PANVEL BALAGAR
திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விதிகள் 1. முதல் விதி திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. (மலமாதம் என்பது இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது.) 2. இரண்டாவது விதி சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. 3. மூன்றாவது விதி இயன்றவரை சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது என்பது மூன்றாவது விதி. 4. நான்காவது விதி புதன், வியாழன், வெள்ளிபோன்ற சுப ஆதிபத்தியமுடைய கிழமைகள் மிக ஏற்றவை. இதர கிழமைகள் அவ்வளவு உகந்தவை அல்ல. …ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்பது தான் 5. ஐந்தாவது விதி துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளை தவிர்ப்பது 6. ஆறாவது விதி முகூர்த்த லக்கினத்துக்கு 7ம் இடம். முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும். 7. ஏழாவது விதி அக்கினி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது. 8. எட்டாவது விதி திருமணத்தின் போது குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்கக்கூடாது. 9. ஒன்பதாவது விதி திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமான விதி. 10. பத்தாம் விதி. மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 2வதாக வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக்கூடாது. 11. பதினொன்றாம் விதி கடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் கல்யாணம் பண்ணக்கூடாது. - இவ்வளவு விஷயங்கள் தெரிந்து கொண்டபின் நீங்களே அனைத்து சுபகாரியங்களுக்கும் நல்ல நாள் பார்த்துவிடுவீர்கள் தானே. அவரவர் குலதெய்வத்தை மனதில் வேண்டிக்கொண்டு உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசியுடன் நல்லதொரு நாளைக் குறியுங்கள்.
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சனிக்கிழமையாகிய இன்று ஈஸ்வரனைத் துதித்து மலர்ந்திருக்கும் இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாய் தங்களனைவருக்கும் அமைந்திட பிரார்த்திக்கின்றேன் .. “ஓம் நமசிவாய “ .. கலியுகத்தில் பிறவி எடுத்தார் உய்யும் மார்க்கத்தைப் பெறுவதற்குத் துணையாக இருப்பது .. சிவமந்திரம் .. சிவதரிசனம் .. சிவவழிபாடு முதலியனவாகும் .. இவை மூன்றும் வாழ்வில் இன்றியமையாதவை சிவமே எல்லா உயிர்களுக்கும் முதலானவன் .. எல்லாம் சிவமயம் ! எங்கும் சிவமயம் ! எதிலும் சிவமயம் ! “நமசிவாய” என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை தினமும் ஜபித்து வந்தாலே வாழ்வில் எல்லா கஷ்டங்களும் நீங்கிவிடும் .. சிவனைப் போற்றுவோம் .. அவரது பரிபூரண திருவருளைப் பெறுவோமாக .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. WISH YOU ALL A HAPPY SATURDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. MAY HE BLESS YOU WITH HAPPINESS AND BEST HEALTH .
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வெள்ளிக்கிழமையாகிய இன்று ஏகாதசித் திதியும் சேர்ந்து வருவதால் ஆலயம் சென்று மஹாவிஷ்ணுவை வழிபடுவது சாலச்சிறந்தது .. இன்றைய ஏகாதசியை “ பீம ஏகாதசி என்பர் “ ஏகாதசி விரதத்தை சகலபாவங்களையும் போக்கும் வல்லமை கொண்ட விரதம் என்றும் .. அசுவமேத யாகம் செய்த பலனுக்கு சற்றும் குறையாத அளவு பலன்தரும் விரதம் என்றும் சான்றோர் சொல்வர் .. மஹாவிஷ்ணுவிற்குப் பிடித்தமான திதி ஏகாதசி திதியாகும் .. பதினெட்டு புராணங்களும் ஏகாதசித் திதி விரதத்தைச் சிறப்பாகச் சொல்கின்றன .. நடக்காத காரியங்கள் அனைத்தும் நடக்கவைப்பது ஏகாதசிவிரதம் .. ஒவ்வொருமாதமும் வளர்பிறையில் வரும் பதினோராவது திதியே ஏகாதசி .. ஒருமுறை வியாசரை சந்தித்த தர்மபுத்திரர் அவரை வணங்கி “தவசீலரே” கலியினால் உண்டாகும் துன்பங்களை அகற்ற சுலபமான ஒரு வழியைக் கூறி அருளுங்கள் என்றார் .. எல்லாத்துன்பங்களும் நீங்குவதற்கு ஏகாதசி உபவாசத்தைத் தவிர வேறு வழியேதும் இல்லை .. சகல சாஸ்திரங்களும் கூறுவது இதுவே என்றார் வியாசர் .. அப்போது தருமருடன் வந்த பீமன் முனிசிரேஷ்டரே ! உடன்பிறந்தவர்களும் .. தாயும் .. மனைவியும் நீங்கள் சொன்ன ஏகாதசி விரதத்தைச் செய்கிறார்கள் .. என்னையும் உபவாஸம் இருக்கச் சொல்கிறார்கள் .. ஒருபொழுது இருப்பதே என்னால் முடியாத காரியம் .. அப்படிப்பட்ட நான் எப்படி உபவாஸம் இருப்பேன்? மேலும் என் வயிற்றில் “விருகம்” என்று ஓர் அக்னி இருக்கிறது (இதனால் பீமனுக்கு “விருகோதரனென்றும் பெயர் உண்டு ) திருப்தியாக சாப்பிட்டால் அன்றி அதுஅடங்குவதில்லை வருடத்துக்கு ஒரே ஒருநாள் உபவாஸம் இருக்கமுடியும் அதன்மூலம் எல்லா ஏகாதசிகளின் பலனையும் நான் பெறவேண்டும் .. அப்படிப்பட்ட ஏகாதசியைப் பற்றிச் சொல்லுங்கள் என வேண்டினான் .. வியாசர் “பீமா” ! உனது இந்தக்கேள்விக்கு ஸ்ரீகிருஷ்ணர் என்னிடம் சொன்னதையே பதிலாக தருகின்றேன் .. நீ கேட்டபடி ஓர் ஏகாதசி உண்டு அதற்கு “நிர்ஜலா ஏகாதசி” என்று பெயர் .. தண்ணீர் கூடக்குடிக்காமல் அன்று விரதம் இருக்கவேண்டும் .. அதனால் அது நிர்ஜலா ஏகாதசி எனப்படுகிறது ஆனிமாத வளர்பிறையில் வரும் அந்த ஏகாதசியன்று விரதமிருந்து பெருமாளை வழிபடு இதன்மூலம் எல்லா ஏகாதசிகளிலும் இருந்த பலன் கிடைக்கும் என்றார் வியாசர் .. அப்படியே செய்தான் பீமன் .. இதனால் இந்த ஏகாதசிக்கு “பீம ஏகாதசி” எனப்பெயர் பெற்றது .. பீமன் அன்று முழுவதும் தண்ணீர் கூடக்குடிக்காமல் விரதமிருந்து மறுநாள் துவாதசி அன்று உணவு உட்கொண்டான் .. அதனால் அந்த துவாதசி “பாண்டவ துவாதசி” எனப்பெயர் பெற்றது .. ”சீரும் சிறப்பும் செல்வாக்கும் சீக்கிரம் பெற்றிடவே நாராயணன் உனை துதிக்கின்றோம் .. நலமும் வளமும் தருவாயே “ .. என்று நாராயணனை துதியுங்கள் .. நலம் யாவும் வீடு தேடிவரும் .. ஓம் நாராயணாய வித்மஹே ! வாசுதேவாய தீமஹி ! தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. .. WISH YOU ALL A BLESSED FRIDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD VISHNU .. MAY HE BLESS YOU WITH POWER AND WISDOM .. "OM NAMO NAARAAYANAA"
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வியாழக்கிழமையாகிய இன்று நம் அனைவராலும் போற்றி வணங்கப்படும் குருநாதர் ஷிர்டி சாய்பாபாவினதும் தினமும் ஆகும் .. அவரைப் போற்றித் துதித்து தங்கள் அனைவருக்கும் என்றும் .. என்றென்றும் ..வாழ்வில் அனைத்திலும் வெற்றிப் பெற துணையாய் இருப்பாராக .. ஓம் சாய் ராம் ... ஒவ்வொரு வியாழக்கிழமையும் பாபாவின் நாமத்தை நம் மனதினில் பலமுறை உச்சரித்து வர நமது வாழ்க்கை இன்பம் நிறைந்ததாக மாறிவிடும் .. உங்கள் துயரங்கள் மறைந்து வாழ்வில் பலவெற்றிகள் உண்டாகட்டும் .. சாய்பக்தர்களுக்கும் .. மற்றும் அனைவருக்கும் .. சர்வமங்களம் உண்டாகட்டும் .. ஸ்ரீசாயியைப் பணிக .. அனைவருக்கும் சாந்தி நிலவட்டும் .. ஓம் சாய் ராம் !! வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF SHIRDI SAI .. MAY HE SHOWER YOU VICTORY IN EACH STEPS YOU TAKE TODAY AND FOREVER MORE .. JAI SAI .. " OM SAI RAM "
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. இன்று கார்த்திகை விரதம் .. கலியுகவரதனாகிய கார்த்திகேயனைத் துதித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் இனிய நன்னாளாய் அமைந்திடவும் .. உடல் நலமும் ஆரோக்கியமாகத் திகழவும் முருகப்பெருமானைப் பிரார்த்திக்கின்றேன் .. ஓம் தத் புருஷாய வித்மஹே ! மஹேஷ்வர புத்ராய தீமஹி ! தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத் !! காவேரியின் நீர் பெருகி கரையுடைந்து வந்துவிட்டால் கடைசியிலே கொள்ளுமிடம் கொள்ளிடம் .. கார்த்திகையில் பிறந்தவன் கவலையெல்லாம் தீர்ப்பதுதான் கந்தன் என்று சொல்லும் ஒரு சொல்லிடம் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள் .. “ கந்தா “ என்று சொல்லுங்கள் .. “ இந்தா “ என்று வரம் தருவான் கந்தனைப் போற்றுவோம் .. பரிபூரணத் திருவருளைப் பெறுவோமாக .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. . WISH YOU ALL A BLESSED WEDNESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA .. MAY HE SHOWER YOU WITH BEST HEALTH AND HAPPINESS .. " OM MURUGA "
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சனிக்கிழமையாகிய இன்று ஈஸ்வரனைத் துதித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாய் அமைந்திடவும் .. உடல் நலமும் .. மனநலமும் ஆரோக்கியத்துடன் திகழவும் பிரார்த்திக்கின்றேன் .. “ ஓம் நமசிவாய “ .. சிவன் என்ற தமிழ்ச்சொல்லிற்கு சிவந்தவன் என்று பொருளாகும் .. தான் மங்களகரமாகவும் .. தன்னைச்சார்ந்தவங்களையும் மங்களகரமாக்குபவர் சிவனே! எக்கணமும் யோகநிலையில் ஆழ்ந்திருப்பதால் ‘யோகி’ என்றும் .. அட்டமா சித்திகளில் வல்லவர் என்பதால் ‘சித்தன்’ என்றும் .. சிவபக்தர்களின் பக்தியில் மூழ்கி அவர்கள் கேட்கும் வரங்களின் விளைவுகளை ஆராயமல் வரம் தருவதால் ‘பித்தன்’ எனவும் குணங்களின் அடிப்படையில் அழைக்கப்படுகிறார் .. ”நமசிவாய” என்ற மந்திரத்தை தினமும் உச்சரித்து வந்தாலே வாழ்வில் அனைத்து கஷ்டங்களும் நீங்கிவிடும் .. சிவனைத் தொழுவோம் பெறுவாழ்வு வாழ்வோமாக .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. .. WISH YOU ALL A BLESSED SATURDAY FILLED WITH HAPPINESS .. MAY LORD SHIVA BE WITH YOU AND SHOWER YOU WITH PROSPERITY AND BEST HEALTH .. " OM NAMASHIVAAYA " ..
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வியாழக்கிழமையாகிய இன்று நம் அனைவராலும் போற்றி வணங்கப்படும் குருநாதராகிய ஷீர்டிபாபாவினதும் தினமும் ஆகும் .. அவரைப் போற்றி துதித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் இனிய நன்னாளாய் அமைந்திடவும் .. எடுக்கும் அத்தனை காரியங்களும் வெற்றி பெறவும் வாழ்த்தி வணங்குகின்றேன் .. ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே ! சச்சிதானந்தாய தீமஹி ! தந்நோ சாய் ப்ரசோதயாத் !! இந்தியாவின் மிகப்பெரிய ஆன்மீக வழிகாட்டிகளில் ஒருவராகவும் .. உலக மக்களுக்கு தொடர்ந்து அருள்பாலித்து வருவருபவராகவும் திகழும் ஷிர்டி சாய் பாபாவை இறைவனின் அவதாரமாகவே கண்டு பலகோடி மக்கள் வழிபட்டு வருகின்றனர் .. சாய் என்றால் .. ஷக்சாத் .. ஈஸ்வர் என்பதன் சுருக்கமாகும் .. அதன் பொருள் “முழுமையான இறைவன்” என்பதாகும் .. மராட்டிய மாநிலம் ஷிர்டியில் தோன்றி தனது வாழ்நாளை அங்கேயே கழித்து சமாதியடைந்த சாய்பாபா .. தன்னைச் சந்தித்தவர்கள் அனைவருக்கும் ஆசிவழங்கியது மட்டுமன்றி அவர்கள் மனதில் அன்பை விதைத்து எப்பொழுதெல்லாம் அவர்கள் நாடுகின்றார்களோ .. அப்பொழுதெல்லாம் அவர்களுக்கு ஆசிவழங்கி அவர்களின் வாழ்க்கையில் அமைதியையும் .. மகிழ்ச்சியையும் நிலையச் செய்தார் .. 19ம் நூற்றாண்டில் பிறந்து 1918ல் சமாதியடைந்த பாபா தனது பிறப்பின் நோக்கமே எவ்வித பாகுபாடும் பார்க்காமல் எல்லோருக்கும் ஆசிவழங்குவதே என்று கூறியுள்ளார் .. தன்னை நாடிவந்த நோயாளிகளை ஆசீர்வதித்து அவர்களை குணப்படுத்தினார் .. பலரின் உயிரைக்காத்தார் .. விபத்துக்களைத் தவிர்த்தார் .. ஏழ்மையில் வாடியவர்களுக்கு நல்வாழ்வை அளித்தார் .. மனிதர்களை அமைதிப்படுத்தியது மட்டுமன்றி மற்றவர்களோடு இசைந்து வாழவும் உதவினார் .. எல்லாவற்றிற்கும் மேலாக தன்னிடம் அடைக்கலமான பக்தர்களை அந்த உன்னதமான ஆன்மீக பரிணாம வளர்ச்சிக்கும் .. திருவுருமாற்றத்திற்கும் வழிகாட்டினார் .. தனது வார்த்தையாலும் .. நடத்தையாலும் சாதகர்களுக்கு வழிகாட்டிய உன்னத பேரொளியின் அடையாளமாக பாபா திகழ்ந்தார் என்று அவரைக் கண்ட .. அவர் காலத்தில் வாழ்ந்த்துவந்த ஒருவர் கூறியுள்ளார் .. பாபாவின் பக்தர்களுக்கு அவர்தான் கடவுள் .. இது அவர்களின் கற்பனையல்ல .. அனுபவபூர்வமாக அவர்கள் கண்டது .. உலகெங்கிலிருந்தும் சாய்பாபாவின் ஆசியைப் பெற இன்னும் அவரது கோயிலிற்கு லட்சக்கணக்கானோர் வருகின்றனர் .. ஷீர்டிபாபா பாதம் பணிவோம் .. அவரது பரிபூரண திருவருளைப் பெறுவோமாக .. “ ஓம் சாய் .. ஸ்ரீசாய் ..ஜெய ஜெயசாய் “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. .. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF SHIRDI SAI ..MAY HE SHOWER YOU VICTORY IN EACH STEPS YOU TAKE TODAY AND FOREVER MORE .. "OM SAI RAM "
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று இப் பிரபஞ்சத்தைக் காக்கும் கடவுளாகிய மஹாவிஷ்ணுவைத் துதித்து தங்களனைவருக்கும் குடும்பத்தில் சுபீட்சமும் .. நல்லாரோக்கியமும் கிட்டிட பகவானைப் பிரார்த்திக்கின்றேன் ஓம் நாராயணாய வித்மஹே ! வாசுதேவாய தீமஹி ! தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! .. நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருப்பது ஜீவாத்மா .. ஜீவாத்மாவுக்கே ஆத்மாவாக இருப்பது பரமாத்மா .. நமக்குள் பகவான் இருப்பதை உணர்ந்து கொண்டால் .. நம் வாழ்க்கை ஆனந்தமயமாகி விடும் .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும. PRAY ALL A BLESSED WEDNESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD VISHNU MAY HE SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH .. AND HAPPINESS .. " OM NAMO NAARAAYANAAYA " ..
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. இன்று பிதுர் வழிபாட்டிற்கு உகந்த ‘தை அமாவாசையாகும்’ .. ஒவ்வொரு அமாவாசையிலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறந்தது .. இருந்தாலும் ‘தை அமாவாசை’ தினத்தில் பிதுர் தர்ப்பணம் கொடுப்பது மிகவும் சிறப்பு .. எனவேதான் சூரியனின் வடக்குதிசை உத்தராயண பயணம் துவங்கும் புண்ணியகாலத்தில் வரும் தை அமாவாசையில் பிதுர் வழிபாட்டிற்கு உகந்த நாளாகக் கருதப்படுகின்றது .. இந்நாளில் புனிதமான கடற்கரையிலோ .. புண்ணிய நதிக்கரையிலோ .. தீர்த்தங்களிலோ வேதவிற்பண்ணர் வழிகாட்டலுடன் நீத்தார் வழிபாட்டிற்குரிய பூஜையை செய்வது போற்றப்படுகிறது .. (சுமங்கலிப் பெண்கள் கணவன் வாழ்ந்து கொண்டிருப்பதால் தனது தந்தைக்கான பிதுர் தர்ப்பணம் செய்வது வழக்கத்தில் இல்லை) .. மனிதப்பிறவி மகத்தான பிறவி .. மனிதனாகப்பிறந்ததால் தான் இறைவனை எளிதில் அடைய முடியும் .. வேறு எந்தப் பிறவிக்கும் இந்த சிறப்பு கிடையாது .. வானுலகில் தேவராக இருந்தாலும் கூட இறைவனை தரிசிக்கத்தான் முடியுமே ஒழிய அவரோடு இரண்டறக் கலக்க முடியாது .. ஆக இத்தகைய அரிய மானிடப்பிறவியைத் தந்த நம் முன்னோர்களுக்கு நன்றி தெரிவிக்க வாரிசுகள் நடத்தும் நன்றிக்கடனாக அமாவாசை .. பௌர்ணமியை எடுத்துக் கொள்ளலாம் .. சூரியபகவான் ..ஆண்மை .. ஆற்றல் .. வீரம் என்பவற்றை எல்லாம் எமக்குத் தரவல்லவர் .. சந்திரன் எமது மனதுக்கு அதிபதியானவர் .. இதனால் மகிழ்ச்சி .. தெளிவான தெளிந்த அறிவு .. இன்பம் .. உற்சாகம் என்பவற்றை எல்லாம் தரவல்லவர் .. சூரியனைப் ”பிதுர்காரகன்” என்றும் .. சந்திரனை “மாதுர்காரகன்” என்றும் ஜோதிடம் கூறுகின்றது .. அதனால் சூரியனும் .. சந்திரனும் .. எமது பிதா .. மாதாவாக வழிபடும் தெய்வங்களாக இந்துக்கள் கருதுகின்றனர் .. வழிபடுகின்றனர் அமாவாசைதினத்தில் தந்தையை இழந்தவர்களும் .. பூரணைத்தினத்தில் (பௌர்ணமி) அன்னையை இழந்தவர்களும் வழிபடுவது புராதன காலம்தொட்டு பின்பற்றிவரும் ஒரு வழக்கமாகும் .. இந்நாளில் முன்னோர்களை நினைவு கூர்ந்து அவர்களது பரிபூரண ஆசிகளைப் பெற்று .. எல்லாத்தடைகளையும் தகர்த்திடுவோமாக .. .. “ பித்ரு தேவோ பவ “ .. AMAVAASYA IS THE NAME OF NEWMOON NIGHT IN HINDU RELIGION .. IT IS THE FIRST NIGHT OF THE FIRST QUARTER OF THE LUNAR MONTH .. SINCE THE MOON IS INVISIBLE ON THE SKY .. HINDUS CHOOSE THIS DAY TO MAKE OFFERINGS (THARPANAM) TO THE DEAD ANCESTORS .. MAY THE ANCESTORS BLESSINGS BE SHOWER ON YOU TODAY .. AND THE VICTORY WILL BE YOURS IN EACH STEPS YOU TAKE ..
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. இன்று பிரதோஷ விரதம் .. இதனை “ மிருத்யுஞ்சய பிரதோஷம் “ என்பர் .. இது மரண பயத்தைப் போக்கவல்லது .. மந்திரம் - ஓம் த்ரியம்பகம் யஜாமஹே! சுகந்திம் புஷ்டி வர்தனம்! உருவாருகமிவ பந்தனான்! ம்ரித்யோர் மோக்ஷியே மா அம்ருதாத் ! பொருள் - மூன்று கண்களை உடைய சுகந்தமான நறுமணத்தை உடைய .. நம் எல்லோருக்கும் உணவு அளிப்பவரும் ..நம்மை வளர்ச்சி அடைய செய்பவருமான சிவபெருமானைப் போற்றி வணங்குகிறோம் .. விளாம்பழம் எப்படி தன் காம்பிலிருந்து பிரிந்து விழுகிறதோ .. அதேபோல நம்மை பந்தங்களில் இருந்து விடுவித்து மரணம் என்னும் பயத்திலிருந்து விடுவித்து .. அழியாத நிலை அதாவது மோக்ஷ்நிலை அடையச் செய்வாயாக ! என்றும் அழியாதவனே ஈஸ்வரா !! .. பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுகிறார்கள் .. நோய் தீரவும் .. ஏழ்மை ஒழியவும் .. துயரங்கள் விலகவும் பிரதோஷ வழிபாடு சிறந்ததாகும் .. இவ்விரதத்தை கடைபிடிக்க விரும்புபவர்கள் சித்திரை .. வைகாசி .. ஐப்பசி .. கார்த்திகை ஆகிய மாதங்களில் வரும் சனிப்பிரதோஷ நாளில் விரதத்தை தொடங்குதல் சிறப்பு விரதம் கடைபிடிப்போர் பகல் முழுவதும் உபவாசமிருந்து பிரதோஷவேளையாகிய சூரிய அஸ்தமனத்தின் போது சிவாலயங்களில் சிவதரிசனம் செய்தபின்பு உணவருந்த வேண்டும் .. ஆலகால விஷத்தால் மூவுலகிற்கும் ஏற்படவிருந்த பேரழிவை சிவபெருமான் காத்தவேளையே பிரதோஷ காலம் .. மாலை 4.30 - 6.30 மணிவரை காலமே பிரதோஷவேளை .. இவ்வேளையில் சிவபெருமான் நந்தீஸ்வரரின் இருகொம்புகளுக்கிடையே நின்று நடனம் புரிந்து தேவர்களுக்குத் தரிசனம் தந்தருளுவதாக நம்பிக்கை .. சிவாலயம் சென்று சிவனைத்தரிசித்து சகல சம்பத்துக்களையும் பெறுவீர்களாக .. ”ஓம் சிவாய நமஹ” .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. . WISH YOU ALL A BLESSED SUNDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. " OM SHIVAAYA NAMAHA "
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. துவாதசித் திதியாகிய இன்று அன்னதானம் செய்வது சாலச்சிறந்தது .. அண்ணாமலையானுக்கே செய்த பலன் கிட்டும் .. அண்ணாமலையில் ஒருவேளை அன்னதானம் செய்தால் பிறந்ததுமுதல் இறக்கும்வரையிலும் ஒருகோடிபேருக்கு செய்த புண்ணியம் கிட்டும் .. மேலும் மறுபிறவியில்லாத முக்தி கிட்டும் .. ” ஆதிசங்கரர் கனகாதர ஸ்தோத்திரம்” - ஒரு துவாதசி நாளைக்கு ஒருவீட்டின் முன் போய் நின்று ஆதிசங்கரர் “பவதி பிக்ஷ்ந்தேஹி” என்று சொல்லவேண்டும் .. ஏதாவது பிக்க்ஷை போட்டால் மட்டுமே அதை உண்ணவேண்டும் .. வேறெதையும் கேட்கக்கூடாது .. ஒருவேளைமட்டும்தான் .. அந்த ஒருவேளையிலும் கூட மும்முறைமட்டுமே குரல் கொடுக்கவேண்டும் .. பிக்க்ஷை போடவில்லை என்றால் அன்று பசியுடன் இருக்க வேண்டியது தான் .. அவ்வாறு ஒரு வீட்டின் முன்னால் சென்று குரல் கொடுத்தார் அந்த வீட்டுக்காரர்கள் பரமஏழைகள் .. அன்று ஏகாதசி விரதம் முடிந்து துவாதசி விரதத்தை நெல்லிக்கனியை உண்டு பூர்த்திசெய்யவேண்டும் அதற்கான நெல்லிக்கனி மட்டுமே அந்த வீட்டில் அன்று இருந்தது .. நெல்லிக்கனியை உண்ணவில்லையானால் விரதபங்கம் ஏற்படும் .. ஆதிசங்கரர் குரல்கொடுத்தபோது அந்த வீட்டு அம்மாள் எதை பிக்க்ஷையாகப் போடுவது என்று தெரியாமல் திகைத்தாள் .. இரண்டுமுறை குரல் கொடுத்தாகிவிட்டது .. மூன்றாவது குரலுடன் போய்விடுவார் .. அப்படியாகினால் ஓர் இளம் சந்நியாசியைப் பசியுடன் திருப்பியனுப்பிய பாவம் நேரிடும் .. ஆகவே அந்த நெல்லிக்கனியை ஆதிசங்கருக்குப் போட்டுவிட்டாள் .. இதனைக்கண்ட ஆதிசங்கரர் அந்தப்பெண்மணியின் நிலைமைகுறித்து மனம் கசிந்துருகி ஸ்ரீலக்ஷ்மியிடம் வேண்டி “கனகதாரா “ என்னும் துதியைச் சொன்னார் .. உடனே தேவி சங்கரர் முன் எழுந்தருளி வறுமையில் வாடிய குசேலரும் சுசிலையும் பகவான் கிருஷ்ணரின் திருவருளால் குபேர சம்பத்தைப் பெற்றனர் .. வறுமையில் வாடியவர்கள் பெற்ற செல்வத்தால் நியமங்களை .. ஆசார அனுஷ்டானங்களை மறந்து சுக பசி அமர்த்தாமல் தவிக்கவிட்டனர் .. எனவே அப்பாவவினையின் பயனாக இந்த யுகத்தில் அவர்கள் இங்கே வறுமைப் பிடியில் சிக்கித்தவிக்கின்றனர் .. என்ற உண்மையை ஸ்ரீசங்கரரிடம் ஸ்ரீமஹாலக்ஷ்மிதேவி புலப்படுத்தினாள் .. இருப்பினும் வறுமையிலும் திடமனத்துடன் ஆதிசங்கருக்கு நெல்லிக்கனியை பிக்க்ஷையாக இட்ட காரணத்தினால் ஸ்ரீலக்ஷ்மிதேவி மனமுருகி அந்த இல்லத்தின் மீது தங்கமயமான நெல்லிக்காய்களை மழைபோல் பொழிந்தார் .. அதுமட்டுமல்லாமல் இந்தக் கனகதார ஸ்தோத்திரத்தைப் பாடுவோர் அனைவருக்கும் தன் நன்னருள் கிடைக்கும் என உறுதிமொழிகிறார் .. முற்றும் துறந்த மகான் ஆதிசங்கரர் தன் பக்தர்களுக்காக ஸ்ரீலக்ஷ்மியிடம் கையேந்தி நிற்கிறார் .. ஸ்வர்ணமாரி பொழியும் திருமகளைப்போற்றி அன்னையின் திருவருள் அனைவரும் பெற்றிடுவோமாக .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. . WISH YOU ALL A BLESSED DAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF GODDESS LAXMI .. MAY SHE SHOWER YOU WITH HAPPINESS AND PROSPERITY .. ' JAI MATA DI ' ..
அனைவருக்கும் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. அஷ்டமித் திதியாகிய இன்று ‘காவல் தெய்வமான ‘ பைரவரை’ வழிபடுவது விசேஷம் .. கஷ்டங்கள் தீவிரமாகும் போது அவை காற்றில் பறக்கும் பஞ்சாகிவிடும் .. தேய்பிறை அஷ்டமி நாள் செவ்வாய்க்கிழமை வருவது மிகவும் சிறப்பாகும் .. தங்களனைவரது சகல பிரச்சினைகளும் தீர்ந்து மனதில் அமைதியும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் .. செல்வவளம் பெருகவும் பைரவரை பிரார்த்திக்கின்றேன் .. ஓம் ஷ்வானத்வஜாய வித்மஹே! சூலஹஸ்தாய தீமஹி! தந்நோ பைரவ ப்ரசோதயாத்!! .. அபிதான சிந்தாமணி என்ற நூலில் பைரவர் வரலாறு கூறப்பட்டுள்ளது .. தாருகாசுரன் என்பவன் இறவா வரம் வேண்டும் என சிவனிடம் கேட்டான் .. உயிருக்கு இறப்புண்டு என்ற சிவன் .. ஏதோ ஒரு பொருளால் இறப்பை வேண்டும்படி அவனிடம் கூறினார் .. அவன் அகங்காரத்துடன் ஒரு பெண்ணைத்தவிர தன்னை யாரும் அழிக்கக் கூடாது என்று வரம் பெற்றான் .. பலம்மிக்க தன்னை ஒரு பெண் என்ன செய்துவிட முடியும் என்பது அவனது எண்ணம் .. பல அட்டூழியங்கள் செய்த அவனுக்கு அழியும் காலம் வந்தது .. தேவர்கள் சிவ .. பார்வதியிடம் முறையிட்டனர் .. பார்வதிதேவி சிவன் விழுங்கிய ஆலகால விஷத்தில் இருந்து கறைபடிந்த ஒரு சுடரை உருவாக்கினாள் .. அந்தச்சுடர் ஒரு பெண்ணாக வடிவெடுத்தது .. ‘காளம்’ (விஷம்) படிந்த அந்த பெண்ணுக்கு ‘காளி’ என பெயர் சூட்டினாள் .. காளிதேவி கடும் கோபத்துடன் தாருகாசுரன் இருக்கும் திசைநோக்கி திரும்பினாள் .. அந்த கோபம் கனலாக வடிவெடுத்து.. சூரனை சுட்டெரித்தது .. பின் அந்த கனலை ஒரு குழந்தையாக மாற்றிய காளி அதற்கு பாலூட்டினாள் .. அதன் பின் சிவபெருமான் காளியையும் அந்தக்குழந்தையையும் தன் உடலுடன் ஐக்கியமாக்கிக் கொண்டார் .. அப்போது அவரது உடலில் இருந்து எட்டு குழந்தைகள் உருவாகின .. அந்த எட்டையும் ஒன்றாக்கிய சிவன் அந்த குழந்தைக்கு “ பைரவர் “ என்று பெயர் வைத்தார் .. காளி .. சிவன் .. ஐக்கியத்துடன் எட்டு மடங்கு சக்தியுடன் காளத்தை தன் உடலில் அடக்கிய அந்தக் குழந்தை “காளபைரவர்” எனப்பட்டு தற்போது ‘காலபைரவர்’ ஆகியுள்ளது இவரை தம் காவலுக்கு சிவபார்வதி நியமித்தனர் .. தெய்வங்களுக்கு காளை .. சிங்கம் .. யானை .. மயில் போன்ற வாகனங்கள் இருக்க பைரவருக்கு மட்டும் நாய்வாகனம் தரப்பட்டுள்ளது .. சிலர் நாயை பஞ்சுமெத்தையில் படுக்கவைத்து பிஸ்கட் .. பால் கொடுத்து குழந்தை போல் வளர்ப்பர் .. சிலர் கண்டாலே கல்லெறிவர் .. இதுபோல் வாழ்க்கையில் இன்ப துன்பம் எதுவந்தாலும் அதை இறைவனிடம் அர்ப்பணிக்க வேண்டும் என வேதங்கள் சொல்கின்றன .. அந்த வேதத்தின் வடிவமாக நாய்வாகனம் கருதப்படுகிறது .. நாய்க்கு “வேதஞாளி” என்ற பெயர் இருக்கிறது .. நவக்கிரக பைரவபெருமான் ராகு கேது எனப்படும் பாம்புகளை பூனூலாகத் தரித்தும் .. சந்திரனை சிரசில் வைத்தும் .. சூலம் .. மழு .. பாசம் .. தண்டம் ஏந்தி காட்சி தருகிறார் ..காலமே உருவான பைரவரின் திருவுருவத்தில் பன்னிரெண்டு ராசிகளும் அடக்கம் .. மேஷராசி - தலையிலும் .. ரிஷபராசி - வாயிலும் .. மிதுனராசி - கைகளிலும் .. கடகராசி - மார்பிலும் .. சிம்மராசி - வயிற்றிலும் .. கன்னிராசி - இடையிலும் .. துலாராசி - புட்டத்திலும் .. விருச்சிகராசி - லிங்கத்திலும் .. தனுசுராசி - தொடையிலும் .. மகரராசி -முழந்தாளில்... கும்பராசியில் - காலின்கீழேயும் .. மீனராசியில் - அடித்தளங்களில் உள்ளதாகவும் சாஸ்திர ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன .. பைரவரை போற்றி தடைபட்ட சுபகாரியங்கள் இனிதே கூடிவர பிரார்த்திக்கின்றேன் .. “ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD BHAIRAWA..
மார்கழி: 28 கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம் அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க் குலத்து உந்தன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம் குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை சிறு பேர் அழைத்தனமும் சீறி அருளாதே இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. மார்கழிமாத தேய்பிறை அஷ்டமி திதியாகிய இன்று சிவன் படியளக்கும் வைபவம் நடக்கும் .. அன்று பஞ்சமூர்த்திகளும் .. அஷ்டம சப்பரத்தில் எழுந்தருளுவர் .. சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்தி இரண்டு சீடர்களுடன் காட்சி தருவார் .. அனைத்து தெய்வங்களின் ஆசீர்வாதம் தங்களனைவருக்கும் கிட்டி சுபீட்சமான வாழ்வு வாழ வாழ்த்துகின்றேன் .. வணங்குகின்றேன் .. ‘ஓம் சிவாய நமஹ’ .. அனைத்து உயிர்களுக்கும் படியளப்பதற்காக சிவபெருமான் புறப்பட்டார் .. அவரை சோதிக்க எண்ணிய அம்மன் ஒரு பாத்திரத்தில் எறும்பு ஒன்றை அடைத்து வைத்தார் .. எல்லா உயிர்களுக்கும் படி அளந்த திருப்தியில் திரும்பிய சிவபெருமானிடம் .. ஒரு உயிருக்கு மட்டும் நீங்கள் படியளக்கவில்லையே என்றார் அம்மன் .. பாத்திரத்தை திறந்து பார்த்தபோது அந்த எறும்புக்கு அருகிலும் அரிசி இருந்தது .. இதை நினைவு கூறும் வகையில் மார்கழி தேய்பிறை அஷ்டமி நாளில் அப்பனும் .. அம்மையும் சப்பரத்தில் திருவீதி உலா வருவார்கள் .. இதனை அஷ்டமி பிரதட்சணம் என்பர் .. அனைத்து உயிர்களுக்கும் படியளக்கும் ஈசனைப் போற்றி .. அவர் பாதம் பணிவோமாக .. வாழ்க வளமுடனும் நலமுடனும் .. .. WISH YOU ALL A BLESSED MONDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA AND SHAKTHI .. MAY THEY BLESS YOU WITH .. BEST HEALTH .. AND HAPPINESS .. IT WILL STRENGTHEN YOU MORE FOR TODAY AND FOREVER MORE .. 'OM SHIVAAYA NAMAHA' ..
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சதுர்த்தி திதி இன்று மாலைவரை தொடர்வதால் விக்னேஷ்வரனைத் துதித்து சகலதடைகள் யாவும் நீங்கி அனைத்திலும் வெற்றிபெறவும் .. எதிலும் முன்னிலையில் தங்கள் அனைவரும் திகழவும் போற்றி வணங்குகின்றேன் .... ஓம் தத்புருஷாய வித்மஹே ! வக்ரதுண்டாய தீமஹி ! தந்நோ தந்தி ப்ரசோதயாத்!! .. விநாயகர் விரதம் கடைப்பிடிப்பதாலும் ..வணங்குவதாலும் 21 பேறுகள் கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளன .. அவையாவன - தர்மம் .. பொருள் .. இன்பம் .. சௌபாக்கியம் .. கல்வி .. பெருந்தன்மை .. நல்வாழ்வுடன் கூடிய மோட்சம் .. முகலக்ஷ்ணம் .. வீரம் .. வெற்றி .. எல்லோரிடமும் அன்பு பெறுதல் .. நல்ல சந்ததி .. நல்ல குடும்பம் .. நுண்ணறிவு .. நற்புகழ் .. சோகம் இல்லாமை .. அசுபங்கள் அகலும் .. வாக்குசித்தி .. சாந்தம் .. பில்லி சூனியம் நீக்குதல் .. அடக்கம் ஆகியவை கிடைக்கும் என்கின்றன புராணங்கள் .. எனவே நன்மைகள் அனைத்தும் கிடைக்க விநாயகப்பெருமானைப் போற்றி நலம் பெறுவோமாக .. ”ஓம் விக்னேஷ்வராய நமஹ” வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. WISH YOU ALL A BLESSED FRIDAY WITH THE BLESSINGS OF LORD GANESH .. MAY HE REMOVE ALL THE OBSTACLES AND GUIDES YOU IN EACH STEPS YOU TAKE TODAY AND FOREVER MORE .. 'OM VIGNESHVARAAYA NAMAHA
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று மஹாவிஷ்ணுவதைத் துதித்து தங்களனைவருக்கும் சகல ஐஸ்வர்யங்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகின்றேன் .. வணங்குகின்றேன் .. ஓம் நாராயணாய வித்மஹே! வாசுதேவாய தீமஹி! தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்! .. “சுதர்சன சக்கர மகிமை” .. உலக உயிர்களையெல்லாம் காத்தருளுகின்றவர் விஷ்ணுபகவான் ..ஏனெனில் காத்தல் தொழிலைச் செய்வது அவரே! விஷ்ணுவானவர் இந்த தொழிலை புரியும் நிலையில் ஒரு கையில் சுதர்சனம் என்னும் சக்கரத்தையும் .. மற்றொரு கையில் பான்யசன்னியம் என்னும் சங்கையும் .. இன்னொரு கையில் கௌமேதகம் என்னும் கதையையும் .. தாங்கிய வடிவில் விளங்குகின்றார் .. இவ்வாயுதங்கள் அனைத்திலும் மேன்மைமிக்கது சுதர்சன சக்கரமாகும் .. விஷ்ணுபகவானிற்கு எத்தைகைய சக்தி இருக்கின்றதோ அத்தகைய சக்தி இச்சக்கரத்துக்கும் உள்ளது .. ஆயுதங்களின் அரசன் என போற்றப்படுவதும் இதனால் இதனை ‘சக்கரத்தாழ்வார்’ என்றும் அழைப்பர் .. இந்தச் சிறப்புமிக்க சக்கரத்தின் பெருமைகளைக் காண்போம் .. இன்னல் நீக்கி இன்பம் அளிக்கவல்லது சுதர்சன சக்கரமாகும் .. கஜேந்திரனின் அவலக்குரல் கேட்டு அவ்விடம் வந்த விஷ்ணுபகவானின் கையிலிருந்து விரைந்து சென்ற சுதர்சனப் பெருமான் கஜேந்திரனை பிடித்திருந்த முதலையை பிளந்து அவனைக் காத்தருளி மீண்டும் பகவானின் கரத்தில் வந்து சேர்ந்தது .. அதுமட்டுமா .. விஷ்ணுபகவான் கிருஷ்ணராக அவதாரம் செய்தபோது கிருஷ்ணபகவானை .. அவரது மகிமையை அறியாத சிசுபாலன் பழித்துரைக்கின்றான் .. கிருஷ்ணரும் சிசுபாலனின் தாய்க்கு நூறு தடவைகள் சிசுபாலனின் பழிச்சொற்களை பொறுப்பேன் .. என வாக்களித்தார் .. அதனைப் பொருட்படுத்தாத சிசுபாலன் நூறுதடவைகள் கடந்து நூற்றி ஓராவது பழிச்சொல்லை கூறும்போது பகவானின் கையில் இருந்த சக்கரம் கண் இமைக்கும் பொழுதில் சென்று சிசுபாலனின் சிரசைக் கொய்து திரும்பியது .. அர்ஜுனன் மகன் அபிமன்யுவின் மரணத்திற்கு காரணமாகவிருந்த ஜயத்ரதனை கொல்வதாக சபதம் முடித்த அர்ஜுனனுக்காக மாதவன் கையிலிருந்த சக்கரத்தினால் சூரியனை மறைத்து பின் அதனை விலக்கவும் அதனால் ஜயத்ரதனை அர்ஜுனன் கொன்றான் .. இவ்வாறான மகிமைகளைக் கொண்ட சக்கரத்தாழ்வாரை நாம் பக்தியுடன் வழிபட்டு வந்தால் பின்வரும் நன்மைகள் உண்டாகும் .. மனதில் உள்ள பயம் விலகும் .. தீராத நோய்கள் நீங்கும் .. எதிரிகள் யாரும் இருக்கமாட்டார்கள் .. அவ்வாறு இருந்தால் அவர்கள் அழிந்து போவார்கள் .. செல்வவளம் பெருகும் .. புத்தியில் தெளிவு உண்டாகும் .. முட்டாள்தனம் நீங்கும் .. இவற்றைத் தவிர சுதர்சன மகாமந்திரத்தை தினமும் கூறி சுதர்சனப் பெருமாளை வழிபட்டு வரவேண்டும் எனவே ஒளிவீசக்கூடிய வலிமை பொருந்திய வாசனைமிகுந்த துளசிமாலையை சூடிய பரந்தாமனின் திருக்கரத்தில் இருக்கின்ற சுதர்சனமாகிய ‘சக்கரத்தாழ்வாரை வழிபட்டு சகல நன்மைகளும் பெறுவோமாக .. “சுதர்சன காயத்ரி மந்திரம் “ .. ஓம் ! சுதர்சனாய வித்மஹே! ஜ்வாலா சகராய தீமஹினா !!! .. வாழ்க வளமுடனும் நலமுடனும் .. WISH YOU ALL A BLESSED WEDNESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD VISHNU MAY HE SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH AND HAPPINESS .. 'OM NAMO NAARAAYANAA' ..
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய்க்கிழமையாகிய இன்று கலியுகவரதனாகிய முருகப்பெருமானைத் துதித்து தங்களனைவருக்கும் இன்னல்கள் யாவும் மறைந்து ..செய்யும் அனைத்து காரியங்களிலும் வெற்றியும் மகிழ்ச்சியும் கிட்டிட வாழ்த்தி வணங்குகின்றேன் .. ‘ எந்தவினையானாலும் கந்தனருள் இருந்தால் வந்தவழி ஓடும்’ என்பது சான்றோர் வாக்கு ..
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் !! தமிழ்க் கடவுளான முருகனுக்குச் செய்யப்படும் வேண்டுதல் .. பிரார்த்தனைகளில் முக்கியமானது காவடி எடுப்பதுதான் .. இந்தக்காவடி எடுப்பதன் காரணம் .. அகஸ்திய முனிவரின் சீடர்களின் ஒருவரான இடும்பனை அழைத்து தனது வழிபாட்டிற்காக கயிலை சென்று அங்கு முருகனுக்கான கந்தமலையிலுள்ள சிவசக்தி சொரூபமான .. சிவகிரி .. சக்திகிரி .. எனும் இரு சிகரங்களையும் கொண்டுவரும்படி கூறினார் .. அகஸ்தியரின் கட்டளைக்கிணங்க இடும்பனும் கயிலை சென்று இவ்விரு மலைகளையும் இருபுறமும் தொங்க காவடியாகக் கட்டி எடுத்துக்கொண்டு வந்தான் .. முருகன் இவ்விரு கிரிகளையும் திருவாவினைகுடியில் நிலைபெறச் செய்யவும் .. இடும்பனுக்கு அருளவும் விரும்பி ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார் ..
இடும்பன் வழிதெரியாமல் திகைத்த போது முருகன் குதிரைமேல் செல்லும் அரசனைப்போல் தோன்றி இடும்பனை ஆவினன்குடிக்கு அழைத்துவந்து சற்று ஓய்வெடுத்துச் செல்லும்படி கூறுகிறார் .. இடும்பனும் காவடியை இறைக்கிவைத்து ஓய்வெடுத்துவிட்டுப் புறப்படும்போது காவடியைத் தூக்கமுடியாமல் திண்டாடினான் .. ஏன் இப்படி காவடியைத் தூக்க முடியாமற் போனது என்று சுற்றிப்பார்க்கும் போது சிவகிரியின் மேல் ஒரு சிறுவன் கோவணாண்டியாய் கையில் தண்டுடன் நிற்பதைக் கண்டான் .. இடும்பனும் சிறுவனை மலையிலிருந்து கீழே இறங்கும்படி வேண்டினான்.. ஆனால் அந்த சிறுவன் இந்தமலை தனக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாட .. கோபமுற்ற இடும்பன் அச்சிறுவனைத் தாக்க முயன்றான் .. அப்போது இடும்பன் வேரற்ற மரம் போல் கீழே சரிந்து விழுந்தான் .. இதைக்கண்ட அகஸ்தியர் மற்றும் இடும்பன் மனைவியுடன் சென்று வேண்ட முருகன் இடும்பனுக்கு அருளாசி புரிந்ததுடன் இடும்பனைத் தனது காவல் தெய்வமாகவும் நியமித்தார் ..
அப்போது முருகன் .. இடும்பன் போல் காவடியேந்தி சந்தனம் .. பால் .. மலர் .. போன்ற அபிஷேகப்பொருட்களை தன் சன்னதிக்கு எடுத்து வருபவர்களுக்கும் அருள்பாலிப்பதாக வாக்களித்தார் .. அப்போது முதல் முருகனுக்கு இந்த காவடி எடுக்கும் பழக்கம் வழக்கமாகிவிட்டது .. என்று ஆன்மீகவாதிகள் சொல்கிறார்கள்
எது எப்படியோ ஒவ்வொரு மனிதனுக்கும் இன்பமும் .. துன்பமும் இரண்டு சுமைகளாக சரிசமமாக இருக்கின்றது .. மனிதனாகப்பிறந்த ஒவ்வொருவரும் இந்த இரண்டு சுமைகளையும் தாங்கித்தான் ஆக வேண்டும் ..இதற்கு கடவுள் பக்தி எனும் ஆன்மீக எண்ணம் இந்த இரண்டு சுமைகளையும் எளிமையாகச் சுமக்க உதவும் மையக்கோலாக உள்ளது .என்பது மட்டும் உண்மை .. முருகனின் அருட்கடாக்ஷ்ம் அனைவரும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வீர்களாக ... ஓம் தத்புருஷாய வித்மஹே ! மஹேஷ்வர புத்ராய தீமஹி ! தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத்! வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA .. " OM MURUGA " ..
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. மார்கழிமாதம் தக்ஷிணாயனத்தின் இறுதிமாதமாகும் .. மார்கழிமாதத்தில் தில்லைச்சிதம்பரத்தில் கோவில் கொண்டருளிய நடராஜப்பெருமானைத் தரிசிக்க தேவர்கள் ஒன்றுகூடுவதாக ஐதீகம் உண்டு .. தேவர்களுக்கு இம்மாதம் அதிகாலைப் பொழுதாகும் .. இக்காலத்தில் (வைகறையில்) சுவாமிதரிசனம் செய்வது உத்தமமாகக் கருதப்படுகிறது .. அக்காலத்தைப் ’ பிரம்ம முகூர்த்தம் ‘ என்றும் அழைப்பர் .. மார்கழிமாத திருவாதிரை நட்சத்திரம் சிவவழிபாட்டுக்குரிய நாட்களில் மிகச்சிறந்ததாகக் கூறப்படுகிறது .. பத்து நாள் நோன்பான திருவெம்பாவை மார்கழித் திருவாதிரையுடனேயே முடிவுறுவது வழமையாகும் .. இந்நாளில் ஆடல்வல்லானுக்கு திருமுழுக்காட்டுதல் இடம்பெறும் .. இதை தரிசிப்பது மிகுந்த புண்ணியம் தரக்கூடிய ஒன்றாகக் கருதப்படுகிறது.. இவ்வாறு ஆனந்த நடனமாடும் ஆண்டவனைத் தரிசித்து சகலசௌபாக்கியங்களையும் பெறுவீர்களாக ..
அஸ்வினி .. பரணி ..எனத்தொடங்கி .. ரேவதிவரை பதினேழு நட்சத்திரங்கள் இருந்தாலும் .. ‘திரு’ என்ற அடைமொழியுடன் குறிக்கப்படுவது ஆதிரை .. ஓணம் ஆகிய இரண்டு நட்சத்திரங்கள் மட்டுமே .. இதில் திருவோணம் பெருமாளுக்கு உரியதாகும் .. திருவாதிரை என்பது சிவனின் நட்சத்திரமாகும்..
சிவனுக்கு போகநிலை .. வேகநிலை .. யோகநிலை என்ற மூன்றுவித கோலங்களை சித்தர்களும் முனிவர்களும் யோகீஸ்வரர்களும் குறிப்பிட்டுள்ளார்கள் ..
மனைவி .. மக்கள் .. வீடு வாசல் .. என்று குடும்பஸ்தராக .. கல்யாணசுந்தரராக .. உமாமஹேஷ்வரராக .. சோமசுந்தரராக அருள்செய்வது “ போகநிலை”..
அடுத்து தீமைகளைபோக்கும் விதத்தில் சம்ஹாரமூர்த்தியாக அவர் “வேகவடிவம்” எடுக்கிறார் .. கஜசம்ஹாரர் .. காமதகனமூர்த்தி .. ருத்ரமூர்த்தி .. என்ற வடிவங்களில் தீமைகளை போக்குகிறார் ..
மிக உயர்ந்தநிலை எனப்படும் “யோகநிலை” ஞானமூர்த்தியாக வரும்போது .. மௌனமே பிரதானம் .. இதுவே தென்முக கடவுளான தட்சிணாமூர்த்தியாகும் .. போகம் .. வேகம் .. யோகம் என்ற மூன்று கோலங்களையும் ஒருசேர அருள்வதே “நடராஜர் வடிவம்” ..
“ நமசிவாய “ என சொல்வோமே ! நன்மைகள் ஆயிரம் கொள்வோமே !! .. ஓம் நமசிவாய .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. .. WISH YOU ALL A BLESSED MONDAY .. MAY THE DIVINE BLESSINGS OF LORD SHIVA BRINGS YOU ETERNAL BLISS AND FULFILL ALL YOUR DESIRES .. .. "OM NAMASHIVAAYA" ..
அஸ்வினி .. பரணி ..எனத்தொடங்கி .. ரேவதிவரை பதினேழு நட்சத்திரங்கள் இருந்தாலும் .. ‘திரு’ என்ற அடைமொழியுடன் குறிக்கப்படுவது ஆதிரை .. ஓணம் ஆகிய இரண்டு நட்சத்திரங்கள் மட்டுமே .. இதில் திருவோணம் பெருமாளுக்கு உரியதாகும் .. திருவாதிரை என்பது சிவனின் நட்சத்திரமாகும்..
சிவனுக்கு போகநிலை .. வேகநிலை .. யோகநிலை என்ற மூன்றுவித கோலங்களை சித்தர்களும் முனிவர்களும் யோகீஸ்வரர்களும் குறிப்பிட்டுள்ளார்கள் ..
மனைவி .. மக்கள் .. வீடு வாசல் .. என்று குடும்பஸ்தராக .. கல்யாணசுந்தரராக .. உமாமஹேஷ்வரராக .. சோமசுந்தரராக அருள்செய்வது “ போகநிலை”..
அடுத்து தீமைகளைபோக்கும் விதத்தில் சம்ஹாரமூர்த்தியாக அவர் “வேகவடிவம்” எடுக்கிறார் .. கஜசம்ஹாரர் .. காமதகனமூர்த்தி .. ருத்ரமூர்த்தி .. என்ற வடிவங்களில் தீமைகளை போக்குகிறார் ..
மிக உயர்ந்தநிலை எனப்படும் “யோகநிலை” ஞானமூர்த்தியாக வரும்போது .. மௌனமே பிரதானம் .. இதுவே தென்முக கடவுளான தட்சிணாமூர்த்தியாகும் .. போகம் .. வேகம் .. யோகம் என்ற மூன்று கோலங்களையும் ஒருசேர அருள்வதே “நடராஜர் வடிவம்” ..
“ நமசிவாய “ என சொல்வோமே ! நன்மைகள் ஆயிரம் கொள்வோமே !! .. ஓம் நமசிவாய .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. .. WISH YOU ALL A BLESSED MONDAY .. MAY THE DIVINE BLESSINGS OF LORD SHIVA BRINGS YOU ETERNAL BLISS AND FULFILL ALL YOUR DESIRES .. .. "OM NAMASHIVAAYA" ..
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. இன்றிரவு நடராஜப் பெருமான் ஆருத்ரா அபிஷேகம் நடைபெற்று அதன்பின்பே தரிசன பெருவிழா அனைத்து சிவாலயங்களிலும் நடைபெறுகிறது .. இதனைக் கண்டு நடராஜப்பெருமானை வழிபட்டால் என்றென்றும் மகிழ்ச்சி நிலைக்கும் .. தங்களனைவரும் மகிழ்ச்சியுடனும் .. தடைகள் நீங்கி வளமான வாழ்வு பெற வாழ்த்துகின்றேன் .. வணங்குகின்றேன் .. ஆருத்ரா தரிசனம் சிவபெருமானுக்குரிய அஷ்டமஹா விரதங்களுள் ஒன்று .. மார்கழிமாத மதிநிறைந்த நன்னாளோடு இணைந்து திருவாதிரை வருவதால் விண்ணிலிருந்து சந்திரன் தன்னை தலையில் அணிந்து சாபவிமோசனம் அளித்த சிவபெருமானின் அன்பர்களை தன் பதினாறு அமுதகலைகளால் ஆசீர்வதிக்கின்றான் .. ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்ஜோதியாக ஓருருவம் .. ஓர்நாமம் .. இல்லாத சிவபெருமான் செம்பவளமேனிவண்ணன் என்பதனால் அவரை சிவப்பு நட்சத்திரமான திருவாதிரையான் என்றும் அழைத்தும் அந்த திருவாதிரையன்று ஆடும் அந்த அம்பலக்கூத்தனை சிறப்பாக வழிபடுகின்றோம் .. ஆருத்ரா என்பது ஆதிரையை குறிக்கும் சொல் .. சிவனுக்குரிய ஜென்மநட்சத்திரம் திருவாதிரை .. எனவேதான் இந்த திருவாதிரை நாளில் ஆடல் அரசனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது .. திருமணமான பெண்கள் தங்கள் தாலிபாக்கியம் நிலைக்க காணவேண்டிய விழா “ஆருத்ரா தரிசனம்” .. சிவபெருமானுக்குரிய வடிவங்களில் முதன்மையானது நடராஜர் வடிவமே .. இவர் ஆடுவது ஆனந்ததாண்டவம் .. ஆருத்ரா தரிசனத்தன்று ஆதிரைக்களி படைக்கும் வழக்கம் உண்டு .. உண்மையான பக்தியுடன் எளிமையான உணவு படைத்தாலும் ஆண்டவன் ஏற்றுக்கொள்வான் என்பதே தாத்பர்யம் .. ‘திருவாதிரைக்கு ஒருவாய்க்களி’ என்பது பழமொழி .. எனவே மார்கழிமாத திருவாதிரையன்று அன்று விரதம் உள்ள பக்தர்கள் ஒருவாய்க்களி உண்டு மகிழ்கின்றனர் .. அதன் பலன் அளவிடற்கரியது .. ‘களி’ என்றால் ஆனந்தம் என்று அர்த்தம் .. ஆனந்ததாண்டவம் ஆடும் நடராஜரை நாம் உண்மையான உள்ளன்புடன் வழிபட்டால் அவர் நமக்கு உண்மையான ஆனந்தமயமான மோக்ஷ்த்தை வழங்குவார் என்பதை உணர்த்துவதே களி படைப்பதன் உள்ளர்த்தம் .. “ஆரார் வந்தார் அமரர்குழாத்தில் அணியுடை ஆதிரைநாள் நாராயணனோடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும் தேரார் வீதியில் தேவர்குழாங்கள் திசையணைத்தும் நிறைந்து பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே” .. என்று ஆனந்தசேந்தன் பாடியபடி திருமால் .. பிரம்மன் .. இந்திரன் உள்ளிட்ட தேவர்குழாம் எல்லாம் வந்து எம்பெருமான் ஆதிரைத்தேரோட்டத்தைக் காணும் அழகை தரிசிக்கும் திருநாள் திருவாதிரைத் திருநாள் .. கோயிலின் உள்ளே சென்று வழிபட முடியாதவர்களுக்காக தானே வெளியே வந்து தேரார் வீதியில் திருத்தேரில் வந்து நடராஜப்பெருமான் பஞ்சமூர்த்திகளுடன் அருட்காட்சி அளித்து ஆனந்தம் பொழியும் அற்புதத்திருநாள் .. இந்நாளில் நடராஜப்பெருமானைத் தரிசித்து சகலவளங்களும் பெறுவீர்களாக .. “ஓம் சிவாய நமஹ” .. .. WISH YOU ALL A BLESSED SUNDAY WITH THE BLESSINGS OF LORD SHIVA .. 'OM SHIVAAYA NAMAHA ' ..
ராதே கிருஷ்ணா!!!!!! ராதே கிருஷ்ணா !!!!! நமக்கு நாம் தான் எல்லாம் செய்கின்றொம் என்கின்ற நினைப்பு வரும் வரை கடவுள் நம்மை வேடிக்கை பார்பான். உடல் அழியக்கூடியது; ஆத்மா அழியாதது. உடல் வலிமை குறையலாம்; முதுமையும் நோயும் உடலை வாட்டலாம்; உடலைச் சார்ந்த பெருமையும் புகழும் மறையலாம். ஆனால், ஆத்மா அழியாதது; மறையாதது; மாறாதது. அந்த ஆத்மாதான் உடலைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை உணர்ந்தால், பயமின்றி வாழலாம். ஒவ்வொருவரும் இறைவனின் பெயரை உச்சரிக்கிறார்கள். ஆனால், மனத்தூய்மை இல்லாமல் உச்சரிப்பதனால் இறைவனை அடைய முடியாமல் தவிக்கிறார்கள். சத்தியமாகிய பரம்பொருளை சிந்தித்தால் உள்ளத்தில் ஒளி பிறக்கிறது. உலகில் வாழ்வதற்கு ஒரே ஒரு மார்க்கம் தான் உண்டு. அது கடவுளிடம் பயமும் பக்தியும் கொண்டு நல்லவனாக வாழ்வது மட்டுமே. கிருஷ்ணன் கூட இருந்து நமது செயல்களை நடத்துகின்றான் என்கின்ற உணர்வு இருக்குமேயானால் கிருஷ்ணன் நம் கூட இருந்து நம் கை பிடித்து நம்மை வழி நடத்தி செல்வான்.
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வெள்ளிக்கிழமையாகிய இன்று பிரதோஷ விரதமும் சேர்ந்து வருகின்றது .. மாலையில் சிவாலயம் சென்று வழிபடுவது சாலச் சிறந்தது .. மூவுலகிற்கும் ஏற்படவிருந்த பேரழிவை சிவபெருமான் தன்னகத்தேயிருத்திக் காத்தவேளையே பிரதோஷவேளை .. குறிப்பாக மாலை 4.30 - 6.30 மணிவரை காலமே பிரதோஷ காலமாகும் .பிரதோஷம் என்னும் இவ்விரதம் சிவமூர்த்திக்கு உரிய விரதங்களில் தலையாயது .. பிரதோஷ தினத்தன்று மறவாமல் நந்திகேஸ்வர வழிபாடு செய்ய வேண்டும் .. நந்திதேவருக்கு ருத்ரன் என்றொரு பெயரும் உண்டு .. ’ருத்’ என்றால் துக்கம் - ‘ரன்’ என்றால் துக்கத்தை விரட்டுபவன் என்பது பொருள் .. நந்திதேவருக்கு அருகம்புல் மாலையிட்டு நெய்விளக்கேற்றி வழிபட சகல துக்கங்களும் பனிப்போல் நீங்கிடும் .. சர்வமங்களம் தரும் .. பிரதோஷ இறைவழிபாடு குறைகளைக் களைந்து நிறைவினைத் தரும் ..முக்கியமாக புண்ணிய நாட்களில் இறைவனை வழிபாடு செய்வது நிறைந்த பலனைத் தரும் .. சிவனைப்போற்றி வணங்கி தங்களனைவருக்கும் அவரது அருட்கடாக்ஷ்ம் கிடைத்து இகம் .. பரம் .. வீடு .. என்ற மும் நலங்களும் பெற்று இனிதே வாழ பிரார்த்திக்கின்றேன் .. ‘ஓம் சிவாய நமஹ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. .. .. WISH YOU ALL A BLESSED FRIDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. MAY HE BE WITH YOU IN YOUR EACH STEPS YOU TAKE TODAY AND FOREVER .. ' OM SHIVAAYA NAMAHA ' ..
Subscribe to:
Posts (Atom)