அவையம் ஆனவரே
பன்வேல் பாலகரே
 உம்மை
போற்றித் துதிக்கின்றேன் 
இடர்கள் வந்தாலும் 
உனை இடைவிடாது துதிக்கின்றேன்

உன்
கடைக்கண் பார்வை என் மீது பொழிய 
உவகை நானடைந்தேன்
பகைமை, கோபம் ,காழ்ப்புணர்ச்சி ,துன்பம்
இவைகள் நீக்கி விட்டாய்
தகைமை எனக்குண்டு 

உன் பக்தன் ஆனதனால்
மிகவும் தாழ்வாக ஒரு வரமே நான் கேட்பேன்
வாழும் காலமெல்லாம் 

குருவின் அன்போடு சேர்த்து
உன் திருவருள் அருள்வாயே


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வணக்கங்கள் .. செவ்வாய்க்கிழமையாகிய இன்று கலியுகவரதனாகிய கார்த்திகேயனைத் துதித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் இனிய நன்னாளாக அமைந்திடவும் சகலசம்பத்துக்களும் பெற்று மனமகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகின்றேன் .. வணங்குகின்றேன் .. ஓம் கார்த்திகேயாய வித்மஹே ! சக்திஹஸ்தாய தீமஹி ! தந்நோ ஸ்கந்த ப்ரசோதயாத் !! பொருள் - சக்தி என்னும் வேலாயுதத்தை கையில் ஏந்தி நிற்கும் கார்த்திகேயனே ! நீ நம் அறிவைப் பிரகாசமாக்கி நல்வழியில் நடத்துவாயாக ! .. ஸ்ரீ சத்குரு சாந்தானந்த சுவாமிகள் அருளிய குரு - கவசத்தில் முருகனின் மூலமந்திரம் உள்ளது .. அந்த மந்திரத்தை தியானித்து உரு ஏற்ற முருகனின் அருள்கிடைத்து மும்மலங்கள் ஆகிய .. ஆணவம் .. கன்மம் .. மாயை நம்மைவிட்டு அகன்று முக்தி நமக்கு சித்தியாகுமாம் .. முக்தியைத் தேடி எங்கும் அலையவேண்டாம் என்று சொல்கிறது ஸ்கந்த குருகவசம் .. மூலமந்திரம் - ஓம் ஸௌம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் கலீம் க்லௌம் ஸெளம் ! நமஹ ! கார்த்திகேயனைப் போற்றுவோம் .. அவனருட்கடாக்ஷ்ம் பெறுவோமாக .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA .. MAY HE BE WITH YOU IN EACH STEPS YOU TAKE TODAY AND FOREVER MORE —


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஏகாதசித் திதியாகிய இன்று மஹாவிஷ்ணுவைத் துதித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன் நாளாக அமைந்திடவும் .. செய்யும் அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறவும் வாழ்த்தி வணங்குகின்றேன் .. ஓம் நமோ நாராயணாய வித்மஹே ! வாசுதேவாய தீமஹி ! தந்நோ விஷ்ணுப்ரசோதயாத் !! வளர்பிறையில் வரும் ஏகாதசி .. தேய்பிறையில் வரும் ஏகாதசி என மாதத்துக்கு இரண்டாக ஒருவருடத்தில் 24 ஏகாதசிகள் வரும் .. ஒருசில வருடங்களில் ஒரு ஏகாதசி அதிகமாகி 25 ஏகாதசிகளும் வருவதுண்டு .. ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒவ்வொரு பலன்கள் வழங்கினாலும் .. வைகுண்டபதவிக்கும் வழிவகுக்கும் என்பதே சிறப்பு வாய்ந்ததாகும் .. பங்குனி வளர்பிறையாகிய இன்றைய ஏகாதசியை “ ஆமலகி ஏகாதசி “ என்றழைப்பர் .. நெல்லிமரத்தடியில் பரசுராமனின் படத்தை வைத்து பூஜைசெய்து நெல்லிமரத்தை 108முறை சுற்றி பூபோட்டால் புண்ணியநதிகளில் நீராடிய பலனும் ஆயிரம் பசுக்களை தானம் செய்த பலனும் கிட்டும் .. நெல்லி திருமாலின் தோன்றலாகும் .. எல்லா தெய்வசக்திகளும் கோமாதா.. காமதேனுவுள் அடக்கம் போல நலன்பயக்கும் சக்திகள் யாவும் நெல்லியுள் அடக்கம் .. ஆதிசங்கரருக்கு அளிக்கப்பட்ட ஒரு நெல்லி அவரை “கனகதாரத் துதியை” பாடச் செய்து தங்கமழையை கொட்டுவித்ததுபோல பெரும்பயன் அருளவல்லது .. மஹாவிஷ்ணுவைப் போற்றி வணங்கி சகல ஐஸ்வர்யங்களையும் பெறுவோமாக .. வாழ்க வளமுடனும் நலமுடனும் .. . WISH YOU ALL A BLESSED MONDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD VISHNU .. MAY HIS DIVINE BLESSINGS BRINGS YOU HAPPINESS AND ETERNAL BLISS .. " OM NAMO NAARAAYANAA " ..


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று பூமியில் சூரியாதிக்கம் நிறைந்த நாளாகும் .. தங்களனைவரின் நல்லாரோக்கியத்திற்கும் .. இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாய் அமைந்திடவும் சூரியபகவானைப் பிரார்த்திக்கின்றேன் .. ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே ! பாஸஹஸ்தாய தீமஹி ! தந்நோ சூர்யஹ் ப்ரசோதயாத் !! இயற்கை ஏற்றிவைத்த ஒளிவிளக்காகிய சூரியன் தன் அருள் ஒளியால் அறியாமை என்னும் இருளகற்றி அறிவென்னும் ஒளிச்சுடரைத் தூண்டும் சக்திமிக்க பிரத்யட்ச தெய்வ வடிவாகத் திகழ்கிறான் .. நவக்கிரகங்களின் நாயகன் .. என்றழைக்கப்படுபவர் சூரியன் .. தினமும் நமக்கு தரிசனம் கொடுக்கும் கிரகம் ஒளியைத் தந்து உயிர்களை வாழவைத்து இந்த உலகையே வாழவைத்துக் கொண்டிருக்கும் முதன்மைக் கிரகம் .. அதிகாரம் .. ஆட்சி .. ஆளுமை .. போன்றவற்றுக்கு அதிகாரம் உள்ளவர் இவர் .. சூரியன் தயவு இல்லாமல் தலைமைப் பொறுப்புக்கு யாரும் வரமுடியாது .. ஐ.ஏ.எஸ் .. ஐ.பி.எஸ் அதிகாரிகள் .. தலைமை செயலாளர்கள் .. மிகப்பெரிய அதிகாரப் பதவிகள் .. ஆகியவற்றில் ஒருவர் அமர்வதற்கு சூரியனின் அனுக்கிரகம் அவசியம் .. இவைமட்டுமல்லாமல் ஒரு நிகழ்ச்சிக்கோ .. பத்துபேர் கொண்ட குழுவுக்கோ தலைமைவகிக்க வேண்டும் என்றாலும் சூரியனின் அருள் தேவை .. தலைமைப்பீடம் என்பது சூரியபலத்தினால் மட்டுமே கிடைக்கும் .. தினசரி ஆதித்யஹ்ருதய ஸ்தோத்திரம் படிக்கலாம் .. கோதுமையில் செய்த சப்பாத்தி .. ரொட்டி .. சாதம் போன்ற உணவுப்பண்டங்களை பசுமாட்டுக்கு கொடுக்கலாம் .. சூரியவழிபாடு செய்து .. கிரஹதோஷங்கள் நீங்கி எல்லாவளமும் பெறுவீர்களாக .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. .. WISH YOU ALL A BLESSED SUNDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SURYA .. MAY HE GUIDES YOU IN EACH STEPS YOU TAKE TODAY AND FOREVER MORE "JAI SURYA DEV " ..


பாலகனின் விஸ்வரூப தரிசனம்.......


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. ஸ்ரீராமநவமி வாழ்த்துக்களும் உரித்தாகுக .. மஹாவிஷ்ணுவின் அவதாரங்களில் ராமாவதாரம் பரிபூரண அவதாரமாகும் .. அறமே வாழ்வின் ஆன்மீக ஜோதி .. அறத்தை வளர்ப்பதற்கும் .. மனிதனிடம் மறைந்து கிடக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்துவதற்கும் ஸ்ரீமான் நாராயணன் ராமனாக அவதாரம் செய்தார் .. ஸ்ரீராமச்சந்திரனுக்கு ஜெயமங்களம் ! நல்ல திவ்யமுகச்சந்திரனுக்கு சுபமங்களம் ! மாராபிராமனுக்கு ! மனுபரந்தாமனுக்கு !ஈராறு நாமனுக்கு ! ரவிகுலசோமனுக்கு ஜெயமங்களம் !! ராமன் பிறந்தகாலத்தில் ஐந்து கிரகங்கள் மிகவும் உச்சநிலையில் இருந்தது .. அதனால் அவருடைய ஜாதகத்தை எழுதி அதை பூஜைஅறையில் வைத்து பூஜை செய்பவர்களுக்கு ஜாதகரீதியாக ஏற்படக்கூடிய நவக்கிரக தோஷம் நீங்கும் .. வியாதிகளும் குணமாகும் .. ஐஸ்வர்யங்கள் பெருகும் என்பது நம்பிக்கை .. ஒருவில் ! ஒருசொல் ! ஒரு இல் ! என உலகிற்கு வாழ்ந்து காட்டிய ராமர் பங்குனி மாதம் வளர்பிறை சுக்லபட்சத்தில் நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தார் .. அன்றைய தினமே “ ஸ்ரீராமநவமியாக “ கொண்டாடப்படுகிறது .. ராமநாமமானது அஷ்டாட்சரமான ‘ ஓம் நமோ நாராயணாய ‘ என்பதில் உள்ள “ ரா “ என்ற எழுத்தையும் .. பஞ்சாட்சரமான ’ நமசிவாய ‘ என்ற எழுத்தில் “ ம” என்ற எழுத்தையும் சேர்த்து ” ராம “ என்றானது .. ‘ஆயிரம் நாமங்களுடைய தத்துவங்களையும் ராம என்ற நாமம் கொண்டுள்ளது .. எனவே ஒருவன் ராமநாமத்தை மூன்றுமுறை ஜபிப்பதால் அந்த ஆயிரம் நாமங்களையும் ஜபித்தவன் ஆகிறான் ‘ .. ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே ! ஸஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே ! என்று ராமநாமத்தை பார்வதிதேவியிடம் சொல்லிக் கொண்டாடுபவர் சாட்சாத் சிவபெருமானே ! கிருஷ்ணாவதாரத்தில் என்ன நடக்கும் என்பது கிருஷ்ணருக்குத் தெரியும் .. ராம அவதாரத்தில் என்ன நடக்கப்போகிறது என்பது மானுட அவதாரம் எடுத்த ராமனுக்குத் தெரியாது .. அதுதான் இந்த அவதாரத்தின் மகிமை .. ராமன் என்றாலே ஆனந்தமாக இருப்பவன் என்று பொருள் .. சுகதுக்கங்களில் சலனம் அடையாமல் தான் ஆனந்தமாகவே இருந்துகொண்டு மற்றவர்களுக்கு ஆனந்தத்தைத் தருபவன் தான் ஸ்ரீராமன் .. ” ஸ்ரீராமஜெயம் “ என்ற எழுத்தை 108 முறை .. அல்லது 1008 முறை எழுதத் தொடங்கவும் .. இந்த பேராற்றல் வாய்ந்த மந்திரத்தால் ஆணவம் அழியும் .. மனதில் அமைதியும் .. மகிழ்ச்சியும் விளையும் .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும்.. “ ஜெய் ராம் “ . MAY YOUR SOUL BRIGHTEN UP WITH JOY AND YOUR HOME LIGHTEN UP WITH DIVINE BLESSINGS ON " RAM NAVAMI " AND ALWAYS .. MAY LORD RAM BLESS YOU AND YOUR FAMILY TOO ..


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வெள்ளிக்கிழமையாகிய இன்று அன்னை மஹாலக்ஷ்மியைத் துதித்து தங்களனைவருக்கும் அன்னையின் அருட்கடாக்ஷ்ம் கிடைத்து சகல ஐஸ்வர்யங்களும் தங்கள் இல்லம் தேடிவர பிரார்த்திக்கின்றேன் .. யாதேவி ஸர்வ பூதேஷு ! லக்ஷ்மி ரூபேண ஸம்ஸ்த்திதா ! நமஸ்தஸ்யை ! நமஸ்தஸ்யை ! நமஸ்தஸ்யை ! நமோ நமஹ !!.. பொருள் - அனைத்து உயிர்களிலும் செல்வ வளமாய் விளங்கும் மஹாலக்ஷ்மி தேவியே ! நமஸ்காரம் ! உங்களை மீண்டும் .. மீண்டும் .. நமஸ்கரிக்கிறேன் ! இந்தப் பிரபஞ்சத்தின் தாயாக விளங்கும் அம்பிகையை வழிபடுவதற்குப் பலவழிகள் இருக்கின்றன .. அவளுக்கு மிக மிகப் பிரியமான பெயரால் அவளை அழைப்பதுகூட ஒருவழிதான் .. அம்மா .. மா .. ஆயி .. ஆத்தாள் .. என்னும் பெயர்களே அவை .. அதே பொருள் கொண்ட மந்திரத்தாலும் வழிபடலாம் .. “ ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ “ அன்னையைத் துதிப்போம் .. அவளருள் பெறுவோமாக .. ஓம் சக்தி ஓம் .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. .. WISH YOU ALL A BLESSED FRIDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF GODDESS LAXMI .. MAY SHE SHOWER YOU WITH .. BEST HEALTH .. BEST WEALTH .. AND HAPPINESS " JAI MATA DI "


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வியாழக்கிழமையாகிய இன்று .. அற்புதமகான் ஷீரடிபாபாவினது நாளும் ஆகும் .. அவரைத் துதித்து தங்கள் அனைவருக்கும் மலர்ந்திருக்கும் இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாக அமைந்திடவும் .. செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி பெறவும் வாழ்த்தி வணங்குகின்றேன் .. ஓம் ஷீரடிவாஸாய வித்மஹே ! ஸச்சிதானந்தாய தீமஹி ! தந்நோ ஸாயி ப்ரசோதயாத் !! .. ஒருமுறை பாபாவை அன்புடன் நோக்கினால் அவர் ஆயுள்முழுவதற்கும் நம்முடையவர் ஆகிவிடுகிறார் .. உண்மையான அன்பைத் தவிர நம்மிடம் அவர் வேறெதையும் எதிர்பார்ப்பதில்லை .. நாம் கூப்பிடும்போது காப்பாற்ற ஓடிவருகிறார் .. அந்நேரத்தில் காலமோ .. நேரமோ .. அவருக்குக் குறுக்கே நிற்கமுடியாது .. சதா சர்வகாலமும் அவர் நமக்குப் பின்னால் உறுதியாக நிற்கிறார் .. அவர் எங்கு எவ்வாறு எந்த விசையை இயக்குவார் என்று நமக்குத் தெரியாது .. அவருடைய செயல்கள் புரிந்துகொள்ள முடியாதவை .. ஒருமுறை பக்தர் ஒருவர் உலக ஆதாய நன்மையை நாடி பாபாவிடம் மக்கள் போவதை ஆட்சேபித்தபோது .. பாபா “ஒருபோதும் அப்படி சொல்லாதே ! எனது மக்கள் முதலில் அதற்காத்தான் என்னை நாடிவருகிறார்கள் தமது ஆசைகள் நிறைவேறி வாழ்க்கையில் சௌகரியத்தை அடைந்தபிறகு அவர்கள் என்னைப் பின்பற்றி ஆத்மீகத்துறையிலும் முன்னேறுகிறார்கள் .. என்னைச்சேர்ந்தவர்களை தொலைதூரத்தில் இருந்தெல்லாம் பல்வேறுவித முகாந்திரமாக இங்கே வரவழைக்கிறேன் .. அவர்கள் தம் இஷ்டப்படி தாமே வருவதில்லை .. நான் அவர்களை என்னிடம் இழுத்துக் கொள்கிறேன் “ என்றார் .. இச்சொற்கள் இன்றும் பலித்து வருகின்றன .. மிக்க மனக்கலக்கத்துடன் எதிர்பார்க்கக்கூடிய விஷயம் நமக்கு நன்மை செய்வதாக இருக்கவேண்டும் .. யாருக்கு எது பிராப்தமோ அதற்கு தக்கவாறே நான் அளிப்பேன் அளிக்கப்பட்டது எதுவாக இருந்தாலும் அது என் சங்கல்பமே என்பதை நீங்கள் அறிந்தால் என்னை அறிந்து கொண்டவரேயாவர் .. ( பாபாவின் பொன்மொழிகள் ) பாபாவைப் போற்றுவோம் அவரது அன்பும் ஆசியும் பெறுவோமாக ..” ஓம் சாய் ராம் ” .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. .. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF SHIRDI SAI .. MAY HE BE WITH YOU IN EACH STEPS YOU TAKE TODAY AND FOREVER MORE .. " OM SAI RAM " ..

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று சஷ்டித் திதியும் கூடிவருவதால் கந்தனைத் தொழுது தங்கள் அனைவருக்கும் இன்றைய நாள் ஓர் இனிய நன்னாளாக அமைந்திடவும் .. செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி பெறவும் வெற்றிவேல் முருகன் அருள் புரிவாராக .. ஓம் தத்புருஷாய வித்மஹே ! மஹேஷ்வர புத்ராய தீமஹி ! தந்நோ சுப்ரமண்யப்ரசோதயாத் !! .. வல்வினைநீக்கி .. வரும்வினைபோக்கி .. செல்வமும் .. செல்வாக்கும் தந்து .. அழகும் .. அறிவும் .. தந்திடும் வள்ளிமணாளனை .. வடிவேலவனை வழிபடும் விரதங்களில் மிகவும் சிறந்தது சஷ்டிவிரதமாகும் .. அகப்பை எனும் உள்ளத்தில் நல்ல எண்ணங்களும் .. பக்தி எனும் பாதையால் எழுந்த அமைதியும் அமையும் .. நம் மனதில் உள்ள அசுர எண்ணங்களை அழிப்பதே விரதங்களின் நோக்கமாகும் .. அறிவு வளர்ச்சிக்கு விஞ்ஞானம் உதவுவதைப்போன்று மனவளர்ச்சிக்கு சமயம் அடிகோலுகின்றது .. முருகனைப்போற்றித் துதித்து இகபர சௌபாக்கியங்களைப் பெறுவீர்களாக .. “ ஓம் சரவணபவாய நம ஓம் “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. MAY LORD MURUGA BLESS YOU AND BE WITH YOU IN EACH STEPS YOU TAKE TODAY AND FOREVER MORE .. MAY HE SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH AND HAPPINESS .. " OM SARAVANA BHAVAAYA NAMA OM " ..

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. இன்று செவ்வாய்க்கிழமையும் .. கார்த்திகைவிரதமும் சேர்ந்து வருவதால் முருகனாலயம் சென்று முருகனைத் தரிசிப்பது சாலச்சிறந்தது .. தங்கள் அனைவருக்கும் இன்றைய நாள் ஓர் இனிய நன்னாளாகவும் .. சகலசம்பத்துக்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ கலியுக தெய்வமான கார்த்திகேயனைப் பிரார்த்திக்கின்றேன் .. ஓம் தத்புருஷாய வித்மஹே ! மஹேஷ்வரபுத்ராய தீமஹி ! தந்நோ சுப்ரமண்யப்ரசோதயாத் !! .. செவ்வாயன்று முருகனை வழிபடுவதன் சிறப்பு - செவ்வாய்க்கு அதிபதி முருகன் என்பதால் முருகனுக்குரிய கிழமை செவ்வாயாக உள்ளது .. இகபர சௌபாக்கியம் அருள்பவன் முருகனே ! இப்பிறவிக்குத் தேவையான பொருட்செல்வத்தையும் .. மறுபிறவிக்குத் தேவையான அருட்செல்வத்தையும் தன் பன்னிரு கைகளால் வாரி வழங்கும் வள்ளல் முருகன் .. முன்செய்தபழிக்குத் துணை முருகா .. என்னும் நாமங்கள் முருகனுக்கு உண்டு என்பார் அருணகிரிநாதர் .. அதனால் “முருகா “ எனும் நாமத்தைச் சொன்னால் முன்வினைப்பாவம் நீங்கி புண்ணியம் சேரும் .. முருகனைப் போற்றுவோம் .. குடும்பத்திலும் .. மனதிலும் அமைதி கிட்டும் .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA .. MAY HE SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH AND HAPPINESS .. " OM MURUGA " ..


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று சூரியபகவானின் ஆதிக்கம் பூமியில் நிறைந்த நாளாகும் .. இன்றைய நாள் தங்களனைவருக்கும் ஓர் இனிய நன்னாளாகவும் .. உடல்நலமும் .. மனநலமும் ஆரோக்கியத்துடன் திகழ சூரியபகவானைப் பிரார்த்திக்கின்றேன் .. அஸ்வத்வஜாய வித்மஹே ! பத்மஹஸ்தாய தீமஹி ! தந்நோ சூர்யப்ரசோதயாத் !! ஸ்ரீ சூரியபகவான் ஸ்தோத்திரம் - காசினி இருளை நீக்கும் கதிரொளியாகி .. எங்கும் பூசுர உலகோர் போற்றப் பொசிப்புடன் சுகத்தை நல்கும் வாசியேழுடைய தேர்மேல் மகாகிரிவலமாய் வந்த தேசிகா! எமை ரட்சிப்பாய் ! செங்கதிரவனே ! போற்றி ! போற்றி ! .. சூரியனை வழிபடுவதால் உலகில் அடையமுடியாதவையே இல்லை .. சூரியன் ஆன்மாவைத் தட்டி எழுப்பி தன்வழிப்படுத்துபவர் என்பதையே வேதம் புகழ்கிறது .. உடலாரோக்கியத்தை அளிப்பதிலும் அருட்கடல் .. இதயநோயை நீக்குபவர் என்பதை குறிப்பிடுகிறது .. இவரே மழைபெய்யக் காரணம் .. மகாபாரதத்தில் திரௌபதிக்கு அட்சயபாத்திரம் அளித்ததும் கதிரவனே ! சூரிய வழிபாடு செய்து கிரகதோஷங்கள் நீங்கி .. எல்லாவளமும் பெறுவோமாக .. நம் மன இருளைப்போக்கி .. ஆரோக்கிய வாழ்வையும் தரும் சூரியபகவானை வணங்குவோமாக .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. .. WISH YOU ALL A BLESSED SUNDAY WITH THE BLESSING AND GUIDANCE OF LORD SURYA .. MAY HE SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH .. AND HAPPINESS .. " JAI SURYA DEV " ..


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வெள்ளிக்கிழமையாகிய இன்று அன்னை மஹாலக்ஷ்மியைத் துதித்து தங்களனைவருக்கும் அன்னையின் அருட்கடாக்ஷ்ம் கிடைத்து சகலசௌபாக்கியங்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகின்றேன் .. வணங்குகின்றேன் .. ஆதிலக்ஷ்மி நமஸ்தே அஸ்து பரப்ரஹ்மஸ்வரூபிணி யசோதஹி ! தனம் தேஹி ஸேர்வ காமாம் ச தேஹியே !! பொருள் - பரப்ரம்ம சொரூபமான ஆதிலக்ஷ்மியே ! உனக்கு நமஸ்காரம் ! புகழ் .. தனம் .. ஆகியவற்றைக் கொடு நம் நியாயமான தேவைகளை நிறைவேற்று .. தீபத்தின் ஒளியானது தன்னைமட்டும் வெளிப்படுத்திக் கொள்வதில்லை .. தன்னைச்சுற்றி இருப்பவற்றையும் வெளிப்படுத்துகிறது .. அதுபோல்தான் மஹாலக்ஷ்மியும் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதுடன் தன்னைச் சரண் அடைந்தவர்களையும் சிறப்புறச் செய்வாள் ! அன்னையின் திருவடிகளைப் பற்றிக்கொள்ள யாருடைய சிபாரிசும் தேவையில்லை .. அவளுடைய கருணாகடாக்ஷ்த்தின் மகிமைகளைச் சொல்லி பிரார்த்தித்துக் கொண்டோம் என்றால் அவளுடைய திருவடிகளை நமக்குக் கொடுத்துவிடுவாள் ஹரிஹர ப்ரஹ்மாதி தேவர்களாலும் சேவித்து வணங்கப்படுகின்ற அன்னையைப் போற்றிப் பணிந்து அன்னையின் கருணாகடாக்ஷ்ம் நமக்கெல்லாம் தொடர்ந்து கிடைக்கப் பிரார்த்திப்போமாக .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. WISH YOU ALL A BLESSED FRIDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF GODDESS LAXMI .. MAY SHE SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH AND HAPPINESS .. " JAI MATA DI "


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வியாழக்கிழமையாகிய இன்று நம் அனைவராலும் போற்றி வணங்கப்படும் அற்புத மகான் ஸ்ரீ சீரடிபாபாவினது நாளும் ஆகும் .. அவரைத் துதித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் இனிய நன்னாளாக அமையவும் .. தங்களது அனைத்து காரியங்களும் தடங்களின்றி வெற்றி பெறவும் வாழ்த்தி வணங்குகின்றேன் .. ஓம் ஷீரடி வாஸாய வித்மஹே! ஸச்சிதானந்தாய தீமஹி ! தந்நோ ஸாயி ப்ரசோதயாத் !! .. பொன்மொழிகள் - 1 - குருவின் பார்வையே ஒரு சிஷ்யனுக்கு உணவும் நீரும் ஆகிறது .. என்னை உங்கள் எண்ணங்கள்.. நோக்கங்கள் ஆகியவற்றின் ஒரே பொருளாக ஆக்கிக் கொள்வீர்களேயானால் நீங்கள் மேலான லட்சியத்தை அடைவீர்கள் .. 2 - உனது கர்மத்தின் பலனை நீ அனுபவித்தாக வேண்டும் .. ஆனால் உனக்கு என்மீது நம்பிக்கை இருந்தால் எனது ஸாந்நித்யத்தின் முன்னர் நெருப்பில் வைக்கோல் எரிவதைப்போன்று உனது கர்மவினைகள் எரிக்கப்படும் .. 3 - என்னை எவன் மிகவும் விரும்புகின்றானோ .. அவன் எப்போதும் என்னைக் காண்கின்றான் .. என்னைவிட்டு நீங்கிவிடில் இவ்வுலகமே அவனுக்கு சூனியமாய்த் தோன்றுகிறது .. அவன் எனது கதைகளைத் தவிர பிறவற்றைக் கூறுவதில்லை .. இடையிறாது அவன் என்னையே தியானித்து என் நாமத்தையே ஸ்மரணம் செய்கிறான் .. முழுமையும் எவன் தன்னைவிட என்னிடம் சமர்ப்பித்து என்னையே எப்போதும் நினைவில் கொண்டு இருக்கிறானோ அவனுக்கு நான் கடன்பட்டதாக உணர்கிறேன் .. 4 - பாபா ஒருபோதும் பட்டினி இருந்ததில்லை .. மற்றவங்களையும் பட்டினியாயிருக்க அனுமதிக்கவில்லை .. விரதம் இருப்பவன் மனது அமைதியாய் இருப்பது இல்லை .. வயிற்றில் உணவின் ஈரம் இல்லையாயின் அவர் தம் புகழை எந்நாவுடன் நாம் இசைக்கமுடியும் .. ? .. கடவுளை எந்தக் கண்களுடன் பார்க்கமுடியும் ..? .. அல்லது எந்தக் காதுகளால் தான் அவர் புகழை கேட்கமுடியும் .. ? .. எனவே பசியோடிருந்தாலோ மிகவும் உண்பதோ ஆகாது .. 5 - ஐயங்களும் கஷ்டங்களும் நம்மை சற்றே அசைத்து நம்பிக்கையை உறுதிப்படுத்தவே நம்மைச் சூழ்கின்றன .. நாம் வாழ்க்கையில் சோதனைக்குள்ளாக்கப்படுகிறோம் .. முழுநம்பிக்கையுடன் பாபாவைப் பற்றிக்கொண்டு நமது முயற்சிகளைத் தொடர்ந்து செய்வோமேயானால் நமது முயற்சிகள் அனைத்தும் முடிவாக வெற்றிமுடி சூட்டப்பெறும்.. 6 - மழைக்காலத்தில் கடல் ஆறுகளுடன் கலப்பதுபோல் பக்தர்களுடன் பாபா ஒன்றாகி அவர்களுக்குத் தம் ஆற்றலையும் .. அந்தஸ்தையும் அளிக்கிறார் .. 7 - பாபாவிடம் செல்ல பக்தன் எவ்வளவு அதிகம் பக்தியுடன் நம்பிக்கையுடன் இருக்கிறானோ .. அவ்வளவு விரைவில் அவன் மனநிறைவு அடையும் வண்ணம் அவனது எண்ணம் நிறைவேற்றப்படும் .. உலகம் போற்றும் பாபாவைப் போற்றி அவரது பரிபூரண திருவருளையும் பெறுவோமாக .. “ ஓம் சாய் ராம் “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. .. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF SHIRDI SAI .. MAY HE BE WITH YOU IN EACH STEPS YOU TAKE TODAY AND FOREVER MORE .. HAVE A SUCCESSFUL DAY .. " OM SAI RAM " ..


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று பிரதோஷ விரதமும் ஆகும் .. எம்பெருமானைத் துதித்து தங்களனைவருக்கும் சகலதோஷங்களும் நீங்கி மகிழ்ச்சிகரமான வாழ்வு மலர வாழ்த்துகின்றேன் .. வணங்குகின்றேன் .. “ஓம் நமசிவாய “ .. சைவமக்களால் கடைப்பிடிக்கப்படும் சிவவிரதங்களில் ஒன்று ஒவ்வொருமாதமும் வளர்பிறை .. தேய்பிறை ஆகிய இரண்டு பட்சங்களிலும் வருகின்ற திரயோதசித் திதியில் சூரியன் மறைவதற்கு முன் மூன்றேமுக்கால் நாழிகையும் ..பின் மூன்றேமுக்கால் நாழிகையும் உள்ள பிரதோஷ காலத்திற் சிவபெருமானைக் குறித்து அநுஷ்டிக்கும் விரதமாகும் .. துன்பங்களிலிருந்து நீங்கி இன்பத்தை எய்துவர் .. பிரதோஷ வேளையில் கடவுளை நினைத்துக் கொண்டால் (மாலை - 4.30 - 6.00 மணிவரை காலம் ) கேட்ட கோரிக்கை பலிக்கும் என்பது நம்பிக்கை .. அலுவலகத்தில் பணியில் இருப்பவர்கள் இந்நேரத்தில் ஒரு விநாடி சிவனை நினைத்துக் கொள்வது நல்லது .. நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்போது இருகொம்புகளுக்கிடையே சிவனை பார்த்து தரிசிக்க நம் தோஷங்கள் நீங்கி நன்மை உண்டாகும் .. ” நமசிவாய “ என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியபடி பிரதோஷ காலத்தில் ஈசனைப் பிறையணிந்த பெருமானாக .. தேவியோடும் .. முருகனோடும் .. சோமஸ்கந்தமூர்த்தியாகத் தரிசிப்பது கோடி புண்ணியமாகும் .. சிவனைத்துதித்து சகல ஐஸ்வர்யங்களையும் பெறுவீர்களாக .. “ஓம் நமசிவாய “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. .. WISH YOU ALL A BLESSED WEDNESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. MAY HE BE WITH YOU AND GUIDES YOU IN EACH STEPS YOU TAKE TODAY AND FOREVER MORE .. " OM NAMASHIVAAYA " ..

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய்க்கிழமையாகிய இன்று கலியுகவரதனாகிய கார்த்திகேயனைப் பிரார்த்தித்து இன்றைய நாள் ஓர் பொன்னாளாய் மிளிரவும் .. உடல் நலமும் .. மனநலமும் புத்துணர்வு பெறவும் பிரார்த்திக்கின்றேன் .. ஓம் தத்புருஷாய வித்மஹே ! மஹேஷ்வரபுத்ராய தீமஹி! தந்நோ சுப்ரமண்யப்ரசோதயாத் !! முருகன் திருவுருவம் ஒரு புரிதல் - முருகக் கடவுள் முழுமுதற்கடவுளான விநாயகரின் இளையவர் .. சிவபார்வதியரின் இரண்டாவது புதல்வர் .. அழகின் இலக்கணமாகிய இவர் கார்த்திகை நக்ஷ்த்திரத்தில் உதித்ததால் கார்த்திகேயன் என்றும் .. ஆறுமுகங்களைக் கொண்டதால் ஷண்முகன் என்றும் .. அன்போடு போற்றப்படுபவர் .. மற்ற தெய்வங்களைப் போலவே முருகனின் உருவமும் முழுமையான தத்துவத்தை உணர்த்துகிறது .. முருகனின் கையில் வேலாயுதம் ஏந்தியுள்ளார் .. பெரும்பாலான இந்துமத தெய்வங்களின் கைகளில் அழிவிற்கான ஆயுதங்களையே ஏந்தியுள்ளனர் .. இவை நம்மைப் பீடித்திருக்கும் வாஸனைகளாகிய ஆசைகளை அழிக்கவேண்டி உருவகப்படுத்தப்பட்டவை ..வாஸனைகளும் அவற்றால் ஏற்படும் ஆசைகளுமே நம் முதல் தடை .. ஆசையில்லா மனிதன் கடவுளை உணர்கிறான் .. வாஸனைகளுடன் சேர்ந்த கடவுள் மனிதராகிறான் .. முருகனின் சக்தி ஆயுதமாகிய வேல் இந்த வாஸனைகளை அடியோடு அழிக்கவல்ல சக்தியாக உருவகம் செய்து பிரார்த்திக்க வேண்டும் .. முருகனின் வாகனம் மயில் .. மயிலானது தன்னுடைய அழகிய தோற்றத்தில் மதிமயங்கச் செய்யவல்லது .. மனிதன் தன்னுடைய உடல் அழகு .. புத்திசாலித்தனம் .. மற்றும் அலைபாயும் மனது .. ஆகியவற்றின்மீதே மோகம் கொண்டுள்ளான் என்பதை மயில் உணர்த்துகிறது .. அவன் தன்னைச்சுற்றியுள்ள கண்ணுக்குத் தெரியும் .. புரியும் .. விடயங்களையே சிந்தித்து தன்னை ஒரு மனித எல்லைக்குள் அடைத்துக் கொள்கிறான் .. மயிலின் கழுத்தின் உண்மையான நிறம் நீலம் .. நீலநிறம் எல்லையற்ற தன்மையை உருவகப்படுத்துகிறது .. எப்படி மயில் தோகை விரித்து ஆடுகையில் நம் கவனம் அதனுடைய அழகில் மயங்கி உண்மையான நீலநிறம் புலப்படுவதில்லையோ அதேபோல் மனிதன் புற அழகினில் மயங்கி எல்லையற்றதாகிய தன்னுள் உறையும் ஆத்மா எனும் இறைவனை உணரமுடிவதில்லை .. தன்னுடைய உடல் .. மன ..புத்தியினால் ஏற்பட்டிருக்கும் அகந்தையை அகற்றி நீலநிறமாகிய மயில்மேல் முருகன் செல்வதைப்போல .. தன் கவனத்தை உள்திரும்பி ஆன்மாவில் நிலைக்கச் செய்யவேண்டிய கடமையை உணர்த்துவதே மயில் வாகனத்தின் தத்துவம் .. முருகனின் மயில் வாகனத்தின் காலடியில் கருநாகம் பிடிபட்டிருக்கும் ..நாகம் கொல்லப்படுவதில்லை .. ஆனால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் .. கருநாகம் உணர்த்துவது ஒருவனுடைய ‘அகந்தை’ நாகத்தின் விஷம் .. நாகத்தினை எதுவும் செய்வதில்லை .. ஆனால் அது வெளிப்பட்டாலோ அதனால் ஏற்படும் ஆபத்து பேரபாயம் .. அதேபோல் ஒருவனுடைய அகந்தை உள்ளுக்குள் கட்டுப்படுத்தப்பட்டால் அதனால் ஏதும் துன்பம் இல்லை .. ஆனால் அதையே வெளிக்காட்டினால் அதனால் ஆசைகள் ஏற்பட்டு பல கெட்டவிளைவுகள் ஏற்படும் .. ஆகவே விஷஜந்துவாகிய அகந்தையை காலடியில் போட்டுக் கட்டுப்படுத்தி புற அழகினிலிருந்து கவனத்தை உட்திருப்பினால் மட்டுமே இறைவனை அறியமுடியும் .. என்கிற தத்துவத்தினை உணர்த்துகின்றது .. முருகனின் மற்றொரு உருவம் ஷண்முகன் எனப்படும் ஆறுமுகம் .. இறைவன் பஞ்சபூதங்கள் .. அல்லது ஐந்து புரிதல் உறுப்புகள் ( Five Sense of Organs ) மற்றும் ஒரு மனதின் வாயிலாக காட்சியளிக்கிறான் .. உள்ளிருக்கும் ஆத்மாவிற்கு எந்தவிதமான உருவகப்படுத்துதலும் கிடையாது .. மனமானது ஐந்து புரிதல் உறுப்புக்கள் மூலம் தன்னை ஒருமனிதனாக வெளிப்படுத்துகிறது .. அதனை அடக்கியாள்பவனே தன்னில் இறைவனை உணர்வான் .. இத்தகைய மேலான முருகனின் திருவுருவம் உணர்த்தும் தத்துவத்தினை உணர்ந்து அவன்பாதம் பணிந்து நாம் உண்மையினை உணர்வோமாக .. “ஓம் சரவணபவாய நமஹ “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA .. MAY HE SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH AND HAPPINESS "OM SARAVANA BHAVAAYA NAMAHA"


Mahakaleshwar Temple, Ujjain ,Madhya pradesh The Mahakaleshwar Ujjain Temple, one of the twelve Jyotirlingas, is a famous and venerated Shiva temple. The Shivling in this temple is supposed to be the only Jyotirling which faces south and hence it is known as Dakshinmukhi or the south-facing ling. It is the most popular and important temple of Ujjain. Every year on shivratri (claimed to be the Wedding day of Lord Shiva), there is a huge crowd of devotees for darshan. The same kind of public crowd can be seen in the month of Savaan, NagPanchami. On every Monday of “Savan”, there is a huge procession for the Lord Shiva idol in the city attended by large numbers of devotees from across the India.




 

"The Land of Golden Pagodas Myanmar is one of the most mysterious countries in the world. It borders India, Bangladesh, China, Laos and Thailand. Each of these destinations (except, perhaps, for Bangladesh) is full of tourists. But Myanmar remains outside of usual tourist routes. There are no direct flights from Russia, visa to Myanmar is not the easiest one to get, not to mention that it's not really advertised by travel agencies. This is why this amazing destination remains unknown to the world. To say that one misses a lot by not going there is an understatement (you'll understand why when you see our panoramas). This country with a century-old history has preserved countless of monuments and it is rightfully called the "Golden Country" or "The Land of Golden Pagodas". There are around 2500 pagodas there. In fact, the entire country is one huge archaeological reserve, which preserves heritage of ancient civilizations.



நமஸ்காரம். அனைத்து சகோதரிகள் மற்றும் தாய்மார்களுக்கு இனிய காரடையான் நோன்பு வாழ்த்துக்கள். வம்சம் செழிப்பதற்காக எமனிடம் பிரார்த்தனை செய்து கணவனான சத்தியவானை சாவித்ரி மீட்டதே காரடையான் நோன்பு உருவான கதை. பார்வதி தேவியால் அனுஷ்டிக்கப்பட்ட பெருமையும் இந்தக் காரடையான் நோன்புக்கு உண்டு. உங்கள் அனைவரது குடும்பமும் வம்சமும் செழிக்க... அனைத்து நலன்களும் பெருக... சகல ஐஸ்வர்யங்களும் குவிய... என் குலதெய்வம் சிறுவாச்சூர் ஸ்ரீமதுரகாளி அம்மனையும், எல்லாம் வல்ல நடமாடும் தெய்வம் காஞ்சி மகா ஸ்வாமிகளையும் உளமாரப் பிரார்த்தித்துக் கொள்கிறேன். ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. இன்று “காரடையான் நோன்பு” .. மாசியும் பங்குனியும் கூடும் நேரத்தில் பெண்கள் தங்களது கணவரது நல்வாழ்விற்காக நோற்கும் நோன்பாகும் .. சாவித்திரி தன் கணவரை எமதர்மராஜனிடமிருந்து மீட்டது இந்தநாளில் தான் .. சுமங்கலிப்பெண்கள் தங்கள் கழுத்தில் மங்கலநாண் நிலைக்கவும் .. தங்களது கணவன் நீண்ட ஆயுளோடு வாழவேண்டும் என்பதற்காகவும் சாவித்திரி அம்மனை வேண்டி இந்த விரதம் இருப்பார்கள் .. கார்காலத்தில் (முதல்போகம்) விளைந்த நெல்லில் இருந்து குத்தி எடுத்த அரிசியை மாவாக்கி .. இனிப்பு .. காராமணி கலந்து தயாரிக்கும் அடையை சாவித்திரிதேவிக்கு நைவேத்தியமாகப் படைப்பர் .. இதனால் இந்நோன்பு ’காரடையான் நோன்பு ’ எனப் பெயர் பெற்றது .. பிறமாநிலங்களில் இதை ‘சாவித்ரி விரதம்’ என்கின்றனர் .. இந்நாளில் பூஜை அறையில் மாக்கோலம் இட்டு கலசம் வைத்து பூஜிக்கவேண்டும் .. கலசத்தின் மீது மாவிலை .. தேங்காய் .. வைத்து அலங்கரித்து சந்தனம் .. குங்குமம் இட்டு அதன்மீது மஞ்சள் கயிறுகளை அணிவிக்கவேண்டும் .. ஸ்லோகம் - தோரம் கருண்ஹாமி ஸுபஹே ! ஸஹாரித்ரம் தராம்யஹம் பர்த்து ! ஆயுஷ்ய ஸித்யர்த்தம் ஸுப்ரீதா பவ ஸர்வதா !! பொருள் - அன்னையே ! எனது கணவரின் நீண்ட ஆயுளைக்கருதி மஞ்சள் கயிற்றினை (சரட்டைக்) கழுத்தில் கட்டிக் கொள்கிறேன் .. நீ சந்தோஷத்துடன் இருந்து அருள்புரிவாயாக ! என்னும் ஸ்லோகத்தைச் சொல்லி பெண்கள் கழுத்தில் கட்டிக்கொள்ளும் நோன்பு மஹா உன்னதமான விரதமாகும் .. ”மாசிக் கயிறு பாசி படியும்” (விருத்தியாகும்) என்பர் .. சாவித்திரியின் வரலாற்றை இன்று படிக்கவேண்டும் .. “தீர்க்க சுமங்கலி பவ” - வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. .. WISH YOU ALL A BLESSED WEDNESDAY .. MAY THE GODDESS KAAMAAKSHI BLESS YOU FOR A LONG LIFE .. BEST HEALTH .. AND HAPPINESS .. " JAI MATA D

காரடையார் நோன்பு 15-03-2015" (மாசிக் கயிறு பாசி படரும்) நல்ல நேரம்; அதிகாலை 04-30 மணி முதல் 05-00 வரை. காரடையான் நோன்பை தென்னாட்டில் ‘சாவித்திரி நோன்பு ‘ ,‘காமாக்ஷி விரதம்’ என்றும் அழைப்பர். வழக்கமாக தமிழ் மாதங்களான மாசி பங்குனி மாதங்கள் கூடும் வேளையில் வரும். ‘மாங்கல்ய பலம் விரதம்’ என்றும் சொல்லப்படுகிறது. நோன்பு பற்றிய கதைகள் : காமாக்ஷி அம்மன், நதிக்கரையில் ஆற்று மணலில் சிவலிங்கம் பிடித்துவைத்து பூஜை செய்கையில் வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது. மணலில் பிடித்த சிவலிங்கம் கரைந்து போகாமல் காக்கவே “காரடையான் நோன்பு ” விரதம் இருந்ததாகவும், சிவபெருமான் பிரத்யக்ஷமாகி காமாக்ஷியை மணந்து கொண்டதாகவும் கதை சொல்லப்படுகிறது. ராஜகுமாரி, சாவித்திரி தன் மனதிற்கு இசைந்த கணவன் சத்தியவானை மணந்து காட்டில் வாழ்ந்து வந்தனர். கல்யாணம் முடிந்து ஒரு வருடத்தில் கணவனை, இழக்க நேரிடும் என்று அறிந்திருந்தாள். அதேபோல் மரம் வெட்டச்சென்ற சத்தியவான் உயிர் இழக்க, பதிவிரதை சாவித்திரி யமனை பின் தொடர்ந்துசென்று, தங்களுக்கு நூறு குழந்தைகள் பிறக்க வரம் கேட்டு, யமதர்ம ராஜனும் வரம் கொடுக்க இறந்த கணவனுக்கு உயிர் கொடுக்கச் செய்து, மீட்டு வந்ததாகக் கதை சொல்லப்படுகிறது. பூஜை செய்யும் முறை: இதர பண்டிகைகளுக்கு செய்வதுபோல், வீட்டின் வாயில் நிலையிலும், ஸ்வாமி அறை நிலையிலும் மாவிலைத்தோரணம் கட்ட வேண்டும்.பூஜை அறையை சுத்தம் செய்து கோலமிட்டு ஸ்வாமி படங்களுக்கு பூ சாற்றி, வெற்றிலைபாக்கு, மஞ்சள், வாழைப்பழம், தேங்காய் வகையறாக்களை வழக்கம் போல் ஒரு தட்டில் ( மரத்தட்டு இருந்தால் விசேஷம்) வைக்க வேண்டும். மஞ்சள் சரடு கட்டிக் கொள்வதற்கு முன்பு அதில் ஒரு சிறிய பசு மஞ்சளை துளையிட்டுக் கோர்த்துக் கட்டியோ அல்லது புஷ்பம் கட்டியோ வைக்கவேண்டும். பலா இலை அல்லது வாழை இலையில் பிரசாதம் வைக்க வேண்டும் “ நோன்பு அடை” முக்கியம். “நோன்பு அடை” அல்லது கொழுக்கட்டை வழக்கம் இல்லாத குடும்பத்தவர்கள் வெற்றிலை பாக்குடன் கேசரி போன்ற ஏதேனும் ஒரு இனிப்பை செய்தும், ஸ்வாமிக்கு நிவேதனம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஒரு வெல்ல அடை, சிறிது வெண்ணை இலையில் வைத்து, நோன்பு சரடை அம்மனுக்கு சாற்றி, துளசிச் செடியில் ஒன்று கட்டி, தங்கள் கழுத்திலும் கட்டிக்கொள்வார்கள். “உருகாத வெண்ணையும், ஓரடையும் நான் வைத்தேன் ஒரு நாளும் என் கணவர் பிரியாத வரம் தருவாய் ” என்று அம்பாளை நினைத்து வேண்டிக்கொண்டு அம்பாள் ஸ்லோகம் சொல்வார்கள். மொத்தத்தில் பெண்டிர் அனைவரும் தம் தம் கணவருக்காக சிரத்தையாக செய்யும் விரதமே – காரடையான் நோன்பு




அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. தேய்பிறை அஷ்டமித் திதியாகிய இன்று காவல் தெய்வமான “பைரவரை” வழிபடுவது விசேஷம் .. கஷ்டங்கள் தீவிரமாகும் போது அவை காற்றில் பறக்கும் பஞ்சாகிவிடும் .. தங்களனைவரது சகலபிரச்சினைகளும் தீர்ந்து .. மனதில் அமைதியும் .. குடும்பத்தில் மகிழ்ச்சியும் .. செல்வவளம் பெருகவும் பைரவரைப் பிரார்த்திக்கின்றேன் .. ஓம் ஷ்வானத்வஜாய வித்மஹே ! சூலஹஸ்தாய தீமஹி ! தந்நோ பைரவப்ரசோதயாத் !! .. ஒவ்வொரு தமிழ்மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி நாளன்று நம் ஒவ்வொருவருக்கும் செல்வச் செழிப்பை அள்ளித்தரும் அஷ்டலக்ஷ்மிகளும் பூமியில் இருக்கும் பைரவர் சன்னதிக்கு வந்து அவரை வழிபடுகின்றனர் .. அப்படி வழிபடக்காரணம் என்ன..? பூமியில் வாழும்மக்களுக்கு அஷ்டலக்ஷ்மிகளின் செல்வச்செழிப்பை தினமும் அள்ளித் தருவதால் அவர்களில் செல்வவள சக்தி குறைகிறது .. அந்த செல்வவளசக்தியை அதிகமாகப் பெறுவதற்கு ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட வருகின்றனர் .. அதே தேய்பிறை அஷ்டமி நாளில் வரும் ராகுகாலத்தில் நாமும் பைரவரை வழிபட்டால் செல்வத்தின் பிரபஞ்ச அதிபதியை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும் .. அதனால் நமது ஏழுஜென்மங்கள் .. மற்றும் ஏழுதலைமுறை முன்னோர்களின் பாவவினைகள் தீர்ந்த மறுநொடியே நமது செல்வச்செழிப்பும் அதிகரிக்கத் துவங்கும் .. மஹாலக்ஷ்மி .. விஷ்ணுபகவான் .. குபேரன் இந்த மூவருக்கும் செல்வத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஒப்படைத்ததே ஸ்ரீசொர்ணபைரவரே ! .. கஷ்டங்கள் தீவிரமாகும் போது காவல் தெய்வமான வைரவரை வணங்குங்கள் .. அவை காற்றில் பறக்கும் பஞ்சாகிவிடும் ..காலபைரவரை வழிபாடு செய்வதில் எத்தனையோ முறைகள் இருப்பினும் மனதில் ஒருமுறை அவரை அன்புடன் துதித்து வேண்டினாலே போதும் ஓடோடி வருவார் .. கண்ணின் இமைபோல் காத்து நிற்பார் .. இவரின் அருளில்லாமல் முக்திகிட்டாது என்பதே உண்மையாகும் .. பைரவரைப் போற்றுவோம் அவரது அருட்கடாக்ஷ்ம் பெறுவோமாக .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. . WISH YOU ALL A BLESSED FRIDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD BAIRAVA .. MAY HE SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH AND PROSPERITY .. "JAI BHAIRAVA" .

ஷீரடி சாய் ஸ்லோகம் - ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் நமோ! பகவதே! ஸர்வலோக ஹிதங்கராய ! ஸர்வ துக்க வாரகாய ! ஸர்வ பீஷ்ட பலப்ரதாய ! ஸ்ரீஸாயிநாதாய நமஹ !! .. பொருள் - மும்மூர்த்திகளும் ஒருருவாய் ஷீரடிசாயியாய் அவதரித்தவரே! நமஸ்காரம்! இந்த உலகத்தை காப்பவரே ! உமக்கு நமஸ்காரம்! . பக்தர்களின் அனைத்து கஷ்டங்களுக்கும் நிவாரணமாய் இருப்பவரே ! உமக்கு நமஸ்காரம் ! பக்தர்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுபவரே சாய்நாதரே ! தங்களுக்கு மீண்டும் .. மீண்டும் நமஸ்காரம் ! ! .. அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வியாழக்கிழமையாகிய இன்று அனைவராலும் போற்றி வணங்கப்படும் குருநாதர் ஷீரடி சாய்பாபாவினது தினமும் ஆகும் .. தங்களனைவருக்கும் குடும்பத்தில் மன அமைதியும் .. சந்தோஷமும் நிலவ சாய்நாதரைப் பிரார்த்திக்கின்றேன் .. பாபாவின் பொன்மொழிகள் - 1 - எது கிடைக்கிறதோ அதுவே போதும் என நினைத்துக் கொள்ளுங்கள் .. விரைந்து கிடைக்கவேண்டும் என ஒருபோதும் குறுக்குவழியை நாடாதீர்கள் .. உங்களைப்படைத்த சாயிதேவன் உங்களை எல்லா நேரங்களிலும் கண்காணித்துக் கொண்டே இருக்கிறார் .. என்பதை அறியுங்கள் .. 2 - எறும்பின் காலில் கட்டப்பட்ட மணியின் ஓசையைக்கூட துல்லியமாகக் கேட்கிற காதுள்ள அவர் உங்கள் கூப்பிடுதலைக் கேட்கமாட்டாரா என்ன..? .. பொறுமையாக இருங்கள் .. விவேகமாக செயல்படுங்கள் .. 3 - சீட்டுக்குலுக்கிப்போட்டு ஏமாறுவதை விட சற்று கால அவகாசம் கொடுத்துக் காத்திருந்து பார்த்தால் நமக்கு வரவேண்டியது வரும் .. வராமல் தட்டிப்போவது சுவடு தெரியாமல் ஓடிப்போகும் .. 4 - இனியாவது எச்சரிக்கையாக இருங்கள் .. மற்றவர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒருநிமிடம் பாபாவிடம் பிரார்த்தனை செய்யுங்கள் .. அவர்கள் இழந்த பொருள் அவர்களுக்கு வந்து கிடைக்கும் .. 5 - உங்கள் உச்சிமுதல் உள்ளங்கால்வரை நான் இருக்கிறேன் .. உங்கள் தொழில் எதுவானாலும் உங்கள் வேலையை என்னுடையதாக மாற்றிவிடுகிறேன் .. பார்வையும் பார்க்கப்படும் .. பொருளும் நானாக இருக்கிறேன் .. கவசமாகவும் இருக்கிறேன் .. 6 - எப்போதும் திருப்தி உள்ளவனாக இரு .. சஞ்சலத்திற்கோ கவலைகளுக்கோ எப்போதும் இடம் கொடுக்காதே ! நீ ! துவாரகாமாயியின் குழந்தை .. துவாரகாமாயியின் நிழலில் வாழ்பவர் சுகத்தையும் .. சாந்தியையும் அளிக்கும் சிம்மாசனத்தில் உட்கார்ந்தவராவார் .. 7 - பெருமையையும் .. அகங்காரத்தையும் ஒழித்துவிட்டு எள்ளளவும் அவற்றின் அடையாளம் கூட இருக்காதபடி விலக்கு .. உங்கள் இதயத்தே அமர்ந்து கொண்டிருக்கிற என்னிடம் உங்களை பூரணமாக சமர்ப்பிப்பீர்களாக .. பாபாவைப்போற்றுவோம் அவரது பரிபூரண திருவருளைப் பெறுவோமாக .. “ ஓம் சாய் ராம் “ .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF SHIRDI SAI .. MAY HE SHOWER YOU WITH PEACE AND HAPPINESS .. " OM SAI RAM " ..

உருவாய் அருவாய் உளதாய் நிலதாய் .. மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் .. கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய் .. குருவாய் வருவாய் அருள்வாய் குகனே !! .. அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய்க்கிழமையாகிய இன்று கலியுகவரதனாகிய கார்த்திகேயனைத் துதித்து தங்கள் அனைவருக்கும் இஹபர சுகங்கள் பெற்று .. துயர்களைந்து மகிழ்ச்சிகரமான வாழ்வு மலர்ந்திட வாழ்த்துகின்றேன் .. வணங்குகின்றேன் .. ஓம் தத்புருஷாய வித்மஹே ! மஹேஷ்வர புத்ராய தீமஹி ! தந்நோ சுப்ரமண்யப்ரசோதயாத் !! .. ஞானமே உடலாகவும் .. இச்சாசக்தி .. கிரியாசக்தி .. ஞானசக்தி என்னும் முச்சக்திகளை மூன்று கண்களாகவும் .. இப்பெரிய உலகமே கோயிலாகவும் கொண்டு நிற்கும் ஒப்பற்றத் தனிச்சுடராகத் திகழ்பவன் முருகனே ! .. தன் அடியவர் வேண்டும் நலன்களை எல்லாம் அவர்கள் வேண்டியவாறே விரும்பிக் கொடுத்தருளும் பெருந்தன்மையான குணம்வாய்ந்தவன் .. நம் உள்ளத்தைக் கவரும் பண்புடையான் என்று உணர்ந்து முருகனை அடைந்தால் அவன் நம் கர்மத்தைப் போக்குவான் .. நம் துன்பத்தை அழிப்பான் .. முருகனை அன்புடன் வழிபட்டு முருகா ! முருகா ! எனக் கூறித் தியானிப்பவர்கள் என்றும் குறையாத பெருஞ்செல்வத்தைப் பெறுவார்கள் .. அவர்களை ஒருபோதும் எத்தைகைய துன்பமும் அணுகாது .. ஓம் முருகா ! வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. WISH YOU ALL A VERY HAPPY MORNING AND A BLESSED TUESDAY .. MAY LORD MURUGA SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH AND HAPPINESS .. "OM MURUGA" ..


ஸ்ரீவிக்னேஷ்வரர் துதி - கஜானனம் பூதகணாதி ஸேவிதம் ! கபித்த ஜம்பூபலஸார பக்ஷிதம்! உமாஸுதம் ஸோகவினாச காரணம் ! நமாமி விக்னேஷ்வர பாத பங்கஜம் !! .. அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையாகிய இன்று ” சங்கடஹர சதுர்த்தி “ .. விநாயகரைத் துதித்து தங்களனைவரின் அனைத்து சங்கடங்களும் பனிப்போல் நீங்கி .. இன்றைய நாள் ஓர் வெற்றிகரமான நன்னாளாகவும் .. மகிழ்ச்சிகரமான நாளாகவும் அமைந்திட வாழ்த்துகின்றேன் .. வணங்குகின்றேன் .. ஓம் தத்புருஷாய வித்மஹே ! வக்ரதுண்டாய தீமஹி ! தந்நோ தந்தி ப்ரசோதயாத் !! .. பிள்ளையாரை வழிபட ”சங்கடஹர சதுர்த்தி “ நாள் மிகவும் ஏற்றது .. பௌர்ணமியை அடுத்த நான்காம் நாள் தேய்பிறையில் வரும் சதுர்த்தி நாளையே ’சங்கடஹர சதுர்த்தி என்பர் .. கர்வமிகுதியால் பிள்ளையாரின் கோபத்துக்கு ஆளான சந்திரன் தன் உடலில் பொலிவிழந்து வருந்தினான் .. இறுதியில் பிள்ளையாரிடமே சரணடைந்தான் .. பிள்ளையார் அருள்புரிந்ததோடு “ சங்கடஹர சதுர்த்தி உதய நேரத்தில் .. எம்மை பூஜிப்பவர் யாவருக்கும் இன்னல்கள் நீக்கி அருள்புரிவேன் “ என்றருளினார் .. என்கிறது புராணத் தகவல் .. ஆகவே சங்கடஹர சதுர்த்தி நாளில் அதிகாலையில் நீராடி விரதமிருந்து பிள்ளையாரை வழிபட நல்லபலன் கிட்டும் என்பது ஐதீகம் .. மாலைவரை உணவு உண்ணாமல் இருக்கவேண்டும் .. முடியாதவர்கள் நீர் ஆகாரம் மட்டும் அருந்தி விரதமிருக்கலாம் .. மாலையில் அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்குச் சென்று நெய்விளக்கு ஏற்றி அங்கு நடக்கும் பூஜையில் கலந்துகொண்டு விரதத்தை நிறைவு செய்யவேண்டும் .. விநாயகரைப் போற்றி வணங்குவோம் ! தங்களனைவருக்கும் எதிலும் வெற்றி ! என்றும் வெற்றி நிச்சயம் ! .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. .. MAY THE DIVINE BLESSINGS OF LORD GANESH BRINGS YOU ETERNAL BLISS AND FULFILL ALL YOUR WISHES .. "JAI GANESH"


An awesome aerial view of Sri Kapaleeswarar koil.

குரு ஸ்தலம், ராகு ஸ்தலம், சனி ஸ்தலம், செவ்வாய் ஸ்தலம் என்று நவக்கிரக பரிகாரம் வேண்டி பல பல திருக்கோவில் செல்லும் பக்தர்களே நீங்கள் செல்லும் திருக்கோவில் மூல கடவுளாக இருப்பவர் எல்லாம் வல்ல எம்பெருமான் மாபெரும் கருணையுடைய ஈசன் தானே, அப்படி இருக்க நவகிரகங்களை மட்டும் வணங்கி பூஜைகள் செய்து பலன்பெறதாக நீங்கள் நினைத்தல் அது மடமை. நீங்கள் பெற்ற பலனை கொடுத்தவர் மாபெரும் கருணையுடைய ஈசன். ஆனால் பெரும்பாலனோர் அந்த ஆலயத்தில் உள்ள நவக்கிரகதை மட்டும் வணங்கிவிட்டு வருகின்றனர் இது என்ன செயல் ??. அந்த நவகிரகங்கள் ஈசன் அருள்வேண்டி வழிபட்ட திருக்கோவில் அது. நாம் நமது மடமையால் ஈசனை மறந்து நவகிரகங்களை மட்டும் வணங்கி பூஜைகள் செய்து என்ன பெறமுடியும். அந்த ஆலயத்திற்கு சென்றதால் கிட்டிய பலனை போற்றும் நீங்கள். அந்த ஆலயத்தில் உள்ள மூலகடவுளான ஈசனுக்கு பூஜைகள் செய்து வழிபட்டால் கிடைக்கும் பலன் பற்றி கூறவும் வேண்டுமோ. நீங்கள் வழிபாடும் அணைத்து தெய்வங்களிடம் பெற்ற அருளும் பொருளும் எல்லாம் வல்ல நாமில் உள்ள மாபெரும் கருணையுடைய படைப்புகளின் நாயகன் எங்கள் சிவபெருமானிடம் பெற்றவை தான். நமசிவாய நமசிவாய —


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று நவக்கிரகங்களின் நாயகன் சூரியபகவானின் ஆதிக்கம் பூமியில் நிறைந்த நாளாகும் .. பயன்கருதாது தன் அன்றாடப் பணியைச் செய்துவருபவருமான சூரியபகவானைத் துதித்து தங்கள் அனைவருக்கும் சகலகாரியங்களிலும் வெற்றியும் .. மகிழ்ச்சியும் உண்டாவதாக .. ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே ! பாஸஹஸ்தாய தீமஹி ! தந்நோ சூரியப்ரசோதயாத் !! .. சூரியன் என்ற தேவன் ஏழுகுதிரை பூட்டிய தேரில் உலாவருகிறார் என்ற ஆன்ம்மீகப்பார்வையும் .. வானவில்லின் ஏழு நிறப்பிரிகையையும் குறிக்கும் இயற்பியல் அறிவியியல் நோக்கையும் ஒப்பிட்டுப்பார்ப்பதில் சுவாரசியமான ஆழ்ந்த பொருள் உள்ளது .. ஜோதிடரீதியாக சூரியன் ஆத்மக்கிரகம் என குறிப்பிடப்படும் .. அதாவது உடல்சக்தியையும் .. மனோசக்தியையும் தாண்டி நமக்கு உள்ள ஆறாம் அறிவுசார்ந்த உயிரின் தன்னியல்பான வெளிப்பாட்டைக் குறிப்பிடும் கிரகமாக சூரியன் உள்ளது .. ஒருவரது வாழ்க்கையில் அவரது தந்தையார் .. ஆன்மீகநிலை அரசாங்கவழி .. ஆதாயங்கள் .. இதயநோய்கள் .. தோல்வியாதிகள் .. ஆகியவற்றைச் சுட்டிக்காட்டும் குறியீடாக சூரியன் அமைகிறது .. சூரியனைப் போற்றுவோம் அவரருளைப் பெறுவோமாக .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. .. MAY YOUR SUNDAY BE FILLED WITH PEACE .. LOVE AND HAPPINESS WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SURYA .. 'JAI SURYA BAGAVAN'

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சனிக்கிழமையாகிய இன்று ஈஸ்வரனைத் துதித்து தங்களனைவருக்கும் மனநலமும் .. உடல்நலமும் தேறி நல் ஆரோக்கியத்திற்கும் .. தாங்கள் செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி பெறவும் வாழ்த்தி வணங்குகின்றேன் .. ”ஓம் நமசிவாய” சிவன் சைவர்களின் முழுமுதற்கடவுள் .. இவரை “பிறவாயாக்கை பெரியோன்” என்றழைப்பர் .. யார் வயிற்றிலும் பிறவாமல் தோன்றிய தலைவன் என்பது கருத்து .. இல்லறத்தில் யோகியாக வாழ்பவராகவும் .. கைலையில் வசிப்பவராகவும் .. அரக்கர்கள் .. தேவர்கள் என தன்னை நினைத்து தியானிக்கும் அனைவருக்கும் பாரபட்சம் பார்க்காமல் கேட்கும் வரங்களை கொடுப்பவராகவும் .. பாவங்களில் பெரிய பாபமான ‘பிரம்மஹத்தி’ தோஷத்தினை நீக்கும் வல்லமை உடையவராகும் உள்ளார் .. சிவனைப்போற்றித் துதித்து அவரது அருட்கடாக்ஷ்த்தைப் பெறுவோமாக .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. .. WISH YOU ALL A BLESSED SATURDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. MAY HE BE WITH YOU IN EACH STEPS YOU TAKE TODAY AND FOREVER MORE .. " OM NAMASHIVAAYA


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வெள்ளிக்கிழமையாகிய இன்று .. அன்னை மஹாலக்ஷ்மியின் அருட்கடாக்ஷ்ம் அனைவரும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகின்றேன் .. வணங்குகின்றேன் .. நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே ! சங்க சக்ர கதாஹஸ்தே ! மஹாலக்ஷ்மி நமோஸ்துதே !! .. நம்முள் மண்டிக்கிடக்கும் தீமை எனும் தாரித்ரியத்தை அழித்து ஞானம் எனும் ஐஸ்வர்யத்தினை அருள்பவள் ஸ்ரீமஹாலக்ஷ்மி .. இகவாழ்வில் நமக்கு வேண்டும் வரங்களையும் .. வளங்களையும் வழங்கி நம்மை வழிநடத்துபவள் .. ஆயிரம் இதழ்கொண்ட தாமரையில் வாசம்செய்பவளும் .. பள்ளிகொண்ட பரந்தாமனின் திருமார்பினை அணைந்தவளும் அனைத்து உயிர்களுக்கும் ஆனந்தத்தை அளிப்பவளும் .. வழிபடும் அன்பர்களின் துயர்களையும் துன்பங்களையும் தொலைத்து அழிப்பவளுமாகிய அன்னை மஹாலக்ஷ்மியைப் போற்றி வணங்கி அனைத்து வளங்களும் நலங்களும் பெறுவீர்களாக .. ஓம் சக்தி ஓம் .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. . WISH YOU ALL A BLESSED FRIDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF GODDESS LAXMI .. MAY SHE SHOWER HER DIVINE BLESSINGS ON YOU WITH GOOD HEALTH .. WEALTH AND GOOD FORTUNE .. JAI SHAKTHI .. JAI MATA DI ..


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. ஹோலிப்பண்டிகை வாழ்த்துக்களும் .. இன்று ‘ஹோலிப் பண்டிகையாகும்’ .. இந்துக்கள் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஹோலியும் ஒன்று .. இந்த ஹோலி பண்டிகை பெரும்பாலும் வட இந்தியாவில்தான் கொண்டாடப்படுகின்றது .. பனிகாலத்திற்கு விடையளித்து வெயில் காலத்திற்கு வரவேற்புரை வழங்கும் ஒரு பண்டிகை ஆகும் .. விவசாயிகள் அறுவடை முடித்து நிறைந்த மனதுடன் இதை கொண்டாடுவர் .. இந்த பண்டிகையின் சிறப்பு என்னவென்றால் ஒருவர்மீது ஒருவர் வண்ணப்பொடிகளாலோ அல்லது வண்ணம் கலந்த நீரையோ வீசிக்கொண்டு விளையாடுவது தான் .. வண்ணப்பொடிகள் படாமல் இருக்க பலரும் முயற்சிப்பர் .. இருப்பினும் சிக்கிக்கொள்ளும் வாய்ப்பு தான் அதிகம் .. ஹோலிபண்டிகை கொண்டாடும் விதம் - கிருஷ்ணபகவான் தன் குழந்தைபருவத்திலும் .. பால்யபருவத்திலும் கோபியர்களுடன் விளையாடியதுதான் இந்த ஹோலிபண்டிகை .. இப்பொழுதும் ஹோலிப்பாடல்களில் கிருஷ்ணரின் குறும்புகளை விவரித்து பாடுவர் .. இந்த பண்டிகை முக்கியத்துவம் வாய்ந்தது .. ஹோலி பண்டிகையின் புராணம் - இரணியன் என்னும் அரக்கன் தன்னையே எல்லோரும் கடவுள் எனத் தொழவேண்டும் என்று எண்ணினான் .. இரணியனின் மகன் பிரஹலாதன் அதை எதிர்த்தான் .. பிரஹலாதன் மஹாவிஷ்ணு ஒருவரையே கடவுள் என்று போற்றிப் பூஜித்து வந்தான் .. இதையறிந்த இரணியன் மகனென்றும் பாராமல் பிரஹலாதனை பலவகையில் துன்புறுத்தி தன்னையே கடவுள் என பூஜிக்கும்படி வற்புறுத்தினான் .. இதற்கு ஒருவழிகாண நினைத்த இரணியன் தன் சகோதரி ஹோலிகாவின் உதவியை நாடினான் .. ஹோலிகா நெருப்பினால் எரியாத தன்மை படைத்தவள் .. எனவே தன் மகன் பிரஹலாதனை அழிக்கும் பொருட்டு இரணியன் பிரஹலாதனை தன்மடியில் அமர்த்திக்கொண்டு ஹோலிகாவை நெருப்பின் நடுவில் அமரும்படி கூறினான் .. இதனால் பிரஹலாதன் நெருப்பில் எரிந்துவிடுவான் என்றும் இரணியன் நினைத்தான் .. ஆனால் மஹாவிஷ்ணுவை மனதில் நினைத்தபடி ஹோலிகாவின் மடியில் அமர்ந்தான் பிரஹலாதன் .. மஹாவிஷ்ணுவின் கருணையால் பிரஹலாதன் நெருப்பிலிருந்து மீண்டான் .. ஆனால் ஹோலிகா நெருப்பில் எரிந்து சாம்பலானாள் .. இதைக் குறிக்கும் வகையில் ஹோலி பண்டிகையன்று வெட்டவெளியில் தீயைமூட்டி அதன் ஒளியில் எல்லோரும் சந்தோஷமாக விளையாடி மகிழ்வர் .. ஹோலிகா அழிந்த தினத்தை “ஹோலி” என்று கொண்டாடுகின்றனர் .. தங்களனைவருக்கும் இன்றைய தினம் ஓர் மகிழ்ச்சிகரமான தினமாய் அமைந்திட இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. . WISH YOU ALL A HAPPY AND A COLORFUL HOLI .. MAY GOD BLESS YOU AND SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH AND HAPPINESS ..




இளைய மகாமகத்தை முன்னிட்டு, கும்பகோணத்தில், நேற்று, மூன்று கோவில்களில் தேரோட்டம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். கும்பகோணத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமக திருவிழா நடைபெறுகிறது. மகாமகத்திற்கு ஓராண்டுக்கு முன் வரும் மாசிமகம், இளைய மகாமகம் என அழைக்கப்படுகிறது.




அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று ‘ மாசிமகம் ‘ எல்லா மாதத்திலும் மகம் நட்சத்திரம் வந்தாலும் .. மாசிமாதம் வரும் “மகம்” மிகவும் பிரசித்திப் பெற்றது .. இந்தநட்சத்திரத்திற்கு அதிபதியான கேது பகவான் ஞானத்தையும் .. மோட்சத்தையும் அள்ளித் தரும் வல்லமை உள்ளவர் .. மங்களகரமான மாசிமாதத்தில் கேதுவின் நட்சத்திரமான மகம் நட்சத்திரத்தில் சந்திரன் வருகிறது .. இந்நாள் எல்லா தெய்வங்களுக்கும் மிகவும் உகந்த நாளாகும் கோவில்களில் சிவன் .. விஷ்ணு .. முருகன் .. ஆகிய மூவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் .. யாகங்கள் .. உற்சவங்கள் .. நடைபெறுகின்றன .. உமாதேவியார் அவதாரம் செய்த நாளாகவும் .. பாதாளத்தில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிக்கொணர்ந்த நாளாகவும் .. சிவபெருமானுக்கு முருகன் மந்திர உபதேசம் செய்த நாளாகவும் .. மாசிமகம் திகழ்கிறது .. இந்தப்பிறவிப் பெருங்கடலைக் கடந்து பிறவா வரம்வேண்டி இறைவனின் அருட்கடலை வேண்டும் நாள்தான் இந்நாள் .. ஆகையால் தான் மோட்சத்தை அருளக்கூடிய கேதுபகவான் நட்சத்திரமான மகத்தில் இந்தநாள் அமைகிறது .. இதனை “கடலாடும்நாள்” என்றும் .. “தீர்த்தமாடும் நாள்” என்றும் சொல்வார்கள் .. இந்நாளில் குலதெய்வ .. இஷ்ட தெய்வங்களை வணங்கி பலவிதமான தானங்களைச் செய்வது விசேஷம் ..தர்ப்பணம்.. பிதுர்க்கடன் .. ஆகியவை செய்தால் அவர்கள் பாவங்கள் நீங்கி நற்கதி பெறுவர் என்பது நம்பிக்கை .. தேவாரம் .. திருவாசகம் .. காயத்ரிமந்திரம் .. கந்தசஷ்டிகவசம் ராமாயணம் .. மகாபாரதம் .. கந்தபுராணம் .. விஷ்ணுபுராணம் .. போன்ற புத்தகங்களைப் படிப்பது பலன் கொடுக்கும் .. இன்று சிவபெருமானையும் .. ஸ்ரீவிஷ்ணுபகவானையும் .. பித்ருக்களையும் வணங்கினால் சகலநலன்களையும் பெற்று வளமான வாழ்க்கை அமையும் .. வாழ்க வளமுடனும் நலமுடனும் .. WISH YOU ALL A VERY HAPPY MORNING AND A BLESSED WEDNESDAY TOO.. MAY GOD BLESS YOU AND GUIDES YOU IN EACH STEPS YOU TAKE TODAY AND FOREVER MORE ..

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய்க்கிழமையாகிய இன்று பிரதோஷ விரதமுமாகும் .. பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்தபயனை அளிக்கும் .. மாலை 4.30 - மணிமுதல் 6.00 மணி வரையிலான நேரமே பிரதோஷ காலமாகும் .. இந்தநேரத்தில் பரமசிவனை வணங்கி வழிபட்டால் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம் என்பது நம்பிக்கை .. பிரதோஷம் என்றால் என்ன ..? .. சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது இந்தப் பிரதோஷ நேரத்தில் தான் .. தேவர்களும் அசுரர்களும் போட்டி போட்டுக்கொண்டு பாற்கடலைக் கடைந்தபோது திருமகள் .. ஐராவதம் .. காமதேனு .. கௌஸ்துபமணி .. முதலியவை ஒவ்வொன்றாகத் தோன்றின .. லக்ஷ்மியைத் திருமாள் ஏற்றுக்கொண்டார் .. மற்ற பொருட்களை இந்திராதி தேவர்கள் ஏற்றுக்கொண்டனர் .. ஆனால் கூடவே கொடிய ஆலகால விஷமும் வெளிப்பட்டது .. இதனைக்கண்டு தேவர்களும் முனிவர்களும் பெரிதும் நடுங்கினர் .. உயிர்களைக்காப்பாற்ற பரமசிவன் அந்த ஆலகால விஷத்தை உண்டார் தன் கணவரின் உடலில் விஷம் பரவுவதைக் கண்ட அன்னை பார்வதிதேவி தன் கரங்களால் அவரைத்தொட விஷம் சிவனின் நெஞ்சுக்குழியிலேயே நின்றுவிட்டதால் இறைவன் நீலகண்டனானார் .. இந்த காலம்தான் பிரதோஷ காலம் என்று வணங்கப்படுகிறது .. இறைவனுடன் கூடவே அவருடைய வாகனமான நந்திதேவருக்கும் அபிஷேகம் நடைபெறும் .. நந்திதேவரது தீபாராதனைக்குப்பின் மூலவரான லிங்கத்திற்கு நடக்கும் தீபாராதனையை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கிடையே பார்த்து தரிசிக்க நம் தோஷங்கள் நீங்கி நன்மை உண்டாகும் .. “ஸித்தயோகீ மஹர்ஷிச்ச ஸித்தார்த்தஹ் ஸித்தஸாதக ! பிக்ஷுச்ச பிக்ஷுரூபச்ச விபனோம்ருது ரவ்யயா “ !! .. இந்தஸ்லோகத்தை பிரதோஷ காலத்தில் 18 முறை பாராயணம் செய்து வந்தால் சிவன் அருள்கிட்டி நினைத்தது நிறைவேறும் .. சிவனைப்போற்றுவோம் சகலதுன்பங்களும் நீங்கப்பெற்று மகிழ்ச்சியான வாழ்வு வாழ்வோமாக ..” ஓம் நமசிவாய ” .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. MAY HE BE WITH YOU IN EACH STEPS YOU TAKE NOW AND FOREVER MORE .. HAVE A SUCCESSFUL DAY TOO ..

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையாகிய இன்று சிவபெருமானைத் துதித்து தாங்கள் செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி பெறவும் .. இன்றைய நாள் ஓர் இனிய நன்னாளாக அமைந்திடவும் பிரார்த்திக்கின்றேன் .. ” ஓம் அகத்தீசாய நம ஓம் நந்தீசாய நம ஓம் திருமூலதேவாய நம ஓம் கருவூர்தேவாய நம ” .. சிவனின் ஐந்து முகங்கள் - 1- சத்யோ சோதம் - படைத்தல் 2- வாமதேவம் - காத்தல் 3- அகோரம் - அழித்தல் 4- தற்புருடம் - மறைத்தல் 5- ஈசானம் - அருளல் .. இம்முகத்தின் மூலம் ஆகம இரகசியப் பொருளினைக் கேட்டு அறிந்தனர் முனிவர்கள் .. பொதுவாக ஐந்து முகங்களைக் கொண்டு அறியப்படும் சிவன் இரண்டு முறைகள் மட்டும் மறைத்து வைத்திருக்கும் ஆறாவது முகத்தை வெளிப்படுத்தி உள்ளார் .. குருமூர்த்தியின் கோலத்தில் தான் முனிவர்களுக்கு காட்சிதந்த போதும் .. சூரபதுமன் என்பவனை அழிக்க முருகனை தோற்றுவிக்கும் போதும் மட்டும் இந்த ஆறாவது முகம் வெளிப்பட்டது .. தான் மங்களகரமாகவும் .. தன்னைச்சார்ந்தவர்களையும் மங்களகரமாக்குபவரும் சிவனே ! .. சிவனைப்போற்றுவோம் !அனைத்து சம்பத்துக்களும் பெறுவீர்களாக ! “ ஓம் நமசிவாய “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. .. MAY THE ALMIGHTY LORD SHIVA BLESS YOU ALL WITH GOOD THINGS AND PERFECT HEALTH .. ' OM NAMASHIVAAYA ' ..

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று ‘ஏகாதசி விரதமாகும்’ .. மஹாவிஷ்ணுவைத் துதித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் இனிய நன்னாளாய் அமைந்திடவும் .. நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறவும் பிரார்த்திக்கின்றேன் .. ஓம் நாராயணாய வித்மஹே ! வாசுதேவாய தீமஹி ! தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! ஏகாதசி என்பது ஒவ்வொரு பக்தர்களுக்கும் ஏகாந்த தினமாகவே உள்ளது .. மோட்சத்தை அளிக்கும் விரதத்தை கடைபிடிக்க வழி ஏற்படுத்தியிருக்கும் விரதமல்லவா..? ‘அமாவாசை’ .. ‘ பௌர்ணமிக்கு’ அடுத்து 11 நாட்களில் ஒரு ஏகாதசி என்ற கணக்கில் ஆண்டுக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகின்றன .. இதில் வளர்பிறையில் ஒரு ஏகாதசியும் .. தேய்பிறையில் ஒரு ஏகாதசியும் வரும் .. ஆண்டு முழுவதும் வரும் ஏகாதசிகளுக்கு ஒவ்வொரு பெயர்களும் .. அந்தந்த ஏகாதசி தினங்களில் இருக்கும் விரதங்களால் பக்தர்களுக்கு கிடைக்கப் பெறும் நன்மை பயக்கும் பலன்களும் பலவாறு வகுத்து கூறப்பட்டுள்ளது .. ஒவ்வொரு ஏகாதசியும் ஒவ்வொரு பலனை வழங்கினாலும் “ வைகுண்ட “ பதவிக்கும் வழிவகுக்கும் என்பதே சிறப்புவாய்ந்ததாகும் .. இன்றைய தின ஏகாதசிக்கு “ ஆமலகி ஏகாதசி “ என்று பெயர் .. ஆமலகி என்றால் அளப்பரிய திறன்வாய்ந்த நெல்லி .. ருத்ராக்ஷ்மரம் சிவத்தோன்றல் போல .. நெல்லி திருமாலின் தோன்றலாகும் .. எல்லா தெய்வசக்திகளும் கோமாதா காமதேனுவுள் அடக்கம்போல நலன்பயக்கும் சக்திகள் யாவும் நெல்லியுள் அடக்கம் .. ஆதிசங்கருக்கு அளிக்கப்பட்ட ஒரு நெல்லி அவரை ‘கனகதாரா துதியை’ பாடச்செய்து தங்கமழையை கொட்டுவித்ததுபோல பெரும் பயன் அருளவல்லது .. விரதமிருப்பவர்களுக்கு ஆயிரம் பசுதானம் செய்தபலன் கிட்டும் .. “ ஏகாதசி விரத சங்கல்ப மந்திரம் “ தசமீ தினம் ஆரப்பிய கரிஷ்யேகம் விரதம் தவ த்ரிதினம் தேவ தேவேச நிர்விக்னம் குரு கேசவ .. மஹாவிஷ்ணுவைப் போற்றித்துதித்து இஹபர சுகங்கள் பெற்று .. சகலதுயர்களைந்து மகிழ்ச்சிகரமான வாழ்வு வாழ்ந்திட வாழ்த்துகின்றேன் .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் ... WISH YOU ALL A BLESSED SUNDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD VISHNU .. MAY HE SHOWER YOU WITH BEST HEALTH WEALTH AND HAPPINESS TOO .. " OM NAMO NAARAAYANAA " ..