New kodimaram of sabarimala - The luckiest teak tree in earth.

If maintenance activities are to begin in the famous temples of Kerala then it happens only after Deva prashanam ( getting the permission of the lord). If positive permissions are not given after the deva prashanam the activities would be put on hold.

In the deva prashanam that happened last year in bholaka heaven - sabarimala it was told to redesign the kodimaram as the lower part of the existing kodimaram has been damaged. Further, it's said that its not good to have gold over coat for the existing kodimaram. The decision was taken in the presence of the famous astrologer kozhikodu seruvalli narayanan namboothari and kodanadu raavunni panikkar, thirukunnapuzhai udhayakumar, vamanan namboothari, sathrabani variyar, kandararu rajeevaru and mahesh mohanaru.

The new teak tree is to be brought from the forest area called Kondhi on September 16th through crane to pambai. The pooja to choose the tree happened yesterday. Mr sugumaran aachari started the process of cutting the tree. In the place named vayakkarai, thantri rajeevaru begins the pooja ( tree pooja ).

The tree in the photo is going to be the tree that is to be worshipped by millions of devotees.

Don't want any further births O Lord!!!
If am to be born again, pls create me as your kodimaram Ayyane !!!



COURTESY AND INFORMATION:SUDHAGAR SWAMY

SWAMIYEE SARANAM IYYAPPA ...


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையாகிய இன்று சிவபெருமானுக்குரிய சோமவார விரதமும் வருவதால் ஆலயம் சென்று ஈசனைத் தரிசனம் செய்வது சாலச்சிறந்தது .. இன்றைய நாள் தங்களனைவருக்கும் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாக அமைந்திடவும் .. செய்யும் அனைத்து காரியங்களும் எவ்வித தடங்கலுமின்றி வெற்றிப்பெறவும் சிவபெருமானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்
ர ப்ரசோதயாத் !! 

சோமவாரம் என்பது திங்கள் கிழமையைக் குறிக்கும் .. 
“ சோம “ என்பது சந்திரனையும் குறிப்பதாக உள்ளது .. சந்திரனுக்கு தமிழில் திங்கள் .. மதி .. நிலவு .. என்ற பெயர்களும் உண்டு .. ஈசனையும் சந்திரனையும் குறிக்கும் சோமவார விரதம் மூலம் சிவனை வழிபடும் வழக்கம் புராண வரலாற்றைப் பின்பற்றியது .. 

தட்சனின் சாபத்தால் ஒளிகுன்றிய சந்திரனை தன் தலையில் சூட்டிக்கொண்டு சந்திரனின்பிறை தொடர்ந்து வளர அருள் செய்தார் ஈசன் ..இவ்வாறு ஈசன் சந்திரனை தலையில் சூட்டிக்கொண்ட தினமே சோமவாரம் திங்கள் கிழமையாகும் ..
சோமவாரவிரதம் மூலம் சிவனை வழிபடுவது மிகவும் எளிதானது .. உத்தமமான விரதங்களுள் ஒன்று இதுவே என்று வேதநூல்கள் கூறுகின்றன .. 

சிவனைப் போற்றுவோம் ! அனைத்திலும் வெற்றி பெறுவோமாக ! வெற்றி நிச்சயம் ! ஓம் நமசிவாய ! 
வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A SUCCESSFUL MONDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. MAY HE REMOVE ALL THE OBSTACLES AND SHOWER YOU WITH FULL OF JOY AND HAPPINESS .. " OM NAMASHIVAAYA " .. JAI BHOLE NATH
..

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று ஆவணி இரண்டாம் ஞாயிறும் .. காயத்ரி ஜபத்திற்குரிய விசேஷட நாளுமாகும் .. இன்றைய நாளில் தங்களனைவரும் காயத்ரிதேவியின் அருட்கடாக்ஷ்ம் பெற்று உளத்தூய்மையும் .. மனத்தூய்மையும் அடைந்து மகிழ்ச்சியுடன் வாழ அன்னையைப் பிரார்த்திக்கின்றேன் .. ஓம் பூர்புவஸ்ஸுவ ! தத்ஸவி துர்வரேண்யம் ! பர்கோ தேவஸ்ய தீமஹி ! தியோ யோன ப்ரசோதயாத் !! எவர் நமது அறிவைத்தூண்டி பிரகாசிக்கச் செய்கிறானோ ! அந்த ஜோதிமயமான இறைவனைத் தியானிப்போமாக ! என்பதே காயத்ரி மந்திரத்தின் பொருளாகும் .. கௌசிகன் எனும் மன்னர் தம் தவப்பயனால் பிரம்மரிஷி பட்டம் பெற்று விஸ்வாமித்திரர் என்று பெயர் பெற்று விஸ்வத்திற்கே வரப்பிரசாதமான ‘காயத்ரி மந்திரத்தை ‘ நமக்களித்தவர் .. பிரம்மாஸ்திரம் எனும் இணையற்ற அஸ்திரத்திற்கு ‘ காயத்ரி மந்திரமே ‘ ஆதாரம் ..இதை “ பிரம்ம தேஜோபலம் ” எனக் குறிப்பிடுகிறார் விஸ்வாமித்திரர் .. மகிமைவாய்ந்த காயத்ரி மந்திரத்தின் அதிதேவதை காயத்ரிதேவி .. காயத்ரிதேவியின் ஐந்துமுகங்களும் சிவபெருமான் நிகழ்த்துகின்ற சிருஷ்டி .. ஸ்திதி .. ஸம்ஹாரம் .. திரோதனம் .. அனுக்ரஹம் .. ( படைத்தல் .. காத்தல் .. அழித்தல் .. மறைத்தல் அருளல் ) என்ற ஐந்து செயல்களை நினைவூட்டும் வகையில் சரஸ்வதி .. லக்ஷ்மி .. பார்வதி .. மஹேஸ்வரி .. மனோன்மணி என்ற தேவதைகளின் ஐந்துமுகங்களைக் குறிப்பிடுவதாகவும் கருதப்படுகிறது .. ஐந்து தேவதைகளைக் குறிக்கின்ற வகையில் சிவப்பு .. முத்துநிறம் .. மஞ்சள் .. நீலம் .. வெண்மை ஆகிய நிறங்களில் காயத்ரிதேவியின் ஐந்து முகங்கள் பிரகாசிக்கின்றன .. காயத்ரிதேவி விஷ்ணுலோகத்தில் ஸ்ரீமஹாலக்ஷ்மியாகவும் .. பிரம்மலோகத்தில் காயத்ரியாகவும் .. ருத்ரலோகத்தில் கௌரி என்ற பார்வதியாகவும் .. விளங்குவதாக இது குறிப்பிடுகிறது .. காயத்ரி மந்திரத்தை இடைவிடாது நேரம்கிடைக்கும் போதெல்லாம் ஜபம் செய்து அலைபாய்கின்ற மனத்தை ஒருமுகப்படுத்தி அஷ்ட ஐஸ்வர்யங்களையும் .. அஷ்டமாசித்திகளையும் பெறுவோமாக ! ஓம் சக்தி ஓம் ! வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY WITH THE BLESSINGS OF GODDESS ' MAA GAYATRI ' .. MAY SHE SHOWER YOU WITH STRENGTH .. GOOD FORTUNE .. PEACE AND PROSPERITY .. " OM SHAKTHI OM " .. JAI MATA DI

SWAMIYE SARANAM IYYAPPA....GURUVE SARANAM

ON THE EVE OF MY SON SHRI ARUNKUMAR NICHYADHARTHAM (BETROTHAL) 
OUR GURUSWAMY ATTENDED THE FUNCTION HELD AT CHENNAI ON 21ST AUGUST 2015 AND GRACED THE OCCASSION. ALL SWAMIMARS AT CHENNAI ALSO PARTICIPATED IN THE FUNCTION AND BLESSED MY SON.MY SINCERE THANKS TO OUR GS AND MANNI AND THE SWAMIMARS THOSE WISHED THRO WHATAPP ALSO..
THANKS A LOT.......RAMAKRISHNAN AND FAMILY CHENNAI

 



அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சனிக்கிழமையாகிய இன்று ஈஸ்வரனைத் துதித்து தங்களது அனைத்து கிரகதோஷங்களும் நீங்கி மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட வாழ்த்துகிறேன் .. ஈசனைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ரப் ப்ரசோதயாத் !!
” சிவாயநம “ என்பதை ‘சிவயநம’ என்றே உச்சரிக்க வேண்டும்..
சி - சிவம் 
வ - திருவருள் 
ய - ஆன்மா 
ந - திரோதமலம்
ம - ஆணவமலம்
திரோதமலம் என்பது அழுக்கை நீக்கும் பொருள் ..
“ நான் “ என்ற ஆணவ அழுக்கை பூசியிருக்கும் ஆன்மா .. திரோதமலம் கொண்டு சுத்தம் செய்து .. சிவத்தை அடைந்து 
பிறவிப்பிணியில் இருந்து விடுபடும் என்பது இதன் பொருள் .. சுருக்கமாகச் சொன்னால் “ சிவாயநம என்று உளமார ஓதுபவர்கள் பிறவியில் இருந்து விடுபடுவர் ” .. பிறவிப்பிணியில் இருந்து விடுபட “ சிவாயநம என்போம் “ 
வாழ்வில் நலம் பல பெறுவோம் ..
ஆவணிமாத அவிட்ட நட்சத்திரத்தமாகிய இன்று பூணூல் அணிபவர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு பக்திப்பூர்வமான பண்டிகை .. இந்நாளில் பழையபூணூலை கழற்றிவிட்டு புதிய பூணூல் அணிந்து கொள்வர் .. காயத்ரிஜபம் பாராயணம் செய்து காயத்ரிதேவியைத் துதித்து வழிபட்டால் எல்லா நலன்களும் கிடைக்கும் என்பது ஐதீகம் ..
“ ஓம் சக்தி ஓம் “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் ..
GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SATURDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA ..
MAY HE SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH .. AND GOOD FORTUNE .. " JAI BHOLE NATH "
 

 \


மஹாபலி சக்ரவர்த்தி தான் ஆண்ட பூமியை காண வரும் நாளாக (திரு)ஓணம் பண்டிகை மலையாளிகளால் கொண்டாடப் படுகிறது .. அவரை வரவேற்கும் விதமாக அத்தப்பூ கோலம் இட்டு பத்து நாட்கள் கொண்டாடுகிறார்கள் கேரள நாட்டினர். அத்தப்பூ என்பதன் பொருள்:- ஹஸ்த நட்சத்திரத்திலிருந்து சித்திரை,ஸ்வாதி,விஸாகம்,அநுஷம்,கேட்டை,மூலம்,பூராடம், உத்ராடம்,திருவோணம் வரை பத்து நாட்கள் பல வண்ண பூக்களால் கோலமிட்டு வரவேற்கிறார்கள்..ஹஸ்தம் என்பதையே அத்தம் என்று சொல்வது அவர்களின் சொலவடை.. இதுவே அத்தப்பூ கோலம் என ஆயிற்று..இன்று மஹாபலி வருகிறார்..கோலாகல வரவேற்பிற்கு மலையாளிகள் தயாராக ஜாதி "மத" பாகுபாடின்றி புத்தாடை உடுத்தி பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட உள்ளார்கள்... HAPPY ONAM..

SWAMIYE SARANAM IYYAPPA


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. ஓணம் பண்டிகை நல்வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .. வெள்ளிக்கிழமையாகிய இன்று வரலக்ஷ்மி விரத தினமும் ஆகும் .. வரங்களை அள்ளித்தருபவள் அன்னை வரலக்ஷ்மி எனவே இந்த விரதத்துக்கு ‘ வரலக்ஷ்மி விரதம் ‘ என்று பெயர் .. 
அன்னையின் அருட்கடாக்ஷ்ம் அனைவரும் பெற்று இன்புற்றுவாழ வாழ்த்துகிறேன் .. வணங்குகின்றேன் ..
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே ! 
விஷ்ணு பத்னீ ச தீமஹி ! 
தந்நோ லக்ஷ்மீ ப்ரசோதயாத் !!
வரலக்ஷ்மி விரதம் மேற்கொள்ளும் நாள் முழுவதும் அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம் .. மஹாலக்ஷ்மி ஸ்தோத்திரம் 
போன்றவற்றை பாராயணம் செய்யவேண்டும் .. இவ்வாறு பக்திசிரத்தையுடன் வரலக்ஷ்மி விரதம் மேற்கொள்வதனால் 
மாங்கல்யபலம் .. செல்வச்செழிப்பு .. ஐஸ்வர்யங்கள் கிடைத்து வாழ்வு மேலோங்கும் என்பது ஐதீகம் ..
மஞ்சள் கயிறு மங்கலத்தின் அறிகுறி .. அஷ்டலக்ஷ்மிகளுடன் வரலக்ஷ்மியையும் சேர்த்து ஒன்பது லக்ஷ்மிகள் என்று சாஸ்திரம் சொல்கிறது .. எனவே ஒன்பது நூல் இழைகளால் ஆன ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்புக்கயிறை (சரடை) பூஜையில் வைத்து பூஜையின் முடிவில் மஞ்சள் கயிற்றை (சரடு) வலது மணிக்கட்டில் பக்திசிரத்தையுடன் கட்டிக் கொள்ளவேண்டும் ..
அன்னையைப் போற்றுவோம் ! அன்பு .. அமைதி .. புகழ் .. இன்பம் .. வலிமை ஆகிய அன்னையின் அனைத்து சக்திகளையும் பெற்றிடுவோம் ! ஓம் சக்தி ஓம் ! “ தீர்க்கசுமங்கலி பவ “ .. 
வாழ்க வளமுடனும் .. நலமுடனும் ..
GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED 
' VARALAKSHMI VRATHAM ' ..MAY ALL THE JOYS THAT LAKSHMI PUJA BRINGS BE WITH YOU TODAY AND IN ALL YOUR TOMORROWS .. 
" JAI MATA DI "
..

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வியாழக்கிழமையாகிய இன்று சிவபெருமானுக்குரிய பிரதோஷ விரதமும் சேர்ந்துவருவதால் மாலையில் பிரதோஷவேளையாகிய 4.30 - 6.00 மணிவரையிலான வேளையில் ஆலயம் சென்று சிவபெருமானையும் .. நந்தீஸ்வரரையும் தரிசிப்பது சாலச்சிறந்தது .. இன்றைய நாளில் தங்களனைவருக்கும் மனநலமும் .. உடல்நலமும் ஆரோக்கியமாகத் திகழ்ந்திடவும் .. பரமசிவனைப் பிரார்த்திக்கின்றேன் .. ஓம் தத்புருஷாய வித்மஹே ! மஹாதேவாய தீமஹி ! தந்நோ ருத்ரப் ப்ரசோதயாத் !! பிரதோஷ விரதம் சைவ மக்களால் கடைப்பிடிக்கப்படும் சிவவிரதங்களில் ஒன்று .. இது ஒவ்வொரு மாதமும் வளர்பிறை .. தேய்பிறை ஆகிய இரண்டு பட்சங்களிலும் வருகின்ற திரயோதசித் திதியில் சூரியன் மறைவதற்கு முன் மூன்றேமுக்கால் நாழிகையும் .. பின் மூன்றேமுக்கால் நாழிகையும் உள்ள பிரதோஷ காலத்திற் சிவபெருமானைக்குறித்து அனுஷ்டிக்கப்படும் விரதமாகும் .. நோய்களின் துயர்மடிய பிரதோஷவழிபாடு சிறந்தது .. பிரதோஷவேளையில் ( மாலை 4.30 - 6.00 மணிவரை) பரமசிவனையும் ..நந்தீஸ்வரரையும் வணங்கி வழிபட்டால் மற்றநாட்களில் ஏற்படும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம் என்பது நம்பிக்கை ..பிரதோஷ விரதம் அனுஷ்டிப்போர் பகல் முழுவதும் உபவாசமிருந்து பிரதோஷவேளையாகிய சூரிய அஸ்தமனத்தின்போது சிவாலயங்களில் சிவதரிசனம் செய்தபின் போசனம் செய்தல் வேண்டும் .. மூவுலகிற்கும் ஏற்படவிருந்த பேரழிவை தன்னகத்தேயிருத்திய சிவபெருமானைப் போற்றிடுவோம் ! அனைத்து தோஷங்களிலும் இருந்தும் நிவர்த்தி பெறுவோமாக! “ ஓம் நமசிவாய “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY AND MAY LORD SHIVA BLESS YOU ON THIS " PRADOSHA DAY " WITH GOOD HEALTH .. WEALTH .. AND PROSPERITY .. " OM NAMASHIVAAYA " .. JAI BHOLE NATH ..swamiye saranam iyyappa

The illuminated statue of Lord Hanuman at Karol Bagh in New Delhi

Good Evening to all Korukonda Laksmi Narasimha swami temple is 25 kms from Rajahmundry,Andhra. The deity of this temple is Swayambhuvu..This temple was built around 750-800 years back. This temple is located on the hill and is one of the best good looking temples.

Swamiye Saranam Iyyappa,.....Guruve Saranam


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய்க்கிழமையாகிய இன்று சிவபெருமானுக்கு உகந்த ஆவணி மூலம் அனுஷ்டிக்கும் நாளாகும் .. தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாக அமைந்திட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஆவணிமூலம் என்பது ஆவணி மாதத்து மூலநட்சத்திரத்திலே 
சிவபெருமானைப்போற்றி எடுக்கப்படும் விழாவாகும் .. ஆவணி மூல நாளிலே .. மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் பெருமான் திருவிளையாடல் மக்களை மிகவும் கவர்வதாகும் ..
செம்மணச் செல்விக்கான வரம்புப்பங்கினைத் தாம் அடைப்பதாக அவரிடம் பிட்டினைக் கூலியாகப் பெற்று கூலிக்குரிய வேலையைச் செய்யாது நின்று சொக்கன் பிரம்படிப்பட்ட திருவிளையாடலே ஆவணி மூலத்திற்குரியது
மதுரையிலே இவ்விழா விமரிசையாக கொண்டாடப்படுகின்றது .. பிட்டுத்திருவிழா என்றும் அங்கு இதனைக் கூறுவர் .. சுந்தரேசர் பொற்கூடையுடனும் ..
பொன்மண்வெட்டியுடனும் .. இந்தவிழா நாளில் வைகை ஆற்றிலிருந்து பக்தர்கள் சூழ கோயிலுக்கு எழுந்தருளுவார் ..
சிவபெருமான் மாணிக்கவாசகருக்காக நரிகளைப் பரிகளாக்கித் திருவிளையாடல் புரிந்ததும் இந்த ஆவணி மூல நட்சத்திரத்திலே ஆகும் ..
தென்னாடுடைய சிவமே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! இன்று காலையில் சூரியன் உதயமாகும்போதே ஆக்ரோஷமாக வெப்பத்தைச் சிந்தினால் அந்த ஆண்டுமுழுவதுமே வெய்யில் கடுமையாக இருக்கும் .. மேகமூட்டத்துடன் வெப்பம் குறைவாக இருந்தால் சிறப்பான சீதோஷணம் காணப்படும் .. சுந்தரேஸ்வரப் பெருமானுக்கு பட்டம் சூட்டி அவரது கருணையால் சீதோஷணம் நல்லபடியாக இருக்கவேண்டும் என வேண்டி .. மழைவளமும் .. நன்றாக இருக்க ஆவணி மூலத்தன்று சிறந்த சீதோஷணம் கிடைக்க பிரார்த்திப்போமாக .. “ ஓம் நமசிவாய “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் ..
GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. MAY HE SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH AND PROSPERITY .. " JAI BHOLE NATH "..
AAVANI MOOLAM FESTIVAL IS DEDICATED TO LORD SHIVA .. THE MOST IMPORTANT FESTIVAL AND RITUALS ARE HELD TODAY AT THE MADURAI MEENAKSHI TEMPLE .. THE FESTIVAL IS BASICALLY DEDICATED TO THE REENACTMENT OF A FAMOUS INCIDENT INVOLVING LORD SHIVA .. ALSO KNOWN AS PUTTU FESTIVAL .. AND AN IMPORTANT LEGEND IN WHICH LORD SHIVA SENDS HIS GANAS AS HORSES TO KEEP THE PROMISE OF SAINT MANIKKAVASAGAR IS BELIEVED TO HAVE HAPPENNED ON THIS AAVANI MOOLAM DAY .. 
" OM NAMASHIVAAYA

Good evening to all Sun set view of Mangalagir Lord Lakshmi Narasimha Swami Temple , Guntur District, Andhra Pradesh

SWAMIYE SARANAM IYYAPPA.....SARANAM SARANAM


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
திங்கட்கிழமையாகிய இன்று சிவபெருமானுக்குரிய சோமவார விரதமும் வருவதால் சிவாலயம் சென்று சிவனைத் தரிசிப்பது சாலச்சிறந்தது .. இன்றைய நாள் தங்களனைவருக்கும் ஓர் வெற்றிகரமான நன்னாளாக அமைந்திட வாழ்த்துகிறேன் .. சிவனைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ர ப்ரசோதயாத் !! 

சோமவார விரதத்தைச் சந்திரன் அனுஷ்டித்ததாகவும் .. அதன் காரணமாக சோமவார விரதம் எனப் பெயர் வந்ததாகவும் சொல்வர் .. ‘ சோமன் ‘ என்றால் ‘ சந்திரன் ‘ .. அவனை தலையில் சூடிய சிவனே “ சோமசுந்தரர் “ என்பர் .. 

கணவனும் .. மனைவியும் ஒற்றுமையுடன் .. தீர்க்காயுளுடன் வாழவும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம் .. இந்நாளில் தம்பதி சமேதராய் சிவன்கோயிலுக்குச் சென்று வழிபட்டு வரவேண்டும் .. வாழ்வில் தவறு செய்யாத மனிதர்களே இல்லை .. இதற்காக மனம் வருந்துவோர் இந்த விரதத்தை அனுஷ்டித்து இனி அவ்வாறு தவறு செய்யாமல் இருக்க உறுதி எடுத்தால் அவர்களது பாவங்கள் அனைத்தும் களையப்படும் என்பது நம்பிக்கை ..

பதவி உயர்வுக்காகவும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம் .. பகலில் ஒருபொழுதோ அல்லது இரவிலோ உபவாசம் 
(சாப்பிடாமல்) இருக்கவேண்டும் .. 

சிவனைப்போற்றுவோம் ! அனைத்திலும் வெற்றி பெறுவோமாக ! வெற்றி நிச்சயம் ! 
“ ஓம் நமசிவாய “ வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. MAY LORD SHIVA REMOVE ALL THE OBSTACLES AND SHOWER YOU WITH BEST HEALTH .. PEACE ..
AND GOOD FORTUNE .. " OM NAMASHIVAAYA " .. "JAI BHOLE NATH" ..

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. இன்று ‘ முதலாம் ஆவணி ஞாயிறு ‘ .. ஞாயிறு என்றாலே சூரியனைக் குறிக்கும் .. ஆவணி மாதத்தில் ஒவ்வொரு ஞாயிறு காலை 6 - 7 மணிவரை சூரியஹோரையே இருக்கும் .. இந்நேரத்தில் சூரியநமஸ்காரம் செய்வது சாலச்சிறந்தது .. ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருந்தால் அச்சம் அகலும் .. கண்சம்மந்தமான நோய்கள் குணமடையும் ..என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர் .. தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாகவும் .. நல் ஆரோக்கியத்திற்கும் சூரியபகவானைப் பிரார்த்திக்கின்றேன் .. ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே ! பாஸஹஸ்தாய தீமஹி ! தந்நோ சூர்யஹ் ப்ரசோதயாத் !! ஒளிதரும் பொருட்களில் நான் கதிர்நிறைந்த ஞாயிறு என்கிறார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் .. கதிர் நிறைந்த ஞாயிறு என்பது ஆயிரம் ஒளிக்கதிர்களை உடைய சூரியனைக் குறிக்கும் .. முறைப்படி செய்யும் சூரிய நமஸ்காரத்தால் சருமநோய்களிருந்து குணம் பெறலாம் .. எந்த மந்திரம் தெரியாவிட்டாலும் .. காலை எழுந்தவுடன் குளித்து கிழக்குநோக்கி .. “ ஓம் நமோ ஆதித்யாய புத்திர் பலம் தேஹிமோ சதா “ என்று கூறி மூன்று முறை வணங்கினால் ஆயிரம் பலன்களை ஆதவன் அள்ளித்தருவான் .. சூரியனைப் போற்றுவோம் ! அவரது அருட்கடாக்ஷ்த்தையும் பெற்றிடுவோம் ! “ ஓம் சூர்யாய நமஹ “ .. வாழ்க வளமுடனும் நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SURYA BAGAVAN .. MAY HE SHOWER YOU WITH .. BEST HEALTH .. WEALTH AND HAPPINESS .. " JAI SURYA DEV " ..SWAMIYEE SDARANAM IYYAPPA....GURUVESARANAM

SWAMIYE SARANAM IYYAPPA.....PANVEL BALAGAN PATHAM POTRI

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வெள்ளிக்கிழமையாகிய இன்று தங்கள் அனைவருக்கும் அன்னை மஹாலக்ஷ்மியின் அருட்கடாக்ஷம் பெற்று .. 
ஆயுள் .. ஆரோக்கியத்துடன் குன்றாத செல்வங்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் மஹாலக்ஷ்மீ ச வித்மஹே ! 
விஷ்ணு பத்னீ ச தீமஹி !
தந்நோ லக்ஷ்மீ ப்ரசோதயாத் !!
அன்னை மஹாலக்ஷ்மி நிதர்சனமானவள் .. நித்ய சுமங்கலி ..
அண்ட ப்ரபஞ்சம் எங்கிலும் வியாபித்திருப்பவள் .. அப்படியிருந்தும் மக்களின் நல்வாழ்வுக்கென மண்ணுலகில் மங்களமாக மக்களுடன் கலந்திருப்பவள் ..
இந்தபூமியே அவள்தான் .. ஒவொருமனிதனிடமும் கல்வியாக
பொன் .. பொருள் .. என .. வளர்செல்வமாக ... நெஞ்சுரமாக நல்வாழ்வில் விளையும் மகிழ்ச்சியாக ..கூடிவாழ்வதில் மலரும் அன்பாக .. நிறைவாழ்வில் புகழாக .. இறைவாழ்வில் நித்யசாந்தியாக .. பொலிபவள் அவளே !
சர்வமங்களங்களையும் அள்ளித்தரும் அன்னையைப் போற்றுவோம் ! சகல ஐஸ்வர்யங்களையும் பெற்றிடுவோம் !
“ ஓம் சக்தி ஓம் “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் ..
GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED FRIDAY WITH THE BLESSINGS OF GODDESS LAKSHMI .. MAY 
" MAA LAKSHMI " BRING ETERNAL BLISS AND ILLUMINATE YOUR LIFE WITH .. HAPPINESS .. AND PROSPERITY .. ' JAI MATA DI ' ..
 

PANVEL BALAGAN SARANAM.....GURUVE SARANAM...IYYAPPA SARANAM SARANAM

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று ‘ கருட பஞ்சமி ‘ வருவதால் .. விரதமிருந்து மஹாவிஷ்ணுவையும் .. கருடபகவானையும் துதித்து தங்களனைவருக்கும் சகல சௌபாக்கியங்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ கருடபகவான் அருள்புரிவாராக .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே !
சுவர்ணபட்சாய தீமஹி ! 
தந்நோ கருட ப்ரசோதயாத் !! 

பெருமாளின் வாகனமாகவும் .. கொடியாகவும் விளங்கும் கருடனுக்கு உகந்த விரதம் “ கருட பஞ்சமியாகும் “ .. இன்றைய தினத்தில் கருடவழிபாடும் .. விஷ்ணுவழிபாடும் கனிந்த வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கும் .. 

கருடனைப்போல பலசாலியும் .. புத்திமானாகவும் .. வீரனாகவும் மைந்தர்கள் அமைய அன்னையர்கள் கருடபஞ்சமியன்று ஆதிசேஷன் விக்கிரகம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்கின்றனர் .. 

வினதையின் மைந்தன் .. கருடனின் மாற்றந்தாய் கத்ருவின் மைந்தர்களான நாகங்கள் செய்த சூழ்ச்சியினால் வினதை அடிமையாக நேர்ந்தது .. அன்னையின் அடிமைத் தளையைக் களைய கருடன் தேவலோகம் சென்று அமிர்தம் கொண்டுவர 
நேர்ந்தது .. பெருமாளுடன் கருடன் போரிடும் வாய்ப்பும் வந்து .. பெரிய திருவடியாக எப்போதும் பெருமாளைத் தாங்கும் பாக்கியமும் கிட்டியது .. 

எனவே கருட பஞ்சமியன்று ஆதிசேஷன் விக்கிரகம் வைத்து பூஜை செய்யப்பாடுவதாக ஐதீகம் .. கருடனின் உடலில் எட்டு ஆபரணமாக விளங்குபவையும் அஷ்டநாகங்களே ! நோன்பிருந்து கௌரி அம்மனை நாகவடிவில் ஆராதிக்க வேண்டும் .. அடிக்கடி கெட்டகனவு ஏற்படுதல் .. பயம் பாம்பு எதிர்படுதல் .. போன்றவைகளால் சிரமப்படுபவர்கள் இந்த விரதம் அனுஷ்டித்தால் துன்பத்திலிருந்து விலகுவார்கள் என்று ஐதீகம் ..

கருடபவானைப்போற்றுவோம் ! நன்மைகள் பலநல்கும் கருட பஞ்சமியை அனுஷ்டித்து நலம்பல பெறுவோமாக ! 
“ ஓம் கருடபகவானே நமோஸ்துதே “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED 
' GARUDA PANJAMI DAY ' .. AND MAY GARUDA BAGAVAN BLESS YOU 
FOR A BRIGHT FUTURE .. " JAI GARUDA BAGAVAN " .

 

சுவாமியே சரணம் ஐயப்பா!! பன்வேல் பாலகன் நாமம் போற்றி!! குருவின் பாதார விந்தங்கள் போற்றி! போற்றி!! Swamiye Saranam Iyyappa!Panvel balagane saranam Iyyappa!! Guruve Saranam! Saranam



அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையாகிய இன்று சிவனுக்கு உகந்த நாளாகிய ..
’ சோமவார விரதத்தை’ அனுஷ்டிக்கும் நாளாகும் .. சிவாலயம் சென்று சிவனைத் தரிசித்து வந்தால் நாம் செய்யும் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிட்டும் .. தங்களனைவருக்கும் ஏற்பட்ட அனைத்து தடைகளும் நீங்கி வெற்றிபெற வாழ்த்துகிறேன் .. சிவபெருமானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ர ப்ரசோதயாத் !! 

‘ சோமன் ‘ என்றால் உமையுடன் கூடிய சிவன் என்று பொருள்படும் ‘ .. அத்தோடு சந்திரன் என்ற பொருளும் உண்டு ..
தட்சனின் சாபத்தால் நாளுக்கு நாள் தேய்ந்து வருவதைக் கண்ட
சந்திரன் மிகவும் கவலையுற்றான் .. சிவனைத் தஞ்சம் அடைந்ததால் சிவன் மனமிரங்கி சந்திரனைத் தனது சடைமுடியில் வைத்துக் கொண்டார் .. இதனால் சந்திரனின் சாபம் பாதியாகக் குறைந்தது .. மாதத்தில் 15 நாட்கள் தேய்வதும் .. வளர்வதுமாக அவனது சாபம் மாறுதல் பெற்றது ..
சந்திரனும் இவ்விரதத்தை அனுஷ்டிப்பவர்களுக்கு நற்கதியைக் கொடுக்கவேண்டும் என்று சிவனிடம் வரம் கேட்டான் .. அவ்வாறு வரம் அளித்து அருளினார் ஈசன் .. 

சிவனைப்போற்றுவோம் ! அனைத்து சோதனைகளையும் 
வென்றிடுவோம் ! வாழ்வில் வெற்றி நிச்சயம் ! 
“ ஓம் நமசிவாய “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED MONDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. 
MAY HE REMOVE ALL THE OBSTACLES ON YOUR PATH AND SHOWER YOU WITH HAPPINESS AND PROSPERITY .. " OM NAMASHIVAAYA " .. 
' JAI BHOLE NATH ' ..

SWAMIYEESARANAM IYYAPPA...GURUVE SARANAM...

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று உலகமக்களைக் காக்க சக்தியாக அம்பாள் உருவெடுத்த நாளாகும் .. ஆடிப்பூரம் என்னும் நன்னாள் .. அன்னையைப் பிரார்த்தித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் இனிய நன்னாளாக அமைந்திட வாழ்த்துகிறேன் .. வணங்குகின்றேன் ..

ஓம் ஸர்வஸம்மோஹின்யை வித்மஹே !
விச்வ ஜனன்யை தீமஹி !
தந்நஸ் சக்தி ப்ரசோதயாத் !! 


ஆடிப்புரம் என்னும் விழா ஆடிமாதத்திலே பூரநட்சத்திரம் உச்சத்தில் இருக்கும்போது கொண்டாடப்படுவது .. இது தேவிக்குரிய திருநாளாகும் ..இந்நாளில் தான் உமாதேவியும் தோன்றியதாக கூறப்படுவதுண்டு .. சித்தர்களும் .. யோகிகளும் இந்தநாளில் தவத்தை துவக்குவதாக புராணங்கள் கூறுகின்றன 

அனைத்து உலகத்தையும் படைத்தும் காத்தும் விளையாடும் அகிலாண்டகோடி அன்னைக்கு மஞ்சள்காப்பு .. சந்தனக்காப்பு .. குங்குமக்காப்பு நடத்துவார்கள் .. அன்னைக்கு வளைகாப்பு நடக்கும்நாள் தான் ஆடிப்பூரம் .. அன்னை உள்ளம் மகிழ்ந்து பக்தர்கள் அனைவருக்கும் தன் அருளை வழங்கும் நாள் .. பல்வேறு விதங்களில் அன்னையைக் கொண்டாடும் நாள் திருவாடிப்பூரம் .. 

மாலை நேரங்களில் அன்னைக்கு வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டு அந்த வளையல்களை பெண்மணிகளுக்கு பிரசாதமாக வழங்கப்படுகின்றன .. 

ஆண்டாள் அவதரித்த நட்சத்திரம் பூரம் .. ஆடிமாதத்தில் துளசித்தோட்டத்தில் ஆண்டாள் அவதரித்தாள் .. அரங்கனுக்குச்
சூட்டவேண்டிய ஆரத்தினை தானே சூடிக்கொண்டு ஆடியில் அழகுபார்த்தாள் ஆண்டாள் .. தான் சூடிக்களைந்த மாலையைப் பெருமாளுக்கு அளித்து வந்ததால் .. “ சூடிக்கொடுத்த சுடர்க்கொடி” என்று திருநாமம் பெற்றாள் .. அப்போது அந்தக்கண்ணாடியில் அரங்கனாகவே தெரிந்தாள் அவள் .. தானே அவனாக பாவித்து மகிழ்ந்த ஆண்டாளின் அவதார தினமாகிய இன்று அன்னையைப் போற்றுவோம் .. அன்னையின் திருவருளும் .. அருட்கடாக்ஷ்த்தையும் பெற்றிடுவோம் .. “ ஓம் சக்தி ஓம் “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF GODDESS ' MAA SHAKTHI ' 
MAY DEVI MAATAA SHOWER YOU WITH PEACE AND PROSPERITY .. 

" JAI MATA DI " ..

SWAMIYE SARANAM IYYAPPA

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. 
‘ இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்களும் ‘ உரித்தாகட்டும் .. 
சனிக்கிழமையாகிய இன்று சிவாலயம் சென்று சிவபெருமானைத் தரிசிப்பது சாலச்சிறந்தது .. இன்றைய தினம் 
தாங்கள் செய்யும் அனைத்து காரியங்களும் எவ்வித தடங்களுமின்றி வெற்றியளிக்க வாழ்த்துகிறேன் .. வணங்குகின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ர ப்ரசோதயாத் !!
“ நமசிவாய “ என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை தினமும் ஜபித்து வந்தாலே வாழ்வில் எல்லா கஷ்டங்களும் நீங்கிவிடும் .. சிவன் கோவிலுக்குச் சிறிதளவு பணிசெய்தாலும் மகத்தான பலன்கிட்டும் .. சிவலிங்கத்திற்கு வலைகட்டி பாதுகாத்த சிலந்தி .. மறுபிறவியில் ‘ கோட்செங்கட்சோழனாகப் பிறந்து தமிழகத்தில் பலமாடக்கோயில்களைக்கட்டித் திருப்பணி செய்து புகழ்பெற்றான் .. சிவன்கோயில் விளக்கு எரிய தூண்டிவிட்ட எலி மறுபிறவியில் சிவனருளால் ’மகாபலி சக்ரவர்த்தியாகப் ‘ பிறந்தான் ..
சிவன் நாமத்திற்கு அப்படியொரு மகிமை .. “ சிவ .. சிவ “ .. 
என்று தினமும் மனதால் நினைத்து உச்சரித்தாலே போதும் 
சகலபாவங்களும் நீங்கி .. மனம் தூய்மை அடையும் ..
சிவனைப்போற்றுவோம் ! அவரது அருட்கடாக்ஷ்த்தைப் பெற்றிடுவோம் ! “ ஓம் நமசிவாய “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் ..
GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SATURDAY AND BEST WISHES FOR A ' HAPPY INDEPENENCE DAY ' TOO .. MAY LORD SHIVA BLESS YOU AND SHOWER HIS BLESSINGS WITH GOOD HEALTH .. WEALTH .. AND PROSPERITY .. 
" OM NAMASHIVAAYA " ..

சுவாமியே சரணம் ஐயப்பா!! பன்வேல் பாலகன் நாமம் போற்றி!! குருவின் பாதார விந்தங்கள் போற்றி! போற்றி!! Swamiye Saranam Iyyappa!Panvel balagane saranam Iyyappa!! Guruve Saranam! Saranam



அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. இன்று கடைசி ஆடிவெள்ளிக்கிழமையும் .. ஆடிஅமாவாசையும் சேர்ந்து வருவதால் ஆலயம் சென்று பித்ருதர்ப்பணம் செய்வது சிறந்தது .. அத்துடன் அன்னை மஹாலக்ஷ்மியையும் தரிசிப்பது சாலச்சிறந்தது ..
அனைவருக்கும் அன்னையின் அருட்கடாக்ஷ்ம் பரிபூரணமாகக் கிடைத்து சகல ஐஸ்வர்யங்களையும் பெறுவீர்களாக ..
நமஸ்தேஸ்து மஹாமாயே ! ஸ்ரீபீடே ஸுரபூஜிதே !
சங்க சக்ர கதா ஹஸ்தே ! மஹாலக்ஷ்மி நமோஸ்துதே !!
மாதந்தோறும் வரும் அமாவாசையன்று இந்துக்கள் தனது முன்னோர்களை வழிபாடு செய்வது வழக்கம் .. ஆடி மற்றும் தை அமாவாசையில் தர்ப்பணம் செய்தால் முன்னோர்வழிபாடு முன்னேற்றம் தரும் என பெரியவர்களால்
கூறப்படுகிறது ..
நமது வாழ்வில் தினமும் ஏதாவதொரு பாவத்தை செய்யும் சூழ்நிலை இயல்பாகவே அமைந்து வருகிறது .. தெரிந்தும் .. தெரியாமல் செய்யும் பாவங்கள் என்று அவை நீண்டுகொண்டே போகின்றனவே தவிர குறைவதில்லை .. மனிதப்பிறவி அரியது .. நம்மை அன்புடன் பேணி .. அருமையாக வளர்த்து ஆளாக்குகுன்றனர் பெற்றோர் .. எவ்வித சுயநலமின்றி பாசத்தைக் கொட்டி பராமரிக்கும் தந்தையரை சரிவர புரிந்துகொண்டு தங்கள் கடமைகளை செய்பவர்கள் வெகுசிலரே ! நமக்கு நல்வாழ்வு அளித்துச் சென்ற பித்ருக்களுக்கு பித்ரு தர்ப்பணபூஜையை செய்யாமல் தவறவிடுகின்றனர் சிலர் .. பித்ருக்களை திருப்தி செய்வதற்குத்தான் தர்ப்பணபூஜை ..
தேவலோக மூலிகையான தர்ப்பையால் எள்வைத்து அனைவரும் தர்ப்பணம் செய்து மூதாதையரை மகிழ்விப்பது கடமை .. மிகபுராதணமான நூல்களும் .. உபநிஷத்துக்களும் பித்ருபூஜையின் மகத்துவத்தைச் சிறப்பாக கூறியுள்ளன ..
இந்நாளில் எந்த ரூபத்திலும் பித்ருக்கள் நம்மிடையே வருவார்கள் .. அதனால் அன்றைய தினம் நம்வீடு தேடிவருபவர்களுக்கு இல்லை என்று கூறாமல் அன்னமிடுவது அவசியம் .. தினமும் காகத்திற்கு ஒருபிடி அன்னம் வைத்துவிட்டு .. பிறகு உண்பது பலவித தோஷங்களையும் போக்கும் .. காகத்தின்மூலம் அவை பித்ருக்களுக்குப் போய்ச்சேரும் ..
நம்மை ஆசீர்வதித்துக் காப்பாற்ற பித்ருக்கள் எப்போதும் தயாராக உள்ளபோது நாம் அவர்களை மறக்கலாமா ? .. முன்னோர்களை வழிபட்டு முன்னேற்றமடைவோமாக .. 
“ பித்ரு தேவோ பவ “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் ..
GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED FRIDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF GODDESS LAKSHMI AND OUR BELOVED ANCESTORS ON THIS AMAVASYA DAY .. 
" PITHRU DEVO BAVA "

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM



அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வியாழக்கிழமையாகிய இன்று நம் அனைவராலும் போற்றித் துதிக்கப்படும் குருநாதராகிய ஷீரடி பாபாவுக்கும் உகந்த நாளுமாகும் .. அவரைத் துதித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் இனிய நன்னாளாகவும் .. குருவருளும் .. திருவருளும் கிடைத்திட பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் ஷீரடிவாஸாய வித்மஹே !
சச்சிதானந்தாய தீமஹி !
தந்நோ சாய் ப்ரசோதயாத் !! 


அகன்று ஆழ்ந்த எல்லையற்ற ஒரு பெருங்கடல்போன்று 
ஷீரடி பாபாவின் வரலாறு உள்ளது .. அனைவரும் அதனுள் ஆழ்ந்து மூழ்கி .. ஞானம் .. பக்தி .. என்ற நல்முத்துக்களை 
எடுக்கலாம் .. நல்லுணர்வில் ஊறிக்கிடக்கும் மக்களுக்கு அவற்றைக் கொடுக்கலாம் .. பாபாவின் அறிவுரைகள் மிகவும் அற்புதமானவை .. இவ்வுலக வாழ்வின் துன்பப் பெருஞ்சுமைகளைச் சுமந்து கொண்டிருப்பவர்கள் .. கவலையால் பீடிக்கப்பட்டோர்கள் .. ஆகியவர்களுக்கு 
மன அமைதியையும் .. மகிழ்ச்சியையும் அவை அளிக்கின்றன. 

வேத அறிவையொத்த விறுவிறுப்புள்ளதும் .. அறிவூட்டுவதுமான ஷீரடி பாபாவின் இந்த அறிவுரைகள் எல்லாம் கேட்கப்பட்டு நற்சிந்தனை செய்யப்பட்டால் .. அடியவர்கள் கோரும் பிரம்மத்துடன் ஐக்கியமாதல் .. அஷ்டாங்கயோகம் .. தியானப்பேரின்பம் .. முதலியவற்றைப் பெறுவர் .. 

பாபாவைப் போற்றுவோம் .. அவரது அருட்கடாக்ஷ்த்தைப் பெற்றிடுவோம் .. “ ஓம் சாய் ராம் “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY .. WITH THE BLESSINGS AND GUIDANCE OF SHIRDI SAI ..
MAY YOU BE BLESSED WITH .. SUCCESS .. PROSPERITY .. AND HAPPINESS .. " OM SAI RAM

ADI KRITHIGAI .....ALANGARANGAL ARPUTHAM...





Swamiye Saranam Iyyappa...Guruve saranam...

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று பிரதோஷ விரதம் வருவதால் .. பிரதோஷ வேளையாகிய 4.30 - 6.00 மணிவரையிலான மாலையில் சிவாலயம் சென்று சிவனுக்கு நடக்கும் அபிஷேகங்களை நந்தீஸ்வரரின் இருகொம்புகளுக்கிடையில் 
கண்டு தரிசிப்பது அனைத்து தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தையும் பெறுகிறார்கள் .. 

ஏழ்மை ஒழியவும் .. நோய் தீரவும் .. கெட்ட நோய்களின் துயர் மடியவும் .. பிரதோஷவழிபாடு சிறந
்ததாகும் .. 

தங்கள் அனைவருக்கும் இன்றைய நாள் ஓர் இனிய நன்னாளாக அமைந்திட சிவபெருமானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹா தேவாய தீமஹி !
தந்நோ ருத்ரப் பிரசோதயாத் !! 

” ஓம் நமசிவாய “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A " BLESSED PRADOSHAM " .. WITH THE BLESSINGS AND GUIDANCE OF 
LORD SHIVA .. MAY HE REMOVE ALL THE SINS AND SHOWER YOU HIS CHOICEST GRACE AND BLESSINGS ON YOU FOREVER .. 
" OM NA
MASHIVAAYA

Swamiye sarnam iyyappa......guruve saranam அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஆடிச்செவ்வாய் நான்காம் வாரமுமாகிய இன்று அன்னை துர்க்காதேவியைத் துதித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் வெற்றிமிகு நன்னாளாக அமைந்திட அன்னையைப் பிரார்த்திக்கின்றேன் .. ஓம் நாராண்யை வித்மஹே ! துர்க்காயை தீமஹி ! தந்நோ கௌரீ ப்ரசோதயாத் !! ஆடி மாதம் பிறந்துவிட்டால் காற்று அடிக்குமோ அடிக்காதோ .. அம்மன் கோயில்களில் எல்லாம் தீச்சட்டி .. முளைப்பாரி .. தீமிதித்தல் .. வீதி உலா .. என பக்தி களைகட்டிவிடும் .. தெய்வீகமணம் கமழும் மாதமாக ஆடிமாதம் திகழ்கிறது .. அம்மன் .. அம்பாள் .. சக்தி .. ஸ்தலங்களில் மிகவும் சிறப்புவாய்ந்ததாக பூஜைகள் .. ஹோமங்கள் .. உற்சவங்கள் .. அபிஷேகங்கள் .. பூச்சொரிதல் .. போன்றவை விமரிசையாக நடக்கும் .. ஆடி ஞாயிறு .. செவ்வாய் .. வெள்ளி மிகவும் சிறப்புமிக்கவை .. கோயில்களில் மட்டுமன்றி வீடுகளிலும் விரதம் இருந்து வேப்பிலைதோரணம் கட்டி அம்மனை வழிபட்டு நேர்த்திகடன்களை நிறைவேற்றி .. கூழ் ஊற்றுவார்கள் .. இந்த ஆடிமாதம் முழுவதும் அனைவரது வீட்டிலும் பக்திகமழும் .. ஸ்ரீலலிதா ஸகஸ்ரநாமம் .. அம்மன்பாடல்களைக் கேட்டோ .. படித்தோ அம்மனருளை பெற்றிடுவர் .. அன்னையைப் போற்றுவோம் ! அன்னையின் அருட்கடாக்ஷ்ம் பெற்று .. இல்லம்தோறும் மகிழ்ச்சிப் பொங்கப் பிரார்த்திக்கின்றேன் .. “ ஓம் சக்தி ஓம் “ .. வாழ்க வளமுடனும் நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF GODDESS DURGA .. MAY HER COUNTLESS BLESSINGS ILLUMINATE YOUR LIFE WITH GOOD HEALTH .. STRENGTH .. AND HAPPINESS .. " JAI MATA DI " ..

Swamiye Saranam Iyyappa....Guruve Saranam.....அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையாகிய இன்று ஏகாதசி விரதமும் சேர்ந்து வருவதால் ஆலயம் சென்று மஹாவிஷ்ணுவைத் தரிசிப்பது சாலச்சிறந்தது .. ஆடிமாத தேய்பிறை ஏகாதசித் திதியை ‘ யோகிணி ஏகாதசி ‘ என்பர் .. ஆடிமாதம் என்பதால் அம்மனையும் நினைந்து வணங்குதல் சிறப்பு .. அனைத்து நோய்களும் நீங்கி புத்துணர்வு பெறுவர் .. விளக்கும் தானம் செய்யலாம் .. என்றும் அம்மனின் அருட்கடாக்ஷ்மும் .. மஹாவிஷ்ணுவின் அனுக்கிரகமும் தங்களனைவருக்கும் கிட்டுவதாக .. ” ஓம் நமோ நாராயணா “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED MONDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD VISHNU .. MAY YOU BE BLESSED WITH GOOD HEALTH .. WEALTH .. AND PROSPERITY .. " OM NAMO NAARAAYANAA " ..