நவக்கிரக கோவில்களை ஒரே நாளில் தரிசிக்க , ஆன்மீக சுற்றுலாவிற்கு- படியுங்கள் உணருங்கள் 1.சந்திர(ன்) பகவான்: நவகிரக ஸ்தலங்களில் நீங்கள் முதலில் பார்க்க வே ண்டியது திங்களூர்தான். நீங்கள் பேருந்தில் செல்ல விரும்பினால் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து திங்களூ ர் செல்வதற்கு நிறைய பேருந்துகள் உள்ளன. இதன் மூலம் பாபநாசம், ஐயம்பேட்டை வழியாக 33கிலோமீட்டர் தொலை வில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேரத்தில் அடைந்துவிட முடி யும். இதற்கு சரியாக காலை 5.30 மணிக்கெல்லாம் கும்பகோணத்தி லிருந்து நீங்கள் கிளம்பவேண்டும் . பின்னர் திங்களூர் கைலாசநாதர் கோயிலில் சுவாமி தரிசனத்தை மு டித்துக் கொண்டு 7 மணிக்கு கும்பகோணம் கிளம்பலா ம். 2.குரு பகவான்: கும்பகோணத்தில் காலை உணவை முடித்துக் கொண் டு 8.30 மணிக்கெல்லாம் ஆலங்குடி கிளம்பவேண்டு ம். கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து ஆலங் குடி செல்ல எண்ணற்றபேரு ந்துகள் கிடைக்கின்றன. அதோடு கும்பகோணத்திலிரு ந்து 17கிலோமீட்டர் தூரத்தில் உள் ள ஆலங்குடியை 30 நிமிடத்தில் அடைந்துவிடலாம். பின்னர் ஸ்ரீ ஆபத் சகாயே ஸ்வரர் கோயிலில் 30 நிமிடங்களுக்குள் சுவாமி தரிச னத்தை முடித்துக்கொண்டு 9.30 அல்லது 9.45 மணியளவில் கும்ப கோணத்திற்கு திரும்ப வே ண்டும் 3. ராகு பகவான் கும்பகோணத்திற்கு வெகுஅருகிலேயே 6கிலோமீட்டர் தொலைவில் திருநாகேஸ்வரம் அமைந்திருப்பதால் 10அல்லது 15 நிமிடங்களில், 10.45 மணியளவில் திருநாகேஸ் வரம் ராகு கோயிலை அடைந்து விட முடியும். நாகநாத சுவாமி ஆலயம் 100 தூண்களை கொண் ட பெரிய கோயில் என்பதால் தரி சனம் செய்து முடிக்க 30 நிமிடங் களுக்கு மேல் ஆகும். பின்னர் 11.15 மணி க்கு கும்பகோணம் திரும்ப வேண்டும். 4. சூரிய(ன்) பகவான் சூரியனார்கோவில் கும்பகோணத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. எனவே நீங்கள் 11.45- க்கு புறப்பட்டால் கூட 12.15 மணிக் கெல்லாம் சூரியனார் கோவிலை அடைந்துவிடலாம். சூரியனார் கோவிலில் உள்ள சிவ சூரிய நாரா யண கோவில் மற்ற நவகிரக கோ யில்களைபோல் அல்லாமல் சூரிய னை முதன்மையாக கொண்டு நவ க்கிரகங்களுக்கென தனித்து அமைந்த கோயில் என்ற சிறப்பை பெற்றுள்ளது. இங்கு சூரிய பகவா னை தரிசித்து முடித்தவுடன் 12.45 மணிக்கெல்லாம் கஞ்சனூர் கிளம்ப வேண்டும். 5. சுக்ர(ன்) பகவான் சூரியனார் கோவிலிலிருந்து கஞ்சனூர் 5 கிலோ மீட் டர் தொலைவிலேயே அமைந்திருப்பதால் பேருந்து அ ல்லது கார்மூலமாக 10நிமிடங்களி ல் கஞ்சனூரை அடைந்துவிடலாம். எனவே 1 மணிக்கு முன்பாகவே உங் களால் அக்னீஸ்வரர் ஸ்வாமி கோ விலுக்கு சென்றுவிடமுடியும். அதோ டு 1.15 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டுவிடும் என்பதால் கால் மணி நேரத் திற்குள்ளாக சுவாமி தரி சனத்தை முடித்துக்கொள்ளவேண்டு ம். 6. செவ்வாய் (அங்காரகன்) பகவான் நவகிரக கோயில்கள் அனைத்திலுமே 1.15 மணிக்கு நடை சாத்தப்பட்டால் பின்பு 4 மணிக்கே கோயில் கத வுகள் திறக்கப்படும். எனவே 1.30 மணிக்கு கஞ்சனூரிலிருந்து மயி லாடுதுறை செல்லும்பேருந்தில் ஏறினால் 20 கிலோமீட்டர் தொ லைவிலுள்ள மயிலாடுதுறை யை 2அல்லது 2.15மணிக்கெல் லாம் அடைந்துவிடலாம். அதன் பின்பு மயிலாடுதுறையிலேயே மதிய உணவைமுடித்துக்கொண் டு ஆற அமர 3.15 மணியளவில் கிளம்பினால்கூட 15 கிலோ மீட் டர் தூரமுள்ள வைத்தீ ஸ்வரன் கோயிலை 3.45மணிக்கெல்லாம் அடைந்துவிடமுடியு ம். பின்னர் கோயில்நடை திறந் து பின்பு சுவாமி தரிசனத்தை மு டித்துக்கொண்டு 4.30 மணிக்கு வைத்தீஸ்வரன் கோயிலிலிருந் து கிளம்பினால் சரியாக இருக்கு ம். 7. புதன் பகவான் வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 4.30மணிக்கு கிளம் பினால் 16கிலோமீட்டரில் அமைந்துள்ள திருவெண்காடு ஸ்தலத்தை 5 மணிக்கு அடைந்துவிட முடியும். பின்னர் ஸ்வேதா ரண்யேஸ்வரர் கோயிலில் வீற்றிருக்கும் புதன் பகவானையும், சிவபெருமானையு ம் தரிசித் துவிட்டு 5.30 மணிக்கு கிளம்ப வேண்டும். 8. கேது பகவான் திருவெண்காட்டிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் அமையப்பெற்றுள்ள கேது பகவானின் கீழ் பெரும் பள் ளம் ஸ்தலத்தை 15 நிமிடங்களில் அடைந்துவிடலாம். இந்த கீழ்பெரு ம்பள்ளம் கோயிலையும் தஞ்சாவூ ரில் இருக்கும் பிரகதீஸ்வரர் கோயி லையும் இணைக்கும் சுரங்கப்பா தை ஒன்று இங்கு அமைந்திருப்ப தாக சொல்லப்படுகிறது. ஜாதகத்தில் தவறான இடத்தி ல் கேது இருப்பதால் தோஷம் அடைந்த மக்கள், அதற் கு பரிகாரம் செய்ய இந்த கோயிலுக்கு வருகிறார்கள். 9. சனி பகவான் நவகிரக ஸ்தலங்களின் சுற்றுலாவில் நீங்கள் இறு தியாக செல்லவிருக்கும் இடம் சனி பகவான் வீற்றிரு க்கும் திருநள்ளாறுஸ்தலம். கீழ்பெ ரும்ப ள்ளத்திலிருந்து 6.15அல்லது 6.30மணிக்கு புறப்பட்டால் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருநள்ளாறு ஸ்தலத்தை திருக்க டையூர், காரைக்கால் வழியாக 8 மணிக்கெல்லாம் அடைந்துவிடமு டியும். அதன்பின்னர் ஸ்ரீதர்பாரன் யேசுவரர் திருக்கோவிலில் சனிபக வானையும், சிவபெருமானையும் தரிசிக்கலாம்.

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சனிக்கிழமையாகிய இன்று ஈஸ்வரனைத் துதித்து தங்களனைவருக்கும் சகல கிரகதோஷங்களும் நீங்கி புத்துணர்வு பெற்று . மகிழ்ச்சிகரமான வாழ்வு வாழ்ந்திட வாழ்த்துகின்றேன் .. வணங்குகின்றேன் .. “ ஓம் சிவாய நமஹ “ .. சிவன் கழுத்தில் பாம்பு இருப்பது ஏன் ? பாம்பின் குணத்தை யாரும் அறியார் .. எப்போது சீறும் .. எப்போது சினேகமாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ளமுடியாது .. ஆகவே தான் ஜோதிடத்தில் கூட ராகு கேது திசைகள் பாம்பின் குணத்தை ஒத்திருக்கும் .. யாருக்கும் கட்டுப்படாத நாகம் இறைசக்திக்கு மட்டுமே கட்டுப்பட்டுள்ளது என்பதை நமக்கு உணர்த்தவே சிவன் கழுத்தில் பாம்பு இருக்கின்றது .. இன்னொரு தத்துவமும் இருக்கின்றது - மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினி சக்தியாகிய சிவம் ஒரு அசைவற்ற பாம்பைப்போல உறங்கிக்கொண்டிருக்கிறது .. இதை எழுப்பி முதுகுத்தண்டின் வழியே தலையில் இருக்கும் சக்தியோடு சிவம் சேரும்போது அளப்பரிய ஞானம் உண்டாகும் ஒருவனுக்கு எட்டு சித்திகளும் கிடைக்கும் .. இந்த தத்துவத்தை விளக்கவே குண்டலினி சக்தியாகிய பாம்பை தன் கழுத்தில் அணிந்திருக்கிறார் .. சிவனைப்போற்றுவோம் அவரது திருவருளைப் பரிபூரணமாகப் பெற்றிடுவோம் ! எல்லாம் இனிதே நிறைவேறும் ! வெற்றி நிச்சயம் !! .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. . WISH YOU ALL A BLESSED SATURDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. MAY HE SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH AND HAPPINESS .. " OM SHIVAAYA NAMAHA "

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வெள்ளிக்கிழமையாகிய இன்று சகலசௌபாக்கியங்களையும் அள்ளித்தரும் அன்னை மஹாலக்ஷ்மியைத்துதித்து தங்களனைவருக்கும் எல்லா வளமும் .. நலமும் பெற்று மகிழ்ச்சிகரமான வாழ்வு வாழ்ந்திட வாழ்த்துகின்றேன் .. வணங்குகின்றேன் .. நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே ! சங்க சக்ர கதாஹஸ்தே ! மஹாலக்ஷ்மி நமோஸ்துதே !! ”லக்ஷ்மிகடாக்ஷ்ம்” என்னும் சொல் ஏதோ செல்வச்செழிப்பை மட்டும் குறிப்பது அல்ல .. அது ஒரு மிகப்பெரிய பதம் .. சகலசௌபாக்கியங்களையும் குறிப்பது .. வெற்றி .. வித்தை .. ஆயுள் .. சந்தானம் .. தனம் .. தான்யம் .. ஆரோக்கியம் .. இப்படி அனைத்தும் ஒருங்கே அமைவது தான் “லக்ஷ்மிகடாக்ஷ்ம்” .. ராமநாமம் உச்சரிக்கப்படும் இடத்திற்கு அனுமன் தேடி வந்துவிடுவான் ..அங்கு அவனைக் கூப்பிடவேண்டிய அவசியம் கூட இல்லை .. அதேபோல ஸ்ரீமன் நாராயணனின் பெருமை பேசப்படும் இடத்தில் .. அவனது பாடல்கள் ஒலிக்கும் இடத்தில் அன்னை திருமகள் தானாகவே வந்துவிடுகிறாள் .. ஆகவே இல்லம்தோறும் காலைவேளைகளில் ‘வெங்கடேச சுப்ரபாதம்” மாலைவேளைகளில் “விஷ்ணுசஹஸ்ரநாமமும்” ஒலிப்பது அவசியம் .. அந்தவீடுகளில் செல்வச்செழிப்பு தாமாகவே வந்துவிடும் .. அன்னையைப் போற்றுவோம் அவளது அருட்கடாக்ஷ்ம் பெறுவோமாக .. வாழ்க வளமுடனும் நலமுடனும் .. .. WISH YOU ALL A BLESSED FRIDAY WITH THE BLESSINGS OF GODDESS LAXMI .. MAY SHE SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH AND HAPPINESS .. "JAI SHAKTHI" .. "JAI MATA DI " ..

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வியாழக்கிழமையாகிய இன்று அனைவராலும் போற்றி வணங்கப்படும் குருநாதர் ஷீரடி சாய்பாபாவினது தினம் ஆகும் அவரைத் துதித்து தங்களனைவருக்கும் சகல சௌபாக்கியங்களும் பெற்று .. உடல்நலமும் .. மனநலமும் ஆரோக்கியத்துடன் திகழவும் பிரார்த்திக்கின்றேன் .. ஓம் ஷீரடி வாஸாய வித்மஹே ! ஸச்சிதானந்தாய தீமஹி ! தந்நோ ஸாயி ப்ரசோதயாத் !! .. கடவுள் ஒவ்வொரு யுகத்திலும் மனிதவடிவம் எடுத்து மக்களுக்கு பல நன்மைகளை செய்கிறார் .. அதுபோல இந்த கலியுகத்தில் இந்திய மண்ணில் மனிதவடிவெடுத்த கடவுள் ஷிர்டி சாய்பாபா .. ஷிர்டி மண்ணை எந்த ஒரு மனிதனும் ஒருமுறை மிதித்துவிட்டால் பெரும் புனிதத்தன்மை ஏற்படும் பாபா இருந்து .. வாழ்ந்து .. மறைந்து இன்னும் நம்மைவிட்டு நீங்காமல் அருள் செய்துகொண்டு இருக்கும் புனிதத்தலமே ஷிர்டி .. இந்த கலியுகம் இருமகான்களால் மட்டுமே புனிதப்படப் போகிறது .. ஒருவர் ஷீரடி சாய்பாபா .. மற்றொருவர் பூஜ்ஜிய ஸ்ரீகுரு ராகவேந்தர் .. மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஸ்ரீ தத்தாத்ரேயரின் (சிவன் .. பிரம்மா .. விஷ்ணு) அவதாரமாகத் தோன்றி மக்களை பக்திமார்க்கத்தில் நன்மையடையச் செய்தவரே ஷீரடி சாய் .. ஸ்ரீ கோவிந்தராவ் ரகுநாத் தபோல்கர் அவர்கள் ஸ்ரீஷீரடி சாய்பாபாவின் அருள்பெற்று எழுதிய ஸ்ரீ சாய்சத்சரிதம் பாபா பற்றிய எல்லாத் தகவல்களையும் நமக்கு தெரிவிக்கின்றது .. ஒவ்வொரு சாய் அடியவர்களின் வீட்டிலும் இருக்க வேண்டிய புனித நூல் “ சாய்சரிதம் “ .. 1 - துவாரகாமாயி - நீங்கள் அமர்ந்துகொண்டிருக்கும் இதுவே நமது துவாரகாமாயி தனது மடியில் அமரும் குழந்தைகளின் எல்லா ஆபத்துக்களையும் .. கவலைகளையும் அவர் தடுத்து விலக்குகிறார் .. இந்த மசூதிமாயி மிகவும் கருணையுள்ளவர் அவர் எளிய பக்தர்களின் தாயாவார் .. அவர்களைப் பேராபத்துக்களிலிருந்து அவள் பாதுகாக்கிறாள் .. ஒரு மனிதன் அவர் மடியில் ஒரே ஒரு முறை அமர்ந்தால் அவனது எல்லா கஷ்டங்களும் முடிவடைந்துவிடும் .. அவரது நிழலில் இளைப்பாறுவோர் பேரானந்தம் எய்துகின்றனர் .. 2- வாதாடுதல் நன்றன்று - போராடி வாதாடுதல் நன்றன்று .. எனவே விவாதிக்கவேண்டாம் .. மற்றவர்களுடன் போட்டிபோட வேண்டாம் .. எப்போதும் உங்களது அக்கறையினையும் .. நலத்தினையுமே கருத்தில் கொள்வீர்களாக.. கடவுள் உங்களை காப்பாற்றுவாராக .. 3 - உணவு - பசியாய் இருப்போருக்கு உணவு அளிப்பவன் உண்மையிலேயே எனக்கு உணவை பரிமாறுகிறான் என்று நிச்சயமாக அறிந்து கொள்வாயாக .. இதை ஒரு ஆதாரரீதியாகக் கருது .. 4 - நாமம் - நாமம் என்றால் சொரூபத்தை ஒருமித்த உச்சரிப்பின் மூலம் உண்மையை கிரஹித்தலே .. என் நாமத்தை உச்சரிப்பதால் வேறு சிந்தனைகள் தோன்றாது .. அனர்த்தமான துன்பங்கள் வராது .. புளியினால் பித்தளைப்பாத்திரத்தின் களிம்பு நீங்குவது போல் என் நாமஸ்மரணையினால் மாயை நசிகிறது என் சுத்த தத்துவம் என் நாமஸ்மரணையினால் தெரியவரும் .. 5 - சாயி என்ற பரம்பொருள் - பஞ்சபூதங்களான இவ்வுடம்பு அழியக்கூடியது .. நிலையற்றது ஆனால் அதனுள் இருக்கும் ஆன்மாவே பரம்பொருள் .. அதுவே அழியாததும் நிலையானதுமான பரிபூர்ண உண்மையாகும் .. இப்புனித மெய்யை உணர்வுநிலை அல்லது பிரம்மமே மனதிற்கும் புலன்களுக்கும் அதிபதியாகவும் ஆட்டுவிப்போராகவும் உள்ள சாயி என்ற பரம்பொருளே !! (பாபாவின் அருள்மொழி) அற்புதமகான் ஸ்ரீ ஷிர்டி சாய்பாபாவின் “ பாபா” என்ற இரண்டெழுத்து பேராற்றல் பெற்ற தாயைப்போல பரிவுகாட்டும் கருணைக்கடல் .. உலகம் போற்றும் பாபாவைப் போற்றி நாமும் துதித்து அவரது அருட்கடாக்ஷ்த்தைப் பெறுவோமாக .. “ ஓம் சாய் ராம் “ .. .. WISH YOU ALL A BLESSED THURSDAY AND MAY SHIRDI SAI BLESS YOU AND GUIDES YOU IN EACH STEPS YOU TAKE TODAY AND FOREVER MORE .. " OM SAI RAM " ..

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று கார்த்திகை விரதம் .. தங்களனைவருக்கும் வாழ்வில் நிம்மதி .. சந்தோஷம் .. உற்சாகம் .. வாழ்வில் என்றும் நிலைத்திட கலியுகவரதனாகிய கார்த்திகேயனைப் பிரார்த்திக்கின்றேன் .. ஓம் தத்புருஷாய வித்மஹே ! மஹேஷ்வரபுத்ராய தீமஹி ! தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத் !! .. சிவபெருமான் தன் ஆறுமுகத்திலிருந்தும் நெற்றிக்கண் நெருப்பினை வெளியிட அதைத் தாங்கிய வாயுபகவான் சரவணப்பொய்கை ஆற்றில்விட்டார் .. அந்த நெருப்புகள் ஆறுகுழந்தைகளாகமாறி கார்த்திகை பெண்களிடம் வளர்ந்தனர் .. அன்னையான பார்வதி ஆறுகுழந்தைகளையும் ஒருசேர அணைக்கும் பொழுது ஆறுமுகனாகத் தோன்றினார் என்று இந்துசமய நூல்கள் கூறுகின்றன .. முருகு என்ற சொல்லுக்கு அழியாத அழகும் .. குன்றாத இளமையும் .. இயற்கை மணமும் .. எல்லாப்பொருள்களிலும் கடவுள் தன்மை உண்டு என பல பொருள்கள் உண்டு .. மு - என்பது திருமாலையும் .. ரு - என்பது சிவபெருமானின் அம்சத்தையும் .. க - என்பது பிரம்மனையும் குறிக்கும் என்பர் .. முருகன் என்றால் அழகனே ! முருகனை உளமாறத் துதித்து குறையாத பெருஞ்செல்வத்தைப் பெறுவீர்களாக .. சரணம் சரணம் சரவணபவ ஓம் .. சரணம் சரணம் சண்முகா சரணம் .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. . MAY LORD MURUGA BLESS YOU AND GUIDES YOU IN EACH STEPS YOU TAKE TODAY AND FOREVER MORE .. " OM MURUGA " ..

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய்க்கிழமையாகிய இன்று சஷ்டித் திதியும் வருவது சிறப்பு .. முருகனாலயம் சென்று முருகனை வழிபடுவது சாலச்சிறந்தது .. வல்வினை நீக்கி .. வரும்வினைப்போக்கி .. செல்வமும் .. செல்வாக்கும் தந்து .. அழகும் .. அறிவும் தந்திடும் வள்ளிமணாளனை வடிவேலவனைத் துதித்து தங்களனைவருக்கும் அனைத்து காரியங்களிலும் சித்தியும் .. மனமகிழ்வும் தந்திட பிரார்த்திக்கின்றேன் .. ஓம் தத்புருஷாய வித்மஹே ! மஹேஷ்வர புத்ராய தீமஹி ! தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத் !! .. வேலவனைப் போற்றுவோம் வாழ்வில் தாங்கள் வேண்டிய யாவும் நிச்சயம் கைகூடும் .. நிம்மதி .. சந்தோஷம் .. உற்சாகம் வாழ்வில் நிறையும் .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA .. MAY HE SHOWER YOU WITH WEALTH .. HEALTH AND A VICTORIOUS LIFE TOO .. " OM MURUGA " ..

பிரதோஷ நேரத்தில் சிவபெருமானை வழிபடுவது எப்படி?



பிரதோஷம் என்றால் குற்றமில்லாதது என்று பொருள். எனவே, குற்றமற்ற இந்தப் பொழுதில் இறைவனை வழிபடுவதால் நம்முடைய தோஷங்கள் நீங்கும் என்றும் ஆன்றோர்கள் கூறுவர். இரவும் பகலும் சந்திக்கும் நேரத்துக்கு உஷத் காலம் என்று பெயர். இந்த வேளையின் அதிதேவதை சூரியனின் மனைவி உஷாதேவி. அதேபோல் பகலும் இரவும் சந்திக்கும் நேரம் பிரத்யுஷத் காலம் இதன் அதிதேவதை, சூரியனின் மற்றொரு தேவியாகிய பிரத்யுஷா. அவள் பெயரால் இது பிரத்யுஷத் காலம் எனப்பட்டு, பேச்சுவழக்கில் பிரதோஷ காலம் ஆனதாகச் சொல்வர்.
பிரதோஷ விரதம்: பிரதோஷ விரதம் சிவமூர்த்திக்கு உரிய பலவித விரதங்களில் முக்கியமானது.இவ்விரதத்தை அனுஷ்டிப்போர் துன்பங்களில் நின்றும் நீங்கி இன்பத்தை எய்துவர். பிரதோஷ நேரத்தில் கடவுளை நினைத்துக் கொண்டால், கேட்ட கோரிக்கை பலிக்கும் என்பது நம்பிக்கை. அலுவலகத்தில், பணியில் இருப்பவர்கள் இந்நேரத்தில், ஒரு விநாடி தங்கள் இஷ்ட தெய்வத்தை நினைத்துக் கொள்வது நல்லது.

பிரதோஷ காலத்தில் சிவபெருமானை வழிபடுவது எப்படி?

பிரதோஷ வேளையில் ஈசனை வழிபட அனைத்தும் சித்திக்கும். இக்காலத்தில் நந்தி தேவரை வழிபடுவது சிறப்பாகும். வலம் வருதல் : சாதாரண நாளில் சிவ சந்நிதியை மூன்று முறை வலம்வர வேண்டும். ஆனால் பிரதோஷ காலத்தில், சோம சூத்திரப் பிரதட்சணம் செய்ய வேண்டும் சோமசூத்தகப் பிரதட்சிணம் என்பது முதலில் சிவலிங்கத்தையும், நந்தியையும் வணங்கிக் கொண்டு அப்பிரதட்சணமாக (தட்சிணாமூர்த்தி சன்னதி வழியாக) சண்டேசுவரர் சன்னதி வரை சென்று அவரை வணங்கிக் கொண்டு, அப்படியே திரும்பி வந்து, முன்போல் சிவலிங்கத்தையும், நந்தியையும் வணங்கிக் கொண்டு, வழக்கம் போல்  அப்பிரதட்சணமாக ஆலயத்தை வலம் வரவேண்டும். அப்படி வலம் வரும் பொழுது சுவாமி அபிஷேக தீர்த்தம் வரும் தொட்டியை (கோமுகத்தை) கடக்காமல் அப்படியே வந்த வழியே திரும்பி, அப்பிரதட்சணமாக சன்னதிக்கு வந்து சிவலிங்கத்தையும், நந்தியையும்  வணங்க வேண்டும். இப்படி மூன்று முறை வரவேண்டும். இது அநேக அசுவமேதயாகம் செய்த பலனைத் தரும் என சான்றோர் கூறியுள்ளனர். அந்தந்த திசாபுத்திகள் நடைபெறுபவர்கள் அந்தந்த கிழமைகளில் வரும் பிரதோஷத்தன்று இறைவனை இவ்வாறு வலம் வருவதால் இன்னல்கள் நீங்கி நன்மைகள் பெறுவர்.

விரதம் அனுஷ்டிக்கும் முறை: வளர்பிறை தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதியன்று அதிகாலையில் எழுந்து நீராடி நித்தியக் கடன்களை முடிக்கவேண்டும். சிவாலயம் சென்று வழிபடவேண்டும். அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருக்க வேண்டும். திருமுறைகளை ஓத வேண்டும். பிரதோஷநேரம் மாலை 4.30 முதல் 6.00 மணி வரை. இந்நேரத்தில் சிவாலயம் சென்று உள்ளம் உருகி ஐந்தெழுத்தை (சிவாயநம) ஓதி வழிபட வேண்டும். வசதி உள்ளவர்கள் சுவாமிக்கும் அம்பிகைக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்தல் அவசியமாகும்.

பிரதோஷ பூஜை செய்தால் ஒருவருக்குக்கிட்டும் பலன்கள்:

1. துன்பம் நீங்கி - இன்பம் எய்துவர்.
2. மலடு நீங்கி - மகப்பேறு பெறுவர்
3. கடன் நீங்கி - தனம் பெறுவர்
4. வறுமை ஒழிந்து - செல்வம் சேர்ப்பர்
5. நோய் நீங்கி - நலம் பெறுவர்.
6. அறியாமை நீங்கி - ஞானம் பெறுவர்
7. பாவம் தொலைந்து - புண்ணியம் எய்துவர்
8. பிறவி ஒழித்து - முக்தி அடைவர்.



A Dream in Marble (Dilwara Temples at Mount Abu, Rajasthan) Architectural wonders The Jain Temples at Mount Abu, built in the Nagara Style are among the finest monuments of India. The first of these ornate temples dates back to 1032 CE, approximately the period in which the grand Brihadeeswarar Temple at Thanjavur was built in the Dravindian Style of architecture . The Dilwara temples have been described as a dream in marble. Mount Abu - a popular hill station, located in Rajasthan

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சனிக்கிழமையான இன்று ஈஸ்வரனைத் துதித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாய் அமைந்திடவும் .. செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றிபெறவும் வாழ்த்தி வணங்குகின்றேன் .. “ ஓம் நமசிவாய “ போற்றியோம் நமசிவாய புயங்களே மயங்குகின்றேன் .. போற்றியே நமசிவாய புகலிடம் பிறிது ஒன்று இல்லை .. போற்றியோ நமசிவாய புறம் எனைப் போக்கல் கண்டாய் .. போற்றியோ நமசிவாய ! ஜெய ஜெய போற்றி ! போற்றி ! சிவனை நாம் வணங்கும் போது “ ஓம் சிவாய நம “ என்ற மந்திரத்தை ஓதி வணங்குகின்றோம் .. இம்மந்திரம் பல பெரிய தத்துவங்களை உணர்த்துகிறது .. இதில் உள்ள - சி - எனும் எழுத்து சிவனையும் .. வா - எனும் எழுத்து அம்பாளையும் .. ய - எனும் எழுத்து மனிதர்களையும் .. நம - எனும் சொல் மும்மலங்களான மாயை .. ஆணவம் .. மற்றும் கர்வத்தையும் குறிக்கிறது .. மனிதன் இம்மந்திரத்தைச் சொல்லி இறைவனையும் இறைவியையும் வேண்டும்போது கர்வம் .. ஆணவம் .. மற்றும் உலக மாயையிலிருந்து (ஆசை) விடுபடலாம் என்பர் .. சிவனைப்போற்றுவோம் அவரது திருவருளைப் பெறுவோமாக வாழ்க வளமுடனும் நலமுடனும் .. . WISH YOU ALL A BLESSED SATURDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. MAY HE SHOWER YOU WITH EVERY SUCCESS IN EACH STEPS YOU TAKE TODAY AND FOREVER MORE .. " OM NAMASHIVAAYA " ..

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வெள்ளிக்கிழமையாகிய இன்று அன்னை மஹாலக்ஷ்மியைத் துதித்து தங்களனைவருக்கும் அன்னையின் அருட்கடாக்ஷ்மும் ..நிறைந்த செல்வமும் இல்லம் தேடிவர பிரார்த்திக்கின்றேன் .. நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே ! சங்க சக்ர கதா ஹஸ்தே ! மஹாலக்ஷ்மி நமோஸ்துதே !! .. அன்னை மஹாலக்ஷ்மி நிதர்சனமானவள் .. நித்யசுமங்கலி .. அண்டப் பிரபஞ்சம் எங்கிலும் வியாபித்திருப்பவள் .. அப்படி இருந்தும் மக்களின் நல்வாழ்வுக்கென மண்ணுலகில் மங்களமாக மக்களுடன் கலந்திருப்பவள் .. இந்த பூமியே அவள்தான் .. ஒவ்வொரு மனிதனிடமும் கல்வியாக .. பொன் .. பொருள் .. என வளர்செல்வமாக .. நெஞ்சுரமாக .. நல்வாழ்வில் விளையும் மகிழ்ச்சியாக கூடிவாழ்வதில் மலரும் அன்பாக .. நிறைவாழ்வில் புகழாக .. இறைவாழ்வில் நித்யசாந்தியாக பொலிபவள் அவளே ! அவள் மஹாலக்ஷ்மியே !! .. அன்னையைப் போற்றுவோம் .. மகிழ்ச்சிகரமான வாழ்வைப் பெறுவோமாக .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. .. WISH YOU ALL A BLESSED FRIDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF GODDESS LAXMI .. MAY SHE SHOWER YOU WITH HEALTH .. WEALTH AND HAPPINESS .. " OM SHAKTHI " .. " JAI MATA DI " ..

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வியாழக்கிழமையாகிய இன்று அனைவராலும் போற்றி வணங்கப்படும் குருநாதர் ஷீரடி சாய்நாதரின் தினமும் ஆகும் .. அவரது பாதம் பணிந்து தங்களனைவருக்கும் அவரது அன்பும் .. பூரண திருவருளும் கிடைக்கப் பிரார்த்திக்கின்றேன் .. ஓம் ஸாயி ! ஸ்ரீ ஸாயி ! ஜெய ஜெய ஸாயி !! .. ஒவ்வொரு மனிதனும் கடவுளை அடைவதற்கு முயற்சி செய்கிறான் .. அப்போது மனிதன் பல கட்டங்களை தாண்டிச் செல்கின்றான் .. மனிதன் உலகத்துப் பொருளின் மீது வைத்திருந்த ஆசையை அடக்கும் போது அவன் முக்திபெறுகிறான் .. மனிதன் பந்தபாசத்தை தவிர்க்கும்போது அவன் விரக்தி அடைகிறான் .. மனிதன் ஆத்மாவை அறிந்துகொள்ளும்போது அவன் தன்னைப் புரிந்து கொள்கின்றான் .. மனிதன் உணர்வுகளைத் துறக்கும்போது அவன் விசர்ஜனம் பெறுகிறான் .. மனிதன் உண்மையை நேசிக்கும்போது அவன் தர்மத்தை கடைப்பிடிக்கிறான் .. மனிதன் மற்றவங்களுக்காக வாழும்போது அவன் முதிர்ந்த மனப்பக்குவத்தை அடைகின்றான் மனிதன் உடலையும் உள்ளத்தையும் அடக்கும்போது அவன் தியானத்திலிருக்கின்றான் மனிதன் தூய எண்ணத்தோடு செயல்படும்போது அவன் அமைதியை நாடுகிறான் .. மனிதன் அமைதியான நிலையில் கடவுளை அடைவதற்கு ஒரு நல்ல குருவைத் தேடுகிறான் .. நல்ல குரு கிடைத்தவுடன் அவன் விவேகத்தைப் பெற்று கடவுளோடு இணைகிறான் - ( ஷீரடி பாபா அருளியவை ) பாபாவைத் துதிப்போம் அவரது அன்பும் ஆசியும் பெறுவோமாக ...” ஓம் சாய் ராம் ” .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. .. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF SHIRDI SAI .. ' OM SAI RAM ' ..

வருடா வருடம் சம்மர் கேம்ப் போக முடிந்த உங்களால் குலதெய்வ வழிபாட்டையும் நிறை வேற்ற முடியும். குலதெய்வம் என்பது உங்களுக்கு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் அதை வணங்க நீங்கள் சென்றே ஆக வேண்டும். குலதெய்வம் என்பது தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமாக இருந்து நம்மை முதன்மைப்படுத்தி, முக்கியத்துவம் கொடுத்து, நம்முடைய நலன்களில் அக்கறை செலுத்தக்கூடியது. தேவைகளை உணர்ந்து நமக்கு உடனடியாக தரக் கூடியதுதான் குலதெய்வம். பொதுவாக ஒவ்வொருவரும் அவர்களது முன்னோர்களின் வழியைப் பின்பற்றி ஏதாவது ஒரு தெய்வத்தை குலதெய்வாக வழிபடுவார்கள். குலதெய்வம் என்பது நம் தாய் தந்தையைப் போல நம்கூடவே இருந்து வ...ழிகாட்டும் அருட்சக்தியாகக் கருதப்படுகிறது. நமக்கு ஒரு கஷ்டம் என்றால் குலதெய்வம் தான் உடனே முன் வந்து காப்பாற்றும், மற்ற தெய்வங்கள் எல்லாம் அடுத்து தான் வரும் என கிராமங்களில் கூறுவர். அதனால், குலதெய்வ வழிபாடு என்பது முக்கியம். குழந்தை பிறந்தவுடன் அதற்கு பெயர் வைப்பது முதல் மொட்டைஅடித்து முடி காணிக்கை செலுத்தி காது குத்துவது வரை அனைத்தும் குலதெய்வத்தின் கோயிலில்தான். குடும்பத்தில் எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும், குலதெய்வத்தை முதலில் வணங்கிய பிறகே அதற்கான பணிகளைத் தொடங்குவது வழக்கம். சுப நிகழ்ச்சிகளை துவங்குபவர்கள் உடனே குல தெய்வம் கோயிலுக்கு செல்ல முடியாவிட்டால் குல தெய்வத்தை நினைத்து காணிக்கையை ஒரு மஞ்சள் துணியில் முடிந்து வைத்து, குலதெய்வம் கோயிலுக்கு செல்லும் போது செலுத்தி விடுவது வழக்கம்.குலதெய்வ வழிபாட்டால் குழந்தை பாக்கியம் உட்பட எல்லாம் நமக்கு கிடைக்கும். ஒவ்வொரு குடும்பத்தினரும் அவர்களது குலதெய்வத்தை பரம்பரை பரம்பரையாக வணங்கி வருகின்றனர். அந்தக் குடும்பத்தினருக்கு அந்த தெய்வம் மிகப் பரிச்சயமானதாக இருக்கும். ஒருவரின் சந்தோஷமான சுபிட்சமான வாழ்க்கைக்கு குல தெய்வ ஆராதனையும் பித்ருக்களின் ஆசியும் மிக மிக மிக முக்கியம். இவர்களை திருப்தி படுத்தாது நீங்கள் என்ன பரிகாரம் செய்தாலும் அது பயன் தரவே தராது. குல தெய்வ வழிபாட்டின் அவசியம் பற்றி தெரிந்துகொள்ளும் முன், குல தெய்வம் என்றால் என்ன என்று தெரிந்துகொள்வோம். வழி வழியாக, வாழையடி வாழையாக, பரம்பரை பரம்பரையாக நம் பாட்டனார், முப்பாட்டனார், உள்ளிட்ட முன்னோர்கள் வணங்கி வந்த அவர்கள் ஊர் தெய்வமே ‘குல தெய்வம்’ எனப்படும். பிரார்த்தனைகளில் மிகவும் முக்கியமான பிரார்த்தனை குல தெய்வ பிரார்த்தனை ஆகும். குல தெய்வ பிரார்த்தனையை தவிர்த்து வேறு எந்த பிரார்த்தனை செய்தாலும் அதில் பலனில்லை. ஆயிரம் கோயிலுக்கு சென்றாலும் குல தெய்வ பிரார்த்தனை செய்யாதவர்களுக்கு ஆயிரம் கோயிலுக்கு சென்ற பலன் நிச்சயம் கிடையாது. குல தெய்வ பிரார்த்தனை என்பது உங்களது தந்தை, தாத்தா, முப்பாட்டன் அவர்களுக்கு முன்னாள் உள்ள மூதாதையரால் வணங்கப்பட்ட தெய்வம் ஆகும். குல தெய்வம் கோயிலுக்கு சென்று நீங்கள் வணங்கும் போது அந்த குலதெய்வத்தின் அருள் மட்டும் அல்லாமல் உங்களுடைய மூதாதையரின் ஆசியும் கிடைக்கின்றது. அதுபோன்று குலதெய்வத்தின் அருளும் முன்னோர்களின் ஆசியும் ஒருசேர கிடைக்கும் போது உங்களுடைய வாழ்க்கை வளமாகிறது. உங்களுடைய சந்ததிகளும் சுகமாக வாழ்வார்கள்.


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. இன்று மாசிமாத அமாவாசை .. அன்னை அங்காள பரமேஷ்வரிக்கு விசேஷ விழாவாக “ மயானக் கொள்ளை “ எனும் விழா சிறப்பாக நடைபெறும் .. அன்னையைத் துதித்து தங்களனைவருக்கும் அன்னையின் அருட்கடாக்ஷ்ம் கிடைத்து .. அனைத்து காரியங்களிலும் சகலவெற்றிகளையும் அருளுமாறு பிரார்த்திக்கின்றேன் .. ஓம் சக்தி ! ஓம் சக்தி ! ஓம் பராசக்தி ஓம் ! ஓம் சக்தி ! ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் !! மாசி மாத அமாவசை நாளில் அனைத்து அங்காள பரமேஷ்வரி ஆலயங்களிலும் ”மயானக்கொள்ளை விழா” நடைபெறும் .. இவ்விழாவின் அடிப்படை சிவபெருமான் பிரம்மதேவனின் சிரம் கொய்த நிகழ்வுதான் .. அப்போது பிரம்மாவுக்கும் ஈசனைப்போல ஐந்து தலைகள் இருந்தன .. எனவே சிவனை நாம் ஏன் வணங்க வேண்டும் என்று ஆணவம் கொண்டார் பிரம்மா .. அவரது ஆணவத்தை அழிக்க பிரம்மாவின் ஒரு தலையைக் கொய்துவிட்டார் சிவபெருமான் .. அதன் காரணமாக சிவனை ’பிரம்மஹத்தி தோஷம்’ பற்றிக்கொண்டதுடன் கொய்யப்பட்ட பிரம்மனின் தலை சிவபெருமானின் கரத்தில் வந்து அமர்ந்தது .. அதை அவர் கீழே போட்டாலும் மீண்டும் அவர் கரத்துக்கே வந்தது .. இவ்வாறு 99 முறை நடந்தநிலையில் .. “அதைக்கீழே போடாமல் சிறிதுநேரம் கையிலேயே வைத்திருங்கள் “ என்று பார்வதிதேவி சிவனிடம் கூறினாள் .. சிவனும் அவ்வாறே செய்ய .. பிரம்மாவின் தலை கபாலமாகமாறி அவர் கரத்திலேயே ஒட்டிக்கொண்டது .. அதையே பிச்சைப்பாத்திரமாக ஏந்தி ஈசன் பிச்சையெடுக்கும் நிலை ஏற்பட்டது .. போடப்படும் அனைத்து உணவுகளையெல்லாம் கபாலமே விழுங்கிவிட்டதால் உலகுக்கே படியளக்கும் ஈசனுக்கே உணவு கிட்டவில்லை .. இந்நிலையில் பிரம்மாவின் தலை கொய்யப்பட்ட வேதனையில் இருந்த சரஸ்வதிதேவி அது கபாலமாக மாறி சிவன் கையில் ஒட்டிக்கொள்ளுமாறு உபாயம் கூறிய பார்வதிமீது சினம் கொண்டு கொடிய உருவத்துடன் பூவுலகில் திரிக என சாபமிட்டாள் .. அதன்படி பார்வதிதேவி பூவுலகில் பல தலங்களில் அலைந்து முடிவில் “மலையனூர்” வந்தாள் .. அங்கே “ அங்காள பரமேஷ்வரியாகக் “ கோவில் கொண்டாள் .. அப்போது ஈஸ்வரனும் மலையனூர் வர அங்காள பரமேஷ்வரி சிவன் கையிலிருந்த கபாலத்தில் சுவையான உணவை இட்டாள் .. எல்லாவற்றையும் கபாலம் விழுங்கிவிட .. அங்குவந்த மஹாலக்ஷ்மி பரமேஷ்வரிக்கு ஒரு உபாயம் கூறினாள் .. அதன்படி பரமேஷ்வரியும் இரண்டு கவளம் உணவை கபாலத்தில் இட்டாள் .. அதைக் கபாலம் உண்டுவிட்டது .. மூன்றாவது கவளத்தைக் கைதவறியது போல கீழே போட்டாள் .. உணவின் சுவையால் கவரப்பட்ட கபாலம் அதை உண்ண சிவனின் கரத்தைவிட்டு நீங்கி கீழே போனது .. அப்போது அங்காள பரமேஷ்வரி விஸ்வரூபமெடுத்து பிரம்ம கபாலம் மீண்டும் ஈசனின் கரத்தை அடைய முடியாதபடி அதைத் தன் காலால் மிதித்து பூமியில் ஆழத்திவிட்டாள் .. ஈசனைப்பற்றிய பிரம்மஹத்தி தோஷமும் அகன்றது .. இந்த சம்பவத்தின் அடிப்படையில் தான் மயானக்கொள்ளை எனும் விழா கொண்டாடப்படுகின்றது .. மயானக்கொள்ளை என்பது “ நம்பியவர்களைக் காத்து .. இரட்சித்து .. அனைத்து உயிர்களுக்கும் அல்லல் தருவோரை அழிப்பதைக்காட்டும் தத்துவ விழா என்றாலும் மிகையில்லை “ .. அன்னையைப் போற்றுவோம் .. அவளன்பைப் பெறுவோமாக .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் ... WISH YOU ALL A BLESSED WEDNESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF GODDESS SHAKTHI .. MAY SHE SHOWER YOU YOU WITH HAPPINESS AND GOOD HEALTH .. AND PROSPERITY .. " OM SHAKTHI "

Dhyanalinga temple Situated at the foothills of Velliangiri Mountains, 30 km west of Coimbatore, Dhyanalinga temple offers a spiritual seed of enlightenment through yoga. Dhyanalinga temple is not associated with any religion and does not ascribe to any particular belief or faith. The lingam is a single black granite stone 13 ft.9 inches in height and it has with seven copper rings embedded in it, corresponding to the seven charkas that is believed to govern the human body. The Avudaiyar or its base is made from a single white granite stone 9 ft in diameter and is in the form of a seven headed coiled snake. Dhyanalinga is the largest mercury based live linga in the world which is consecrated by Sadhguru Jaggi Vasudev, a realized master, mystic and yogi.The temple is the only structure of its kind built using brick and mud mortar stabilized with lime, sand, alum and herbal additives.

நாடு முழுவதும் சிவன் கோவில்களில் சிவராத்திரி சிறப்பு பூஜைகள் இன்று நடக்கிறது. உஜ்ஜைன் மகாகாளேஸ்வர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.






அனைவருக்கும் என் அன்பார்ந்த அதிகாலை வணக்கங்கள் .. ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று ஏகாதசி விரதமாகும் .. மாசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசியை “ ஷட்திலா ஏகாதசி “ என்பர் .. ஸ்ரீமஹாவிஷ்ணுவைத் துதித்து தங்கள் அனைவருக்கும் இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான நாளாகவும் .. அனைத்து காரியங்களும் சித்தி பெறவும் வாழ்த்தி வணங்குகின்றேன் .. ஓம் நமோ நாராயணாய வித்மஹே ! வாசுதேவாய தீமஹி ! தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! .. இந்த நாளில் விரதம் மேற்கொள்வோர் எள்ளை ஐந்து விதமாகப் பயன்படுத்துவர் .. 1) எள்ளை அரைத்து உடலில் பூசிக்கொண்டு நீராடுவது 2) எள் தானம் செய்வது 3) எள்ளால் ஹோமம் செய்வது 4) எள்ளுடன் நீரும் சேர்த்து தானம் செய்வது 5) எள் அன்னம் உண்பது பலதர்மங்கள் செய்த பெண்ணொருத்தி இறந்தபின் சொர்க்கம் சென்றாள் .. சொர்க்கத்தில் எல்லா வசதிகளும் அவளுக்குக் கிடைத்தாலும் உணவு மட்டும் கிடைக்கவில்லை .. ஏனெனில் பூவுலகில் இருக்கும்போது அவள் அன்னதானம் செய்யவில்லை .. பின்னர் ஒரு துறவியின் ஆலோசனைப்படி தேவலோகப் பெண்ணொருத்தியின் ”ஷட்திலா ஏகாதசி” விரதப் பலனை இவள் பெற்றாள் .. அதன்பின் அவளுக்கு உணவு கிடைத்தது .. எனவே இந்த விரதத்தைக் கடைப்பிடிப்போருக்கு பசி என்னும் வேதனையே உண்டாகாது.. பெருமாளின் பரிபூரண திருவருளைப் பெற்று நீங்காப் புகழுடன் வாழ்வீர்களாக .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. .. WISH YOU ALL A BLESSED SUNDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD VISHNU .. MAY HE SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH .. AND HAPPINESS .. " OM NAMO NAARAAYANAA " ..

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சனிக்கிழமையாகிய இன்று ஈஸ்வரனைத் துதித்து தங்கள் அனைவருக்கும் இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாய் அமைந்திடவும் .. கிரகதோஷங்கள் நீங்கி புத்துணர்வு பெறவும் வாழ்த்தி வணங்குகின்றேன் .. “ ஓம் நமசிவாய “ .. சிவபெருமான் ஒளிவடிவமானவர் .. தவக்கனலால் அவர் ஜொலிக்கிறார் .. அவரிடம் நாம் இறைவா ! பால் .. தண்ணீர் .. போன்றவற்றால் நாங்கள் அபிஷேகம் செய்கிறோம் .. நீர் எம்மை ஞானத்தால் நீராட்டுவீராக .. பாவம் அனைத்தையும் போக்கி புனிதமாக்குவீராக .. உமது அருளால் அநீதியும் அக்கிரமும் ஒட்டுமொத்தமாக அகற்றப்படட்டும் .. இரண்டற்ற நிலையில் பரம்பொருளான உமது அருள் எம்மிடம் பூரணமாக நிலைத்திருக்கட்டும் என்று வேண்டுவோமாக .. நம் மனவீட்டில் விளக்காகத் திகழும் ஐந்தெழுத்து மந்திரம் “ நமசிவாயத்தை “ இயன்றவரை சொல்லி ஆயிரமாயிரம் நன்மைகள் வாழ்வில் பெறுவீர்களாக .. சிவனைப் போற்றுவோம் .. அவரது பரிபூரண திருவருளைப் பெறுவோமாக .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. . WISH YOU ALL A BLESSED SATURDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. MAY HE SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH .. AND HAPPINESS .. " OM NAMASHIVAAYA " .

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வெள்ளிக்கிழமையாகிய இன்று அன்னை மஹாலக்ஷ்மியை வழிபடும் நாளாகும் .. அன்னையைத் துதித்து தங்களனைவருக்கும் சகலசௌபாக்கியங்களும் பெற்று மகிழ்ச்சிகரமான வாழ்வு வாழ வாழ்த்துகின்றேன் .. அன்னையை வணங்குகின்றேன் .. யாதேவி ஸர்வ பூதேஷு ! லக்க்ஷ்மி ரூபேன ஸம்ஸ்த்திதா ! நமஸ்தஸ்யை ! நமஸ்தஸ்யை ! நமஸ்தஸ்யை ! நமோ நமஹ!! .. அன்னை தருமத்தின் திருவுருவம் .. கடின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பலனைப் பெற அன்னையின் அருள் அவசியம் வேண்டும் .. தூய்மையும் ஒளியும் பொருந்திய இடங்களில் வீற்றிருப்பவள் மஹாலக்ஷ்மி .. மனிதர்களும் அகத்தூய்மை .. புறத்தூய்மையுடன் இருக்க மனிதர்களின் அகத்தினுள்ளும் இறைவனுடன் அம்பாளும் வீற்றிருப்பாள் .. அவர்களின் வாழ்வில் குறையேது ! பரந்தாமனும் அம்பாளும் வீற்றிருக்கும் இடமல்லவா .. அன்னையின் முகம் கருணை சொரூபம் .. அன்பான கண்கள் .. நம்மை அரவணைக்கும் கைகள் .. நம் நிலையை அறிந்து அருளும் ஸ்ரீசொரூபம் .. அன்னையைப் போற்றுவோம் .. அன்னையின் திருவருளும் .. அருட்கடாக்ஷ்மும் பெறுவோமாக .. ஓம் சக்தி ஓம் ! வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. .. MAY THE DIVINE BLESSINGS OF GODDESS LAKSHMI BRINGS YOU ETERNAL BLISS AND FULFIL ALL YOUR WISHES .. OM SHAKTHI .. " JAI MATA DI "




அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வியாழக்கிழமையாகிய இன்று தேய்பிறை அஷ்டமித் திதியாகும் .. “ பைரவரை “ வழிபடுவதற்கு உகந்த தினமும் ஆகும் .. அவரைத் துதித்து தங்களனைவருக்கும் தொழில் விருத்தி .. உத்தியோகத்தில் பதவி உயர்வு .. கடன் சுமை குறையவும் .. இல்லத்தில் மகிழ்ச்சியும் .. சுபீட்சமும் நிலவவும் பைரவரைப் பிரார்த்திக்கின்றேன் .. ஓம் ஷ்வானத் வஜாய வித்மஹே ! சூலஹஸ்தாய தீமஹி ! தந்நோ பைரவஹ் ப்ரசோதயாத் !!! .. பைரவர் சிவனது அம்சம் ஆவார் .. பைரவர் என்றாலே பயத்தை நீக்குபவர் .. அடியார்களின் பாபத்தையும் நீக்குபவர் என்று பொருள் .. இந்தக் கடவுளே ஆனந்த பைரவராக உலகைப் படைக்கிறார் .. பின்னர் காலபைரவராக உலகை காக்கின்றார் .. அவருக்குத் தகுந்த பூஜைகள் செய்தால் மட்டுமே திருப்தியடைந்து நம்மை இடுக்கண்களிருந்து காப்பாற்றுவார் என்றில்லை .. எந்தவித பூஜைகள் செய்யாவிட்டாலும் கூட இக்கட்டான நேரத்தில் முழுமனதுடன் அவரை நினைத்தாலே போதும் சந்தோஷத்துடன் உடனே செயல்பட்டு நம்மை ஆபத்துக்களிலிருந்து காப்பாற்றுவார் .. கோவில்களில் முதலில் துவங்கும் காலை பூஜையும் இரவில் நடக்கும் இறுதியான பூஜையும் ஸ்ரீபைரவருக்கே உரியது .. பற்றற்ற நிலையில் பைரவர் வீற்றிருப்பதால் பைரவர் விக்கிரகத்தைத் தொட்டு வணங்குதல் .. நாமே சென்று புஷ்பம் சாற்றுதல் ஆகியவை கூடாது .. கோவிலில் இருக்கும் குருக்கள் மூலமாகத்தான் புஷ்பம் முதலியவை சாற்றுதல் வேண்டும் .. திரை இட்டு சிலையை மூடி இருந்தாலும் .. கதவு சாத்தியிருந்தாலோ விளக்கு போடக்கூடாது .. நம்முடைய கர்மவினை நம்மை பைரவரை வழிபட (நிறைவான வாழ்க்கை வாழ) அனுமதிக்காது .. நிறைய தடைகளை ஏற்படுத்தும் .. சோம்பேறித்தனத்தை உண்டு பண்ணும் .. இதையெல்லாம் பொருட்படுத்தாமல் நம் வாழ்வில் தொடர்ந்து வழிபாடு செய்து வரவேண்டும் .. அவரே நம்வாழ்வின் ஒவ்வொரு விநாடியையும் தீர்மானிக்க ஆரம்பிப்பார் .. குருவாக இருந்து வழிநடத்த ஆரம்பிப்பார் .. எப்போதும் கூடவே இருப்பார் .. பைரவரின் திருவருள் கிடைத்து அஷ்டமா சித்திகளையும் பெறுவீர்களாக .. “ஓம் ஸ்ரீகாலபைரவாய நமஹ” .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. .. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD BHAIRAVA ' OM SHREE KAALA BAIRAVAAYA NAMAHA ' .

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று இப்பிரபஞ்சத்தைக் காக்கும் கடவுளாகிய ஸ்ரீமஹாவிஷ்ணுவைத் துதித்து தங்கள் அனைவருக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் .. சுபீட்சமும் .. நல்லாரோகியமும் பெற்றிட பிரார்த்திக்கின்றேன் .. ஓம் நமோ நாராயணாய வித்மஹே ! வாசுதேவாய தீமஹி ! தந்நோ விஷ்ணுப்ரசோதயாத் !!! நம் உடலுக்குள் உயிர் இருக்கின்றது .. அதுபோல் உயிருக்கு உயிராக இருப்பவர் பகவான் விஷ்ணுதான் .. அந்தராத்மாவாக வேறுவிதத்தில் சொல்வதென்றால் .. நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருப்பது ஜீவாத்மா ! ஜீவாத்மாவுக்கே ஆத்மாவாக இருப்பது பரமாத்மா ! நமக்குள் பகவான் இருப்பதை உணர்ந்து கொண்டால் நம்வாழ்க்கை ஆனந்தமயமாக ஆகிவிடும் .. பவானைத் துதிப்போம் வாழ்க்கையில் அனைத்திலும் வெற்றிகாண்போம் .. அனைவருக்கும் வெற்றி நிச்சயம் ! வாழ்க வளமுடனும் .. நலமுடனும். WISH YOU ALL EVERY SUCCESS IN EACH STEPS YOU TAKE TODAY AND FOREVER MORE WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD VISHNU .. ' OM NAMO NAARAAYANAA ' ..

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய்க்கிழமையில் சஷ்டிவிரதம் வருவதும் சிறப்பே .. செவ்வாய்க்கு அதிபதி முருகனே .. முருகனாலயம் சென்று கலியுகவரதனாகிய கார்த்திகேயனைத் தரிசிப்பது சாலச்சிறந்தது .. எல்லா இடங்களிலும் நிறைந்துள்ள இறையருளானது மந்திர .. யந்திர சக்திகளினாலே சேர்த்து ஒன்றாகத்திரட்டி ஆலயங்களிலே வைக்கப்பட்டுள்ள தென்றும் .. ஆலயங்களுக்குச் சென்று வணங்கும் பொழுது நாம் செய்த ஊழ்வினைகள் யாவும் வெதும்பி அவற்றின் வேகம் குறைந்துபோய்விடுமென்றும் வாரியார் சுவாமிகள் குறிப்பிட்டுள்ளார் .. உலகெல்லாம் நிறைந்து விளங்குகின்ற பரம்பொருளான முருகப்பெருமான் தம்மை நினைத்து உள்ளமுருகி வணங்கி வாழும் அடியார்களுக்கு அருள்பாலிப்பார் ..இன்னகாரியம் நமக்கு நிறைவேற்றித் தரவேண்டும் என்று பக்திப்பூர்வமாக நேர்த்தி வைத்து உள்ளன்போடு வணங்கினால் அந்தக்காரியம் எவ்வித தடங்கலுமின்றி நிச்சயமாக நிறைவேறிடும் .. கந்தப்பெருமானைக் கைதொழுதக்கால் எந்தக்காரியமும் நிறைவேறும் என்ற பரிபூரணமான நம்பிக்கையே காரணமாகும் .. கந்தனைப்போற்றுவோம் சகலமும் பெறுவோம் .. ஓம்தத்புருஷாய வித்மஹே ! மஹேஷ்வரபுத்ராய தீமஹி ! தந்நோ சுப்ரமண்யப்ரசோதயாத் !! .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் ... WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA .. MAY HE SHOWER YOU HIS BLESSINGS AND CLEAR OUT ALL THE OBSTACLES IN YOUR PATH TODAY AND FOREVER MORE .. " OM MURUGA " ..

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. இன்று திங்கட்கிழமையாதலால் சிவவழிபாடு சிறந்தது .. சிவாலயம் சென்று சிவனைத் தரிசிப்பது சாலச்சிறந்தது .. இன்றைய நாள் தங்களனைவருக்கும் ஓர் இனிய நன்னாளாகவும் .. செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி பெறவும் சிவபெருமானைப் பிரார்த்திக்கின்றேன் .. “ ஓம் நமசிவாய “ .. நவக்கிரகங்களில் சந்திரன் “மனோகாரகன்” ஆவார் .. இவரே மனிதர்களின் மனதில் எழும் எண்ணங்களை நிர்ணயிப்பவராக இருக்கிறார் .. குழப்பமான அல்லது தெளிவான முடிவெடுப்பதற்கு காரணகர்த்தா இவரே ! இந்த சந்திரனை சிவபெருமான் தலையில் சூடியுள்ளார் .. சந்திரனுக்கு ‘சோமன்’ என்ற பெயரும் உண்டு .. இதனால் சிவனுக்கு “சோமசுந்தரர்” .. “சோமசேகரன்” ..”பிறைநுதலான்” என்ற பெயர்களும் உண்டு .. எனவே மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்க திங்கட்கிழமைகளில் சிவவழிபாடு செய்வது சிறப்பு பெறுகிறது . சிவனைப்போற்றுவோம் சிவனின் அருட்கடாக்ஷ்ம் பெறுவோமாக .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. . MAY YOUR DAY WILL BE FILLED WITH HAPPINESS AND VICTORY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. "OM NAMASHIVAAYA" ..

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று நவக்கிரகங்களின் நாயகன் சூரியபகவானின் ஆதிக்கம் நிறைந்த நாளாகும் .. பயன்கருதாது தன் அன்றாடப்பணியைச் செய்துவருபவருமான சூரியனைத் துதித்து தங்கள் அனைவரது நல் ஆரோக்கியத்திற்கும் .. இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாய் அமைந்திடவும் பிரார்த்திக்கின்றேன் .. ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே ! பாசஹஸ்தாய தீமஹி ! தந்நோ சூர்யப்ரசோதயாத் !! .. ஜோதிட சாஸ்திரத்திரம் சூரியபகவானை நவக்கிரக நாயகனாக போற்றுகிறது .. மனித வாழ்விற்கும் .. தாழ்விற்கும் இன்பத்திற்கும் .. துன்பத்திற்கும் காரணங்கள் கிரகங்கள் .. இவற்றிற்கு தலைமைவகிப்பவர் சூரியன் .. இப்பிரபஞ்சத்தையும் கோள்களையும் பரிபாலித்து உலகை இயக்குகிறார் .. ஒருவரது ஜாதகத்தில் சூரியபலத்தைப் பொறுத்தே ஆளுமைத்தன்மை .. ஆட்சி .. அதிகாரம் அமையும் நம் ஆரோக்கியத்திற்கும் .. தலைமைப்பண்பு .. ஆளுமைத்திறன் .. புகழ் .. தந்தை .. தைரியம் .. தலை .. வலதுகண் .. வைத்தியம் .. மனோவலிமைக்கும் அதிபதி சூரியபகவானே ! வாழ்வில் சகல செயல்களிலும் வெற்றியை அருளவல்ல அகத்தியர் அருளிய “ஸ்ரீ ஆதித்யஹிருதயம்” துதியைச் சொல்லி அனைவரும் அனைத்திலும் வெற்றி பெறுவோமாக .. வாழ்க வளமுடனும் நலமுடனும் .. . WISH YOU ALL A BLESSED SUNDAY TOO .. MAY LORD SURYA BE WITH YOU AND BLESS YOU WITH GOOD HEALTH .. WEALTH AND HAPPINESS .. "JAI SURYA BHAGWAN" ..

சடாரியில் திருமுடியின் மேல் திருவடி ஏன்? அது புனிதமான கங்கைக்கரை. மரவுரி தரித்து தவக்கோலத்தில் வீற்றிருக்கிறான் ஸ்ரீராமன். அருகில் அன்புத் தம்பி லட்சுமணனும், பதியை விட்டுப் பிரிய மனமில்லாமல், மரவுரி தரித்து உடன் வந்த மனைவி ஜானகியும் பணிபுரிந்து நிற்கின்றனர். பாசத்தால் ஸ்ரீராமனைப் பரவசப்படுத்திய கங்கை வேடன் குகனும், அவன் பரிவாரமும் புடைசூழ்ந்து நிற்கின்றனர். துன்பத்தையும் இன்பத்தையும் ஒன்றாகக் கருதும் ஸ்ரீராமனின் நிர்மலமான உள்ளத்தைக்கூட அப்போது உலுக்கியது, அவனது காலடியில் விழுந்து கதறி அழும் தம்பி பரதனின் கண்ணீர். தனக்கு இல்லையென்று ஆகிவிட்ட ராஜ்யத்தைதான் துறந்து வந்தான் ஸ்ரீராமன். ஆனால், தனக்கென கிடைத்த ராஜ்யத்தைத் துறந்து வந்திருந்தான் பரதன். ஸ்ரீராமன், கடமையை நிறைவேற்றக் கானகம் வந்திருந்தான். ஆனால் பரதனோ, அண்ணனின் பாதச் சுவட்டைப் பின்பற்றி, அரசைத் துறந்து, மரவுரி தரித்து, கானகம் செல்வதையே கடமையாக ஆக்கிக்கொண்டு வந்திருந்தான். ஆயிரம் இராமர் நின்கேழ் ஆவாரோ...? என்ற கம்பன் கவிதைக்கு அத்தாட்சியாக அங்கே நின்று கொண்டிருந்தான் பரதன். தந்தை இறந்த செய்தியைத் தெரிவித்து, தலைவன் இன்றித் தவிக்கும் அயோத்தி மக்களின் கண்ணீரைக் காரணம் காட்டி, நாடு திரும்பி, ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு மக்களைக் காக்க வேண்டுமெனக் கதறி அழுதான் பரதன். மறைந்த தசரதனின் புகழ் வாழ வேண்டுமானால், அவர் தந்த வாக்கு நிறைவேற வேண்டும். அதற்குத் தனது ஆரண்யவாசம் ஒன்றுதான் வழி! என்று பரதனின் வேண்டுகோளை மறுத்துவிட்டான் ஸ்ரீராமன். நாடு திரும்ப ஸ்ரீராமன் விரும்பவில்லை; நாட்டை ஆள பரதன் தயாராக இல்லை. வனவாசம் மேற்கொண்டு, தந்தை சொல் காத்த தனயன் எனப் பெருமை பெற்றான் ஸ்ரீராமன். அண்ணன் ஸ்ரீராமனுக்கு சேவை செய்ய வனவாசத்தை வலிய ஏற்று வந்து, தியாகி என்ற புகழைப் பெற்றான் லட்சுமணன். தந்தை தசரதனுக்கு ஈமச்சடங்கு செய்யும் பாக்கியம் பெற்றான் சத்ருக்னன். ஆனால், பாவி கைகேயி வயிற்றில் பிறந்த பாவத்தால், எத்தகைய பெருமையும் பெற இயலாத துர்பாக்கியவனாக நின்றான் பரதன். முடிவில், வேறு எந்த வழியும் தெரியாமல், ஸ்ரீராமபிரானின் பாதுகைகளை யாசித்தான் பரதன். அவற்றையே சிம்மாசனத்தில் வைத்து, ஸ்ரீராமனின் பிரதிநிதியாக அரசை நடத்திச் செல்ல, அனுமதி கேட்டு நின்றான் அவன். பரதனின் அன்புக்குக் கட்டுப்பட்டான் ஸ்ரீராமன். கண்ணீர் மல்க, தனது பாதுகைகளை பரதனுக்கு வழங்கினான். அண்ணலின் திருவடிகளை வணங்கி, அவரது பாதுகைகளைச் சிரத்தில் தாங்கி, அயோத்தி வந்தான் பரதன். பாதுகைகளை சிம்மாசனத்தில் வைத்து சத்ருக்னனோடு, நித்திய பூஜை செய்து வழிபட்டான். பாதுகைகளுக்குப் பட்டாபிஷேகம் செய்த பெருமை பரதனுக்குக் கிடைத்தது. என்னதான் ஸ்ரீராமன் சிறப்பானவன் என்றாலும், அரசர்கள் அமரக்கூடிய புனிதமான சிம்மாசனத்தில், பாதத்தில் அணியும் பாதுகைகளை வைக்க அனுமதிக்கலாமா? ஸ்ரீராமனுக்குப் பிரதிநிதியாக வேறு ஏதாவது உயர்ந்த பொருளை பரதன் யாசித்திருக்கக் கூடாதா? தேவர்களுக்கு ஒப்பான சூரிய குல மன்னர்கள் வீற்றிருந்த மகிமைமிக்கதொரு பீடத்தில் வெறும் பாதுகைகளா? ராமன்தான் முடி துறந்து சென்றானே, அந்தத் திருமுடியையே சிம்மாசனத்தில் வைத்திருந்தால் போதுமே... என்றெல்லாம் சில கேள்விகள் அப்போதும் எழுந்தன; இப்போதும் எழுகின்றன. பரதன் தவறு செய்துவிடவில்லை. ஸ்ரீராமன் துறந்து சென்ற திருமுடியை சிம்மாசனத்தின் மேல் வைத்து, அதன் மீதுதான் அண்ணல் ஸ்ரீராமனின் பாதுகைகளை வைத்திருந்தான். திருமுடிக்கு மேலே அமரும் பாக்கியத்தை அந்தப் பாதுகைகள் பெற்றதற்கு ஒரு காரணமும் இருந்தது. அது-நமக்குத் தெரிந்த புராணத்தில் தெரியாத கதை! ஒருமுறை, தான் கொலு வீற்றிருக்கும் வைகுண்டத்தில் ஸ்ரீமந் நாராயணன் சயன நிலைக்குச் செல்ல ஆயத்தமானார். சங்கு, சக்கரம், திருமுடி ஆகியவற்றை எடுத்து, ஆதிசேஷன் மீது வைத்தார். வழக்கமாகத் தன் பாதுகைகளை துவார பாலகர்கள் அருகே விடும் பரந்தாமன், அன்று மட்டும் அவற்றைக் கழற்றி, ஆதிசேஷன் அருகில் சயன அறைக்குள்ளேயே விட்டுவிட்டார். அதற்குக் காரணம் இருந்தது. திடீரென தன்னை தரிசிக்க வந்த முனிபுங்கவர்களின் குரல் கேட்டு, பாம்புப் படுக்கையில் இருந்து அவசரமாக எழுந்து சென்றார் பரந்தாமன். அப்போது, பாதுகைகளை அங்கேயே விட்டுவிட்டார். ஆதிசேஷன் மீது அலங்காரமாக சங்கும், சக்கரமும், கிரீடமும் அமர்ந்திருந்தன. அது அழகாகத்தான் இருந்தது. ஆனால், பாவம்... அருகிலேயே பாதுகைகளும் இருந்தன. இது அவற்றுக்குப் பிடிக்கவில்லை. சங்கும் சக்கரமும் பாதுகைகளைப் பார்த்து, கவுரவத்தால் உயர்ந்த நாங்கள் இருக்கும் இடத்தில், தூசியிலே துவளும் பாதுகைகளான நீங்கள் எப்படி இருக்கலாம்? என்று கேட்டன. இது எங்கள் தவறில்லை. பகவான்தான் எங்களை இங்கே விட்டுச் சென்றார் என்றன பாதுகைகள். பகவான் திருமுடியை அலங்கரிப்பவன் நான். கரங்களை அலங்கரிப்பவர்கள் சங்கும், சக்கரமும்! ஆதிசேஷன் மீது அமரும் அருகதை எங்களுக்கு மட்டுமே உண்டு. பாதங்களை அலங்கரிக்கும் கேவலமான பாதுகைகளான உங்களுக்கு இங்கே இருக்க அருகதை இல்லை. உங்கள் வழக்கமான இடத்துக்குப் போய்விடுங்கள் என்று, கோபத்துடன் சொன்னது கிரீடம். கிரீடம் இப்படிச் சொன்னதும் பாதுகைகளுக்கும் கொஞ்சம் கோபம் வந்தது. நாங்கள் பாதங்களை அலங்கரிப்பவர்கள்தான். ஆனால், கேவலமானவர்கள் அல்ல. மகரிஷிகளும் தேவர்களும் பகவானின் பாதங்களில் தங்களின் திருமுடிகள் படும்படி நமஸ்கரித்து வணங்குகிறார்களே தவிர, உங்களைத் தழுவித் தரிசிப்பதில்லை. புனிதமான திருவடிகளை அலங்கரிக்கும் நாங்களும் புனிதமானவர்கள்தான் என்று வாதிட்டன பாதுகைகள். கிரீடம் விடுவதாக இல்லை. சங்கும், சக்கரமும் சேர்ந்து கொண்டதால், அந்தக் கட்சி பலமுள்ளதாக இருந்தது. பாவம்.... ஆதிசேஷன்! நடு நிலைமை வகித்து, இவற்றின் அறியாமையை எண்ணி, அனுதாபப்பட்டுக் கொண்டிருந்தார். தனித்து நின்ற பாதுகைகளால், ஏளனப் பேச்சைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பகவான் எப்போது வருவார். அவரிடம் முறையிடலாம் என்று கலங்கி நின்றிருந்தன. பகவான் வந்தார். அவர் பாதத்தில் கண்ணீர் சிந்தி, பாதுகைகள் முறையிட்டன. இங்கே நடந்ததை நான் அறிவேன். என் சன்னதியில் ஏற்றத் தாழ்வுகள் கிடையாது என்பதை உணராமல், கிரீடமும் சங்கும் சக்கரமும் கர்வம் கொண்டு, புனிதமான உங்களைத் தூற்றியதற்கான பாவ பலனை அனுபவிக்க வேண்டி வரும். சாதுக்களை ரட்சித்து, துஷ்டர்களை சம்ஹரித்து, தர்மத்தை நிலைநாட்ட நான் அவ்வப்போது பூமியில் அவதாரம் செய்வேன். அத்தகைய அவதாரங்களில் ஸ்ரீராமாவதாரம் நிகழும்போது, சக்கரமும் சங்கும் என சகோதரர்களாக பரதன், சத்ருக்னன் என்ற பெயர்களில் அவதரிப்பார்கள். அந்த அவதாரத்தில் நான் அரச பதவியை ஏற்று சிம்மாசனத்தில் அமர முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படும். அப்போது இந்தத் திருமுடியை சிம்மாசனத்தில் வைத்து அதன் மீது பாதுகைகளான உங்களை வைத்து, சங்கும் சக்கரமும் 14 வருடங்கள் உங்களைப் பூஜிப்பார்கள். அவரவர் வினைக்கேற்ப அவரவர் தேடிக் கொள்ளும் பயன் இது! என்றார் பகவான். சிரசை அலங்கரிக்கும் திருமுடி, ஒருவகையில் உயர்ந்தது என்றால், பாதங்களை அலங்கரிக்கும் பாதுகைகளும் மற்றொரு வகையில் உயர்ந்தவையே! ஒன்றிற் சிறியர் ஒன்றிற் பெரியராம் ஒன்றிற் பெரியர் ஒன்றிற் சிறியராம் என்ற உயர்ந்த தத்துவத்தை விளக்க திருமுடியும, பாதுகையும் சங்கமமான கதையே பாதுகா பட்டாபிஷேகம்! வைணவக் கோயில்களில் பக்தர்களுக்கு ஆசிர்வாதம் செய்ய சடாரி என்ற மகுடத்தைத் தலையில் வைப்பார்கள். அதன் மேல் இரண்டு பாதச்சுவடுகள் பொறிக்கப்பட்டிருக்கும். திருமுடி மேல் திருவடி என்பதே சடாரி. அதைத் தலையில் வைத்துக்கொள்ளும்போது நம் ஆணவம், அகங்காரம் ஆகியவை அழியவேண்டும் என்பதே தத்துவம்! Thanks to SriThangaraj Mohan for this excellent Article சடாரியில் திருமுடியின் மேல் திருவடி ஏன்? அது புனிதமான கங்கைக்கரை. மரவுரி தரித்து தவக்கோலத்தில் வீற்றிருக்கிறான் ஸ்ரீராமன். அருகில் அன்புத் தம்பி லட்சுமணனும், பதியை விட்டுப் பிரிய மனமில்லாமல், மரவுரி தரித்து உடன் வந்த மனைவி ஜானகியும் பணிபுரிந்து நிற்கின்றனர். பாசத்தால் ஸ்ரீராமனைப் பரவசப்படுத்திய கங்கை வேடன் குகனும், அவன் பரிவாரமும் புடைசூழ்ந்து நிற்கின்றனர். துன்பத்தையும் இன்பத்தையும் ஒன்றாகக் கருதும் ஸ்ரீராமனின் நிர்மலமான உள்ளத்தைக்கூட அப்போது உலுக்கியது, அவனது காலடியில் விழுந்து கதறி அழும் தம்பி பரதனின் கண்ணீர். தனக்கு இல்லையென்று ஆகிவிட்ட ராஜ்யத்தைதான் துறந்து வந்தான் ஸ்ரீராமன். ஆனால், தனக்கென கிடைத்த ராஜ்யத்தைத் துறந்து வந்திருந்தான் பரதன். ஸ்ரீராமன், கடமையை நிறைவேற்றக் கானகம் வந்திருந்தான். ஆனால் பரதனோ, அண்ணனின் பாதச் சுவட்டைப் பின்பற்றி, அரசைத் துறந்து, மரவுரி தரித்து, கானகம் செல்வதையே கடமையாக ஆக்கிக்கொண்டு வந்திருந்தான். ஆயிரம் இராமர் நின்கேழ் ஆவாரோ...? என்ற கம்பன் கவிதைக்கு அத்தாட்சியாக அங்கே நின்று கொண்டிருந்தான் பரதன். தந்தை இறந்த செய்தியைத் தெரிவித்து, தலைவன் இன்றித் தவிக்கும் அயோத்தி மக்களின் கண்ணீரைக் காரணம் காட்டி, நாடு திரும்பி, ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு மக்களைக் காக்க வேண்டுமெனக் கதறி அழுதான் பரதன். மறைந்த தசரதனின் புகழ் வாழ வேண்டுமானால், அவர் தந்த வாக்கு நிறைவேற வேண்டும். அதற்குத் தனது ஆரண்யவாசம் ஒன்றுதான் வழி! என்று பரதனின் வேண்டுகோளை மறுத்துவிட்டான் ஸ்ரீராமன். நாடு திரும்ப ஸ்ரீராமன் விரும்பவில்லை; நாட்டை ஆள பரதன் தயாராக இல்லை. வனவாசம் மேற்கொண்டு, தந்தை சொல் காத்த தனயன் எனப் பெருமை பெற்றான் ஸ்ரீராமன். அண்ணன் ஸ்ரீராமனுக்கு சேவை செய்ய வனவாசத்தை வலிய ஏற்று வந்து, தியாகி என்ற புகழைப் பெற்றான் லட்சுமணன். தந்தை தசரதனுக்கு ஈமச்சடங்கு செய்யும் பாக்கியம் பெற்றான் சத்ருக்னன். ஆனால், பாவி கைகேயி வயிற்றில் பிறந்த பாவத்தால், எத்தகைய பெருமையும் பெற இயலாத துர்பாக்கியவனாக நின்றான் பரதன். முடிவில், வேறு எந்த வழியும் தெரியாமல், ஸ்ரீராமபிரானின் பாதுகைகளை யாசித்தான் பரதன். அவற்றையே சிம்மாசனத்தில் வைத்து, ஸ்ரீராமனின் பிரதிநிதியாக அரசை நடத்திச் செல்ல, அனுமதி கேட்டு நின்றான் அவன். பரதனின் அன்புக்குக் கட்டுப்பட்டான் ஸ்ரீராமன். கண்ணீர் மல்க, தனது பாதுகைகளை பரதனுக்கு வழங்கினான். அண்ணலின் திருவடிகளை வணங்கி, அவரது பாதுகைகளைச் சிரத்தில் தாங்கி, அயோத்தி வந்தான் பரதன். பாதுகைகளை சிம்மாசனத்தில் வைத்து சத்ருக்னனோடு, நித்திய பூஜை செய்து வழிபட்டான். பாதுகைகளுக்குப் பட்டாபிஷேகம் செய்த பெருமை பரதனுக்குக் கிடைத்தது. என்னதான் ஸ்ரீராமன் சிறப்பானவன் என்றாலும், அரசர்கள் அமரக்கூடிய புனிதமான சிம்மாசனத்தில், பாதத்தில் அணியும் பாதுகைகளை வைக்க அனுமதிக்கலாமா? ஸ்ரீராமனுக்குப் பிரதிநிதியாக வேறு ஏதாவது உயர்ந்த பொருளை பரதன் யாசித்திருக்கக் கூடாதா? தேவர்களுக்கு ஒப்பான சூரிய குல மன்னர்கள் வீற்றிருந்த மகிமைமிக்கதொரு பீடத்தில் வெறும் பாதுகைகளா? ராமன்தான் முடி துறந்து சென்றானே, அந்தத் திருமுடியையே சிம்மாசனத்தில் வைத்திருந்தால் போதுமே... என்றெல்லாம் சில கேள்விகள் அப்போதும் எழுந்தன; இப்போதும் எழுகின்றன. பரதன் தவறு செய்துவிடவில்லை. ஸ்ரீராமன் துறந்து சென்ற திருமுடியை சிம்மாசனத்தின் மேல் வைத்து, அதன் மீதுதான் அண்ணல் ஸ்ரீராமனின் பாதுகைகளை வைத்திருந்தான். திருமுடிக்கு மேலே அமரும் பாக்கியத்தை அந்தப் பாதுகைகள் பெற்றதற்கு ஒரு காரணமும் இருந்தது. அது-நமக்குத் தெரிந்த புராணத்தில் தெரியாத கதை! ஒருமுறை, தான் கொலு வீற்றிருக்கும் வைகுண்டத்தில் ஸ்ரீமந் நாராயணன் சயன நிலைக்குச் செல்ல ஆயத்தமானார். சங்கு, சக்கரம், திருமுடி ஆகியவற்றை எடுத்து, ஆதிசேஷன் மீது வைத்தார். வழக்கமாகத் தன் பாதுகைகளை துவார பாலகர்கள் அருகே விடும் பரந்தாமன், அன்று மட்டும் அவற்றைக் கழற்றி, ஆதிசேஷன் அருகில் சயன அறைக்குள்ளேயே விட்டுவிட்டார். அதற்குக் காரணம் இருந்தது. திடீரென தன்னை தரிசிக்க வந்த முனிபுங்கவர்களின் குரல் கேட்டு, பாம்புப் படுக்கையில் இருந்து அவசரமாக எழுந்து சென்றார் பரந்தாமன். அப்போது, பாதுகைகளை அங்கேயே விட்டுவிட்டார். ஆதிசேஷன் மீது அலங்காரமாக சங்கும், சக்கரமும், கிரீடமும் அமர்ந்திருந்தன. அது அழகாகத்தான் இருந்தது. ஆனால், பாவம்... அருகிலேயே பாதுகைகளும் இருந்தன. இது அவற்றுக்குப் பிடிக்கவில்லை. சங்கும் சக்கரமும் பாதுகைகளைப் பார்த்து, கவுரவத்தால் உயர்ந்த நாங்கள் இருக்கும் இடத்தில், தூசியிலே துவளும் பாதுகைகளான நீங்கள் எப்படி இருக்கலாம்? என்று கேட்டன. இது எங்கள் தவறில்லை. பகவான்தான் எங்களை இங்கே விட்டுச் சென்றார் என்றன பாதுகைகள். பகவான் திருமுடியை அலங்கரிப்பவன் நான். கரங்களை அலங்கரிப்பவர்கள் சங்கும், சக்கரமும்! ஆதிசேஷன் மீது அமரும் அருகதை எங்களுக்கு மட்டுமே உண்டு. பாதங்களை அலங்கரிக்கும் கேவலமான பாதுகைகளான உங்களுக்கு இங்கே இருக்க அருகதை இல்லை. உங்கள் வழக்கமான இடத்துக்குப் போய்விடுங்கள் என்று, கோபத்துடன் சொன்னது கிரீடம். கிரீடம் இப்படிச் சொன்னதும் பாதுகைகளுக்கும் கொஞ்சம் கோபம் வந்தது. நாங்கள் பாதங்களை அலங்கரிப்பவர்கள்தான். ஆனால், கேவலமானவர்கள் அல்ல. மகரிஷிகளும் தேவர்களும் பகவானின் பாதங்களில் தங்களின் திருமுடிகள் படும்படி நமஸ்கரித்து வணங்குகிறார்களே தவிர, உங்களைத் தழுவித் தரிசிப்பதில்லை. புனிதமான திருவடிகளை அலங்கரிக்கும் நாங்களும் புனிதமானவர்கள்தான் என்று வாதிட்டன பாதுகைகள். கிரீடம் விடுவதாக இல்லை. சங்கும், சக்கரமும் சேர்ந்து கொண்டதால், அந்தக் கட்சி பலமுள்ளதாக இருந்தது. பாவம்.... ஆதிசேஷன்! நடு நிலைமை வகித்து, இவற்றின் அறியாமையை எண்ணி, அனுதாபப்பட்டுக் கொண்டிருந்தார். தனித்து நின்ற பாதுகைகளால், ஏளனப் பேச்சைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பகவான் எப்போது வருவார். அவரிடம் முறையிடலாம் என்று கலங்கி நின்றிருந்தன. பகவான் வந்தார். அவர் பாதத்தில் கண்ணீர் சிந்தி, பாதுகைகள் முறையிட்டன. இங்கே நடந்ததை நான் அறிவேன். என் சன்னதியில் ஏற்றத் தாழ்வுகள் கிடையாது என்பதை உணராமல், கிரீடமும் சங்கும் சக்கரமும் கர்வம் கொண்டு, புனிதமான உங்களைத் தூற்றியதற்கான பாவ பலனை அனுபவிக்க வேண்டி வரும். சாதுக்களை ரட்சித்து, துஷ்டர்களை சம்ஹரித்து, தர்மத்தை நிலைநாட்ட நான் அவ்வப்போது பூமியில் அவதாரம் செய்வேன். அத்தகைய அவதாரங்களில் ஸ்ரீராமாவதாரம் நிகழும்போது, சக்கரமும் சங்கும் என சகோதரர்களாக பரதன், சத்ருக்னன் என்ற பெயர்களில் அவதரிப்பார்கள். அந்த அவதாரத்தில் நான் அரச பதவியை ஏற்று சிம்மாசனத்தில் அமர முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படும். அப்போது இந்தத் திருமுடியை சிம்மாசனத்தில் வைத்து அதன் மீது பாதுகைகளான உங்களை வைத்து, சங்கும் சக்கரமும் 14 வருடங்கள் உங்களைப் பூஜிப்பார்கள். அவரவர் வினைக்கேற்ப அவரவர் தேடிக் கொள்ளும் பயன் இது! என்றார் பகவான். சிரசை அலங்கரிக்கும் திருமுடி, ஒருவகையில் உயர்ந்தது என்றால், பாதங்களை அலங்கரிக்கும் பாதுகைகளும் மற்றொரு வகையில் உயர்ந்தவையே! ஒன்றிற் சிறியர் ஒன்றிற் பெரியராம் ஒன்றிற் பெரியர் ஒன்றிற் சிறியராம் என்ற உயர்ந்த தத்துவத்தை விளக்க திருமுடியும, பாதுகையும் சங்கமமான கதையே பாதுகா பட்டாபிஷேகம்! வைணவக் கோயில்களில் பக்தர்களுக்கு ஆசிர்வாதம் செய்ய சடாரி என்ற மகுடத்தைத் தலையில் வைப்பார்கள். அதன் மேல் இரண்டு பாதச்சுவடுகள் பொறிக்கப்பட்டிருக்கும். திருமுடி மேல் திருவடி என்பதே சடாரி. அதைத் தலையில் வைத்துக்கொள்ளும்போது நம் ஆணவம், அகங்காரம் ஆகியவை அழியவேண்டும் என்பதே தத்துவம்!








அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வெள்ளிக்கிழமையாகிய இன்று நலங்களும் .. ஐஸ்வர்யங்களையும் தரும் அன்னை மஹாலக்ஷ்மியைத் துதித்து தங்களனைவருக்கும் சகலசௌபாக்கியங்களும் அளித்திட பிரார்த்திக்கின்றேன் .. நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடேஸுரபூஜிதே ! சங்கசக்ர கதாஹஸ்தே ! மஹாலக்ஷ்மி நமோஸ்துதே !!! மஹாமாயை வடிவாகத் துலங்குபவளும் .. ஸ்ரீபீடத்தில் உறைபவளும் .. தேவர்களால் பூஜிக்கப்படுபவளும் .. சங்கம் .. சக்ரம் .. கதை .. இவைகளைக் கையில் தரித்தவளுமான மஹாலக்ஷ்மித்தாயே ! நமஸ்காரம் ! கருடவாகனத்தில் அமர்ந்திருப்பவளும் கோலாஸுரன் எனும் அசுரனை நடுநடுங்க வைத்தவளும் .. சகலவிதமான பாவங்களைப் போக்குபவளுமான திருமகளே ! நமஸ்காரம் ! அன்னையைப் போற்றுவோம் ..அன்னை மஹாலக்ஷ்மியின் அருட்கடாக்ஷ்த்தைப் பெற்றிடுவோம் .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. .. WISH YOU ALL A BLESSED FRIDAY WITH THE BLESSINGS OF GODDESS LAXMI .. MAY SHE SHOWER YOU WITH WEALTH .. BEST HEALTH AND HAPPINESS .. " JAI MATA DI "

தானத்தின் பலன்கள் ஒருவர் கொடுக்கும் சிலவகை தானங்களால் மறு பிறவியில் அவர்களுக்கு கிடைக்கும் பலன்கள் கூறப்பட்டுள்ளது. அவற்றை இங்கு பார்க்கலாம். * திருக்கோவில்களை புனரமைப்பதற்கு உதவி செய்வதால், பூரண ஆரோக்கியம், உத்தமியான மனைவி, நற்குணம் நிறைந்த குழந்தைகள் கிடைப்பார்கள். * தங்கத்தை தானமாக வழங்குவதால், குறைவில்லாத ஐஸ்வரியம் உண்டாகும். * வெள்ளியை தானம் செய்வதால் அழகான சரீரம் கிடைக்கப்பெறுவர். * எள் தானம் செய்வதன் மூலம் பித்ருக்களின் ஆசி, சந்தான பாக்கியம், சந்ததி விருத்தி போன்ற நலன்கள் கிட்டும். * தானியங்களை தானம் செய்தால், குறைவில்லாத அன்னம் கிடைக்கும். * கோமாதா தானம் செய்வதால் உத்தமமான குடும்பத்தின் பிறப்பு, தாயன்பு வந்தடையும். * பிராணிகளின் தாகம், பசியை போக்கினால் நோயற்ற வாழ்வு வந்து சேரும்.

நவக்கிரக நைவேத்தியம்

சூரியன் – சர்க்கரைப் பொங்கல்

சந்திரன் – நெய் பாயசம்

செவ்வாய் – சம்பா சாதம்

புதன் – பால் சாதம்

குரு – தயிர் சாதம்

சுக்ரன் – வெல்ல சாதம்

சனி – எள் சாதம்

ராகு – சித்ரான்னம்

கேது – சித்ரான்னம்


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று இப்பிரபஞ்சத்தைக் காக்கும் கடவுளாகிய மஹாவிஷ்ணுவைத் துதித்து தங்களனைவருக்கும் இந்நாள் ஓர் இனிய நன்னாளாய் அமைந்திடவும் .. குடும்பத்தில் நல்லாரோக்கியமும் .. சுபீட்சமும் பெற்றிட பகவானைப் பிரார்த்திக்கின்றேன் .. ஓம் நாராயணாய வித்மஹே ! வாசுதேவாய தீமஹி ! தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! .. ” கங்கையைவிடச் சிறந்த தீர்த்தம் இல்லை .. விஷ்ணுவைவிட உயர்ந்ததெய்வம் இல்லை .. காயத்ரியைவிட உயர்ந்த மந்திரம் இல்லை .. தாயிற் சிறந்த கோயிலும் இல்லை “ .. பிறவித்துன்பத்தினை துடைக்கவல்ல மஹாவிஷ்ணுவை வணங்கித் துன்பமற்ற வாழ்வை வாழ்வோமாக .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. . MAY THE DIVINE LORD VISHNU BLESS YOU .. AND SHOWER YOU WITH ALL THATS PURE AND BEAUTIFUL .. HAVE A BLESSED DAY TOO .. "OM NAMO NAARAAYANAA"

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. தைப்பூசத்திருநாள் நல்வாழ்த்துக்களும் உரித்தாகுக .... தைப்பூச நன்னாளில் அதிகாலையில் கிழக்கில் சூரியனும் .. மேற்கில் முழுநிலவும் .. ஞானசபையில் இருந்து அக்னியான ஜோதியும் காண்பிக்கப்படும் ..இவை ஒரே நேர்கோட்டில் அமையும் .. இந்த அதிசயம் தைப்பூசத்தில் மட்டுமே நிகழும் .. சந்திரன் என்பது மன அறிவு .. சூரியன் என்பது ஜீவ அறிவு .. அக்னி என்பது ஆன்மா அறிவு .. சந்திரன் சூரியனில் அடங்கி .. சுரியன் அக்னியில் அடங்கி .. அக்னி ஆகாயத்தில் அடங்கும் என்பதே தைபூசம் .. மனம் ஜீவனில் அடங்கி .. ஜீவன் ஆன்மாவில் அடங்கி .. ஆன்மா சிவத்துடன் கலந்துவிடும் என்பதைக் காட்டவே தைபூசம் நமது வள்ளல்பெருமானால் அளிக்கப்பட்டது .. மேலும் அதிகாலை ஜோதிதரிசனம் மட்டுமே உண்மைத் தத்துவமாக வள்ளல் பெருமானால் விளக்கப்பட்டது .. சூரனை வதம் செய்வதற்காக தன் அன்னை சக்தியிடம் பிரார்த்தனை செய்த முருகனுக்கு தன் ஞானசக்தியால் அதிசயம் அநேகமுற்ற பழனிமலையில் வேல் வழங்கி ஆசி வழங்கினாள் .. அதன் காரணமாகவே பழனிமலையில் தைப்பூசத்திருவிழா வெகுசிறப்பாகக் கொண்டாடப்படுகிறது .. முருகனையும் .. ஜோதியையும் (வேல்) எப்போதும் பிரிக்கமுடியாது .. ஞானத்தின் அம்சம்தான் வேல் .. அந்த வேலைத்தாங்குகின்ற முருகப்பெருமானை “ஞானவேல் முருகன்” என்று போற்றுகின்றன ஆகமங்கள் .. தைப்பூசத்தன்று முருகனை வழிபட்டு அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து .. சகலசௌபாக்கியங்களும் பெறுவீர்களாக .. “சரணம் சரணம் சரவணபவனே சரணம் ! சரணம் சரணம் சண்முகா சரணம் !! வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .... WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA .. MAY HE SHOWER HIS BLESSINGS WITH GOOD HEALTH AND PROSPERITY .. " OM MURUGA " ..

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையாகிய இன்று சிவனைத் துதித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் வெற்றிகரமான நாளாகவும் .. மகிழ்ச்சிகரமான நன்னாளாகவும் அமைந்திட பிரார்த்திக்கின்றேன் .. ” ஓம் நமசிவாய “ .. சைவசமயத்தின் முழுமுதற்கடவுளாகவும் .. பிறப்பும் இறப்பும் இல்லாதவர் என்றும் .. இவரே மும்மூர்த்திகளையும் .. தேவர்களையும் .. அசுரர்களையும் .. உலக உயிர்களையும் தோற்றுவிப்பதாகவும் .. பிரளயக் காலத்தில் அனைத்தையும் அழித்து தன்னுள் ஒடுக்கி சிவன்மட்டுமே நிலையாக இருப்பதாகவும் சைவசித்தாந்தங்கள் தெரிவிக்கின்றன .. சிவனைப் போற்றுவோம் .. அவனது அருளைப் பெற்றுவிட்டால் எல்லாம் இனிதே நிறைவேறும் .. அனைவருக்கும் வெற்றி ! எதிலும் வெற்றி ! .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. . HAVE A BLESSED DAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. MAY YOUR WEEK BE FILLED WITH PEACE AND HAPPINESS .. " OM NAMASHIVAAYA "

 ருத்ராட்சம் அணிந்தால்…, Rudraksham aninthal
ருத்ராட்சம் அணிந்தாலே, “சாமியாராக போய்விடுவோம்” என்ற ஒரு மாற்று நம்பிக்கை எப்போதும் பரவாலாக இருந்தே வருகிறது. ஆனால் இந்த ருத்ராட்சத்தை யாரெல்லாம் அணியலாம், இதை அணிவதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை தெளிவாக்குகிறது இக்கட்டுரை… பல நூறு வருடங்கள் தவத்தில் ஆழ்ந்திருந்த சிவன் கண்களைத் திறந்தபோது, அவர் உணர்ந்த பேரானந்தம், கண்ணீர்த் துளியாய் சிந்தியது. அது பூமியில் விழுந்து ருத்ராட்ச மரமாக வளர்ந்தது, என்பது வழக்கத்தில் இருந்து வரும் கதை. ருத்ராட்சத்தின் பலன்கள்: மனம், உடல், சம்பந்தப்பட்ட அத்தனைக்கும் நிவாரணியாய், உலகமெங்கும் பயன்படுத்தப்படுகிறது ருத்ராட்சம். மனதின் சலனங்களைச் சீர் செய்கிறது, தியான நிலையில் மூழ்கவைக்கிறது, சுவாசத்தைச் சுத்தப்படுத்துகிறது, உடலின் ஏழு சக்கரங்களையும் துரிதப்படுத்துகிறது எனப் பல்வேறு பலன்களை தருகிறது. யாரெல்லாம் இதை அணியலாம்: வயது வரம்பில்லாமல் மொழி, இனம், தேசம், ஆண், பெண் என்கிற பேதமில்லாமல் யார் வேண்டுமானாலும் ருத்ராட்சத்தை அணியலாம். இயற்கையாகக் கிடைக்கும் ருத்ராட்சத்தை அணிபவர்களுக்கு, அதன் அத்தனை நன்மைகளும் கிடைக்கும். ஈஷா யோகா மையத்தில் கொடுக்கப்படும் ருத்ராட்சத்தின் தரம், நம்பகத்தன்மை போன்றவை சோதிக்கப்பட்ட பின்னரே கொடுக்கப்படுகிறது. ருத்ராட்சத்தின் வகைகள் பஞ்சமுகி: ஐந்து முகம் கொண்ட இந்த ருத்ராட்சத்தை, 14 வயதுக்கு மேல் உள்ள யாவரும் அணியலாம். இந்த ருத்ராட்சத்தை மாலையாக மட்டுமே அணிய வேண்டும். உள்நிலையில் ஆன்மாவைச் சுத்தப்படுத்த இது உதவும். த்விமுகி: இரண்டு முகம் கொண்ட இந்த ருத்ராட்சத்தை திருமணம் ஆனவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். திருமண பந்தத்தைப் பலப்படுத்தும். இதை கணவன் மனைவி இருவரும் அணிய வேண்டும். ஷண்முகி: இது குழந்தைகளுக்கான ருத்ராட்சம். ஆறுமுகம் கொண்ட இந்த ருத்ராட்சத்தை 14 வயதுக்குக் கீழ் இருப்பவர்கள் அணிய வேண்டும். மன வளர்ச்சியையும் உடல் வளர்ச்சியையும் இது அதிகரிக்கும். கௌரிஷங்கர்: இரண்டு ருத்ராட்சங்கள் ஒட்டி இருப்பது போல இருக்கும் இதை 14 வயதுக்கு மேல் இருக்கும் அனைவரும் அணியலாம். இது ஈடா, பிங்களா என்கிற சக்தி நாடிகளைச் சமநிலைக்குக் கொண்டுவருகிறது. உடலில் உள்ள ஏழு சக்கரங்களையும் துரிதப்படுத்துகிறது. பதப்படுத்துதல்: புதிதாய் இருக்கும் ருத்ராட்சத்தை சுத்தமான நெய்யில் 24 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். கொழுப்பு நீக்கப்படாத பாலில் இன்னும் 24 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பிறகு, சுத்தமான துணியில் துடைத்து அணிந்துகொள்ளலாம். ஆறு மாதத்திற்கு ஒருமுறை இப்படிச் செய்ய வேண்டும். சுடுநீரிலோ, சோப்போ படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மற்றபடி, எந்த விதிவிலக்கும் இன்றி எல்லா நேரத்திலும் ருத்ராட்சத்தை அணிந்திருக்கலாம். இதற்கு வாழ்க்கை முறையிலோ அல்லது உணவு முறையிலோ எந்த வித கட்டுப்பாடும் இல்லை. இதைக் கழுத்தில் மட்டுமே அணிய வேண்டும். எந்த ஒரு உலோகத்திலும் ருத்ராட்சம் படாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். கவனமாகக் கையாளவில்லை என்றால், ருத்ராட்சம் எளிதில் சேதமடைந்துவிடும். உடைந்து, விரிசல்விட்ட, சேதமடைந்த ருத்ராட்சத்தின் சக்திகள் நல்லதல்ல. அவற்றை அணியாமல் இருப்பதே நல்லது!


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. இன்று பிரதோஷ விரதமாகும் .. சிவபெருமானுக்குரிய தினமும் ஆகும் .. ஆலகால விஷத்தால் மூவுலகிற்கும் ஏற்படவிருந்த பேரழிவை சிவபெருமான் காத்தவேளையே பிரதோஷ காலமாகும் .. பிரதோஷ வேளையில் (மாலை 4.30 - 6.00 மணிவரை) சிவாலயம் சென்று மூலவரான லிங்கத்திற்கு நடக்கும் தீபாராதனையை .. நந்தீஸ்வரரின் இரு கொம்புகளுக்கிடையே பார்த்து தரிசிக்க சகல தோஷங்களும் நீங்கி எல்லா நன்மைகளும் உண்டாகும் .. பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தைப் பெறுகிறார்கள் .. நோய் தீரவும் .. ஏழ்மை ஒழியவும் .. துயரங்கள் விலகவும் .. பிரதோஷ வழிபாடு சிறந்ததாகும் .. “ஓம் நமசிவாய “ என்று சொல்வோமே சகல துன்பங்களும் பறந்தோடுமே ! வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. .. WISH YOU ALL A BLESSED SUNDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. MAY HE SHOWER YOU WITH EVERYTHING YOU DESIRE FOR .. " OM NAMASHIVAAYA "