அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
ஈரேழு உலகங்களையும் .. சகல உயிர்களையும் காக்கும் கடவுள் என்ற சிறப்பு பெற்ற ஸ்ரீமன்நாராயணனைத் துதித்து தங்களனைவருக்கும் இன்றையநாள் ஓர் பொன்னாளாக மிளிரவும் .. நல்லாரோக்கியமும் .. அனைத்து தடைகளையும் கடந்து வெற்றிகரமாக அமைந்திடவும் பகவானைப் பிரார்த்திக்கிறேன் ..
ஓம் நாராயணாய வித்மஹே !
வாசுதேவாய தீமஹி !
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!
தசாவதாரமானது விஷ்ணுபகவானின் பத்து அவதாரங்களைக் குறிப்பதாகும் .. இறைவன் பூமியில் பிறப்பெடுப்பதை அவதாரம் என்கின்றோம் .. வைணவ சமயத்தின் முழுபெரும் கடவுளான பெருமாள் உலகில் அதர்மம் ஓங்குகின்றபோது பக்தர்களை காக்கவும் தர்மத்தினை நிலைநாட்டவும் .. அரக்கர்களை அழிக்கவும் அவதாரம் எடுப்பதாக வைணவர்கள் நம்புகின்றனர் .. அவ்வாறு பெருமாள் எடுத்த அவதாரங்களில் பத்து அவதாரங்கள் தச அவதாரங்கள் என்று வழங்கப்படுகின்றன ..
தசம் என்றால் பத்து என்று பொருள் .. விஷ்ணுவின் பத்து அவதாரங்களாக கூறப்படுபவை பின்வருவன ..
1- மச்ச அவதாரம் - திருமாலின் முதல் அவதாரமாகும் .. மச்சம் என்ற சமஸ்கிருத சொல் தமிழ் மொழியில் மீன் எனப்பொருள் தரும் .. இந்த அவதாரத்தில் திருமால் நான்கு கைகளுடன் மேற்பாகம் தேவரூபமாகவும் கீழ்பாகம் மீனின் உருவாகவும் கொண்டவராகத் தோன்றினார் என்று மச்சபுராணம் கூறுகிறது ..
2 - கூர்ம அவதாரம் - வைணவசமய நம்பிக்கயின்படி
திருமால் எடுத்த இரண்டாம் அவதாரம் ஆகும் .. இதில் இவர் ஆமை அவதாரம் எடுத்தார் .. இது சத்தியயுகத்தில் நடந்ததென்பது ஐதீகம் .. திருப்பாற்கடலை அசுரரும் தேவர்களும் மந்திரமேருவை மத்தாகவைத்துக் கடைகைகயில் அடியில் பிடிமானத்திற்காகத் திருமால் ஆமை உருகொண்டு மத்திற்குப்பிடிமானமாக இருந்தார் ..
(பாகவதம் - கூர்மபுராணம் )
3 - வராக அவதாரம் - விஷ்ணுவின் மூன்றாம் அவதாரம் ஆகும் .. இதில் இவர் பன்றி அவதாரம் எடுத்தார் .. பூமியைக் கைப்பற்றிக் கடலுக்கடியில் எடுத்துச் சென்ற ஹிரண்யாக்ஷ்ன் என்ற அசுரனுடன் வராக அவதாரத்தில் விஷ்ணு பல ஆண்டுகள் போர் செய்து வென்றார் என்பது ஐதீகம் ..
4 - நரசிம்ஹ அவதாரம் - விஷ்ணுவின் நான்காம் அவதாரம் ஆகும் .. இதில் இவர் சிங்கத்தின் தலையையும்
மனித உடலையும் கொண்ட நர - சிம்ம அவதாரம் எடுத்தார் .. நரசிம்மரின் உருவம் சிங்கமுகத்துடன் நகங்களோடும் .. மனித உடம்போடும் தோற்றமளிக்கிறது
பலவைஷ்ணவர்கள் நரசிம்மரை முதன்மைக் கடவுளாக வழிபடுகின்றனர் .. தனது பக்தர்களைத் தக்கதருணத்தில் வந்து காக்கும் கடவுளாக இவர் கருதப்படுகிறார் .. தன்பரம
பக்தனான பிரகலாதனை இரட்சித்து இரணியன் என்ற கொடிய அரக்கனை வதம் செய்ய எடுத்த அவதாரமே நரசிமம் என்பது ஐதீகம் ..
5 - வாமண அவதாரம் - காசிபன் .. அதிதி ஆகியோருக்கு வாமன உருவில் பிறந்து மாபலிச்சக்கரவர்த்தியை யாசித்து தானம் கேட்டு திருமால் வதைசெய்வது வாமன அவதாரம்
6 - பரசுராம அவதாரம் - ஜமத்கினி முனிவருக்கும் ரேணுகைக்கும் மகனாகப்பிறந்து பிராமணர்களைக் காக்க மறுத்த க்ஷ்த்ரிய குலத்தைப் பூண்டோட அழிக்க முற்பட்ட
அவதாரம் இது .. பரசு என்றால் - கோடாலியாகும் .. இவர் கடுந்தவம் செய்து சிவபெருமானிடம் இருந்து ஒருகோடாலியைப்பெற்றார் .. அதனால் இவர் பரசு - ராமர்
என்று அழைக்கப்படுகிறார் .. கடல் கொந்தளித்தபோது அதனை அடக்கி கொங்கணக் கடற்கரையைப் பகுதிகளைக் காத்தார் என்பது நம்பிக்கை ..
7 - ராம அவதாரம் -
8 - பலராம அவதாரம் -கிருஷ்ணரின் அண்ணனாவார் ..
இவர் பலதேவர் .. பலபத்ரர் .. ஹலாயுதர் .. என்றும் அழைக்கப்படுகிறார் .. வைணவத்திலும் .. தென்னிந்திய இந்து புராணங்களிலும் பலராமர் விஷ்ணுவின் அவதாரமாகவே கருதப்படுகிறார் .. எனினும் இவர் விஷ்ணுபடுத்திருக்கும் ஆதிசேஷனின் வடிவம் என்பதும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது .. இவர் வசுதேவருக்கும் தேவகிக்கும் மகனாகப் பிறந்ததாகக் கூறப்படுகிறது ..
9 - கிருஷ்ண அவதாரம் ..
10 - கல்கி அவதாரம் இந்துசமயத்தின் கூற்றுப்படி விஷ்ணுபகவானின் பத்தாவதும் இறுதியுமான மஹா அவதாரமாகும் .. கல்கிபகவான் கலியுகத்தில் தோன்றி அனைத்து தீயவைகளையும் அழிப்பாராவார் என்பது ஒருகூற்று .. கல்கி என்பதன் பொருள் .. காலம் .. அல்லது முடிவிலி ஆகும் ..
விஷ்ணுபகவானைப் போற்றுவோம் ! அவரது அருட்கடாக்ஷ்த்தையும் பெறுவோமாக !
“ ஓம் நமோ நாராயணாய “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..