PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM....

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD VISHNU .. MAY ALL YOUR PAST SINFUL REACTIONS .. CURSES .. DESTROYED ON THIS " YOGINI EKADASI DAY " AND BE BLESSED WITH HAPPINESS .. " OM NAMO NAARAAYANAAYA " 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. குருவருளும் .. திருவருளும் கூடிய இப்புண்ணிய நன்நாளில் ஏகாதசித் திதியும் வருவது அதிவிசேஷமே ! ஆலயம் சென்று பகவானை வழிபடுவது சாலச்சிறந்தது .. அறிந்தோ .. அறியாமலோ செய்த அனைத்து பாவங்களும் சாபங்களும் நீங்கி .. இழந்த அனைத்து செல்வங்களும் மீளப்பெற்று மகிழ்ச்சிகரமான வாழ்வு தங்களனைவருக்கும் மலர்ந்திட ஸ்ரீவிஷ்ணுபகவானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் நாராயணாய வித்மஹே ! 
வாசுதேவாய தீமஹி ! 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! 

இன்றைய ஆனிமாத தேய்பிறை ஏகாதசியை “ யோகினி ஏகாதசி “ என்றழைப்பர் .. இதனை அனுஷ்டிப்பவர்கள் அவரவரது பாவத்தின் பிரதிபலன்கள் அழிந்து மேலான முக்தியை பெறுவர் .. இந்த உலகில் அழியும் பொருட்களின்மீது பற்றுக்கொண்டு மாயை என்னும் சமுத்திரத்தின் பாதாளத்தில் மூழ்கி கிடக்கும் மனிதர்களை மீட்டு ஆன்மீகம் (பக்தி) என்னும் நாராயணன்பால் கொண்டு சேர்க்கும் நன்னாளே ஏகாதசி ! 

எடுத்தபணியை சிரத்தையுடனும் .. கவனத்துடனும் செய்யவேண்டும் .. பூஜைமுதலான தெய்வகாரியங்களில் சோம்பேறித்தனத்தையும் .. அக்கறையின்மையும் .. விட்டுவிட்டு மனதில் எப்பொழுதும் கட்டுப்பாடனும் சதாசர்வகாலமும் ஈஸ்வர சிந்தனையுடனும் இருக்கவேண்டும் .. ஏகாதசி விரதமஹாத்மியத்தைப் படிப்பதாலும் அல்லது கேட்பதாலும் பல புண்ணியபலன்களும் கிட்டும் .. 

கலியுகத்தில் கர்மவினையினால் ஏற்படும் வெண்குஷ்டம் போன்ற கொடிய ரோகங்களில் இருந்து விடுபட யோகினி ஏகாதசி அன்று பக்தி சிரத்தையுடன் பகவானின் நாமஸ்மரணையுடன் உபவாசமிருந்து விரதத்தை கடைபிடித்துவர அனைத்து நோய்களும் விலகும் .. 

பகவானைப் போற்றுவோம் ! அவரது பொற்பாதக்கமலங்களில் சரணடைவோமாக ! 
“ ஓம் நமோ பகவதே ! வாசுதேவாய நமஹ “ ..
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM

GOOD MORNING DEAR FRIENDS . WISH YOU ALL A PLEASANT DAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MAHAVISHNU .. MAY HE SHOWER YOU WITH GOOD HEALTH ... WEALTH ... AND PROSPERITY .. " OM NAMO NAARAAYANAAYA " PANVEL BALAGAN PATHAM POTRI POTRI...GURUVE SARANAM SARANAM...

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று இப்பிரபஞ்சத்தைக் காத்தருளும் ஸ்ரீமஹாவிஷ்ணுவிற்கும் உகந்தநாளுமாகும் .. தங்களனைவரும் சகல சௌபாக்கியங்களும் பெற்று நல்லாரோக்கியத்துடன் திகழ்ந்திட பன்வேல் பாலகனையும் பகவானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் நாராயணாய வித்மஹே ! 
வாசுதேவாய தீமஹி ! 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! 

” மூலம் ஆகிய ஒற்றை எழுத்தை மூன்று மாத்திரை உள் எழ வாங்கி மேலை வண்ணனை மேவுதிர் ஆகில் விணகத்தில் மேவலும் ஆமே “ ( பெரியாழ்வார் ) 

பொருள் - 
எட்டெழுத்து மந்திரத்தை மூன்றுமாத்திரை அளவு மூச்சுக்காற்றுடன் உள்ளுக்குள் இழுத்து தியானம் செய்தால் இறைவனாகிய திருமாலின் பரமபதம் கிடைக்கும் என்பது ஆழ்வாரின் அமுதமொழியாகும் .. 

வைஷ்ணவம் வெறுமனே வாழும் நெறியாக மட்டுமல்லாது இறைவனோடு பக்தனைக் கொண்டு சேர்க்கும் நெறியாகவும் இருக்கிறது .. என்று பல பெரியவர்கள் சத்தியவாக்காக சொல்வது இதனால்தான் ..

மிகவிசேஷமாக ஸ்ரீவைஷ்ணவத்தில் மட்டுமே இறைவனை பகவான் என்ற அடைமொழியில் அழைக்கிறோம் .. ஞானம் .. சக்தி .. பலம் .. ஐஸ்வர்யம் .. வீரியம் .. தேஜஸ் .. ஆகிய ஆறுவகையான குணங்களை ஒன்றாகக் கொண்டவன் என்பதே பகவான் என்ற வார்த்தையின் உண்மை பொருளாகும் .. 

இத்தைகைய பகவான் சத்யத்வம் .. ஞானத்வம் .. அநந்தத்வம் .. ஆனந்த்வம் .. அமலத்வம் என்ற உண்மை .. அறிவு .. எல்லை இல்லா நிலை .. இன்பம் .. தூய்மை .. ஆகிய வடிவோடு பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாகவும் நம்பப்படுகிறது .. இறைவனின் திருகுணங்களாக தென்கலை பிரிவினர் சொல்லும் சௌலப்யம் .. சௌசீல்யம் .. காருண்யம் ஆகியவைகளும் இங்கே சிந்திக்கத்தக்கதாகும் .. 

இவ்வளவு பெருமைவாய்ந்த திருமாலின் அருள் அமுதத்தை சாதாரண மனிதன்கூட நேருக்கு நேராக அனுபவிக்கும் ஒருமார்க்கத்தை ஸ்ரீவைஷ்ணவம் உலகுக்கு தந்துள்ளது .. அந்த அமுதம் என்னவென்றால்
“ ஓம் நமோ நாராயணாய “ என்ற எட்டெழுத்து மந்திரமாகும் .. இந்த மந்திரத்தின் ஆழ்ந்த அகன்ற விரிவான பொருளை நம்மால் சிந்திக்கமுடியாது என்றாலும் ஓரளவாவது சிந்திக்கும் தகுதியை நமக்கு நாராயணன் தந்துள்ளான் ..

இதில் வரும் ‘ ஓம் ‘ என்ற பிரணவம் மூலமந்திரம் என்பது நாம் அறிவோம் .. 
வைஷ்ணவ சித்தாந்தபடி அ.. உ .. ம் .. என்ற மூன்று எழுத்துக்களின் சேர்க்கை ஒலியே ‘ ஓம் ‘ என்பதாகும் .. 
இதனுள் இருக்கின்ற அகரம் - இறைவனையும் ..
மகரம் - உயிரையும் .. 
உகரம் - படைத்தலையும் குறிப்பதாகும் .. 

உயிரானது இறைவன் ஒருவனுக்கே அடிமை என்பதை மந்திரத்தின் இறுதி பகுதியில் வரும் ‘ நம ‘ என்ற வார்த்தையாகும் .. 
நம என்ற வார்த்தையில் 
ந - என்ற முதல் எழுத்தில் இல்லை என்ற பொருள் மறைந்திருக்கிறது .. 
மீதமுள்ள மகாரம் - உயிரைக் குறிப்பதாக அறிந்தோம் .. 
அதாவது இதன் பொருள் நானும் எனக்குரியவன் அல்ல என்பதாகும் .. 

அப்படி என்றால் நான் யார்க்கு உரியவன் ..? சந்தேகமே வேண்டாம் நான் நாராயணன் ஒருவனுக்கே அடிமை .. அவனுக்கே நான் தாசானுதாசன் .. இந்த மந்திரத்தில் மீதமுள்ள நாராயணாய என்பது இதைத்தான் சொல்லாமல் சொல்கிறது .. 

மேலும் இதில் உள்ள நார .. அயன .. ஆய .. என்ற வார்த்தைகளுக்குத் தனிதனி பொருள் உண்டு .. 
நார - என்பது நரனிடம் இருந்து தோன்றிய உயிர்களைக் குறிக்கும் .. 
அயன - என்ற சொல் - உபாயம் .. பலன் .. ஆதாரம் என்ற பலபொருள்களை தருகிறது ..
இவை இரண்டும் சேர்ந்த நாராயண என்ற சொல் உயிர்களுக்கு ஆதாரம் என்ற பொருளைக்காட்டுகிறது .. 
ஆய - என்ற பதம் பணி என்ற பொருளைக் கொண்டது .. 
அதாவது உயிர்கள் எப்போதும் இறைவனின் பணிக்காகவே உரியவைகள் என்பது இதன் அர்த்தமாகும் 

ஆக “ ஓம் நமோ நாராயணாய “ என்ற வார்த்தைகள் மனிதனின் ஆணவம் அழிகிறது .. ஆண்மை பிறக்கிறது .. ஆன்மநேய ஒருமைப்பாடு ஏற்படுகிறது .. 

திருமாலைப் போற்றுவோம் ! அவர் திவ்யபாதக் கமலங்களில் சரணடைவோமாக ! 
“ ஓம் நமோ நாராயணாய “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

சுவாமியே சரணம் ஐயப்பா. குருவே சரணம் சரணம்

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE DIVINE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA .. MAY YOU BE BLESSED WITH SUCCESS .. PROSPERITY .. AND HAPPINESS .. " OM MURUGA " 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய்க்கிழமையாகிய இன்று கலியுகவரதனாகிய கந்தப்பெருமானுக்கு உகந்த நாளுமாகும் .. தங்கள் அனைத்து கிரகதோஷங்களும் நீங்கி .. செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட எல்லாம் வல்ல முருகப்பெருமானை மற்றும் பன்வேல் பாலகனை  பிரார்த்திக்கின்றேன் .. குருவின் ஆசிகளை பிரார்த்திக்கிறேன்

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹேஷ்வர புத்ராய தீமஹி ! 
தந்நோ சுப்ரமண்யஹ் ப்ரசோதயாத் !! 

மலையேறி வந்து தன்னைத் தரிசிப்பவர்களுக்கு வாழ்வின் உச்சியை அடைந்து எப்போதும் மகிழ்ச்சியடைவார்கள் என்பதை எடுத்துக்காட்டுவதற்காக குன்றிருக்கும் இடமெல்லாம் கோயில் கொண்டவனே முருகப்பெருமான் ! 

ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழநியில் அருளும் முருகனுக்கு ஞானப்பழம் என்ற பெயருண்டு .. முருகப்பெருமான் மாலையில் ராஜ அலங்காரத்தில் காட்சி தருவார் .. இதுபோலியான உலக வாழ்வைக்குறிக்கிறது .. இவரே காலைவேளையில் ஆண்டிக்கோலத்தில் காட்சியளிப்பார் .. நேற்று இருப்பது இன்றில்லை என்பதை இந்த வடிவம் காட்டுகிறது .. 

இந்த ஞானத்தை உலகமக்களுக்கு வழங்கும் கனிபோன்று திகழ்வதால் இங்கு முருகனுக்கு ஞானப்பழம் என்ற பெயர் ஏற்பட்டது .. இதனால்தான் இங்குவந்த ஒளவையாரும் முருகனை “ பழம் நீ “ என்று அழைத்தார் .. இங்கு ஆண்டியாய் இருந்து கிடைத்ததை தனக்கென வைத்துக்கொள்ளாமல் அடியவர்களின் நலன்கருதி அவர்களுக்கே கொடுத்துவிடுகிறான் கந்தன் .. 

வேண்டுவனயாவும் வேண்டியபடி தந்தருளும் கந்தனைப் போற்றுவோம் ! அனைத்து நலன்களையும் பெற்றிடுவோமாக ! ஓம் சரவணபவாய நமஹ ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

SWAMIYE SARANAM IYYAPPPA...GURUVE SARANAM SARANAM....PANVEL BALAGANE SARANAM IYYAPPA....

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A SUCCESSFUL MONDAY AND A DIVINE ASHTAMI DAY TOO .. MAY LORD BHAIRAVA BLESS YOU AND REMOVE ALL THE OBSTACLES AND RELIEVE YOU FROM DEBTS AND PAVE AWAY FOR AN ABUNDANT INCOME .. 
" OM SHREE BHAIRAVAAYA NAMAHA " 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. தேய்பிறை அஷ்டமித் திதியாகிய இன்று மாலையில் அருகிலிருக்கும் சிவாலயம் சென்று பைரவமூர்த்தியை நெய்தீபம் 
ஏற்றி வழிபடுவது சாலச்சிறந்தது .. தங்களனைவருக்கும் நல் ஆரோக்கியமும் .. இழந்த அனைத்து செல்வங்களை மீளப்பெறவும் .. கடன்சுமை குறைந்து வாழ்வில் சுபீட்சமும் .. வசந்தமும் மலர்ந்திடவும் பைரவப் பெருமானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் ஷ்வானத்வஜாய வித்மஹே ! 
சூலஹஸ்தாய தீமஹி ! 
தந்நோ பைரவஹ் ப்ரசோதயாத் !! 

சிவபெருமானின் பஞ்சகுமாரர்களில் கணபதி .. முருகன் .. வீரபத்திரர் .. ஐயனார் .. மற்றும் பைரவரும் ஒருவர் .. பைரவர் என்பது வடமொழிச் சொல்லாகும் .. இதற்கு மிகவும் பயங்கரமானவர் என்பது பொருளாகும் .. எதிரிகளுக்கு பயம் தந்து தன்னை நாடுபவர்களுக்கு அருள்செய்வதால் இவருக்கு பைரவர் என்பது பெயராயிற்று .. 

பொதுவாக பைரவர் நீலநிறமேனி கொண்டவராய் .. சிலம்புகள் அணிந்த திருவடியைக் கொண்டவராய் .. பாம்புகள் பொருந்திய திருவரையும் .. மண்டை ஓட்டு மாலைகள் புரளும் திருமார்பும் .. சூலம் .. பாசம் .. உடுக்கை .. மழு .. முதலியன தாங்கிய திருக்கரங்களை உடையவராய் கூறப்பட்டாலும் .. அஷ்டபைரவர் வடிவங்களாக கூறும்போது அவரின் வண்ணம் .. ஆயுதம் வாகனம் இவை மாறுபட்டுக் காணப்படும் .. 

மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மன் ஆதிகாலத்தில் சிவனாரைப்போன்றே ஐந்து தலைகளுடன் திகழ்ந்தார் .. ஒருமுறை அவர் அகந்தையால் அறிவு மங்கிச் சிவநிந்தனை செய்தபோது சிவபெருமான் பைரவரைத் தோற்றுவித்து பைரவரும் பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கொய்து எடுத்து கபாலமாக்கிக் கொண்டார் .. 

அடிமுடிதேடியபோது திருமுடிகண்டேன் எனப் பொய்யுரைத்ததால் பிரம்மனின் ஐந்தாவது தலையை பைரவர்மூலம் கொய்ததாகவும் ஒரு புராணக்கதை உண்டு ..

காலத்தை நிர்ணயம் செய்யும் பைரவப்பெருமானை நாமும் துதித்து தீவினைகளிலிருந்து விடுபடுவோமாக ..
” ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ “ .. 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்
SWAMIYE SARANAM IYYAPPPA
GURUVE SARANAM SARANAM
PANVEL BALAGANE SARANAM IYYAPPA

 அனைவருக்கும் அன்பார்ந்த ஞாயிறு காலை வணக்கங்கள்..குருவே சரணம் சரணம்....

 ஒளிதரும் நாயகனே இருள்நீக்கும் அய்யனே
உள்ளே ஞானவொளிப் பெருகச் செய்பவனே
வெளியே அஞ்ஞான இருளை ஓட்டுபவனே
தள்ளியே நின்று தவறாமல் காப்பவனே!
மலைமேல் நின்று உயிர்காக்கும் பாலனே

நீ இல்லாவிடில் ஓய்ந்திடும் என் மூச்சே 

உலகம் உய்ய வேண்டுமுன் நீயே
கண்ணால் காணும் தெய்வமும் நீயே!
வம்புலி மேல் பவனி வந்திடும் பாலகனே

 பெருந்தீமை  குறைத்து அருளிடும் மித்திரனே
அனுதினம் அருள் வழங்கிடும் அய்யனே 

நோய்கள் நீக்கிக் நேராக்கும் பாலனே 

கண்களைச் சீராகக் காத்திடும் சீராளன் நீயே
 கரங்குவித்தே வேண்டுவோம் பன்வேல் பாலகனை

சுவாமி சரணம் ஐயப்பா சரணம்  எனும் உயர் நாமம்
தினம் பாடியே இங்கு உயர்வோம் நாமும்!
குருவின் திருவடி தொழுது 

தினம் துதித்து வளர்வோம் மேன்மேலும்!!

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM.....

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A DIVINE 
" PANJAMI DAY " AND MAY GODDESS VARAHI PROTECT YOU FROM ALL ODDS AND GUIDES YOU ALONG THE RIGHT PATH .. 
MAY YOU BE RELIEVED FROM ALL EVIL FORCES TOO ..
" JAI MAA VARAHI " 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சர்வமங்களங்களையும் அள்ளித்தரும் வெள்ளிக்கிழமையாகிய இன்று மாலை பஞ்சமித்திதியும் வருவதால் அன்னை வராஹியை வழிபடுவது சிறப்பைத் தரும் .. தங்களனைவரும் அன்னையின் அருட்கடாக்ஷ்ம் பெற்று வழக்குகளில் வெற்றியும் .. வாழ்வில் முன்னேற்றமும் காண்பீர்களாக .. 

ஓம் ஸ்யாமளாயே வித்மஹே ! 
ஹலஹஸ்தாய தீமஹி ! 
தந்நோ வராஹி ப்ரசோதயாத் !! 

வராஹியை இரவுக்கடவுள் என்று கூறுவர் .. காரணம் இவள் லலிதையின் படைத்தலைவி .. எனவே இரவு முழுவதும் உறங்காமல் போர்புரிவதினால் அவள் பகல் பொழுதில் உறங்குவாள் .. எனவே அன்னையின் வழிபாடு சந்திவேளை பொழுதில் ஆரம்பித்து இரவு முழுவதும் தொடரும் .. 

தமிழர்களின் வழிபாடுகளில் முக்கியமானதும் .. முதன்மையானதுமாக இருப்பது வராஹி உபாசனை .. பன்றி முகத்தோடு காட்சியளிப்பவள் .. இவள் அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறாள் .. வராஹம் எனப்படும் பன்றியின் அம்சமானது விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகும் .. அன்னைக்கு மூன்று கண்கள் உண்டு .. இது சிவனின் அம்சமாகும் .. 

பைரவ சுவாமியின் சக்தியாக இருப்பதால் வராஹி உபாசனை அல்லது வராஹி வழிபாடு செய்பவர்களுக்கு எதிராக யாராவது பில்லி சூனியம் வைத்தால் வைத்தவர்களுக்கே பலவிதமான சிரமங்கள் உருவாகும் 
அம்பிகையின் அம்சமாக பிறந்ததால் இவள் சிவன் .. ஹரி 
சக்தி என்ற மூன்று அம்சங்களைக் கொண்டவளாவாள் ..
எதையும் அடக்கவல்லவள் .. சப்தகன்னிகைகளில் பெரிதும் வேறுபட்டவள் .. மிருகபலமும் .. தேவகுணமும் கொண்ட இவள் பக்தர்களின் துன்பங்களைத்தாங்கிக் காப்பவள் .. பிரளயத்தில் இருந்து உலகை மீட்டவவளாகச் சொல்லப்படுகின்றாள் .. 

கூப்பிட்ட குரலுக்கு வருபவள் .. அன்னை வராஹியை வழிபட்டாள் வாழ்வின் உந்துதலையும் முக்கியமாக உயிரின் உந்துதலையும் அடையலாம் .. எதிரிகளை அன்பால் வெல்லலாம் .. 

“ ஒளிக்கும் பராசக்தி உள்ளே அமரில் .. களிக்கும் இச்சிந்தையில் காரணமாம் காட்டித் தெளிக்கும் மழையுடன் செல்வம் உண்டாக்கும் அளிக்கும் இவளை அறிந்து கொள்வார்க்கே ! “ ( திருமூலர் ) 

பொருள் - - 
உலகையே ஒளிர்விக்கும் பராசக்தி என்ற அம்பிகை நம் மனதில் எழுந்தருளினால் உண்மைப் பொருள் விளங்கும் 
மனம் தெளிவுபெறும் .. அவளை அறிந்துகொள்பவருக்கு அனைத்துச் செல்வங்களும் வாய்க்கும் என்று திருமூலர் கூறுகிறார் .. 

அன்னை வராஹியை வழிபடுவோம் ! வாழ்வில் ஏற்றம் காண்போமாக ! ஓம் வராஹி ! சிவசக்தி ஓம் ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM....PANVEL BALAGANE POTRI POTRI......

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A PLEASANT DAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD VISHNU .. MAY YOU BE RELIEVED FROM SINS AND BLESSED WITH GOOD HEALTH .. WEALTH & HAPPINESS .. " OM NAMO NAARAAYANAAYA"
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று இப்பிரபஞ்சத்தைக் காத்தருளும் ஸ்ரீமன்நாராயணனுக்கு உகந்த நாளுமாகும் .. 
தங்கள் அனைவரது வாழ்விலும் வசந்தம் மலர்ந்திடவும் .. சகல சௌபாக்கியங்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ பகவானைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் நாராயணாய வித்மஹே ! 
வாசுதேவாய தீமஹி ! 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!
ராமாயணமும் .. மகாபாரதமும் .. பாரதத்தின் இருகண்களாக போற்றப்படுகின்றன .. இதில் ஐந்தாவது வேதமாகப் போற்றப்படும் மகாபாரதம் .. “ மண்ணாசை கூடாது “ என்பதை வலியுறுத்துகிறது .. மகாபாரதப்போர் முடிந்த சமயத்தில் பிதாமகரான பீஷ்மர் அம்பினால் செய்யப்பட்ட படுக்கையில் இருந்தார் .. அப்போது கிருஷ்ணர் பாண்டவர்களை அவரிடம் அழைத்துச் சென்று உயிர்கள் பிறவிச் சக்கரத்தில் இருந்து விடுபடும் வழியை எடுத்துரைக்கவேண்டினார் .. பீஷ்மரும் அதை ஏற்றுக்கொண்டார் ..
“ நாராயணன் ஒருவனே ! நித்தியமும் ..சத்தியமும் ஆனவர் .. யார் ஒருவர் அவரை முழுநம்பிக்கையுடன் பூஜிக்கிறாரோ அவருக்கு சகல சௌபாக்கியங்களும் கிடைப்பதோடு மோட்சமும் நிச்சயமாக கிடைக்கும் “ என்று பீஷ்மர் உபதேசித்தார் .. அப்போது இன்னொரு சுலபமான வழியையும் அவர்களுக்கு கூறினார் ..
தினமும் நாராயணனின் 24 திருநாமங்களை (பெயர்களை)
ஜபிக்கின்றார்களோ அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் மனநிம்மதி .. அஷ்ட ஐஸ்வர்யம் .. பொன் .. பொருள் .. தனதானியம் .. ஆரோக்கியம் .. நல்லகுடும்பம் .. குழந்தைகள் .. நல்லபுகழ் .. வாகனவசதி .. வாழ்வில் ராஜயோகம் கைகூடும் .. பிறவி முடிந்தபின்னும் மேலுலக
இன்பங்களை அனுபவித்து இறுதியில் நாராயணனின் திருவடிகளை அடையலாம் என்றார் ..
அந்த 24 நாமங்களும் மிகவும் எளிமையானவை .. காலையிலும் .. மாலையிலும் விளக்கேற்றியவுடன் அனைவரும் பாராயணம் செய்யலாம் ..
1 - ஓம் கேசவாய நமஹ .. 
2 - ஓம் சங்கர்ஷணாய நமஹ ..
3 - ஓம் நாராயணாய நமஹ ..
4 - ஓம் வாசுதேவாய நமஹ .. 
5 - ஓம் மாதவாய நமஹ .. 
6 - ஓம் ப்ரத்யும்னாய நமஹ .. 
7 - ஓம் கோவிந்தாய நமஹ ..
8 - ஓம் அநிருத்தாய நமஹ .. 
9 - ஓம் விஷ்ணவே நமஹ ..
10 - ஓம் புருஷோத்மாய நமஹ .. 
11 - ஓம் மதுசூதானாய நமஹ ..
12 - ஓம் அதோக்ஷ்ஜாய நமஹ ..
13 - ஓம் திரிவிக்ரமாய நமஹ ..
14 - ஓம் லக்ஷ்மி நரசிம்ஹாய நமஹ .. 
15 - ஓம் வாமனாய நமஹ .. 
16 - ஓம் அச்சுதாய நமஹ .. 
17 - ஓம் ஸ்ரீதராய நமஹ ..
18 - ஓம் ஜனார்தனாய நமஹ ..
19 - ஓம் ஹரிஷீகேசாய நமஹ ..
20 - ஓம் உபேந்த்ராய நமஹ .. 
21 - ஓம் பத்மநாபாய நமஹ .. 
22 - ஓம் ஹரய நமஹ ..
23 - ஓம் தாமோதராய நமஹ .. 
24 - ஓம் ஸ்ரீ கிருஷ்ணாய நமஹ ..
தினமும் இந்த மந்திரங்களை பாராயணம் செய்யும்போது துளசியும் .. சுத்தமான நீரும் நைவேத்தியமாக வைத்து வழிபட்டால் போதுமானது .. நாமும் 
ஓம் நமோ நாராயணாய ! ஓம் நமோ நாராயணாய ! 
ஓம் நமோ நாராயணாய ! என்று மீண்டும் .. மீண்டும் .. சொல்லி அடியவரின் துன்பங்களை களைந்து .. பாவங்களைப் போக்கி .. ஓர் குழந்தையைப் போல் அரவணைத்துக் கொள்ளும் திருமாலின் திவ்யபாதக்கமலங்களில் சரணடைவோமாக ! வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

Swamiye saranam iyyappa...Guruve Saranam ....Panvel Balagane saranam saranam....

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE LORD MURUGANS BESTOW BLESSINGS & MAY YOU BE BLESSED WITH SUCCESS .. PROSPERITY AND HAPPINESS .. " OM MURUGA " 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய்க்கிழமையாகிய இன்று கலியுகவரதனாகிய கந்தப்பெருமானுக்கு உகந்த நாளுமாகும் .. தங்களனைவருக்கும் கந்தனின் அருட்கடாக்ஷ்ம் பெற்று தீமைகளிலிருந்தும் காத்து .. வேண்டிய வரங்களைவேண்டியவாறே தந்தருளும்படி பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹேஷ்வர புத்ராய தீமஹி ! 
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத் !! 

மிகப்பழமைவாய்ந்த தமிழ் இலக்கியமாகிய தொல்காப்பியம் தமிழக நிலப்பரப்பைக் குறிஞ்சி .. முல்லை .. மருதம் .. பாலை .. நெய்தல் என ஐந்துவகையாகப் பிரிக்கிறது .. இவற்றில் மலையைச் சார்ந்த பகுதியாகிய குறிஞ்சி நிலத்திற்குரிய கடவுளே முருகப்பெருமான் ! 

நக்கீரன் பாடிய “ திருமுருகாற்றுப்படையில் “ எந்த முருகனிடம் சென்று வழிபட்டால் இலகுவாக திருவருள் கிடைத்துவிடும் என்பதை ஆற்றுப்படையாக (வழிகாட்டியாக) முன்மொழிந்துள்ளார் .. அவற்றுள் குறிப்பாக முருகனின் ஆறுதிருத்தலங்களே ஆற்றுப்படை வீடுகள் என அழைக்கப்பெற்று பின்னர் அவை
“ ஆறுபடை வீடுகள் “ என அழைக்கப்பெறுகின்றன .. 

முருகனின் ஆறுபடைவீடுகள் - - 
1 - பழநி - 
ஆறுபடைவீடுகளில் முதலாவதாகும் .. ஞானப்பழம் கிடைக்காத காரணத்தால் தன் பெற்றோர்களிடம் கோபம் கொண்டு முருகன் ஆண்டியின் கோலத்தில் நிற்கும் இடமே பழநி .. இங்குள்ள முருகனின் சிலை நவபாஷனத்தால் ஆனது .. அதனால்தான் அந்த முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் பால் .. பஞ்சாமிர்தம் .. விபூதி ஆகியவற்றை உற்கொண்டால் உடல் நலம்பெறும் என்று நம்பப்படுகிறது .. 

2 - திருச்செந்தூர் - 
கடல் அலை “ ஓம் “ என்ற ரீங்காரத்துடன் கரைமோதும் 
‘ அலைவாய் ‘ என்னும் திருச்செந்தூர் முருகன் சூரபத்மன் என்ற அசுரனுடன் போரிட்டு வென்ற இடமாகும் .. சூரபத்மன் தேவர்களையும் இந்திரனையும் அவன் மனைவியையும் சிறைசெய்து கொடுமை செய்தான் .. அவர்களைக் காப்பாற்ற முருகன் சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றினார் .. சூரபத்மனுடன் முருகன் போர்புரிந்த இடமே திருச்செந்தூர் .. போர்புரிந்த காலம் கார்த்திகை மாதம் சஷ்டியாகும் .. அதனால்தான் சஷ்டியில் விரதமிருந்து முருகனை வழிபடுகின்றனர் .. 
போரின் இறுதியில் சூரபத்மன் மாமரமாக நிற்க முருகன் தன் அன்னை தந்த சக்திவேலால் மரத்தை பிளக்கிறார் அதில் ஒருபாதி மயிலாகிறது .. மற்றொருபாதி சேவலாகிறது .. மயிலைத் தன் வாகனமாகவும் சேவலைத் தன்கொடியாகவும் ஏற்றுக்கொள்கிறார் .. 

3 - திருப்பரங்குன்றம் -
தேவேந்திரனையும் .. தேவர்களையும் சிறைமீட்டதற்கு நன்றிக்கடனாக இந்திரன் தன்மகள் தெய்வானையை போரில் வெற்றிபெற்ற மறுநாளே முருகனுக்குத் திருமணம் செய்துகொடுக்கிறார் .. முருகனுக்கும் தெய்வானைக்கும் திருமணம் நடந்த இடமே திருப்பரங்குன்றம் .. 

4 - சுவாமிமலை - 
தந்தைக்குப் பாடம் சொன்ன இடம் சுவாமிமலை .. பிரணவமந்திரத்திற்குப் பொருள்தெரியாத பிரம்மனை முருகன் சிறையில் அடைக்கிறார் .. இதைக்கேள்வியுற்ற சிவபெருமான் எனக்கும் .. பிரம்மாவுக்கும் கூடத்தெரியாத பிரணவமந்திரத்தின் பொருள் உனக்குத் தெரியுமா ? என்று கேட்கிறார் .. அதன்படி உபதேசிப்பவன் குரு .. கேட்பவன் சீடன் என்றமுறையில் முருகன் ஆசனத்தில் அமர அவர்கீழ் சிவன் அமர்ந்து உபதேசம் கேட்ட இடமே சுவாமிமலை .. 

5 - திருத்தணி - 
முருகன் வேடர்குலத்தில் பிறந்த வள்ளியைக் காதல்மணம் புரிந்துகொண்ட இடமே திருத்தணி .. வள்ளியின் தந்தை நம்பிராஜன் முருகனுக்கு வள்ளியைத் திருமணம் செய்துகொடுக்க மறுத்து முருகனுடன் போரிட்டு மடிகிறான் .. பின் முருகன் வள்ளியைத் திருமணம் செய்து போரிட்ட கோபம்தணிய நின்ற மலையே தணிகைமலை ஆகும் .. அதுவே திருத்தணி என்று போற்றப்படுகிறது .. 

6 - பழமுதிர்ச்சோலை - 
நக்கீரர் .. “ இழுமென இழிதரும் அருவிப் பழமுதிர்ச்சோலை கிழவானே “ என்று முருகனின் ஆறாவதுபடைவீடாகப் பழமுதிர்ச்சோலையைக் கூறித் திருமுருகாற்றுப்படையை நிறைவுசெய்கிறார் .. குறிஞ்சிக்கடவுளாகிய முருகன் வயோதிகனாகத் தோன்றி நக்கீரனுக்குக் காட்சியளித்த இடம் பழமுதிர்ச்சோலையாகும் .. 

ஆறுமுகப்பெருமானின் ஆறுபடைவீடுகளையும் வழிபட்டு நோய்நீங்கி துன்பங்கள் அகன்று .. மனம் அமைதிபெற்று .. வளமான வாழ்வைப் பெறுவோமாக ! 
“ ஓம் சரவணபவாய நமஹ “ .. வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..


GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A SUCCESSFUL MONDAY AND A BLESSED SOMVAR TOO .. MAY LORD SHIVA DESTROY ALL KINDS OF SINS AND SORROWS & SHOWER YOU WITH HAPPINESS .. GOOD HEALTH .. AND PROSPERITY .. " OM NAMASHIVAAYA " .. JAI BHOLE NATH .SWAMIYE SRANAM IYYAPPA...GURUVE SARANAM..PANVEL BALAGANE SARANAM IYYAPPA

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. பௌர்ணமித்திங்களும் .. சோமவார விரதமும் சேர்ந்துவருவது மிகவும் சிறப்பாகும் .. சிவபெருமானை ஆலயம் சென்று வழிபாடு செய்வது சாலச்சிறந்ததாகும் ..
தங்களனைவரும் செய்யும் அனைத்து காரியங்களிலும் வெற்றியும் .. மகிழ்ச்சியும் கிட்டிட எல்லாம் வல்ல சர்வேஸ்வரனைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !! 

பூரணை என்பது சந்திரன் முழுவட்டமாகத் தோற்றமளிக்கும் நாளாகும் .. பூர்ணிமா என்றும் பௌர்ணமி என்றும் இந்நாள் அழைக்கப்பெறுகிறது .. இந்துசமயத்தில் சந்திரன் கடவுளாகக் கருதப்படுகிறார் .. அவர் தட்சனின் குமாரிகள் இருபத்து ஏழுபேரை மணந்தபோதிலும் அவர்களில் ரோகிணியிடம் மட்டுமே அதிகம் பிரியமாய் இருந்தார் .. அதனால் கோபம்கொண்ட தட்சன் சந்திரனின் அழகு குறைந்து மங்கிப்போகச் சாபம்கொடுத்தார் .. 

பதினைந்து கலைகளில் ஒவ்வொன்றாகக் குறைந்து இறுதியில் ஒன்று மட்டுமே மீதமிருக்கும்போது சிவபெருமானை தஞ்சமடைந்தார் சந்திரன் .. சந்திரனைக் காக்க தனது ஜடாமுடியில் வைத்துக்கொண்டார் .. எனினும் தட்சனின் சாபம் முழுவதும் தீராமல் பதினைந்து நாட்கள் கலைகள் அழிந்தும் .. பின் பதினைந்து நாட்கள் வளர்ந்தும் வரும் என்று வரமளித்தார் .. சோமவார விரதத்தை மேற்கொண்டதால் சிவபெருமானின் தலையில் இருக்கும் பேற்றினையும் பெற்று அனைத்து பாவங்களிலிருந்தும் .. சாபங்களிலிருந்தும் விடுதலை பெற்றார் .. 

பரமனைப் போற்றுவோம் ! சகலசௌபாக்கியங்களைப் பெற்றிடுவோமாக ! ஓம் நமசிவாய ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

SWAMY SARANAM....GURUVE SARANAM....

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY FILLED WITH PEACE .. LOVE AND HAPPINESS .. MAY LORD SURYA'S BLESSINGS BE WITH YOU ALWAYS .. 
" JAI SURYA DEV " 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று நவக்கிரகங்களின் நாயகன் சூரியபகவானின் ஆதிக்கம் பூமியில் நிறைந்த நாளாகும் .. தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் இனிய நன்னாளாக அமைந்திட சூரியபகவானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே ! 
பாஸஹஸ்தாய தீமஹி ! 
தந்நோ சூர்யஹ் ப்ரசோதயாத் !! 

பொருள் - - - 
குதிரைகள் பூட்டிய தேரை உடையவனை அறிவோமாக .. கரங்களில் பாஸத்தை ( கயிறு ) வைத்திருப்பவன்மீது தியானம் செய்கிறோம் .. சூரியதேவனாகிய அவன் எம்மைக்காத்தருள்வானாக ! 

சூரியன் மெய்ப்பொருள் என்பது சௌரவ மதத்தின் அடிப்படைத் தத்துவமாகும் .. ஆதிசங்கரர் வகுத்தளித்த ஆறுவழிபாட்டு முறைகளில் சூரியவழிபாடு தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது .. அதுமட்டுமின்றி நாம் கண்களால் பார்க்கக்கூடிய ஒரே தெய்வம் சூரியன் .. 

இத்தகைய சிறப்புகளைக்கொண்ட சூரியன் உலகம் முழுவதும் வியாபித்திருக்கின்றதால் மூலதத்துவத்தின்
பிரதிநிதியாக இருப்பதாலும் சூரியநாராயணன் என்றும் .. பகலில் உதிப்பதன் காரணமாக பகலவன் என்றும் .. கதிர்களைவீசி உயிர்களை இன்புறச்செய்வதால் கதிரவன் என்றும் போற்றப்படுகிறான் .. 

சூரியனுக்கு ஈர்ப்புசக்தி அதிகம் .. இந்த சூரிய சக்தியைத் தான் விஞ்ஞானிகள் உலகிற்குப் பயன்படும் சக்தியாக மாற்றி பலவெற்றிகளை அடைந்துள்ளனர் .. சூரியசக்தியிலிருந்து எரிசக்தி .. மின்சக்தி போன்றவற்றை இந்த பூவுலகம் பெற்று பயன்படுத்தி வருகிறது என்பது இன்றைய நடைமுறையில் நாம் காணும் நிகழ்வாகும் ..

தினமும் சூரியகாயத்ரியைப் பாராயணம் செய்து .. அனைத்து இன்னல்களும் நீங்கி .. அச்சம் அகன்று .. கண்களுக்கு புத்துயிர்பெற்று .. கல்வி .. வேள்விகளிலும் சிறந்து விளங்கி நலமுடன் வாழ்வீர்களாக .. 
“ ஓம் சூர்யாய நமஹ “ .. வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM


GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A HAPPY WEEKEND WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA MAY HE SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH AND HAPPINESS .. " OM NAMASHIVAAYA " JAI BHOLE NATH .. 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சனிக்கிழமையான இன்று ஈஸ்வரனைத் துதித்து தங்களனைவரது அனைத்து கிரகதோஷங்களும் நீங்கி புத்துணர்வும் .. மகிழ்ச்சியும் பெற்றிட எல்லாம் வல்ல ஈஸ்வரன் அருள்புரிவாராக .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !! 

சிவ பஞ்சாக்ஷ்ர மஹிமை - 
“ ஓம் நமஹ சிவாய “ என்னும் மஹாமந்திரம் ஸ்தம்பன மந்திரமாகும் .. 
“ ஓம் சிவாய நமஹ “ என்பது வசியமந்திரமாகும் .. எனவே தீயவைகளை விலக்க .. “ ஓம் நமஹ சிவாய” என்றும் ..
நினைத்தை அடைய - “ ஓம் சிவாய நமஹ “ என்றும் ..
தினமும் ஜெபித்து வந்தால் சகலமும் சித்திக்கும் .. 

திருநீற்றிற்கு பஞ்சாக்ஷ்ரம் என்று பெயர் .. 
மந்திரம் ஜெபிக்கமுடியாதவர்கள் நெற்றியில் திருநீறு அணிந்தாலும் சிவபஞ்சாக்ஷ்ரம் ஜெபித்த பயன் கிடைக்கும் .. 

இறைவனின் ஒரே மூலமந்திரம் ஐந்தெழுத்தான 
“ நமசிவாய “ என்ற மந்திரப் பொருள் .. 
ந - பிரம்மன் - படைக்கும் தொழிலைச் செய்பவர் ..
ம - திருமால் - காக்கும் தொழிலைச் செய்பவர் ..
சி - உருத்திரன் - அழிக்கும் தொழிலைச் செய்பவர் ..
வா - மகேஸ்வரன் - மறைத்தல் தொழிலைச் செய்பவர் ..
ய - சதாசிவம் - அருள்புரியும் தொழிலைச் செய்பவர் .. 
” நமசிவாய “ என உச்சரித்து தியானம் செய்தாலே இறைவனைக் காணமுடியும் .. 

சிவனைப் போற்றுவோம் ! அனைத்து நலன்களையும் பெறுவோமாக ! ஓம் நமசிவாய ! வாழ்க வளமுடனும் ! என்றும் நலமுடனும் !

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM....PANVEL BALAGANE SARANAM IYYAPPA....

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED 'PRADOSHAM DAY ' AND MAY LORD SHIVA REMOVE ALL YOUR SINS AND SHOWER YOU WITH PEACE .. SUCCESS .. AND FULFILL ALL YOUR DESIRES TOO .. " OM NAMASHIVAAYA " 
JAI SHREE SHIV BHOLE NATH .. 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சகலமங்களங்களையும் தங்களனைவருக்கும் அள்ளித்தரும் வெள்ளிக்கிழமையாகிய இன்று .. பிரதோஷ விரதமும் அனுஷ்டிப்பது சாலச்சிறந்ததே ! 
ஈசனின் அருள்பெற்று அனைத்து துன்பங்களும் நீங்கி .. மனநலமும் .. உடலாரோக்கியமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன் .. பரமேஷ்வரனைப்
பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹா தேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !! 

சிவபெருமானை நாம் நாள்தோறும் வணங்குகிறோம் .. ஆனாலும் பிரதோஷகாலத்தில் எம்பெருமானை 
( மாலை 4.30 - 6.00 மணிவரை ) ஆலயம் சென்று வணங்குவது சிறந்தபயனைத் தரும் .. 

தோஷம் - என்ற வடமொழிச் சொல்லிற்கு குற்றம் என்று பொருள் .. 
பிரதோஷம் - என்றால் குற்றமற்றது என்று பொருள் .. 
குற்றமற்ற இந்தப் பொழுதில் ஈசனை வழிபட்டோமேயானால் .. நாம்செய்த சகலபாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம் .. 

பிரதோஷபூஜை ஸ்தோத்திரம் - - - 
1 - ஓம் பவாய நமஹ - பகவானே எம்மைக் காத்தருள்வாயாக .. 
2 - ஓம் ருத்ராய நமஹ - நம்குற்றங்களைச் சிந்தனைகளிருந்தும் களைவாயாக .. 
3 - ஓம் மிருடாய நமஹ - நம்துன்பங்களைப் போக்கி .. இன்பங்கள் தந்தருள்வாயாக .. 
4 - ஓம் ஈசானாய நமஹ - நல்வழி .. நற்புகழ் பெறுவதற்கு வழிகாட்டுவாயாக .. 
5 - ஓம் சம்பவே நமஹ - எமக்கு உயர்வு அடைய வழிகாட்டுவாயாக .. 
6 - ஓம் சர்வாய நமஹ - கொடியவர்களை தண்டித்து எம்மைக் காத்தருள்வாயாக .. 
7 - ஓம் ஸ்தாணவே நமஹ - பகவான் சிறிதும் அசைவின்றி நிலைபெற்றிருப்பவராக .. 
8 - ஓம் உக்ராய நமஹ - ஆசை .. பாசம் .. எதிலும் நிலையான ஆட்சி செய்பவராக .. 
9 - ஓம் பார்க்காய நமஹ - பகவானின் சிறப்பான உருவம் தந்தருள்வாயாக .. 
10 - ஓம் பரமேஷ்வராய நமஹ - பகவானுக்கு ஒரு ஒளிமயமான திருவுருவம் தோன்றுதலாக .. 

எங்கும் இருக்கும் .. எதிலும் நிறையும் பரமேஷ்வரனைப் போற்றுவோம் ! வாழ்வில் அனைத்து ஐஸ்வர்யங்களையும் பெறுவோமாக ! ஓம் நமசிவாய ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

குருதோஷம் விலகும் வியாழன் துதி குரு காயத்ரி, தட்சிணாமூர்த்தி துதிகளையும் எப்போதும் சொல்லுங்கள். குருதோஷம் நிச்சயம் விலகி, குருவருள் பரிபூரணமாகக் கிட்டும். குரு காயத்ரி, தட்சிணாமூர்த்தி துதிகளையும் எப்போதும் சொல்லுங்கள். குருதோஷம் நிச்சயம் விலகி, குருவருள் பரிபூரணமாகக் கிட்டும்.



குணமிகு வியாழ குருபகவானே!
மணமுள வாழ்வை மகிழ்வுடன் அருள்வாய்!
பிரகஸ்பதி வியாழ பர குரு நேசா!
கிரக தோஷமின்றிக் கடாட்சித் தருள்வாய்!
மறைமிகு கலைநூல் வல்லோன் வானவர்க் கரசன் மந்திரி
நறைசொரி கற்ப கப்பொன் நாட்டினுக் கதிபனாக்கி
நிறைதனம் சிவிகை மன்றல நீடுபோ கத்தை நல்கும்
இறையவன் குருவி யாழன் இணையடி போற்றி போற்றி.
வளமெலாம் அளித்திடும் வியாழா போற்றி
குலமெலாம் தழைத்திட வருவாய் போற்றி
புலமெலாம் மலர்ந்திட முனைவாய் போற்றி
உலகெலாம் உவந்திட அருள்வாய் போற்றி!

மக்கள் வெள்ளத்தில் திருவாரூர் ஆழித்தேரோட்டம்!



SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM....

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED 
" NIRJALA EKADASI " AND MAY THE LORD BALAJI BLESS YOU AND FULFILL ALL YOUR WISHES AND REMOVE THE OBSTACLES AND SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH AND HAPPINESS .. " OM NAMO NAARAAYANAAYA " 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. குருவருளும் .. திருவருளும் .. கூடிய இந்நன்னாளில் மஹாவிஷ்ணுவிற்கு உகந்த ஏகாதசி விரதமும் சேர்ந்து வருவதால் ஆ
லயம் சென்று பகவானைப் பூஜிப்பது விசேஷமாகும் .. தங்களனைவருக்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றிபெற பகவானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் நாராயணாய வித்மஹே ! 
வாசுதேவாய தீமஹி ! 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! 

இன்றைய ஆனிமாத வளர்பிறை ஏகாதசியை “ நிர்ஜலா ஏகாதசி “ என்றும் .. “ பீமஏகாதசி “ என்றும் அழைப்பர் .. பக்தர்கள் தங்கள் பலவீனங்களை தங்களது குரு அல்லது குடும்பத்தில் மூத்தவர்களிடமிருந்து மறைக்கக்கூடாது .. நம்பிக்கையுடன் தங்களது பிரச்சினைகளுக்கு சரியான தீர்வு கிட்டும் என்பதனை உணர்த்தும் விரதம் .. 

பீமசேனர் உபவாசம் தன்னால் இருக்க இயலாத பலவீனத்தை தன் பிதாமகரிடம் மறைக்காமல் கூறியதால் சரியான தீர்வாக நிர்ஜலா ஏகாதசி விரதம்பற்றி அறியமுடிந்தது .. அதை பக்தி சிரத்தையுடனும் .. நம்பிக்கையுடனும் கடைபிடித்ததால் அனைத்து மாதங்களிலும் ஏகாதசி விரதம் அனுஷ்டித்த பலன்கிட்டியது .. அத்தோடு மற்ற பாண்டவர்களுடன் ஸ்வர்க்கத்திற்கு அதிபதியாகவும் முடிந்தது .. 

பீமபூஜை என்பதே ஆழ்மனதில் இறைவனை இருத்தி பூஜைசெய்வதாகும் .. எனவே இந்நாளில் உளவுப்பூர்வமாக பீமனையும் இணைத்து வழிபாடு செய்தால் வாழ்க்கையில் அனைத்து வெற்றியும் கிட்டும் ..
வருடம் முழுவதும் உள்ள ஏகாதசி விரதபலனும் கிடைக்கும் .. ஏனெனில் பீமன் வாயு அம்சமாவான் .. 

மஹாவிஷ்ணுவைப் போற்றுவோம் ! துன்பங்கள் அனைத்தையும் போக்குவோமாக ! 
ஓம் நமோ பகவதே ! வாஸுதேவாய நமோ நமஹ ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்

சீரடி சாய்பாபா கோவில் - முக்கிய தகவல்கள் : SHIRDI SAI BABA TEMPLE - IMPORTANT INFORMATIONS ! ஸ்தல வரலாறு :


மதங்களைக் கடந்து எல்லா தரப்பு மக்களாலும் பூஜிக்கப்படும் மகான் சீரடி சாய்பாபா. பாபா யார்? அவரது பெற்றோர் யார்? அவரது பூர்வீகம் எதுப என்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல், கேள்வியின் நாயகனாகவே வாழ்ந்து, அற்புதங்கள் பல நிகழ்த்தினார் பாபா. இன்று, பக்தர்கள் பலரது கண்கண்ட தெய்வமாக போற்றப்படுகிறார்.
சீரடி சாய்பாபா வாழ்ந்த சீரடியில் அமைந்துள்ள அவரது கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மராட்டிய மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் ரகாதா தாலுகாவில் உள்ள சிறிய ஊர்தான் சீரடி. இங்குள்ள சாய்பாபாவின் நினைவிடத்திலேயே அவருக்கான கோவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. தனது 16-வது சீரடி வந்து சேர்ந்த பாபா, அதன் பிறகு வேறு எங்கேயும் செல்லவில்லை.
அங்குள்ள `கண்டோபா' என்ற மசூதியில் தான் தங்கியிருந்தார். பாபா நிகழ்த்திய முதல் அற்புதம், நானா சாஹேப் என்பவருக்கு குழந்தை பாக்கியம் அருளியதுதான். அதன் பிறகுதான் அவரது புகழ் வேகமாக பரவ ஆரம்பித்தது. இன்று உலகம் முழுக்க அவருக்கு பக்தர்கள் இருக்கிறார்கள்.
அதிசய வேம்பு :
பாபா சீரடியில் மக்களோடு மக்களாக வாழ்ந்தபோது பகல் வேளைகளில் அங்குள்ள வேப்பமரத்தின் அடியில் அமர்ந்திருப்பார். அந்த அதிசய மரம் இன்றும் உள்ளது. இந்த மரத்தின் இலைகள் கசப்பு தன்மைக்கு மாறாக இனிப்பு சுவை கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். பாபா கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் இந்த வேம்பு மரத்தை வலம் வந்து வழிபடுகிறார்கள்.
3 முறை அதை வலம் வரும் பக்தர்கள், அங்கு தரப்படும் தீர்த்தத்தை வாங்கி அருந்துகிறார்கள். தொடர்ந்து கோவிலுக்குள் பாபாவை தரிசிக்க செல்கிறார்கள். கோவிலுக்குள் பாபாவின் நினைவிடம் மீது திருக்குடையின் கீழ் சிம்மாசனத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் தரிசனம் தருகிறார் சாய்பாபா. 5 அடி 5 அங்குலம் உயரத்தில் அவரது உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.
அற்புத கல் :
பாபா வாழ்ந்த காலத்தில் தங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டி அவரை தேடி வரும் பக்தர்களுக்கு அவர் ஒரு கல் மீது அமர்ந்து கொண்டு அருளாசி தருவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஷீலா என்று அழைக்கப்படும் அந்த கல், இன்றும் பாபா கோவிலில் அமைந்துள்ளது. பாபாவின் திருமேனி அமைந்துள்ள இடத்திற்கு அருகே இந்த கல் உள்ளது.
பாபா கோவிலுக்கு வரும் பக்தர்கள் பாபாவை தரிசித்த பிறகு, இந்த ஷீலா கல்லை வந்து வழிபடுகிறார்கள். அவ்வாறு வழிபட்டால் பாபாவே தங்களது குறைகளை நீக்கி விடுவார் என்று நம்புகிறார்கள். கோவில் வளாகத்தில் சாய்பாபா பயன்படுத்திய கிணறு உள்ளது. நாழிக் கிணறு என்று அழைக்கப்படும்.
இந்த கிணற்றில் இருந்த தண்ணீர் இரைத்து, தான் உருவாக்கிய நந்தவன பூச்செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி வந்தார் பாபா. அவர் தண்ணீர் இரைக்க பயன்படுத்தி ஓலையால் செய்யப்பட்ட பட்டை இன்றும் இங்கு பத்திரப்படுத்தி பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. 
அதிசய நந்தா தீபம் :
இதே வளாகத்தில் சுடர்விட்டு ஒளிர்ந்து கொண்டிருக்கும் நந்தா தீபம் அதிசயமாக கருதப்படுகிறது. பாபா காலத்தில் ஏற்றப்பட்ட இந்த தீபம் இன்று வரையிலும் இடைவிடாது எரிந்து கொண்டிருக்கிறது. இந்த விளக்கிற்கு தினமும் கோவில் பூசாரிகள் எண்ணை ஊற்றுகிறார்கள். விளக்கின் திரியை மட்டும் அவர் மாற்றுவதில்லை.
ஒரே திரியிலேயே ஒளி வீசிக் கொண்டிருக்கிறது இந்த தீபம். கோவிலின் இன்னொரு பகுதியில் அருங்காட்சியகம் உள்ளது. அங்கு பாபா பயன்படுத்திய ஆடை, பல்லக்கு, கோதுமை அரைப்பதற்கு பயன்படுத்திய கல், பாத்திரங்கள் மற்றும் அவரது அரிய புகைப்படங்கள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
சத்ய நாராயண பூஜை :
இங்கு தினமும் காலை 7, 9 மற்றும் முற்பகல் 11 மணிக்கு நடைபெறும் சத்திய நாராயண பூஜை புகழ் பெற்றது. திருமணமான 100 தம்பதியர் இதில் கலந்து கொள்வார்கள். இந்த பூஜையில் திருமணம் ஆன தம்பதியர் பங்கேற்றால் குழந்தை பாக்கியம் கிட்டும். தம்பதியர் இடையே பிரச்சினைகள் இருந்தால் அதுவும் சுமூகமாக தீரும் என்பது நம்பிக்கை.
உண்டியல் காணிக்கை :
கோவிலுக்கு வருபவர்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் காணிக்கை செலுத்துகிறார்கள். திருப்பதி ஏழுமலையானுக்கு அள்ளிக் கொடுப்பது போல், இங்கு வரும் பக்தர்களும் பாபாவிற்கு காணிக்கையை அள்ளித் தருகிறார்கள். வாரம் தோறும் சனி மற்றும் புதன் கிழமைகளில் இங்குள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படுகின்றன. ஒவ்வொரு முறையும் 2 கோடி ரூபாய்க்கும் ரொக்கப் பணம் மட்டும் காணிக்கையாக கிடைக்கிறது.
திருவிழா :
குரு பூர்ணிமா, ராமநவமி, விஜய தசமி விழாக்கள் இக்கோவிலில் விசேஷமாக கொண்டாடப்படுகின்றன. குருபூர்ணிமா அன்று சாய்பாபாவின் திருவுருவச் சிலை பல்லக்கில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். தினமும் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படும் கோவில் நடை இரவு 10 மணி வரையிலும் தொடர்ந்து திறந்திருக்கும்.
பாபா கேட்ட வெந்நீர் :
சீரடி சாய்பாபா உருவச்சிலையை கழுவி சுத்தம் செய்வதற்கு தேவையான வெந்நீரை, தமிழ் பேசும் கேரளாவை பூர்வீகமாக கொண்ட ஒரு குடும்பத்தினர் கொடுத்து வருகிறார்கள். இவர்கள் தந்த வெந்நீர் கொண்டு சாய்பாபா சிலையை கழுவிய பிறகே, சாதாரண தண்ணீரால் சிலை சுத்தம் செய்யப்பட்டு, பூஜையும் நடத்தப்படுகிறது.
எங்களுக்கு பெற்றோர், சாய்பாபா கோவில் அருகே அமைந்துள்ள சிறிய வீட்டில் வசித்து வந்தனர். ஒருநாள் இரவு, எனது தாயின் கனவில் தோன்றிய பாபா, தனது விக்ரகத்தை சுத்தம் செய்ய வெந்நீர் கொண்டு வருமாறு கூறியுள்ளார்.
அன்று முதல் இப்போது வரை எங்களது குடும்பத்தினரே, பாபாவின் விருப்பப்படி அவரது திருவுருவச் சிலையை சுத்தம் செய்ய வெந்நீர் தந்து வருகிறோம்... என்கிறார். தற்போது மூன்றாவது தலைமுறையாக இக்கோவிலுக்கு வெந்நீர் தந்து வரும் பிச்சு என்கிற ராதாகிருஷ்ணன் அய்யர்.
பக்தர்களுக்கான சிறப்பு வசதிகள் :
குவியும் பக்தர்கள் :
இன்றும் அற்புதங்கள் நிகழ்த்தும் பாபாவைத் தேடி இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து செல்கிறார்கள். சாதாரண நாட்களில் அங்கு தினமும் 50 ஆயிரம் பேர் வருகை தருவதாகவும், விசேஷ நாட்களில் (வியாழன், சனி மற்றும் ஞாயிறு) அவர்களது எண்ணிக்கை ஒரு லட்சத்தை தொடுவதாகவும், விழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதாகவும் சீரடி திருத்தலம் பற்றிய ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
தங்கும் அறைகள் :
இந்தியா முழுவதிலும் இருந்து தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால், அவர்களது வசதிக்காக குறைந்த வாடகை கட்டணத்துடன் கூடிய 1,500 தங்கும் அறைகள் கட்டப்பட்டுள்ளன.
ரெயில் டிக்கெட் முன்பதிவு :
வெளியூர் பயணிகளின் வசதிக்காக கோவில் வளாகத்திலேயே ரெயிலுக்கு முன்பதிவு செய்யும் டிக்கெட் கவுண்டர்களும் இந்திய ரெயில்வே சார்பில் திறக்கப்பட்டுள்ளன.
மிகப்பெரிய உணவுக்கூடம் :
திரண்டு வரும் பக்தர்களின் உணவு தேவையை பூர்த்தி செய்வதற்காக அதிக இடவசதி கொண்ட உணவுக் கூடமும் இக்கோவிலில் செயல்படுகிறது. ஆசியாவிலேயே மிகப்பெரிய உணவுக்கூடமான இங்கு ஒரே நேரத்தில் 7 ஆயிரம் பேர் சாப்பிடலாம். இங்கு உணவருந்த வரும் பக்தர்களுக்கு 10 ருபாய் கட்டணத்தில் பருப்புக்குழம்பு, சாதம், சப் பாத்தி, பூரி 2 வகை கூட்டு மற்றும் இனிப்புடன் தரமான சாப்பாடு வழங்கப்படுகிறது.

GURUVE SARANAM,,,,,PANVEL BALAGANE POTRI POTRI....SWAMIYE SARANAM IYYAPPA....

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A PLEASANT DAY .. WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD VISHNU ..
MAY HE FULFILL ALL YOUR WISHES AND SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH .. AND PROSPERITY .. 
" OM NAMO NAARAAYANAAYA " 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று இப்பிரபஞ்சத்தைக் காத்தருளும் ஸ்ரீமஹாவிஷ்ணுவிற்கு உகந்த நாளுமாகும் 
தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான
நன்னாளாக அமைந்திடவும் .. நினைத்த அனைத்து காரியங்களும் ஈடேறவும் பகவானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் நாராயணாய வித்மஹே ! 
வாசுதேவாய தீமஹி ! 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! 

ஈரேழு உலகங்களையும் .. சகல உயிர்களையும் காக்கும் கடவுள் என்ற சிறப்பு பெற்றவர் மஹாவிஷ்ணுவே ! உலக உயிர்களை காப்பதற்காக தர்மத்தை நிலைநாட்டுவதற்காக
விஷ்ணுபகவான் எடுத்த அவதாரங்கள் பல .. ‘ விஷ்ணு ‘ என்றால் .. ‘ எங்கும் வியாபித்திருப்பவன் ‘ என்று பொருள்படும் .. 

வெண்மைநிறம் கொண்ட பாற்கடலில் வீற்றிருப்பதால் அவர் நாராயணன் என்றும் அழைக்கப்படுகிறார் .. ‘ நாரம் ‘ என்றால் ‘ வெண்ணிற நீர் ‘ என்று பொருள்படும் .. மஹாவிஷ்ணு வைணவ சமுதாயத்தின் நாயகனாக விளங்குகிறார் .. 

அவரை வழிபட்டால் வைகுண்டத்தை அடையலாம் .. பக்திமார்க்கத்தை விரதமாகக் கொண்டது வைணவம் ..
இதில் விக்கிரக ஆராதனைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது .. 

பரிசுத்தமான பக்தியுடன் .. மஹாவிஷ்ணுவிடம் சரணாகதி அடைந்துவிட்டால் .. பக்தனின் அகங்காரம் அழிந்து ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஒன்றிவிடுவது சாத்தியம் .. என்கிறது வைணவம் .. 

பிறவித் துன்பத்தினை துடைக்கவல்ல மஹாவிஷ்ணுவைப் போற்றுவோம் ! துன்பமற்ற வாழ்வினை பெற்றிடுவோமாக ! ஓம் நமோ நாராயணாய! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

PANVEL BALAGAN PATHAM POTRI.....GURUVIN PADHARA VINDHANGALE POTRI POTRI...SWAMIYE SARANAM IYYAPPA...

GOOD MORNING DEAR FRIENDS - WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA .. MAY HE SHOWER YOU WITH GOOD LUCK .. GOOD FORTUNE .. AND HAPPINESS .. " OM MURUGA " 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய்க்கிழமையாகிய இன்று கலியுகவரதனாகிய முருகப்பெருமானுக்கு உகந்த தினமும் ஆகும் .. தங்களனைவரது வல்வினைகளை நீக்கி .. வரும்வினைபோக்கி .. செல்வமும் .. செல்வாக்கும் .. அழகும் .. அறிவும் தந்து தங்கள் வாழ்வை மிளிரச்செய்யும்
வள்ளிமணாளனை போற்றித் துதிக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாஸேநாய தீமஹி ! 
தந்நோ ஷண்முஹ ப்ரசோதயாத் !! 

செவ்வாய்க்கிழமை ஆறுமுகக்கடவுளுக்கு உகந்த நாளாகும் .. கிரகங்களில் அங்காரகன் என்பதே செவ்வாய் என்றழைக்கப்படுகிறது .. அங்காரகனின் அதிபதி முருகப்பெருமானே ! அங்காரகனால் ஏற்படும் அனைத்து கிரகதோஷங்களை நீக்கவேண்டுமானால் செவ்விதழோன் ஆறுமுகனை வழிபாடு செய்தல் நலமே ! 

ஆறுமுகம் உடையவன் ஷண்முகன் .. கணேஷ .. சிவ .. சக்தி .. ஸ்கந்த .. விஷ்ணு .. சூர்ய என்ற ஆதிசங்கரர் வகுத்த ஷண்மதம் ஒன்றிய வடிவினன் .. அதாவது .
மு - என்றால் விஷ்ணு ..
ரு - என்றால் ருத்ரன் ..
கு - என்றால் கமலத்தில் உதித்தவன் .. அதாவது பிரம்மன் 

முருகனின் ஒரு திருநாமம் கோடி நாமங்களுக்குச் சமம் என்பர் .. முருகப்பெருமான் சிவபெருமானின் அம்சமாக அவதரித்தவர் .. ஓம் எனும் பிரணவமந்திரத்தின் பொருளை தந்தைக்கே குருவாக இருந்து உபதேசித்தவர் .. அதே மந்திரத்தின் பொருள் தெரியாத பிரம்மாவை சிறையில் அடைத்தவர் .. சூரணை சம்ஹாரம் செய்து பின்
மஹாவிஷ்ணுவின் பாசத்திற்கு கட்டுப்பட்டவர் .. இவ்வாறு முருகன் மும்மூர்த்திகளாகவும் திகழ்கிறார் .. 

இதனை உணர்த்தும் விதமாக திருச்செந்தூரில் முருகப்பெருமான் ஆவணி .. மாசி மாத திருவிழாவின் போது .. சிவன் .. விஷ்ணு .. பிரம்மா என மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார் .. 

முருகன் சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி சிவபெருமானாக காட்சி தருகிறார் .. 
வெண்ணிற ஆடையில் பிரம்மாவின் அம்சமாக அருளுகிறார் .. 
பச்சை வஸ்திரம் சாத்தி பெருமாள் அம்சத்தில் காட்சியளிக்கிறார் .. 

புன்சிரிப்பிலே பன்வேல் பாலகனாக காட்சி அளிக்கிறார்...
 

சொல்லில் அடங்காத் திருப்புகழ் கொண்டவனே ! உள்ளம் ஒன்றி வழிபடுபவர்களுக்கு அருளைப் பொழியும் ஆறுமுகனே ! திக்கற்றவர்களுக்கு துணைநிற்கும் திருமுருகனே ! நம்பினோரைக் கரைசேர்த்திடும் நாயகனே ! நம்வாழ்க்கைப் பயணத்திற்கு வழித்துணையாய் வந்தெம்மை காத்தருள்வாயாக !! 

“ ஓம் றீம் ஐயும் கிலியும் ஔவும் சௌவும் சரவணபவ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..