைச் சேர முன்னோர் ஆசி வழங்குதல்.
எனவே, மகாளய பட்சம் என்னும் அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் இருந்தால் லாபம் நமக்கு மட்டுமல்ல! நம் தலைமுறைக்கும் சேர்த்து தான்.
சுவாமியே சரணம் ஐயப்பா!! பன்வேல் பாலகன் நாமம் போற்றி!! குருவின் பாதார விந்தங்கள் போற்றி! போற்றி!! Swamiye Saranam Iyyappa!Panvel balagane saranam Iyyappa!! Guruve Saranam! Saranam
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சனிக்கிழமையாகிய இன்று புரட்டாதிச்சனி முதலாம் வாரமுமாகும் .. தங்களனைவருக்கும் சனியின் பிடியிலிருந்து நிவாரணம் கிடைத்து எல்லாம் நலமே அமைந்திட சனிபகவானைப் பிரார்த்திக்கின்றேன் ..
நீலாஞ்ஜன ஸமா பாஸம் !
ரவிபுத்ரம் ! யமாக்ரஜம் !
சாயா மார்த்தாண்ட ஸம்புஜம் !
தம் நமாமி ஸனைச்சரம் !!
பொருள் -
மைபோன்ற கருமைநிறம் கொண்டவனே ! சூரியனின் மைந்தனே ! எமதர்மனின் சகோதரனே ! சாயாதேவியின் வயிற்றில் பிறந்தவனே ! மெதுவாகச் சஞ்சாரம் செய்பவனே !
சனிபகவானே ! உன்னைப் போற்றுகின்றேன் !! ..
பாகுபாடு இல்லாத தர்மவான் .. நீதிமான் .. என்று சனீஸ்வர பகவானை சொல்லலாம் .. ஒருவருக்கு அவரவர் கர்மவினைப்படி பூர்வபுண்ணியபலத்திற்கேற்ப நன்மை .. தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர் சனியே !
சர்வமுட்டாள்களைக்கூட மிகப்பெரிய பட்டம் .. பதவி என்று அமரவைத்துவிடுவார் .. அதேநேரத்தில் அதிபுத்திசாலி .. பெரிய ராஜதந்திரியைக்கூட தெருவில் தூக்கிவீசிவிடுவார் ..
ஏழை .. பணக்காரன் .. படித்தவன் .. படிக்காதவன் .. பதவியிலிருப்பவன் .. பதவி இல்லாதவன் என்ற வித்தியாசம் எதுவும் சனிபகவானுக்குக் கிடையாது .. பலகாரியங்களை கண் இமைக்கும் நேரத்தில் நடத்திக்காட்டும் சர்வவல்லமைபடைத்த ஈஸ்வரன் பட்டம்பெற்ற ஒரேகிரகம் சனியாகும் ..
புரட்டாதிச்சனியில் விரதமிருந்து சனிக்கு அதிபதியாகிய விஷ்ணுபகவான் ஆலயத்தில் எள்ளை சிறுபொட்டலமாகக்கட்டி சிட்டிகையில் நல்லெண்ணை இட்டு நவக்கிரகங்களுக்கு முன்னால் எரிக்கவும் .. மதியம் எள்ளுசாதம் நிவேதனம் செய்து காகத்திற்கு வைத்துவிட்டு உண்ணவேண்டும் ..
சனிபகவானுக்கு நீலநிறமுள்ள சங்குபுஷ்பமும் .. வன்னி.. வில்வ இலைகளுமே விருப்பமானவைகளாகும் ..
பரிகாரம் - மாற்றுத்திறனாளிகள் .. நோயாளிகள் .. முதியோர்கள் .. ஆதரவற்றோர் .. கடின உழைப்பாளிகள் .. தொழிலாளிகள் ..போன்றவர்களுக்குச் செய்யும் உதவியும் .. தொண்டும் சனீஸ்வரருக்கு மிகவும் பிடித்தமானதாகும் .. இவற்றைச் செய்து சனிதோஷத்திலிருந்து நாம் நிவாரணம் பெறுவோமாக .. “ ஓம் சனீஸ்வரராய நமஹ “
வாழ்க வளமுடனும் .. நலமுடனும் ..
WISH YOU ALL A HAPPY MORNING AND A BLESSED SATURDAY WITH THE BLESSINGS OF SHANI DEV .. " JAI SHANIDEV "

Subscribe to:
Posts (Atom)